بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ |
11:1 الر ۚ كِتَابٌ أُحْكِمَتْ آيَاتُهُ ثُمَّ فُصِّلَتْ مِنْ لَدُنْ حَكِيمٍ خَبِيرٍ Aliflamra kitabun ohkimat ayatuhu thumma fussilat min ladun hakeemin khabeerin Alif-Lâm-Râ.[These letters are one of the miracles of the Qur'ân and none but Allâh (Alone) knows their meanings.](This is) a Book, the Verses whereof are perfected (in every sphere of knowledge), and then explained in detail from One (Allâh), Who is All-Wise Well-Acquainted (with all things). Hilali & KhanAlif, Lam, Ra. [This is] a Book whose verses are perfected and then presented in detail from [one who is] Wise and Acquainted. Saheeh Internationalஅலிஃப்; லாம்; றா. (இது) வேத நூல். அனைத்தையும் நன்கறிந்த ஞானவானால் இதன் வசனங்கள் (பல அத்தாட்சிகளைக் கொண்டு) உறுதி செய்யப்பட்ட பின்னர் (தெளிவாக) விவரிக்கப் பட்டுள்ளன. தாருல் ஹுதாஅலிஃப், லாம், றா. (இது) வேதமாகும்; இதன் வசனங்கள் (பல்வேறு அத்தாட்சிகளால்) உறுதியாக்கப்பட்டு பின்னர் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன- மேலும், (இவை யாவற்றையும்) நன்கறிபவனும், ஞானம் மிக்கோனுமாகிய(இறை)வனிடம் இருந்து(வந்து)ள்ளன. ஜான் டிரஸ்ட் நிறுவனம்அலிஃப் லாம் றா. (இது அல்லாஹ்வின்) வேதம், இதன் வசனங்கள் உறுதியாக்கப்பட்டு, அதன்பின்னர் அவை தீர்க்கமான அறிவுடையவன், நன்கறிந்தவனிடமிருந்து தெளிவு செய்யப்பட்டுள்ளன. மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Alif Lām Ra. This is a Book whose verses are perfected, then fully explained, from One Who is All-Wise, All-Aware. Ruwwad Center |
11:2 أَلَّا تَعْبُدُوا إِلَّا اللَّهَ ۚ إِنَّنِي لَكُمْ مِنْهُ نَذِيرٌ وَبَشِيرٌ Alla taAAbudoo illa Allaha innanee lakum minhu natheerun wabasheerun (Saying) worship none but Allâh. Verily, I (Muhammad [sal-Allâhu 'alayhi wa sallam]) am to you from Him a warner and a bringer of glad tidings. Hilali & Khan[Through a messenger, saying], "Do not worship except Allah. Indeed, I am to you from Him a warner and a bringer of good tidings," Saheeh International(நபியே! மனிதர்களை நோக்கி நீங்கள் கூறுங்கள்:) "நீங்கள் அல்லாஹ்வைத் தவிர (வேறு யாரையும்) வணங்காதிருக்க (உங்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யவும், நற்செய்தி கூறவுமே நிச்சயமாக நான் அவனால் உங்களிடம் அனுப்பப் பட்டுள்ளேன். தாருல் ஹுதாநீங்கள் அல்லாஹ்வையன்றி (வேறு எதனையும்) வணங்காதீர்கள். “நிச்சயமாக நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிப்பவனாகவும், நன்மாராயம் கூறுபவனாகவும், நான் அவனிடமிருந்து (அனுப்பப்பட்டு) இருக்கிறேன்” (என்றும்). ஜான் டிரஸ்ட் நிறுவனம்“நீங்கள் அல்லாஹ்வைத் தவிர (வேறு யாரையும்) வணங்காதீர்கள், அவனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவும் இருக்கிறேன் (என்றும்), மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)[Say O Prophet], “Worship none except Allah. Indeed, I am sent to you from Him, as a warner and bearer of glad tidings. Ruwwad Center |
11:3 وَأَنِ اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ يُمَتِّعْكُمْ مَتَاعًا حَسَنًا إِلَىٰ أَجَلٍ مُسَمًّى وَيُؤْتِ كُلَّ ذِي فَضْلٍ فَضْلَهُ ۖ وَإِنْ تَوَلَّوْا فَإِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ كَبِيرٍ Waani istaghfiroo rabbakum thumma tooboo ilayhi yumattiAAkum mataAAan hasanan ila ajalin musamman wayuti kulla thee fadlin fadlahu wain tawallaw fainee akhafu AAalaykum AAathaba yawmin kabeerin And (commanding you): "Seek the forgiveness of your Lord, and turn to Him in repentance, that He may grant you good enjoyment, for a term appointed, and bestow His abounding Grace to every owner of grace (i.e. the one who helps and serves the needy and deserving, physically and with his wealth, and even with good words). But if you turn away, then I fear for you the torment of a Great Day (i.e. the Day of Resurrection). Hilali & KhanAnd [saying], "Seek forgiveness of your Lord and repent to Him, [and] He will let you enjoy a good provision for a specified term and give every doer of favor his favor. But if you turn away, then indeed, I fear for you the punishment of a great Day. Saheeh Internationalநீங்கள் உங்கள் இறைவனிடத்தில் பாவ மன்னிப்பைக் கோரி (பாவங்களை விட்டு) அவன் பக்கம் திரும்புங்கள். (அவ்வாறு செய்தால்) ஒரு குறிப்பிட்ட (நீண்ட) காலம் வரையில் உங்களை இன்பமடையச் செய்வான். (தன் கடமைக்கு) அதிகமாக நன்மை செய்தவர்களுக்கு (மறுமையில்) அதிகமாகவே கொடுப்பான். நீங்கள் (அவனைப்) புறக்கணித்தால் மாபெரும் நாளின் வேதனை நிச்சயமாக உங்களை அணுகுமென்று நான் பயப்படுகிறேன். தாருல் ஹுதா“நீங்கள் உங்கள் இறைவனிடம் மன்னிப்பைத் தேடி (பாவங்களை விட்டு) அவனிடம் திரும்புங்கள்; (நீங்கள் அவ்வாறு செய்தால்) அவன் ஒரு குறித்த தவணைவரை உங்களுக்கு வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்துவான்; இன்னும், அருளுடைய ஒவ்வொருவருக்கும் (மறுமையில்) தன் அருளை (அதிகமாகவே) கொடுப்பான்; ஆனால் நீங்கள் (ஈமான் கொள்வதைப்) புறக்கணித்தால், மாபெரும் நாளின் வேதனை குறித்து நிச்சயமாக உங்களுக்காக நான் பயப்படுகிறேன்” (என்றும்). ஜான் டிரஸ்ட் நிறுவனம்மேலும், “நீங்கள் உங்கள் இரட்சகனிடத்தில் பாவ மன்னிப்பைத் தேடுங்கள், அதன் பின்னர் (பாவங்களை விட்டு தவ்பாச்செய்து) அவன் பக்கம் திரும்புங்கள், (அவ்வாறு செய்தால்) அவன் குறிப்பிட்ட ஒரு காலம் வரையில் உங்களை அழகாக சுகமாக சுகமடையச் செய்வான், இன்னும், சிறப்பிற்குரியவர் ஒவ்வொருவருக்கும் அவரது சிறப்பை அவன் கொடுப்பான், நீங்கள் (அவனைப்) புறக்கணித்தால் (மா)பெரும் நாளின் வேதனையை நிச்சயமாக உங்கள் மீது நான் பயப்படுகின்றேன்” (என்றும்), மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)And seek your Lord’s forgiveness and turn to Him in repentance, He will grant you good enjoyment of life for an appointed term and graciously reward the doers of good. But if you turn away, I truly fear for you the punishment of a great Day. Ruwwad Center |
11:4 إِلَى اللَّهِ مَرْجِعُكُمْ ۖ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ Ila Allahi marjiAAukum wahuwa AAala kulli shayin qadeerun To Allâh is your return, and He is Able to do all things." Hilali & KhanTo Allah is your return, and He is over all things competent." Saheeh Internationalநீங்கள் அல்லாஹ்விடமே வரவேண்டியதிருக்கிறது. அவன் அனைத்தின் மீதும் மிக்க ஆற்றலுடையவன்." தாருல் ஹுதா“அல்லாஹ்விடமே நீங்கள் மீண்டு வர வேண்டியுள்ளது; அவன் எல்லாப்பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்” (என்றும் நபியே! நீர் கூறுவீராக). ஜான் டிரஸ்ட் நிறுவனம்அல்லாஹ்வின் பக்கமே உங்கள் மீளுமிடம் இருக்கிறது, அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன்” (என்றும் நபியே! நீர் கூறுவீராக.) மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)To Allah is your return, and He is Most Capable of all things.” Ruwwad Center |
11:5 أَلَا إِنَّهُمْ يَثْنُونَ صُدُورَهُمْ لِيَسْتَخْفُوا مِنْهُ ۚ أَلَا حِينَ يَسْتَغْشُونَ ثِيَابَهُمْ يَعْلَمُ مَا يُسِرُّونَ وَمَا يُعْلِنُونَ ۚ إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ Ala innahum yathnoona sudoorahum liyastakhfoo minhu ala heena yastaghshoona thiyabahum yaAAlamu ma yusirroona wama yuAAlinoona innahu AAaleemun bithati alssudoori No doubt! They did fold up their breasts, that they may hide from Him. Surely, even when they cover themselves with their garments, He knows what they conceal and what they reveal. Verily, He is the All-Knower of the (innermost secrets) of the breasts. Hilali & KhanUnquestionably, they the disbelievers turn away their breasts to hide themselves from Him. Unquestionably, [even] when they cover themselves in their clothing, Allah knows what they conceal and what they declare. Indeed, He is Knowing of that within the breasts. Saheeh International(இந்தப் பாவிகள் தங்கள் தீய எண்ணங்களை) அல்லாஹ்வுக்கு மறைப்பதற்காக (அவற்றைத்) தங்கள் உள்ளங்களில் (வைத்து) மடித்து மறைக்கக் கருதுகின்றனர் என்பதை (நபியே! நீங்கள்) அறிந்து கொள்ளுங்கள். (நித்திரைக்குச் செல்லும்போது) அவர்கள் தங்கள் போர்வையைக் கொண்டு தங்களை மறைத்துக்கொள்ளும் சமயத்தில் (தங்கள் உள்ளங்களில்) அவர்கள் மறைத்துக் கொள்வதையும் (அதற்கு மாறாக) அவர்கள் வெளியிடுவதையும் அவன் அறிகிறான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அவன் உள்ளங்களில் உள்ள (ரகசியங்கள்) அனைத்தையும் நன்கறிந்தவன். தாருல் ஹுதா“அவர்கள் தங்களை (அல்லாஹ்விடமிருந்து) மறைத்துக் கொள்வதற்காகத் தங்கள் இருதயங்களை (மறைத்து) மூடுகிறார்கள்! அவர்கள் தம் ஆடைகளால் (தம்மைப்) போர்த்திக்கொண்டாலும், அவர்கள் மறைத்து வைப்பதையும், வெளிப்படையாகக் காட்டுவதையும் அவன் அறிகிறான் - ஏனெனில் நிச்சயமாக அவன் இதயங்களின் (இரகசியங்கள்) யாவற்றையும் நன்கறிபவனாக இருக்கின்றான்” (என்பதை அறிந்து கொள்வீர்களாக)! ஜான் டிரஸ்ட் நிறுவனம்(மனிதர்கள்) தங்களை (அல்லாஹ்வாகிய) அவனிடமிருந்து மறைத்துக் கொள்வதற்காக, தங்கள் நெஞ்சங்களைச் சுற்றி (மறைத்து)க் கொள்கின்றனர் என்பதை (நபியே! நீர்) அறிந்து கொள்வீராக! (நித்திரைக்குச் செல்லும்போது) அவர்கள் தங்கள் ஆடைகளால், தங்களை மூடிக் கொள்ளும் சமயத்தில் (தங்கள் நெஞ்சங்களில்) அவர்கள் இரகசியமாக்குவதையும், (அதற்கு மாறாக) அவர்கள் பகிரங்கப்படுத்துவதையும் அவன் (நன்கு) அறிகிறவன் என்பதை (நீர்) அறிந்து கொள்வீராக! நிச்சயமாக அவன் நெஞ்சங்களிலுள்ளவற்றை நன்கறிகிறவன். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Indeed, they lean forward to conceal their feelings from Him, but even when they cover themselves with their clothes, He knows what they conceal and what they reveal, for He is All-Knowing of what is in the hearts. Ruwwad Center |
11:6 وَمَا مِنْ دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا ۚ كُلٌّ فِي كِتَابٍ مُبِينٍ Wama min dabbatin fee alardi illa AAala Allahi rizquha wayaAAlamu mustaqarraha wamustawdaAAaha kullun fee kitabin mubeenin And no moving (living) creature is there on earth but its provision is due from Allâh. And He knows its dwelling place and its deposit (in the uterus or grave). All is in a Clear Book (Al-Lauh Al-Mahfûz – the Book of Decrees with Allâh). Hilali & KhanAnd there is no creature on earth but that upon Allah is its provision, and He knows its place of dwelling and place of storage. All is in a clear register. Saheeh Internationalஉணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத யாதொரு உயிரினமும் பூமியில் இல்லை. அவை (வாழ்ந்து) இருக்குமிடத்தையும், அவை (இறந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிந்தே இருக்கிறான். இவை அனைத்தும் (லவ்ஹுல் மஹ்பூல் என்னும்) தெளிவான (அவனுடைய) பதிவுப் புத்தகத்தில் பதிவாகி இருக்கின்றன. தாருல் ஹுதாஇன்னும், உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த உயிரினமும் பூமியில் இல்லை; மேலும் அவை வாழும் இடத்தையும் (இருக்கும்) இடத்தையும், அவை (மடிந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிகிறான். இவையனைத்தும் (லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும்) தெளிவான புத்தகத்தில் (பதிவாகி) இருக்கின்றன. ஜான் டிரஸ்ட் நிறுவனம்பூமியிலுள்ள எந்த ஊர்வனவும் அவற்றின் உணவு, அல்லாஹ்வின் மீது (பொறுப்பாக) இருந்தே தவிர இல்லை, அவை தங்குமிடத்தையும், அவை ஒப்படைக்கப்ப(ட்)டு (சேரு)மிடத்தையும் அவன் (நன்கு) அறிகிறவன் (இவை யாவும் (லவ்ஹூல் மஹ்ஃபூல் என்னும்) தெளிவான புத்தகத்தில் (பதிவு செய்யப்பட்டு) இருக்கின்றன. மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)There is no moving creature on earth but upon Allah is its provision. He knows its place of dwelling and its place of rest; everything is [written] in a clear Record. Ruwwad Center |
11:7 وَهُوَ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ وَكَانَ عَرْشُهُ عَلَى الْمَاءِ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا ۗ وَلَئِنْ قُلْتَ إِنَّكُمْ مَبْعُوثُونَ مِنْ بَعْدِ الْمَوْتِ لَيَقُولَنَّ الَّذِينَ كَفَرُوا إِنْ هَٰذَا إِلَّا سِحْرٌ مُبِينٌ Wahuwa allathee khalaqa alssamawati waalarda fee sittati ayyamin wakana AAarshuhu AAala almai liyabluwakum ayyukum ahsanu AAamalan walain qulta innakum mabAAoothoona min baAAdi almawti layaqoolanna allatheena kafaroo in hatha illa sihrun mubeenun And He it is Who has created the heavens and the earth in six Days and His Throne was on the water, that He might try you, which of you is the best in deeds. But if you were to say to them: "You shall indeed be raised up after death," those who disbelieve would be sure to say, "This is nothing but obvious magic." Hilali & KhanAnd it is He who created the heavens and the earth in six days - and His Throne had been upon water - that He might test you as to which of you is best in deed. But if you say, "Indeed, you are resurrected after death," those who disbelieve will surely say, "This is not but obvious magic." Saheeh Internationalஅவன்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாள்களில் படைத்தான். (அச்சமயம்) அவனுடைய "அர்ஷு" நீரின் மீதிருந்தது. உங்களில் நற்செயல்களைச் செய்பவர்கள் யார் என்று உங்களைப் பரிசோதிப்பதற்காக (உங்களையும், இவற்றையும் அவன் படைத்தான். நபியே! நீங்கள் மனிதர்களை நோக்கி) "நீங்கள் இறந்த பின்னர் நிச்சயமாக (உயிர்கொடுத்து) எழுப்பப்படுவீர்கள்" என்று கூறினால், அதற்கு அவர்களிலுள்ள நிராகரிப்பவர்கள் "இது பகிரங்கமான சூனியமேயன்றி வேறில்லை" என்று கூறுகின்றனர். தாருல் ஹுதாமேலும், அவன்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் அவனுடைய அர்ஷு நீரின் மேல் இருந்தது. உங்களில் யார் அமலில் (செய்கையில்) மேலானவர் என்பதைச் சோதிக்கும் பொருட்டு (இவற்றைப் படைத்தான்; இன்னும் நபியே! அவர்களிடம்) “நிச்சயமாக நீங்கள் மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவீர்கள்” என்று நீர் கூறினால், (அதற்கு அவர்களிலுள்ள நிராகரிப்பவர்கள்) காஃபிர்கள், “இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறில்லை” என்று நிச்சயமாகக் கூறுவார்கள். ஜான் டிரஸ்ட் நிறுவனம்அவன் எத்தகையோனென்றால், வானங்கள், மற்றும் பூமியை ஆறு நாட்களில் படைத்தான்-(அச்சமயம்) அவனுடைய ‘அர்ஷு’ தண்ணீரின் மீதிருந்தது, உங்களில் நற்கருமங்களை நன்றாகச் செய்வோர் யார் என்று உங்களை அவன் சோதிப்பதற்காக (அவன் படைத்தான்.) மேலும், “இறந்த பின்னர் நிச்சயமாக (உயிர்கொடுத்து) நீங்கள் எழுப்பப்படுபவர்கள்” என்று அவர்களிடம் நீர் கூறினால் அதற்கு “இது பகிரங்கமான சூனியமே தவிர வேறில்லை” என்று நிச்சயமாக நிராகரித்துக் கொண்டிருப்போர் கூறுகின்றனர். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)It is He Who created the heavens and earth in six Days – and His Throne was upon the water – so that He may test you as to which of you is best in deed. But if you say to them, “You will certainly be raised after death,” the disbelievers will surely say, “This is nothing but clear magic!” Ruwwad Center |
11:8 وَلَئِنْ أَخَّرْنَا عَنْهُمُ الْعَذَابَ إِلَىٰ أُمَّةٍ مَعْدُودَةٍ لَيَقُولُنَّ مَا يَحْبِسُهُ ۗ أَلَا يَوْمَ يَأْتِيهِمْ لَيْسَ مَصْرُوفًا عَنْهُمْ وَحَاقَ بِهِمْ مَا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ Walain akhkharna AAanhumu alAAathaba ila ommatin maAAdoodatin layaqoolunna ma yahbisuhu ala yawma yateehim laysa masroofan AAanhum wahaqa bihim ma kanoo bihi yastahzioona And if We delay the torment for them till a determined term, they are sure to say, "What keeps it back?" Verily, on the day it reaches them, nothing will turn it away from them, and they will be surrounded by (or fall in) that at which they used to mock! Hilali & KhanAnd if We hold back from them the punishment for a limited time, they will surely say, "What detains it?" Unquestionably, on the Day it comes to them, it will not be averted from them, and they will be enveloped by what they used to ridicule. Saheeh International(நிராகரிப்பின் காரணமாக) அவர்களுக்கு (வரவேண்டிய) வேதனையை ஒரு சொற்ப காலம் நாம் பிற்படுத்தியபோதிலும் "அதனைத் தடுத்துக்கொண்டது எது?" எனப் பரிகாசமாகக் கேட்கிறார்கள். அவர்களிடம் அது வரும் நாளில், அவர்களை விட்டு அதைத் தடுத்துவிட முடியாது என்பதையும், அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்த வேதனை அவர்கள் அனைவரையும் சூழ்ந்து கொள்ளும் என்பதையும் அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா? தாருல் ஹுதா(குஃப்ரின் காரணமாக அவர்களுக்கு விதிக்கப்பட வேண்டிய) வேதனையை ஒரு குறித்தகாலம் வரை நாம் பிற்படுத்தினால் “அதைத் தடுத்தது யாது?” என்று அவர்கள் நிச்சயமாக (ஏளனமாகக்) கேட்பார்கள்; அவர்களுக்கு வேதனை வரும் நாளில் அவர்களை விட்டும் (அது) தடுக்கப்படாது என்பதையும், எதை அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ அது அவர்களைச் சூழ்ந்து கொள்ளும் என்பதையும் அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா? ஜான் டிரஸ்ட் நிறுவனம்அவர்களுக்கு வேதனையை ஒரு குறிப்பிட்ட காலம் நாம் பிற்படுத்தினால், “அதனைத் தடுத்துக் கொண்டது எது?” என(த்திட்டமாக) அவர்கள் கேட்கின்றார்கள், அறிந்து கொள்ளுங்கள்! அவர்களிடம் அது வரும் நாளில், அவர்களை விட்டு அது தடுக்கப்படுவதாக இல்லை, இன்னும், அவர்கள் எதைப் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ அது அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)If We delay their punishment for a limited time, they will surely say, “What is holding it back?” Indeed, the day when it comes upon them, it will not be averted from them, and they will be encompassed by what they used to ridicule. Ruwwad Center |
11:9 وَلَئِنْ أَذَقْنَا الْإِنْسَانَ مِنَّا رَحْمَةً ثُمَّ نَزَعْنَاهَا مِنْهُ إِنَّهُ لَيَئُوسٌ كَفُورٌ Walain athaqna alinsana minna rahmatan thumma nazaAAnaha minhu innahu layaoosun kafoorun And if We give man a taste of mercy from Us, and then withdraw it from him, verily, he is despairing, ungrateful. Hilali & KhanAnd if We give man a taste of mercy from Us and then We withdraw it from him, indeed, he is despairing and ungrateful. Saheeh Internationalநம்முடைய அருளை மனிதன் அனுபவிக்கும்படி நாம் செய்து, பின்னர் அதனை அவனிடமிருந்து நாம் நீக்கிவிட்டால், நிச்சயமாக அவன் நம்பிக்கை இழந்து பெரும் நன்றி கெட்டவனாகி விடுகிறான். தாருல் ஹுதாநாம் நம்மிடமிருந்து நற்கிருபையை மனிதன் சுவைக்கும்படிச் செய்து; பின்பு அதனை அவனை விட்டும் நாம் நீக்கி விட்டால், நிச்சயமாக அவன் நிராசைப்பட்டு பெரும் நன்றி கெட்டவனாகி விடுகின்றான். ஜான் டிரஸ்ட் நிறுவனம்மேலும், நாம் மனிதனுக்கு நம்மிடமிருந்து அருளை சுவைக்கும்படிச் செய்து பின்னர் அதனை அவனிடமிருந்து நாம் பிடுங்கிக் கொண்டால், நிச்சயமாக அவன் நம்பிக்கையிழந்தவன், பெரும் நன்றி கெட்டவன் (ஆக மாறி விடுகிறான்.) மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)If We give man a taste of Our mercy, then take it away from him, he becomes utterly despaired and ungrateful. Ruwwad Center |
11:10 وَلَئِنْ أَذَقْنَاهُ نَعْمَاءَ بَعْدَ ضَرَّاءَ مَسَّتْهُ لَيَقُولَنَّ ذَهَبَ السَّيِّئَاتُ عَنِّي ۚ إِنَّهُ لَفَرِحٌ فَخُورٌ Walain athaqnahu naAAmaa baAAda darraa massathu layaqoolanna thahaba alssayyiatu AAannee innahu lafarihun fakhoorun But if We let him taste good (favour) after evil (poverty and harm) has touched him, he is sure to say: "Ills have departed from me." Surely, he is exultant, and boastful (ungrateful to Allâh). Hilali & KhanBut if We give him a taste of favor after hardship has touched him, he will surely say, "Bad times have left me." Indeed, he is exultant and boastful - Saheeh Internationalஅவனுக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கி அவன் இன்பம் அனுபவிக்கும்படி நாம் செய்தால், அதற்கவன் "நிச்சயமாக என்னுடைய துன்பங்கள் அனைத்தும் தொலைந்து விட்டன. (இனி திரும்ப வாராது)" என்று கூறத் தலைப்படுகிறான். ஏனென்றால், நிச்சயமாக மனிதன் (அதிவிரைவில்) மகிழ்ச்சியடையக் கூடியவனாகவும், பெருமையடிப்பவனாகவும் இருக்கிறான். தாருல் ஹுதாஅவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்குப் பின், நாம் அருட்கொடைகளை அவன் அனுபவிக்கும்படிச் செய்தால், “என்னை விட்டுக் கேடுகள் எல்லாம் போய்விட்டன” என்று நிச்சயமாகக் கூறுவான்; நிச்சயமாக அவன் பெருமகிழ்ச்சியும் பெருமையும் கொள்பவனாக இருக்கின்றான். ஜான் டிரஸ்ட் நிறுவனம்மேலும், அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்குப் பின் அருட்கொடைகளை அவனுக்கு நாம் சுவைக்கச் செய்தால், அ(தற்க)வன், “என்னை விட்டும் துன்பங்கள் போய்விட்டன” என்று நிச்சயமாக கூறுகின்றான், நிச்சயமாக அவன் மகிழ்ச்சியடையக்கூடியவன், பெருமையடிப்பவன் (ஆக மாறி விடுகின்றான்.) மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)But if We give him a taste of prosperity after being afflicted with hardship, he will surely say, “All my ills are gone,” and becomes exultant and boastful, Ruwwad Center |
11:11 إِلَّا الَّذِينَ صَبَرُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أُولَٰئِكَ لَهُمْ مَغْفِرَةٌ وَأَجْرٌ كَبِيرٌ Illa allatheena sabaroo waAAamiloo alssalihati olaika lahum maghfiratun waajrun kabeerun Except those who show patience and do righteous good deeds: those, theirs will be forgiveness and a great reward (Paradise). Hilali & KhanExcept for those who are patient and do righteous deeds; those will have forgiveness and great reward. Saheeh Internationalஆயினும், எவர்கள் (துன்பங்களைப்) பொறுத்து சகித்துக் கொண்டு நன்மையான காரியங்களைச் செய்து வருகிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும் உண்டு; பெரும் கூலியும் உண்டு. தாருல் ஹுதாஆனால் (துன்பங்களைப்) பொறுமையுடன் சகித்து எவர் நற்கருமங்கள் செய்கின்றார்களோ, அவர்களுக்கு மன்னிப்பும், மகத்தான நற்கூலியும் உண்டு. ஜான் டிரஸ்ட் நிறுவனம்(துன்பங்களைச் சகித்துப்) பொறுத்துக்கொண்டு, நன்மையான காரியங்களைச் செய்தும் வருகின்றார்களே அத்தகையவர்களைத் தவிர-அத்தகையோர்-அவர்களுக்கு மன்னிப்பும், மாபெரும் (நற்) கூலியும் உண்டு. மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)except those who are patient and do righteous deeds; it is they who will have forgiveness and a great reward. Ruwwad Center |
11:12 فَلَعَلَّكَ تَارِكٌ بَعْضَ مَا يُوحَىٰ إِلَيْكَ وَضَائِقٌ بِهِ صَدْرُكَ أَنْ يَقُولُوا لَوْلَا أُنْزِلَ عَلَيْهِ كَنْزٌ أَوْ جَاءَ مَعَهُ مَلَكٌ ۚ إِنَّمَا أَنْتَ نَذِيرٌ ۚ وَاللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ وَكِيلٌ FalaAAallaka tarikun baAAda ma yooha ilayka wadaiqun bihi sadruka an yaqooloo lawla onzila AAalayhi kanzun aw jaa maAAahu malakun innama anta natheerun waAllahu AAala kulli shayin wakeelun So, perchance you (Muhammad [sal-Allâhu 'alayhi wa sallam]) may give up a part of what is revealed to you, and that your breast feels straitened for it because they say, "Why has not a treasure been sent down to him, or an angel come with him?" But you are only a warner. And Allâh is a Wakîl (Disposer of affairs, Trustee, Guardian) over all things. Hilali & KhanThen would you possibly leave [out] some of what is revealed to you, or is your breast constrained by it because they say, "Why has there not been sent down to him a treasure or come with him an angel?" But you are only a warner. And Allah is Disposer of all things. Saheeh International(நபியே! இவ்வேதத்தை அவர்கள் சரிவரக் கேட்பதில்லை என நீங்கள் சடைந்து) உங்களுக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப் பட்டவற்றில் சிலவற்றை விட்டு விடுவீர்களோ? (அன்று) "உங்களுக்கு ஒரு பொக்கிஷம் அருளப்பட வேண்டாமா? அல்லது உங்களுடன் ஒரு மலக்கு வரவேண்டாமா?" என்று அவர்கள் கூறுவது உங்களுடைய உள்ளத்தில் வருத்தத்தை உண்டு பண்ணலாம். (அதுபற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.) நிச்சயமாக நீங்கள் (அவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் ஒரு தூதரே(யன்றி வேறில்லை.) அனைத்தையும் நிர்வகிப்பவன் அல்லாஹ்தான்! தாருல் ஹுதா(நபியே! நம் வசனங்களை அவர்கள் செவிமடுப்பதில்லையே எனச் சடைந்து) வஹீ மூலம் உமக்கு அறிவிக்கப்பட்டவற்றில் சிலவற்றை விட்டுவிட எண்ணவோ, “அவர் மீது ஒரு பொக்கிஷம் இறக்கப்பட வேண்டாமா? அல்லது அவருடன் ஒரு மலக்கு வர வேண்டாமா?” என்று அவர்கள் கூறுவதினால் உம் இதயம் (சஞ்சலத்தால்) இடுங்கியிருக்கவோ கூடும்; நிச்சயமாக நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரேயன்றி வேறில்லை; அல்லாஹ் எல்லா பொருட்களின் மீதும் பொறுப்பாளனாக இருக்கிறான். ஜான் டிரஸ்ட் நிறுவனம்ஆகவே (நபியே!) “அவர் மீது ஒரு பொக்கிஷம் இறக்கிவைக்கப்பட்டிருக்க வேண்டாமா,? அல்லது அவருடன் ஒரு மலக்கு வர வேண்டாமா?” என்று அவர்கள் (உம்மைப்பற்றி) கூறுவதற்காக, உமக்கு வஹீ மூலம் அறிவிக்கப்படுகின்றவற்றில் சிலதை (எத்தி வைக்காது) நீர் விட்டுவிடக்கூடும், உம்முடைய நெஞ்சம் (வஹீ மூலம் அறிவிக்கப்பட்ட) அதைக்கொண்டு இக்கட்டுக்குள்ளாகிவிடக்கூடும், நிச்சயமாக நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் தான், அல்லாஹ்வோ ஒவ்வொரு பொருளின் மீதும் பொறுப்பாளனாவான். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Perhaps you may disregard some of what is revealed to you [O Prophet], and may feel distressed because they say, “Why has not a treasure been sent down to him, or why has not an angel come with him?” You are only a warner, and Allah is in charge of all things. Ruwwad Center |
11:13 أَمْ يَقُولُونَ افْتَرَاهُ ۖ قُلْ فَأْتُوا بِعَشْرِ سُوَرٍ مِثْلِهِ مُفْتَرَيَاتٍ وَادْعُوا مَنِ اسْتَطَعْتُمْ مِنْ دُونِ اللَّهِ إِنْ كُنْتُمْ صَادِقِينَ Am yaqooloona iftarahu qul fatoo biAAashri suwarin mithlihi muftarayatin waodAAoo mani istataAAtum min dooni Allahi in kuntum sadiqeena Or they say, "He (Prophet Muhammad [sal-Allâhu 'alayhi wa sallam]) forged it (the Qur'ân)." Say: "Bring you then ten forged Sûrah (chapters) like it, and call whomsoever you can, other than Allâh (to your help), if you speak the truth!" Hilali & KhanOr do they say, "He invented it"? Say, "Then bring ten surahs like it that have been invented and call upon [for assistance] whomever you can besides Allah, if you should be truthful." Saheeh International(நம்முடைய தூதர்) இதனைப் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றனரா? அவ்வாறாயின் (நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: இதைப்போன்ற பத்து அத்தியாயங்களையேனும் நீங்கள் கற்பனை செய்து கொண்டு வாருங்கள். அல்லாஹ்வையன்றி உங்களுக்குச் சாத்தியமான அனைத்தையும் இதற்காக அழைத்து (உங்களுக்குத் துணையாக)க் கொள்ளுங்கள். மெய்யாகவே (இது கற்பனை என்று) நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் (இவ்வாறு செய்யலாமே!) தாருல் ஹுதாஅல்லது ”இ(வ் வேதத்)தை அவர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார்” என்று அவர்கள் கூறுகிறார்கள்? “(அப்படியானால்) நீங்களும் இதைப் போன்ற கற்பனை செய்யப்பட்ட பத்து அத்தியாயங்களை கொண்டு வாருங்கள் - நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்! அல்லாஹ்வைத் தவிர்த்து உங்களுக்கு சாத்தியமான எல்லோரையுமே (இதற்குத் துணை செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக. ஜான் டிரஸ்ட் நிறுவனம்அல்லது (நமது தூதராகிய) “அவர் இதனைக் கற்பனை செய்துவிட்டார்” என்று அவர்கள் கூறுகின்றனரா? (அவ்வாறாயின், நபியே!) “இதைப் போன்று கற்பனை செய்யப்பட்ட பத்து அத்தியாயங்களை நீங்கள் கொண்டு வாருங்கள், (நீங்கள் உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால், அல்லாஹ்வையன்றி உங்களுக்குச் சத்தியமானவர்களையும் (இதுபோன்றதைக் கொண்டு வருவதற்காக) அழைத்துக் கொள்ளுங்கள்” என்று நீர் கூறுவீராக! மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Or do they say, “He has fabricated it”? Say, “Then produce ten fabricated Chapters like it and seek help from whoever you can besides Allah, if you are truthful!” Ruwwad Center |
11:14 فَإِلَّمْ يَسْتَجِيبُوا لَكُمْ فَاعْلَمُوا أَنَّمَا أُنْزِلَ بِعِلْمِ اللَّهِ وَأَنْ لَا إِلَٰهَ إِلَّا هُوَ ۖ فَهَلْ أَنْتُمْ مُسْلِمُونَ Fai llam yastajeeboo lakum faiAAlamoo annama onzila biAAilmi Allahi waan la ilaha illa huwa fahal antum muslimoona If then they answer you not, know then that it [the Revelation (this Qur'ân)] is sent down with the Knowledge of Allâh and that Lâ ilâha illa Huwa (none has the right to be worshipped but He)! Will you then be Muslims (those who submit in Islâm)? Hilali & KhanAnd if they do not respond to you - then know that the Qur'an was revealed with the knowledge of Allah and that there is no deity except Him. Then, would you [not] be Muslims? Saheeh International"நீங்கள் (உதவிக்கு) அழைத்த அவர்களாலும் அவ்வாறு செய்ய முடியாவிடில், (இது மனித அறிவால் சொல்லப்பட்டதல்ல;) நிச்சயமாக அல்லாஹ்வின் அறிவைக் கொண்டே (அமைக்கப்பட்டு) அருளப்பட்டதுதான்; அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை என்பதையும் நிச்சயமாக அறிந்து கொள்ளுங்கள். (இனியேனும்) நீங்கள் (இறைவனுக்கு) முற்றிலும் வழிபடுவீர்களா? தாருல் ஹுதாஅவர்கள் உங்களுக்கு பதிலளிக்கா விட்டால்: “அறிந்து கொள்ளுங்கள், நிச்சயமாக இது அல்லாஹ்வின் ஞானத்தைக் கொண்டே அருளப்பட்டது; இன்னும் வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறில்லை; இனியேனும் நீங்கள் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடுவீர்களா?” (என்று கூறவும்.) ஜான் டிரஸ்ட் நிறுவனம்அவர்கள் உங்களுக்கு பதிலளிக்கவில்லையானால், நிச்சயமாக அது இறக்கப்பட்டதெல்லாம் அல்லாஹ்வின் அறிவைக் கொண்டேதான், அவனைத் தவிர வணக்கத்திற்குரிய (வேறு) நாயன் இல்லை என்பதையும் அறிந்து கொள்ளுங்கள், (இப்போதாவது) நீங்கள் (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் கீழ்ப்படிந்த முஸ்லிம்களாக ஆகிவிடுகிறீர்களா? (என்று கேளுங்கள்.) மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)But if they do not respond to you, then know that it has been revealed with the knowledge of Allah, and that none has the right to be worshiped except Him. Will you then submit to Him [as Muslims]? Ruwwad Center |
