பட்டியல்
அல்லாஹு தஆலாவின் 99 திருநாமங்கள்
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
பொங்கும் கருணையாளன், தொடர் கிருபையாளனாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்
لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ بِيَدِهِ الْخَيْرُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ لَهُ الأَسْمَاءُ الْحُسْنَى
هُوَ اللَّهُ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ
Si No | அரபி | Transliteration | மொழியாக்கம் | பயன்பாடு |
---|---|---|---|---|
1 | الرَّحْمنُ | அர்ரஹ்மான் | பொங்கும் கருணையாளன் , அளவற்ற அருளாளன் | 55:1 , எல்லா அத்தியாங்களின் தொடக்கம் (அத்தியாயம் தவ்பா தவிர) |
2 | الرَّحِـيْـمُ | அர்ரஹீம் | தொடர் கிருபையாளன் , நிகரற்ற அன்புடையோன் | எல்லா அத்தியாங்களின் தொடக்கம் (அத்தியாயம் தவ்பா தவிர) |
3 | الـمَـلِـكُ | அல்-மலிக் | பேரரசன் | 59:23
அந்த அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறொரு நாயனுமில்லை. அவன்தான் மெய்யான அரசன்; பரிசுத்தமானவன்; சாந்தியும் சமாதானமும் அளிப்பவன்; அபயமளிப்பவன்; பாதுகாவலன்; (அனைவரையும்) மிகைத்தவன்; அடக்கி ஆளுபவன்; பெருமைக்குரியவன். இவர்கள் கூறும் இணை துணைகளைவிட்டு அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன்.
20:114,23:116 உண்மையான பேரரசனாகிய அல்லாஹ்தான் மிக்க உயர்ந்தவன் |
4 | القُـدُّوْسُ | அல்-குத்தூஸ் | மிகப்பரிசுத்தமானவன் |
59:23 62:1 வானங்களில் உள்ளவைகளும், பூமியில் உள்ளவைகளும் அல்லாஹ்வை புகழ்ந்து கொண்டிருக்கின்றன. (அவன்தான்) மெய்யான அரசன்; பரிசுத்தமானவன்; (அனைவரையும்) மிகைத்தவன்; ஞானமுடையவன். |
5 | السَّـلَامُ | அஸ்ஸலாம் | சாந்தியும் சமாதானமும் அளிப்பவன் |
59:23 |
6 | الـمُؤْمِنُ | அல்-முஃமின் | அபயமளிப்பவன், தஞ்சமளிப்பவன் |
59:23 |
7 | الـمُـهَـيْـمِـنُ | அல்-முஹைமின் | பாதுகாவலன் |
59:23 |
8 | العَـزِيْـزُ | அல்-அஜீஜ் | (அனைவரையும்) மிகைத்தவன் |
59:23 3:6 அவன்தான் கர்ப்பப் பைகளில் தான் விரும்பியவாறு (ஆணாகவோ, பெண்ணாகவோ) உருவம் அமைக்கின்றான். (அனைவரையும்) மிகைத்தவனும் , ஞானமுடையவனுமான அவனையன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. 4:158 எனினும், அல்லாஹ் அவரைத் (ஈஸா(அலை)) தன் அளவில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனும் , ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். 9:40 (நம் தூதருக்கு) நீங்கள் உதவி செய்யாவிட்டால் (அதனால் அவருக்கொன்றும் நஷ்டம் ஏற்பட்டுவிடாது. ஏனென்றால்) நிராகரிப்பவர்கள் அவரை (ஊரைவிட்டு) வெளியேற்றிய சமயத்தில் நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவிசெய்தே இருக்கின்றான். (மலைக்) குகையில் இருந்த இருவரில் ஒருவராக அவர் இருந்த (போது எதிரிகள் வந்து சூழ்ந்துகொண்ட) சமயத்தில் தன்னுடன் (குகையில்) இருந்த தோழ(ராகிய அபூபக்)ரை நோக்கி "நீங்கள் கவலைப்படாதீர்கள்! நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்" என்று கூறியபோதும் அல்லாஹ் அவருக்குத் தன்னுடைய மனநிம்மதியை அளித்தான். (மற்ற போர் சமயங் களிலும்) நீங்கள் காணமுடியாத படைகளைக் கொண்டு அவருக்கு உதவி செய்து நிராகரிப்பவர்களின் வார்த்தையை (மார்க்கத்தை) தாழ்த்தினான். ஏனென்றால், அல்லாஹ்வின் வார்த்தை (மார்க்கம்) தான் மிக உயர்வானது. அன்றி, அல்லாஹ் (அனைத்தையும்) மிகைத்தவனும் , ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். 48:7 வானங்கள் பூமியிலுள்ள படைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவையே. அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனும் , ஞானமுடையவனுமாக இருக்கின்றான். |
9 | الجَـبَّارُ | அல்-ஜப்பார் | அடக்கியாள்பவன் |
59:23 |
10 | المُـتَـكَـبِّـرُ | அல் - முதகப்பீர் | பெருமைக்குரியவன் |
59:23 |
11 | الـخَـالِـقُ | அல் - காலிக் | படைப்பாளன் |
6:102 இத்தகைய அல்லாஹ்தான் உங்களைப் படைத்து வளர்த்து பரிபக்குவப்படுத்தும் இறைவன். வணக்கத்திற்குரியவன் அவனைத் தவிர வேறு ஒருவருமில்லை. அவனே அனைத்தின் படைப்பாளன். ஆகவே, அ(வன் ஒருவ)னையே நீங்கள் (அனைவரும்) வணங்குங்கள். எல்லா காரியங்களையும் கண்காணிப்பவன் அவனே.
13:16 (நபியே! அவர்களை நோக்கி) "வானங்களையும், பூமியையும் படைத்து நிர்வகிப்பவன் யார்?" என்று நீங்கள் கேளுங்கள். (இதற்கு அவர்கள் பதில் கூறுவதென்ன!) நீங்களே (அவர்களை நோக்கி) "அல்லாஹ்தான்" என்று கூறுங்கள். அவ்வாறிருக்க "அவனை அன்றி (பொய்யான தெய்வங்களை) பாதுகாவலர்களாக நீங்கள் எடுத்துக் கொள்கின்றீர்களா? அவை தங்களுக்கே யாதொரு நன்மையும் தீமையும் செய்ய சக்தியற்றவைகளாய் இருக்கின்றன" என்றும் கூறுங்கள். (பின்னும் அவர்களை நோக்கி) "குருடனும், பார்வை உடையவரும் சமமாவாரா? அல்லது இருளும் பிரகாசமும் சமமாகுமா?" என்று கேளுங்கள். அல்லது "அவர்கள் (இறைவனுக்கு) இணையாக்கிக் கொண்டிருக்கும் தெய்வங்கள் அல்லாஹ் படைத்திருப்பதைப் போல் எதனையும் படைத்திருக் கின்றனவா?" (என்றும் கேளுங்கள்.) அவ்வாறாயின் (இந்த உலகைப்) படைத்தவன் (யாரென்பதில்) அவர்களுக்குள் சந்தேகமே ஏற்பட்டிருக்கலாம். (அவ்வாறும் இல்லையே! ஆகவே, அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: (இவ்வுலகிலுள்ள) ஒவ்வொன்றையும் படைப்பவன் அல்லாஹ்தான். அவன் ஒருவனே! (அவனுக்கு இணை துணையில்லை.) அவனே (உலகிலுள்ள அனைத்தையும்) அடக்கி ஆளுகின்றான். 36:81 வானங்களையும் பூமியையும் படைத்தவன், (கேவலம்) அவர்களைப் போன்றவர்களைப் படைக்கச் சக்தியற்றவனா? நிச்சயமாக அவனே மிகப்பெரிய படைப்பாளனும் மிக நன்கறிந்தவனும் ஆவான். 39:62 அல்லாஹ்வே எல்லா பொருள்களையும் படைத்தவன்; அவனே எல்லா பொருள்களின் பொறுப்பாளன். 40:62 உங்களின் இத்தகைய இறைவனான அல்லாஹ்தான் (மற்ற) பொருள்கள் அனைத்தையும் படைப்பவன். அவனைத்தவிர வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் இல்லை. ஆகவே, (அவனை விட்டு) நீங்கள் எங்கு திருப்பப்படுகின்றீர்கள்? |
12 | الـبَـارِئُ | அல் - பாரிஉ | புதிதாக உண்டாக்குபவன் | 59:24 அவன்தான் அல்லாஹ்; படைப்பவன்; ஒழுங்குபடுத்தி உண்டாக்குபவன்; உருவமளிப்பவன் - அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன; வானங்களிலும், பூமியிலும் உள்ளவையாவும் அவனையே துதி செய்கின்றன - அவனே (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன். |
13 | المُـصَـوِّرُ | அல் - முஸவ்விர் | உருவமளிப்பவன் | 59:24 |
14 | الـغَـفَّـارُ | அல் - ஙஃப்பார் | மிகவும் மன்னிப்பவன் |
20:82எவர் கைசேதப்பட்டு (பாவத்திலிருந்து) விலகி, நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்து நேரான வழியில் நிலைத்தும் இருக்கின்றாரோ அவருடைய குற்றங்களை நான் மிக மிக மன்னிப்பவனாகவே இருக்கின்றேன். 38:66அவன்தான் வானங்கள், பூமி இவைகளுக்கும் இவைகளுக்கு மத்தியில் உள்ளவைகள் அனைத்திற்கும் எஜமான். அன்றி, அவன் அனைவரையும் மிகைத்தவனும், மிக்க மன்னிப்புடையவனாகவும் இருக்கின்றான்" என்று (நபியே!) நீங்கள் கூறுங்கள். 39:5அவன், வானங்களையும் பூமியையும் உண்மையான காரணத்திற்கே படைத்திருக்கின்றான். (வீணுக்காக அல்ல.) அவனே இரவைச் சுருட்டிப் பகலை (விரிக்கிறான்.) அவனே பகலைச் சுருட்டி இரவை (விரிக்கிறான்.) சூரியனையும், சந்திரனையும் அடக்கி வைத்திருக்கின்றான். இவை ஒவ்வொன்றும், அவைகளுக்குக் (குறிப்பிட்ட எல்லைக்குள்) குறிப்பிட்ட காலப்படி நடக்கின்றன. (நபியே! நீங்கள்) அறிந்துகொள்ளுங்கள்! நிச்சயமாக அவன் அனைவரையும் மிகைத்தவனும் மிக மன்னிப்பவனாகவும் இருக்கின்றான். 40:42“நான் அல்லாஹ்வுக்கு (மாறு செய்து அவனை) நிராகரிக்க வேண்டுமென்றும், எனக்கு எதைப்பற்றி அறிவு இல்லையோ அதை நான் அவனுக்கு இணைவைக்க வேண்டுமென்றும் என்னை அழைக்கின்றீர்கள். ஆனால் நானோ யாவரையும் மிகைத்தவனும், மிக மன்னிப்பவனுமாகியவனிடம் அழைக்கின்றேன். 71:10மேலும், “நீங்கள் உங்களுடைய இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்; நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவன்” என்றும் கூறினேன். |
15 | الـقَـهَّـارُ | அல் கஹ்ஹார் | அடக்கியாள்கிறவன் |
12:39சிறைக்கூடத்தில் இருக்கும் என்னிரு தோழர்களே! (யாதொருசக்தியுமற்ற) வெவ்வேறு தெய்வங்கள் நன்றா? அல்லது அனைவரையும் அடக்கி ஆளுகின்ற ஒரே இறைவனாகிய அல்லாஹ் ஒருவனே நன்றா? 13:16 14:48இந்த பூமி வேறு பூமியாகவும், இன்னும் வானங்களும் மாற்றப்படும் நாளில் (அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.) மேலும் அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்வின் முன்னிலையில் வெளியாகி நிற்பார்கள். 38:65(நபியே!) நீர் கூறுவீராக: “நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனே, அன்றியும் ஏகனும், (யாவரையும்) அடக்கியாள்பவனுமாகிய அல்லாஹ்வைத் தவிர நாயன் இல்லை. 39:4அல்லாஹ் (தனக்கு) ஒரு பிள்ளையை எடுத்துக் கொள்ள நாடியிருந்தால், அவன் படைத்துள்ளவர்களிலிருந்து தான் விரும்பியவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருப்பான்; (எனினும் இத்தகையவற்றிலிருந்து) அவன் பரிசுத்தமானவன். அவனே (யாவரையும்) அடக்கியாளும் வல்லமை மிக்கவனாகிய ஏகனான அல்லாஹ். 40:16அந்நாளில் அவர்கள் வெளிப்பட்டு வருவார்கள்; அவர்களுடைய எந்த விஷயமும் அல்லாஹ்வுக்கு மறைந்ததாக இருக்காது; அந்நாளில் ஆட்சி யாருக்குடையதாக இருக்கும் - ஏகனாகிய, அடக்கியாளும் வல்லமை மிக்க அல்லாஹ்வுக்கே யாகும். |
16 | الوَهـَّابُ | அல் வஹ்ஹாப் | பெருங்கொடையாளன் |
3:8(அன்றி அவர்கள்) "எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேரான வழியை காட்டியபின் எங்களுடைய உள்ளங்கள் (அதில் இருந்து) தவறிவிடுமாறு செய்து விடாதே! உன் (அன்பான) அருளையும் எங்களுக்கு அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெரும் கொடையாளி!" 38:9((வேத உபதேசம் தங்கள் மீது இறங்க வேண்டுமென்று இவர்கள் கூறுவதற்கு) அனைவரையும் மிகைத்த பெரும் கொடையாளியாகிய, உங்களது இறைவனின் அருள் பொக்கிஷம் அவர்களிடம்தான் இருக்கின்றதா? 38:35ஆகவே, அவர் "என் இறைவனே! என்னுடைய குற்றங்களை மன்னித்து விடு! எனக்குப் பின்னர் எவருமே அடைய முடியாத ஓர் ஆட்சியை எனக்கு நீ அளித்தருள் புரிவாயாக! நிச்சயமாக நீ பெரும் கொடையாளி" என்று பிரார்த்தனை செய்தார். |
17 | الرَّزَّاقُ | அர் - ரஜ்ஜாக் | உணவளிப்பவன் | 51:58(நபியே! நீங்கள் கூறுங்கள்:) நிச்சயமாக அல்லாஹ்தான் அனைவருக்கும் உணவளிப்பவனும், அசைக்கமுடியாத பலசாலியுமாவான். |
18 | الفَـتَّـاحُ | அல் - ஃபத்தாஹ் | மேலான தீர்ப்பளிப்பவன், வெற்றியளிக்கிறவன் |