11:15 مَنْ كَانَ يُرِيدُ الْحَيَاةَ الدُّنْيَا وَزِينَتَهَا نُوَفِّ إِلَيْهِمْ أَعْمَالَهُمْ فِيهَا وَهُمْ فِيهَا لَا يُبْخَسُونَ Man kana yureedu alhayata alddunya wazeenataha nuwaffi ilayhim aAAmalahum feeha wahum feeha la yubkhasoona Whosoever desires the life of the world and its glitter, to them We shall pay in full (the wages of) their deeds therein, and they will have no diminution therein. Hilali & KhanWhoever desires the life of this world and its adornments - We fully repay them for their deeds therein, and they therein will not be deprived. Saheeh Internationalஎவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டும்) விரும்பினால், அவர்கள் செயலுக்குரிய பலனை இவ்வுலகத்திலேயே நாம் முழுமையாகக் கொடுத்து விடுவோம். அதில் அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள். தாருல் ஹுதாஎவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டுமே) நாடினால் அவர்களுடைய செயல்களுக்குரிய (பலன்களை) இவ்வுலகத்திலேயே நிறைவேற்றுவோம்; அவற்றில், அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள். ஜான் டிரஸ்ட் நிறுவனம்எவர்கள், இவ்வுலக வாழ்வையும், அதன் அலங்காரத்தையும் நாடுபவர்களாக இருக்கின்றார்களோ, அவர்கள் செயல்க(ளுக்குரிய பலன்க)ளை, இவ்வுலகத்திலேயே நாம் பூரணமாக அவர்களுக்கு நிறைவு செய்வோம், அவர்களோ அதில் குறைவு செய்யப்பட மாட்டார்கள். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Those who seek the life of this world and its splendor, We will repay them in full in this life for their deeds, and nothing will be diminished from them therein. Ruwwad Center |
11:16 أُولَٰئِكَ الَّذِينَ لَيْسَ لَهُمْ فِي الْآخِرَةِ إِلَّا النَّارُ ۖ وَحَبِطَ مَا صَنَعُوا فِيهَا وَبَاطِلٌ مَا كَانُوا يَعْمَلُونَ Olaika allatheena laysa lahum fee alakhirati illa alnnaru wahabita ma sanaAAoo feeha wabatilun ma kanoo yaAAmaloona They are those for whom there is nothing in the Hereafter but Fire, and vain are the deeds they did therein. And of no effect is that which they used to do. Hilali & KhanThose are the ones for whom there is not in the Hereafter but the Fire. And lost is what they did therein, and worthless is what they used to do. Saheeh Internationalஎனினும், மறுமையிலோ இத்தகையவர்களுக்கு (நரக) நெருப்பைத் தவிர வேறொன்றுமில்லை; அவர்கள் செய்தவை யாவும் இங்கு அழிந்துவிட்டன. அவர்கள் செய்து கொண்டிருப்பவையும் வீணானவையே. தாருல் ஹுதாஇத்தகையோருக்கு மறுமையில் நரக நெருப்பைத் தவிர வேறெதுவுமில்லை, (இவ்வுலகில்) இவர்கள் செய்த யாவும் அழிந்துவிட்டன; அவர்கள் செய்து கொண்டிருப்பவையும் வீணானவையே! ஜான் டிரஸ்ட் நிறுவனம்இத்தகையோர் தாம்-அவர்களுக்கு மறுமையில் (நரக) நெருப்பைத்தவிர (வேறு ஒன்றும்) இல்லை, அவர்கள் அ(வ்வுலகத்)தில் செய்தவை அழிந்தும் விட்டன, அவர்கள் செய்து கொண்டிருந்தவை வீணானவையேயாகும். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)It is they who will have nothing in the Hereafter but the Fire. All their efforts will be worthless, and all their deeds will be futile. Ruwwad Center |
11:17 أَفَمَنْ كَانَ عَلَىٰ بَيِّنَةٍ مِنْ رَبِّهِ وَيَتْلُوهُ شَاهِدٌ مِنْهُ وَمِنْ قَبْلِهِ كِتَابُ مُوسَىٰ إِمَامًا وَرَحْمَةً ۚ أُولَٰئِكَ يُؤْمِنُونَ بِهِ ۚ وَمَنْ يَكْفُرْ بِهِ مِنَ الْأَحْزَابِ فَالنَّارُ مَوْعِدُهُ ۚ فَلَا تَكُ فِي مِرْيَةٍ مِنْهُ ۚ إِنَّهُ الْحَقُّ مِنْ رَبِّكَ وَلَٰكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يُؤْمِنُونَ Afaman kana AAala bayyinatin min rabbihi wayatloohu shahidun minhu wamin qablihi kitabu moosa imaman warahmatan olaika yuminoona bihi waman yakfur bihi mina alahzabi faalnnaru mawAAiduhu fala taku fee miryatin minhu innahu alhaqqu min rabbika walakinna akthara alnnasi la yuminoona Can they (Muslims) who rely on a clear proof (the Qur'ân) from their Lord, and whom a witness [Jibrâîl (Gabriel) ['alayhis-salâm]] from Him recites (follows) it (can they be equal with the disbelievers); and before it, came the Book of Mûsâ (Moses), a guidance and a mercy, they believe therein, but those of the sects (Jews, Christians and all the other non-Muslim nations) that reject it (the Qur'ân), the Fire will be their promised meeting place. So be not in doubt about it (i.e. those who denied Prophet Muhammad [sal-Allâhu 'alayhi wa sallam] and also denied all that which he brought from Allâh. Surely, they will enter Hell). Verily, it is the truth from your Lord, but most of mankind believe not. Hilali & KhanSo is one who [stands] upon a clear evidence from his Lord [like the aforementioned]? And a witness from Him follows it, and before it was the Scripture of Moses to lead and as mercy. Those [believers in the former revelations] believe in the Qur'an. But whoever disbelieves in it from the [various] factions - the Fire is his promised destination. So be not in doubt about it. Indeed, it is the truth from your Lord, but most of the people do not believe. Saheeh Internationalஎவர்கள் தங்கள் இறைவனின் (திருக்குர்ஆன் என்னும்) தெளிவான அறிவைப் பெற்றிருக்கிறார்களோ அவர்களும், எவர்களுக்கு இறைவனால் ("ஈஸா"வுக்கு) அருளப்பட்டது (இன்ஜீல்) ஒரு சாட்சியாக இருக்கிறதோ அவர்களும், இன்னும் எவர்களுக்கு இதற்கு முன்னர் அருளப்பட்ட மூஸாவுடைய வேதம் ஒரு வழிகாட்டியாகவும் அருளாகவும் இருக்கிறதோ அவர்களும், அவசியம் இவ்வேதத்தையும் நம்பிக்கைக் கொள்வார்கள். (அவர்களுக்குரிய கூலி சுவனபதிதான்.) இந்த (மூ)வகுப்பாரில் எவர்கள் இதனை நிராகரித்தபோதிலும் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட இடம் நரகம்தான். ஆதலால், (நபியே!) நீங்கள் இதில் சிறிதும் சந்தேகிக்க வேண்டாம். நிச்சயமாக இது உங்கள் இறைவனால் அருளப்பட்ட சத்திய (வேத)மே! எனினும், மனிதர்களில் பலர் (இதனை) நம்புவதில்லை. தாருல் ஹுதாஎவர் தன் இறைவனிடமிருந்து (பெற்ற)தெளிவின் மீது இருக்கிறாரோ மேலும் இறைவனிடமிருந்து ஒரு சாட்சியாளர் எவரிடம் (பக்க பலமாய்) வந்திருக்கிறாரோ மேலும் இதற்கு முன்னால் மூஸாவுடைய வேதம் வழிகாட்டியாகவும் ரஹ்மத்தாகவும் இருக்கிறதோ அவர்கள் தான் இதனை நம்புவார்கள்; ஆனால் (இக்) கூட்டதார்களில் எவர் இதை நிராகரிக்கிறாரோ அவருக்கு வாக்களிக்கப்பட்டுள்ள இடம் நரக நெருப்பேயாகும். ஆதலால் (நபியே!) இதைப் பற்றி நீர் சந்தேகத்திலிருக்க வேண்டாம் - இ(வ்வேதமான)து நிச்சயமாக உம் இறைவனிடமிருந்து வந்த உண்மையாகும் - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை. ஜான் டிரஸ்ட் நிறுவனம்நம் இரட்சகனிடமிருந்து வந்த தெளிவின் மீது இருப்பவர், (அதன் உண்மைக்குச் சான்றாக) அவனிடமிருந்து அவரை ஒரு சாட்சியும் அடுத்திருக்க இன்னும் அதற்கு முன்பு மூஸாவுடைய வேதம் வழிகாட்டியாகவும் அருளாகவும் இருக்க அ(த்தகைய)வரா? (நிராகரிப்போர் போன்று ஆவார்? ஆக மாட்டார்.) அத்தகைய (ஆதாரங்களைக் கொண்ட)வர்களே அவரை நம்பிக்கை கொள்வார்கள், மேலும், பல கூட்டத்தார்களிலிருந்து அவரை எவர் நிராகரிப்பாரோ, அப்பொழுது நரகமே அவருக்கு வாக்களிக்கப்பட்ட இடமாகும், ஆகவே, அ(வ்வேதத்)தைப் பற்றி நீர் சந்தேகத்தில் இருக்க வேண்டாம், நிச்சயமாக அது உம்முடைய இரட்கசனிடமிருந்து (வந்து)ள்ள உண்மையாகும், எனினும், மனிதர்களில் அதிகமானோர் (அதனை) நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Can they be like those who are upon clear proof from their Lord, backed by a witness [Gabriel] from Him, and before it was the Book of Moses a guide and mercy? Such people believe in it. But whoever of the factions disbelieves in it, the Fire will be their promised end. So have no doubt about it, for it is the truth from your Lord, but most people do not believe. Ruwwad Center |
11:18 وَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَىٰ عَلَى اللَّهِ كَذِبًا ۚ أُولَٰئِكَ يُعْرَضُونَ عَلَىٰ رَبِّهِمْ وَيَقُولُ الْأَشْهَادُ هَٰؤُلَاءِ الَّذِينَ كَذَبُوا عَلَىٰ رَبِّهِمْ ۚ أَلَا لَعْنَةُ اللَّهِ عَلَى الظَّالِمِينَ Waman athlamu mimmani iftara AAala Allahi kathiban olaika yuAAradoona AAala rabbihim wayaqoolu alashhadu haolai allatheena kathaboo AAala rabbihim ala laAAnatu Allahi AAala alththalimeena And who does more wrong than he who invents a lie against Allâh. Such will be brought before their Lord, and the witnesses will say, "These are the ones who lied against their Lord!" No doubt! the Curse of Allâh is on the Zâlimûn (polytheists, wrong doers, oppressors). Hilali & KhanAnd who is more unjust than he who invents a lie about Allah? Those will be presented before their Lord, and the witnesses will say, "These are the ones who lied against their Lord." Unquestionably, the curse of Allah is upon the wrongdoers. Saheeh Internationalஅல்லாஹ்வின் மீது கற்பனையாகப் பொய் கூறுபவர்களை விட அநியாயக்காரர் யார்? அத்தகையவர்கள் (மறுமையில்) தங்கள் இறைவன் முன் நிறுத்தப்பட்டு "இவர்கள்தாம் தங்கள் இறைவன் மீது பொய் கூறியவர்கள்" என்று சாட்சிகள் (சாட்சியம்) கூறுவார்கள். இந்த அநியாயக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டு என்பதை அறிந்து கொள்ளுங்கள். தாருல் ஹுதாஅல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனையைச் சொல்பவனைவிடப் பெரும் அநியாயக்காரன் யார்? அத்தகையோர் (மறுமையில்) தங்கள் இறைவன்முன் நிறுத்தப்படுவார்கள்; “இவர்கள்தாம் தங்கள் இறைவன் மீது பொய் கூறியவர்கள்” என்று சாட்சி கூறுவோர் சொல்வார்கள்; இத்தகைய அநியாயக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும். ஜான் டிரஸ்ட் நிறுவனம்மேலும், அல்லாஹ்வின்மீது பொய்யைக் கற்பனை செய்பவரைவிட மிகப் பெரிய அநியாயக்காரர் யார்? அத்தகையோர் (மறுமையில்) தங்கள் இரட்சகன் முன் நிறுத்தப்படுவர், மேலும், “இவர்கள் தாம் தங்கள் இரட்சகன் மீது பொய்யுரைத்தவர்கள்” என்று (மலக்குகளான) சாட்சிகள் கூறுவார்கள், அநியாயக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டென்பதை (நபியே! நீர்) அறிந்து கொள்வீராக! மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Who does greater wrong than he who fabricates lies against Allah? Such people will be presented before their Lord, and the witnesses will say, “These are the ones who lied against their Lord.” Indeed, Allah’s curse is upon the wrongdoers, Ruwwad Center |
11:19 الَّذِينَ يَصُدُّونَ عَنْ سَبِيلِ اللَّهِ وَيَبْغُونَهَا عِوَجًا وَهُمْ بِالْآخِرَةِ هُمْ كَافِرُونَ Allatheena yasuddoona AAan sabeeli Allahi wayabghoonaha AAiwajan wahum bialakhirati hum kafiroona Those who hinder (others) from the path of Allâh (Islâmic Monotheism), and seek a crookedness therein, while they are disbelievers in the Hereafter. Hilali & KhanWho averted [people] from the way of Allah and sought to make it [seem] deviant while they, concerning the Hereafter, were disbelievers. Saheeh Internationalஎவர்கள் அல்லாஹ்வின் வழியைத் தடுத்து, அதில் கோணலை(யும் சந்தேகத்தையும்) உண்டுபண்ண விரும்புகிறார் களோ அவர்கள் மறுமையையும் நிராகரிப்பவர்கள்தாம் தாருல் ஹுதாஅவர்கள் (மனிதர்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுக்கின்றார்கள்; மேலும் அதில் கோணலையும் உண்டுபண்ண விரும்புகிறார்கள் - இவர்கள் தாம் மறுமையை நிராகரிப்பவர்கள் ஆவார்கள். ஜான் டிரஸ்ட் நிறுவனம்அவர்கள் எத்தகையோரென்றால், அல்லாஹ்வின் பாதையை விட்டும் (அதில் செல்வோரைத்)தடுத்து அதைக் கோணலாக்கத் தேடுகிறார்கள், அவர்கள்தாம் மறுமையையும் நிராகரிப்பவர்கள் ஆவார்கள். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)those who hinder [people] from the way of Allah, seeking to make it crooked, and they disbelieve in the Hereafter.” Ruwwad Center |
11:20 أُولَٰئِكَ لَمْ يَكُونُوا مُعْجِزِينَ فِي الْأَرْضِ وَمَا كَانَ لَهُمْ مِنْ دُونِ اللَّهِ مِنْ أَوْلِيَاءَ ۘ يُضَاعَفُ لَهُمُ الْعَذَابُ ۚ مَا كَانُوا يَسْتَطِيعُونَ السَّمْعَ وَمَا كَانُوا يُبْصِرُونَ Olaika lam yakoonoo muAAjizeena fee alardi wama kana lahum min dooni Allahi min awliyaa yudaAAafu lahumu alAAathabu ma kanoo yastateeAAoona alssamAAa wama kanoo yubsiroona By no means will they escape (from Allâh's torment) on earth, nor have they protectors besides Allâh! Their torment will be doubled! They could not bear to hear (the preachers of the truth) and they used not to see (the truth because of their severe aversion, inspite of the fact that they had the sense of hearing and sight). Hilali & KhanThose were not causing failure [to Allah] on earth, nor did they have besides Allah any protectors. For them the punishment will be multiplied. They were not able to hear, nor did they see. Saheeh Internationalஇவர்கள் பூமியில் (ஓடி தப்பித்து அல்லாஹ்வை) தோற்கடிக்க முடியாது. அல்லாஹ்வையன்றி, இவர்களுக்கு உதவி செய்பவர்களும் இல்லை. (மறுமையிலோ) இவர்களுடைய வேதனை இரட்டிக்கப்படும். (இவர்களின் பொறாமையின் காரணமாக நல்வார்த்தைகளைச்) செவியுற இவர்கள் சக்தியற்றவர்கள்; (நேரான வழியைக்) காணவும் மாட்டார்கள். தாருல் ஹுதாஇவர்கள் பூமியில் (அல்லாஹ் திட்டமிட்டிருப்பதைத்) தோற்கடித்து விடமுடியாது, அல்லாஹ்வைத் தவிர இவர்களுக்கு வேறு பாதுகாவலர்கள் இல்லை; இவர்களுக்கு வேதனை இரட்டிப்பாக்கப்படும்; அவர்கள் (நல்லவற்றைக்) கேட்கும் சக்தியை இழந்து விட்டார்கள் - இவர்கள் (நேர்வழியைக்) காணவும் மாட்டார்கள். ஜான் டிரஸ்ட் நிறுவனம்அத்தகையோர் - பூமியில் (அல்லாஹ்வை) இயலாமையில் ஆக்கக் கூடியவர்களாக அவர்கள் இருக்கவில்லை, மேலும், அல்லாஹ்வையன்றி அவர்களுக்கு பாதுகாவலர்களுமில்லை, (மறுமையிலோ) அவர்களுக்கு வேதனை இரட்டிப்பாக்கப்படும், (நல்லவற்றை) செவியேற்கச் சக்தியுடையோராக அவர்கள் இருக்கவில்லை, (நேர்வழியைப்) பார்ப்போராகவும் அவர்கள் இருக்கவில்லை. மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)They will have no escape on earth, nor will they have any protector besides Allah. Their punishment will be doubled, for they failed to hear or see [the truth]. Ruwwad Center |
11:21 أُولَٰئِكَ الَّذِينَ خَسِرُوا أَنْفُسَهُمْ وَضَلَّ عَنْهُمْ مَا كَانُوا يَفْتَرُونَ Olaika allatheena khasiroo anfusahum wadalla AAanhum ma kanoo yaftaroona They are those who have lost their own selves, and their invented false deities will vanish from them. Hilali & KhanThose are the ones who will have lost themselves, and lost from them is what they used to invent. Saheeh Internationalஇத்தகையவர்கள் தாம் தமக்குத் தாமே நஷ்டத்தை உண்டு பண்ணிக்கொண்டவர்கள். இவர்கள் கற்பனை செய்து கொண்டிருந்த (தெய்வங்கள்) அனைத்தும் (அந்நாளில்) இவர்களை விட்டு மறைந்துவிடும். தாருல் ஹுதாஇவர்கள்தாம் தங்களுக்கு தாங்களே நஷ்டம் விளைவித்துக் கொண்டார்கள்; இவர்கள் கற்பனை செய்து கொண்டிருந்த (தெய்வங்கள்) யாவும் (தீர்ப்பு நாளில்) இவர்களை விட்டு மறைந்துவிடும். ஜான் டிரஸ்ட் நிறுவனம்அத்தகையோர்தாம், தமக்குத்தாமே, நஷ்டத்தை விளைவித்துக் கொண்டவர்கள், அவர்கள் கற்பனை செய்து கொண்டிருந்தவை (அந்நாளில்) அவர்களை விட்டும் மறைந்துவிடும். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)It is they who destroyed themselves, and all what they fabricated will be lost from them. Ruwwad Center |
11:22 لَا جَرَمَ أَنَّهُمْ فِي الْآخِرَةِ هُمُ الْأَخْسَرُونَ La jarama annahum fee alakhirati humu alakhsaroona Certainly, they are those who will be the greatest losers in the Hereafter. Hilali & KhanAssuredly, it is they in the Hereafter who will be the greatest losers. Saheeh Internationalமறுமையில் நிச்சயமாக இவர்கள் முற்றிலும் நஷ்டமடைந்தவர்கள் என்பதில் யாதொரு ஐயமுமில்லை. தாருல் ஹுதாநிச்சயமாக இவர்கள் மறுமையில் பெரும் நஷ்டமடைந்தவர்களாக இருப்பார்கள் என்பதில் (சிறிதும்) சந்தேகமில்லை. ஜான் டிரஸ்ட் நிறுவனம்நிச்சயமாக அவர்கள் - மறுமையில் அவர்களே முற்றிலும் நஷ்டமடைந்தவர்கள் என்பதில் சந்தேகமில்லை. மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)There is no doubt that they will be the worst losers in the Hereafter. Ruwwad Center |
11:23 إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَأَخْبَتُوا إِلَىٰ رَبِّهِمْ أُولَٰئِكَ أَصْحَابُ الْجَنَّةِ ۖ هُمْ فِيهَا خَالِدُونَ Inna allatheena amanoo waAAamiloo alsalihati waakhbatoo ila rabbihim olaika ashabu aljannati hum feeha khalidoona Verily, those who believe (in the Oneness of Allâh – Islâmic Monotheism) and do righteous good deeds, and humble themselves (in repentance and obedience) before their Lord, they will be dwellers of Paradise to dwell therein forever. Hilali & KhanIndeed, they who have believed and done righteous deeds and humbled themselves to their Lord - those are the companions of Paradise; they will abide eternally therein. Saheeh Internationalஎவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்து தங்கள் இறைவனுக்கு மிக்க பணிவுடன் அடிபணிகின்றனரோ, அவர்கள் சுவனவாசிகளே! அதில் அவர்கள் என்றென்றும் நிலைத்து விடுவார்கள். தாருல் ஹுதாநிச்சயமாக எவர்கள் நம்பிக்கைக் கொண்டு நற்கருமங்கள் செய்து இன்னும் தங்கள் இறைவனுக்கு முற்றிலும் அடிபணிகின்றார்களோ அவர்களே சுவனபதிக்குரியவர்கள்; அங்கு அவர்கள் என்றென்றும் நிலைத்திருப்பார்கள். ஜான் டிரஸ்ட் நிறுவனம்நிச்சயமாக விசுவாசங்கொண்டு நற்கருமங்களையும் செய்து தங்களுடைய இரட்சகன் பக்கம் அடிபணியவும் செய்கின்றார்களே அத்தைகையோர் - அவர்கள் சுவனத்திற்குரியவர்கள், அவர்கள், அதில் நிரந்தரமாக(த் தங்கி) இருப்பவர்கள். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Those who believe, do righteous deeds and humble themselves before their Lord, it is they who are the people of Paradise, they will abide therein forever. Ruwwad Center |
11:24 مَثَلُ الْفَرِيقَيْنِ كَالْأَعْمَىٰ وَالْأَصَمِّ وَالْبَصِيرِ وَالسَّمِيعِ ۚ هَلْ يَسْتَوِيَانِ مَثَلًا ۚ أَفَلَا تَذَكَّرُونَ Mathalu alfareeqayni kaalaAAma waalasammi waalbaseeri waalssameeAAi hal yastawiyani mathalan afala tathakkaroona The likeness of the two parties is as the blind and the deaf and the seer and the hearer. Are they equal when compared? Will you not then take heed? Hilali & KhanThe example of the two parties is like the blind and deaf, and the seeing and hearing. Are they equal in comparison? Then, will you not remember? Saheeh Internationalஇவ்விரு (பிரிவினரில் ஒரு) பிரிவினர் குருடனையும், செவிடனையும் (போலிருக்கின்றனர். மற்றொரு பிரிவினர்) பார்வையுடையவனையும் கேட்கும் சக்தியுடையவனையும் ஒத்திருக்கின்றனர். இவ்விரு பிரிவினரும் சமமாவார்களா? (இந்த உதாரணத்தைக் கொண்டு) நீங்கள் நல்லுணர்ச்சி பெற வேண்டாமா? தாருல் ஹுதாஇவ்விரு பிரிவினர்களுக்கு உதாரணம்: (ஒரு பிரிவினர்) குருடர், செவிடர் போலவும் (இனியொரு பிரிவினர் நல்ல) பார்வையுள்ளவர், (நல்ல) கேட்கும் சக்தியுடையவர் போலவும் இருக்கின்றனர், இவ்விரு பிரிவினரும் ஒப்புவமையில் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா? ஜான் டிரஸ்ட் நிறுவனம்இவ்விரு பிரிவினருக்கு உதாரணம்: (ஒரு பிரிவினர்) குருடரையும், செவிடரையும், (மற்றொரு பிரிவினர்) பார்வையுடையவரையும், நன்கு கேட்பவரையும் போலாவர், இவ்விரு பிரிவினரும் தன்மையால் சமமாவார்களா? (இதனைக் கொண்டு நீங்கள் நல்லுணர்ச்சி பெற மாட்டீர்களா? மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)The similitude of the two parties is that of the blind and deaf, compared to the seeing and hearing. Are they equal? Will you not then take heed? Ruwwad Center |
11:25 وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَىٰ قَوْمِهِ إِنِّي لَكُمْ نَذِيرٌ مُبِينٌ Walaqad arsalna noohan ila qawmihi innee lakum natheerun mubeenun And indeed We sent Nûh (Noah) to his people (and he said): "I have come to you as a plain warner." Hilali & KhanAnd We had certainly sent Noah to his people, [saying], "Indeed, I am to you a clear warner Saheeh Internationalமெய்யாகவே நாம் "நூஹை" அவருடைய மக்களிடம் (நம்முடைய தூதராக) அனுப்பி வைத்தோம். (அவர், அவர்களை நோக்கி) "நிச்சயமாக நான் உங்களுக்குப் பகிரங்கமாகவே அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறேன். தாருல் ஹுதாநிச்சயமாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பி வைத்தோம்; அவர் (அவர்களை நோக்கி) “நிச்சயமாக நான் உங்களுக்கு பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்.” ஜான் டிரஸ்ட் நிறுவனம்மேலும், நிச்சயமாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பி வைத்தோம், நிச்சயமாக நான் உங்களுக்குப் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவன்” (என்று அவர் கூறினார்) மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)We sent Noah to his people [and he said], “I am indeed a clear warner to you, Ruwwad Center |
11:26 أَنْ لَا تَعْبُدُوا إِلَّا اللَّهَ ۖ إِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ أَلِيمٍ An la taAAbudoo illa Allaha innee akhafu AAalaykum AAathaba yawmin aleemin "That you worship none but Allâh; surely, I fear for you the torment of a painful Day." Hilali & KhanThat you not worship except Allah. Indeed, I fear for you the punishment of a painful day." Saheeh Internationalஅல்லாஹ்வையன்றி (மற்றெதையும்) நீங்கள் வணங்கக் கூடாது. (வணங்கினால்) துன்புறுத்தும் நாளின் வேதனை (நிச்சயமாக) உங்களுக்கு (வருமென்று) நான் அஞ்சுகிறேன்" (என்று கூறினார்.) தாருல் ஹுதா“நீங்கள் அல்லாஹ்வை அன்றி (வேறெவரையும், எதனையும்) வணங்காதீர்கள். நிச்சயமாக நான் நோவினை தரும் நாளின் வேதனையை உங்களுக்கு அஞ்சுகிறேன்” (என்று கூறினார்). ஜான் டிரஸ்ட் நிறுவனம்“அல்லாஹ்வைத் தவிர (மற்றெதையும்) நீங்கள் வணங்காதீர்கள், (அவ்வாறு மற்றெதையும் நீங்கள் வணங்கினால்) துன்புறுத்தும் நாளின் வேதனையைப் பற்றி நிச்சயமாக உங்களின் மீது நான் பயப்படுகின்றேன்” (என்று கூறினார்). மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)that you worship none except Allah. I truly fear for you the punishment of a painful Day.” Ruwwad Center |
11:27 فَقَالَ الْمَلَأُ الَّذِينَ كَفَرُوا مِنْ قَوْمِهِ مَا نَرَاكَ إِلَّا بَشَرًا مِثْلَنَا وَمَا نَرَاكَ اتَّبَعَكَ إِلَّا الَّذِينَ هُمْ أَرَاذِلُنَا بَادِيَ الرَّأْيِ وَمَا نَرَىٰ لَكُمْ عَلَيْنَا مِنْ فَضْلٍ بَلْ نَظُنُّكُمْ كَاذِبِينَ Faqala almalao allatheena kafaroo min qawmihi ma naraka illa basharan mithlana wama naraka ittabaAAaka illa allatheena hum arathiluna badiya alrrayi wama nara lakum AAalayna min fadlin bal nathunnukum kathibeena The chiefs who disbelieved among his people said: "We see you but a man like ourselves, nor do we see any follow you but the meanest among us and they (too) followed you without thinking. And we do not see in you any merit above us, in fact we think you are liars." Hilali & KhanSo the eminent among those who disbelieved from his people said, "We do not see you but as a man like ourselves, and we do not see you followed except by those who are the lowest of us [and] at first suggestion. And we do not see in you over us any merit; rather, we think you are liars." Saheeh Internationalஅதற்கு, அவரை நிராகரித்த அவருடைய மக்களின் தலைவர்கள் (அவரை நோக்கி) "நாம் உங்களை நம்மைப் போன்ற ஒரு மனிதனாகவே காண்கிறோம். அன்றி, வெளித்தோற்றத்தில் நம்மில் மிக்க இழிவானவர்களே அன்றி (கண்ணியமானவர்கள்) உங்களைப் பின்பற்றவில்லை என்பதையும் நாங்கள் அறிவோம். எங்களைவிட உங்களிடம் யாதொரு மேன்மை இருப்பதாகவும் நாங்கள் காணவில்லை. அன்றி, நீங்கள் (அனைவரும்) பொய்ய ரெனவே நாங்கள் எண்ணுகிறோம்" என்று கூறினார்கள். தாருல் ஹுதாஅவரை நிராகரித்த அவருடைய சமூகத்தின் தலைவர்கள் (அவரை நோக்கி), “நாம் உம்மை எங்களைப் போன்ற ஒரு மனிதராகவே அன்றி (வேறு விதமாகக்) காணவில்லை; எங்களுக்குள்ளே ஆழ்ந்து யோசனை செய்யாத இழிவானர்களேயன்றி (வேறெவரும்) உம்மைப் பின்பற்றி நடப்பதாகவும் நாம் காணவில்லை; எங்களைவிட உங்களுக்கு எந்த விதமான மேன்மை இருப்பதாகவும் நாம் காணவில்லை - மாறாக உங்களை (யெல்லாம்) பொய்யர்கள் என்றே நாங்கள் எண்ணுகிறோம்” என்று கூறினார்கள். ஜான் டிரஸ்ட் நிறுவனம்அதற்கு அவருடைய சமூகத்தாரில் நிராகரித்தோரின் பிரதானிகள் (நூஹிடம்) உம்மை எங்களைப் போன்ற ஒரு மனிதராகவே தவிர (வேறு விதமாக) நாங்கள் காணவில்லை, இன்னும் எங்களில் ஆழ்ந்து சிந்திக்காத இழிவானவர்களே தவிர (வேறெவரும்) உம்மைப் பின்பற்றி நடப்பதாக நாங்கள் காணவில்லை, உங்களுக்கு எங்களை விட எந்தச்சிறப்பும் இருப்பதாக நாங்கள் காணவில்லை, மாறாக உங்களைப் பொய்யர்களெனவே நாங்கள் எண்ணுகின்றோம்” என்று கூறினார்கள். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)But the chiefs of his people who disbelieved said, “We only see you a human being like ourselves, and we do not see those who follow you except the lowest among us apparently. We do not see you superior to us, rather, we think that you are liars.” Ruwwad Center |
11:28 قَالَ يَا قَوْمِ أَرَأَيْتُمْ إِنْ كُنْتُ عَلَىٰ بَيِّنَةٍ مِنْ رَبِّي وَآتَانِي رَحْمَةً مِنْ عِنْدِهِ فَعُمِّيَتْ عَلَيْكُمْ أَنُلْزِمُكُمُوهَا وَأَنْتُمْ لَهَا كَارِهُونَ Qala ya qawmi araaytum in kuntu AAala bayyinatin min rabbee waatanee rahmatan min AAindihi faAAummiyat AAalaykum anulzimukumooha waantum laha karihoona He said: "O my people! Tell me, if I have a clear proof from my Lord, and a mercy (Prophethood) has come to me from Him, but that (mercy) has been obscured from your sight. Shall we compel you to accept it (Islâmic Monotheism) when you have a strong hatred for it? Hilali & KhanHe said, "O my people have you considered: if I should be upon clear evidence from my Lord while He has given me mercy from Himself but it has been made unapparent to you, should we force it upon you while you are averse to it? Saheeh International(அதற்கு) அவர் (அவர்களை நோக்கிக்) கூறினார்: "என்னுடைய மக்களே! நீங்கள் கவனித்தீர்களா? என் இறைவனுடைய அத்தாட்சியின் மீது நான் நிலையாக இருந்தும் அவன் தன்னுடைய அருளைக்கொண்டு (நபித்துவத்தை) எனக்கு அளித்திருந்தும், அது உங்கள் கண்களுக்குப் புலப்படா(மல் அதனை நீங்கள் வெறுத்து) விட்டால், அதனைப் பின்பற்றும்படி நான் உங்களை நிர்ப்பந்திக்க முடியுமா?. தாருல் ஹுதா(அதற்கு) அவர் (மக்களை நோக்கி) “என் சமூகத்தவர்களே! நீங்கள் கவனித்தீர்களா? நான் என் இறைவனிடமிருந்து (பெற்ற) தெளிவின் மீது இருந்து அவனிடமிருந்து (நபித்துவம் என்னும்) ஓர் அருளையும் அவன் எனக்கு தந்திருந்து அது உங்களுக்கு (அறியமுடியாமல்) மறைக்கப்பட்டு விடுமானால் நீங்கள் அதனை வெறுத்துக் கொண்டிருக்கும் போது அதனை(ப் பின்பற்றுமாறு) நான் உங்களை நிர்பந்திக்க முடியுமா?” என்று கூறினார். ஜான் டிரஸ்ட் நிறுவனம்அ(தற்க)வர் கூறினார், “என்னுடைய சமூகத்தாரே! நீங்கள் கவனித்தீர்களா? என் இரட்சகனுடைய ஆதாரத்தின் மீது நான் இருந்து, அவன் தன் புறத்திலிருந்து அருளை எனக்குக் கொடுத்திருந்தும் (அது உங்கள் கண்களுக்குப் புலப்படாமல்) உங்களுக்கு மறைக்கப்பட்டு விடுமானால், அதனை நீங்கள் வெறுத்தவர்களாக இருக்க, அதனைப் பின்பற்றும்படி நாம் உங்களை நிர்ப்பந்திப்போமா? மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)He said, “O my people, what do you think, if I should have a clear proof from my Lord, and He has bestowed mercy upon me from Himself, but you fail to see it. Can we force you to accept it despite your aversion to it? Ruwwad Center |
11:29 وَيَا قَوْمِ لَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مَالًا ۖ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَى اللَّهِ ۚ وَمَا أَنَا بِطَارِدِ الَّذِينَ آمَنُوا ۚ إِنَّهُمْ مُلَاقُو رَبِّهِمْ وَلَٰكِنِّي أَرَاكُمْ قَوْمًا تَجْهَلُونَ Waya qawmi la asalukum AAalayhi malan in ajriya illa AAala Allahi wama ana bitaridi allatheena amanoo innahum mulaqoo rabbihim walakinnee arakum qawman tajhaloona "And O my people! I ask of you no wealth for it, my reward is from none but Allâh. I am not going to drive away those who have believed. Surely, they are going to meet their Lord, but I see that you are a people that are ignorant. Hilali & KhanAnd O my people, I ask not of you for it any wealth. My reward is not but from Allah. And I am not one to drive away those who have believed. Indeed, they will meet their Lord, but I see that you are a people behaving ignorantly. Saheeh International"அன்றி, என்னுடைய மக்களே! இதற்காக நான் உங்களிடம் யாதொரு பொருளையும் (கூலியாகக்) கேட்கவில்லை. என்னுடைய கூலி அல்லாஹ்விடமே அன்றி (உங்களிடம்) இல்லை. (உங்களில் மிகத் தாழ்ந்தவர்களாயினும் சரி) நம்பிக்கை கொண்டவர்களை நான் விரட்டிவிட முடியாது. நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனை (கண்ணியத்துடன்) சந்திப்பவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால், நிச்சயமாக உங்களை(த்தான் மிகத் தாழ்ந்த) மூடர்களாகக் காண்கிறேன். தாருல் ஹுதா“அன்றியும், என் சமூகத்தவர்களே! இதற்காக (அல்லாஹ்வின் கட்டளையை எடுத்துச் சொல்வதற்காக) நான் உங்களிடம் எந்தப் பொருளையும் கேட்கவில்லை; என்னுடைய கூலி அல்லாஹ்விடமேயன்றி (உங்களிடம்) இல்லை; எனவே ஈமான் கொண்டவர்களை (அவர்கள் நிலை எப்படி இருப்பினும்) நான் விரட்டி விடுபவன் அல்லன்; நிச்சயமாக அவர்கள் தம் இறைவனை (நன்மையுடன்) சந்திப்பவர்களாக இருக்கின்றனர்; ஆனால் உங்களையே அறிவில்லா சமூகத்தவர்களாகவே நான் காண்கிறேன், ஜான் டிரஸ்ட் நிறுவனம்அன்றியும், “என்னுடைய சமூகத்தாரே! இதற்காக நான் உங்களிடம் எப்பொருளையும் (கூலியாகக்) கேட்கவில்லை, என்னுடைய கூலி அல்லாஹ்விடமே தவிர உங்களிடம் இல்லை, விசுவாசங்கொண்டோரை நான் விரட்டுபவனாகவும் இல்லை, நிச்சயமாக அவர்கள் தங்கள் இரட்சகனை(க் கண்ணியத்ததுடன்) சந்திக்கிறவர்களாவர், எனினும் நிச்சயமாக உங்களை அறியாதவர்களான சமூகத்தவராகவே நான் காண்கின்றேன். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)O my people, I do not ask you for any wealth in return for it; my reward is only with Allah. I will not dismiss those who believe; they will surely meet their Lord, but I see that you are ignorant people. Ruwwad Center |