34:26“நம்முடைய இறைவன் நம் யாவரையும் ஒன்று சேர்ப்பான்; பின்னர் நமக்கிடையே சத்தியத்தைக் கொண்டு (நீதமாகத்) தீர்ப்பளிப்பான்; இன்னும் அவன் மேலான தீர்ப்பளிப்பவன், (யாவற்றையும்) நன்கறிபவன்” என்றும் கூறுவீராக. 48:1(நபியே! ஹுதைபிய்யாவின் சமாதான உடன்படிக்கையின் மூலம்) நிச்சயமாக நாம் உங்களுக்கு (மிகப்பெரிய) தெளிவானதொரு வெற்றியைத் தந்தோம். |
19 | الـعَـلِـيْـمُ | அல் அலீம் | நன்கறிந்தவன் |
2:158நிச்சயமாக "ஸஃபா" (மலையும்) "மர்வா" (மலையும், வணக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்ட) அல்லாஹ்வின் அடையாளங்களில் உள்ளவையாக இருக்கின்றன. ஆகையால் எவர்கள் ("கஅபா" என்னும்) அவ்வீட்டை "ஹஜ்ஜு" அல்லது "உம்ரா" செய்தார்களோ அவர்கள், அவ்விரண்டையும் சுற்றி வருவது குற்றமல்ல. ஆகவே, எவரேனும் நன்மையை நாடி (அவ்வாறு) செய்தால் நிச்சயமாக அல்லாஹ் (அதற்கு) நன்றி பாராட்டுபவ னாகவும் (எண்ணங்களை) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். 3:92உங்களுக்குப் பிரியமான பொருளிலிருந்து நீங்கள் (தானமாக) செலவு செய்யாத வரையில் நிச்சயமாக நீங்கள் நன்மையடைய மாட்டீர்கள். ஒரு சொற்பத்தை நீங்கள் தானம் செய்தபோதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதனையும் நன்கறிவான். 4:35(கணவன்-மனைவி ஆகிய) அவ்விருவரிடையே (பிணக்குண்டாகி) பிரிவினை ஏற்பட்டுவிடும் என்று நீங்கள் அஞ்சினால் கணவனின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மனைவியின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மத்தியஸ்தர்களாக ஏற்படுத்துங்கள்; அவ்விருவரும் சமாதானத்தை விரும்பினால், அல்லாஹ் அவ்விருவரிடையே ஒற்றுமை ஏற்படும் படி செய்துவிடுவான் - நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிபவனாகவும், நன்குணர்கிறவனாகவும் இருக்கின்றான். 24:41(நபியே!) நீர் பார்க்கவில்லையா? வானங்களிலும் பூமியிலும் உள்ளவையும், பறவைகள் (விண்ணில் தங்கள்) இறக்கைகளை விரித்(துப் பறந்)த வண்ணமாக நிச்சயமாக அல்லாஹ்வைத் தஸ்பீஹு செய்(து துதிக்)கின்றன; ஒவ்வொன்றும் தன் தொழுகையையும், (அல்லாஹ்வை) தஸ்பீஹு செய்யும் வழியையும் திட்டமாக அறிந்தே இருக்கிறது - அல்லாஹ்வும் அவை செய்பவற்றை நன்கறிந்திருக்கிறான். 33:40முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை; ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன். |
20 | الـقَـابِـضُ | அல் - காபிள் | சுருக்குகிறவன் | 2:245(கஷ்டத்திலிருப்போருக்காக) அல்லாஹ்வுக்கு அழகிய கடன் எவர் கொடுக்கின்றாரோ, அதை அவருக்கு அவன் இரு மடங்காக்கி பன்மடங்காகச் செய்வான் - அல்லாஹ்தான் (உங்கள் செல்வத்தைச்) சுருக்குகிறான்; (அவனே அதைப்)பெருக்கியும் தருகிறான்; அன்றியும் நீங்கள் அவனிடமே மீட்டப்படுவீர்கள். |
21 | الـبَـاسِـطُ | அல் - பாஸித் | விரிவாக்குபவன் | 2:245 |
22 | الخافِضُ | அல் - ஃகாபிள் | தாழ்த்துபவன் | 56:3அது (தீயோரைத்) தாழ்த்தி விடும்; (நல்லோரை) உயர்த்தி விடும். |
23 | الرافِعُ | அர் - ராஃபிஃ | உயர்த்துபவன் |
58:11ஈமான் கொண்டவர்களே! சபைகளில் “நகர்ந்து இடங்கொடுங்கள்” என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால், நகர்ந்து இடம் கொடுங்கள்; அல்லாஹ் உங்களுக்கு இடங்கொடுப்பான்; தவிர, “எழுந்திருங்கள்” என்று கூறப்பட்டால், உடனே எழுந்திருங்கள்; அன்றியும், உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும்; கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான் - அல்லாஹ்வோ நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான். 6:83இவை நம்முடைய ஆதாரங்களாகும், நாம் இவற்றை இப்றாஹீமுக்கு அவருடைய கூட்டத்திற்கு எதிராகக் கொடுத்தோம்; நாம் விரும்புவோருக்கு பதவிகளை (மேலும் மேலும்) உயர்த்துகிறோம்; நிச்சயமாக உம்முடைய இறைவன் பூரண ஞானமும் பேரறிவும் உள்ளவன். |
24 | المُعِزُّ | அல் - முஇஜ்ஜூ | கண்ணியமளிப்பவன் | 3:26(நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் அனைத்தும் உன் கையில் இருக்கின்றன. நிச்சயமாக நீ அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன். |
25 | المُذِلُّ | அல் - முதில்லு | இழிவுபடுத்துபவன் | 3:26 |
26 | الـسَّـمِـيْـعُ | அஸ்ஸமீஉ | செவியுறுபவன் |
2:127இப்ராஹீமும், இஸ்மாயீலும் அவ்வீட்டின் அஸ்திவாரத்தை உயர்த்தியபொழுது "எங்களுடைய இறைவனே! (உனக்காக நாங்கள் செய்த இப்பணியை) எங்களிடமிருந்து ஏற்றுக்கொள்வாயாக! நிச்சயமாக நீதான் (எங்களுடைய இந்த பிரார்த்தனையைச்) செவியுறுபவனாகவும் அறிந்தவனாகவும் இருக்கின்றாய். 2:256 8:17(நம்பிக்கையாளர்களே! போர் புரிந்த சமயம்) நீங்கள் அவர்களை கொன்று விடவில்லை; அல்லாஹ்தான் அவர்களை கொன்றான். (நபியே! எதிரிகளின் மீது) நீங்கள் (மண்ணை) எறிந்தபோது (அதனை நீங்கள் எறியவில்லை; அல்லாஹ்தான் (அதனை) எறிந்தான். நம்பிக்கையாளர்களை அழகான முறையில் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்தான்.) நிச்சயமாக அல்லாஹ், செவியுறுபவனும் மிக்க அறிந்தவனாகவும் இருக்கின்றான். 49:1நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் முன்பாக(ப் பேசுவதற்கு) நீங்கள் முந்திக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) செவியுறுபவனும், நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். |
27 | الْـبَـصِـيْـرُ | அல் - பசீர் | உற்று நோக்குபவன் |
4:58(நம்பிக்கையாளர்களே! உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருள்களை அதன் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்படைத்து விடும்படியும், மனிதர்களுக்கிடையில் நீங்கள் தீர்ப்புக் கூறினால் (பாரபட்சமின்றி) நீதமாகவே தீர்ப்பளிக்குமாறும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். உங்களுக்கு அல்லாஹ் செய்யும் இவ்வுபதேசம் மெய்யாகவே எவ்வளவு சிறந்தது? நிச்சயமாக அல்லாஹ் செவியுறுபவனாகவும், உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான். 17:1(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் (முஹம்மது (ஸல்) என்னும்) தன் அடியாரை(க் கஅபாவாகிய) சிறப்புற்ற பள்ளியில் இருந்து (வெகு தூரத்தில் இருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஒரே இரவில் அழைத்துச் சென்றான். (அவ்வாறு அழைத்துச் சென்ற) நாம் அதனைச் சூழவுள்ளவை சிறப்புற்று ஓங்க அபிவிருத்தி அடைய செய்திருக்கிறோம். நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காகவே (அங்கு அழைத்துச் சென்றோம்.) நிச்சயமாக (உங்களது இறைவன்) செவியுறுபவனாகவும், உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான். 42:11அவனே வானங்களையும் பூமியையும் படைத்தவன். உங்களிலிருந்தே (உங்கள்) மனைவிகளையும் அவன் உங்களுக்காக படைக்கின்றான். (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) கால்நடைகளையும் ஜோடி ஜோடியாக படைத்து, உங்களைப் பூமியின் பல பாகங்களிலும் பரவிப் பெருகச் செய்கிறான். அவனுக்கு ஒப்பானது ஒன்றுமில்லை. அவன் (அனைத்தையும்) செவியுறுபவனாகவும் உற்று நோக்குபவனாகவும் இருக்கின்றான். 42:27அல்லாஹ் தன் அடியார்களுக்கு (கூடுதல் குறைவின்றி) பொருளை விரித்து(க் கொடுத்து) விட்டால், அவர்கள் பூமியில் அநியாயம் செய்யத் தலைப்பட்டு விடுவார்கள். ஆகவே, (அவர்களின் தகுதிக்குத் தக்கவாறு)தான் விரும்பிய அளவே (அவர்களுக்குக்) கொடுத்து வருகின்றான். நிச்சயமாக அவன் தன் அடியார்களின் தன்மையை நன்கறிந்தவனும், (அவர்களுடைய செயலை) உற்று நோக்குபவனாகவும் இருக்கின்றான். |
28 | الْـحَـكَـمُ | அல் ஹகம் | தீர்ப்பளிப்பவன், மேலான நீதிபதி |
22:69நீங்கள் எவ்விஷயத்தில் தர்க்கித்துக் கொண்டிருக்கிறீர்களோ அதைப் பற்றி மறுமை நாளில் அல்லாஹ் உங்களுக்கிடையில் தீர்ப்பளிப்பான்" என்றும் கூறுங்கள். 95:8தீர்ப்பளிப்பவர்களில் எல்லாம், அல்லாஹ் மிக மேலான நீதிபதியல்லவா? |
29 | العَدْلُ | அல் - அத்லு | நீதமானவன் | 6:115(நபியே!) உங்களது இறைவனின் வாக்கு உண்மையாகவும், நீதமாகவும், முழுமையாகிவிட்டது. அவனுடைய வாக்குகளை மாற்றுபவன் யாருமில்லை. அவன் (யாவையும்) செவியுறுபவ னாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். |
30 | الـلَّـطِـيْـفُ | அல் - லதீஃபு | மிக நுட்பமானவன் |
6:103பார்வைகள் அவனை அடைய முடியாது. அவனோ பார்வைகள் அனைத்தையும் அறிந்து கொள்கின்றான். அவன் (எவரின் பார்வைக்கும் அகப்படாத) மிக நுட்பமானவன்; மிக்க அறிந்தவன். 22:63(நபியே!) நீங்கள் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ்தான் மேகத்திலிருந்து மழையை பொழியச் செய்கிறான். (அதனால்) பூமி பசுமையாகி விடுகின்றது. நிச்சயமாக அல்லாஹ் அதிக நுட்பமுடையவனும்; அனைத்தையும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். 31:16(லுஃக்மான் தம் புதல்வரிடம்) என் அருமை மகனே! (நன்மையோ, தீமையோ) அது ஒரு கடுகின் வித்து அளவே எடையுள்ளது ஆயினும்; அது கற்பாறைக்குள் இருந்தாலும் அல்லது வானங்களில் இருந்தாலும், அல்லது பூமிக்குள்ளே இருந்தாலும் அல்லாஹ் அதையும் (வெளியே) கொண்டு வருவான்; நிச்சயமாக அல்லாஹ் அதிக நுட்பமுடையவனும்; அனைத்தையும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். 33:34மேலும் உங்களுடைய வீடுகளில் ஓதப்படுகின்றனவே அல்லாஹ்வின் வசனங்கள் (அவற்றையும்) ஞான விஷயங்களையும் (ஹிக்மத்) நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் -நிச்சயமாக அல்லாஹ் அதிக நுட்பமுடையவனும்; அனைத்தையும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். |
31 | الْـخَـبِـيْـرُ | அல் கபீர் | நன்கறிந்தவன் |
6:18அவனே தன் அடியார்களை அடக்கி ஆள்கிறான். அன்றி, அவன்தான் மிக்க ஞானமுடையவனாகவும், (அனைத்தையும் நன்கறிந்தவனாகவும் இருக்கிறான். 17:30நிச்சயமாக உங்கள் இறைவன், தான் விரும்பியவர்களுக்கு விரிவாகக் கொடுக்கின்றான்; (தான் விரும்பியவர்களுக்கு சுருக்கிக் குறைத்தும்) அளவாகவும் கொடுக்கின்றான். ஏனென்றால், நிச்சயமாக அவன், தன் அடியார்(களின் தன்மை)களை நன்கறிந்தவனாகவும், செயலை உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான். (ஆதலால், ஒவ்வொருவரின் தகுதிக்கும் தக்கவாறு கொடுக்கிறான்.) 49:13மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன். 59:18ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; மேலும், ஒவ்வொருவரும் (மறுமை) நாளுக்காக தான் முற்படுத்தி வைத்திருப்பதைப் பார்த்துக் கொள்ளட்டும்; இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; நீங்கள் செய்பவற்றை, நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன். |
32 | الْـحَـلِـيْـمُ | அல் ஹலீம் | பொறுமையாளன் |
2:235(இவ்வாறு இத்தா இருக்கும்) பெண்ணுடன் திருமணம் செய்யக் கருதி (அது பற்றிக்) குறிப்பாக அறிவிப்பதிலோ, அல்லது மனதில் மறைவாக வைத்திருப்பதிலோ உங்கள் மீது குற்றமில்லை நீங்கள் அவர்களைப்பற்றி எண்ணுகிறீர்கள் என்பதை அல்லாஹ் அறிவான்; ஆனால் இரகசியமாக அவர்களிடம் (திருமணம் பற்றி) வாக்குறுதி செய்து கொள்ளாதீர்கள்; ஆனால் இது பற்றி வழக்கத்திற்கு ஒத்த (மார்க்கத்திற்கு உகந்த) சொல்லை நீங்கள் சொல்லலாம்; இன்னும் (இத்தாவின்) கெடு முடியும் வரை திருமண பந்தத்தைப் பற்றித் தீர்மானித்து விடாதீர்கள்; அல்லாஹ் உங்கள் உள்ளங்களிலுள்ளதை நிச்சயமாக அறிகின்றான் என்பதை நீங்கள் அறிந்து அவனுக்கு அஞ்சி நடந்துகொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், பொறுமையாளனாகவும் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். 17:44ஏழு வானங்களும் பூமியும் இவற்றிலுள்ள அனைத்தும் அவனைப் புகழ்ந்து கொண்டே இருக்கின்றன. (இவற்றில்) ஒன்றுமே அவனைத் துதி செய்து புகழாதிருக்கவில்லை. எனினும், அவை துதி செய்து புகழ்வதை நீங்கள் அறிந்து கொள்வதில்லை. நிச்சயமாக அவன் பொறுமையுடையவனும், மன்னிப்புடையவனாகவும் இருக்கின்றான். 22:59ஆகவே, நிச்சயமாக அவன் அவர்களை அவர்கள் விரும்பக்கூடிய இடத்தில் சேர்த்து விடுவான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனும், மிக்க பொறுமையுடையவனாகவும் இருக்கின்றான். 35:41வானங்களும் பூமியும் (தத்தம் எல்லையிலிருந்து) விலகிவிடாதபடி தடுத்துக் கொண்டிருப்பவன் நிச்சயமாக அல்லாஹ்தான். (தம் எல்லையில் இருந்து) அவ்விரண்டும் சாய முற்பட்டபோதிலும் அவை சாயாதபடி தடுக்கக்கூடியவன் அல்லாஹ்வைத் தவிர வேறொருவனுமில்லை. நிச்சயமாக அவன் பொறுமையுடையவனும் மன்னிப்புடையவனாகவும் இருக்கின்றான். |
33 | الْـعَـظِـيْـمُ | அல் அளீம் | மிக மகத்தானவன் |
2:255அல்லாஹ் (எவ்வித மகத்துவமுடையவனென்றால்) அவனைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் வேறு யாரும் (இல்லவே) இல்லை. அவன் (மரணமில்லா) உயிருள்ளவன்; என்றும் நிலையானவன்; அவனை சிறு உறக்கமும் பீடிக்காது; பெரும் நித்திரையும் பீடிக்காது. வானங்கள், பூமியில் உள்ளவை அனைத்தும் அவனுடையதே. அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில் (எவருக்காகிலும்) யார்தான் பரிந்து பேசக்கூடும்? அவர்களுக்கு முன் இருப்பவற்றையும் அவர்களுக்குப் பின் இருப்பவற்றையும் அவன் நன்கறிவான். அவனுடைய விருப்பமின்றி அவனுக்குத் தெரிந்த வற்றிலிருந்து யாதொன்றையும் (மற்றெவரும் தங்கள் அறிவால்) அறிந்துகொள்ள முடியாது. அவனுடைய "குர்ஸி" வானங்கள், பூமியை விட விசாலமாய் இருக்கின்றது. அவ்விரண்டையும் பாதுகாப்பது அவனுக்குச் சிரமமன்று. மேலும், அவன்தான் மிக உயர்ந்தவன்; மிக மகத்தானவன். 42:4வானங்களில் இருப்பவைகளும், பூமியில் இருப்பவைகளும் அவனுக்குச் சொந்தமானவைகளே. (அனைவரையும்விட) அவன் மிக மேலானவன்; மிக மகத்தானவன். 56:96ஆகவே (நபியே!) நீங்கள் மகத்தான உங்களது இறைவனின் திருப்பெயரைக் கூறி புகழ்ந்து கொண்டிருப்பீராக! |
34 | الـغَـفُـوْرُ | அல் - ஙஃபூர் | மிகவும் மன்னிப்பவன் |
2:173(நம்பிக்கையாளர்களே!) தாமாக செத்தது, இரத்தம், பன்றியின் மாமிசம், அல்லாஹ் அல்லாத (வேறு) பெயர் கூறப்பட்டவைகள் ஆகியவற்றைத்தான் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்துள்ளான். ஆதலால், எவரேனும் வரம்பு மீறாமலும், பாவம் செய்யும் நோக்கமில்லாமலும் இருந்து (இவற்றைப் புசிக்க) நிர்ப்பந்திக்கப்பட்டு விட்டால் (அது) அவர் மீது குற்றமாகாது. நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும் நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான். 8:69ஆகவே, (எதிரிகளிடமிருந்து) உங்களுக்குக் கிடைத்த வைகளை, நல்ல ஆகுமான பொருள்களாகவே (கருதிப்) புசியுங்கள். (இனி இத்தகைய விஷயங்களில்) அல்லாஹ்வுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் மிக மன்னிப்பவனும், கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான். 16:110(நபியே!) எவர்கள் (எதிரிகளால்) துன்புறுத்தப்பட்டு, பின்னர் (தங்கள் இல்லத்திலிருந்து) வெளிப்பட்டு, போரும் புரிந்து (பல கஷ்டங்களையும்) சகித்துக்கொண்டு உறுதியாக இருந்தார்களோ அவர்களுக்(கு அருள் புரிவதற்)காகவே நிச்சயமாக உங்களுடைய இறைவன் இருக்கிறான். நிச்சயமாக உங்களுடைய இறைவன் இதற்குப் பின்னரும் (அவர்களை) மன்னிப்பவனும் (அவர்கள் மீது) கிருபையுடையவனுமாக இருக்கின்றான். 41:32"பாவங்களை மன்னித்துக் கிருபை செய்பவனின் விருந்தாளியாக (அதில் தங்கி) இருங்கள்" என்றும் (மலக்குகள்) கூறுவார்கள். |
35 | الـشَّـكُـوْرُ | அஷ்ஷகூர் | நன்றியை ஏற்றுக் கொள்பவன் |
35:30அவர்களுக்குரிய நற்கூலியை அவர்களுக்கு அவன் முழுமையாகக் கொடுப்பான்; இன்னும் தன் அருளிலிருந்து அவர்களுக்கு மிகுதப்படுத்துவான், நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவன், நன்றியை ஏற்றுக் கொள்பவன். 35:34"எங்களை விட்டு (எல்லாக்)கவலைகளையும் போக்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரியதாகும்; நிச்சயமாக எங்கள் இறைவன் மிக மன்னிப்பவன்; நன்றியை ஏற்றுக் கொள்பவன்" என்றும் அவர்கள் கூறுவார்கள். 42:23ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்ல அமல்கள் செய்துவரும் தன் அடியார்களுக்கு அல்லாஹ் நன்மாராயங் கூறுவதும் இதுவே: (நபியே!) நீர் கூறும்: “உறவினர்கள் மீது அன்பு கொள்வதைத் தவிர, இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை!” அன்றியும், எவர் ஒரு நன்மை செய்கிறாரோ, அவருக்கு நாம் அதில் பின்னும் (பல) நன்மையை அதிகமாக்குவோம்; நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நன்றியை ஏற்றுக் கொள்பவனாகவும் இருக்கின்றான். 64:17அழகான முறையில் அல்லாஹ்வுக்காக நீங்கள் கடன் கொடுத்தால், அதனை உங்களுக்கு இரு மடங்காக்கி வைப்பதுடன், உங்கள் குற்றங்களையும் மன்னித்து விடுகின்றான். அல்லாஹ் (சொற்ப) நன்றியையும் அங்கீகரிப்பவனாகவும் மிக்க சகிப்பவனாகவும் இருக்கின்றான். |
36 | الْـعَـلِـيُّ | அல் - அலிய்யு | உயர்வானவன், மேலானவன், உன்னத மிக்கவன் |
4:34(ஆண், பெண் இருபாலாரில்) ஆண் பாலாரை(ப் பெண்பாலார் மீது) அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருப்பதுடன் (ஆண்பாலார்) தங்கள் பொருள்களை(ப் பெண் பாலாருக்கு)ச் செலவு செய்வதனாலும் ஆண்கள்தான் பெண்களை நிர்வகிக்கக் கூடியவர்களாக இருக்கின்றனர். ஆகவே, நல்லொழுக்கமுள்ள பெண்கள் (அல்லாஹ்வுக்கும் தங்கள் கணவனுக்கும்) பணிந்தே நடப்பார்கள். (தங்கள் கணவன்) மறைவாக உள்ள சமயத்தில் அல்லாஹ்வின் பாதுகாப்பைக் கொண்டு (தங்களையும் கணவனின் மற்ற பொருள்களையும்) பேணிக்காத்துக் கொள்வார்கள். எவளும் கணவனுக்கு மாறு செய்வாளென்று நீங்கள் அஞ்சினால் அவளுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள். (அவள் திருந்தாவிடில்) படுக்கையில் இருந்து அவளை அப்புறப்படுத்தி வையுங்கள். (அதிலும் அவள் சீர்திருந்தாவிடில்) அவளை (இலேசாக) அடியுங்கள். அதனால் அவள் உங்களுக்கு கட்டுப்பட்டு விட்டால் அவள் மீது (வேறு குற்றங்களைச் சுமத்த) யாதொரு வழியையும் தேடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக மேன்மையானவனும், மிகப் பெரியவனுமாக இருக்கின்றான். 31:30இவையனைத்தும் "நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மையான இறைவன் என்பதற்கும், அவனையன்றி அவர்கள் (தெய்வங்களென) அழைப்பவை பொய்யானவை என்பதற்கும், அல்லாஹ்தான் மிகப் பெரியவனும் மேலானவனும் ஆவான்" என்பதற்கும் அத்தாட்சி களாக இருக்கின்றன. 42:4வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே (சொந்தமானவையாகும்!) மேலும் அவன் மிகவும் உயர்ந்தவன், மகத்தானவன். 42:51அல்லாஹ் (நேருக்கு நேராய்ப்) பேசுவதற்குரிய தகுதி மனிதரில் ஒரு வருக்குமில்லை. எனினும், வஹ்யின் மூலமாகவோ அல்லது திரைக்கு அப்பால் இருந்தோ அல்லது மலக்குகளை அனுப்பி வைத்து வஹியின் மூலமாகவோ தனக்கு விருப்பமான கட்டளையை (மனிதனுக்கு) அறிவிக்கின்றான். (ஏனென்றால்) நிச்சயமாக அவன் மிக மேலானவனும் மிக ஞானமுடைய வனுமாவான். 34:23அன்றியும், அவன் எவருக்கு அனுமதி கொடுக்கிறானோ அவருக்குத் தவிர, அவனிடத்தில் எந்த பரிந்துரையும் பயனளிக்காது; எனவே (நியாய விசாரணைக்கு நிற்கும்) அவர்களின் இருதயங்களிலிருந்து திடுக்கம் நீக்கப்படுமானால் “உங்கள் இறைவன் என்ன கூறினான்” என்று கேட்பார்கள். “உண்மையானதையே! மேலும், அவனே மிக்க உயர்ந்தவன் மகாப்பெரியவன்” என்று கூறுவார்கள். |
37 | الْـكَـبِـيْـرُ | அல் - கபீர் | மிகப் பெரியவன் |
13:9 22:62நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மையானவன். நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையன்றி (இறைவனென) அழைப்பவை யாவும் பொய்யானவை ஆகும் (என்பதும்) நிச்சயமாக அல்லாஹ்தான் உயர்ந்தவன், (மேலானவன்,) மகா பெரியவன் (என்பதும் இதற்குக் காரணமாகும்). 31:30இவையனைத்தும் "நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மையான இறைவன் என்பதற்கும், அவனையன்றி அவர்கள் (தெய்வங்களென) அழைப்பவை பொய்யானவை என்பதற்கும், அல்லாஹ்தான் மிகப் பெரியவனும் மேலானவனும் ஆவான்" என்பதற்கும் அத்தாட்சி களாக இருக்கின்றன. 34:23 |
38 | الْـحَـفِـيْـظُ | அல் ஹஃபீள் | பாதுகாப்பவன் |
11:57"நீங்கள் (இவ்வுபதேசத்தைப்) புறக்கணிப்பீர்களாயின் எதற்காக நான் உங்களிடம் அனுப்பப் பட்டேனோ அதனை நிச்சயமாக நான் உங்களிடம் சேர்ப்பித்துவிட்டேன்; இன்னும் என்னுடைய இறைவன் நீங்கள் அல்லாத (வேறு) ஒரு சமூகத்தை உங்களுக்கு பதிலாக வைத்துவிடுவான்; அவனுக்கு எப் பொருளையும் கொண்டு நீங்கள் அவனுக்கு யாதொரு தீங்கும் செய்ய முடியாது. நிச்சயமாக என் இறைவன் யாவற்றையும் பாதுகாப்பவனாக இருக்கின்றான்" (என்றும் கூறினார்). 34:21எனினும் அவர்கள் மீது அவனுக்கு யாதோர் அதிகாரமுமில்லை - ஆயினும் மறுமையை நம்புகிறவர்களை அதனைப்பற்றி சந்தேகத்திலிருப்போரை விட்டும் நாம் அறி(வித்திடு)வற்காகவே (இது நடந்தது); மேலும் உம்முடைய இறைவன் அனைத்துப் பொருட்களையும் பாது காப்போனாக இருக்கின்றான். 42:6எவர்கள், அவனையன்றி (மற்றவர்களைத்) தங்களுக்குப் பாதுகாவலராக எடுத்துக் கொண்டார்களோ, அவர்களை அல்லாஹ் கவனித்தவனாக இருக்கின்றான். (நபியே!) அவர்களுக்கு நீங்கள் பொறுப்பாளரல்ல. |
39 | الْـمُـقِـيْـتُ | அல் முகீத் | முறைப்படி கவனிப்பவன், உணவை உற்பத்தி செய்கிறவன் | 4:85எவரேனும் யாதொரு நன்மையானவற்றுக்கு சிபாரிசு செய்தால் அந்த நன்மையில் ஒரு பங்கு அவருக்குண்டு. (அவ்வாறே) யாதொரு தீய விஷயத்திற்கு யாரும் சிபாரிசு செய்தால் அத்தீமையில் இருந்தும் அவருக்கொரு பாகம் உண்டு. அல்லாஹ் அனைத்தையும் முறைப்படி கவனிப்பவனாக இருக்கின்றான். |
40 | الْـحَـسِـيْـبُ | அல் - ஹஸீப் | கணக்கெடுப்பவன், போதுமானவன் |