11:30 وَيَا قَوْمِ مَنْ يَنْصُرُنِي مِنَ اللَّهِ إِنْ طَرَدْتُهُمْ ۚ أَفَلَا تَذَكَّرُونَ Waya qawmi man yansurunee mina Allahi in taradtuhum afala tathakkaroona "And O my people! Who will help me against Allâh, if I drove them away? Will you not then give a thought? Hilali & KhanAnd O my people, who would protect me from Allah if I drove them away? Then will you not be reminded? Saheeh Internationalஅன்றி, என்னுடைய மக்களே! நான் அவர்களை விரட்டி விட்டால் (அல்லாஹ் என்னைத் தண்டிக்க மாட்டானா? அச்சமயம்) அல்லாஹ்விடத்தில் எனக்கு உதவி செய்பவர் யார்? இவ்வளவு கூட நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டாமா? தாருல் ஹுதா“என் சமூகத்தவர்களே! நான் அவர்களை விரட்டிவிட்டால்; அல்லாஹ்வி(ன் தண்டனையி)லிருந்து எனக்கு உதவி செய்பவர் யார்? (இதை) நீங்கள் சிந்திக்க வேண்டாமா? ஜான் டிரஸ்ட் நிறுவனம்மேலும், “என்னுடைய சமூகத்தாரே! (நிச்சயமாக விசுவாசங்கொண்டோரான அவர்களை நான் விரட்டிவிட்டால் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து எனக்கு உதவி செய்கிறவர் யார்? நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா? மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)O my people, who would protect me from Allah if I were to dismiss them? Will you not then take heed? Ruwwad Center |
11:31 وَلَا أَقُولُ لَكُمْ عِنْدِي خَزَائِنُ اللَّهِ وَلَا أَعْلَمُ الْغَيْبَ وَلَا أَقُولُ إِنِّي مَلَكٌ وَلَا أَقُولُ لِلَّذِينَ تَزْدَرِي أَعْيُنُكُمْ لَنْ يُؤْتِيَهُمُ اللَّهُ خَيْرًا ۖ اللَّهُ أَعْلَمُ بِمَا فِي أَنْفُسِهِمْ ۖ إِنِّي إِذًا لَمِنَ الظَّالِمِينَ Wala aqoolu lakum AAindee khazainu Allahi wala aAAlamu alghayba wala aqoolu innee malakun wala aqoolu lillatheena tazdaree aAAyunukum lan yutiyahumu Allahu khayran Allahu aAAlamu bima fee anfusihim innee ithan lamina alththalimeena "And I do not say to you that with me are the Treasures of Allâh, nor that I know the Ghaib (Unseen); nor do I say I am an angel, and I do not say of those whom your eyes look down upon that Allâh will not bestow any good on them. Allâh knows what is in their inner selves (as regards belief). In that case, I should, indeed be one of the Zâlimûn (wrong doers, oppressors)." Hilali & KhanAnd I do not tell you that I have the depositories [containing the provision] of Allah or that I know the unseen, nor do I tell you that I am an angel, nor do I say of those upon whom your eyes look down that Allah will never grant them any good. Allah is most knowing of what is within their souls. Indeed, I would then be among the wrongdoers." Saheeh Internationalஅல்லாஹ்வுடைய பொக்கிஷங்கள் (அனைத்தும்) என்னிடம் இருக்கின்றன என்றும் நான் உங்களிடம் கூறவில்லை; நான் மறைவானவற்றை அறிந்தவனும் அல்லன்; நான் ஒரு மலக்கு என்றும் கூறவில்லை. எவர்களை உங்கள் கண்கள் இழிவாகக் காண்கின்றனவோ அவர்களுக்கு அல்லாஹ் யாதொரு நன்மையும் அளிக்கமாட்டான் என்றும் நான் கூறமாட்டேன். அவர்கள் உள்ளத்தில் உள்ளதை (நம்பிக்கையை உங்களைவிட) அல்லாஹ் தான் மிகவும் அறிந்தவன். (இதற்கு மாறாக நான் கூறினால்) நிச்சயமாக நானும் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விடுவேன்" (என்றும் கூறினார்.) தாருல் ஹுதா“அல்லாஹ்வுடைய பொக்கிஷங்கள் என்னிடம் இருக்கின்றன என்று நான் உங்களிடம் கூறவில்லை; மறைவானவற்றை நான் அறிந்தவனுமல்லன், நிச்சயமாக நான் ஒரு மலக்கு என்றும் நான் கூறவில்லை; எவர்களை உங்களுடைய கண்கள் இழிவாக நோக்குகின்றனவோ, அவர்களுக்கு அல்லாஹ் யாதொரு நன்மையும் அளிக்கமாட்டான் என்றும் நான் கூறவில்லை; அவர்களின் இதயங்களில் உள்ளதை அல்லாஹ்வே நன்கு அறிந்தவன் (இவ்வுண்மைகளுக்கு மாறாக நான் எதுவும் செய்தால்) நிச்சயமாக நானும் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விடுவேன்” (என்றும் கூறினார்). ஜான் டிரஸ்ட் நிறுவனம்“அல்லாஹ்வுடைய பொக்கிஷங்கள் என்னிடம் இருக்கின்றனவென்று நான் உங்களிடம் கூறவுமாட்டேன், நான் மறைவானவற்றை அறியவுமாட்டேன், நிச்சயமாக நான் ஒரு மலக்கு என்று கூறவுமாட்டேன், மேலும், உங்களுடைய கண்கள் இழிவாகக் காண்கின்றனவோ அத்தகையவர்களுக்கு அல்லாஹ் யாதொரு நன்மையையும் அளிக்கவே மாட்டான் என்று நான் கூறவுமாட்டேன், அவர்களின் மனங்களிலுள்ளதை (உங்களைவிட) அல்லாஹ்(தான்) மிக அறிந்தவன், (இதற்கு மாறாக நான் எதையும் கூறினால்) நிச்சயமாக நான் அச்சமயமே அநியாயக்காரர்களில் உள்ளவன் (ஆகி விடுவேன்” என்றும் கூறினார்) மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)I do not tell you that I have Allah’s treasures or that I know the unseen, nor do I say that I am an angel. Nor do I say about those whom you look down upon, that Allah will never grant them any good, for Allah knows best what is in their hearts. If I did so, I would surely be one of the wrongdoers.” Ruwwad Center |
11:32 قَالُوا يَا نُوحُ قَدْ جَادَلْتَنَا فَأَكْثَرْتَ جِدَالَنَا فَأْتِنَا بِمَا تَعِدُنَا إِنْ كُنْتَ مِنَ الصَّادِقِينَ Qaloo ya noohu qad jadaltana faaktharta jidalana fatina bima taAAiduna in kunta mina alssadiqeena They said: "O Nûh (Noah)! You have disputed with us and much have you prolonged the dispute with us, now bring upon us what you threaten us with, if you are of the truthful." Hilali & KhanThey said, "O Noah, you have disputed us and been frequent in dispute of us. So bring us what you threaten us, if you should be of the truthful." Saheeh Internationalஅதற்கவர்கள் "நூஹே! நிச்சயமாக நீங்கள் எங்களுடன் தர்க்கித்தீர்கள்; (அதுவும்) அதிகமாகவே தர்க்கித்து விட்டீர்கள். (ஆகவே, இனி தர்க்கத்தை விட்டொழித்து வேதனை வரும் என்று கூறுவதில்) நீங்கள் மெய்யாகவே உண்மை சொல்பவராக இருந்தால், நீங்கள் அச்சமுறுத்தும் அதனை நம்மிடம் கொண்டு வாருங்கள்" என்று கூறினார்கள். தாருல் ஹுதா(அதற்கு) அவர்கள், “நூஹே! நிச்சயமாக நீர் எங்களுடன் தர்க்கம் செய்தீர்; அதிகமாகவே நீர் எங்களுடன் தர்க்கம் செய்தீர். எனவே, நீர் உண்மையாளராக இருந்தால், எங்களுக்கு நீர் வாக்களிப்பதை எங்களிடம் கொண்டு வாரும்” என்று கூறினார்கள். ஜான் டிரஸ்ட் நிறுவனம்அ(தற்க)வர்கள், “நூஹே! நிச்சயமாக நீர் எங்களுடன் தர்க்கித்து விட்டீர், பின்னும், எங்களுடன் தர்க்கிப்பதை அதிகமாக்கி விட்டீர், ஆகவே, நீர் உண்மையாளர்களில் (உள்ளவராக) இருந்தால், நீர் எங்களுக்கு வாக்களித்ததை எங்களிடம் கொண்டு வாரும்” என்று கூறினார்கள். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)They said, “O Noah, you have argued far too much with us, so bring what you are threatening us with, if you are one of the truthful.” Ruwwad Center |
11:33 قَالَ إِنَّمَا يَأْتِيكُمْ بِهِ اللَّهُ إِنْ شَاءَ وَمَا أَنْتُمْ بِمُعْجِزِينَ Qala innama yateekum bihi Allahu in shaa wama antum bimuAAjizeena He said: "Only Allâh will bring it (the punishment) on you, if He wills, and then you will escape not. Hilali & KhanHe said, "Allah will only bring it to you if He wills, and you will not cause [Him] failure. Saheeh Internationalஅதற்கு அவர் "வேதனை கொண்டு வருபவன் நான் அல்லன்;) அல்லாஹ்தான். அவன் நாடினால் (அதிசீக்கிரத்தில்) அதனை உங்களுக்கு நிச்சயமாகக் கொண்டு வருவான். அதனைத் தடுத்துவிட உங்களால் முடியாது" என்று கூறினார். தாருல் ஹுதா(அதற்கு) அவர், “நிச்சயமாக அல்லாஹ் நாடினால், அதை உங்களிடம் கொண்டு வருபவன் அவனே ஆவான்; அதை நீங்கள் தடுத்து விடக்கூடியவர்களும் அல்லர்” என்று கூறினார். ஜான் டிரஸ்ட் நிறுவனம்அ(தற்க)வர், “அ(வ்வேதனையான)தை உங்களிடம் கொண்டு வருபவன் அல்லாஹ்தான், (அதுவும்) அவன் நாடினால், (அதனைக் கொண்டு வந்து விடுவான்.) அவனை நீங்கள் இயலாமலாக்கிவிடுகிறவர்களும் அல்லர்” என்று கூறினார். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)He said, “It is only Allah Who can bring it upon you if He wills, then you will have no escape. Ruwwad Center |
11:34 وَلَا يَنْفَعُكُمْ نُصْحِي إِنْ أَرَدْتُ أَنْ أَنْصَحَ لَكُمْ إِنْ كَانَ اللَّهُ يُرِيدُ أَنْ يُغْوِيَكُمْ ۚ هُوَ رَبُّكُمْ وَإِلَيْهِ تُرْجَعُونَ Wala yanfaAAukum nushee in aradtu an ansaha lakum in kana Allahu yureedu an yughwiyakum huwa rabbukum wailayhi turjaAAoona "And my advice will not profit you, even if I wish to give you good counsel, if Allâh's Will is to keep you astray. He is your Lord! and to Him you shall return." Hilali & KhanAnd my advice will not benefit you - although I wished to advise you - If Allah should intend to put you in error. He is your Lord, and to Him you will be returned." Saheeh Internationalஅன்றி "நான் உங்களுக்கு நல்லுபதேசம் செய்யக் கருதினாலும், உங்களை வழிகேட்டிலேயே விட்டுவிட வேண்டும் என்று அல்லாஹ் விரும்பியிருந்தால் என்னுடைய நல்லுபதேசம் உங்களுக்கு யாதொரு பயனுமளிக்காது. அவன்தான் உங்களைப் படைத்து காப்பவன்; (மறுமையில்) அவனிடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள்" (என்றும் கூறினார்.) தாருல் ஹுதா“நான் உங்களுக்கு நல்லுபதேசம் செய்யக்கருதினாலும், உங்களை வழிகேட்டிலேயே விட்டு வைக்க அல்லாஹ் நாடியிருந்தால், என்னுடைய நல்லுபதேசம் உங்களுக்கு (யாதொரு) பலனும் அளிக்காது; அவன்தான் (உங்களைப் படைத்துப் பரிபாலிக்கும்) உங்களுடைய இறைவன்; அவனிடமே நீங்கள் மீண்டும் கொண்டு வரப்படுவீர்கள்” (என்றும் கூறினார்). ஜான் டிரஸ்ட் நிறுவனம்“நான் உங்களுக்கு நல்லுபதேசம் செய்ய நாடினாலும், அல்லாஹ் உங்களை வழிகேட்டிலேயே விட்டுவிட வேண்டுமென்று அவன் நாடியிருந்தால் என்னுடைய நல்லுபதேசம் உங்களுக்கு யாதொரு பயனையும் அளிக்காது, அவன்தான் உங்களுடைய இரட்சகன், (மறுமையில்) அவன் பக்கமே நீங்கள் மீண்டும் கொண்டு வரப்படுவீர்கள்” (என்றும் கூறினார்.) மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Nor will my advice benefit you – no matter how hard I try – if Allah wills to leave you astray. He is your Lord, and to Him you will be returned.” Ruwwad Center |
11:35 أَمْ يَقُولُونَ افْتَرَاهُ ۖ قُلْ إِنِ افْتَرَيْتُهُ فَعَلَيَّ إِجْرَامِي وَأَنَا بَرِيءٌ مِمَّا تُجْرِمُونَ Am yaqooloona iftarahu qul ini iftaraytuhu faAAalayya ijramee waana bareeon mimma tujrimoona Or they (the pagans of Makkah) say: "He (Muhammad [sal-Allâhu 'alayhi wa sallam]) has fabricated it (the Qur'ân)." Say: "If I have fabricated it, upon me be my crimes, but I am innocent of (all) those crimes which you commit." Hilali & KhanOr do they say [about Prophet Muhammad], "He invented it"? Say, "If I have invented it, then upon me is [the consequence of] my crime; but I am innocent of what [crimes] you commit." Saheeh International(நபியே! இவ்வரலாற்றைப் பற்றி) "நீங்கள் இதனைப் பொய்யாகக் கற்பனை செய்து கூறுகிறீர்கள்" என்று அவர்கள் கூறுகின்றனரா? (அவ்வாறாயின்) நீங்கள் கூறுங்கள்: "நான் அதனைக் கற்பனை செய்து கூறினால் அக்குற்றம் என் மீதே சாரும். (நீங்கள் பொறுப்பாளிகளல்லர்; அவ்வாறே) நீங்கள் (கற்பனை) செய்யும் குற்றங்களுக்கு நான் பொறுப்பாளியல்ல. தாருல் ஹுதா(நபியே! நீர் இதைக் கூறும் போது:) “இதனை இவர் இட்டுக் கட்டிச் சொல்கிறார்” என்று கூறுகிறார்களா? (அதற்கு) நீர் கூறும்: “நான் இதனை இட்டுக் கட்டிச் சொல்லியிருந்தால், என் மீதே என் குற்றம் சாரும்; நீங்கள் செய்யும் குற்றங்களிலிருந்து நான் நீங்கியவன் ஆவேன்.” ஜான் டிரஸ்ட் நிறுவனம்அல்லது “அவர் இதனைக் கற்பனை செய்துவிட்டார்” என்று அவர்கள் கூறுகின்றனரா? “நான் அதனைக் கற்பனை செய்திருந்தால், குற்றம் என் மீதே சாரும், நீங்கள் செய்யும் குற்றங்களிலிருந்து நான் நீங்கியவனாவேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக! மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Or do they say that he has fabricated it”? Say [O Prophet], “If I did fabricate it, then I am responsible for my sin, but I am innocent of the sins you commit.” Ruwwad Center |
11:36 وَأُوحِيَ إِلَىٰ نُوحٍ أَنَّهُ لَنْ يُؤْمِنَ مِنْ قَوْمِكَ إِلَّا مَنْ قَدْ آمَنَ فَلَا تَبْتَئِسْ بِمَا كَانُوا يَفْعَلُونَ Waoohiya ila noohin annahu lan yumina min qawmika illa man qad amana fala tabtais bima kanoo yafAAaloona And it was revealed to Nûh (Noah): "None of your people will believe except those who have believed already. So be not sad because of what they used to do. Hilali & KhanAnd it was revealed to Noah that, "No one will believe from your people except those who have already believed, so do not be distressed by what they have been doing. Saheeh International(நபி) நூஹ்வுக்கு வஹ்யி அறிவிக்கப்பட்டது: "முன்னர் நம்பிக்கை கொண்டவர்களைத் தவிர, இனி உங்களுடைய மக்களில் ஒருவரும் நிச்சயமாக நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். ஆதலால், அவர்களுடைய செயலைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள். தாருல் ஹுதாமேலும், நூஹ்வுக்கு வஹீ அறிவிக்கப்பட்டது: “(முன்னர்) ஈமான் கொண்டவர்களைத் தவிர, (இனி) உம்முடைய சமூகத்தாரில் நிச்சயமாக எவரும் நம்பிக்கை கொள்ளமாட்டார்; ஆதலால் அவர்கள் செய்வதைப்பற்றி நீர் விசாரப்படாதீர். ஜான் டிரஸ்ட் நிறுவனம்மேலும், நிச்சயமாக அது (முன்னர்) விசுவாசம் கொண்டவர்களைத் தவிர (இனி) உம்முடைய சமூகத்தாரில் ஒருவரும் நிச்சயமாக விசுவாசம் கொள்ளவே மாட்டார்கள், ஆதலால் அவர்கள் செய்து கொண்டிருப்பதைப் பற்றி நீர் கவலைப்படாதீர், என்று (நபி நூஹ்வுக்கு) வஹீ அறிவிக்கப்பட்டது. மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)It was revealed to Noah, “None of your people will ever believe except those who have already believed. So do not grieve over what they do. Ruwwad Center |
11:37 وَاصْنَعِ الْفُلْكَ بِأَعْيُنِنَا وَوَحْيِنَا وَلَا تُخَاطِبْنِي فِي الَّذِينَ ظَلَمُوا ۚ إِنَّهُمْ مُغْرَقُونَ WaisnaAAi alfulka biaAAyunina wawahyina wala tukhatibnee fee allatheena thalamoo innahum mughraqoona "And construct the ship under Our Eyes and with Our Revelation, and call not upon Me on behalf of those who did wrong; they are surely to be drowned." Hilali & KhanAnd construct the ship under Our observation and Our inspiration and do not address Me concerning those who have wronged; indeed, they are [to be] drowned." Saheeh Internationalநாம் அறிவிக்குமாறு நம்முடைய கண் முன்பாகவே ஒரு கப்பலை நீங்கள் செய்யுங்கள். அநியாயம் செய்தவர்களைப் பற்றி (இனி) நீங்கள் என்னுடன் (சிபாரிசு) பேசாதீர்கள். நிச்சயமாக அவர்கள் (பிரளயத்தில்) மூழ்கடிக்கப்படுவார்கள்" (என்றும் அறிவிக்கப்பட்டது.) தாருல் ஹுதா“நம் பார்வையில் நம்(வஹீ) அறிவிப்புக்கு ஒப்ப கப்பலைக் கட்டும்; அநியாயம் செய்தவர்களைப் பற்றி(ப் பரிந்து இனி) நீர் என்னிடம் பேசாதீர்; நிச்சயமாக அவர்கள் (பிரளயத்தில்) மூழ்கடிக்கப்படுவார்கள்.” ஜான் டிரஸ்ட் நிறுவனம்மேலும் “நம்முடைய கண்கள் முன்பாகவே, நம்முடைய அறிவிப்பின் படி ஒரு கப்பலை நீர் செய்யும், அக்கிரமம் செய்தவர்களைப் பற்றி (இனி நீர் என்னுடன் பரிந்து) பேசாதீர், நிச்சயமாக அவர்கள் (பெரு வெள்ளத்தில்) மூழ்கடிக்கப்படுகிறவர்கள்” (என்றும் அறிவிக்கப்பட்டது). மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Construct the Ark under Our [watchful] Eyes and Our direction, and do not plead with Me for those who did wrong, for they will surely be drowned.” Ruwwad Center |
11:38 وَيَصْنَعُ الْفُلْكَ وَكُلَّمَا مَرَّ عَلَيْهِ مَلَأٌ مِنْ قَوْمِهِ سَخِرُوا مِنْهُ ۚ قَالَ إِنْ تَسْخَرُوا مِنَّا فَإِنَّا نَسْخَرُ مِنْكُمْ كَمَا تَسْخَرُونَ WayasnaAAu alfulka wakullama marra AAalayhi malaon min qawmihi sakhiroo minhu qala in taskharoo minna fainna naskharu minkum kama taskharoona And as he was constructing the ship, whenever the chiefs of his people passed by him, they mocked at him. He said: "If you mock at us, so do we mock at you likewise for your mocking. Hilali & KhanAnd he constructed the ship, and whenever an assembly of the eminent of his people passed by him, they ridiculed him. He said, "If you ridicule us, then we will ridicule you just as you ridicule. Saheeh Internationalஅவர் கப்பலைச் செய்து கொண்டிருந்த சமயத்தில், அதன் சமீபமாகச் சென்ற அவருடைய மக்களின் தலைவர்கள் அவரைப் பரிகசித்தனர். அதற்கு அவர் "நீங்கள் (இப்போது) எங்களைப் பரிகசிக்கும் இவ்வாறே (அதிசீக்கிரத்தில்) நிச்சயமாக நாங்கள் உங்களைப் பரிகசிப்போம்" என்றும் கூறினார். தாருல் ஹுதாஅவர் கப்பலைக் கட்டிக் கொண்டிருந்த போது, அவருடைய சமூகத்தின் தலைவர்கள் அவர் பக்கமாகச் சென்றபோதெல்லாம் அவரைப் பரிகசித்தனர்; (அதற்கு) அவர்: “நீங்கள் எங்களைப் பரிகசிப்பீர்களானால், நிச்சயமாக நீங்கள் பரிகசிப்பதுபோலவே, (அதிசீக்கிரத்தில்) நாங்கள் உங்களைப் பரிகசிப்போம்” என்று கூறினார். ஜான் டிரஸ்ட் நிறுவனம்மேலும், அவர் கப்பலைச் செய்து கொண்டிருந்தார், (அப்போது) அவருடைய சமூகத்தாரின் பிராதானிகள் அதன் சமீபமாகச் சென்ற போதெல்லாம் அவரைப் பரிகசித்தனர், அதற்கவர்., “நீங்கள் எங்களைப் பரிகசிப்பீர்களானால் (இப்போது எங்களை) நீங்கள் பரிகசிப்பதுபோல் நிச்சயமாக நாங்கள் உங்களைப் பரிகசிப்போம்” என்று கூறினார். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)So he started constructing the Ark, and every time some chiefs of his people passed by him, they ridiculed him. He said, “If you ridicule us now, we will soon ridicule you as you are ridiculing us. Ruwwad Center |
11:39 فَسَوْفَ تَعْلَمُونَ مَنْ يَأْتِيهِ عَذَابٌ يُخْزِيهِ وَيَحِلُّ عَلَيْهِ عَذَابٌ مُقِيمٌ Fasawfa taAAlamoona man yateehi AAathabun yukhzeehi wayahillu AAalayhi AAathabun muqeemun "And you will know who it is on whom will come a torment that will cover him with disgrace and on whom will fall a lasting torment." Hilali & KhanAnd you are going to know who will get a punishment that will disgrace him [on earth] and upon whom will descend an enduring punishment [in the Hereafter]." Saheeh Internationalஅன்றி, "இழிவுபடுத்தும் வேதனை யாரை வந்தடைகிறது, நிலையான வேதனை எவர் மீது இறங்குகிறது என்பதையும் அதி சீக்கிரத்தில் நீங்கள் (சந்தேகமற) தெரிந்து கொள்வீர்கள்" (என்றும் கூறினார்.) தாருல் ஹுதா“அன்றியும், எவன்மீது அவனை இழிவு படுத்தும் வேதனை வருமென்றும், எவன்மீது நிலைத்திருக்கும் வேதனை இறங்கும் என்றும் வெகு விரைவில் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்” (என்றும் கூறினார்). ஜான் டிரஸ்ட் நிறுவனம்”யாருக்கு-அவரை இழிவுபடுத்தும் வேதனை வருமென்பதையும் எவர்மீது நிலையான வேதனை இறங்குமென்பதையும் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்” (என்றும் கூறினார்.) மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)You will come to know who will be afflicted with a disgracing punishment, and upon whom will descend an everlasting punishment.” Ruwwad Center |
11:40 حَتَّىٰ إِذَا جَاءَ أَمْرُنَا وَفَارَ التَّنُّورُ قُلْنَا احْمِلْ فِيهَا مِنْ كُلٍّ زَوْجَيْنِ اثْنَيْنِ وَأَهْلَكَ إِلَّا مَنْ سَبَقَ عَلَيْهِ الْقَوْلُ وَمَنْ آمَنَ ۚ وَمَا آمَنَ مَعَهُ إِلَّا قَلِيلٌ Hatta itha jaa amruna wafara alttannooru qulna ihmil feeha min kullin zawjayni ithnayni waahlaka illa man sabaqa AAalayhi alqawlu waman amana wama amana maAAahu illa qaleelun (So it was) till when Our Command came and the oven gushed forth (water like fountains from the earth). We said: "Embark therein, of each kind two (male and female), and your family – except him against whom the Word has already gone forth – and those who believe. And none believed with him, except a few." Hilali & Khan[So it was], until when Our command came and the oven overflowed, We said, "Load upon the ship of each [creature] two mates and your family, except those about whom the word has preceded, and [include] whoever has believed." But none had believed with him, except a few. Saheeh Internationalஆகவே, (நாம் விதித்திருந்த) வேதனை நெருங்கி அடுப்புப் பொங்கவே (நூஹை நோக்கி "ஒவ்வொரு உயிருள்ள பிராணியில் இருந்தும்) ஆண், பெண் இரண்டு கொண்ட ஒவ்வொரு ஜோடியை அதில் ஏற்றிக்கொள்ளுங்கள். (அழிந்து விடுவார்கள் என) நம் வாக்கு ஏற்பட்டுவிட்ட (உங்களுடைய மகன் ஆகிய)வர்களைத் தவிர, உங்களுடைய குடும்பத்தவரையும் (மற்ற) நம்பிக்கையாளர் களையும் அதில் ஏற்றிக் கொள்ளுங்கள்" என்று நாம் கூறினோம். வெகு சொற்ப மக்களைத் தவிர (மற்றவர்கள்) அவருடன் நம்பிக்கை கொள்ளவில்லை. தாருல் ஹுதாஇறுதியாக, நம் உத்தரவு வந்து, அடுப்புப் பொங்கவே, (நாம் நூஹை நோக்கி:) “உயிர்ப் பிராணிகள் ஒவ்வொரு வகையிலிருந்தும் (ஆண் பெண் கொண்ட) ஒவ்வொரு ஜோடியை (அக்கப்பலில்) ஏற்றிக் கொள்ளும்; (மூழ்கடிக்கப்படுவார்கள் என்று எவர்களைக் குறித்து முன்பே நம்) வாக்கு ஏற்பட்டுவிட்டதோ அவர்களைத் தவிர; உம் குடும்பத்தாரையும், ஈமான் கொண்டவர்களையும் ஏற்றிக்கொள்ளும்” என்று நாம் கூறினோம்; வெகு சொற்ப மக்களைத் தவிர மற்றவர்கள் அவருடன் ஈமான் கொள்ளவில்லை. ஜான் டிரஸ்ட் நிறுவனம்இறுதியாக நம்முடைய கட்டளை வந்து அடுப்பும் பொங்கியபோது (நூஹே) ஒவ்வொன்றிலிருந்தும் (ஆண், பெண் ஆகிய) இரண்டு கொண்ட ஜோடியை அதில் நீர் ஏற்றிக் கொள்வீராக! (அழிந்து விடுவார் என) எவரின் மீது நம் வாக்கு முந்தி விட்டதோ, அவரைத்தவிர உம்முடைய குடும்பத்தவரையும் (மற்ற) விசுவாசிகளையும் அதில் ஏற்றிக் கொள்வீராக” என்று நாம் கூறினோம், வெகு சொற்பமானவர்களைத் தவிர (மற்றவர்) அவருடன் விசுவாசம் கொள்ளவில்லை. மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)When Our command came and the oven overflowed, We said, “Take on board a pair from every species and your family – except those who have already been decreed [to drown] – and those who believe.” But none believed with him except a few. Ruwwad Center |
11:41 وَقَالَ ارْكَبُوا فِيهَا بِسْمِ اللَّهِ مَجْرَاهَا وَمُرْسَاهَا ۚ إِنَّ رَبِّي لَغَفُورٌ رَحِيمٌ Waqala irkaboo feeha bismi Allahi majraha wamursaha inna rabbee laghafoorun raheemun And he [Nûh (Noah) ['alayhis-salâm]] said: "Embark therein: in the Name of Allâh will be its (moving) course and its (resting) anchorage. Surely, my Lord is Oft-Forgiving, Most Merciful." (Tafsir At-Tabarî) Hilali & KhanAnd [Noah] said, "Embark therein; in the name of Allah is its course and its anchorage. Indeed, my Lord is Forgiving and Merciful." Saheeh Internationalஅதற்கவர் (தன்னைச் சார்ந்தவர்களை நோக்கி,) "இதைச் செலுத்தவும் நிறுத்தவும் ஆற்றலுடையவனாகிய அல்லாஹ்வின் திருநாமத்தைக் கூறி இதில் நீங்கள் ஏறிக்கொள்ளுங்கள். நிச்சயமாக என் இறைவன் மிக்க மன்னிப்பவனும், கிருபை செய்பவனாகவும் இருக்கிறான்" என்று கூறினார். தாருல் ஹுதாஇதிலே நீங்கள் ஏறிக் கொள்ளுங்கள்; இது ஓடுவதும் நிற்பதும் அல்லாஹ்வின் பெயராலேயே (நிகழ்கின்றன). நிச்சயமாக என் இறைவன் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். என்று கூறினார். ஜான் டிரஸ்ட் நிறுவனம்அ(தற்க)வர், “இ(க்கப்பலான)து செல்வதும் இது நிற்பதும் அல்லாஹ்வின் பெயரைக் கொண்டாகும், (எனக்கூறி) இதில் ஏறுங்கள், நிச்சயமாக என் இரட்சகன் மிக்க மன்னிக்கிறவன், மிகக் கிருபையுடையவன்” என்றும் கூறினார். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Noah said, “Board it; in the name of Allah it sails and anchors. My Lord is All-Forgiving, Most Merciful.” Ruwwad Center |
11:42 وَهِيَ تَجْرِي بِهِمْ فِي مَوْجٍ كَالْجِبَالِ وَنَادَىٰ نُوحٌ ابْنَهُ وَكَانَ فِي مَعْزِلٍ يَا بُنَيَّ ارْكَبْ مَعَنَا وَلَا تَكُنْ مَعَ الْكَافِرِينَ Wahiya tajree bihim fee mawjin kaaljibali wanada noohunu ibnahu wakana fee maAAzilin ya bunayya irkab maAAana wala takun maAAa alkafireena So it (the ship) sailed with them amidst waves like mountains, and Nûh (Noah) called out to his son, who had separated himself (apart): "O my son! Embark with us and be not with the disbelievers." Hilali & KhanAnd it sailed with them through waves like mountains, and Noah called to his son who was apart [from them], "O my son, come aboard with us and be not with the disbelievers." Saheeh Internationalபின்னர் அக்கப்பல், மலைகளைப் போன்ற அலைகளுக் கிடையில் அவர்களைச் சுமந்து செல்ல ஆரம்பித்தது. (அச்சமயம்) நூஹ் தன்னைவிட்டு விலகியிருந்த தன் மகனை நோக்கி "என் மகனே! எங்களுடன் (நம்பிக்கை கொண்டு) நீயும் இதில் ஏறிக்கொள். (எங்களை விட்டு விலகி) நிராகரிப்பவர்களுடன் நீ இருக்க வேண்டாம். (அவ்வாறாயின், நீயும் நீரில் மூழ்கி விடுவாய்)" என்று (சப்தமிட்டு) அழைத்தார். தாருல் ஹுதாபின்னர் அக்கப்பல், மலைகளைப் போன்ற அலைகளுக்கிடையே அவர்களை சுமந்து கொண்டு செல்லலாயிற்று; (அப்போது தம்மை விட்டு) விலகி நின்ற தம் மகனை நோக்கி “என்னருமை மகனே! எங்களோடு நீயும் (கப்பலில்) ஏறிக்கொள்; காஃபிர்களுடன் (சேர்ந்து) இராதே!” என்று நூஹ் அழைத்தார். ஜான் டிரஸ்ட் நிறுவனம்அ(க்கப்பலான)து மலைகளைப் போன்ற அலைகளில் அவர்களைக் கொண்டு சென்று கொண்டிருக்கிறது, நூஹ் தன் மகனை அழைத்தார், அவனோ ஒதுங்கிய இடத்திலிருந்தான், “என் மகனே! எங்களுடன் (விசுவாசித்து) நீயும் (இதில்) ஏறிக்கொள், (விசுவாசிக்காது) நிராகரிப்பவர்களுடன் நீ ஆகிவிடவும் வேண்டாம்” (என்று கூறினார்) மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)As it sailed with them through waves like mountains, Noah called out to his son, who had kept himself apart, “O my son, come aboard with us, and do not be with the disbelievers.” Ruwwad Center |
11:43 قَالَ سَآوِي إِلَىٰ جَبَلٍ يَعْصِمُنِي مِنَ الْمَاءِ ۚ قَالَ لَا عَاصِمَ الْيَوْمَ مِنْ أَمْرِ اللَّهِ إِلَّا مَنْ رَحِمَ ۚ وَحَالَ بَيْنَهُمَا الْمَوْجُ فَكَانَ مِنَ الْمُغْرَقِينَ Qala saawee ila jabalin yaAAsimunee mina almai qala la AAasima alyawma min amri Allahi illa man rahima wahala baynahuma almawju fakana mina almughraqeena The son replied: "I will betake myself to some mountain, it will save me from the water." Nûh (Noah) said: "This day there is no saviour from the Decree of Allâh except him on whom He has mercy." And waves came in between them, so he (the son) was among the drowned. Hilali & Khan[But] he said, "I will take refuge on a mountain to protect me from the water." [Noah] said, "There is no protector today from the decree of Allah, except for whom He gives mercy." And the waves came between them, and he was among the drowned. Saheeh Internationalஅதற்கவன் "இந்த வெள்ள(ப் பிரளய)த்திலிருந்து என்னைக் காப்பாற்றக் கூடிய ஒரு மலையின் மேல் நான் சென்று விடுவேன்" என்று கூறினான். அதற்கவர் "அல்லாஹ் அருள் புரிந்தாலன்றி அவனுடைய கட்டளையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள இன்று ஒருவராலும் முடியாது" என்று கூறினார். (அச்சமயம்) அவர்களுக்கு இடையில் ஓர் அலை எழும்பி குறுக்கிட்டது; அவனும் மூழ்கியவர்களுடன் மூழ்கி விட்டான். தாருல் ஹுதாஅதற்கு அவன்: “என்னைத் தண்ணீரிலிருந்து பாதுகாக்கக் கூடிய ஒரு மலையின் மேல் சென்று நான் (தப்பி) விடுவேன்” எனக் கூறினான்; இன்றைய தினம் அல்லாஹ் யாருக்கு அருள் புரிந்திருக்கிறானோ அவரைத் தவிர அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து காப்பாற்றப்படுபவர் எவருமில்லை என்று கூறினார். அச்சமயம் அவர்களிடையே பேரலை ஒன்று எழுந்து குறுக்கிட்டது; அவன் மூழ்கடிக்கப்பட்டவர்களில் ஒருவனாகி விட்டான். ஜான் டிரஸ்ட் நிறுவனம்அ(தற்க)வன், “தண்ணீரில் மூழ்குவதிலிருந்து என்னைப் பாதுகாக்கக் கூடிய ஒரு மலையின்பால் நான் ஒதுங்கிக் கொள்வேன்” என்று கூறினான், அ(தற்க)வர் இன்றைய தினம் அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து யாருக்கு அவன் அருள் புரிந்திருக்கின்றானோ அவரைத்தவிர காப்பாற்றுகிறவர் எவருமில்லை” என்று கூறினார், (அச்சமயம்) அவ்விருவருக்கிடையிலும் ஓர் அலை எழும்பி குறுக்கிட்டது, அப்போது மூழ்கடிக்கப்பட்டவர்களில் அவன் ஆகிவிட்டான். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)He said, “I will take shelter on a mountain which will save me from the water.” Noah said, “Today no one will be saved from Allah’s punishment except those on whom He may have mercy.” Thereupon the waves came between them, and he was among those who were drowned. Ruwwad Center |