4:6அநாதைகளை அவர்கள் திருமண வயது அடையும் வரை (அவர்கள் முன்னேற்றம் கருதி) சோதித்துக் கொண்டிருங்கள் - (அவர்கள் மணப் பருவத்தை அடைந்ததும்) அவர்கள் (தங்கள் சொத்தை நிர்வகிக்கும் ஆற்றல்) அறிவை பெற்றுவிட்டதாக நீங்கள் அறிந்தால் அவர்களிடம் அவர்கள் சொத்தை ஒப்படைத்து விடுங்கள்; அவர்கள் பெரியவர்களாகி (தம் பொருள்களைத் திரும்பப் பெற்று) விடுவார்கள் என்று அவர்கள் சொத்தை அவசர அவசரமாகவும், வீண் விரையமாகவும் சாப்பிடாதீர்கள். இன்னும் (அவ்வநாதைகளின் பொறுப்பேற்றுக் கொண்டவர்) செல்வந்தராக இருந்தால் (அச்சொத்திலிருந்து ஊதியம் பெறுவதைத்) தவிர்த்துக் கொள்ளட்டும் - ஆனால், அவர் ஏழையாக இருந்தால் நியாயமான அளவு சாப்பிட்டுக் கொள்ளவும்; மேலும் அவர்களுடைய பொருட்களை அவர்களிடம் ஒப்படைக்கும்போது அவர்கள் மீது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் - (உண்மையாகக்) கணக்கெடுப்பதில் அல்லாஹ்வே போதுமானவன். 4:86(எவரேனும்) உங்களுக்கு "ஸலாம்" கூறினால் (அதற்குப் பிரதியாக) அதைவிட அழகான (வாக்கியத்)தைக் கூறுங்கள். அல்லது அதனையே திருப்பிக் கூறுங்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் கணக்கெடுப்பவனாக இருக்கின்றான். 33:39அவர்கள் அல்லாஹ்வினுடைய இத்தகைய கட்டளைகளை எடுத்துரைத்தே தீருவார்கள்; அவ(ன் ஒருவ)னுக்கே பயப்படு வார்கள்; அல்லாஹ்வைத் தவிர மற்றெவருக்கும் பயப்பட மாட்டார்கள். (ஆகவே, நபியே! நீங்களும் மற்றெவருக்கும் பயப்பட வேண்டாம். (இதைப் பற்றி அவர்களிடம்) கேள்வி கணக்குக் கேட்பதற்கு அல்லாஹ் (ஒருவனே) போதுமானவன். |
41 | الجليلُ | அல் - ஜலீல் | மாண்புமிக்கவன் | 55:27மிக மாண்பும், கண்ணியமும் தங்கிய உங்களது இறைவனின் திருமுகம் மட்டும் (அழியாது) நிலைத்திருக்கும். |
42 | الْـكَـرِيْـمُ | அல் - கரீம் | கண்ணியமானவன் |
27:40(எனினும், அவர்களில்) வேத ஞானம் பெற்ற ஒருவர் (இருந்தார். அவர் ஸுலைமான் நபியை நோக்கி) "நீங்கள் கண்மூடித் திறப்பதற்குள் அதனை நான் உங்களிடம் கொண்டு வந்துவிடுவேன்" என்று கூறினார். (அவ்வாறே கொண்டு வந்து சேர்த்தார்.) அது தன் முன் (கொண்டு வந்து வைக்கப்பட்டு) இருப்பதை (ஸுலைமான்) கண்டதும், "இது நான் அவனுக்கு நன்றி செலுத்துகின்றேனா இல்லையா என்று என்னைச் சோதிப்பதற்காக என் இறைவன் எனக்குப் புரிந்த பேரருளாகும். எவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகிறானோ அவன் தனக்கே நன்மை செய்து கொள்கிறான். எவன் நன்றியை நிராகரிக்கின்றானோ (அதனால் என் இறைவனுக்கு யாதொரு நஷ்டமுமில்லை.) நிச்சயமாக என் இறைவன் (எவருடைய) தேவையற்றவனும், மிக்க கண்ணியமானவனாகவும் இருக்கிறான்" என்று கூறி (தன் வேலைக்காரர்களை நோக்கி,) 82:6மனிதனே! மிக கண்ணியம் உள்ள உனது இறைவனைப் பற்றி உன்னை மயக்கிவிட்டது எது? |
43 | الـرَّقِـيْـبُ | அர்ரகீப் | கண்காணிப்பவன் |
4:1மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். 5:117"நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி), “என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்” என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை; மேலும், நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன்; அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய்" (என்றும்); |
44 | الْـمُجِـيْـبُ | அல் - முஜீப் | (பிரார்த்தனைகளை) அங்கீகரிப்பவன், பதிலளிப்பவன் |
11:61"ஸமூது" (என்னும் மக்)களிடம் அவர்களுடைய சகோதரர் "ஸாலிஹை" (நம்முடைய தூதராக அனுப்பி வைத்தோம். அவர் அவர்களை நோக்கி) "என்னுடைய மக்களே! அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள்; உங்களுக்கு அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவனே உங்களைப் பூமியிலிருந்து படைத்தான். அதிலேயே அவன் உங்களை வசிக்கவும் செய்தான். ஆதலால், நீங்கள் அவனிடமே மன்னிப்பைக் கோரி அவன் பக்கமே திரும்புங்கள். நிச்சயமாக என்னுடைய இறைவன் (உங்களுக்கு) மிகச் சமீபமானவனாகவும் (பிரார்த்தனைகளை) அங்கீகரிப்பவனாகவும் இருக்கின்றான்" என்று கூறினார். 37:75அன்றியும் நூஹ் நம்மைப் பிரார்த்தித்தார்; பிரார்த்தனைக்கு பதிலளிப்பதில் நாமே சிறந்தோர் ஆவோம். |
45 | الـوَاسِـعُ | அல்வாஸிஃ | விசாலமானவன் |
2:268(நீங்கள் தர்மம் செய்தால்) ஷைத்தான் உங்களுக்கு வறுமையைக் கொண்டு பயங்காட்டி மானக்கேடான (கஞ்சத்தனத்)தைச் செய்யும்படி உங்களைத் தூண்டுவான். ஆனால், அல்லாஹ்வோ (நீங்கள் தர்மம் செய்தால்) தன்னுடைய மன்னிப்பையும், செல்வத்தையும் (உங்களுக்குத் தருவதாக) வாக்களிக்கின்றான். அன்றி, அல்லாஹ் (வழங்குவதில்) மிக்க விசாலமானவனும், மிக அறிந்தவனாகவும் இருக்கின்றான். 3:73"உங்கள் மார்க்கத்தைப் பின்பற்றுவோரைத் தவிர (வேறு எவரையும்) நம்பாதீர்கள்” (என்றும் கூறுகின்றனர். நபியே!) நீர் கூறும்: நிச்சயமாக நேர்வழியென்பது அல்லாஹ்வின் வழியே ஆகும்; உங்களுக்கு (வேதம்) கொடுக்கப்பட்டதுபோல் இன்னொருவருக்கும் கொடுக்கப்படுவதா அல்லது அவர்கள் உங்கள் இறைவன் முன் உங்களை மிகைத்து விடுவதா?" (என்று அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.) நிச்சயமாக அருட்கொடையெல்லாம் அல்லாஹ்வின் கையிலேயே உள்ளது; அதை அவன் நாடியோருக்கு வழங்குகின்றான்; அல்லாஹ் விசாலமான (கொடையளிப்பவன்; யாவற்றையும்) நன்கறிபவன் என்று கூறுவீராக. 5:54நம்பிக்கையாளர்களே! உங்களில் எவரேனும் தங்கள் மார்க்கத்தில் இருந்து மாறிவிட்டால் (அதனால் அல்லாஹ்வுக்கு நஷ்டமொன்றுமில்லை. உங்களைப்போக்கி) வேறு மக்களை அல்லாஹ் கொண்டு வருவான். அவன் அவர்களை நேசிப்பான்; அவர்களும் அவனை நேசிப்பார்கள். அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களிடம் பணிவாக நடந்து கொள்வார்கள்; நிராகரிப்பவர்களிடம் கண்டிப்புடையவர்களாக இருப்பார்கள்; அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவார்கள். பழிப்பவனின் பழிப்பை அவர்கள் அஞ்ச மாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருளாகும். அவன் விரும்பியவர்களுக்குத்தான் இதனை அளிக்கின்றான். அல்லாஹ் மிக விசாலமானவனும், (அனைத்தையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். |
46 | الْـحَـكِـيْـمُ | அல் - ஹகீம் | ஞானமுள்ளவன் |
31:27பூமியிலுள்ள மரங்கள் (செடிகள்) அனைத்தும் எழுது கோல்களாகவும், கடல் நீரை மையாகவும் வைத்து (அது தீர்ந்து) பின்னும் ஏழு கடல் நீரையும் மையாக வைத்து எழுதியபோதிலும் அல்லாஹ்வுடைய வசனங்கள் (எழுதி) முடிவு பெறாது. நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) மிகைத்தவனும் ஞானமுடைய வனாகவும் இருக்கின்றான். 46:2(அனைவரையும்) மிகைத்தவனும், ஞானமுடையவனுமாகிய அல்லாஹ்வினால் இவ்வேதம் அருளப்பட்டுள்ளது. 57:1வானங்களிலும் பூமியிலும் உள்ளவைகள் அனைத்துமே அல்லாஹ்வைப் புகழ்ந்து துதி செய்கின்றன. அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். 66:2ஆகவே, உங்களுடைய அந்தச் சத்தியத்திற்கு (நீங்கள் பரிகாரம் கொடுத்து) அதனை நீக்கிவிடுமாறு நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிடுகின்றான். அல்லாஹ்தான் உங்களது எஜமானன். அவன் (அனைவரையும்) நன்கறிந்தவனும் ஞானமுடைய வனாகவும் இருக்கின்றான். |
47 | الْـوَدُوْدُ | அல் - வதூத் | உள்ளன்புமிக்கவன் |
11:90ஆகவே, உங்கள் இறைவனிடம் நீங்கள் மன்னிப்பைக் கோருங்கள். (உங்கள் பாவங்களை விட்டு மனம் வருந்தி) அவனிடமே நீங்கள் திரும்புங்கள். நிச்சயமாக என் இறைவன் மிக்க அன்புடையவனாகவும் (கிருபையுடன்) நேசிப்பவனாகவும் இருக்கின்றான்" என்று கூறினார். 85:14அவன் (நம்பிக்கை கொண்டவர்களை) மிக்க மன்னிப்பவனும், நேசிப்பவனுமாக இருக்கின்றான். |
48 | الْـمَـجِـيْـدُ | அல் - மஜீத் | மகிமை உடையவன் | 11:73அதற்கவர்கள், "அல்லாஹ்வுடைய சக்தியைப் பற்றி நீ ஆச்சரியம் அடைகிறாயா? அல்லாஹ்வுடைய அருளும், அவனுடைய பாக்கியங்களும் (இப்றாஹீமுடைய) இவ்வீட்டிலுள்ள உங்கள் மீதுள்ளன. நிச்சயமாக அவன் மிக்க புகழுடையவனாகவும், மகிமை உடையவனாகவும் இருக்கின்றான்" என்று கூறினார்கள். |
49 | البَاعِثُ | அல் பாஇஸ் | இறந்தவர்களை எழுப்புகிறவன் | 22:7விசாரணைக் காலம் நிச்சயமாக வரக்கூடியது. அதில் சந்தேகமேயில்லை. (அந்நாளில்) சமாதிகளில் (புதைந்து) கிடப்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் (உயிர் கொடுத்து) எழுப்புவான் |
50 | الـشَّـهِـيْـدُ | அஷ்ஷஹீத் | சாட்சியாளன் |
4:166(நபியே! இவர்கள் உங்களை நிராகரித்து விட்டதனால் ஆவதென்ன?) உங்கள்மீது அருளப்பட்ட வேதம் உண்மையான தென்றும் (உங்களுடைய மேலான தகுதியை) அறிந்தே அதனை (உங்கள்மீது அவன்) இறக்கி வைத்தான் என்றும் அல்லாஹ்வே சாட்சியம் கூறுகின்றான். (அவ்வாறே) மலக்குகளும் சாட்சி கூறுகின்றனர். அல்லாஹ்வின் சாட்சியமே போதுமானது. 22:17நம்பிக்கையாளர்களும், யூதர்களும், ஸாபியீன்களும், கிறிஸ்தவர்களும், (நெருப்பை வணங்கும்) மஜூஸிகளும், இணை வைத்து வணங்குபவர்களும் ஆகிய (ஒவ்வொருவரும், தாங்கள்தாம் நேரான வழியில் இருப்பதாகக் கூறுகின்றனர். எனினும், யார் நேரான வழியில் இருக்கின்றார்கள் என்பதை) இவர்களுக்கிடையில் நிச்சயமாக அல்லாஹ் மறுமை நாளில் தீர்ப்புக் கூறுவான். (இவர்களுடைய செயல்கள்) அனைத்தையும் அல்லாஹ் நிச்சயமாக பார்த்துக்கொண்டே இருக்கின்றான். 41:53நிச்சயமாக (வேதமாகிய) இது, உண்மையானதுதான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் வரையில், (உலகின்) பல பாகங்களிலும், அவர்களிலும் நம்முடைய அத்தாட்சிகளை அவர்களுக்கு நாம் காண்பிப்போம்; (நபியே!) உமதிரட்சகனுக்கு, நிச்சயமாக அவன் ஒவ்வொரு பொருளின் மீதும்(அது பற்றி நன்கறிந்து) சாட்சியாக இருக்கிறான் என்பது போதுமானதாக இல்லையா? 48:28அவனே, தன்னுடைய தூதரை நேரான வழியைக் கொண்டும், சத்தியமான மார்க்கத்தைக் கொண்டும் அதை எல்லா மார்க்கங்களைவிட மேலோங்க வைப்பதற்காக அனுப்பி வைத்தான். இதற்கு அல்லாஹ்வே போதுமான சாட்சியாவான். |
51 | الْـحَـقُّ | அல் - ஹக் | உண்மையாளன் |
6:62பின்னர் அவர்கள் தங்களின் உண்மையான பாதுகாவலனான அல்லாஹ்விடம் கொண்டு வரப்படுவார்கள்; (அப்போது தீர்ப்பு கூறும்) அதிகாரம் அவனுக்கே உண்டு என்பதை அவர்கள் அறிந்து கொள்ளட்டும், அவன் கணக்கு வாங்குவதில் மிகவும் விரைவானவன். 22:6இது ஏனெனில்: நிச்சயமாக அல்லாஹ் அவனே உண்மையானவன் - (நிலையானவன்) நிச்சயமாக அவனே மரித்தோரை உயிர்ப்பிக்கின்றான் - இன்னும், நிச்சயமாக அவன்தான் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுள்ளவன் என்பதனால். 23:116ஆகவே, மெய்யான அரசனாகிய அல்லாஹ் மிக்க உயர்ந்தவன். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் இல்லை. கண்ணியமிக்க அர்ஷுக்குச் சொந்தக்காரன் அவனே! 24:25அந்நாளில் (அவர்களின் செயலுக்குத்தக்க) நீதமான கூலியை அல்லாஹ் அவர்களுக்கு முழுமையாகவே கொடுப்பான். நிச்சயமாக அல்லாஹ் உண்மையாளனும் (அவர்களின் செயல்களை) வெளியாக்கிவிடக் கூடியவன்தான் என்பதை அவர்கள் நன்கறிந்து கொள்வார்கள். |