11:44 وَقِيلَ يَا أَرْضُ ابْلَعِي مَاءَكِ وَيَا سَمَاءُ أَقْلِعِي وَغِيضَ الْمَاءُ وَقُضِيَ الْأَمْرُ وَاسْتَوَتْ عَلَى الْجُودِيِّ ۖ وَقِيلَ بُعْدًا لِلْقَوْمِ الظَّالِمِينَ Waqeela ya ardu iblaAAee maaki waya samao aqliAAee wagheeda almao waqudiya alamru waistawat AAala aljoodiyyi waqeela buAAdan lilqawmi alththalimeena And it was said: "O earth! Swallow up your water, and O sky! Withhold (your rain)." And the water was made to subside and the Decree (of Allâh) was fulfilled (i.e. the destruction of the people of Nûh (Noah). And it (the ship) rested on (Mount) Judi, and it was said: "Away with the people who are Zalimûn (polytheists and wrong-doers)!" Hilali & KhanAnd it was said, "O earth, swallow your water, and O sky, withhold [your rain]." And the water subsided, and the matter was accomplished, and the ship came to rest on the [mountain of] Judiyy. And it was said, "Away with the wrongdoing people." Saheeh Internationalபின்னர் "பூமியே! நீ உன் தண்ணீரை விழுங்கி விடு; வானமே! (மழை பொழிவதை) நிறுத்திக்கொள்" என்று கட்டளைப் பிறப்பிக்கப்படவே தண்ணீர் வற்றி (விட்டது. இதற்குள் அவர்கள் அழிந்து அவர்களுடைய) காரியம் முடிந்துவிட்டது. (அக்கப்பலும்) "ஜூதி" (என்னும்) மலையில் தங்கியது; அநியாயம் செய்த மக்களுக்கு (இத்தகைய) அழிவுதான்" என்று (உலகெங்கும்) பறை சாற்றப்பட்டது. தாருல் ஹுதாபின்னர்: “பூமியே! நீ உன் நீரை விழுங்கி விடு! வானமே! (மழையை) நிறுத்திக்கொள்” என்று சொல்லப்பட்டது; நீரும் குறைக்கப்பட்டது; (இதற்குள் நிராகரித்தோர் நீரில் மூழ்கி அவர்கள்) காரியமும் முடிந்து விட்டது; (கப்பல்) ஜூதி மலைமீது தங்கியது - அநியாயம் செய்த மக்களுக்கு (இத்தகைய) அழிவுதான் என்று கூறப்பட்டது. ஜான் டிரஸ்ட் நிறுவனம்(பின்னர்) “பூமியே நீ உன் நீரை விழுங்கிவிடு, வானமே (மழை பொழிவதை) நிறுத்திக்கொள்” என்றும் கூறப்பட்டது, நீர் (குறைக்கப்பட்டு பூமியினுள்) வற்றவைக்கப்பட்டது, (அவர்கள் அழிக்கப்பட்டு அவர்களுடைய) காரியமும் முடிக்கப்பட்டுவிட்டது, (அக்கப்பலும்) ஜூதி (என்னும், மலை)யின் மீது நிலைபெற்றும் விட்டது, ‘அநியாயக்காரர்களான சமூகத்தார்க்கு (இத்தகைய) அழிவுதான்’ என்றும் கூறப்பட்டது. மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)And it was said, “O earth, swallow up your water. O sky, withhold [your rain]!” The water subsided and the command was fulfilled, and the Ark settled on Mount Judi, and it was said, “Away with the wrongdoing people!” Ruwwad Center |
11:45 وَنَادَىٰ نُوحٌ رَبَّهُ فَقَالَ رَبِّ إِنَّ ابْنِي مِنْ أَهْلِي وَإِنَّ وَعْدَكَ الْحَقُّ وَأَنْتَ أَحْكَمُ الْحَاكِمِينَ Wanada noohun rabbahu faqala rabbi inna ibnee min ahlee wainna waAAdaka alhaqqu waanta ahkamu alhakimeena And Nûh (Noah) called upon his Lord and said, "O my Lord! Verily, my son is of my family! And certainly, Your Promise is true, and You are the Most Just of the judges." Hilali & KhanAnd Noah called to his Lord and said, "My Lord, indeed my son is of my family; and indeed, Your promise is true; and You are the most just of judges!" Saheeh International(நூஹ் நபியினுடைய மகன் அவரை விட்டு விலகி நிராகரிப்பவர்களுடன் சென்றுவிடவே, அவனும் அழிந்து விடுவானென அஞ்சி) நூஹ் (தன் இறைவனை நோக்கி) "என் இறைவனே! என் மகன் என் குடும்பத்திலுள்ளவனே! (நீயோ என் குடும்பத்தவரை பாதுகாத்துக் கொள்வதாக வாக்களித்திருக்கிறாய்.) நிச்சயமாக உன்னுடைய வாக்குறுதி உண்மையானது. தீர்ப்பளிப் பவர்களில் எல்லாம் நீ மிகவும் மேலான நீதிபதி" என்று சப்தமிட்டுக் கூறினார். தாருல் ஹுதாநூஹ் தன் இறைவனிடம் “என் இறைவனே! நிச்சயமாக என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவனே; உன் வாக்குறுதி நிச்சயமாக உண்மையானது; நீதி வழங்குவோர்களிலெல்லாம் மேலான நீதிபதியாய் நீ இருக்கிறாய்” எனக் கூறினார். ஜான் டிரஸ்ட் நிறுவனம்மேலும், நூஹ் தன் இரட்சகனை அழைத்தார், அப்பொழுது அவர், “என் இரட்சகனே! நிச்சயமாக என் மகன் என் குடும்பத்திலுள்ளவன், நிச்சயமாக (நீ என் குடும்பத்தினரைக் காப்பாற்றுவதாக வாக்களித்த) உன்னுடைய வாக்குறுதியும் உண்மையானது, மேலும், தீர்ப்பளிப்போரில் நீ மிக மேலாகத் தீர்ப்பளிப்பவன்” என்று கூறினார். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Noah called out to his Lord, saying, “My Lord, my son is one of my family, and Your promise is true and You are the Most Just of all judges!” Ruwwad Center |
11:46 قَالَ يَا نُوحُ إِنَّهُ لَيْسَ مِنْ أَهْلِكَ ۖ إِنَّهُ عَمَلٌ غَيْرُ صَالِحٍ ۖ فَلَا تَسْأَلْنِ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ ۖ إِنِّي أَعِظُكَ أَنْ تَكُونَ مِنَ الْجَاهِلِينَ Qala ya noohu innahu laysa min ahlika innahu AAamalun ghayru salihin fala tasalni ma laysa laka bihi AAilmun innee aAAithuka an takoona mina aljahileena He said: "O Nûh (Noah)! Surely, he is not of your family; verily, his work is unrighteous, so ask not of Me that of which you have no knowledge! I admonish you, lest you should be one of the ignorant." Hilali & KhanHe said, "O Noah, indeed he is not of your family; indeed, he is [one whose] work was other than righteous, so ask Me not for that about which you have no knowledge. Indeed, I advise you, lest you be among the ignorant." Saheeh Internationalஅதற்கவன், "நூஹே! நிச்சயமாக அவன் உங்கள் குடும்பத்தில் உள்ளவனல்லன். நிச்சயமாக அவன் ஒழுங்கீனமான காரியங்களையே செய்து கொண்டிருந்தான். (ஒழுங்கீனமாக நடப்பவன் உங்கள் குடும்பத்தைச் சார்ந்தவனல்ல.) ஆதலால், நீங்கள் உங்களுக்குத் தெரியாத விஷயங்களைப் பற்றி என்னிடம் (தர்க்கித்துக்) கேட்க வேண்டாம்; அறியாதவர்களில் நீங்களும் ஒருவராகிவிட வேண்டாம் என்று நிச்சயமாக நான் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறேன்" என்று கூறினான். தாருல் ஹுதாஅ(தற்கு இறை)வன் கூறினான்: “நூஹே! உண்மையாகவே அவன் உம் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன்; நிச்சயமாக அவன் ஒழுக்கமில்லாச் செயல்களையே செய்து கொண்டிருந்தான்; ஆகவே நீர் அறியாத விஷயத்தைப் பற்றி என்னிடம் கேட்க வேண்டாம்; நீர் அறியாதவர்களில் ஒருவராகி விடவேண்டாம் என்று திடமாக நான் உமக்கு உபதேசம் செய்கிறேன்.” ஜான் டிரஸ்ட் நிறுவனம்(அதற்கு) “நூஹே! நிச்சயமாக அவன் உம் குடும்பத்தினரில் உள்ளவனல்லன், நிச்சயமாக அவன் ஒழுக்கமில்லா செயலுடையவன், ஆதலால், எதில் உமக்கு (உறுதியான) அறிவு இல்லையோ அதைப்பற்றி நீர் என்னிடம் கேட்க வேண்டாம், அறியாதோரில் உள்ளவராக நீர் ஆவதை விட்டும் நிச்சயமாக நான் உமக்கு நல்லுபதேசம் செய்கிறேன்” என்று கூறினான். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Allah said, “O Noah, he is not of your family, for he was not righteous in his conduct. So do not ask Me of what you have no knowledge. I admonish you, so you do not be among the ignorants.” Ruwwad Center |
11:47 قَالَ رَبِّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أَسْأَلَكَ مَا لَيْسَ لِي بِهِ عِلْمٌ ۖ وَإِلَّا تَغْفِرْ لِي وَتَرْحَمْنِي أَكُنْ مِنَ الْخَاسِرِينَ Qala rabbi innee aAAoothu bika an asalaka ma laysa lee bihi AAilmun wailla taghfir lee watarhamnee akun mina alkhasireena Nûh (Noah) said: "O my Lord! I seek refuge with You from asking You that of which I have no knowledge. And unless You forgive me and have mercy on me, I would indeed be one of the losers." Hilali & Khan[Noah] said, "My Lord, I seek refuge in You from asking that of which I have no knowledge. And unless You forgive me and have mercy upon me, I will be among the losers." Saheeh Internationalஅதற்கு (நூஹ் நபி) "என் இறைவனே! நான் அறியாத விஷயங்களைப் பற்றி (இனி) உன்னிடம் கேட்காது என்னை பாதுகாக்குமாறு நான் உன்னிடம் பிரார்த்திக்கிறேன். நீ என்னை மன்னித்து எனக்கு நீ கிருபை செய்யாவிடில் நிச்சயமாக நானும் நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிடுவேன்" என்று கூறினார். தாருல் ஹுதா“என் இறைவா! எனக்கு எதை பற்றி ஞானம் இல்லையோ அதை உன்னிடத்திலே கேட்பதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன்; நீ என்னை மன்னித்து எனக்கு அருள் புரியவில்லையானால் நஷ்ட மடைந்தோரில் நான் ஆகிவிடுவேன்” என்று கூறினார். ஜான் டிரஸ்ட் நிறுவனம்அ(தற்க)வர், “என் இரட்சகனே! (எதில் எனக்கு உறுதியான) அறிவு இல்லையோ அது பற்றி (இனி) உன்னிடம் கேட்பதை விட்டும், உன்னைக் கொண்டே நிச்சயமாக நான் பாதுகாவல் தேடுகிறேன், மேலும், நீ என்னை மன்னித்து, எனக்கு நீ கிருபை செய்யாவிடில் நிச்சயமாக நான் நஷ்டமடைந்தோரில் ஆகிவிடுவேன்” என்று கூறினார். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Noah said, “My Lord, I seek refuge with You from asking You that of which I have no knowledge. Unless You forgive me and have mercy upon me, I will be among the losers.” Ruwwad Center |
11:48 قِيلَ يَا نُوحُ اهْبِطْ بِسَلَامٍ مِنَّا وَبَرَكَاتٍ عَلَيْكَ وَعَلَىٰ أُمَمٍ مِمَّنْ مَعَكَ ۚ وَأُمَمٌ سَنُمَتِّعُهُمْ ثُمَّ يَمَسُّهُمْ مِنَّا عَذَابٌ أَلِيمٌ Qeela ya noohu ihbit bisalamin minna wabarakatin AAalayka waAAala omamin mimman maAAaka waomamun sanumattiAAuhum thumma yamassuhum minna AAathabun aleemun It was said: "O Nûh (Noah)! Come down (from the ship) with peace from Us and blessings on you and on the people who are with you (and on some of their offspring), but (there will be other) people to whom We shall grant their pleasures (for a time), but in the end a painful torment will reach them from Us." Hilali & KhanIt was said, "O Noah, disembark in security from Us and blessings upon you and upon nations [descending] from those with you. But other nations [of them] We will grant enjoyment; then there will touch them from Us a painful punishment." Saheeh International(வெள்ளப் பிரளயத்தால் ஏற்பட்ட தண்ணீர் வற்றி, நூஹ் நபியின் கப்பல் "ஜூதி" என்னும் மலைமீது தங்கிவிடவே, நாம் நூஹை நோக்கி) "நூஹே! நம்முடைய சாந்தியுடனும் பாக்கியங் களுடனும் (கப்பலிலிருந்து) நீங்கள் இறங்கிவிடுங்கள். உங்களுக்கும் உங்களுடனுள்ள மற்ற மக்களுக்கும் பெரும் பாக்கியங்கள் உண்டாவதாகுக! (பிற்காலத்தில் உங்களுடைய) சந்ததிகள் (பெருகுவர். இவ்வுலகில்) நாம் அவர்களை நிச்சயமாக சுகம் அனுபவிக்க விடுவோம். பின்னர் (அவர்களில் பலர் பாவமான காரியங்களில் ஈடுபடுவார்கள். அதனால்) அவர்களை நம்முடைய துன்புறுத்தும் வேதனை வந்தடையும்" என்று கூறப்பட்டது. தாருல் ஹுதா“நூஹே! உம் மீதும் உம்மோடு இருக்கின்ற மக்கள் மீதும் நமது பாதுகாப்புடனும் அபிவிருத்திகளுடனும் நீர் இறங்குவீராக; இன்னும் சில மக்களுக்கு நாம் சுகம் அனுபவிக்கச் செய்து, பின்னர் நம்மிடமிருந்து நோவினை தரும் வேதனை அவர்களை தீண்டும்” என்று கூறப்பட்டது. ஜான் டிரஸ்ட் நிறுவனம்“நூஹே! உம் மீதும் உம்முடனிருப்பவர்களிலிருந்துள்ள சமூகத்தவர்கள் மீதும் நம்முடைய சாந்தியுடனும், அபிவிருத்தி (பரக்கத்)களுடனும் நீர் இறங்குவீராக! (பிற் காலத்தில்) இன்னும் சில சமூகத்தவர்கள் - (இவ்வுலகில்) அவர்களை நிச்சயமாக நாம் சுகமனுபவிக்கச் செய்வோம், பின்னர், நம்மிலிருந்து துன்புறுத்தும் வேதனை அவர்களை வந்தடையும்” என்று கூறப்பட்டது. மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)It was said, “O Noah, disembark with peace from Us, and with blessings upon you and upon some nations [descending] from those who are with you. As for other nations, We will grant them enjoyment for a while, then they will be afflicted with a painful punishment from Us.” Ruwwad Center |
11:49 تِلْكَ مِنْ أَنْبَاءِ الْغَيْبِ نُوحِيهَا إِلَيْكَ ۖ مَا كُنْتَ تَعْلَمُهَا أَنْتَ وَلَا قَوْمُكَ مِنْ قَبْلِ هَٰذَا ۖ فَاصْبِرْ ۖ إِنَّ الْعَاقِبَةَ لِلْمُتَّقِينَ Tilka min anbai alghaybi nooheeha ilayka ma kunta taAAlamuha anta wala qawmuka min qabli hatha faisbir inna alAAaqibata lilmuttaqeena This is of the news of the Unseen which We reveal to you (O Muhammad [sal-Allâhu 'alayhi wa sallam]); neither you nor your people knew it before this. So, be patient. Surely, the (good) end is for the Muttaqûn (the pious. See V.2:2) Hilali & KhanThat is from the news of the unseen which We reveal to you, [O Muhammad]. You knew it not, neither you nor your people, before this. So be patient; indeed, the [best] outcome is for the righteous. Saheeh International(நபியே!) இது (உங்களுக்கு) மறைவான சரித்திரங்களில் உள்ளதாகும். வஹ்யி மூலமாகவே நாம் இதனை உங்களுக்கு அறிவிக்கின்றோம். இதற்கு முன்னர் நீங்களோ அல்லது உங்களுடைய மக்களோ இதனை அறிந்திருக்கவில்லை. ஆகவே, (நபியே! நூஹைப் போல் நீங்களும் கஷ்டங்களைச்) சகித்துப் பொறுத்திருங்கள். நிச்சயமாக முடிவான வெற்றி இறை அச்சம் உடையவர்களுக்குத்தான். தாருல் ஹுதா(நபியே! உமக்கு) இது மறைவான நிகழ்ச்சிகளில் உள்ளதாகும்; நாம் இதனை உமக்கு (வஹீ மூலம்) அறிவித்தோம், நீரோ அல்லது உம்முடைய கூட்டத்தினரோ இதற்கு முன் இதனை அறிந்திருக்கவில்லை; நீரும் பொறுமையைக் கைக் கொள்வீராக! நிச்சயமாக இறுதியில் (நல்ல) முடிவு பயபக்தி உடையவர்களுக்குத் தான் (கிட்டும்). ஜான் டிரஸ்ட் நிறுவனம்(நபியே!) இவை (உமக்கு) மறைவான செய்திகளில் உள்ளவையாகும், நாம் இதனை உமக்கு அறிவிக்கின்றோம், இதற்கு முன்னர் நீரோ, அல்லது உம்முடைய சமூகத்தாரோ இவற்றை அறிந்திருக்கவில்லை, ஆகவே, (நபியே! கஷ்டங்களைச் சகித்துப்) பொறுமையுடனிருப்பீராக! நிச்சயமாக (நல்ல) முடிவு பயபக்தியுடையவர்களுக்காகும். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)This is one of the stories of the unseen that we reveal to you [O Prophet]; neither you nor your people knew it before this. So be patient; the outcome is for the righteous. Ruwwad Center |
11:50 وَإِلَىٰ عَادٍ أَخَاهُمْ هُودًا ۚ قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ ۖ إِنْ أَنْتُمْ إِلَّا مُفْتَرُونَ Waila AAadin akhahum hoodan qala ya qawmi oAAbudoo Allaha ma lakum min ilahin ghayruhu in antum illa muftaroona And to the 'آd (people We sent) their brother Hûd. He said, "O my people! Worship Allâh! You have no other ilâh (god) but Him. Certainly, you do nothing but invent lies! Hilali & KhanAnd to 'Aad [We sent] their brother Hud. He said, "O my people, worship Allah; you have no deity other than Him. You are not but inventors [of falsehood]. Saheeh International"ஆது" (என்னும்) மக்களிடம் அவர்களுடைய சகோதரர் "ஹூதை" (நம்முடைய தூதராக அனுப்பி வைத்தோம். அவர்களை நோக்கி) அவர் கூறினார்: "என்னுடைய மக்களே! அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். அவனைத் தவிர வேறு இறைவன் உங்களுக்கு இல்லை. (வேறு இறைவன் உண்டென்று கூறும்) நீங்கள் கற்பனையாகப் பொய் கூறுபவர்களே. தாருல் ஹுதா“ஆது” சமூகத்தாரிடம், அவர்களுடைய சகோதரர் ஹூதை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்); அவர் சொன்னார்: “என்னுடைய சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள், அவனன்றி (வேறு) இறைவன் உங்களுக்கு இல்லை; நீங்கள் பொய்யர்களாகவே தவிர வேறில்லை. ஜான் டிரஸ்ட் நிறுவனம்மேலும், ஆது (சமூகத்தாரின்)பால் அவர்களுடைய சகோதரர் ஹூதையும் (நம் தூதராக அனுப்பி வைத்தோம்) -அவர் கூறினார், “என்னுடைய சமூகத்தாரே அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள்; அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு (நாயன் உங்களுக்கு இல்லை, (வேறு நாயன் உண்டென்று கூறினால்) நீங்கள் (பொய்க்) கற்பனை செய்பவர்களே தவிர வேறு இல்லை”. மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)To the people of ‘Ād We sent their brother Hūd. He said, “O my people, worship Allah; you have no god other than Him. You are but fabricators. Ruwwad Center |
11:51 يَا قَوْمِ لَا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا ۖ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَى الَّذِي فَطَرَنِي ۚ أَفَلَا تَعْقِلُونَ Ya qawmi la asalukum AAalayhi ajran in ajriya illa AAala allathee fataranee afala taAAqiloona "O my people! I ask of you no reward for it (the Message). My reward is only from Him Who created me. Will you not then understand? Hilali & KhanO my people, I do not ask you for it any reward. My reward is only from the one who created me. Then will you not reason? Saheeh Internationalஎன்னுடைய மக்களே! இதற்காக நான் உங்களிடத்தில் யாதொரு கூலியும் கேட்கவில்லை. என்னுடைய கூலி என்னை படைத்தவனிடமேயன்றி (வேறு யாரிடமும்) இல்லை. (இவ்வளவு கூட) நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா? தாருல் ஹுதா“என் சமூகத்தார்களே! இதற்காக நான் உங்களிடம் ஒரு கூலியும் கேட்கவில்லை; எனக்குரிய கூலி எல்லாம் என்னைப்படைத்த அல்லாஹ்விடமே இருக்கிறது. நீங்கள் இதை விளங்கிக் கொள்ள மாட்டீர்களா? (என்றும்.) ஜான் டிரஸ்ட் நிறுவனம்“என்னுடைய சமூகத்தாரே! இதற்காக நான் உங்களிடத்தில் யாதொரு கூலியையும் கேட்கவில்லை, என்னுடைய கூலி என்னைப் படைத்தானே அத்தகையவனிடமே தவிர (வேறு யாரிடமும்) இல்லை, (இதை) நீங்கள் விளங்கிக் கொள்ள மாட்டீர்களா? மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)O my people, I ask you no reward for it. My reward is only with the One Who created me. Do you not then understand? Ruwwad Center |
11:52 وَيَا قَوْمِ اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيَزِدْكُمْ قُوَّةً إِلَىٰ قُوَّتِكُمْ وَلَا تَتَوَلَّوْا مُجْرِمِينَ Waya qawmi istaghfiroo rabbakum thumma tooboo ilayhi yursili alssamaa AAalaykum midraran wayazidkum quwwatan ila quwwatikum wala tatawallaw mujrimeena "And O my people! Ask forgiveness of your Lord and then repent to Him, He will send you (from the sky) abundant rain, and add strength to your strength, so do not turn away as Mujrimûn (criminals, disbelievers in the Oneness of Allâh)." Hilali & KhanAnd O my people, ask forgiveness of your Lord and then repent to Him. He will send [rain from] the sky upon you in showers and increase you in strength [added] to your strength. And do not turn away, [being] criminals." Saheeh Internationalஎன்னுடைய மக்களே! நீங்கள் உங்கள் இறைவனிடம் பாவ மன்னிப்பைக் கோரி (மனம் வருந்தி) அவன் பக்கமே திரும்புங்கள். (அவன் தடுத்திருக்கும்) மழையை உங்கள் மீது ஏராளமாகப் பொழியச் செய்வான். உங்களுடைய பலத்தைப் பின்னும் (பின்னும்) அதிகரிக்கச் செய்வான். ஆகவே, நீங்கள் அவனைப் புறக்கணித்துக் குற்றமிழைத்து விடாதீர்கள்" (என்றும் கூறினார்.) தாருல் ஹுதா“என்னுடைய சமூகத்தார்களே! நீங்கள் உங்களுடைய இறைவனிடம் பிழை பொறுக்கத் தேடுங்கள்; இன்னும் (தவ்பா செய்து) அவன் பக்கமே மீளுங்கள்; அவன் உங்கள் மீது வானத்திலிருந்து தொடராக மழையை அனுப்புவான்; மேலும் உங்களுடைய வலிமையுடன் மேலும் வலிமை பெருகச் செய்வான் - இன்னும் நீங்கள் (அவனைப்) புறக்கணித்துக் குற்றவாளிகளாகி விடாதீர்கள்” (என்றும் எச்சரித்துக் கூறினார்). ஜான் டிரஸ்ட் நிறுவனம்“என்னுடைய சமூகத்தாரே நீங்கள் உங்கள் இரட்சகனிடம் பிழை பொறுக்கத் தேடுங்கள், அப்பால் (தவ்பாச் செய்து) அவன் பக்கமே திரும்புங்கள், (அவ்வாறு செய்வீர்களாயின்) மழையை உங்கள் மீது தொடர்ச்சியாக பொழியச் செய்வான், உங்களுடைய பலத்திற்கு மேல் பலத்தையும் உங்களுக்கு அதிகரிக்கச் செய்வான், மேலும் குற்றவாளிகளாக நீங்கள் அவனை புறக்கணித்து விடாதீர்கள்” (என்றும் கூறினார்.) மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)O my people, seek forgiveness of your Lord and turn to Him in repentance; He will send down upon you abundant rain from the sky, and will add strength to your strength. So do not turn away in wickedness.” Ruwwad Center |
11:53 قَالُوا يَا هُودُ مَا جِئْتَنَا بِبَيِّنَةٍ وَمَا نَحْنُ بِتَارِكِي آلِهَتِنَا عَنْ قَوْلِكَ وَمَا نَحْنُ لَكَ بِمُؤْمِنِينَ Qaloo ya hoodu ma jitana bibayyinatin wama nahnu bitarikee alihatina AAan qawlika wama nahnu laka bimumineena They said: "O Hûd! No evidence have you brought us, and we shall not leave our gods for your (mere) saying! And we are not believers in you. Hilali & KhanThey said, "O Hud, you have not brought us clear evidence, and we are not ones to leave our gods on your say-so. Nor are we believers in you. Saheeh Internationalஅதற்கவர்கள், "ஹூதே! நீங்கள் (நாம் விரும்பியவாறு) யாதொரு அத்தாட்சியும் நம்மிடம் கொண்டு வரவில்லை. உங்களுடைய சொல்லுக்காக நாங்கள் எங்களுடைய தெய்வங்களை விட்டுவிட மாட்டோம். உங்களை நாங்கள் நம்பவும் மாட்டோம்" என்று கூறினார்கள். தாருல் ஹுதா(அதற்கு) அவர்கள்: “ஹூதே! நீர் எங்களிடம் எவ்வித அத்தாட்சியும் கொண்டு வரவில்லை; உம்முடைய சொல்லுக்காக எங்கள் தெய்வங்களை நாங்கள் விட்டு விடுபவர்களும் அல்லர் - நாங்கள் உம் மேல் (ஈமான்) கொள்கிறவர்களும் அல்லர்” என்று (பதில்) கூறினார். ஜான் டிரஸ்ட் நிறுவனம்அ(தற்க)வர்கள், “ஹூதே! (நாம் கேட்டவாறு) எந்த ஒரு தெளிவான ஆதாரத்தையும் நீர் நம்மிடம் கொண்டு வரவில்லை, உம்முடைய சொல்லுக்காக நாங்கள் எங்களுடைய தெய்வங்களை விட்டு விடுகிறவர்களுமல்லர், உம்மை நாங்கள் நம்பிக்கை கொள்ளக்கூடியவர்களுமல்லர்” என்று கூறினார்கள். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)They said, “O Hūd, you have not brought us any clear evidence, and we will not forsake our gods on account of what you say, nor will we believe in you. Ruwwad Center |
11:54 إِنْ نَقُولُ إِلَّا اعْتَرَاكَ بَعْضُ آلِهَتِنَا بِسُوءٍ ۗ قَالَ إِنِّي أُشْهِدُ اللَّهَ وَاشْهَدُوا أَنِّي بَرِيءٌ مِمَّا تُشْرِكُونَ In naqoolu illa iAAtaraka baAAdu alihatina bisooin qala innee oshhidu Allaha waishhadoo annee bareeon mimma tushrikoona "All that we say is that some of our gods (false deities) have seized you with evil (madness)." He said: "I call Allâh to witness and bear you witness that I am free from that which you ascribe as partners in worship, Hilali & KhanWe only say that some of our gods have possessed you with evil." He said, "Indeed, I call Allah to witness, and witness [yourselves] that I am free from whatever you associate with Allah Saheeh Internationalஅன்றி, "எங்களுடைய சில தெய்வங்கள் உங்களுக்குக் கேடு உண்டுபண்ணி விட்டன. (ஆதலால், நீங்கள் மதியிழந்து விட்டீர்கள்!) என்றும் கூறினார்கள். அதற்கவர், "நிச்சயமாக நான் அல்லாஹ்வை சாட்சியாக்குகிறேன்; நிச்சயமாக நான் அவனையன்றி நீங்கள் இணைவைத்து வணங்குபவைகளிலிருந்து விலகிக் கொண்டேன். (இதற்கு) நீங்களும் சாட்சியாக இருங்கள்" என்று கூறினார். தாருல் ஹுதா“எங்களுடைய தெய்வங்களில் சில கேட்டைக் கொண்டும் உம்மைப் பிடித்துக் கொண்டன என்பதைத் தவிர நாங்கள் (வேறு எதுவும்) கூறுவதற்கில்லை” (என்றும் கூறினார்கள்: அதற்கு) அவர், “நிச்சயமாக நான் அல்லாஹ்வைச் சாட்சியாக்குகிறேன்; நீங்கள் இணை வைப்பவற்றை விட்டும் நிச்சயமாக நான் விலகிக் கொண்டேன் என்பதற்கு நீங்களும் சாட்சியாய் இருங்கள்” என்று கூறினார். ஜான் டிரஸ்ட் நிறுவனம்(அன்றி) “எங்களுடைய தெய்வங்களிற் சில, கெட்டதைக்கொண்டு உம்மை பிடித்துக்கொண்டு விட்டன என்பதைத் தவிர நாங்கள் (வேறு எதையும்) கூறுவதற்கில்லை” (என்றார்கள்.) அ(தற்க)வர், “நிச்சயமாக நான் (அவனையன்றி) நீங்கள் இணைவைப்பவைகளிலிருந்து விலகிக் கொண்டவன் என்பதற்கு நீங்களும் சாட்சியாயிருங்கள்”, என்றும் கூறினார். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)All we can say that some of our gods have afflicted you with madness.” He said, “I take Allah as witness, and you too be witnesses, that I disown whatever you associate Ruwwad Center |
11:55 مِنْ دُونِهِ ۖ فَكِيدُونِي جَمِيعًا ثُمَّ لَا تُنْظِرُونِ Min doonihi fakeedoonee jameeAAan thumma la tunthirooni With Him (Allâh). So plot against me, all of you, and give me no respite. Hilali & KhanOther than Him. So plot against me all together; then do not give me respite. Saheeh International"ஆகவே, நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எனக்கு(ச் செய்யக்கூடிய) சூழ்ச்சியைச் செய்து பாருங்கள். (இதில்) நீங்கள் எனக்குச் சிறிதும் அவகாசம் அளிக்க வேண்டாம்" (என்றும்,) தாருல் ஹுதா“(ஆகவே) அவனையன்றி நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எனக்குச் சூழ்ச்சியைச் செய்து பாருங்கள்; (இதில்) நீங்கள் எனக்கு எந்த அவகாசமும் கொடுக்க வேண்டாம்” (என்றும் கூறினார்). ஜான் டிரஸ்ட் நிறுவனம்“அவனையன்றி (நீங்கள் இணைவைப்பவைகளிலிருந்து நான் நீங்கிக் கொண்டேன், ஆகவே. நீங்கள் அனைவரும் எனக்கு(ச் செய்யக்கூடிய) சூழ்ச்சியைச் செய்துவிடுங்கள், பின்னர், நீங்கள் எனக்கு அவகாசம் (ஏதும்) அளிக்க வேண்டாம்” என்றும் கூறினார். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)with Him. So plot against me all together, then give me no respite. Ruwwad Center |
11:56 إِنِّي تَوَكَّلْتُ عَلَى اللَّهِ رَبِّي وَرَبِّكُمْ ۚ مَا مِنْ دَابَّةٍ إِلَّا هُوَ آخِذٌ بِنَاصِيَتِهَا ۚ إِنَّ رَبِّي عَلَىٰ صِرَاطٍ مُسْتَقِيمٍ Innee tawakkaltu AAala Allahi rabbee warabbikum ma min dabbatin illa huwa akhithun binasiyatiha inna rabbee AAala siratin mustaqeemin "I put my trust in Allâh, my Lord and your Lord! There is not a moving (living) creature but He has the grasp of its forelock. Verily, my Lord is on a Straight Path (the truth). Hilali & KhanIndeed, I have relied upon Allah, my Lord and your Lord. There is no creature but that He holds its forelock. Indeed, my Lord is on a path [that is] straight." Saheeh International"நிச்சயமாக நான் என்னுடைய காரியங்கள் அனைத்தையும் என்னையும் உங்களையும் படைத்துப் பாதுகாப்பவனாகிய அல்லாஹ்விடமே ஒப்படைத்து விட்டேன். ஒவ்வொரு உயிருள்ள வைகளின் முன் உச்சிக் குடுமியையும் அவனே பிடித்துக் கொண்டிருக்கிறான். நிச்சயமாக என் இறைவன் (நீதியின்) நேரான வழியில் இருக்கிறான் (என்றும்,) தாருல் ஹுதாநிச்சயமாக நான், எனக்கும் உங்களுக்கும் இறைவனாக இருக்கும் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படைத்து விட்டேன்; எந்த உயிர்ப் பிராணியாயினும் அதன் முன்நெற்றி உரோமத்தை அவன் பிடித்தவனாகவே இருக்கின்றான்; நிச்சயமாக என் இறைவன் நேரான வழியிலிருக்கின்றான். ஜான் டிரஸ்ட் நிறுவனம்“நிச்சயமாக (எனனுடைய காரியங்கள் யாவற்றையும் ஒப்படைத்து முழுமையாக) என்னுடைய இரட்சகனும், உங்களுடைய இரட்சகனுமாகிய அல்லாஹ்வின் மீது நான் நம்பிக்கை வைத்துவிட்டேன், (பூமியின் மீது) ஊர்ந்து திரியும் எந்த ஜீவராசியாயினும்- அதன் முன் நெற்றி உரோமத்ததை அவன் பிடித்துக்கொண்டே தவிர இல்லை, நிச்சயமாக என் இரட்சகன் நேரான வழியின் மீதிருக்கின்றான்” (என்றும்), மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)I put my trust in Allah, my Lord and your Lord. There is no moving creature but He holds it by its forelock. My Lord is on a straight path. Ruwwad Center |
11:57 فَإِنْ تَوَلَّوْا فَقَدْ أَبْلَغْتُكُمْ مَا أُرْسِلْتُ بِهِ إِلَيْكُمْ ۚ وَيَسْتَخْلِفُ رَبِّي قَوْمًا غَيْرَكُمْ وَلَا تَضُرُّونَهُ شَيْئًا ۚ إِنَّ رَبِّي عَلَىٰ كُلِّ شَيْءٍ حَفِيظٌ Fain tawallaw faqad ablaghtukum ma orsiltu bihi ilaykum wayastakhlifu rabbee qawman ghayrakum wala tadurroonahu shayan inna rabbee AAala kulli shayin hafeethun "So if you turn away, still I have conveyed the Message with which I was sent to you. My Lord will make another people succeed you, and you will not harm Him in the least. Surely, my Lord is Guardian over all things." Hilali & KhanBut if they turn away, [say], "I have already conveyed that with which I was sent to you. My Lord will give succession to a people other than you, and you will not harm Him at all. Indeed my Lord is, over all things, Guardian." Saheeh Internationalநீங்கள் (என்னைப்) புறக்கணிப்பீர்களாயின் (அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஏனென்றால்,) நான் உங்களிடம் எதற்காக அனுப்பப்பட்டேனோ அதனை நிச்சயமாக நான் உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். (உங்களை அழித்து) உங்களை அல்லாத வேறு மக்களை என் இறைவன் உங்கள் இடத்தில் வைத்து விடுவான்; (இதற்காக) நீங்கள் அவனுக்கு யாதொரு தீங்கும் செய்ய முடியாது. நிச்சயமாக என் இறைவன் அனைத்தையும் பாதுகாப்பவனாக இருக்கிறான். (ஆகவே, அவன் என்னையும் பாதுகாத்துக் கொள்வான்" என்றும் கூறினார்.) தாருல் ஹுதா“நீங்கள் (இவ்வுபதேசத்தைப்) புறக்கணிப்பீர்களாயின் எதற்காக நான் உங்களிடம் அனுப்பப் பட்டேனோ அதனை நிச்சயமாக நான் உங்களிடம் சேர்ப்பித்துவிட்டேன்; இன்னும் என்னுடைய இறைவன் நீங்கள் அல்லாத (வேறு) ஒரு சமூகத்தை உங்களுக்கு பதிலாக வைத்துவிடுவான்; அவனுக்கு எப் பொருளையும் கொண்டு நீங்கள் அவனுக்கு யாதொரு தீங்கும் செய்ய முடியாது. நிச்சயமாக என் இறைவன் யாவற்றையும் பாதுகாப்பவனாக இருக்கின்றான்” (என்றும் கூறினார்). ஜான் டிரஸ்ட் நிறுவனம்“நீங்கள் (என்னைப்) புறக்கணிப்பீர்களாயின், நான் உங்களிடம் எதனைக் கொண்டு அனுப்பப்பட்டேனோ அதனை நிச்சயமாக நான் உங்களிடம் சேர்ப்பித்து வைத்து விட்டேன், (உங்களை அழித்து) உங்களை அல்லாத வேறு சமூகத்தை என் இரட்சகன் (உங்கள் இடத்தில்) பகரமாக்கிவிடுவான், (இதற்காக) நீங்கள் அவனுக்கு எப்பொருளாலும் (யாதொரு) தீங்கும் செய்துவிட முடியாது, நிச்சயமாக என் இரட்சகன் யாவற்றையும் பாதுகாப்பவன்” (என்றும் கூறினார். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)But if you turn away, I have conveyed to you what I have been sent with. My Lord will replace you with other people, and you cannot harm Him in the least. My Lord watches over all things.” Ruwwad Center |
11:58 وَلَمَّا جَاءَ أَمْرُنَا نَجَّيْنَا هُودًا وَالَّذِينَ آمَنُوا مَعَهُ بِرَحْمَةٍ مِنَّا وَنَجَّيْنَاهُمْ مِنْ عَذَابٍ غَلِيظٍ Walamma jaa amruna najjayna hoodan waallatheena amanoo maAAahu birahmatin minna wanajjaynahum min AAathabin ghaleethin And when Our Commandment came, We saved Hûd and those who believed with him by a mercy from Us, and We saved them from a severe torment. Hilali & KhanAnd when Our command came, We saved Hud and those who believed with him, by mercy from Us; and We saved them from a harsh punishment. Saheeh International(இதன் பின்னும் அவர்கள் அவரை நிராகரித்து விட்டனர். ஆகவே,) நம்முடைய (வேதனையின்) உத்தரவு வந்தபொழுது ஹூதையும், அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் நம்முடைய அருளால் பாதுகாத்துக்கொண்டு, கடுமையான வேதனையில் இருந்தும் நாம் அவர்களைத் தப்ப வைத்தோம். தாருல் ஹுதாநம்முடைய (தண்டனைக்கான) உத்தரவு வந்தபோது, ஹூதையும் அவருடன் ஈமான் கொண்டவர்களையும் நம் ரஹ்மத்தை (கிருபையைக்) கொண்டு காப்பாற்றினோம் - இன்னும் கடுமையான வேதனையை விட்டும் அவர்களை ஈடேற்றினோம். ஜான் டிரஸ்ட் நிறுவனம்மேலும், (அவர்களுக்கு தண்டனைக்குரிய) நம்முடைய உத்தரவு வந்தபொழுது ஹூதையும், அவருடன் விசுவாசங்கொண்டவர்களையும் நம்மிடமிருந்துள்ள அருளால் நாம் காப்பாற்றி விட்டோம், கடுமையான வேதனையிலிருந்தும் நாம் அவர்களைக் காப்பாற்றிவிட்டோம். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)When Our command came, We saved Hūd and those who believed with him by Our mercy, and We saved them from a harsh punishment. Ruwwad Center |