52 | الْـوَكِـيْـلُ | அல் - வகீல் | பொறுப்பேற்கிறவன் |
3:173 மக்களில் சிலர் அவர்களிடம்; “திடமாக மக்களில் (பலர் உங்களுடன் போரிடுவதற்காகத்) திரண்டு விட்டார்கள், எனவே அப்படையைப்பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்” என்று கூறி (அச்சுறுத்தி)னர்; ஆனால் (இது) அவர்களின் ஈமானைப் பெருக்கி வலுப்படச் செய்தது: “அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவனே எங்களுக்குச் சிறந்த பாதுகாவலன்” என்று அவர்கள் கூறினார்கள். 4:171 வேதத்தையுடையவர்களே! உங்கள் மார்க்கத்தில் நீங்கள் அளவு கடந்து சென்றுவிடாதீர்கள். மேலும், அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதுவும்) கூறாதீர்கள். நிச்சயமாக மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹ், அல்லாஹ்வுடைய ஒரு தூதர்தான். (அவனுடைய மகனல்ல.) அன்றி, அவனுடைய ("குன்" என்ற) வாக்கா(ல் பிறந்தவரா)கவும் இருக்கின்றார். அல்லாஹ் (தன்னுடைய) வாக்கை மர்யமுக்கு அளித்தான். (மற்ற ஆத்மாக்களைப் போன்று அவரும்) அவனால் படைக்கப்பட்ட ஓர் ஆத்மாவே. ஆகவே, அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள். (கடவுள்கள்) "மூவர்" என்றும் கூறாதீர்கள். (இவ்வாறு கூறுவதை) விட்டுவிடுங்கள். (அது) உங்களுக்குத்தான் மிக நன்று. ஏனென்றால், அல்லாஹ் ஒருவன்தான் வணக்கத்திற்குரியவன். அவன் சந்ததிகளை விட்டும் மிகப் பரிசுத்தமானவன். வானங்கள், பூமியில் இருப்பவை அனைத்தும் அவனுக்கு உரித்தானவைகளே! (உங்கள் அனைவரையும்) பாதுகாக்க அல்லாஹ் (ஒருவனே) போதுமானவன். (ஈஸா அவசியமில்லை. 28:28அதற்கு மூஸா "உங்களுக்கும் நமக்குமிடையே இதுவே (உடன் படிக்கையாகும்). இவ்விரு நிபந்தனைகளில் எதனையும் நான் நிறைவேற்றலாம். (இன்னதைத்தான் நிறைவேற்ற வேண்டுமென்று) என்மீது கட்டாயமில்லை. நாம் பேசிக்கொண்ட இவ்வுடன் படிக்கைக்கு அல்லாஹ்வே போதுமானவன்" என்று கூறினார். 73:9அவனே கீழ் திசைக்கும் மேல் திசைக்கும் எஜமான். அவனைத் தவிர வணக்குத்திற்குரிய வேறு இறைவன் இல்லை. ஆகவே, அவனையே நீங்கள் (உங்களது) பொறுப்பாளனாக எடுத்துக் கொள்ளுங்கள். |
53 | الْـقَـوِيُّ | அல் - கவிய்யு | வல்லமைமிக்கவன் |
22:40இவர்கள் (எத்தகையோரென்றால்) நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்; “எங்களுடைய இறைவன் ஒருவன்தான்” என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள் சொல்லவில்லை); மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் கிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்; அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான். 22:74அவர்கள் அல்லாஹ்வைக் கண்ணியப்படுத்த வேண்டியவாறு கண்ணியப்படுத்தவில்லை; நிச்சயமாக அல்லாஹ் வல்லமை மிக்கவன்; (யாவரையும்) மிகைத்தவன். 42:19அல்லாஹ் தன் அடியார்களை அன்பாகக் கவனித்து வருபவன். ஆகவே, அவன் நாடியவர்களுக்கு (வேண்டிய) உணவளித்து வருகின்றான். அவன் மிக பலமுள்ளவனும் (அனைவரையும்) மிகைத்தவனும் ஆவான். 57:25நாம் நம்முடைய தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டே அனுப்பி வைத்தோம். அத்துடன் அவர்களுக்கு வேதத்தையும் கொடுத்தோம். மனிதர்கள் நீதமாக நடந்துகொள்ளும் பொருட்டு தராசையும் கொடுத்தோம். இரும்பையும் நாமே படைத்தோம். அதில் பெரும் சக்தி இருக்கின்றது; இன்னும் மனிதர்களுக்கு பல பயன்களும் உள்ளன. அல்லாஹ்வைக் (கண்ணால்) காணாமலேயே (அவனை நம்பிக்கை கொண்டு) இதன் மூலம் அவனுக்கும், அவனுடைய தூதருக்கும் உதவி செய்பவர்கள் யார் என்பதை அல்லாஹ் (சோதித்து) அறிந்துகொள்கின்றான். நிச்சயமாக அல்லாஹ் பலம் மிக்கவன், (யாவரையும்) மிகைத்தவன். |
54 | الْـمَـتِـيْـنُ | அல் - மதீன் | உறுதியானவன் | 51:58(நபியே! நீங்கள் கூறுங்கள்:) நிச்சயமாக அல்லாஹ்தான் அனைவருக்கும் உணவளிப்பவனும், அசைக்கமுடியாத பலசாலியுமாவான். |
55 | الْـوَلِـيُّ | அல் - வலிய்யு | நண்பன், உதவியாளன், பாதுகாவலன் |
4:45மேலும், அல்லாஹ் உங்கள் பகைவர்களை நன்கு அறிவான்; (உங்களுக்குப்) பாதுகாவலனாக இருக்க அல்லாஹ் போதுமானவன்; (உங்களுக்கு) உதவியாளனாக இருக்கவும் அல்லாஹ் போதுமானவன் 7:196(அன்றி) "நிச்சயமாக என் பாதுகாவலன் அல்லாஹ்தான்; அவனே இவ்வேதத்தை அருள் புரிந்தான். அவனே நல்லடியார்களை பாதுகாப்பவனாகவும் இருக்கின்றான். 42:28(மனிதர்கள்) நம்பிக்கையிழந்ததன் பின்னரும், அவன்தான் மழையை இறக்கி வைத்துத் தன்னுடைய அருளை பொழிகின்றான். அவனே பாதுகாவலன்; புகழுக்குரியவன். 45:19நிச்சயமாக இவர்கள் அல்லாஹ்வுக்கு விரோதமாக உங்களுக்கு யாதொரு உதவியும் செய்துவிட முடியாது. நிச்சயமாக அநியாயக்காரர்களுள் சிலர், (அவர்களில்) சிலருக்குத்தான் நண்பர்கள். (நம்பிக்கையாளர்களுக்கு அல்ல.) அல்லாஹ், இறை அச்சமுடைய பரிசுத்தவான்களுக்கு நண்பன். |
56 | الْـحَـمِـيْـدُ | அல் - ஹமீத் | புகழுக்குரியவன் |
14:8பின்னும், மூஸா (தன் மக்களை நோக்கி) "நீங்களும் உலகிலுள்ள மக்கள் அனைவரும் (இறைவனுக்கு முற்றிலும்) மாறு செய்தபோதிலும் (அவனுக்கு ஒன்றும் நஷ்டம் ஏற்பட்டு விடாது.) ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் (எவருடைய உதவியும்) தேவையற்றவனாகவும், புகழுக்குரியவனாகவும் இருக்கிறான்" என்றும் கூறினார். 31:12லுக்மானுக்கு நாம் ஞானத்தைக் கொடுத்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும்படி கூறினோம். ஏனென்றால், எவர் நன்றி செலுத்துகிறாரோ அவர் தன் நன்மைக்காகவே நன்றி செலுத்துகிறார். எவன் (அதனை) நிராகரிக்கிறானோ (அவன் தனக்கு தீங்கு தேடிக் கொள்கிறான். அதனால் அல்லாஹ்வுக்கு ஒன்றும் நஷ்டமில்லை. ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் தேவையற்றவனும் புகழுடைய வனாகவும் இருக்கிறான். 31:26வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்கு உரியனவே. எனினும், நிச்சயமாக அல்லாஹ் (இவற்றின்) தேவையற்றவனும் மிகப் புகழுடையவனாகவும் இருக்கிறான். 41:42இதற்கு முன்னும் சரி, இதற்குப் பின்னும் சரி உண்மைக்கு மாறான யாதொரு விஷயமும் (திருக்குர்ஆனாகிய) இதனை (அணுகவே) அணுகாது. மிக்க புகழும் ஞானமும் உடையவனால் (இது) இறக்கப்பட்டது. |
57 | المُحْصي | அல் - முஹ்ஸீ | சூழ்ந்து அறிகிறவன் |
72:28(அத்தூதர்கள்) தங்கள் இறைவனின் தூதை மெய்யாகவே எத்தி வைத்தார்கள் என்பதை, தான் அறிந்து கொள்வதற்காக (அவ்வாறு பாதுகாப்பாளரை அனுப்புகின்றான்). அவர்களிடம் உள்ளவைகளை அவன் தன் ஞானத்தால் சூழ்ந்தறிந்து கொண்டிருப்பதுடன், ஒவ்வொரு பொருளின் கணக்கையும் முழுமையாக அறிந்தவனாக இருக்கின்றான் 78:29எனினும், இவை அனைத்தையும் நாம் (நம்முடைய குறிப்புப்) புத்தகத்தில் பதிவு செய்துகொண்டோம் |
58 | المبدىءُ | அல் - முப்திஉ | ஆரம்பமாக உண்டாக்குகிறவன் |
10:34(அன்றி அவர்களை நோக்கி) "புதிதாக படைப்புகளை உண்டுபண்ணக் கூடியதும் (மரித்த பின்) அவைகளை உயிர்ப்பிக்கக் கூடியதும் நீங்கள் இணைவைத்து வணங்கும் தெய்வங்களில் ஏதும் உண்டா?" என்று (நபியே!) நீங்கள் கேளுங்கள். (அதற்கு அவர்கள் பதில் கூறுவதென்ன? நீங்களே அவர்களை நோக்கி) "படைப்புகளை முதலாவதாக உற்பத்தி செய்கிறவனும் (அவை மரணித்த) பின்னர் அவற்றை உயிர்ப்பிக்கக்கூடியவனும் அல்லாஹ்தான்" (என்று கூறி "இந்த உண்மையை விட்டு) நீங்கள் எங்குச் செல்கின்றீர்கள்?" என்றும் கேளுங்கள். 27:64ஆரம்பத்தில் படைப்புகளை உற்பத்தி செய்தவன் யார்? (அவ்வாறே பின்னும்) பின்னும் உற்பத்தி செய்து கொண்டிருப்பவன் யார்? மேகத்தில் இருந்து (மழையை இறக்கிப்) பூமியில் (தானியங்களை முளைக்கச் செய்து) உங்களுக்கு உணவளிப்பவன் யார்? அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் இருக்கின்றானா? "நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் (இதற்கு) உங்களுடைய அத்தாட்சிகளைக் கொண்டு வாருங்கள்" என்று (நபியே!) நீங்கள் கூறுங்கள். 29:19(ஒன்றுமில்லாதிருந்த) படைப்புகளை அல்லாஹ் எவ்வாறு ஆரம்பத்தில் வெளியாக்கினான் என்பதை அவர்கள் பார்க்க வில்லையா? (அவ்வாறே மரணித்த) பின்னரும் அவைகளை மீள வைப்பான். நிச்சயமாக இ(வ்வாறு செய்வ)து அல்லாஹ்வுக்கு மிக்க சுலபமானதே!" (என்றும் கூறினார்). 85:13நிச்சயமாக அவன்தான் (அவர்களை) உற்பத்தி செய்கிறான். (அவர்கள் மரணித்த பின்னரும்) அவர்களை மீளவைப்பான். |
59 | المعيدُ | அல் - முயீத் | மீளவைக்கிறவன் | 10:34 , 27:64, 29:19, 85:13 |
60 | المُحيي | அல் - முஹ்யீ | உயிர்ப்பிக்கிறவன் |
7:158(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "மனிதர்களே! (நீங்கள் எந்த நாட்டவர் ஆயினும் எவ்வகுப்பாராயினும்) நிச்சயமாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட ஒரு தூதர். வானங்கள் பூமியின் ஆட்சி அவனுக்குடையதே! (வணக்கத்திற்குரிய) இறைவன் அவனைத்தவிர வேறு ஒருவருமில்லை. அவனே உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கும்படி செய்கிறான். ஆகவே, அந்த அல்லாஹ்வையும், எழுதப் படிக்க அறியாத அவனுடைய இத்தூதரையும் நீங்கள் நம்பிக்கை கொள்வீர்களாக! அவரும் அல்லாஹ்வையும், அவனுடைய வசனங்களையும் நம்பிக்கை கொள்கிறார். ஆகவே, நீங்கள் நேரான வழியை அடைய அவரையே நீங்கள் பின்பற்றுங்கள். 15:23உங்களுக்கு) நிச்சயமாக நாம்தான் உயிர் கொடுக்கின்றோம்; நாமே (உங்களை) மரணிக்கச் செய்வோம். அனைத்திற்கும் நாமே வாரிசுகள்! (சொந்தக்காரர்கள்). 30:50(நபியே!) அல்லாஹ்வின் இவ்வருளால் ஏற்படும் பலன்களை நீங்கள் கவனியுங்கள்! இறந்துபோன பூமியை எவ்வாறு செழிக்கச் செய்கிறான்! (இவ்வாறே) நிச்சயமாக அவன் இறந்தவர்களையும் உயிர்ப்பிக்கச் செய்வான். அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் உடையவன். 57:2வானங்கள் பூமியின் ஆட்சியும் அவனுக்குடையதே! அவனே உயிர்ப்பிக்கின்றான்; அவனே மரணிக்கச் செய்கின்றான். அவன் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவன். |
61 | المميتُ | அல் முமீத் | மரணிக்கச் செய்கிறவன் |
3:156நம்பிக்கையாளர்களே! நிராகரிப்பவர்களைப் போல நீங்களும் ஆகிவிட வேண்டாம். அவர்கள் வெளியூருக்கோ அல்லது போருக்கோ சென்று (இறந்து)விட்ட தங்கள் சகோதரர்களைப் பற்றி "அவர்கள் நம்மிடமே இருந்திருந்தால் அவர்கள் இறந்திருக்கவும் மாட்டார்கள்; கொல்லப்பட்டிருக்கவும் மாட்டார்கள்" என்று கூறுகின்றனர். அவர்களுடைய உள்ளங்களில் (என்றென்றுமே) இதை ஒரு கடும் துயரமாக்குவதற்காகவே இவ்வாறு (அவர்கள் நினைக்கும்படி) அல்லாஹ் செய்கிறான். அல்லாஹ்வே உயிருடன் வாழச் செய்பவன்; மரணிக்கவும் செய்பவன். நீங்கள் செய்பவற்றை எல்லாம் அல்லாஹ் உற்று நோக்கினவனாகவே இருக்கின்றான். 7:158, 15:23, 57:2 |
62 | الْـحَـيُّ | அல் - ஹய்யு | நித்திய ஜீவனானவன், நிரந்தரமானவன் |
2:255 3:2அல்லாஹ் - அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறில்லை; அவன் நித்திய ஜீவன்; என்றும் நிலைத்திருப்பவன். 20:111(அந்நாளில்) நிரந்தரமானவனும், நிலையானவனுமாகிய (இறை)வன் முன் அனைவருடைய தலைகளும் குனிந்துவிடும். எவன் அநியாயத்தைச் சுமந்துகொண்டானோ அவன் நஷ்டம் அடைந்தே தீருவான். 25:58(அன்றி) மரணமற்ற, என்றும் நிரந்தரமான அல்லாஹ்வையே நீங்கள் நம்புங்கள். அவனுடைய புகழைக் கூறி அவனைத் துதி செய்து கொண்டிருங்கள். அவன் தன் அடியார்களின் பாவங்களை அறிந்திருப்பதே போதுமானது. (அதற்குரிய தண்டனையை அவன் கொடுப்பான்.) 40:65அவன் நிரந்தரமானவன்; அவனைத் தவிர வணக்கத் திற்குரிய வேறொரு இறைவன் இல்லை. ஆகவே, அவனுக்கு (மனிதர்களே!) நீங்கள் முற்றிலும் வழிப்பட்டுக் கலப்பற்ற மனதுடன் அவனை அழைப்பீர்களாக! உலகத்தார் அனைவரையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் அந்த அல்லாஹ்வுக்கு எல்லா புகழும் உரித்தானது" (என்றும் கூறுங்கள்.) |
63 | الْـقَـيُّـوْمُ | அல் - கய்யும் | என்றும் நிலைத்திருப்பவன் | 2:255,3:2,20:111 |
64 | الْـوَاحِـدُ | அல் - வாஜித் | கண்டுகொள்ளுதல் | 59:24"ஒரு பிடி (புல்) கத்தையை எடுத்து, அதனைக் கொண்டு (உங்களது மனைவியை) அடியுங்கள். நீங்கள் உங்களுடைய சத்தியத்தை முறிக்க வேண்டியதில்லை" என்று கூறினோம். நிச்சயமாக நாம், அவரை மிக்க பொறுமை உடையவராகவே கண்டோம். அவர் மிக்க நல்லடியார். நிச்சயமாக அவர் (ஒவ்வொரு விஷயத்திலும் நம்மை) நோக்கினவராகவே இருந்தார் |
65 | الماجدُ | அல் மாஜித் | மேன்மையானவன் |
85:15(அவன்தான்)அர்ஷுடையவன். பெருந்தன்மையுடையவன். 11:73 |
66 | الْـوَاحِـدُ | அல் - வாஹித் | ஒருவன், தனித்தவன் | 13:16, 14:48, 38:65, 39:4 |
67 | الْأَحَـدُ | அல் - அஹத் | ஏகன் | 112:1(நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. |
68 | الـصَّـمَـدُ | அஸ்ஸமத் | தேவையற்றவன் | 112:2(அந்த) அல்லாஹ் (எவருடைய) தேவையுமற்றவன். (அனைத்தும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன.) |
69 | الْـقَـادِرُ | அல் - காதிர் | ஆற்றலுள்ளவன் |
6:65(நபியே!) நீர் கூறும்: “உங்கள் (தலைக்கு) மேலிருந்தோ அல்லது உங்களுடைய கால்களுக்குக் கீழிருந்தோ உங்களுக்குத் துன்பம் ஏற்படும்படி செய்யவும்; அல்லது உங்களைப் பல பிரிவுகளாக்கி உங்களில் சிலர் சிலருடைய கொடுமையை அனுபவிக்கும்படிச் செய்யவும் அவன் ஆற்றலுள்ளவனாக இருக்கின்றான்.” அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக (நம்)வசனங்களை எவ்வாறு (பலவகைகளில் தெளிவாக்கி) விவரிக்கின்றோம் என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக. 46:33வானங்களையும், பூமியையும் எவ்வித சிரமமின்றி படைத்த அல்லாஹ், மரணித்தவர்களை உயிர்ப்பிக்க நிச்சயமாக ஆற்றல் உடையவன்தான் என்பதை அவர்கள் கவனிக்க வேண்டாமா? நிச்சயமாக அவன் சகலவற்றிற்கும் ஆற்றலுடையவன். 75:40(இவ்வளவெல்லாம் செய்த) அவன் மரணித்தவர்களை உயிர்ப்பிக்க ஆற்றலுடையவன் அல்லவா? |
70 | الْـمُـقْـتَـدِرُ | அல் - முக்ததிர் | மாபெரும் சக்தி உடையவன் |
18:45(நபியே!) இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணத்தை அவர்களுக்குக் கூறுங்கள்: அது மேகத்திலிருந்து நாம் இறக்கி வைக்கும் (மழை) நீருக்கு ஒப்பாக இருக்கிறது. பூமியிலுள்ள புற்பூண்டுகள் (அதைக் குடித்து) அதனுடன் கலந்து (நல்ல பயிராயிற்று. எனினும், அது பலன் தருவதற்குப் பதிலாக) காற்றடித்துக் கொண்டு போகக்கூடிய காய்ந்த சருகாகிவிட்டது. (இதுவே இவ்வுலக வாழ்க்கைக்கு உதாரணமாகும்.) அனைத்தின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவனாக இருக்கின்றான். 54:42நம்முடைய அத்தாட்சிகள் அனைத்தையும் அவர்கள் பொய்யாக்கிக் கொண்டே வந்தார்கள். ஆகவே, மிக்க சக்திவாய்ந்த பலசாலி பிடிப்பதைப் போல் நாம் அவர்களைப் பிடித்துக் கொண்டோம். 6:65 |
71 | الْـمُـقَـدِّمُ | அல் - முகத்திம் | முற்படுத்தி வைப்பவன் | 16:61மனிதர்கள் செய்யும் குற்றங்குறைகளைப் பற்றி அவர்களை அல்லாஹ் (உடனுக்குடன்) பிடிப்பதாக இருந்தால் (பூமியில்) ஓர் உயிரினைத்தையுமே அவன் விட்டுவைக்க மாட்டான். எனினும், ஒரு குறிப்பிட்ட தவணை வரையில் (பிடிக்காது) அவர்களைப் பிற்படுத்துகிறான். அவர்களுடைய தவணை வரும் பட்சத்தில் ஒரு விநாடியும் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள். |
72 | الْـمُـؤَخِّـرُ | அல் - முஅக்கிர் | பிற்படுத்தி வைப்பவன் | 71:4"(அவ்வாறு நீங்கள் நடந்தால், அல்லாஹ்) உங்களுடைய குற்றங்களை மன்னித்து, குறிப்பிட்ட காலம் வரையில் உங்களை (அமைதியாக வாழ) விட்டுவைப்பான். நிச்சயமாக (வேதனைக்காகக் குறிப்பிடப்பட்ட) அல்லாஹ்வுடைய தவணை வரும் சமயத்தில், அது ஒரு சிறிதும் பிந்தாது என்றும் (இதனை) நீங்கள் உறுதியாக நம்ப வேண்டாமா?" என்றும் கூறினா |
73 | الْأَوَّلُ | அல் - அவ்வல் | முதலானவன் | 57:3அவனே முதலானவன்; அவனே இறுதியானவன்; அவனே வெளிப்படையானவன்; அவனே மறைவானவன்; அவனே ஒவ்வொன்றையும் நன்கறிந்தவன். |
74 | الْآخِـرُ | அல் - ஆகிர் | இறுதியானவன் | 57:3 |
75 | الـظَّاهِـرُ | அல் - ளாஹிர் | வெளிப்படையானவன் | 57:3 |
76 | الْـبَـاطِـنُ | அல் - பாதின் | மறைவானவன் | 57:3 |
77 | الْوَالِي | அல் - வாலீ | துணை செய்பவன் , அதிகாரமுள்ளவன் | 13:11மனிதனுக்கு முன்னாலும், பின்னாலும் தொடர்ந்து வரக்கூடிய (மலக்குகள்) இருக்கிறார்கள். அல்லாஹ்வின் கட்டளையால் அவர்கள் அவனைப் பாதுகாக்கிறார்கள்; எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை; இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. |
78 | الْـمُـتَـعَـالُ | அல் - முதாஆலீ | மிக்க உயர்ந்தவன் | 13:9(இது மட்டுமா! மற்ற அனைத்தின்) மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அவன் நன்கறிந்தவன்; அவன் மிகப் பெரியவன்; மிக மிக உயர்ந்தவன் |
79 | الْـبَـرُّ | அல் - பர்ரு | உபகாரம் செய்கிறவன் | 52:28"நிச்சயமாக நாம் முன்னே (உலகில்) அவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தோம்; நிச்சயமாக அவனே மிக்க நன்மை செய்பவன்; பெருங்கிருபையுடையவன்." |
80 | الـتَّـوَّابُ | அல் - தவ்வாப் | தவ்பாவை ஏற்கிறவன் |
2:128எங்கள் இறைவனே! எங்களிருவரையும் உனக்கு (முற்றிலும்) வழிப்படும் முஸ்லிம்களாகவும், எங்களுடைய சந்ததியிலிருந்தும் ஒரு கூட்டத்தினரை உனக்கு (முற்றிலும்) வழிப்படும் முஸ்லிம்களாகவும் ஆக்கிவைப்பாயாக! ("ஹஜ்ஜு" காலத்தில்) நாங்கள் புரிய வேண்டிய வணக்கங்களையும் அறிவிப்பாயாக! (நாங்கள் தவறிழைத்து விட்டாலும்) எங்களை நீ மன்னிப்பாயாக! நிச்சயமாக நீதான் மிக மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனுமாக இருக்கின்றாய். 4:64அல்லாஹ்வுடைய அனுமதிகொண்டு (மக்கள்) அவருக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்பதற்காகவே தவிர வேறு எதற்காகவும் நாம் எந்த தூதரையும் அனுப்பவில்லை. ஆகவே, அவர்களில் (எவரும் இதற்கு மாறு செய்து) தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட சமயத்திலும், (நபியே!) உங்களிடம் வந்து அல்லாஹ்விடம் (தங்கள்) பாவமன்னிப்பைக் கோரினால், அத்துடன் அவர்களுக்காக அல்லாஹ்வுடைய தூதராகிய நீங்களும் பாவ மன்னிப்பைக் கோரினால் அன்புடையவனாகவும், மன்னிப்பு டையவனாகவுமே அவர்கள் அல்லாஹ்வைக் காண்பார்கள். 49:12நம்பிக்கையாளர்களே! அநேகமாக சந்தேகங்களிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். ஏனென்றால், நிச்சயமாகச் சந்தேகங்களில் சில பாவமானவைகளாக இருக்கின்றன. (எவருடைய குற்றத்தையும்) நீங்கள் துருவித்துருவி விசாரித்துக் கொண்டிருக்க வேண்டாம். உங்களில் ஒருவர் மற்றெவரையும் புறம் பேச வேண்டாம். உங்களில் எவனும் தன்னுடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவானா? அதனை நீங்கள் வெறுப்பீர்களே! (புறம் பேசுவதும் அவ்வாறே. இவ்விஷயங்களில்) அல்லாஹ்வுக்குப் பயந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (பாவத்திலிருந்து) விலகுபவர்களை அங்கீகரிப்பவனும் கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான். 110:3உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக; மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் “தவ்பாவை” (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான். |
81 | الْمُنْتَقِمُ | அல் - முன்தகிமு | பழி வாங்குகிறவன் |
32:22(இவ்வாறு) இறைவனின் (எச்சரிக்கையான) அத்தாட்சியைக் கொண்டு மறுமையை ஞாபகமூட்டிய பின்னரும் இதனைப் புறக்கணித்து விடுபவனைவிட அநியாயக்காரன் யார்? நிச்சயமாக நாம் இத்தகைய குற்றவாளிகளை பழிவாங்கியே தீருவோம். 43:41(நபியே! அவர்கள் மத்தியிலிருந்து) உங்களை நாம் எடுத்துக் கொண்டபோதிலும், நிச்சயமாக நாம் அவர்களிடம் பழி வாங்கியே தீருவோம். 44:16மிக்க பலமாக அவர்களை நாம் பிடிக்கும் அந்நாளில் நிச்சயமாக (அவர்களிடம்) பழிவாங்கியே தீருவோம். |
82 | الْعَفُوُّ | அல் - அஃபுவ்வு | மன்னிக்கிறவன் |
4:43நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ஓதுவது இன்னது என்று நீங்கள் அறிந்து கொள்ள முடியாதவாறு நீங்கள் போதையில் இருக்கும்போது தொழுகைக்கு நெருங்காதீர்கள்; அன்றியும் குளிப்புக் கடமையாக இருக்கும்போது குளிக்கும் வரை (பள்ளிக்குள் செல்லாதீர்கள்; பள்ளியை) பாதையாக கடந்து சென்றால் தவிர. நீங்கள் நோயாளியாகவோ, யாத்திரையிலோ, மலஜலம் கழித்தோ, பெண்களைத் தீண்டியோ இருந்து (சுத்தம் செய்து கொள்ள) தண்ணீரை பெறாவிடின் சுத்தமான மண்ணைத் தொட்டு உங்களுடைய முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவி “தயம்மும்” செய்து கொள்ளுங்கள்; (இதன்பின் தொழலாம்) நிச்சயமாக அல்லாஹ் பிழை பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கின்றான். 4:99ஏனென்றால், அல்லாஹ் மிக மன்னிப்பவனும், பிழை பொறுப்பவனாகவும் இருக்கின்றான். 22:60இவ்வாறே (காரியம் நடைபெறும்.) எவரேனும் தன்னை (எதிரி) துன்புறுத்திய மாதிரியே அந்தளவுக்கு அவனைத் துன்புறுத்தி விட்டு, பின்னும் அவனை (அந்த எதிரியை)க் கொடுமை செய்தால் நிச்சயமாக அல்லாஹ் (கொடுமைக்குள்ளான) அவனுக்கு உதவி புரிவான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், பிழை பொறுப்பவனாகவும் இருக்கிறான். 58:2உங்களில் எவரேனும் தம் மனைவிகளில் எவளையும், தன்னுடைய தாயென்று கூறிவிடுவதனால், அவள் அவர்களுடைய (உண்மைத்) தாயாகி விடமாட்டாள். அவர்களைப் பெற்றெடுத் தவர்கள்தாம் (உண்மைத்) தாயாவார்கள். (இதற்கு மாறாக எவளையும் எவரும் தாயென்று கூறினால் கூறுகின்ற) அவர்கள் நிச்சயமாகத் தகாததும், பொய்யானதுமான ஒரு வார்த்தையையே கூறுகின்றனர். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் (குற்றங்களைப்) பொறுப்பவனுமாக இருக்கின்றான். (ஆகவே, இத்தகைய குற்றம் செய்தவர்கள் அல்லாஹ்விடம் மன்னிப்பைக் கோரவும்.) |