11:59 وَتِلْكَ عَادٌ ۖ جَحَدُوا بِآيَاتِ رَبِّهِمْ وَعَصَوْا رُسُلَهُ وَاتَّبَعُوا أَمْرَ كُلِّ جَبَّارٍ عَنِيدٍ Watilka AAadun jahadoo biayati rabbihim waAAasaw rusulahu waittabaAAoo amra kulli jabbarin AAaneedin Such were 'آd (people). They rejected the Ayât (proofs, evidences, verses, lessons, signs, revelations, etc.) of their Lord and disobeyed His Messengers, and followed the command of every proud, obstinate (oppressor of the truth from their leaders). Hilali & KhanAnd that was 'Aad, who rejected the signs of their Lord and disobeyed His messengers and followed the order of every obstinate tyrant. Saheeh International(நபியே!) இது "ஆது" மக்களின் (சரித்திரமாகும்.) அவர்கள் தங்கள் இறைவனின் கட்டளைகளை நிராகரித்து (அவர்களிடம் அனுப்பப்பட்ட) இறைவனின் தூதர்களுக்கு மாறு செய்தார்கள். அன்றி, பிடிவாதக்கார முரடர்கள் அனைவருடைய தீய வழிகாட்டல்களையும் அவர்கள் பின்பற்றினார்கள். தாருல் ஹுதா(நபியே!) இதோ ஆது கூட்டத்தினர் - அவர்கள் தங்கள் இறைவனின் அத்தாட்சிகளை நிராகரித்து, அவனுடைய தூதர்களுக்கும் மாறு செய்தார்கள். ஒவ்வொரு பிடிவாதக் கார வம்பர்களின் கட்டளையையும் பின்பற்றினார்கள். ஜான் டிரஸ்ட் நிறுவனம்(நபியே!) அது(தான்) ஆது (கூட்டத்தினர் சரித்திரமாகும்,) அவர்கள் தங்கள் இரட்சகனின் அத்தாட்சிகளை மறுத்து அவனுடைய தூதர்களுக்கு மாறுபாடும் செய்தார்கள், பிடிவாதக்காரனான ஒவ்வொரு வம்பனின் கட்டளையையும் அவர்கள் பின்பற்றவும் செய்தார்கள். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Such were the people of ‘Ād, who denied the signs of their Lord, disobeyed His Messengers and followed the command of every obstinate oppressor. Ruwwad Center |
11:60 وَأُتْبِعُوا فِي هَٰذِهِ الدُّنْيَا لَعْنَةً وَيَوْمَ الْقِيَامَةِ ۗ أَلَا إِنَّ عَادًا كَفَرُوا رَبَّهُمْ ۗ أَلَا بُعْدًا لِعَادٍ قَوْمِ هُودٍ WaotbiAAoo fee hathihi alddunya laAAnatan wayawma alqiyamati ala inna AAadan kafaroo rabbahum ala buAAdan liAAadin qawmi hoodin . And they were pursued by a curse in this world and (so they will be) on the Day of Resurrection. No doubt! Verily, 'آd disbelieved in their Lord. So, away with 'آd, the people of Hûd. Hilali & KhanAnd they were [therefore] followed in this world with a curse and [as well] on the Day of Resurrection. Unquestionably, 'Aad denied their Lord; then away with 'Aad, the people of Hud. Saheeh Internationalஇவ்வுலகில் (அல்லாஹ்வுடைய) சாபம் அவர்களைத் தொடர்ந்தது, மறுமை நாளிலும் (அவ்வாறே!) நிச்சயமாக "ஆது" மக்கள் தங்கள் இறைவனுக்கு மாறு செய்தார்கள் என்பதையும் (நபி) ஹூதுடைய "ஆது" (சமுதாயத்தவர்)களுக்குக் கேடுதான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். தாருல் ஹுதாஎனவே, அவர்கள் இவ்வுலகிலும், நியாயத் தீர்ப்பு நாளிலும் (அல்லாஹ்வின்) சாபத்தினால் தொடரப்பெற்றனர்; அறிந்து கொள்வீர்களாக! நிச்சயமாக “ஆது” கூட்டத்தார் தங்கள் இறைவனுக்கு மாறு செய்தார்கள்; இன்னும் அறிந்து கொள்வீர்களாக! ஹூதுடைய சமுதாயமான “ஆது” கூட்டத்தாருக்கு கேடுதான். ஜான் டிரஸ்ட் நிறுவனம்மேலும், இவ்வுலகிலும், மறுமை நாளிலும் (அல்லாஹ்வுடைய) சாபத்தால் அவர்கள் தொடரப்பட்டார்கள், அறிந்து கொள்ளுங்கள், நிச்சயமாக ஆது (கூட்டத்தினர்,) தங்கள் இரட்சகனை நிராகரித்தார்கள், ஹூதுடைய சமூகத்தாராகிய ஆதுக்குக் கேடுதான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)They were overtaken by a curse in this world and again on the Day of Resurrection. Indeed, ‘Ād denied their Lord; so away with ‘Ād, the people of Hūd! Ruwwad Center |
11:61 وَإِلَىٰ ثَمُودَ أَخَاهُمْ صَالِحًا ۚ قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ ۖ هُوَ أَنْشَأَكُمْ مِنَ الْأَرْضِ وَاسْتَعْمَرَكُمْ فِيهَا فَاسْتَغْفِرُوهُ ثُمَّ تُوبُوا إِلَيْهِ ۚ إِنَّ رَبِّي قَرِيبٌ مُجِيبٌ Waila thamooda akhahum salihan qala ya qawmi oAAbudoo Allaha ma lakum min ilahin ghayruhu huwa anshaakum mina alardi waistaAAmarakum feeha faistaghfiroohu thumma tooboo ilayhi inna rabbee qareebun mujeebun . And to Thamûd (people We sent) their brother Sâlih . He said: "O my people! Worship Allâh: you have no other ilâh (god) but Him. He brought you forth from the earth and settled you therein, then ask forgiveness of Him and turn to Him in repentance. Certainly, my Lord is Near (to all by His Knowledge), Responsive." Hilali & KhanAnd to Thamud [We sent] their brother Salih. He said, "O my people, worship Allah; you have no deity other than Him. He has produced you from the earth and settled you in it, so ask forgiveness of Him and then repent to Him. Indeed, my Lord is near and responsive." Saheeh International"ஸமூது" (என்னும் மக்)களிடம் அவர்களுடைய சகோதரர் "ஸாலிஹை" (நம்முடைய தூதராக அனுப்பி வைத்தோம். அவர் அவர்களை நோக்கி) "என்னுடைய மக்களே! அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள்; உங்களுக்கு அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவனே உங்களைப் பூமியிலிருந்து படைத்தான். அதிலேயே அவன் உங்களை வசிக்கவும் செய்தான். ஆதலால், நீங்கள் அவனிடமே மன்னிப்பைக் கோரி அவன் பக்கமே திரும்புங்கள். நிச்சயமாக என்னுடைய இறைவன் (உங்களுக்கு) மிகச் சமீபமானவனாகவும் (பிரார்த்தனைகளை) அங்கீகரிப்பவனாகவும் இருக்கின்றான்" என்று கூறினார். தாருல் ஹுதாஇன்னும், ஸமூது (கூட்டத்தினர்) பால் அவர்கள் சகோதரர் ஸாலிஹை (நம் தூதராக அனுப்பினோம்). அவர் சொன்னார்: “என் சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு நாயன் இல்லை. அவனே உங்களைப் பூமியிலிருந்து உண்டாக்கி, அதிலேயே உங்களை வசிக்கவும் வைத்தான். எனவே, அவனிடமே பிழை பொறுக்கத் தேடுங்கள்; இன்னும் தவ்பா செய்து அவன் பக்கமே மீளுங்கள். நிச்சயமாக என் இறைவன் (உங்களுக்கு) மிக அருகில் இருக்கின்றான்; (நம் பிரார்த்தனைகளை) ஏற்பவனாகவும் இருக்கின்றான்.” ஜான் டிரஸ்ட் நிறுவனம்மேலும், ஸமூது (கூட்டத்தினர்)பால் அவர்களுடைய சகோதரர் ஷாலிஹை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்)-அவர், “என்னுடைய சமூகத்தாரே! அல்லாஹ்வை (அவன் ஒருவனை)யே நீங்கள் வணங்குங்கள், உங்களுக்கு அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய வேறு) நாயன் இல்லை, அவனே உங்களைப் பூமியிலிருந்து உண்டாக்கினான், அதிலேயே அவன் உங்களை வசிக்கச் செய்தான், ஆதலால், நீங்கள் அவனிடமே பிழை பொறுக்கத் தேடுங்கள், பின்னர் தவ்பாச் செய்து அவன் பக்கமே திரும்புங்கள், நிச்சயமாக என்னுடைய இரட்சகன் (உங்களுக்கு) மிகச் சமீபமானவன், (பிரார்த்தனைகளை) அங்கீகரிப்பவன்” என்றும் கூறினார். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)To the people of Thamūd, We sent their brother Sālih. He said, “O my people, worship Allah; you have no god except Him. It is He Who brought you into being from the earth and settled you therein. So seek His forgiveness then turn to Him in repentance, for My Lord is Ever Near, All-Responsive.” Ruwwad Center |
11:62 قَالُوا يَا صَالِحُ قَدْ كُنْتَ فِينَا مَرْجُوًّا قَبْلَ هَٰذَا ۖ أَتَنْهَانَا أَنْ نَعْبُدَ مَا يَعْبُدُ آبَاؤُنَا وَإِنَّنَا لَفِي شَكٍّ مِمَّا تَدْعُونَا إِلَيْهِ مُرِيبٍ Qaloo ya salihu qad kunta feena marjuwwan qabla hatha atanhana an naAAbuda ma yaAAbudu abaona wainnana lafee shakkin mimma tadAAoona ilayhi mureebun They said: "O Sâlih! You have been among us as a figure of good hope (and we wished for you to be our chief) till this [new thing which you have brought that we leave our gods and worship your God (Allâh) Alone]! Do you (now) forbid us the worship of what our fathers have worshipped? But we are really in grave doubt as to that to which you invite us (monotheism)." Hilali & KhanThey said, "O Salih, you were among us a man of promise before this. Do you forbid us to worship what our fathers worshipped? And indeed we are, about that to which you invite us, in disquieting doubt." Saheeh Internationalஅதற்கவர்கள் (ஸாலிஹ் நபியை நோக்கி) "ஸாலிஹே! இதற்கு முன்னரெல்லாம், நீங்கள் எங்களுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமுடையவராக இருந்தீர்கள். எங்கள் மூதாதைகள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களை நாங்கள் வணங்கக்கூடாதென்று நீங்கள் எங்களைத் தடை செய்கிறீர்களா? நீங்கள் எங்களை எதனளவில் அழைக்கிறீர்களோ அதனைப் பற்றி நிச்சயமாக நாங்கள் பெரும் சந்தேகத்தில் இருக்கிறோம்" என்று கூறினர். தாருல் ஹுதாஅதற்கு அவர்கள், “ஸாலிஹே! இதற்கு முன்னரெல்லாம் நீர் எங்களிடையே நம்பிக்கைக்குரியவராக இருந்தீர்; எங்களுடைய மூதாதையர்கள் எதை வணங்கினார்களோ அதை வணங்குவதைவிட்டு எங்களை விலக்குகின்றீரா? மேலும் நீர் எங்களை எதன் பக்கம் அழைக்கிறீரோ அதைப்பற்றி நிச்சயமாக நாங்கள் பெருஞ் சந்தேகத்திலிருக்கிறோம்” என்று கூறினார்கள். ஜான் டிரஸ்ட் நிறுவனம்அ(தற்க)வர்கள், “ஸாலிஹே! இதற்கு முன்பெல்லாம் நீர் எங்களுடைய விருப்பத்திற்குரியவராக இருந்தீர், எங்கள் மூதாதையர் வணங்கிக் கொண்டிருந்தவைகளை நாங்கள் வணங்குவதை விட்டும், நீர் எங்களைத் தடை செய்கிறீரா? மேலும், நீர் நம்மை எதனளவில் அழைக்கிறீரோ அதனைப்பற்றி நிச்சயமாக நாம் அவநம்பிக்கை ஏற்படுத்தக்கூடிய சந்தேகத்திலிருக்கிறோம்” என்றும் கூறினார்கள். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)They said, “O Sālih, we truly had hopes in you before this. Do you forbid us to worship what our fathers used to worship? We are in disturbing doubt about what you are calling us to.” Ruwwad Center |
11:63 قَالَ يَا قَوْمِ أَرَأَيْتُمْ إِنْ كُنْتُ عَلَىٰ بَيِّنَةٍ مِنْ رَبِّي وَآتَانِي مِنْهُ رَحْمَةً فَمَنْ يَنْصُرُنِي مِنَ اللَّهِ إِنْ عَصَيْتُهُ ۖ فَمَا تَزِيدُونَنِي غَيْرَ تَخْسِيرٍ Qala ya qawmi araaytum in kuntu AAala bayyinatin min rabbee waatanee minhu rahmatan faman yansurunee mina Allahi in AAasaytuhu fama tazeedoonanee ghayra takhseerin He said: "O my people! Tell me, if I have a clear proof from my Lord, and there has come to me a mercy (Prophethood) from Him, who then can help me against Allâh, if I were to disobey Him? Then you increase me not but in loss. Hilali & KhanHe said, "O my people, have you considered: if I should be upon clear evidence from my Lord and He has given me mercy from Himself, who would protect me from Allah if I disobeyed Him? So you would not increase me except in loss. Saheeh Internationalஅதற்கவர் "என்னுடைய மக்களே! நான் என் இறைவனின் நேரான வழியில் இருந்துகொண்டும், அவன் என்மீது (மகத்தான) அருள் புரிந்துகொண்டும் இருக்கும் நிலைமையில் நான் அவனுக்கு மாறு செய்தால் (அவன் என்னைத் தண்டிக்க மாட்டானா? அந்நேரத்தில்) அல்லாஹ்விடத்தில் எனக்கு உதவி செய்பவர் யார்? என்பதை நீங்கள் கவனித்தீர்களா? நீங்களோ எனக்கு நஷ்டத்தை யன்றி (யாதொன்றையும்) அதிகமாக்கி விடமாட்டீர்கள்" என்று கூறினார். தாருல் ஹுதா“என் சமூகத்தாரே! நீங்கள் கவனித்தீர்களா? நான் என் இறைவனிடத்திலிருந்து தெளிவான அத்தாட்சியைப் பெற்றிருக்க, அவன் தன்னிடமிருந்து எனக்கு ரஹ்மத்தும் (அருளும்) வழங்கியிருக்க நான் அவனுக்கு மாறு செய்தால், அல்லாஹ்வை விட்டும் எனக்கு உதவி செய்பவர் யார்? நீங்களோ, எனக்கு இழப்பைத் தவிர வேறு எதையும் அதிகமாக்கி விடமாட்டீர்கள்” என்று கூறினார். ஜான் டிரஸ்ட் நிறுவனம்அ(தற்க)வர், “என்னுடைய சமூகத்தாரே! “நீங்கள் கவனித்தீர்களா? நான் என் இரட்சகனின் தெளிவான அத்தாட்சியின் மீதிருக்க, அவன் தன் புறத்திலிருந்து அருளையும் எனக்குக் கொடுத்திருக்க, நான் அவனுக்கு மாறு செய்தால், (அதற்காக அவன் என்னைத் தண்டித்துவிட்டால் அந்நேரத்தில்) அல்லாஹ்விடத்தில் எனக்கு உதவி செய்பவர் யார்? நீங்களோ, எனக்கு நஷ்டத்தைத் தவிர (வேறு எதையும்) அதிகமாக்கி விடமாட்டீர்கள்” என்று கூறினார். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)He said, “O my people, what do you think, if I should have a clear proof from my Lord, and He has bestowed mercy upon me from Himself, who could protect me from Allah, if I were to disobey Him? You would only increase me in loss. Ruwwad Center |
11:64 وَيَا قَوْمِ هَٰذِهِ نَاقَةُ اللَّهِ لَكُمْ آيَةً فَذَرُوهَا تَأْكُلْ فِي أَرْضِ اللَّهِ وَلَا تَمَسُّوهَا بِسُوءٍ فَيَأْخُذَكُمْ عَذَابٌ قَرِيبٌ Waya qawmi hathihi naqatu Allahi lakum ayatan fatharooha takul fee ardi Allahi wala tamassooha bisooin fayakhuthakum AAathabun qareebun "And O my people! This she-camel of Allâh is a sign to you, so leave her to feed (graze) in Allâh's land, and touch her not with evil, lest a near torment should seize you." Hilali & KhanAnd O my people, this is the she-camel of Allah - [she is] to you a sign. So let her feed upon Allah 's earth and do not touch her with harm, or you will be taken by an impending punishment." Saheeh Internationalஅன்றி, "என்னுடைய மக்களே! இது அல்லாஹ்வினுடைய ஒரு பெண் ஒட்டகமாகும். உங்களுக்கு இது ஓர் அத்தாட்சியாகவே அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அல்லாஹ்வினுடைய பூமியில் (அது விரும்பிய இடத்தில்) மேய அதனை விட்டுவிடுங்கள்; அதற்கு யாதொரு கெடுதலும் செய்ய(க் கருதி) அதனைத் தொடாதீர்கள். அவ்வாறு செய்தால் அதிசீக்கிரத்தில் வேதனை உங்களைப் பிடித்துக்கொள்ளும்" (என்று சொன்னார்.) தாருல் ஹுதா“அன்றியும், என் சமூகத்தாரே! உங்களுக்கு ஓர் அத்தாட்சியாக, இதோ இது அல்லாஹ்வுடைய (ஒரு) பெண் ஒட்டகம்; ஆகவே, அல்லாஹ்வின் பூமியில் (எதேச்சையாக) அதை மேய விட்டு விடுங்கள்; எந்த விதமான தீங்கும் செய்யக்கருதி அதைத் தீண்டாதீர்கள்; (அப்படி நீங்கள் செய்தால்) அதிசீக்கிரத்தில் உங்களை வேதனை பிடித்துக் கொள்ளும்” (என்று கூறினார்). ஜான் டிரஸ்ட் நிறுவனம்“அன்றியும் என்னுடைய சமூகத்தாரே! “உங்களுக்கு ஓர் அத்தாட்சியாக இது அல்லாஹ்வுடைய ஒரு பெண் ஒட்டகமாகும், ஆகவே, அதனை விட்டுவிடுங்கள், அல்லாஹ்வுடைய பூமியில் மேய்ந்து கொள்ளும், அதற்கு யாதொரு தீமையும் செய்ய(க் கருதி) அதனைத் தொடாதீர்கள், (அவ்வாறு செய்தால்) மிகவும் சமீபித்த வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளும்” (என்றும் கூறினார்). மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)O my people, this she-camel of Allah is a sign to you; so leave her graze in Allah’s land, and do not touch her with harm, or else an imminent punishment will overtake you.” Ruwwad Center |
11:65 فَعَقَرُوهَا فَقَالَ تَمَتَّعُوا فِي دَارِكُمْ ثَلَاثَةَ أَيَّامٍ ۖ ذَٰلِكَ وَعْدٌ غَيْرُ مَكْذُوبٍ FaAAaqarooha faqala tamattaAAoo fee darikum thalathata ayyamin thalika waAAdun ghayru makthoobin But they killed her. So he said: "Enjoy yourselves in your homes for three days. This is a promise (i.e. a threat) that will not be belied." Hilali & KhanBut they hamstrung her, so he said, "Enjoy yourselves in your homes for three days. That is a promise not to be denied." Saheeh Internationalஎனினும், அவர்கள் (அவருடைய கட்டளைக்கு மாறுசெய்து) அதனை வெட்டி விட்டார்கள். ஆகவே, அவர் (அவர்களை நோக்கி, "இனி) மூன்று நாள்கள் வரையில் உங்கள் வீடுகளில் (இருந்து கொண்டு) நீங்கள் சுகமடையலாம். (அதற்குப் பின்னர் அல்லாஹ்வுடைய வேதனை உங்களை வந்தடையும்) இது தவறாத வாக்காகும்" என்று கூறினார். தாருல் ஹுதாஆனால் அவர்கள் அதனை கொன்று விட்டார்கள்; ஆகவே அவர் (அம்மக்களிடம்): “நீங்கள் உங்களுடைய வீடுகளில் மூன்று நாள்களுக்கு சுகமனுபவியுங்கள்; (பின்னர் உங்களுக்கு அழிவு வந்துவிடும்.) இது பொய்ப்பிக்க முடியாத வாக்குறுதியாகும் என்று கூறினார். ஜான் டிரஸ்ட் நிறுவனம்ஆகவே. அவர்கள் (அதன் கால் நரம்பினை துண்டித்து) அதை அறுத்துவிட்டார்கள், அப்பொழுது அவர் மூன்று நாட்கள் வரையில் உங்கள் வீடுகளில் நீங்கள் சுகமடையுங்கள், இது பொய்ப்பிக்கப்படாத வாக்காகும்” என்று கூறினார். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)But they hamstrung her, so he said, “Enjoy yourselves in your homes for three days. That is an unfailing promise!” Ruwwad Center |
11:66 فَلَمَّا جَاءَ أَمْرُنَا نَجَّيْنَا صَالِحًا وَالَّذِينَ آمَنُوا مَعَهُ بِرَحْمَةٍ مِنَّا وَمِنْ خِزْيِ يَوْمِئِذٍ ۗ إِنَّ رَبَّكَ هُوَ الْقَوِيُّ الْعَزِيزُ Falamma jaa amruna najjayna salihan waallatheena amanoo maAAahu birahmatin minna wamin khizyi yawmiithin inna rabbaka huwa alqawiyyu alAAazeezu So when Our Commandment came, We saved Sâlih and those who believed with him by a mercy from Us, and from the disgrace of that Day. Verily, your Lord – He is the All-Strong, the All-Mighty. Hilali & KhanSo when Our command came, We saved Salih and those who believed with him, by mercy from Us, and [saved them] from the disgrace of that day. Indeed, it is your Lord who is the Powerful, the Exalted in Might. Saheeh International(வேதனையைப் பற்றிய) நம்முடைய கட்டளை(யின்படி வேதனை) வந்தபொழுது ஸாலிஹையும், அவருடன் நம்பிக்கைக் கொண்டவர்களையும் (வேதனையிலிருந்தும்) அந்நாளின் இழிவில் இருந்தும் நம்முடைய அருளைக் கொண்டு நாம் பாதுகாத்துக் கொண்டோம். (நபியே!) நிச்சயமாக உங்களுடைய இறைவன் பலமிக்கவனும் (அனைத்தையும்) மிகைத்தவனாகவும் இருக்கிறான். தாருல் ஹுதாநமது கட்டளை வந்த போது ஸாலிஹையும் அவரோடு ஈமான் கொண்டவர்களையும் நமது அருளால் காப்பாற்றினோம். மேலும் அன்றைய நாளின் இழிவிலிருந்தும் (காப்பாற்றினோம்,) நிச்சயமாக உமது இறைவன் வல்லமை மிக்கவன்; மிகைத்தவன். ஜான் டிரஸ்ட் நிறுவனம்நம்முடைய கட்டளை(க்கொப்ப வேதனை அவர்களுக்கு) வந்தபொழுது ஸாலிஹையும், அவருடன் விசுவாசம் கொண்டோரையும் நம்மிடமிருந்துள்ள அருளைக் கொண்டு அந்நாளின் இழிவை விட்டும் நாம் காப்பாற்றினோம், (நபியே!) நிச்சயமாக உம்முடைய இரட்சகன் - அவனே பலமிக்கவன், (யாவரையும்) மிகைத்தவன். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)So when Our command came, We saved Sālih and those who believed with him, by Our mercy, and from the disgrace of that day. Your Lord is the All-Powerful, the All-Mighty. Ruwwad Center |
11:67 وَأَخَذَ الَّذِينَ ظَلَمُوا الصَّيْحَةُ فَأَصْبَحُوا فِي دِيَارِهِمْ جَاثِمِينَ Waakhatha allatheena thalamoo alssayhatu faasbahoo fee diyarihim jathimeena And As-Saihah (torment – awful cry) overtook the wrong doers, so they lay (dead), prostrate in their homes, Hilali & KhanAnd the shriek seized those who had wronged, and they became within their homes [corpses] fallen prone Saheeh Internationalஆகவே, வரம்பு மீறியவர்களை இடி முழக்கம் பிடித்துக் கொண்டது. அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறே இறந்து விட்டனர். தாருல் ஹுதாஅநியாயம் செய்து கொண்டிருந்தவர்களை (பயங்கரமான) பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது. அதனால் அவர்கள் தங்கள் வீடுகளிலேயே அழிந்து போய்க் கிடந்தனர், ஜான் டிரஸ்ட் நிறுவனம்மேலும், அநியாயம் செய்தோரை பயங்கரமான இடி முழக்கம் பிடித்துக் கொண்டது, ஆகவே, அவர்கள் தங்கள் வீடுகளில் காலைப்பொழுதை குப்புற விழுந்த நிலையில் (இறந்து) கிடக்க, அடைந்தனர். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)The huge blast seized those who did wrong, and they fell dead in their homes, Ruwwad Center |
11:68 كَأَنْ لَمْ يَغْنَوْا فِيهَا ۗ أَلَا إِنَّ ثَمُودَ كَفَرُوا رَبَّهُمْ ۗ أَلَا بُعْدًا لِثَمُودَ Kaan lam yaghnaw feeha ala inna thamooda kafaroo rabbahum ala buAAdan lithamooda As if they had never lived there. No doubt! Verily, Thamûd disbelieved in their Lord. So away with Thamûd! Hilali & KhanAs if they had never prospered therein. Unquestionably, Thamud denied their Lord; then, away with Thamud. Saheeh International(அதற்கு முன்னர்) அங்கு அவர்கள் ஒரு காலத்திலும் வசித்திருக்காததைப் போல் (யாதொரு அடையாளமுமின்றி அழிந்து விட்டனர். நிச்சயமாக "ஸமூது" மக்கள் தங்கள் இறைவனை நிராகரித்து விட்டார்கள்; அந்த "ஸமூது" மக்கள் மீது சாபம் ஏற்பட்டு விட்டது, (என்பதை) அறிந்து கொள்ளுங்கள். தாருல் ஹுதா(அதற்குமுன்) அவர்கள் அவற்றில் (ஒரு காலத்திலும்) வசித்திருக்காததைப் போல் (அழிக்கப்பட்டனர்). நிச்சயமாக ஸமூது கூட்டதினர் தங்கள் இறைவனை நிராகரித்தனர் அறிந்து கொள்வீர்களாக! “ஸமூது” (கூட்டத்தினர்)க்கு நாசம்தான். ஜான் டிரஸ்ட் நிறுவனம்அதில் அவர்கள் ஒரு காலத்திலும் வசித்திருக்காதவர்களைப்போல் (அழிந்துவிட்டனர்.) நிச்சயமாக ஸமூது (கூட்டத்தினர்) தங்கள் இரட்சகனை நிராகரித்து விட்டார்கள், என்பதை அறிந்து கொள்ளுங்கள், அந்த ஸமூது` (கூட்டத்தினர்)க்கு நாசம் ஏற்பட்டுவிட்டது என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)as though they had never lived there. Indeed, Thamūd denied their Lord; so away with Thamūd! Ruwwad Center |
11:69 وَلَقَدْ جَاءَتْ رُسُلُنَا إِبْرَاهِيمَ بِالْبُشْرَىٰ قَالُوا سَلَامًا ۖ قَالَ سَلَامٌ ۖ فَمَا لَبِثَ أَنْ جَاءَ بِعِجْلٍ حَنِيذٍ Walaqad jaat rusuluna ibraheema bialbushra qaloo salaman qala salamun fama labitha an jaa biAAijlin haneethin And verily, there came Our messengers to Ibrâhîm (Abraham) with glad tidings. They said: "Salâm (greetings or peace!)." He answered, "Salâm (greetings or peace!)," and he hastened to entertain them with a roasted calf. Hilali & KhanAnd certainly did Our messengers come to Abraham with good tidings; they said, "Peace." He said, "Peace," and did not delay in bringing [them] a roasted calf. Saheeh Internationalநிச்சயமாக (மலக்குகளிலுள்ள) நம்முடைய தூதர்கள் இப்றாஹீமுக்கு நற்செய்தி கொண்டு வந்து "உங்களுக்கு ஈடேற்றம் உண்டாவதாகுக" என்று கூறினர். (இப்றாஹீம் அதற்குப் பிரதியாக "உங்களுக்கும்) ஈடேற்றம் உண்டாவதாகுக!" என்று கூறி சிறிதும் தாமதிக்காது (அறுத்துச்) சுட்டதொரு கன்றுக்குட்டியைக் கொண்டு வந்(து அவர்கள் முன் வைத்)தார்கள். தாருல் ஹுதாநிச்சயமாக நம் தூதர்கள் (வானவர்கள்) இப்றாஹீமுக்கு நற்செய்தி (கொண்டு வந்து) “ஸலாம்” (சொன்னார்கள்; இப்றாஹீமும் “ஸலாம்” (என்று பதில்) சொன்னார்; (அதன் பின்னர் அவர்கள் உண்பதற்காக) பொரித்த கன்றின் (இறைச்சியைக்) கொண்டு வருவதில் தாமதிக்கவில்லை. ஜான் டிரஸ்ட் நிறுவனம்திட்டமாக, (மலக்குகளான) நம்முடைய தூதர்கள் இப்றாஹீமுக்கு நன்மாராயம் கொண்டு வந்து “(உமக்குச்) சாந்தி உண்டாவதாக, என்று கூறினர், (அதற்கு “உங்களுக்கும்) சாந்தி உண்டாவதாக! என்று கூறி (விருந்தளிக்க அறுத்துப்) பொரித்ததொரு கன்றை (அதன் மாமிசத்தை)க் கொண்டு வருவதில் அவர் தாமதிக்கவில்லை. மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Our angel-messengers came to Abraham with glad tidings. They said, “Peace.” He said, “Peace.” And in a short while he brought a roasted calf. Ruwwad Center |
11:70 فَلَمَّا رَأَىٰ أَيْدِيَهُمْ لَا تَصِلُ إِلَيْهِ نَكِرَهُمْ وَأَوْجَسَ مِنْهُمْ خِيفَةً ۚ قَالُوا لَا تَخَفْ إِنَّا أُرْسِلْنَا إِلَىٰ قَوْمِ لُوطٍ Falamma raa aydiyahum la tasilu ilayhi nakirahum waawjasa minhum kheefatan qaloo la takhaf inna orsilna ila qawmi lootin But when he saw their hands went not towards it (the meal), he mistrusted them, and conceived a fear of them. They said: "Fear not, we have been sent against the people of Lût (Lot)." Hilali & KhanBut when he saw their hands not reaching for it, he distrusted them and felt from them apprehension. They said, "Fear not. We have been sent to the people of Lot." Saheeh Internationalஅவர்களுடைய கைகள் அதனிடம் செல்லாததைக் கண்டதும் அவர்களைப் பற்றி சந்தேகித்தார்; அவர்களைப் பற்றிய பயமும் அவர் மனதில் ஊசலாடியது. (அப்பொழுது) அவர்கள் (இப்றாஹீமை நோக்கி) "நீங்கள் பயப்படாதீர்கள். நிச்சயமாக நாங்கள் "லூத்"துடைய மக்களிடம் (அவர்களை அழித்துவிட) அனுப்பப் பட்டுள்ளோம்" என்று கூறினார்கள். தாருல் ஹுதாஆனால், அவர்களுடைய கைகள் அதன் (உணவின்) பக்கம் செல்லாததைக் கண்டு, அவர் அவர்களைப் பற்றி ஐயப்பட்டார், அவர்கள் மீது அவருக்குப் பயமும் ஏற்பட்டுவிட்டது; (ஆனால்) அவர்களோ (அவரைப் பார்த்து) “பயப்படாதீர்! நிச்சயமாக நாங்கள் லூத்துடைய சமூகத்தார்பால் அனுப்பப்பட்டிருக்கிறோம்” என்று கூறினார்கள். ஜான் டிரஸ்ட் நிறுவனம்ஆனால், அவர்களுடைய கைகள் அதன்பால் செல்லாததை அவர் கண்டபோது. அவர்களைப்பற்றி அவர் சந்தேகித்தார், அவர்களைப் பற்றிய பயத்தையும் அவர் (தன்) மனதில் உணர்ந்தார், (அப்பொழுது) அவர்கள் “நீர் பயப்படாதீர், நிச்சயமாக நாங்கள் “லூத்துடைய சமூகத்தார்பால் அனுப்பப் பட்டுள்ளோம்” என்று கூறினார்கள். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)When he saw their hands not reaching the food, he became suspicious and felt scared of them. They said, “Do not be scared. We have been sent to the people of Lot.” Ruwwad Center |
11:71 وَامْرَأَتُهُ قَائِمَةٌ فَضَحِكَتْ فَبَشَّرْنَاهَا بِإِسْحَاقَ وَمِنْ وَرَاءِ إِسْحَاقَ يَعْقُوبَ Waimraatuhu qaimatun fadahikat fabashsharnaha biishaqa wamin warai ishaqa yaAAqooba And his wife was standing (there), and she laughed [either, because the messengers did not eat their food or for being glad for the destruction of the people of Lût (Lot)]. But We gave her glad tidings of Ishâq (Isaac), and after Ishâq, of Ya'qûb (Jacob). Hilali & KhanAnd his Wife was standing, and she smiled. Then We gave her good tidings of Isaac and after Isaac, Jacob. Saheeh International(அச்சமயம் அங்கு) நின்று கொண்டிருந்த அவருடைய (கிழ) மனைவி (லூத் நபியின் மக்கள் செய்யும் தீய காரியங்களைச் செவியுற்று) சிரித்தாள்; ஆனால், அதே சமயத்தில் அவளுக்கு "இஸ்ஹாக்" (என்னும் மகனைப்) பற்றியும், இஸ்ஹாக்குக்குப் பின்னர் "யஅகூப்" (என்னும் பேரன் பிறக்கப் போவதைப்) பற்றியும் நற்செய்தி கூறச் செய்தோம். தாருல் ஹுதாஅப்போது, அவருடைய மனைவியும் (அங்கு) நின்று கொண்டிருந்தார்; இன்னும் அவர் சிரித்தார். அவருக்கு நாம் இஸ்ஹாக்கைப் பற்றியும், இஸ்ஹாக்குக்குப் பின் யஃகூபை பற்றியும் நன்மாராயங் கூறினோம். ஜான் டிரஸ்ட் நிறுவனம்மேலும், அவருடைய (வயதான) மனைவியும் (மறைவில் அங்கு) நின்று கொண்டிருந்தார், அப்போது அவர் சிரித்தார், பின்னர், அவருக்கு இஸ்ஹாக் பற்றியும், இஸ்ஹாக்குக்குப் பின்னர், யஃகூபு பற்றியும் நாம் நன்மாராயங் கூறினோம். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)His wife was standing by, and laughed after We gave her glad tidings of [the birth of] Isaac and Jacob after Isaac. Ruwwad Center |
11:72 قَالَتْ يَا وَيْلَتَىٰ أَأَلِدُ وَأَنَا عَجُوزٌ وَهَٰذَا بَعْلِي شَيْخًا ۖ إِنَّ هَٰذَا لَشَيْءٌ عَجِيبٌ Qalat ya waylata aalidu waana AAajoozun wahatha baAAlee shaykhan inna hatha lashayon AAajeebun She said (in astonishment): "Woe to me! Shall I bear a child while I am an old woman, and here is my husband an old man? Verily, this is a strange thing!" Hilali & KhanShe said, "Woe to me! Shall I give birth while I am an old woman and this, my husband, is an old man? Indeed, this is an amazing thing!" Saheeh Internationalஅதற்கவள், "என்னுடைய துக்கமே! (மாதவிடாய் நின்று) நான் கிழவியாகவும், என்னுடைய இக்கணவர் ஒரு வயோதிகராகவும் ஆனதன் பின்னர் நான் (கர்ப்பமாகி) பிள்ளை பெறுவேனா! நிச்சயமாக இது ஆச்சரியமான விஷயம்!" என்றாள். தாருல் ஹுதாஅதற்கு அவர் கூறினார்: “ஆ கைசேதமே! நான் முதியவளாகவும், இதோ என் கணவர் முதியவராகவும் இருக்கும் நிலையில் நான் குழந்தை பெறுவேனா? நிச்சயமாக இது ஆச்சரியமான விஷயம்தான்!” ஜான் டிரஸ்ட் நிறுவனம்“என்னுடைய கேடே! (மாதவிடாய் நின்று) நான் கிழவியாகவும், என்னுடைய இக்கணவர் ஒரு வயோதிகராகவும் இருக்க, நான் (கர்ப்பமாகி) பிள்ளை பெறுவேனா? நிச்சயமாக இது ஆச்சரியமான விஷயம்!” என்று அவருடைய (மனைவியாகிய) அவர் கூறினார். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)She said, “Alas for me! How can I bear a child while I am an old woman, and this is my husband, an old man? This is a strange thing indeed!” Ruwwad Center |
11:73 قَالُوا أَتَعْجَبِينَ مِنْ أَمْرِ اللَّهِ ۖ رَحْمَتُ اللَّهِ وَبَرَكَاتُهُ عَلَيْكُمْ أَهْلَ الْبَيْتِ ۚ إِنَّهُ حَمِيدٌ مَجِيدٌ Qaloo ataAAjabeena min amri Allahi rahmatu Allahi wabarakatuhu AAalaykum ahla albayti innahu hameedun majeedun They said: "Do you wonder at the Decree of Allâh? The Mercy of Allâh and His Blessings be on you, O the family [of Ibrâhîm (Abraham)]. Surely, He (Allâh) is All-Praiseworthy, All-Glorious." Hilali & KhanThey said, "Are you amazed at the decree of Allah? May the mercy of Allah and His blessings be upon you, people of the house. Indeed, He is Praiseworthy and Honorable." Saheeh Internationalஅதற்கவர்கள், "அல்லாஹ்வுடைய சக்தியைப் பற்றி நீ ஆச்சரியம் அடைகிறாயா? அல்லாஹ்வுடைய அருளும், அவனுடைய பாக்கியங்களும் (இப்றாஹீமுடைய) இவ்வீட்டிலுள்ள உங்கள் மீதுள்ளன. நிச்சயமாக அவன் மிக்க புகழுடையவனாகவும், மகிமை உடையவனாகவும் இருக்கின்றான்" என்று கூறினார்கள். தாருல் ஹுதா(அதற்கு) அவர்கள், “அல்லாஹ்வின் கட்டளையைப் பற்றி ஆச்சரியப்படுகிறீரா? அல்லாஹ்வின் ரஹ்மத்தும், அவனுடைய பரக்கத்தும் (அருளும், பாக்கியமும்) இவ்வீட்டிலுள்ள உங்கள் மீது உண்டாவதாக! நிச்சயமாக அவன் புகழுடையவனாகவும், மகிமை வாய்ந்தவனாகவும் இருக்கின்றான்” என்று பதிலளித்தார்கள். ஜான் டிரஸ்ட் நிறுவனம்அ(தற்க)வர்கள், அல்லாஹ்வுடைய கட்டளையைப் பற்றி நீ ஆச்சரியமடைகின்றாயா? அல்லாஹ்வுடைய அருளும், அவனுடைய பாக்கியங்களும், இவ்வீட்டிலுள்ள உங்கள் மீதுள்ளன, நிச்சயமாக அவன் புகழப்படுபவன், மாட்சிமையுடையவன்” என்று கூறினார்கள். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)They said, “Are you amazed at the decree of Allah? May Allah’s mercy and blessings be upon you, O people of the house. He is Praiseworthy, All-Glorious.” Ruwwad Center |