83 | الرَّءُوفُ | அர்ரவூஃப் | மிகக் கருணையுடையவன் |
3:30ஒவ்வொரு ஆத்மாவும் தான் செய்த நன்மைகளையும், தான் செய்த தீமைகளையும் தனக்கு முன் காணும் நாளில் (துக்கித்து) தனக்கும், தான் செய்த தீமைகளுக்கும் இடையில் நீண்ட தூரம் இருந்திருக்க வேண்டுமே? என்று விரும்பும். ஆகவே அல்லாஹ் உங்களுக்குத் தன்னைப்பற்றி (அச்சமூட்டி) எச்சரிக்கை செய்கின்றான். ஏனென்றால், அல்லாஹ் (தன்) அடியார்களிடம் மிகக் கருணையுடையவனாக இருக்கின்றான். 9:117நபியின் மீது நிச்சயமாக அல்லாஹ் அருள் புரிந்தான். (அவ்வாறே) கஷ்ட காலத்தில் அவரைப் பின்பற்றிய முஹாஜிர்கள் மீதும், அன்ஸார்கள் மீதும் (அருள் புரிந்தான்.) அவர்களில் ஒரு பிரிவினருடைய உள்ளங்கள் தடுமாறிக் கொண்டிருந்த பின்னரும் அவர்களை மன்னித்(து, அவர்கள் மீது அருள்புரிந்)தான். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் மீது பேரன்பும் கிருபையும் உடையவனாக இருக்கின்றான். 57:9உங்களை(ப் பாவத்தின்) இருள்களிலிருந்து ஒளியின் பக்கம் கொண்டு வரும் பொருட்டே, அவன் தனது அடியார் மீது தெளிவான வசனங்களை இறக்கி வைத்திருக்கின்றான். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிக கிருபையுடையவனும் மிக இரக்கம் உடையவனாகவும் இருக்கின்றான். 59:10எவர்கள் இவர்களுக்குப் பின் வந்தார்களோ, அவர்கள் "எங்கள் இறைவனே! எங்களையும் நீ மன்னித்தருள்! எங்களுக்கு முன் நம்பிக்கைக் கொண்ட எங்களுடைய சகோதரர்களையும் மன்னித்தருள்! நம்பிக்கைக் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய உள்ளங்களில் குரோதங்களை உண்டு பண்ணாதே! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிகக் கிருபையுடையவனும், இரக்க முடையவனுமாக இருக்கின்றாய்!" என்று பிரார்த்தனை செய்து கொண்டே இருக்கின்றனர். |
84 | مَالِكُ الْمُلْكِ | மாலிகுல் முல்க் | அரசாட்சிக்குரியவன் | 3:26 |
85 | ذُو الْجَلاَلِ وَالإِكْرَامِ | துல்ஜலாலி வல்இக்ராம் | சிறப்பும், கண்ணியமும் உடையவன் | 55:27 55:78(நபியே!) மிக்க சிறப்பும், கண்ணியமும் உள்ள உங்களது இறைவனின் திருப்பெயர் மிக பாக்கியமுடையது. |
86 | الْمُقْسِطُ | அல் - முக்ஸித் | நீதியாளன் |
3:18அல்லாஹ் நீதியை நிலைநாட்டக்கூடியவனாக உள்ள நிலையில் அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்று சாட்சி கூறுகிறான். மேலும் மலக்குகளும் அறிவுடையோரும் (இவ்வாறே சாட்சி கூறுகின்றனர்.) அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை; அவன் மிகைத்தவன், ஞானமிக்கவன். 7:29அன்றி, "என் இறைவன் நீதத்தையே கட்டளை யிட்டிருக்கின்றான். ஒவ்வொரு தொழுகையின்போதும் (மனதில்) அவனையே நீங்கள் முன்னோக்கித் தொழுங்கள். நீங்கள் அவனுக்கே முற்றிலும் வழிப்பட்டு, கலப்பற்ற மனதோடு அவனிடமே நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். அவன் உங்களை (இல்லாமையில் இருந்து) வெளியாக்கியது போல (இறந்த பின்னரும் உயிர்ப்பிக்கப்பட்டு அவனிடமே) நீங்கள் மீளுவீர்கள்" என்றும் கூறுங்கள். |
87 | الْجَامِعُ | அல் - ஜாமிஃ | ஒன்று சேர்க்கிறவன் | 3:9"எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ ஒரு நாளில் மனிதர்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்பவனாக இருக்கின்றாய். அ(ந்நாள் வருவ)தில் சந்தேகமேயில்லை. (ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் (தன்) வாக்குறுதியில் தவறுபவனல்ல" (என்று கூறுவார்கள்.) |
88 | الْغَنِيُّ | அல் - ஙனிய்யு | சீமான், தேவையற்றவன் |
3:97அதில் தெளிவான அத்தாட்சிகளும் இருக்கின்றன. இப்றாஹீம் (தொழுகைக்காக) நின்ற இடமும் இருக்கின்றது. எவர் அதில் நுழைகின்றாரோ அவர் (பாதுகாப்பு பெற்று) அச்சமற்றவராகி விடுகின்றார். ஆகவே, எவர்கள் அங்கு பிரயாணம் செல்ல சக்தி உடையவர்களாக இருக்கின்றார்களோ அத்தகைய மனிதர்கள் மீது அல்லாஹ்வுக்காக (அங்குச் சென்று) அந்த ஆலயத்தை ஹஜ் செய்வது கடமையாகும். எவரேனும் (இதை) நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்கு ஒன்றும் குறைந்து விடுவதில்லை. ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் உலகத்தாரின் தேவையற்றவனாக இருக்கின்றான். 39:7அவனை நீங்கள் நிராகரித்துவிட்டபோதிலும் (அவனுக்கு நஷ்டமில்லை. ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் உங்களுடைய தேவையற்றவனாக இருக்கின்றான். எனினும், தன் அடியார்கள் (தன்னை) நிராகரிப்பதை அவன் விரும்புவதே இல்லை. நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாயின், உங்களைப் பற்றி அவன் திருப்தியடைவான். ஒருவனின் (பாவச்) சுமையை மற்றொருவன் சுமப்பதில்லை. இனி நீங்கள் செல்ல வேண்டியது உங்கள் இறைவனிடம்தான். அச்சமயம் நீங்கள் செய்து கொண்டிருந் தவைகளை அவன் உங்களுக்கு அறிவிப்பான். உள்ளங்களில் உள்ளவைகளையும் நிச்சயமாக அவன் நன்கறிகின்றான் 47:38(மனிதர்களே!) அறிந்து கொள்ளுங்கள்! நீங்கள் தான் அவர்கள்; அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வதற்காக நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள்; அப்பொழுது உலோப்பதனம் செய்வோரும் உங்களில் இருக்கின்றனர்; மேலும் எவர் உலோபத்தனம் செய்கிராரோ, அவர் உலோபத்தனம் செய்வதெல்லாம் அவர் தனக்கே(கேடாக)தான் ; இன்னும் அல்லாஹ் தேவையற்ற சீமான்; நீங்களோ தேவையுடையவர்கள்; மேலும், (அவனுடைய கட்டளைகளை) நீங்கள் புறக்கணிப்பீர்களானால், (உங்களை அழித்து) உங்களை அல்லாத (வேறு) சமுகத்தாரை (உங்கள் இடத்தில்) அவன் மாற்றி விடுவான்; பின்னர் அவர்கள் உங்களை போல் இருக்கமாட்டார்கள் 57:24எவர்கள் கஞ்சத்தனம் செய்து, மற்ற மனிதர்களையும் கஞ்சத்தனம் செய்யும்படி தூண்டுகிறார்களோ (அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு. ஆகவே, அல்லாஹ்வுடைய கட்டளைகளை) எவன் புறக்கணிக்கின்றானோ (அது அவனுக்குத் தான் நஷ்டத்தை உண்டுபண்ணும். அல்லாஹ்வுக்கு யாதொரு நஷ்டமும் ஏற்படாது.) ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் பெரும் சீமானாகவும் பெரும் புகழுடையவனாகவும் இருக்கின்றான். |
89 | الْمُغْنِي | அல் - முங்னீ | செல்வந்தர்களாக்குபவன், தேவையறச் செய்கிறவன் | 9:28நம்பிக்கையாளர்களே! நிச்சயமாக இணைவைத்து வணங்குபவர்கள் அசுத்தமானவர்களே. ஆகவே, அவர்கள் இவ்வருடத்திற்குப் பின்னர் இனி சிறப்புற்ற இப்பள்ளியை நெருங்க வேண்டாம். (அவர்களைத் தடை செய்தால் அவர்களால் கிடைத்து வந்த செல்வம் நின்று உங்களுக்கு) வறுமை வந்து விடுமோ என்று நீங்கள் பயந்தால் (அதைப் பற்றி பாதகமில்லை.) அல்லாஹ் நாடினால், அதிசீக்கிரத்தில் தன் அருளைக்கொண்டு உங்களை செல்வந்தர்களாக்கி விடுவான் (என்பதை அறிந்துகொள்ளுங்கள்.) நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். |
90 | الْمَانِعُ | அல் - மானிஃ | தடுக்கிறவன் |
21:43இவர்களை (நம்முடைய வேதனையிலிருந்து) தடுக்கக்கூடிய தெய்வங்கள் நம்மையன்றி இருக்கின்றனவா? (இவர்கள் தெய்வமெனக் கூறும்) அவை (இவர்களுக்கு உதவி செய்வதென்ன!) தமக்குத்தாமே உதவி செய்துகொள்ளவும் சக்தியற்றவை. ஆகவே, நமக்கெதிராக அவை அவர்களுக்குத் துணைபுரியாது. 67:21அல்லாஹ் (உங்களுக்களிக்கும்) தன்னுடைய உணவைத் தடுத்துக் கொண்டால், உங்களுக்கு உணவு கொடுப்பவன் யார்? (இதனையும் இவர்கள் கவனிப்பதில்லை.) அன்று. இவர்கள் வழிகேட்டிலும், (சத்தியத்தை) வெறுப்பதிலுமே மூழ்கிக் கிடக்கின்றனர். |
91 | الضَّارُّ | அள்ளார்ரு | தீங்கிழைப்பவன், துன்பமுறச் செய்கிறவன் | 6:17(நபியே!) அல்லாஹ் உங்களுக்கு யாதொரு தீங்கிழைத்தால், அதனை நீக்குபவர்கள் அவனையன்றி வேறெவருமில்லை. உங்களுக்கு யாதொரு நன்மையை அவன் கொடுத்தாலும் (அதைத் தடுத்துவிடக் கூடியவன் எவனும் இல்லை.) அவன் அனைத்தின் மீதும் மிக்க ஆற்றலுடையவன். |
92 | النَّافِعُ | அந்நாபிஃ | நன்மை செய்பவன், பலன் தருகிறவன் |
7:188(அன்றி) நீங்கள் கூறுங்கள்: "அல்லாஹ் நாடினாலன்றி நான் எனக்கு யாதொரு நன்மையையோ தீமையையோ செய்துகொள்ள எனக்கு சக்தி இல்லை. நான் மறைவானவற்றை அறியக்கூடுமாயின் நன்மைகளையே அதிகமாகத் தேடிக்கொண்டிருப்பேன்; யாதொரு தீங்குமே என்னை அணுகி இருக்காது. நான் (பாவிகளுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நம்பிக்கை கொள்பவர்களுக்கு நற்செய்தி கூறுபவனுமே அன்றி வேறில்லை 10:49(அதற்கு நபியே!) நீங்கள் கூறுங்கள்: "அல்லாஹ் நாடியதையன்றி யாதொரு நன்மையோ தீமையோ நான் எனக்கே தேடிக்கொள்ள சக்தியற்றவன். ஒவ்வொரு வகுப்பாருக்கும் ஒரு குறிப்பிட்ட தவணையுண்டு. அவர்களுடைய தவணை வரும் சமயத்தில் ஒரு நாழிகையும் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்." அத்தவணையில் அவர்கள் காரியம் முடிவு பெற்றுவிடும். |
93 | النُّورُ | அந்நூர் | பிரகாசமானவன் | 24:35அல்லாஹ், வானங்கள் பூமி (ஆகியவை)களின் பிரகாசமாக இருக்கிறான். அவனுடைய பிரகாசத்திற்கு உதாரணம் விளக்கு இருக்கும் ஒரு மாடத்திற்கு ஒப்பாகும். அவ்விளக்கு ஒரு பளிங்குக் கிண்ணத்தில் இருக்கிறது. அந்தக் கிண்ணமோ முத்தாலாகிய (பிரகாசிக்கும்) ஒரு நட்சத்திரத்தைப்போல் (பிரகாசித்துக்கொண்டு) இருக்கின்றது. (அதில்) பாக்கியம் பெற்ற "ஜைத்தூன்" மரத்தின் எண்ணெய் எரிக்கப்படுகின்றது.அது கீழ்த்திசையை சேர்ந்ததுமன்று; மேல்திசையை சேர்ந்ததுமன்று. அந்த எண்ணெய் நெருப்புத் தொடாவிடினும் பிரகாசிக்கவே செய்கிறது. (அதுவும்) பிரகாசத்திற்கு மேல் பிரகாசமாக (பிரகாசிக்கிறது). அல்லாஹ், தான் நாடிய வர்களைத் தன் பிரகாசத்தின் பக்கம் செலுத்துகின்றான். மனிதர்களுக்கு அல்லாஹ் (தன்னுடைய தன்மையை அறிவிக்கும் பொருட்டு) இத்தகைய உதாரணங்களைக் கூறுகிறான். அல்லாஹ் அனைத்தையும் மிக்க அறிந்தவன். |
94 | الْهَادِي | அல் - ஹாதீ | நேர்வழி காட்டுபவன் |
22:54எவர்களுக்கு (மெய்யான) கல்வி ஞானம் கொடுக்கப் பட்டிருக்கின்றதோ அவர்கள் நிச்சயமாக இது உங்கள் இறைவனிடமிருந்து வந்த உண்மை என்று திட்டமாக அறிந்து இதை நம்பிக்கை கொண்டு தங்கள் மனப்பூர்வமாகவே அவனுக்கு கட்டுப்படுவார்கள். நிச்சயமாக எவர்கள் (மெய்யாகவே) நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களை, அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறான். 25:31இவ்வாறே ஒவ்வொரு நபிமாருக்கும் குற்றவாளிகளை நாம் எதிரிகளாக ஏற்படுத்தி இருந்தோம். (நபியே!) உங்களுக்கு நேரான வழியை அறிவித்து, உதவி செய்ய உங்கள் இறைவனே போதுமானவன் |
95 | الْبَدِيعُ | அல் - பதீஃ | முன்மாதிரியின்றியே படைப்பவன் |
2:117(அன்றி) அவனே வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றியே படைத்தவன். அவன் எதைப் படைக்கக் கருதினாலும் அதனை "ஆகுக!" எனக் கூறிய மாத்திரத்தில் உடனே அது ஆகிவிடுகிறது. 6:101முன்மாதிரியின்றியே வானங்களையும் பூமியையும் அவன் படைத்தான். அவனுக்கு எவ்வாறு சந்ததியேற்படும்? அவனுக்கு மனைவியே கிடையாதே! அனைத்தையும் அவனே படைத்திருக்கின்றான். அன்றி, அவன் அனைத்தையும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். |
96 | الْبَاقِي | அல் - பாகீ | நிலையானவன் | 55:27 |
97 | الْوَارِثُ | அல் - வாரித் | அனந்தர உரிமை கொள்பவன் | 15:23(உங்களுக்கு) நிச்சயமாக நாம்தான் உயிர் கொடுக்கின்றோம்; நாமே (உங்களை) மரணிக்கச் செய்வோம். அனைத்திற்கும் நாமே வாரிசுகள்! (சொந்தக்காரர்கள்). 57:10அன்றியும் அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் செலவு செய்யாதிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? வானங்கள், பூமியிலுள்ளவற்றின் அனந்தர பாத்தியதை அல்லாஹ்வுடையதே! (மக்கா) வெற்றிக்கு முன்னர் செலவு செய்து, போரிட்டவர்களுக்கு உங்களில் நின்றும் (எவரும்) சமமாக மாட்டார்; (மக்காவின் வெற்றிக்குப்) பின்; செலவு செய்து போரிட்டவர்களைவிட, அவர்கள் பதவியால் மிகவும் மகத்தானவர்கள்; எனினும் அல்லாஹ் எல்லோருக்குமே அழகானதையே வாக்களித்திருக்கின்றான். அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன். |
98 | الرَّشِيدُ | அர் ரஷீத் | நேர்வழி காட்டுபவன் |
2:256(இஸ்லாம்) மார்க்கத்தில் நிர்ப்பந்தமேயில்லை. ஏனென்றால் வழிகேட்டிலிருந்து (விலகி) நேர்வழி (அடைவது எவ்வாறென்று) தெளிவாகிவிட்டது. ஆகவே, எவர் ஷைத்தானை நிராகரித்துவிட்டு அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கின்றாரோ, அவர் நிச்சயமாக அறுபடாத பலமானதொரு கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ், (அனைத்தையும்) நன்கு செவியுறுபவனாகவும், மிக அறிந்தவனாகவும் இருக்கின்றான். 72:10பூமியிலுள்ளவர்களுக்கு (இதனால்) தீங்கு விரும்பப் படுகின்றதோ, அல்லது அவர்களின் இறைவன் (இதனால்) அவர்களுக்கு நன்மையை நாடியிருக்கின்றானோ என்பதை நிச்சயமாக நாங்கள் அறியமாட்டோம். |
99 | الصَّبُورُ | அஸ்ஸபூர் | மிக்கப் பொறுமையாளன் |
2:153நம்பிக்கையாளர்களே! (நீங்கள் உங்கள் முயற்சிகளில் வெற்றி அடைவதற்காக) பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான். 3:200முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள்; (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்! 103:3ஆயினும், எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களையும் செய்து, சத்தியத்தை ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து (பாவங்களை விடுவதிலும் நன்மைகளைச் செய்வதிலும் ஏற்படும் கஷ்டங்களைச்) சகித்துக் கொள்ளுமாறும் ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து வந்தார்களோ, அவர்களைத் தவிர (இவர்கள் நஷ்டமடையவில்லை). |
மேற்கூறபட்ட அல்லாஹ்வின் திருப்பெயர்கள் திர்மிதி 3507 ஹதீஸின் அடிப்படையில் அமைந்து ஆகும். ஆனால் அந்த ஹதீஸ் கரீப் வகை ஹதீஸ் என இமாம் திர்மிதி அவர்கள் கூறுகிறார்கள். இதை போண்றே இப்னு மாஜா 3861 மற்றொரு ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. அதுவும் பலஹீனமான ஹதீஸ் ஆகும். இப்னு மாஜாவில் வந்து திர்மிதியில் வராத சில பெயர்கள் பின் வருமாறு:
- الْجَمِيلُ - அல் - ஜமீல்
- الْقَرِيبُ - அல் - கரீப்
- الرَّبُّ - அர்ரப்
- الْمُبِينُ - அல் - முபீன்
- الْبُرْهَانُ - அல் - புர்ஹான்
- الْوَاقِي - அல் - வாகி
- ذُو الْقُوَّةِ - துல் குவ்வா
- الدَّائِمُ - அத் - தாயிம்
- الْفَاطِرُ - அல் - ஃபாதிர்
- الأَبَدُ - அல் - அபத்
- الصَّادِقُ - அஸ் - ஸாதிக்
- الْمُنِيرُ - அல் - முனீர்
- التَّامُّ - அத் - தாம்
- الْقَدِيمُ - அல் - கதீம்
- الْوِتْرُ - அல் - வித்ர்
அந்த இரு ஹதீஸ்கள் பின்வருமாறு:
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ الْجُوزَجَانِيُّ، حَدَّثَنِي صَفْوَانُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ لِلَّهِ تَعَالَى تِسْعَةً وَتِسْعِينَ اسْمًا مِائَةً غَيْرَ وَاحِدَةٍ مَنْ أَحْصَاهَا دَخَلَ الْجَنَّةَ هُوَ اللَّهُ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ الْمَلِكُ الْقُدُّوسُ السَّلاَمُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ الْغَفَّارُ الْقَهَّارُ الْوَهَّابُ الرَّزَّاقُ الْفَتَّاحُ الْعَلِيمُ الْقَابِضُ الْبَاسِطُ الْخَافِضُ الرَّافِعُ الْمُعِزُّ الْمُذِلُّ السَّمِيعُ الْبَصِيرُ الْحَكَمُ الْعَدْلُ اللَّطِيفُ الْخَبِيرُ الْحَلِيمُ الْعَظِيمُ الْغَفُورُ الشَّكُورُ الْعَلِيُّ الْكَبِيرُ الْحَفِيظُ الْمُقِيتُ الْحَسِيبُ الْجَلِيلُ الْكَرِيمُ الرَّقِيبُ الْمُجِيبُ الْوَاسِعُ الْحَكِيمُ الْوَدُودُ الْمَجِيدُ الْبَاعِثُ الشَّهِيدُ الْحَقُّ الْوَكِيلُ الْقَوِيُّ الْمَتِينُ الْوَلِيُّ الْحَمِيدُ الْمُحْصِي الْمُبْدِئُ الْمُعِيدُ الْمُحْيِي الْمُمِيتُ الْحَىُّ الْقَيُّومُ الْوَاجِدُ الْمَاجِدُ الْوَاحِدُ الصَّمَدُ الْقَادِرُ الْمُقْتَدِرُ الْمُقَدِّمُ الْمُؤَخِّرُ الأَوَّلُ الآخِرُ الظَّاهِرُ الْبَاطِنُ الْوَالِي الْمُتَعَالِي الْبَرُّ التَّوَّابُ الْمُنْتَقِمُ الْعَفُوُّ الرَّءُوفُ مَالِكُ الْمُلْكِ ذُو الْجَلاَلِ وَالإِكْرَامِ الْمُقْسِطُ الْجَامِعُ الْغَنِيُّ الْمُغْنِي الْمَانِعُ الضَّارُّ النَّافِعُ النُّورُ الْهَادِي الْبَدِيعُ الْبَاقِي الْوَارِثُ الرَّشِيدُ الصَّبُورُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ حَدَّثَنَا بِهِ غَيْرُ وَاحِدٍ عَنْ صَفْوَانَ بْنِ صَالِحٍ . وَلاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ صَفْوَانَ بْنِ صَالِحٍ وَهُوَ ثِقَةٌ عِنْدَ أَهْلِ الْحَدِيثِ . وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَلاَ نَعْلَمُ - فِي كَبِيرِ شَيْءٍ مِنَ الرِّوَايَاتِ لَهُ إِسْنَادٌ صَحِيحٌ ذِكْرَ الأَسْمَاءِ إِلاَّ فِي هَذَا الْحَدِيثِ . وَقَدْ رَوَى آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ هَذَا الْحَدِيثَ بِإِسْنَادٍ غَيْرِ هَذَا عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَذَكَرَ فِيهِ الأَسْمَاءَ وَلَيْسَ لَهُ إِسْنَادٌ صَحِيحٌ
جامع الترمذي : 3507
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ مُحَمَّدٍ الصَّنْعَانِيُّ، حَدَّثَنَا أَبُو الْمُنْذِرِ، زُهَيْرُ بْنُ مُحَمَّدٍ التَّمِيمِيُّ حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ الأَعْرَجُ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " إِنَّ لِلَّهِ تِسْعَةً وَتِسْعِينَ اسْمًا مِائَةً إِلاَّ وَاحِدًا إِنَّهُ وِتْرٌ يُحِبُّ الْوِتْرَ مَنْ حَفِظَهَا دَخَلَ الْجَنَّةَ وَهِيَ اللَّهُ الْوَاحِدُ الصَّمَدُ الأَوَّلُ الآخِرُ الظَّاهِرُ الْبَاطِنُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ الْمَلِكُ الْحَقُّ السَّلاَمُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ الرَّحْمَنُ الرَّحِيمُ اللَّطِيفُ الْخَبِيرُ السَّمِيعُ الْبَصِيرُ الْعَلِيمُ الْعَظِيمُ الْبَارُّ الْمُتَعَالِ الْجَلِيلُ الْجَمِيلُ الْحَىُّ الْقَيُّومُ الْقَادِرُ الْقَاهِرُ الْعَلِيُّ الْحَكِيمُ الْقَرِيبُ الْمُجِيبُ الْغَنِيُّ الْوَهَّابُ الْوَدُودُ الشَّكُورُ الْمَاجِدُ الْوَاجِدُ الْوَالِي الرَّاشِدُ الْعَفُوُّ الْغَفُورُ الْحَلِيمُ الْكَرِيمُ التَّوَّابُ الرَّبُّ الْمَجِيدُ الْوَلِيُّ الشَّهِيدُ الْمُبِينُ الْبُرْهَانُ الرَّءُوفُ الرَّحِيمُ الْمُبْدِئُ الْمُعِيدُ الْبَاعِثُ الْوَارِثُ الْقَوِيُّ الشَّدِيدُ الضَّارُّ النَّافِعُ الْبَاقِي الْوَاقِي الْخَافِضُ الرَّافِعُ الْقَابِضُ الْبَاسِطُ الْمُعِزُّ الْمُذِلُّ الْمُقْسِطُ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِينُ الْقَائِمُ الدَّائِمُ الْحَافِظُ الْوَكِيلُ الْفَاطِرُ السَّامِعُ الْمُعْطِي الْمُحْيِي الْمُمِيتُ الْمَانِعُ الْجَامِعُ الْهَادِي الْكَافِي الأَبَدُ الْعَالِمُ الصَّادِقُ النُّورُ الْمُنِيرُ التَّامُّ الْقَدِيمُ الْوِتْرُ الأَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ " . قَالَ زُهَيْرٌ فَبَلَغَنَا عَنْ غَيْرِ وَاحِدٍ مِنْ أَهْلِ الْعِلْمِ أَنَّ أَوَّلَهَا يُفْتَحُ بِقَوْلِ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ بِيَدِهِ الْخَيْرُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ لَهُ الأَسْمَاءُ الْحُسْنَى .
سنن ابن ماجه: 3861
அல்லாஹ்வின் திருப்பெயர்கள் 99யை விட அதிகமானது :
ஆதாரம் மற்றும் பிரார்தணை : http://islamqa.info/en/41003اَللّهُمَّ إِنِّيْ عَبْدُكَ وَابْنُ عَبْدِكَ وَابْنُ أَمَتِكَ ناَصِيَتِيْ فِي يَدِكَ ماضٍ فِيَّ حُكْمُكَ عَدْلٌ فِيَّ قَضَاؤُكَ أَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ سَمَّيْتَ بِهِ نَفْسَكَ أَوْ أَنْزَلْتَهُ فِي كِتَابِكَ أَوْ عَلَّمْتَهُ أَحَدًا مِنْ خَلْقِكَ أَوْ اِسْتَأْثَرْتَ بِهِ فِي عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ أَنْ تَجْعَلَ الْقُرْآنَ ربِيْعَ قَلْبِيْ وَنُوْرَ صَدْرِيْ وَجَلاَءَ حُزْنِيْ وَذِهَابَ هَمِّيْ وَغَمِّيْ
(அல்லாஹும்ம இன்னீ அப்துக, வப்னு அப்திக, வப்னு அமதிக, நாஸியத்தீ பி எதிக, மாழின் ஃபிய்ய ஹுக்முக, அதுலுன் ஃபிய்ய கலாவுக, அஸ்அலுக பிகுல்லி இஸ்மின் ஹுவ லக, ஸம்மைத்த பிஹீ நஃப்ஸக, அவ் அன்ஸல்தஹு ஃபீ கிதாபிக, அவ் அல்லம்தஹு அஹதன் மின் ஹல்கிக, அவிஸ்தஃதர்த்த பிஹீ ஃபீ இல்மில் கைபி இன்தக, அன் தஜ்அலல் குர்ஆனல் அளீம ரபீஅ கல்பீ, வ நூர சதுரீ, வஜலாஹ ஹுஸ்னீ, வதிஹாப ஹம்மீ வகம்மீ)
பொருள்: யா அல்லாஹ்! நான் உன் அடிமை. உன் அடிமைகளான ஓர் ஆண், ஒரு பெண்ணின் மகனாவேன். எனது முன்நெற்றி தராமம் உனது கையிலே இருக்கிறது. என்னில் உனது கட்டளையே செல்லுபடியாகிறது. என் விஷயத்தில் உன் தீர்ப்பு நீதிமானது. உனக்குச் சொந்தமான ஒவ்வொரு திருப்பெயர் கொண்டும் நான் உன்னிடம் யாசிக்கிறேன். அந்தப் பெயரை நீயே உனக்குச் சூட்டியிருப்பாய், அல்லது உனது வேதத்தில் அதை நீ அருளியிருப்பாய், அல்லது உனது படைப்புகளில் எவருக்கேனும் அதைக் கற்றுக் கொடுத்திருப்பாய், அல்லது மறைவானவை பற்றிய ஞானத்தில் உன்னிடத்தில் அதை வைத்திருப்பாய். (அவை அனைத்தைக் கொண்டும் உன்னிடம் கேட்கிறேன்.)
அல்குர்ஆனை என் இதயத்தின் வசந்தமாக்குவாயாக! என் நெஞ்சத்தின் ஒளியாக்குவாயாக! எனது துயரத்தை நீக்கக்கூடியதாகவும் எனது கவலையை மறைக்கக் கூடியதாகவும் ஆக்குவாயாக!
நூல்: (முஸ்னது அஹ்மது 1/391, ஸஹீஹ் இப்ன் ஹிப்பான், ஹாக்கிம்)