11:74 فَلَمَّا ذَهَبَ عَنْ إِبْرَاهِيمَ الرَّوْعُ وَجَاءَتْهُ الْبُشْرَىٰ يُجَادِلُنَا فِي قَوْمِ لُوطٍ Falamma thahaba AAan ibraheema alrrawAAu wajaathu albushra yujadiluna fee qawmi lootin Then when the fear had gone away from (the mind of) Ibrâhîm (Abraham), and the glad tidings had reached him, he began to plead with Us (Our messengers) for the people of Lût (Lot). Hilali & KhanAnd when the fright had left Abraham and the good tidings had reached him, he began to argue with Us concerning the people of Lot. Saheeh Internationalஇப்றாஹீமுடைய திடுக்கம் நீங்கி அவருக்கு நற்செய்தி கிடைத்த பின்னர் "லூத்" தின் மக்களை (அழித்து விடுவதை)ப் பற்றி அவர் நம்மு(டைய மலக்குகளு)டன் தர்க்கம் செய்ய ஆரம்பித்து விட்டார். தாருல் ஹுதா(இது கேட்டு) இப்றாஹீமை விட்டுப் பயம் நீங்கி, நன்மாராயம் அவருக்கு வந்ததும் லூத்துடைய சமூகத்தாரைப் பற்றி நம்மிடம் வாதிடலானார். ஜான் டிரஸ்ட் நிறுவனம்இப்றாஹீமை விட்டு திடுக்கம் நீங்கி அவருக்கு நன்மாராயமும் வந்தபோது, லூத்துடைய சமூகத்தாரைப் பற்றி அவர் நம்மு(டைய மலக்குகளு)டன் தர்க்கம், செய்ய ஆரம்பித்துவிட்டார். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)When shock of fear left Abraham and the glad tidings [of Isaac’s birth] came to him, he started pleading with Us concerning the people of Lot. Ruwwad Center |
11:75 إِنَّ إِبْرَاهِيمَ لَحَلِيمٌ أَوَّاهٌ مُنِيبٌ Inna ibraheema lahaleemun awwahun muneebun Verily, Ibrâhîm (Abraham) was without doubt forbearing, used to invoke Allâh with humility, and was repentant (to Allâh all the time, again and again). Hilali & KhanIndeed, Abraham was forbearing, grieving and [frequently] returning [to Allah]. Saheeh Internationalநிச்சயமாக இப்றாஹீம் மிக்க சகிப்பவராகவும், மிக இளகியமன முடையவராகவும் (எதற்கும்) நம்மையே நோக்குபவராகவும்இருந்தார். தாருல் ஹுதாநிச்சயமாக இப்றாஹீம் சகிப்புத் தன்மை உடையவராகவும், இளகிய மனங்கொண்டவராகவும் (எதற்கும்) இறைவன் பால் முகம் திரும்புபவராகவும் இருந்தார். ஜான் டிரஸ்ட் நிறுவனம்நிச்சயமாக இப்ரறாஹீம், மிக்க சகிப்புத் தன்மையுடையவர், இளகிய மனதுடையவர், (எதற்கும் அல்லாஹ்வின் பாலே) திரும்பக்கூடியவர். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Abraham was indeed forbearing, tenderhearted, and constantly returning in repentance. Ruwwad Center |
11:76 يَا إِبْرَاهِيمُ أَعْرِضْ عَنْ هَٰذَا ۖ إِنَّهُ قَدْ جَاءَ أَمْرُ رَبِّكَ ۖ وَإِنَّهُمْ آتِيهِمْ عَذَابٌ غَيْرُ مَرْدُودٍ Ya ibraheemu aAArid AAan hatha innahu qad jaa amru rabbika wainnahum ateehim AAathabun ghayru mardoodin . "O Ibrâhîm (Abraham)! Forsake this. Indeed, the Commandment of your Lord has gone forth. Verily, there will come a torment for them which cannot be turned back." Hilali & Khan[The angels said], "O Abraham, give up this [plea]. Indeed, the command of your Lord has come, and indeed, there will reach them a punishment that cannot be repelled." Saheeh International(ஆகவே, அத்தூதர்கள் இப்றாஹீமை நோக்கி) இப்றாஹீமே! நீங்கள் இதைப் (பற்றி தர்க்கம் செய்யாது) புறக்கணித்து விடுங்கள். நிச்சயமாக (அவர்களை அழிப்பதற்காக) உங்கள் இறைவனுடைய கட்டளை பிறந்துவிட்டது. அன்றி, நிச்சயமாக அவர்களால் தவிர்க்க முடியாத வேதனை அவர்களை வந்தடையும் (என்று கூறினார்கள்.) தாருல் ஹுதா“இப்றாஹீமே! (அம்மக்கள் மீது கொண்ட இரக்கத்தால் இதைப் பற்றி வாதிடாது) இ(வ்விஷயத்)தை நீர் புறக்கணியும்; ஏனெனில் உம்முடைய இறைவனின் கட்டளை நிச்சயமாக வந்துவிட்டது - மேலும், அவர்களுக்குத் தவிர்க்கமுடியாத வேதனை நிச்சயமாக வரக்கூடியதேயாகும். ஜான் டிரஸ்ட் நிறுவனம்(ஆகவே, அத்தூதர்கள்,) “இப்றாஹீமே! நீர் இதைப் புறக்கணித்து விடும், நிச்சயமாக உமதிரட்சகனுடைய கட்டளை வந்துவிட்டது, அன்றியும் நிச்சயமாக அவர்கள் - தட்ட முடியாத வேதனை அவர்களை வந்தடையும், (என்று கூறினார்கள்.) மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)[The angels said], “O Abraham, leave this, for indeed the command of your Lord has already come to pass, and there will come upon them a punishment that cannot be averted.” Ruwwad Center |
11:77 وَلَمَّا جَاءَتْ رُسُلُنَا لُوطًا سِيءَ بِهِمْ وَضَاقَ بِهِمْ ذَرْعًا وَقَالَ هَٰذَا يَوْمٌ عَصِيبٌ Walamma jaat rusuluna lootan seea bihim wadaqa bihim tharAAan waqala hatha yawmun AAaseebun And when Our messengers came to Lût (Lot), he was grieved on account of them and felt himself powerless for them (lest the town people should approach them to commit sodomy with them). He said: "This is a distressful day." Hilali & KhanAnd when Our messengers, [the angels], came to Lot, he was anguished for them and felt for them great discomfort and said, "This is a trying day." Saheeh International(இப்றாஹீமிடமிருந்து) நம் தூதர்கள் லூத்திடம் வந்த பொழுது, அவர் (அம்மலக்குகளைத் தம் மக்களிடமிருந்து எவ்வாறு பாதுகாப்பது என்று) கவலைக்குள்ளாகி அவரது மனம் சுருங்கி "இது மிக நெருக்கடியான நாள்" என்று அவர் கூறினார். தாருல் ஹுதாநம் தூதர்கள் (வானவர்கள்) லூத்திடம் வந்தபோது, (தம்) மக்களுக்கு அவர் பெரிதும் விசனமடைந்தார்; (அதன் காரணமாக) உள்ளம் சுருங்கியவராக; இது நெருக்கடி மிக்க நாளாகும்” என்று கூறினார். ஜான் டிரஸ்ட் நிறுவனம்நம் தூதர்கள் லூத்திடம் வந்தபொழுது, அவர்களால் அவர் கவலைக்குள்ளாக்கப்பட்டார், மேலும், (அவர்களைக் காப்பதற்கு சக்தியின்மையினால்) அவர்களால் மன சங்கடத்திற்குள்ளானார், (அப்போது) “இது மிகக் கடினமான நாள்” என்றும் கூறினார். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)When Our angel-messengers came to Lot, he was perturbed and felt troubled on their account, and said, “This is a distressing day.” Ruwwad Center |
11:78 وَجَاءَهُ قَوْمُهُ يُهْرَعُونَ إِلَيْهِ وَمِنْ قَبْلُ كَانُوا يَعْمَلُونَ السَّيِّئَاتِ ۚ قَالَ يَا قَوْمِ هَٰؤُلَاءِ بَنَاتِي هُنَّ أَطْهَرُ لَكُمْ ۖ فَاتَّقُوا اللَّهَ وَلَا تُخْزُونِ فِي ضَيْفِي ۖ أَلَيْسَ مِنْكُمْ رَجُلٌ رَشِيدٌ Wajaahu qawmuhu yuhraAAoona ilayhi wamin qablu kanoo yaAAmaloona alssayyiati qala ya qawmi haolai banatee hunna atharu lakum faittaqoo Allaha wala tukhzooni fee dayfee alaysa minkum rajulun rasheedun And his people came rushing towards him, and since aforetime they used to commit crimes (sodomy), he said: "O my people! Here are my daughters (i.e. the women of the nation), they are purer for you (if you marry them lawfully). So fear Allâh and disgrace me not with regard to my guests! Is there not among you a single right-minded man?" Hilali & KhanAnd his people came hastening to him, and before [this] they had been doing evil deeds. He said, "O my people, these are my daughters; they are purer for you. So fear Allah and do not disgrace me concerning my guests. Is there not among you a man of reason?" Saheeh International(இதற்குள்) அவருடைய மக்கள் அவரிடம் விரைந்தோடி வந்தார்கள். இதற்கு முன்னரும் அவர்கள் தீய காரியங்களையே செய்து கொண்டிருந்தனர். (இதனை நாடியே அவரிடம் அவர்கள் வந்தனர்.) அதற்கு ("லூத்" நபி அவர்களை நோக்கி) "என்னுடைய மக்களே! இதோ! என்னுடைய பெண்மக்கள் இருக்கின்றனர். (அவர்களை திருமணம் செய்து கொள்வது) உங்களுக்கு மிக்க பரிசுத்தமானதாகும். அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள். என் விருந்தினர் விஷயத்தில் என்னை நீங்கள் அவமானப் படுத்தாதீர்கள். (உங்களுக்கு நல்லுபதேசம் செய்யும்) நல்ல மனிதன் ஒருவன் கூட உங்களிடம் இல்லையா?" என்று கேட்டார். தாருல் ஹுதாஅவருடைய சமூகத்தார் அவரிடம் விரைந்தோடி வந்தார்கள்; இன்னும் முன்னிருந்தே அவர்கள் தீய செயல்களே செய்து கொண்டிருந்தார்கள். (அவர்களை நோக்கி லூத்) “என் சமூகத்தார்களே! இதோ இவர்கள் என் புதல்விகள்; இவர்கள் உங்களுக்கு(த் திருமணத்திற்கு)ப் பரிசுத்தமானவர்கள்; எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; இன்னும் என் விருந்தினர் விஷயத்தில் என்னை நீங்கள் அவமானப் படுத்தாதீர்கள்; நல்ல மனிதர் ஒருவர் (கூட) உங்களில் இல்லையா?” என்று கூறினார். ஜான் டிரஸ்ட் நிறுவனம்அன்றியும், அவருடைய சமூகத்தார் அவரின்பால் விரைந்தவர்களாக அவரிடம் வந்தனர், முன்னரும் அவர்கள் தீயவற்றையே செய்து கொண்டிருந்தனர், அதற்கு, (லூத் நபி, அவர்களிடம்,) “என்னுடைய சமூகத்தாரே!” இவர்கள் என்னுடைய பெண்மக்கள், அவர்கள் உங்களுக்கு (த்,திருமணத்திற்கு) மிக்க பரிசுத்தமானவர்கள், ஆகவே, அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள், என் விருந்தினர் விஷயத்தில் என்னை நீங்கள் அவமானப்படுத்தியும் விடாதீர்கள், (உங்களுக்கு உபதேசிக்க) நேர்மையான மனிதன் (ஒருவர் கூட) உங்களில் இல்லையா?” என்று கூறினார். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)His people came rushing to him, and they were accustomed to committing evil deeds. He said, “O my people, here are my daughters [for marriage]; they are purer for you. So fear Allah and do not disgrace me concerning my guests. Is there not a right-minded man among you?” Ruwwad Center |
11:79 قَالُوا لَقَدْ عَلِمْتَ مَا لَنَا فِي بَنَاتِكَ مِنْ حَقٍّ وَإِنَّكَ لَتَعْلَمُ مَا نُرِيدُ Qaloo laqad AAalimta ma lana fee banatika min haqqin wainnaka lataAAlamu ma nureedu They said: "Surely, you know that we have neither any desire nor need of your daughters, and indeed you know well what we want!" Hilali & KhanThey said, "You have already known that we have not concerning your daughters any claim, and indeed, you know what we want." Saheeh Internationalஅதற்கவர்கள் "உங்களுடைய பெண்மக்களிடம் எங்களுக்கு யாதொரு தேவையும் இல்லை என்பதை நீங்கள் நன்கறிவீர்கள்; நாங்கள் விரும்புவது என்ன என்பதையும் நிச்சயமாக நீங்கள் நன்கறிவீர்கள்" என்றும் கூறினார்கள். தாருல் ஹுதா(அதற்கு) அவர்கள் “உம்முடைய புதல்வியரில் எங்களுக்கு எந்த பாத்தியதையுமில்லை என்பதைத் திடமாக நீர் அறிந்திருக்கிறீர்; நிச்சயமாக நாங்கள் விரும்புவது என்ன என்பதையும் நீர் அறிவீர்” என்று கூறினார்கள். ஜான் டிரஸ்ட் நிறுவனம்அ(தற்க)வர்கள் “உம்முடைய பெண் மக்களிடம் எங்களுக்கு எந்தத் தேவையுமில்லை என்பதை நீர் நன்கறிவீர், நாங்கள் விரும்புவது என்ன என்பதையும் நிச்சயமாக நீர் அறிந்திருக்கிறீர்? என்றும் கூறினார்கள். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)They said, “You already know that we have no need for your daughters, and you surely know what we want!” Ruwwad Center |
11:80 قَالَ لَوْ أَنَّ لِي بِكُمْ قُوَّةً أَوْ آوِي إِلَىٰ رُكْنٍ شَدِيدٍ Qala law anna lee bikum quwwatan aw awee ila ruknin shadeedin He said: "Would that I had strength (men) to overpower you, or that I could betake myself to some powerful support (to resist you)." Hilali & KhanHe said, "If only I had against you some power or could take refuge in a strong support." Saheeh Internationalஅதற்கவர் "உங்களைத் தடுக்க போதுமான பலம் எனக்கு இருக்க வேண்டாமா? அல்லது (உங்களைத் தடுத்து விடக்கூடிய) பலமான ஆதரவை நான் அடைய வேண்டாமா?" என்று (மிக துக்கத்துடன்) கூறினார். தாருல் ஹுதாஅதற்கு அவர் “உங்களைத் தடுக்க போதுமான பலம் எனக்கு இருக்கவேண்டுமே! அல்லது (உங்களைத் தடுக்கப் போதுமான) வலிமையுள்ள ஆதரவின்பால் நான் ஒதுங்கவேண்டுமே” என்று (விசனத்துடன்) கூறினார். ஜான் டிரஸ்ட் நிறுவனம்அ(தற்க)வர் “உங்களைத் தடுக்கப் போதுமான பலம் எனக்கு இருந்திருப்பின் அல்லது பலமான ஆதரவை நான் அடைந்திருப்பின் (உங்களை தண்டித்து எதையெல்லாம் செய்ய இயலுமோ அவையனைத்தையும் செய்திருப்பேன்) என்று கூறினார். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)He said, “Would that I had some strength [to stop you] or could rely on a mighty support!” Ruwwad Center |
11:81 قَالُوا يَا لُوطُ إِنَّا رُسُلُ رَبِّكَ لَنْ يَصِلُوا إِلَيْكَ ۖ فَأَسْرِ بِأَهْلِكَ بِقِطْعٍ مِنَ اللَّيْلِ وَلَا يَلْتَفِتْ مِنْكُمْ أَحَدٌ إِلَّا امْرَأَتَكَ ۖ إِنَّهُ مُصِيبُهَا مَا أَصَابَهُمْ ۚ إِنَّ مَوْعِدَهُمُ الصُّبْحُ ۚ أَلَيْسَ الصُّبْحُ بِقَرِيبٍ Qaloo ya lootu inna rusulu rabbika lan yasiloo ilayka faasri biahlika biqitAAin mina allayli wala yaltafit minkum ahadun illa imraataka innahu museebuha ma asabahum inna mawAAidahumu alssubhu alaysa alssubhu biqareebin They (messengers) said: "O Lût (Lot)! Verily, we are the messengers from your Lord! They shall not reach you! So travel with your family in a part of the night, and let not any of you look back; but your wife (will remain behind), verily, the punishment which will afflict them, will afflict her. Indeed, morning is their appointed time. Is not the morning near?" Hilali & KhanThe angels said, "O Lot, indeed we are messengers of your Lord; [therefore], they will never reach you. So set out with your family during a portion of the night and let not any among you look back - except your wife; indeed, she will be struck by that which strikes them. Indeed, their appointment is [for] the morning. Is not the morning near?" Saheeh International(அதற்கு லூத்துடைய விருந்தாளிகள் அவரை நோக்கி) "லூத்தே! நிச்சயமாக நாங்கள் உங்கள் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்(களாகிய மலக்கு)களாவோம். இவர்கள் நிச்சயமாக உங்களை வந்தடைய முடியாது. (இன்று) ஒரு சிறு பகுதி இரவில் இருக்கும் பொழுதே நீங்கள் உங்கள் குடும்பத்துடன் (இங்கிருந்து) வெளியேறி விடுங்கள்; (உங்களுடைய சொல் கேளாத) உங்களுடைய மனைவியைத் தவிர, உங்களில் ஒருவரும் அவர்களைத் திரும்பியும் பார்க்க வேண்டாம். அவர்களைத் தொடும் வேதனை நிச்சயமாக அவளையும் பீடிக்கும். (வேதனை வர) நிச்சயமாக இவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நேரம் விடியற்காலையாகும். விடியற்காலை சமீபித்து விடவில்லையா?" என்று கூறினார்கள். தாருல் ஹுதா(விருந்தினராக வந்த வானவர்கள்) கூறினார்கள்: “மெய்யாகவே நாம் உம்முடைய இறைவனின் தூதர்களாகவே இருக்கின்றோம்; நிச்சயமாக அவர்கள் உம்மை வந்தடைய முடியாது; எனவே இரவின் ஒரு பகுதி இருக்கும்போதே உம் குடும்பத்துடன் (இவ்வூரை விட்டுச்) சென்றுவிடும்! உம்முடைய மனைவியைத் தவிர, உங்களில் யாரும் திரும்பியும் பார்க்க வேண்டாம். நிச்சயமாக அவர்களுக்கு வரக்கூடிய ஆபத்து அவளையும் பிடித்துக் கொள்ளும். (வேதனை வர) அவர்களுக்கு நிச்சயமாக வாக்களிக்கப்பட்ட நேரம் விடியற்காலையாகும்; விடியற்காலை சமீபித்து விடவில்லையா?” ஜான் டிரஸ்ட் நிறுவனம்(அதைச் செவியுற்ற விருந்தினர்களான மலக்குகள்,) “லூத்தே! நிச்சயமாக நாங்கள் உமதிரட்சகனின் தூதுவர்களாவோம், (இவர்கள் நிச்சயமாக உம்மை வந்தடையவே முடியாது, இரவின் ஒருபகுதியில் நீர் உம் குடும்பத்துடன் செல்வீராக! உங்களில் ஒருவரும் (அவர்களைத்) திரும்பியும் பார்க்க வேண்டாம், (உமக்கு மாறு செய்த) உம்முடைய மனைவியைத் தவிர, அவர்களைப் பீடிக்கக்கூடிய (அழிவான)து நிச்சயமாக அவளையும் பீடிக்கும், (அழிவு வர) நிச்சயமாக இவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நேரம் விடியற்காலையாகும், விடியற்காலை மிகச் சமீபமாக இல்லையா?” என்று கூறினார்கள். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)[The angels said], “O Lot, we are messengers of your Lord; they can never reach you. So set out with your family in the dark part of night, and none of you should look back, except your wife; she will suffer the same fate as the others. Their appointed time is the morning; is not the morning near?” Ruwwad Center |
11:82 فَلَمَّا جَاءَ أَمْرُنَا جَعَلْنَا عَالِيَهَا سَافِلَهَا وَأَمْطَرْنَا عَلَيْهَا حِجَارَةً مِنْ سِجِّيلٍ مَنْضُودٍ Falamma jaa amruna jaAAalna AAaliyaha safilaha waamtarna AAalayha hijaratan min sijjeelin mandoodin So when Our Commandment came, We turned (the towns of Sodom in Palestine) upside down, and rained on them stones of baked clay, in a well-arranged manner one after another; Hilali & KhanSo when Our command came, We made the highest part [of the city] its lowest and rained upon them stones of layered hard clay, [which were] Saheeh Internationalநம்முடைய கட்டளை(யின் நேரம்) வந்ததும் அவர்களுடைய ஊரை மேல் கீழாக கவிழ்த்து விட்டோம். அன்றி, (அதற்கு முன்னர்) அவர்கள் மீது சுடப்பட்ட செங்கற்களை (மழையைப் போல்) பொழியச் செய்தோம். தாருல் ஹுதாஎனவே (தண்டனை பற்றிய) நம் கட்டளை வந்துவிட்டபோது, நாம் (அவ்வூரின்) அதன் மேல்தட்டைக் கீழ்தட்டாக்கி விட்டோம்; இன்னும் அதன்மீது சுடப்பட்ட செங்கற்களை மழைபோல் பொழியவைத்தோம். ஜான் டிரஸ்ட் நிறுவனம்நம்முடைய கட்டளை வந்ததும், அவர்களுடைய ஊரின் மேல்பகுதியை அதன் கீழ்ப்பகுதியாக (தலை கீழாக) ஆக்கிவிட்டோம், அன்றியும், (அதற்கு முன்னர்) அதன் மீது சுடப்பட்ட செங்கற்களை (மழையாகப்) பொழியச் செய்தோம். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)When Our command came, We turned their cities upside down and rained down upon them clustered stones of baked clay, Ruwwad Center |
11:83 مُسَوَّمَةً عِنْدَ رَبِّكَ ۖ وَمَا هِيَ مِنَ الظَّالِمِينَ بِبَعِيدٍ Musawwamatan AAinda rabbika wama hiya mina alththalimeena bibaAAeedin Marked from your Lord; and they are not ever far from the Zâlimûn (polytheists, evildoers). Hilali & KhanMarked from your Lord. And Allah 's punishment is not from the wrongdoers [very] far. Saheeh International(எறியப்பட்ட செங்கல் ஒவ்வொன்றிலும்) உங்கள் இறைவனால் அடையாளமிடப்பட்டிருந்தது. (புரட்டப்பட்ட) அவ்வூர் இவ்வக்கிரமக்காரர்களுக்கு வெகு தூரமுமல்ல; (விரும்பினால் அதனை இவர்கள் நேரில் சென்று பார்த்துக் கொள்ளலாம்.) தாருல் ஹுதாஅக்கற்கள் உம் இறைவனிடமிருந்து அடையாளம் இடப்பட்டிருந்தன; (அவ்வூர்) இந்த அநியாயக்காரர்களுக்கு வெகு தொலைவிலும் இல்லை. ஜான் டிரஸ்ட் நிறுவனம்ஆகவே, (பொழியப்பட்ட செங்கல் ஒவ்வொன்றும்) உம் இரட்சகனால் அடையாளமிடப் பட்டதாக இருந்தது, (புரட்டப்பட்ட) அ(வ்வூரான)து இந்த அநியாயக்காரர்களுக்கு வெகு தூரமானதுமல்ல. மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)marked by your Lord; this is not far from the evildoers. Ruwwad Center |
11:84 وَإِلَىٰ مَدْيَنَ أَخَاهُمْ شُعَيْبًا ۚ قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ ۖ وَلَا تَنْقُصُوا الْمِكْيَالَ وَالْمِيزَانَ ۚ إِنِّي أَرَاكُمْ بِخَيْرٍ وَإِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ مُحِيطٍ Waila madyana akhahum shuAAayban qala ya qawmi oAAbudoo Allaha ma lakum min ilahin ghayruhu wala tanqusoo almikyala waalmeezana innee arakum bikhayrin wainnee akhafu AAalaykum AAathaba yawmin muheetin And to the Madyan (Midian) people (We sent) their brother Shu'aib. He said: "O my people! Worship Allâh, you have no other ilâh (god) but Him, and give not short measure or weight. I see you in prosperity and verily, I fear for you the torment of a Day encompassing. Hilali & KhanAnd to Madyan [We sent] their brother Shu'ayb. He said, "O my people, worship Allah; you have no deity other than Him. And do not decrease from the measure and the scale. Indeed, I see you in prosperity, but indeed, I fear for you the punishment of an all-encompassing Day. Saheeh International"மத்யன்" (என்னும் ஊர்) வாசிகளுக்கு அவர்களுடைய சகோதரர் ஷுஐபை (நம்முடைய தூதராக அனுப்பி வைத்தோம்.) அவர் (அவர்களை நோக்கி) "என்னுடைய மக்களே! அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள்; அவனைத் தவிர வேறு இறைவன் உங்களுக்கு இல்லை. அளவையும் நிறுவையையும் குறைக்காதீர்கள். நீங்கள் நல்ல நிலைமையில் இருப்பதையே நான் காண்கிறேன். (அவ்வாறிருக்க அளவையும் நிறுவையும் குறைத்து ஏன் மோசம் செய்கிறீர்கள்? அவ்வாறு செய்தால்) நிச்சயமாக உங்களைச் சூழ்ந்து கொள்ளக்கூடிய வேதனை ஒரு நாளில் உங்களை வந்தடையும் என்று நான் பயப்படுகிறேன். தாருல் ஹுதாமத்யனி (நகரத்தி)லுள்ளவர்களுக்கு, அவர்களுடைய சகோதரராகிய ஷுஐபை (நம் தூதராக) அனுப்பிவைத்தோம். அவர் (அவர்களிடம்: “என்) சமூகத்தவர்களே! அல்லாஹ் (ஒருவனையே) நீங்கள் வணங்குங்கள். அவனைத்தவிர உங்களுக்கு வேறு நாயனில்லை; அளவையிலும் நிறுவையிலும் நீங்கள் குறைவு செய்யாதீர்கள்; நீங்கள் நல்ல நிலைமையிலிருப்பதை (இப்பொழுது) நான் காண்கின்றேன்; ஆனால் (அளவிலும், நிறுவையிலும் நீங்கள் மோசம் செய்தால்) நிச்சயமாக உங்களைச் சூழ்ந்து கொள்ளக்கூடிய வேதனை ஒரு நாள் உங்களை வந்தடையும் என்று நான் பயப்படுகிறேன். ஜான் டிரஸ்ட் நிறுவனம்“மத்யன்” (என்னும் ஊர்வாசிகள்)பாலும் அவர்களுடைய சகோதரர் ஷுஜபை-(நம் தூதராக அனுப்பி வைத்தோம்,) அவர், “என்னுடைய சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள், உங்களுக்கு அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய வேறு) நாயன் இல்லை, அளவையும், நிறுவையையும் நீங்கள் குறைக்காதீர்கள், நீங்கள் நல்ல நிலைமையில் இருப்பதையே நான் காண்கிறேன், (அவ்வாறிருக்க “ஏன் மோசம் செய்கிறீர்கள்? அவ்வாறு செய்தால்,) நிச்சயமாக (உங்களைச்) சூழ்ந்து கொள்ளக்கூடிய ஒரு நாளின் வேதனையை உங்கள் மீது நான் பயப்படுகிறேன்” என்று கூறினார். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)And to the people of Midian We sent their brother Shu‘ayb. He said, “O my people, worship Allah; you have no god besides Him. Do not give short measure or weight. I see that you are in prosperity, but I fear for you the punishment of an encompassing Day. Ruwwad Center |
11:85 وَيَا قَوْمِ أَوْفُوا الْمِكْيَالَ وَالْمِيزَانَ بِالْقِسْطِ ۖ وَلَا تَبْخَسُوا النَّاسَ أَشْيَاءَهُمْ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ Waya qawmi awfoo almikyala waalmeezana bialqisti wala tabkhasoo alnnasa ashyaahum wala taAAthaw fee alardi mufsideena "And O my people! Give full measure and weight in justice and reduce not the things that are due to the people, and do not commit mischief in the land, causing corruption. Hilali & KhanAnd O my people, give full measure and weight in justice and do not deprive the people of their due and do not commit abuse on the earth, spreading corruption. Saheeh Internationalஅன்றி, என்னுடைய மக்களே! அளவையும் நிறுவையையும் நீதமாகவே முழுமைபடுத்தி வையுங்கள். மனிதர்களுக்கு(க் கொடுக்க வேண்டிய) அவர்களுடைய பொருள்களைக் குறைத்துவிடாதீர்கள். பூமியில் விஷமம் செய்து கொண்டும் அலையாதீர்கள். தாருல் ஹுதா“(என்) சமூகத்தவர்களே! அளவையிலும் நிறுவையிலும், நீதியைக் கொண்டு நீங்கள் பூர்த்தி செய்யுங்கள். (மக்களுக்குக் கொடுக்க வேண்டிய) அவர்களுடைய பொருட்களைக் குறைத்து விடாதீர்கள். பூமியில் விஷமம் செய்துகொண்டு (வரம்பு மீறி) அலையாதீர்கள். ஜான் டிரஸ்ட் நிறுவனம்“அன்றியும் என்னுடைய சமூகத்தாரே! அளவையும், நிறுவையையும் நீதமாகவே நிறைவு செய்யுங்கள், மனிதர்களுக்கு அவர்களுடைய பொருட்களைக் குறைத்தும் விடாதீர்கள், பூமியில் குழப்பம் செய்கிறவர்களாக வரம்பு மீறியும் அலையாதீர்கள்” மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)O my people, give full measure and weight with justice, and do not defraud people of their dues, nor go about spreading corruption on earth. Ruwwad Center |
11:86 بَقِيَّتُ اللَّهِ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ ۚ وَمَا أَنَا عَلَيْكُمْ بِحَفِيظٍ Baqiyyatu Allahi khayrun lakum in kuntum mumineena wama ana AAalaykum bihafeethin "That which is left by Allâh for you (after giving the rights of the people) is better for you, if you are believers. And I am not a guardian over you." Hilali & KhanWhat remains [lawful] from Allah is best for you, if you would be believers. But I am not a guardian over you." Saheeh Internationalநீங்கள் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் (உங்கள் தொழிலில் இலாபகரமாக) அல்லாஹ் மீதப்படுத்துவதே உங்களுக்கு மிக்க மேலானதாகும். நான் உங்களைக் கண்காணிப்பவனல்ல; (அல்லாஹ்தான் உங்களைக் கண்காணிப்பவன். ஆகவே, அவனுக்கு நீங்கள் பயந்து நடந்து கொள்ளுங்கள்)" என்றும் கூறினார். தாருல் ஹுதா“நீங்கள் உண்மை முஃமின்களாக இருந்தால், அல்லாஹ் மீதப்படுத்துவதே உங்களுக்கு நன்மையுடையதாகும்; நான் உங்களைக் கண்காணிப்பவனும் அல்லன்” என்று கூறினார். ஜான் டிரஸ்ட் நிறுவனம்“நீங்கள் விசுவாசங் கொண்டவர்களாக இருந்தால், (உங்கள் தொழிலில்) அல்லாஹ் மீதப்படுத்துவதே உங்களுக்கு மிக்க மேலானதாகும், (நீங்கள் நிறுக்கும் போதும், அளக்கும் போதும் குறைத்தால் அதன் தீய விளைவுகளிலிருந்து) நான் உங்களைப் பாதுகாப்பவனும் அல்ல” (என்றும் கூறினார்.) மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)What remains from the provision of Allah is far better, if you are [true] believers; I am not a keeper over you.” Ruwwad Center |
11:87 قَالُوا يَا شُعَيْبُ أَصَلَاتُكَ تَأْمُرُكَ أَنْ نَتْرُكَ مَا يَعْبُدُ آبَاؤُنَا أَوْ أَنْ نَفْعَلَ فِي أَمْوَالِنَا مَا نَشَاءُ ۖ إِنَّكَ لَأَنْتَ الْحَلِيمُ الرَّشِيدُ Qaloo ya shuAAaybu asalatuka tamuruka an natruka ma yaAAbudu abaona aw an nafAAala fee amwalina ma nashao innaka laanta alhaleemu alrrasheedu They said: "O Shu'aib! Does your Salât (prayer) command that we give up what our fathers used to worship, or that we give up doing what we like with our property? Verily, you are the forbearer, right-minded!" (They said this sarcastically). Hilali & KhanThey said, "O Shu'ayb, does your prayer command you that we should leave what our fathers worship or not do with our wealth what we please? Indeed, you are the forbearing, the discerning!" Saheeh Internationalஅதற்கவர்கள் "ஷுஐபே! நாங்கள் எங்கள் மூதாதைகள் வணங்கிய தெய்வங்களையும், நாங்கள் எங்கள் பொருள்களில் எங்கள் விருப்பப்படி நடந்து கொள்வதையும் விட்டுவிடும்படியாக (நீங்கள் எங்களுக்குக் கட்டளை இடும்படி) உங்களுடைய தொழுகையா உங்களைத் தூண்டுகிறது? நிச்சயமாக நீங்கள் மிக்க கண்ணியமுள்ள நேர்மையாளர்தாம்" என்று (பரிகாசமாகக்) கூறினார்கள். தாருல் ஹுதா(அதற்கு) அவர்கள் “ஷுஐபே! நாங்கள் எங்கள் மூதாதையர் வணங்கிய தெய்வங்களை விட்டு விடுமாறும், நாங்கள் எங்கள் பொருட்களை எங்கள் விருப்பப்படிச் செலவு செய்வதை விட்டுவிடுமாறும் உம்முடைய (மார்க்கத்) தொழுகையா உம்மை ஏவுகிறது? நிச்சயமாக நீர் கிருபையுள்ளவரும் நேர்மையானவரும் தான்” என்று (ஏளனமாகக்) கூறினார்கள். ஜான் டிரஸ்ட் நிறுவனம்அ(தற்க)வர்கள், “ஷுஜபே! எங்கள் மூதாதையர் வணங்கியவற்றையுமல்லாது எங்களுடைய செல்வங்களில் நாங்கள் நாடியவாறு செய்வதை நாங்கள் விட்டுவிடுமாறும் (நீர் எங்களுக்குக் கட்டளையிடும்படி) உம்முடைய தொழுகையா உம்மை ஏவுகிறது? “ நிச்சயமாக நீர் தான் மிக்க சகிப்புத் தன்மையுடையவர், (இன்னும்) நேர்மையாளர்” என்று (பரிகாசமாகக்) கூறினார்கள். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)They said, “O Shu‘ayb, does your prayer command you that we should forsake what our forefathers worshiped, or that we should give up dealing with our wealth as we please? Indeed, you are such a forbearing and right-minded man!” Ruwwad Center |
11:88 قَالَ يَا قَوْمِ أَرَأَيْتُمْ إِنْ كُنْتُ عَلَىٰ بَيِّنَةٍ مِنْ رَبِّي وَرَزَقَنِي مِنْهُ رِزْقًا حَسَنًا ۚ وَمَا أُرِيدُ أَنْ أُخَالِفَكُمْ إِلَىٰ مَا أَنْهَاكُمْ عَنْهُ ۚ إِنْ أُرِيدُ إِلَّا الْإِصْلَاحَ مَا اسْتَطَعْتُ ۚ وَمَا تَوْفِيقِي إِلَّا بِاللَّهِ ۚ عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهِ أُنِيبُ Qala ya qawmi araaytum in kuntu AAala bayyinatin min rabbee warazaqanee minhu rizqan hasanan wama oreedu an okhalifakum ila ma anhakum AAanhu in oreedu illa alislaha ma istataAAtu wama tawfeeqee illa biAllahi AAalayhi tawakkaltu wailayhi oneebu He said: "O my people! Tell me if I have a clear evidence from my Lord and He has given me a good sustenance from Himself (shall I corrupt it by mixing it with the unlawfully earned money). I wish not, in contradiction to you, to do that which I forbid you. I only desire reform to the best of my power. And my guidance cannot come except from Allâh, in Him I trust and to Him I repent. Hilali & KhanHe said, "O my people, have you considered: if I am upon clear evidence from my Lord and He has provided me with a good provision from Him...? And I do not intend to differ from you in that which I have forbidden you; I only intend reform as much as I am able. And my success is not but through Allah. Upon him I have relied, and to Him I return. Saheeh Internationalஅதற்கவர் "என்னுடைய மக்களே! என் இறைவன் தெளிவான அத்தாட்சிகளை எனக்களித்திருப்பதையும், அவன் எனக்கு வேண்டிய உணவை நல்லவிதமாக அளித்து வருவதையும் நீங்கள் அறிவீர்களா? (இந்நிலைமையில் மக்களை நான் மோசம் செய்யவேண்டிய அவசியமில்லை; ஆகவே) நான் (தீமையிலிருந்து) உங்களைத் தடுக்கும் விஷயத்தில் உங்களுக்கு மாறுசெய்ய விரும்பவில்லை. (நீங்கள் செய்யக்கூடாது என்று கூறும் காரியத்தை நானும் செய்யமாட்டேன்.) என்னால் இயன்றவரை (உங்களைச்) சீர்திருத்துவதைத் தவிர (வேறொன்றையும்) நான் விரும்பவில்லை. அல்லாஹ்வின் உதவியின்றி நான் (உங்களைச் சீர்திருத்தும் விஷயத்தில்) வெற்றியடைய முடியாது. அவனையே நான் நம்பியிருக்கிறேன்; அவனையே நான் நோக்கியும் நிற்கிறேன். தாருல் ஹுதா(அதற்கு) அவர் கூறினார்: “(என்னுடைய) சமூகத்தவர்களே! நான் என்னுடைய இறைவனின் தெளிவான அத்தாட்சி மீது இருப்பதையும், அவன் தன்னிடமிருந்து எனக்கு அழகான ஆகார வசதிகளை அளித்து இருப்பதையும் நீங்கள் அறிவீர்களா? (ஆகவே) நான் எதை விட்டு உங்களை விலக்குகின்றேனோ, (அதையே நானும் செய்து உங்கள் நலனுக்கு) மாறு செய்ய நான் விரும்பவில்லை. என்னால் இயன்ற வரையில் (உங்களின்) சீர் திருத்தத்தையேயன்றி வேறெதையும் நான் நாடவில்லை; மேலும், நான் உதவி பெறுவது அல்லாஹ்வைக் கொண்டல்லாது வேறில்லை, அவனிடமே பொறுப்புக் கொடுத்திருக்கிறேன்; இன்னும் அவன் பாலே மீளுகிறேன். ஜான் டிரஸ்ட் நிறுவனம்அ(தற்க)வர், என்னுடைய சமூகத்தாரே! என் இரட்சகனின் தெளிவான அத்தாட்சியின மீது நான் இருப்பதையும், அவன் தன்னிடமிருந்து எனக்கு அழகான உணவை வழங்கி இருப்பதையும் நீங்கள் கவனித்தீர்களா? (ஆகவே) நான் (தீமையிலிருந்து) எதைவிட்டும் உங்களைத் தடுக்கின்றேனோ அதன்படி (தீமையானவற்றைச் செய்துகொண்டு) உங்களுக்கு மாறு செய்வதையும் நான் நாடவில்லை, என்னால் இயன்ற மட்டும் (உங்களைச்) சீர்திருத்துவதைத் தவிர (வேறெதையும்) நான் நாடவில்லை, எனக்கு நல்லுதவி அல்லாஹ்வைக் கொண்டே தவிர இல்லை, (என் காரியங்களை ஒப்படைத்து முழுமையாக) அவன் மீதே நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன், அவன்பாலே நான் மீளுகிறேன் என்று கூறினார். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)He said, “O my people, what do you think, if I should have a clear proof from my Lord, and He has given me good provision from Himself. I do not want to go against what I am forbidding you. I only want to put things right to the best of my ability. My success only comes through Allah; in Him I put my trust and to Him I turn. Ruwwad Center |
11:89 وَيَا قَوْمِ لَا يَجْرِمَنَّكُمْ شِقَاقِي أَنْ يُصِيبَكُمْ مِثْلُ مَا أَصَابَ قَوْمَ نُوحٍ أَوْ قَوْمَ هُودٍ أَوْ قَوْمَ صَالِحٍ ۚ وَمَا قَوْمُ لُوطٍ مِنْكُمْ بِبَعِيدٍ Waya qawmi la yajrimannakum shiqaqee an yuseebakum mithlu ma asaba qawma noohin aw qawma hoodin aw qawma salihin wama qawmu lootin minkum bibaAAeedin "And O my people! Let not my Shiqâq cause you to suffer the fate similar to that of the people of Nûh (Noah) or of Hûd or of Sâlih (Saleh), and the people of Lût (Lot) are not far off from you! Hilali & KhanAnd O my people, let not [your] dissension from me cause you to be struck by that similar to what struck the people of Noah or the people of Hud or the people of Salih. And the people of Lot are not from you far away. Saheeh International"என்னுடைய மக்களே! உங்களுக்கு என் மீதுள்ள விரோதம் "நூஹ்" வுடைய மக்களையும் "ஹூத்" உடைய மக்களையும், "ஸாலிஹ்" உடைய மக்களையும் பிடித்தது போன்ற வேதனை உங்களையும் பிடித்துக் கொள்ளும்படி செய்துவிட வேண்டாம். "லூத்து"டைய மக்கள் (இருந்த இடமும் காலமும்) உங்களுக்குத் தூரமல்ல. தாருல் ஹுதா“என் சமூகத்தவர்களே! என்னுடன் நீங்கள் பகைமை கொண்டிருப்பது நூஹ்வுடைய சமூகத்தவரையும், ஹூதுடைய சமூகத்தவரையும், ஸாலிஹு சமூகத்தவரையும் பிடித்துக் கொண்டது போன்ற (வேதனை) உங்களையும் பிடித்துக் கொள்ளும்படிச் செய்து விட வேண்டாம் - லூத்துடைய சமூகத்தவர்கள் உங்களுக்குத் தொலைவில் இல்லை! ஜான் டிரஸ்ட் நிறுவனம்“என்னுடைய சமூகத்தாரே! என்னுடன் நீங்கள் பகைமை கொண்டிருப்பது நூஹ் உடைய சமூகத்தாரையும் அல்லது ஹுத் உடைய சமூகத்தாரையும் அல்லது ஸாலிஹ் உடைய சமூகத்தாரையும் பீடித்தது போன்ற (வேதனையான)து, உங்களையும் பீடித்துக் கொள்ளுமாறு உங்களைத் திண்ணமாக சுமத்தி விட வேண்டாம், இன்னும், லூத்துடைய சமூகத்தார் (வாழ்ந்த காலம்) உங்களுக்குத் தொலைவில் இல்லை. மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)O my people, do not let your opposition to me cause you to suffer a punishment similar to that of the people of Noah, the people of Hūd or the people of Sālih. And the people of Lot are not far away from you. Ruwwad Center |
11:90 وَاسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ ۚ إِنَّ رَبِّي رَحِيمٌ وَدُودٌ Waistaghfiroo rabbakum thumma tooboo ilayhi inna rabbee raheemun wadoodun "And ask forgiveness of your Lord and turn to Him in repentance. Verily, my Lord is Most Merciful, Most Loving." Hilali & KhanAnd ask forgiveness of your Lord and then repent to Him. Indeed, my Lord is Merciful and Affectionate." Saheeh Internationalஆகவே, உங்கள் இறைவனிடம் நீங்கள் மன்னிப்பைக் கோருங்கள். (உங்கள் பாவங்களை விட்டு மனம் வருந்தி) அவனிடமே நீங்கள் திரும்புங்கள். நிச்சயமாக என் இறைவன் மிக்க அன்புடையவனாகவும் (கிருபையுடன்) நேசிப்பவனாகவும் இருக்கின்றான்" என்று கூறினார். தாருல் ஹுதா“ஆகவே உங்களுடைய இறைவனிடம் நீங்கள் மன்னிப்புக் கோரி இன்னும் அவனிடமே தவ்பா செய்து (அவன் பக்கமே) மீளுங்கள்; நிச்சயமாக என்னுடைய இறைவன் மிக்க கிருபையுடையவனாகவும், பிரியமுடையவனாகவும் இருக்கின்றான்” (என்று கூறினார்). ஜான் டிரஸ்ட் நிறுவனம்“மேலும், உங்கள் இரட்சகனிடம் நீங்கள் மன்னிப்புக் கோருங்கள், பின்னர் (மனம் வருந்தி) அவன் பக்கமே (தவ்பாச் செய்து) நீங்கள் மீளுங்கள், நிச்சயமாக என் இரட்சகன் மிகக் கிருபையுடையவன், மிக்க நேசிப்பவன்” (என்று கூறினார்.) மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Seek forgiveness of your Lord and turn to Him in repentance. Indeed, My Lord is Most Merciful, Most Affectionate.” Ruwwad Center |
11:91 قَالُوا يَا شُعَيْبُ مَا نَفْقَهُ كَثِيرًا مِمَّا تَقُولُ وَإِنَّا لَنَرَاكَ فِينَا ضَعِيفًا ۖ وَلَوْلَا رَهْطُكَ لَرَجَمْنَاكَ ۖ وَمَا أَنْتَ عَلَيْنَا بِعَزِيزٍ Qaloo ya shuAAaybu ma nafqahu katheeran mimma taqoolu wainna lanaraka feena daAAeefan walawla rahtuka larajamnaka wama anta AAalayna biAAazeezin They said: "O Shu'aib! We do not understand much of what you say, and we see you weak (it is said that he was a blind man) among us. Were it not for your family, we should certainly have stoned you and you are not powerful against us." Hilali & KhanThey said, "O Shu'ayb, we do not understand much of what you say, and indeed, we consider you among us as weak. And if not for your family, we would have stoned you [to death]; and you are not to us one respected." Saheeh Internationalஅதற்கவர்கள் "ஷுஐபே! நீங்கள் கூறுபவற்றில் பெரும்பாலானவற்றை நாம் விளங்கிக்கொள்ள (முடிய)வில்லை. நிச்சயமாக நாம் உங்களை எங்களில் பலவீனமானவராகவே காண்கிறோம். உங்களுடைய இனத்தார் இல்லாவிடில் உங்களைக் கல் எறிந்தே கொன்றிருப்போம். நீங்கள் நம்மைவிட மதிப்புடைய வரல்ல" என்றார்கள். தாருல் ஹுதா(அதற்கு) அவர்கள் “ஷுஐபே! நீர் சொல்பவற்றில் பெரும்பாலானதை நாங்கள் புரிந்து கொள்ள முடியவில்லை; நிச்சயமாக உம்மை எங்களிடையே பலஹீனராகவே நாங்கள் காண்கிறோம்; உம் குலத்தார் இல்லை என்றால் உம்மைக் கல்லலெறிந்தே நாங்கள் (கொன்றிருப்போம்); நீர் எங்களில் மதிப்புக்குரியவரும் அல்லர்” என்று கூறினார்கள். ஜான் டிரஸ்ட் நிறுவனம்அ(தற்க)வர்கள், “ஷுஜபே! நீர் கூறுபவற்றில் அநேகவற்றை நாம் விளங்கிக் கொள்ள (முடிய)வில்லை, நிச்சயமாக நாம் உம்மை எங்களில் மிக்க பலவீனமானவராகவே காண்கிறோம், மேலும், உம்முடைய குடும்பத்தார் இல்லாவிடில் உம்மைக் கல்லெறிந்து (கொன்று) இருப்போம், மேலும், நீர் நம்முடைய மதிப்பிற்குரியவரல்லர்” என்று கூறினார்கள். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)They said, “O Shu‘ayb, we do not understand much of what you say, and we surely see you weak among us. Were it not for your clan, we would have surely stoned you, for you have no standing among us.” Ruwwad Center |
11:92 قَالَ يَا قَوْمِ أَرَهْطِي أَعَزُّ عَلَيْكُمْ مِنَ اللَّهِ وَاتَّخَذْتُمُوهُ وَرَاءَكُمْ ظِهْرِيًّا ۖ إِنَّ رَبِّي بِمَا تَعْمَلُونَ مُحِيطٌ Qala ya qawmi arahtee aAAazzu AAalaykum mina Allahi waittakhathtumoohu waraakum thihriyyan inna rabbee bima taAAmaloona muheetun He said: "O my people! Is then my family of more weight with you than Allâh? And you have cast Him away behind your backs. Verily, my Lord is surrounding all that you do. Hilali & KhanHe said, "O my people, is my family more respected for power by you than Allah? But you put Him behind your backs [in neglect]. Indeed, my Lord is encompassing of what you do. Saheeh Internationalஅதற்கவர் "என்னுடைய மக்களே! அல்லாஹ்வைவிட என்னுடைய இனத்தாரா உங்களுக்கு மிக்க மதிப்புடையவர்களாகி விட்டனர்? நீங்கள் இறைவனை உங்கள் முதுகுப்புறம் தள்ளி விட்டீர்கள். நிச்சயமாக அவன் உங்கள் செயலைச் சூழ்ந்துகொண்டு இருக்கிறான்" என்று கூறினார். தாருல் ஹுதா(அதற்கு) அவர் கூறினார்: “(என்) சமூகத்தவர்களே! அல்லாஹ்வைவிட உங்களுக்கு என்னுடைய குடும்பத்தார் அதிக மதிப்புடையவர்களாய் விட்டார்களா? நீங்கள் அவனை முதுகுக்குப் பின் தள்ளிப் (புறக்கணித்து) விட்டீர்கள். நிச்சயமாக என்னுடைய இறைவன் நீங்கள் செய்யும் செயல்களை (எல்லாப் பக்கங்களிலும்) சூழ்ந்து (அறிந்து) கொண்டுதானிருக்கின்றான். ஜான் டிரஸ்ட் நிறுவனம்அ(தற்க)வர் “என்னுடைய சமூகத்தாரே! அல்லாஹ்வைவிட என்னுடைய குடும்பத்தார் உங்களுக்கு மிக்க மதிப்புடையவர்களா? நீங்களோ (அலலாஹ்வாகிய) அவனை உங்களுடைய முதுகுக்குப் பின் தள்ளி(ப்புறக்கணித்து) விட்டீர்கள், நிச்சயமாக என் இரட்சகன் நீங்கள் செய்யக்கூடியவற்றை சூழ்ந்து அறிகிறவன்” என்று கூறினார். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)He said, “O my people, does my clan have a higher status to you than Allah? And you have abandoned Him behind your backs. Indeed, my Lord encompasses all what you do. Ruwwad Center |
11:93 وَيَا قَوْمِ اعْمَلُوا عَلَىٰ مَكَانَتِكُمْ إِنِّي عَامِلٌ ۖ سَوْفَ تَعْلَمُونَ مَنْ يَأْتِيهِ عَذَابٌ يُخْزِيهِ وَمَنْ هُوَ كَاذِبٌ ۖ وَارْتَقِبُوا إِنِّي مَعَكُمْ رَقِيبٌ Waya qawmi iAAmaloo AAala makanatikum innee AAamilun sawfa taAAlamoona man yateehi AAathabun yukhzeehi waman huwa kathibun wairtaqiboo inne maAAakum raqeebun "And O my people! Act according to your ability and way, and I am acting (on my way). You will come to know who it is on whom descends the torment that will cover him with ignominy, and who is a liar! And watch you! Verily, I too am watching with you." Hilali & KhanAnd O my people, work according to your position; indeed, I am working. You are going to know to whom will come a punishment that will disgrace him and who is a liar. So watch; indeed, I am with you a watcher, [awaiting the outcome]." Saheeh Internationalஅன்றி, "என்னுடைய மக்களே! நீங்கள் உங்கள் போக்கில் (உங்கள் காரியத்தைச்) செய்து கொண்டிருங்கள், நானும் (என் போக்கில் என் காரியத்தைச்) செய்து கொண்டிருக்கிறேன். இழிவுபடுத்தும் வேதனை யாரை வந்தடையும்? பொய் சொல்பவர் யார்? என்பதை நீங்கள் அதிசீக்கிரத்தில் அறிந்துகொள்வீர்கள். (அந்நேரத்தை) நீங்கள் எதிர்பார்த்திருங்கள்; நிச்சயமாக நானும் உங்களுடன் (அதனை) எதிர்பார்த்திருக்கிறேன்" (என்றும் கூறினார்). தாருல் ஹுதா“என் சமூகத்தவர்களே! நீங்கள் உங்களுக்கு இசைந்தவாறு செய்து கொண்டிருங்கள்! நானும் (எனக்கு இசைந்தவாறு) செய்து கொண்டிருக்கிறேன்; இழிவு தரும் வேதனை யாரை வந்தடையும் என்பதையும், பொய்யர் யார் என்பதையும் சீக்கிரமே நீங்கள் அறிந்து கொள்வீர்கள்; (அந்நேரத்தை) நீங்கள் எதிர் பார்த்துக் கொண்டிருங்கள்; நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன்” (என்றும் கூறினார்). ஜான் டிரஸ்ட் நிறுவனம்அன்றியும் என்னுடைய சமூகத்தாரே! நீங்கள் உங்கள் வழியில் (உங்கள் காரியத்தைச்) செய்து கொண்டிருங்கள், நானும் (என் வழியில் என் காரியத்தைச்) செய்து கொண்டிருக்கின்றேன், எவருக்கு இழிவு படுத்தும் வேதனை அவரை வந்தடையும்? (என்றும்) இன்னும், பொய்யர் யார்? என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வீர்கள், (அதனை) நீங்கள் எதிர்பார்த்தும் இருங்கள், நிச்சயமாக நான் உங்களுடன் எதிர்பார்த்திருக்கிறேன்” (என்று ஷுஜப் கூறினார்.) மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)O my people, do whatever you can; I will do mine. You will come to know who will receive a disgracing punishment, and who is a liar. Wait; I too am waiting with you.” Ruwwad Center |
11:94 وَلَمَّا جَاءَ أَمْرُنَا نَجَّيْنَا شُعَيْبًا وَالَّذِينَ آمَنُوا مَعَهُ بِرَحْمَةٍ مِنَّا وَأَخَذَتِ الَّذِينَ ظَلَمُوا الصَّيْحَةُ فَأَصْبَحُوا فِي دِيَارِهِمْ جَاثِمِينَ Walamma jaa amruna najjayna shuAAayban waallatheena amanoo maAAahu birahmatin minna waakhathati allatheena thalamoo alssayhatu faasbahoo fee diyarihim jathimeena And when Our Commandment came, We saved Shu'aib and those who believed with him by a mercy from Us. And As-Saihah (torment – awful cry) seized the wrong doers, and they lay (dead) prostrate in their homes. Hilali & KhanAnd when Our command came, We saved Shu'ayb and those who believed with him, by mercy from Us. And the shriek seized those who had wronged, and they became within their homes [corpses] fallen prone Saheeh International(பின்னர் அவர்களிடம்) நம்முடைய வேதனை வந்த பொழுது ஷுஐபையும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் நம் அருளைக் கொண்டு நாம் பாதுகாத்துக் கொண்டோம். அநியாயம் செய்தவர்களை விடியற்காலை நேரத்தில் இடிமுழக்கம் பிடித்துக் கொண்டது. அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறே (இறந்து) கிடந்தனர். தாருல் ஹுதா(தண்டனைக்குரிய) நம் கட்டளை வந்த போது, ஷுஐபையும் அவருடன் ஈமான் கொண்டவர்களையும் நமது ரஹ்மத்தை கொண்டு நாம் காப்பாற்றினோம்; அநியாயம் செய்தவர்களை (பேரிடியின்) முழக்கம் பிடித்துக் கொண்டது; அவர்கள் தம் வீடுகளில் இருந்தவாறே காலையில் (இறந்து) கிடந்தனர். ஜான் டிரஸ்ட் நிறுவனம்மேலும், (அவர்களிடம்) நம்முடைய கட்டளை வந்தபொழுது ஷுஜபையும் அவருடன் விசுவாசங் கொண்டிருந்தோரையும் நம்மிடமிருந்துள்ள அருளைக் கொண்டு நாம் (இரட்சித்துக்) காப்பாற்றினோம், அநியாயம் செய்தவர்களை பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது, அவர்கள் காலைப்பொழுதை தங்கள் வீடுகளில் முகம் குப்புற (இறந்து)கிடக்க அடைந்தனர். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)When Our command came, We saved Shu‘ayb and those who believed with him by Our mercy. But the huge blast seized the wrongdoers, so they fell dead in their homes, Ruwwad Center |
11:95 كَأَنْ لَمْ يَغْنَوْا فِيهَا ۗ أَلَا بُعْدًا لِمَدْيَنَ كَمَا بَعِدَتْ ثَمُودُ Kaan lam yaghnaw feeha ala buAAdan limadyana kama baAAidat thamoodu As if they had never lived there! So away with Madyan (Midian) as away with Thamûd! (All these nations were destroyed). Hilali & KhanAs if they had never prospered therein. Then, away with Madyan as Thamud was taken away. Saheeh Internationalஅதில் அவர்கள் ஒரு காலத்திலும் வசித்திருக்காதவர்களைப் போல் (யாதொரு அடையாளமுமின்றி) அழிந்துவிட்டனர். "ஸமூத்" (மக்)கள் மீது சாபம் ஏற்பட்டபடியே இந்த "மத்யன்" (மக்)கள் மீதும் சாபம் ஏற்பட்டுவிட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள். தாருல் ஹுதாஅவ்வீடுகளில் அவர்கள் (ஒரு காலத்திலும்) வாழ்ந்திராதவர்கள் போல் ஆகிவிட்டனர். தெரிந்து கொள்ளுங்கள்: ஸமூது (கூட்டத்தார் சாபக்கேட்டினால்) நாசமானது போன்று, மத்யனுக்கும் நாசம்தான்! ஜான் டிரஸ்ட் நிறுவனம்அதற்கு முன்னர் அதில் அவர்கள் வசித்திருக்காதவர்களைப் போல் - (அழிந்துவிட்டனர்.) ஸமூது நாசமானது போன்றே இந்த மத்யன் சமூகத்தார்க்கும் நாசம் ஏற்பட்டு விட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)as if they had never dwelt there. Behold, away with Midian just as it was with Thamūd! Ruwwad Center |
11:96 وَلَقَدْ أَرْسَلْنَا مُوسَىٰ بِآيَاتِنَا وَسُلْطَانٍ مُبِينٍ Walaqad arsalna moosa biayatina wasultanin mubeenin And indeed We sent Mûsâ (Moses) with Our Ayât (proofs, evidences, lessons, signs, etc.) and a manifest authority, Hilali & KhanAnd We did certainly send Moses with Our signs and a clear authority Saheeh Internationalஅன்றி, நம் வசனங்களுடனும் தெளிவான அத்தாட்சி யுடனும் மூஸாவை நம்முடைய தூதராக (ஃபிர்அவ்னிடமும் அவனுடைய மக்களிடமும்) நிச்சயமாக நாம் அனுப்பி வைத்தோம். தாருல் ஹுதாநிச்சயமாக நாம் மூஸாவை நம் வசனங்களுடன், தெளிவான அத்தாட்சியுடனும், அனுப்பிவைத்தோம். ஜான் டிரஸ்ட் நிறுவனம்இன்னும் நம் வசனங்களுடனும், தெளிவான சான்றுடனும் மூஸாவை நிச்சயமாக நாம் அனுப்பி வைத்தோம்- மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)And We sent Moses with Our signs and compelling proof Ruwwad Center |
11:97 إِلَىٰ فِرْعَوْنَ وَمَلَئِهِ فَاتَّبَعُوا أَمْرَ فِرْعَوْنَ ۖ وَمَا أَمْرُ فِرْعَوْنَ بِرَشِيدٍ Ila firAAawna wamalaihi faittabaAAoo amra firAAawna wama amru firAAawna birasheedin To Fir'aun (Pharaoh) and his chiefs, but they followed the command of Fir'aun (Pharaoh), and the command of Fir'aun (Pharaoh) was no right guide. Hilali & KhanTo Pharaoh and his establishment, but they followed the command of Pharaoh, and the command of Pharaoh was not [at all] discerning. Saheeh International(ஆகவே, அவர்) ஃபிர்அவ்னிடமும் அவனுடைய கூட்டத்தாரிடமும் (சென்றார்.) ஃபிர்அவ்னுடைய கட்டளையை (அவனுடைய கூட்டத்தினர்) பின்பற்றிக் கொண்டிருந்தனர். ஃபிர்அவ்னுடைய கட்டளையோ நேரான வழியில் இருக்கவில்லை. தாருல் ஹுதா(அவற்றுடன் அவர்) ஃபிர்அவ்னிடமும் அவனுடைய பிரமுகர்களிடமும் (வந்தார்). அப்போது ஃபிர்அவ்னுடைய கட்டளையை (அவனுடைய சமூகத்தார்) பின்பற்றி வந்தார்கள்; ஃபிர்அவ்னுடைய கட்டளையோ நேர்மையானதாக இருக்கவில்லை. ஜான் டிரஸ்ட் நிறுவனம்ஃபிர் அவ்னிடமும், அவனுடைய பிரதானிகளிடமும் (அவர் சென்றார்) ஃபிர் அவ்னுடைய கட்டளையை அவர்கள் பின்பற்றிக் கொண்டிருந்தனர், ஃபிர் அவ்னுடைய கட்டளையோ நேர்மையுடையதாக இருக்கவில்லை, மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)to Pharaoh and his courtiers, but they followed the command of Pharaoh, even though the command of Pharaoh was misguided. Ruwwad Center |
11:98 يَقْدُمُ قَوْمَهُ يَوْمَ الْقِيَامَةِ فَأَوْرَدَهُمُ النَّارَ ۖ وَبِئْسَ الْوِرْدُ الْمَوْرُودُ Yaqdumu qawmahu yawma alqiyamati faawradahumu alnnara wabisa alwirdu almawroodu He will go ahead of his people on the Day of Resurrection, and will lead them into the Fire, and evil indeed is the place to which they are led. Hilali & KhanHe will precede his people on the Day of Resurrection and lead them into the Fire; and wretched is the place to which they are led. Saheeh Internationalமறுமை நாளில் அவன் தன் மக்களுக்கு முன் (வழிகாட்டியாகச்) சென்று அவர்களை நரகத்தில் சேர்ப்பான். அவர்கள் செல்லுமிடம் மிகக் கெட்டது. தாருல் ஹுதாஅவன் (ஃபிர்அவ்ன்) மறுமை நாளில் தன் சமூகத்தாருக்கு முன் சென்று அவர்களை நரகத்தில் சேர்ப்பான்; (அவர்களைக்) கொண்டு போய்ச் சேர்க்குமிடம் மிகவும் கெட்டது. ஜான் டிரஸ்ட் நிறுவனம்மறுமை நாளில், அவன் தன் சமூகத்தார்க்கு முன் (வழிகாட்டியாகச்) சென்று அவர்களை (நரக) நெருப்பில் சேர்ப்பான் , அவர்கள் சென்று போய்ச்சேருமிடம் மிகக்கெட்டது. மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)He will be at the forefront of his people on the Day of Resurrection, leading them into the Fire. What a terrible place to be led to! Ruwwad Center |
11:99 وَأُتْبِعُوا فِي هَٰذِهِ لَعْنَةً وَيَوْمَ الْقِيَامَةِ ۚ بِئْسَ الرِّفْدُ الْمَرْفُودُ WaotbiAAoo fee hathihi laAAnatan wayawma alqiyamati bisa alrrifdu almarfoodu They were pursued by a curse in this (deceiving life of this world) and (so they will be pursued by a curse) on the Day of Resurrection. Evil indeed is the gift given [i.e., the curse (in this world) pursued by another curse (in the Hereafter)]. Hilali & KhanAnd they were followed in this [world] with a curse and on the Day of Resurrection. And wretched is the gift which is given. Saheeh Internationalஇம்மையிலும் மறுமையிலும் சாபம் அவர்களைப் பின்தொடர்கிறது. அவர்களுக்குக் கிடைக்கும் சன்மானம் மிகக் கெட்டது. தாருல் ஹுதாஇ(வ்வுலகத்)திலும், கியாம நாளிலும் அவர்கள் சாபத்தால் பின்தொடரப்பட்டனர்; அவர்களுக்கு கிடைக்கும் (இந்த) சன்மானம் மிகவும் கெட்டது. ஜான் டிரஸ்ட் நிறுவனம்(உலகமாகிய) இதிலும், மறுமைநாளிலும் சாபத்தால் அவர்கள் தொடரப் பட்டுள்ளனர், அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட இந்த சன்மானம் மிகக் கெட்டது. மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)They were pursued by a curse in this world as well as on the Day of Resurrection. What a terrible gift to receive! Ruwwad Center |
11:100 ذَٰلِكَ مِنْ أَنْبَاءِ الْقُرَىٰ نَقُصُّهُ عَلَيْكَ ۖ مِنْهَا قَائِمٌ وَحَصِيدٌ Thalika min anbai alqura naqussuhu AAalayka minha qaimun wahaseedun That is some of the news of the (population of) towns which We relate to you (O Muhammad [sal-Allâhu 'alayhi wa sallam]); of them, some are (still) standing, and some have been (already) reaped. Hilali & KhanThat is from the news of the cities, which We relate to you; of them, some are [still] standing and some are [as] a harvest [mowed down]. Saheeh International(மேலே கூறிய) இவை சில ஊர்(வாசி)களின் சரித்திரங் களாகும். இவற்றை நாம் உங்களுக்குக் கூறினோம். இவற்றில் சில (இப்போதும்) இருக்கின்றன; சில அழிந்துவிட்டன. தாருல் ஹுதா(நபியே! மேற்கூறப்பட்ட) இவை (சிற்) சில ஊர்களின் வரலாறுகள் ஆகும்; இவற்றை நாம் உமக்கு எடுத்துரைத்தோம். இவற்றில் சில (இப்போதும்) உள்ளன; சில (அறுவடை செய்யப்பட்டவை போல்) அழிபட்டும் போயின. ஜான் டிரஸ்ட் நிறுவனம்இவை, சில ஊர்(வாசி)களின் சம்பவங்களாகும், இவற்றை நாம் உமக்கு அறிவித்தோம், இவற்றில் சில நிலைத்து இருக்கின்றன, சில அறுவடை செய்யப்பட்டு (வேரறுக்கப்பட்டு)ம் விட்டன. மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)These are some of the stories of the towns that We relate to you; some are still standing, while others have been mowed down. Ruwwad Center |
11:101 وَمَا ظَلَمْنَاهُمْ وَلَٰكِنْ ظَلَمُوا أَنْفُسَهُمْ ۖ فَمَا أَغْنَتْ عَنْهُمْ آلِهَتُهُمُ الَّتِي يَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ مِنْ شَيْءٍ لَمَّا جَاءَ أَمْرُ رَبِّكَ ۖ وَمَا زَادُوهُمْ غَيْرَ تَتْبِيبٍ Wama thalamnahum walakin thalamoo anfusahum fama aghnat AAanhum alihatuhumu allatee yadAAoona min dooni Allahi min shayin lamma jaa amru rabbika wama zadoohum ghayra tatbeebin We wronged them not, but they wronged themselves. So their âliha (gods), other than Allâh, whom they invoked, profited them naught when there came the Command of your Lord, nor did they add aught to them but destruction. Hilali & KhanAnd We did not wrong them, but they wronged themselves. And they were not availed at all by their gods which they invoked other than Allah when there came the command of your Lord. And they did not increase them in other than ruin. Saheeh Internationalஇவர்களில் எவருக்குமே நாம் தீங்கிழைக்கவில்லை. எனினும், அவர்களே தங்களுக்குத் தீங்கிழைத்துக் கொண்டனர். உங்கள் இறைவனின் வேதனை வந்த சமயத்தில் அல்லாஹ்வை யன்றி அவர்கள் அழைத்துக் கொண்டிருந்த தெய்வங்களில் ஒன்றுமே அவர்களுக்கு யாதொரு பயனும் அளிக்கவில்லை; அன்றி நஷ்டத்தையே அவை அவர்களுக்கு அதிகப்படுத்தின! தாருல் ஹுதாஅவர்களுக்கு நாம் அநியாயம் செய்யவில்லை; எனினும் அவர்கள் தமக்குத்தாமே அநியாயம் செய்து கொண்டார்கள். உம் இறைவனிடமிருந்து கட்டளை வந்த போது, அல்லாஹ்வையன்றி அவர்கள் அழைத்துக் கொண்டிருந்த அவர்களின் தெய்வங்கள் எதுவும் அவர்களுக்கு எவ்விதப்பலனும் அளிக்கவில்லை; மேலும் அவை அவர்களுக்கு நஷ்டத்தை தவிர (வேறெதையும்) அதிகரிக்கச் செய்யவில்லை. ஜான் டிரஸ்ட் நிறுவனம்இன்னும், அவர்களுக்கு நாம் அநியாயம் செய்யவில்லை, எனினும் அவர்கள் தமக்குத்தாமே அநியாயம் செய்து கொண்டனர், எனவே, உமதிரட்சகனின் கட்டளை (அவர்களை அழித்துவிட) வந்த சமயத்தில், அல்லாஹ்வையன்றி அவர்கள் அழைத்து (வணங்கி)க் கொண்டிருந்த அவர்களின் வணக்கத்திற்குறியவர்கள் அவர்களுக்கு எவ்விதப் பயனளிக்கவில்லை, அன்றியும், நஷ்டத்தைத் தவிர (வேறு எதையும்) அவர்களுக்கு அவர்கள் அதிகப்படுத்தவில்லை. மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)We did not wrong them, rather they wronged themselves. Their gods whom they supplicated besides Allah were of no avail to them in the least when the command of your Lord came, and they only added to their destruction. Ruwwad Center |
11:102 وَكَذَٰلِكَ أَخْذُ رَبِّكَ إِذَا أَخَذَ الْقُرَىٰ وَهِيَ ظَالِمَةٌ ۚ إِنَّ أَخْذَهُ أَلِيمٌ شَدِيدٌ Wakathalika akhthu rabbika itha akhatha alqura wahiya thalimatun inna akhthahu aleemun shadeedun Such is the Seizure of your Lord when He seizes the (population of) towns while they are doing wrong. Verily, His Seizure is painful (and) severe. Hilali & KhanAnd thus is the seizure of your Lord when He seizes the cities while they are committing wrong. Indeed, His seizure is painful and severe. Saheeh Internationalஅநியாயம் செய்யும் ஊராரை அவர்களின் அநியாயத்தின் காரணமாக உங்கள் இறைவன் பிடிக்கக் கருதினால் இவ்வாறே அவன் பிடித்துக் கொள்கின்றான். ஏனென்றால், நிச்சயமாக அவனுடைய பிடி மிக்க கடினமானதாகவும் துன்புறுத்தக் கூடியதாகவும் இருக்கிறது. தாருல் ஹுதாஅநியாயம் செய்யும் ஊ(ரா)ரை (உம் இறைவன்) பிடிப்பானேயானால், இப்படித்தான் உம் இறைவனுடைய பிடி இருக்கும் - நிச்சயமாக அவனுடைய பிடி வேதனை மிக்கதாகவும் மிகக் கடினமானதாகவும் இருக்கும். ஜான் டிரஸ்ட் நிறுவனம்ஊர்களை-அவை அநியாயம் செய்து கொண்டிருக்க (வேதனையைக் கொண்டு) அவன் பிடித்தால் உம்முடைய இரட்சகனின் பிடி இப்படித்தான் இருக்கும், நிச்சயமாக அவனுடைய பிடியானது துன்புறுத்தக் கூடியது, மிக்க கடினமானது. மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Such is the seizing of your Lord when He seizes the towns that are given to wrongdoing; His seizing is surely painful and severe. Ruwwad Center |
11:103 إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً لِمَنْ خَافَ عَذَابَ الْآخِرَةِ ۚ ذَٰلِكَ يَوْمٌ مَجْمُوعٌ لَهُ النَّاسُ وَذَٰلِكَ يَوْمٌ مَشْهُودٌ Inna fee thalika laayatan liman khafa AAathaba alakhirati thalika yawmun majmooAAun lahu alnnasu wathalika yawmun mashhoodun Indeed in that (there) is a sure lesson for those who fear the torment of the Hereafter. That is a Day whereon mankind will be gathered together, and that is a Day when all (the dwellers of the heavens and the earth) will be present. Hilali & KhanIndeed in that is a sign for those who fear the punishment of the Hereafter. That is a Day for which the people will be collected, and that is a Day [which will be] witnessed. Saheeh Internationalமறுமையின் வேதனைக்குப் பயப்படக்கூடியவருக்கு நிச்சயமாக இதில் நல்ல ஓர் அத்தாட்சி இருக்கிறது. மனிதர்கள் அனைவரும் ஒன்று சேர்க்கப்படும் நாளாகும் அது. அன்றி, அவர்கள் அனைவரும் (இறைவனின் சந்நிதியில்) கொண்டு வரப்படக்கூடிய நாளுமாகும். தாருல் ஹுதாநிச்சயமாக மறுமை நாளின் வேதனையைப் பயப்படுகிறவர்களுக்கு இதில் (தக்க) அத்தாட்சி இருக்கிறது; அது மனிதர்கள் யாவரும் ஒன்று சேர்க்கப்படும் நாளாகும் - அன்றியும் அவர்கள் யாவரும் (இறைவன் முன்னிலையில்) கொண்டுவரப்படும் நாளாகும். ஜான் டிரஸ்ட் நிறுவனம்மறுமையின் வேதனையைப் பயப்படக் கூடியவருக்கு நிச்சயமாக இதில் அத்தாட்சி இருக்கிறது, அ(ம்மறுமையான)து ஒருநாள் - அதற்காக மனிதர்கள் ஒன்று சேர்க்கப் படுவார்கள், இன்னும், அது (அவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் சந்நிதியில்) முன்னிலைப்படுத்தப்படும் நாளாகும். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Indeed, there is a sign in this for those who fear the punishment of the Hereafter. That is a Day for which people will be gathered and a Day that will be witnessed. Ruwwad Center |
11:104 وَمَا نُؤَخِّرُهُ إِلَّا لِأَجَلٍ مَعْدُودٍ Wama nuakhkhiruhu illa liajalin maAAdoodin And We delay it only for a term (already) fixed. Hilali & KhanAnd We do not delay it except for a limited term. Saheeh Internationalஒரு சொற்ப தவனைக்கேயன்றி அதனை நாம் பிற்படுத்தி வைக்கவில்லை. தாருல் ஹுதாகுறிப்பிட்ட தவணைக்காகவே தவிர அதனை நாம் பிற்படுத்தவில்லை. ஜான் டிரஸ்ட் நிறுவனம்அதற்கென குறிப்பிடப்பட்ட தவணைக்காகவே தவிர, அதனை நாம் பிற்படுத்தி வைக்கவில்லை. மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)We only delay it until a fixed term. Ruwwad Center |
11:105 يَوْمَ يَأْتِ لَا تَكَلَّمُ نَفْسٌ إِلَّا بِإِذْنِهِ ۚ فَمِنْهُمْ شَقِيٌّ وَسَعِيدٌ Yawma yati la takallamu nafsun illa biithnihi faminhum shaqiyyun wasaAAeedin On the Day when it comes, no person shall speak except by His (Allâh's) Leave. Some among them will be wretched and (others) blessed. Hilali & KhanThe Day it comes no soul will speak except by His permission. And among them will be the wretched and the prosperous. Saheeh Internationalஅது வரும் நாளில் அவனுடைய அனுமதியின்றி எந்த ஒரு மனிதனும் (அவனுடன்) பேச முடியாது. அவர்களில் துர்ப்பாக்கியவான்களும் உள்ளனர்; நற்பாக்கியவான்களும் உள்ளனர். தாருல் ஹுதாஅந்நாள் வரும்போது அவனுடைய அனுமதியின்றி எவரும் பேச இயலாது; இன்னும், அவர்களில் துர்பாக்கிய சாலிகளும் இருப்பர்; நற்பாக்கிய சாலிகளும் இருப்பர். ஜான் டிரஸ்ட் நிறுவனம்அது வரும் நாளில் அவனுடைய அனுமதியின்றி, எந்த ஆத்மாவும் (அவனுடன்) பேச முடியாது, அவர்களில் துர்பாக்கியவானும், நற்பாக்கியவானுமிருப்பர். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)When that Day comes, no one will speak except by His permission. Some among them will be wretched and others blissful. Ruwwad Center |
11:106 فَأَمَّا الَّذِينَ شَقُوا فَفِي النَّارِ لَهُمْ فِيهَا زَفِيرٌ وَشَهِيقٌ Faamma allatheena shaqoo fafee alnnari lahum feeha zafeerun washaheequn As for those who are wretched, they will be in the Fire, sighing in a high and low tone. Hilali & KhanAs for those who were [destined to be] wretched, they will be in the Fire. For them therein is [violent] exhaling and inhaling. Saheeh Internationalதுர்ப்பாக்கியவான்கள் நரகத்தில் (வீழ்த்தப்படுவார்கள். வேதனையைத் தாங்க முடியாது) அதில் அவர்கள் பெரும் கூச்சலிட்டுக் கதறுவார்கள். தாருல் ஹுதாதுர்பாக்கிய சாலிகள் (நரக) நெருப்பில் (எறியப்பட்டு) இருப்பார்கள். அதில் அவர்களுக்கு பெருங்கூச்சலும், முணக்கமும்(தான்) இருக்கும். ஜான் டிரஸ்ட் நிறுவனம்எனவே, துர்ப்பாக்கியமடைந்து விட்டனரே அத்தகையோர் - நரகத்தில் (வீழ்த்தப்படுவார்கள், அப்பொழுது வேதனையத் தாங்க முடியாது) – அதில் அவர்களுக்கு (கழுதையின் சப்தத்தைப் போன்று தொடக்கத்தில்) பெரும் கூச்சலும் (இறதியில்) தேம்பியழுதலும் இருக்கும். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)As for those who are wretched, they will be in the Fire, wherein they will be moaning and gasping, Ruwwad Center |
11:107 خَالِدِينَ فِيهَا مَا دَامَتِ السَّمَاوَاتُ وَالْأَرْضُ إِلَّا مَا شَاءَ رَبُّكَ ۚ إِنَّ رَبَّكَ فَعَّالٌ لِمَا يُرِيدُ Khalideena feeha ma damati alssamawatu waalardu illa ma shaa rabbuka inna rabbaka faAAAAalun lima yureedu They will dwell therein for all the time that the heavens and the earth endure, except as your Lord wills. Verily, your Lord is the Doer of whatsoever He intends (or wills). Hilali & Khan[They will be] abiding therein as long as the heavens and the earth endure, except what your Lord should will. Indeed, your Lord is an effecter of what He intends. Saheeh Internationalஉங்கள் இறைவன் நாடினாலன்றி வானங்களும் பூமியும் நிலைத்திருக்கும் காலம் வரையில் அதில் அவர்கள் தங்கியும் விடுவார்கள். நிச்சயமாக உங்களது இறைவன், தான் விரும்பிய வற்றை (தடையின்றி) செய்து முடிப்பவன். தாருல் ஹுதாஉம் இறைவன் நாடினாலன்றி, வானங்களும் பூமியும் நீடிக்கும் காலமெல்லாம் அவர்கள் அ(ந்நரகத்)திலேயே நிலைபெற்று விடுவார்கள்; நிச்சயமாக உம் இறைவன் தான் நாடியதைச் செய்து முடிப்பவன். ஜான் டிரஸ்ட் நிறுவனம்உமதிரட்சகன் நாடினாலன்றி, வானங்கள், மற்றும் பூமி நிலைத்திருக்குங் காலமெல்லாம் அதில் அவர்கள் நிரந்தரமாக(த் தங்கி) இருப்பவர்கள், நிச்சயமாக உமதிரட்சகன் தான் நாடியதை(த் தடையின்றி)ச் செய்(து முடிப்)பவன். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)they will abide therein for as long as the heavens and earth exist, except what your Lord wills; your Lord does what He wills. Ruwwad Center |
11:108 وَأَمَّا الَّذِينَ سُعِدُوا فَفِي الْجَنَّةِ خَالِدِينَ فِيهَا مَا دَامَتِ السَّمَاوَاتُ وَالْأَرْضُ إِلَّا مَا شَاءَ رَبُّكَ ۖ عَطَاءً غَيْرَ مَجْذُوذٍ Waamma allatheena suAAidoo fafee aljannati khalideena feeha ma damati alssamawatu waalardu illa ma shaa rabbuka AAataan ghayra majthoothin And those who are blessed, they will be in Paradise, abiding therein for all the time that the heavens and the earth endure, except as your Lord wills: a gift without an end. Hilali & KhanAnd as for those who were [destined to be] prosperous, they will be in Paradise, abiding therein as long as the heavens and the earth endure, except what your Lord should will - a bestowal uninterrupted. Saheeh Internationalநற்பாக்கியவான்கள் சுவனபதியில் (நுழைந்து விடுவார்கள்.) உங்கள் இறைவன் நாடினாலன்றி வானங்களும் பூமியும் நிலைத்திருக்கும் காலம் வரையில் அதில்தான் அவர்கள் தங்கி விடுவார்கள். (அது) முடிவுறாத (என்றும் நிலையான) ஓர் அருட் கொடையாகும். தாருல் ஹுதாநற்பாக்கிய சாலிகளோ சுவனபதியில் இருப்பார்கள்; உம் இறைவன் நாடினாலன்றி, வானங்களும் பூமியும் நிலைத்திருக்கும் காலமெல்லாம் அவர்கள் அ(ச்சுவனத்)திலேயே நிலைபெற்று விடுவார்கள் - இது முடிவுறாத அருட் கொடையாகும். ஜான் டிரஸ்ட் நிறுவனம்இன்னும் நற்பாக்கியமடைந்து விட்டனரே! அத்தகையோர்-சுவனபதியில் (நுழைந்து விடுவார்கள்.) உமதிரட்சகன் நாடினாலன்றி, வானங்கள், மற்றும் பூமி நிலைத்திருக்குங் காலமெல்லாம் அதில்தான் அவர்கள், நிரந்தரமாக(த் தங்கி) இருப்பவர்கள். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)As for those who are destined for bliss, they will be in Paradise abiding therein as long as the heavens and earth exist, except what your Lord wills – an unceasing gift. Ruwwad Center |
11:109 فَلَا تَكُ فِي مِرْيَةٍ مِمَّا يَعْبُدُ هَٰؤُلَاءِ ۚ مَا يَعْبُدُونَ إِلَّا كَمَا يَعْبُدُ آبَاؤُهُمْ مِنْ قَبْلُ ۚ وَإِنَّا لَمُوَفُّوهُمْ نَصِيبَهُمْ غَيْرَ مَنْقُوصٍ Fala taku fee miryatin mimma yaAAbudu haolai ma yaAAbudoona illa kama yaAAbudu abaohum min qablu wainna lamuwaffoohum naseebahum ghayra manqoosin So be not in doubt (O Muhammad [sal-Allâhu 'alayhi wa sallam]) as to what these people (pagans and polytheists) worship. They worship nothing but what their fathers worshipped before (them). And verily, We shall repay them in full their portion without diminution. Hilali & KhanSo do not be in doubt, [O Muhammad], as to what these [polytheists] are worshipping. They worship not except as their fathers worshipped before. And indeed, We will give them their share undiminished. Saheeh International(நபியே! இணைவைத்து வணங்கும்) இவர்கள் வணங்குபவைகளைப் பற்றி (இவர்களிடம் ஏதும் ஆதாரம் இருக்குமோ என்று) நீங்கள் சந்தேகப்பட வேண்டாம். (யாதொரு ஆதாரமுமில்லை. எனினும்,) இதற்கு முன்னர் இவர்களுடைய மூதாதைகள் வணங்கிக் கொண்டிருந்தது போன்றே இவர்களும் (யாதொரு ஆதாரமுமின்றியே) வணங்குகின்றனர். இவர்களுடைய (வேதனையின்) பாகத்தை (இவர்களுடைய மூதாதைகளுக்குக் கொடுத்து இருந்தவாறே) இவர்களுக்கும் முழுமையாக யாதொரு குறைவுமின்றி நிச்சயமாக நாம் கொடுப்போம். தாருல் ஹுதா(நபியே!) இவர்கள் வணங்குபவை பற்றி நீர் சந்தேகப்பட வேண்டாம்; (இவர்களுக்கு) முன் இவர்களுடைய மூதாதையர் வணங்கி வந்த பிரகாரமே தான் இவர்களும் வணங்குகிறார்கள்; நிச்சயமாக (தண்டனைக்குரிய) இவர்களின் பங்கைக் குறைவின்றி, முழுமையாக நாம் இவர்களுக்குக் கொடுப்போம். ஜான் டிரஸ்ட் நிறுவனம்மேலும், (நபியே!) இவர்கள் வணங்குபவைகளைப் பற்றி நீர் சந்தேகத்திலிருக்க வேண்டாம், (இதற்கு) முன்னர் இவர்களுடைய மூதாதையர் (யாதொரு ஆதாரமுமின்றி) வணங்கிக் கொண்டிருந்ததைப் போன்றே தவிர இவர்களும் வணங்கவில்லை, இவர்களுடைய (வேதனையின்) பாகத்தை இவர்களுக்கும், குறைவின்றி நிச்சயமாக நாம் பூரணமாக கொடுக்கக் கூடியவர்கள். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Have no doubt about what they worship; they only worship what their forefathers worshiped. We will surely give them their full share undiminished. Ruwwad Center |
11:110 وَلَقَدْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ فَاخْتُلِفَ فِيهِ ۚ وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَبِّكَ لَقُضِيَ بَيْنَهُمْ ۚ وَإِنَّهُمْ لَفِي شَكٍّ مِنْهُ مُرِيبٍ Walaqad atayna moosa alkitaba faikhtulifa feehi walawla kalimatun sabaqat min rabbika laqudiya baynahum wainnahum lafee shakkin minhu mureebun Indeed, We gave the Book to Mûsâ (Moses), but differences arose therein, and had it not been for a Word that had gone forth before from your Lord, the case would have been judged between them, and indeed they are in grave doubt concerning it (this Qur'ân). Hilali & KhanAnd We had certainly given Moses the Scripture, but it came under disagreement. And if not for a word that preceded from your Lord, it would have been judged between them. And indeed they are, concerning the Qur'an, in disquieting doubt. Saheeh Internationalநிச்சயமாக நாம் மூஸாவுக்கு ஒரு வேதத்தைக் கொடுத்திருந்தோம். (இந்தக் குர்ஆனில் இவர்கள் மாறுபடுகின்ற வாறே) அதிலும் அவர்கள் மாறுபட்டார்கள். (அவர்கள் தண்டனையடையும் காலம் மறுமைதான் என்று) உங்கள் இறைவனின் வாக்கு முன்னரே ஏற்பட்டிராவிடில் (இம்மையிலேயே) இவர்களுடைய காரியம் முடிவு பெற்றிருக்கும். நிச்சயமாக (மக்காவாசிகளாகிய) இவர்களும் (இந்தக் குர்ஆனைப் பற்றிக் குழப்பமான) சந்தேகத்தில் இருக்கின்றனர். தாருல் ஹுதாநிச்சயமாக நாம் மூஸாவுக்கு வேதத்தை கொடுத்தோம். அதில் கருத்து வேறுபாடு கொள்ளப்பட்டது; உமது இறைவனிடமிருந்து முந்தி விட்ட வாக்கு இல்லை என்றால் இவர்கள் மத்தியிலே முடிவு செய்யப்பட்டிருக்கும். நிச்சயமாக இவர்கள் இதை (குர்ஆனை)ப் பற்றி சந்தேகத்திலேயே இருக்கின்றனர். ஜான் டிரஸ்ட் நிறுவனம்மேலும், நிச்சயமாக நாம் மூஸாவுக்கு ஒருவேதத்தைக் கொடுத்தோம், பின்னர், அதில் கருத்து வேறுபாடு கொள்ளப்பட்டது, (அவர்களின் காலம் மறுமை தான் என்று) உமதிரட்சகனின் வாக்கு முன்னரே ஏற்பட்டிராவிடில், இவர்களுக்கிடையில் (இம்மையிலேயே) தீர்ப்புச் செய்யப்பட்டிருக்கும், மேலும், நிச்சயமாக அவர்கள் குர் ஆனாகிய அதைப் பற்றி அவநம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய சந்தேகத்தில் இருக்கின்றனர். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)We gave Moses the Scripture, but dispute arose about it. If it had not been for a prior decree from your Lord, the matter would have been decided between them. They are indeed in a disquieting doubt about it. Ruwwad Center |
11:111 وَإِنَّ كُلًّا لَمَّا لَيُوَفِّيَنَّهُمْ رَبُّكَ أَعْمَالَهُمْ ۚ إِنَّهُ بِمَا يَعْمَلُونَ خَبِيرٌ Wainna kullan lamma layuwaffiyannahum rabbuka aAAmalahum innahu bima yaAAmaloona khabeerun And verily, to each of them your Lord will repay their works in full. Surely, He is All-Acquainted with what they do. Hilali & KhanAnd indeed, each [of the believers and disbelievers] - your Lord will fully compensate them for their deeds. Indeed, He is Acquainted with what they do. Saheeh Internationalநிச்சயமாக உங்கள் இறைவன் (அவர்கள் ஒவ்வொரு வருக்கும்) அவர்களுடைய செய்கைக்குரிய கூலியை முழுமையாகவே கொடுப்பான். நிச்சயமாக அவன் அவர்களுடைய செய்கைகளை நன்கறிந்தே இருக்கிறான். தாருல் ஹுதாநிச்சயமாக அவர்கள் ஒவ்வொருவருக்கும் உம்முடைய இறைவன் அவர்களுடைய செயல்களுக்கு உரிய கூலியை முழுமையாகக் கொடுப்பான் - நிச்சயமாக அவன் அவர்கள் செய்வதை அறிந்தவனாக இருக்கின்றான். ஜான் டிரஸ்ட் நிறுவனம்நிச்சயமாக உமதிரட்சகன், அவர்கள் ஒவ்வொருவருக்கும், அவர்களுடைய செயல்(களுக்குரிய கூலி)களை திட்டமாக அவர்களுக்கு பூரணமாகக் கொடுப்பான், நிச்சயமாக அவன் அவர்கள் செய்பவற்றை நன்குணர்பவன். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Your Lord will surely pay everyone in full for their deeds, for He is All-Aware of what they do. Ruwwad Center |
11:112 فَاسْتَقِمْ كَمَا أُمِرْتَ وَمَنْ تَابَ مَعَكَ وَلَا تَطْغَوْا ۚ إِنَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ Faistaqim kama omirta waman taba maAAaka wala tatghaw innahu bima taAAmaloona baseerun So stand (ask Allâh to make) you (Muhammad [sal-Allâhu 'alayhi wa sallam]) firm and straight (on the religion of Islâmic Monotheism) as you are commanded and those (your companions) who turn in repentance (to Allâh) with you, and transgress not (Allâh's legal limits). Verily, He is All-Seer of what you do. Hilali & KhanSo remain on a right course as you have been commanded, [you] and those who have turned back with you [to Allah], and do not transgress. Indeed, He is Seeing of what you do. Saheeh International(நபியே!) உங்களுக்கு ஏவப்பட்டது போன்றே நீங்களும், இணைவைத்து வணங்குவதிலிருந்து விலகி, உங்களுடன் இருப்பவரும் (நேரான வழியில்) உறுதியாக இருங்கள். (இதில்) சிறிதும் தவறி விடாதீர்கள். நிச்சயமாக அவன் உங்கள் செயலை உற்று நோக்கினவனாகவே இருக்கின்றான். தாருல் ஹுதாநீரும் உம்மோடு திருந்தியவரும் ஏவப்பட்டவாறே உறுதியாக இருப்பீர்களாக;வரம்பு மீறி விடாதீர்கள். நிச்சயமாக அவன் நீங்கள் செய்வதை கவனித்தவனாக இருக்கின்றான். ஜான் டிரஸ்ட் நிறுவனம்(நபியே) உமக்கேவப்பட்ட பிரகாரம் நீரும், உம்முடன் பச்சாதாபப் பட்டோரும் (நேரான வழியில்) உறுதியாக இருங்கள், (இதில்) நீங்கள் வரம்பு மீறியும் விடாதீர்கள், நிச்சயமாக அவன் நீங்கள் செய்பவற்றைப் பார்க்கிறவன். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)So stay on a straight path as you have been commanded, along with those who repented with you, and do not cross the limits. Indeed, He is All-Seeing of what you do. Ruwwad Center |
11:113 وَلَا تَرْكَنُوا إِلَى الَّذِينَ ظَلَمُوا فَتَمَسَّكُمُ النَّارُ وَمَا لَكُمْ مِنْ دُونِ اللَّهِ مِنْ أَوْلِيَاءَ ثُمَّ لَا تُنْصَرُونَ Wala tarkanoo ila allatheena thalamoo fatamassakumu alnnaru wama lakum min dooni Allahi min awliyaa thumma la tunsaroona And incline not toward those who do wrong, lest the Fire should touch you, and you have no protectors other than Allâh, nor you would then be helped. Hilali & KhanAnd do not incline toward those who do wrong, lest you be touched by the Fire, and you would not have other than Allah any protectors; then you would not be helped. Saheeh International(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் வரம்பு மீறுபவர்கள் பக்கம் (சிறிதும்) சாய்ந்து விடாதீர்கள். (அவ்வாறாயின்) நரக நெருப்பு உங்களையும் பிடித்துக் கொள்ளும். அதிலிருந்து உங்களை பாதுகாப்பவர் அல்லாஹ்வையன்றி (வேறு) யாருமில்லை; பின்னர், எவருடைய உதவியும் உங்களுக்குக் கிடைக்காது. தாருல் ஹுதாஇன்னும், யார் அநியாயம் செய்கிறார்களோ அவர்களின் பக்கம் நீங்கள் சாய்ந்து விடாதீர்கள் - அப்படிச் செய்தால் நரக நெருப்பு உங்களைப் பிடித்துக்கொள்ளும்; அல்லாஹ்வை அன்றி உங்களைக் காப்பாற்றுவோர் எவருமில்லை; மேலும் (நீங்கள் அவனுக்கெதிராக வேறெவராலும்) உதவி செய்யப்படவும் மாட்டீர்கள். ஜான் டிரஸ்ட் நிறுவனம்(விசுவாசிகளே!) இன்னும், அநியாயம் செய்து கொண்டிருப்போரின் பால் (சிறிதும்) நீங்கள் சாய்ந்துவிடாதீர்கள், அவ்வாறாயின், நரக நெருப்பு உங்களைத் தீண்டிவிடும், அல்லாஹ்வையன்றி எந்த உற்ற நேசர்களும் உங்களுக்கு இல்லை, பின்னர், (எவராலும்) நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Do not incline to the wrongdoers, or else the Fire will seize you. Then you will have no protectors besides Allah, nor will you be helped. Ruwwad Center |
11:114 وَأَقِمِ الصَّلَاةَ طَرَفَيِ النَّهَارِ وَزُلَفًا مِنَ اللَّيْلِ ۚ إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ ۚ ذَٰلِكَ ذِكْرَىٰ لِلذَّاكِرِينَ Waaqimi alssalata tarafayi alnnahari wazulafan mina allayli inna alhasanati yuthhibna alssayyiati thalika thikra lilththakireena And perform As-Salât (the prayers), at the two ends of the day and in some hours of the night [i.e. the five compulsory Salât (prayers)]. Verily, the good deeds remove the evil deeds (i.e. small sins). That is a reminder (an advice) for the mindful (those who accept advice). Hilali & KhanAnd establish prayer at the two ends of the day and at the approach of the night. Indeed, good deeds do away with misdeeds. That is a reminder for those who remember. Saheeh Internationalபகலில் இரு முனை(களாகிய காலை, மாலை)களிலும், இரவில் ஒரு பாகத்திலும், நீங்கள் (தவறாது) தொழுது வாருங்கள். நிச்சயமாக நன்மைகள் பாவங்களைப் போக்கிவிடும். இறைவனைத் துதி செய்து புகழ்பவர்களுக்கு இது ஒரு நினைவூட்டுதலாகும். தாருல் ஹுதாபகலின் (காலை, மாலை ஆகிய) இருமுனைகளிலும், இரவின் பகுதியிலும் நீங்கள் தொழுகையை நிலைப்படுத்துவீராக - நிச்சயமாக நற்செயல்கள், தீச்செயல்களைப் போக்கிவிடும் - (இறைவனை) நினைவு கூறுவோருக்கு இது நல்லுபதேசமாக இருக்கும். ஜான் டிரஸ்ட் நிறுவனம்மேலும், பகலின் இருமுனை(களாகிய காலை, மாலை)களிலும், இரவின் நேரங்களிலும் தொழுகையை நிறைவேற்றுவீராக! நிச்சயமாக நற்செயல்கள் தீய செயல்களைப் போக்கிவிடும், (அல்லாஹ்வை) நினைவு கூர்வோருக்கு இது ஒரு நல்லுபதேசமாகும். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Establish prayer at the two ends of the day and in some hours of the night. Indeed, good deeds wipe out evil deeds. This is a reminder for those who are mindful. Ruwwad Center |
11:115 وَاصْبِرْ فَإِنَّ اللَّهَ لَا يُضِيعُ أَجْرَ الْمُحْسِنِينَ Waisbir fainna Allaha la yudeeAAu ajra almuhsineena And be patient; verily, Allâh wastes not the reward of the good-doers. Hilali & KhanAnd be patient, for indeed, Allah does not allow to be lost the reward of those who do good. Saheeh International(நபியே! துன்பங்களைப்) பொறுமையுடன் சகித்திருங்கள். நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்தவர்களின் கூலியை வீணாக்கிவிட மாட்டான். தாருல் ஹுதா(நபியே! எந்நிலையிலும்) பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! நிச்சயமாக அல்லாஹ் அழகிய செயல்கள் செய்வோரின் கூலியை வீணாக்கி விடமாட்டான். ஜான் டிரஸ்ட் நிறுவனம்மேலும், (நபியே) பொறுமையுடன் இருப்பீராக! நிச்சயமாக அல்லாஹ் அழகானவற்றைச் செய்தோரின் கூலியை வீணாக்கிவிட மாட்டான். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)And be patient, for indeed Allah does not let the reward of those who do good to go to waste. Ruwwad Center |
11:116 فَلَوْلَا كَانَ مِنَ الْقُرُونِ مِنْ قَبْلِكُمْ أُولُو بَقِيَّةٍ يَنْهَوْنَ عَنِ الْفَسَادِ فِي الْأَرْضِ إِلَّا قَلِيلًا مِمَّنْ أَنْجَيْنَا مِنْهُمْ ۗ وَاتَّبَعَ الَّذِينَ ظَلَمُوا مَا أُتْرِفُوا فِيهِ وَكَانُوا مُجْرِمِينَ Falawla kana mina alqurooni min qablikum oloo baqiyyatin yanhawna AAani alfasadi fee alardi illa qaleelan mimman anjayna minhum waittabaAAa allatheena thalamoo ma otrifoo feehi wakanoo mujrimeena If only there had been among the generations before you persons having wisdom, prohibiting (others) from Al-Fasâd (disbelief, polytheism, and all kinds of crimes and sins) in the earth, except a few of those whom We saved from among them! Those who did wrong pursued the enjoyment of good things of (this worldly) life, and were Mujrimûn (criminals, disbelievers in Allâh, polytheists, sinners). Hilali & KhanSo why were there not among the generations before you those of enduring discrimination forbidding corruption on earth - except a few of those We saved from among them? But those who wronged pursued what luxury they were given therein, and they were criminals. Saheeh Internationalஉங்களுக்கு முன்னிருந்த சந்ததிகளில் (தாங்களும் நல்லொழுக்கத்தைக் கடைபிடித்து மற்ற மனிதர்களும்) பூமியில் விஷமம் செய்யாது தடுத்து வரக்கூடிய அறிவாளிகள் (அதிகமாக) இருந்திருக்க வேண்டாமா? அவர்கள் ஒரு சொற்ப எண்ணிக்கையில் இருந்தனர். நாம் அவர்களை பாதுகாத்துக் கொண்டோம். ஆனால், (பெரும்பாலான) அநியாயக்காரர்களோ தங்கள் ஆசாபாசங்களைப் பின்பற்றிக் குற்றம் செய்பவர்களாகவே இருந்தனர். தாருல் ஹுதாஉங்களுக்கு முன்னால் இருந்த சமுதாயங்களில் இந்த பூமியில் குழப்பங்களை தடுக்கக் கூடிய அறிவுடையோர் இருந்திருக்கக் கூடாதா? மிகக் குறைவாகவே தவிர (அவ்வாறு இருக்கவில்லை.) அவர்களை நாம் காப்பாற்றினோம். யார் அநியாயம் செய்தார்களோ அவர்கள் தங்கள் செல்வச் செருக்கையே பின்பற்றுகிறார்கள்; மேலும் குற்றவாளிகளாகவும் இருந்தார்கள். ஜான் டிரஸ்ட் நிறுவனம்உங்களுக்கு முன்னிருந்த சமூகத்தார்களில், பூமியில் குழப்பம் செய்யாது தடுத்து வரக்கூடிய அறிவாளிகள் இருந்திருக்கவேண்டாமா? அவர்களிலிருந்து நாம் யாரைக் காப்பாற்றினோமோ அந்த சொற்ப எண்ணிக்கையினர் தவிர (மற்ற அனைவரும் குழப்பவாதிகளாக இருந்தனர்.) ஆனால், அநியாயக்காரர்கள் எதில் சுகபோகமாக்கப் பட்டிருந்தார்களோ அதனையே பின்பற்றினார்கள், இன்னும் குற்றம் செய்பவர்களாகவும் இருந்தனர். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)If only there had been among the generations before you righteous people who would forbid others from spreading corruption in the land, except a few of them whom We saved. But the wrongdoers pursued their luxury which they were given therein, and they were wicked. Ruwwad Center |
11:117 وَمَا كَانَ رَبُّكَ لِيُهْلِكَ الْقُرَىٰ بِظُلْمٍ وَأَهْلُهَا مُصْلِحُونَ Wama kana rabbuka liyuhlika alqura bithulmin waahluha muslihoona And your Lord would never destroy the towns wrongfully, while their people were rightdoers. Hilali & KhanAnd your Lord would not have destroyed the cities unjustly while their people were reformers. Saheeh International(நபியே!) ஓர் ஊராரில் சிலர் (மற்றவர்களைப் பாவம் செய்யாது) சீர்திருத்திக் கொண்டிருக்கும் வரையில் (மற்ற) சிலரின் அநியாயத்திற்காக அவ்வூரார் அனைவரையும் உங்களது இறைவன் அழித்துவிட மாட்டான். தாருல் ஹுதா(நபியே!) ஓர் ஊராரை, அவ்வூரார் சீர்திருந்திக் கொண்டிருக்கும் நிலையில் - அநியாயமாக உம் இறைவன் அழிக்கமாட்டான். ஜான் டிரஸ்ட் நிறுவனம்இன்னும், (நபியே!) ஊர்களை-அவ்வூரார் சீர்திருத்துபவர்களாக இருக்கும் நிலையில், அநியாயமாக உமதிரட்சகன் அழித்து விடுபவனாக இல்லை. மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Your Lord would never destroy the towns unjustly while their people were acting righteously. Ruwwad Center |
11:118 وَلَوْ شَاءَ رَبُّكَ لَجَعَلَ النَّاسَ أُمَّةً وَاحِدَةً ۖ وَلَا يَزَالُونَ مُخْتَلِفِينَ Walaw shaa rabbuka lajaAAala alnnasa ommatan wahidatan wala yazaloona mukhtalifeena And if your Lord had so willed, He could surely have made mankind one Ummah [nation or community (following one religion, i.e., Islâm)], but they will not cease to disagree. Hilali & KhanAnd if your Lord had willed, He could have made mankind one community; but they will not cease to differ. Saheeh Internationalஉங்கள் இறைவன் எண்ணியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் ஒரே வகுப்பினராக ஆக்கியிருப்பான். (அவ்வாறு நாடவில்லை.) அவர்கள் தங்களுக்குள் மாறுபட்டுக் கொண்டே யிருப்பார்கள். தாருல் ஹுதாஉம் இறைவன் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருப்பான்; (அவன் அப்படி ஆக்கவில்லை.) எனவே, அவர்கள் எப்போதும் பேதப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். ஜான் டிரஸ்ட் நிறுவனம்மேலும், உமதிரட்சகன் நாடியிருந்தால் (அனைத்து) மனிதர்களை ஒரே சமூகத்தினராக ஆக்கியிருப்பான், இன்னும், அவர்கள் தங்களுக்குள் மாறுபட்டுக் கொண்டவர்களாவே இருப்பார்கள்- மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)If your Lord had willed, He could have made mankind a single community, but they will not cease to differ, Ruwwad Center |
11:119 إِلَّا مَنْ رَحِمَ رَبُّكَ ۚ وَلِذَٰلِكَ خَلَقَهُمْ ۗ وَتَمَّتْ كَلِمَةُ رَبِّكَ لَأَمْلَأَنَّ جَهَنَّمَ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ أَجْمَعِينَ Illa man rahima rabbuka walithalika khalaqahum watammat kalimatu rabbika laamlaanna jahannama mina aljinnati waalnnasi ajmaAAeena Except him on whom your Lord has bestowed His Mercy (the follower of truth – Islâmic Monotheism) and for that did He create them. And the Word of your Lord has been fulfilled (i.e. His Saying): "Surely, I shall fill Hell with jinn and men all together." Hilali & KhanExcept whom your Lord has given mercy, and for that He created them. But the word of your Lord is to be fulfilled that, "I will surely fill Hell with jinn and men all together." Saheeh Internationalஅவர்களில் உங்கள் இறைவன் அருள் புரிந்தவர்களைத் தவிர. இதற்காகவே (மாறுபடும்) அவர்களை படைத்தும் இருக்கிறான். (பாவம் செய்த) "ஜின்களைக் கொண்டும் மனிதர்களைக் கொண்டும் நிச்சயமாக நான் நரகத்தை நிரப்புவேன்" என்ற உங்கள் இறைவனின் வாக்கு நிறைவேறியே தீரும். தாருல் ஹுதா(அவர்களில்) உம்முடைய இறைவன் அருள் புரிந்தவர்களைத் தவிர; இதற்காகவே அவர்களைப் படைத்திருக்கிறான்; “நிச்சயமாக நான் ஜின்கள், மனிதர்கள் ஆகிய யாவரைக்கொண்டும் நரகத்தை நிரப்புவேன்” என்ற உம் இறைவனுடைய வாக்கும் பூர்த்தியாகிவிடும். ஜான் டிரஸ்ட் நிறுவனம்(அவர்களில்) உமதிரட்சகன் அருள் புரிந்தவர்களைத் தவிர, இதற்காகவே (மாறுபடும்) அவர்களைப் படைத்துமிருக்கிறான், “(பாவம் செய்த) ஜின்கள், மற்றும் மனிதர்கள் ஆகிய அனைவராலும் நிச்சயமாக நான் நரகத்தை நிரப்புவேன்” என்ற உமதிரட்சகன் வாக்கும் பூர்த்தியாகிவிட்டது. மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)except those whom Allah has given mercy, and for this He created them, and the word of your Lord will be fulfilled: “I will certainly fill Hell with jinn and humans all together.” Ruwwad Center |
11:120 وَكُلًّا نَقُصُّ عَلَيْكَ مِنْ أَنْبَاءِ الرُّسُلِ مَا نُثَبِّتُ بِهِ فُؤَادَكَ ۚ وَجَاءَكَ فِي هَٰذِهِ الْحَقُّ وَمَوْعِظَةٌ وَذِكْرَىٰ لِلْمُؤْمِنِينَ Wakullan naqussu AAalayka min anbai alrrusuli ma nuthabbitu bihi fuadaka wajaaka fee hathihi alhaqqu wamawAAithatun wathikra lilmumineena And all that We relate to you (O Muhammad [sal-Allâhu 'alayhi wa sallam]) of the news of the Messengers is in order that We may make strong and firm your heart thereby. And in this (chapter of the Qur'ân) has come to you the truth, as well as an admonition and a reminder for the believers. Hilali & KhanAnd each [story] We relate to you from the news of the messengers is that by which We make firm your heart. And there has come to you, in this, the truth and an instruction and a reminder for the believers. Saheeh Internationalஉங்கள் உள்ளத்தைத் திடப்படுத்துவதற்காகவே, நம் தூதர்களின் சரித்திரங்களிலிருந்து இவை அனைத்தையும் நாம் உங்களுக்குக் கூறினோம். இவற்றில் உங்களுக்கு உண்மையும், நல்லுபதேசமும் நம்பிக்கையாளர்களுக்கு நினைவூட்டுதலும் இருக்கின்றன. தாருல் ஹுதா(நம்) தூதர்களின் வரலாறுகளிலிருந்து (இவை) யாவற்றையும் உம் இதயத்தைத் திடப்படுத்துவதற்காக உமக்குக் கூறினோம். இவற்றில் உமக்குச் சத்தியமும் நல்லுபதேசமும், முஃமின்களுக்கு நினைவூட்டலும் வந்து இருக்கின்றன. ஜான் டிரஸ்ட் நிறுவனம்நம் தூதர்களின் செய்திகளிலிருந்து உம் இதயத்தை எதைக்கொண்டு நாம் உறுதிப்படுத்துவோமோ அவை ஒவ்வொன்றையும் நாம் உமக்குக் கூறினோம், உமக்கு இவற்றில் உண்மை(யானவை)யும் விசுவாசிகளுக்கு நல்லுபதேசமும் நினைவூட்டலும் வந்துவிட்டது. மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)We relate to you [O Prophet] the stories of the messengers to strengthen your heart. And there has come to you in this the truth, an admonition and a reminder to the believers. Ruwwad Center |
11:121 وَقُلْ لِلَّذِينَ لَا يُؤْمِنُونَ اعْمَلُوا عَلَىٰ مَكَانَتِكُمْ إِنَّا عَامِلُونَ Waqul lillatheena la yuminoona iAAmaloo AAala makanatikum inna AAamiloona And say to those who do not believe: "Act according to your ability and way, We are acting (in our way). Hilali & KhanAnd say to those who do not believe, "Work according to your position; indeed, we are working. Saheeh Internationalநம்பிக்கை கொள்ளாதவர்களை நோக்கி (நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் உங்கள் போக்கில் (உங்கள் காரியங்களைச்) செய்து கொண்டிருங்கள்; நிச்சயமாக நாங்களும் (எங்கள் போக்கில்) செய்து கொண்டிருக்கிறோம். தாருல் ஹுதாநம்பிக்கை கொள்ளாதவர்களிடம் (நபியே!) நீர் கூறுவீராக: “நீங்கள் உங்கள் போக்கில் நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக நாங்களும் (எங்கள் போக்கில்) செயல்படுகிறோம்.” ஜான் டிரஸ்ட் நிறுவனம்மேலும், விசுவாசங்கொள்ளாதவர்களுக்கு (நபியே!) நீர் கூறுவீராக! “நீங்கள் உங்கள் வழியில் (உங்கள் காரியங்களைச்) செய்து கொண்டிருங்கள், நிச்சயமாக நாங்களும் (எங்கள் வழியில் எங்கள் காரியங்களைச்) செய்து கொண்டிருக்கிறோம்” மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Say to those who do not believe, “Carry on in your ways; so will we do. Ruwwad Center |
11:122 وَانْتَظِرُوا إِنَّا مُنْتَظِرُونَ Waintathiroo inna muntathiroona "And you wait ! We (too) are waiting." Hilali & KhanAnd wait, indeed, we are waiting." Saheeh Internationalநீங்களும் (இதன் முடிவை) எதிர்பார்த்திருங்கள்; நிச்சயமாக நாங்களும் (அதை) எதிர்பார்த்திருக்கிறோம். தாருல் ஹுதாநீங்களும் (உங்கள் போக்கின் முடிவை) எதிர் பார்த்துக் கொண்டிருங்கள்; நாங்களும் (அவ்வாறே) எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.” ஜான் டிரஸ்ட் நிறுவனம்நீங்களும் எதிர்பார்த்துக் கொண்டிருங்கள், நிச்சயமாக நாங்களும் அதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்” மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)And wait; we too are waiting.” Ruwwad Center |
11:123 وَلِلَّهِ غَيْبُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَإِلَيْهِ يُرْجَعُ الْأَمْرُ كُلُّهُ فَاعْبُدْهُ وَتَوَكَّلْ عَلَيْهِ ۚ وَمَا رَبُّكَ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ Walillahi ghaybu alssamawati waalardi wailayhi yurjaAAu alamru kulluhu faoAAbudhu watawakkal AAalayhi wama rabbuka bighafilin AAamma taAAmaloona And to Allâh belongs the Ghaib (Unseen) of the heavens and the earth, and to Him return all affairs (for decision). So worship Him (O Muhammad [sal-Allâhu 'alayhi wa sallam]) and put your trust in Him. And your Lord is not unaware of what you (people) do. Hilali & KhanAnd to Allah belong the unseen [aspects] of the heavens and the earth and to Him will be returned the matter, all of it, so worship Him and rely upon Him. And your Lord is not unaware of that which you do. Saheeh Internationalவானங்களிலும் பூமியிலும் மறைந்திருப்பவை அனைத்தும் (அவற்றின் ஞானமும்) அல்லாஹ்வுக்குரியனவே! எல்லா காரியங்களும் அவனிடமே கொண்டு வரப்படும். ஆதலால், அவன் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள்; அவனையே நம்புங்கள். உங்கள் இறைவன் நீங்கள் செய்பவைகளைப் பற்றி பராமுகமாயில்லை." தாருல் ஹுதாவானங்களிலும், பூமியிலும் உள்ள மறைபொருள்கள் (இரகசியங்கள் பற்றிய ஞானம்) அல்லாஹ்வுக்கே உரியது; அவனிடமே எல்லாக் கருமங்களும் (முடிவு காண) மீளும். ஆகவே அவனையே வணங்குங்கள்; அவன் மீதே (பரஞ்சாட்டி) உறுதியான நம்பிக்கை வையுங்கள் - நீங்கள் செய்பவை குறித்து உம் இறைவன் பராமுகமாக இல்லை. ஜான் டிரஸ்ட் நிறுவனம்வானங்களில் மற்றும், பூமியில் மறைந்திருப்பவை (யாவும்) அல்லாஹ்வுக்கே உரியன, சகல காரியமும் அவனிடமே மீட்டப்படும், ஆதலால், அவ(ன் ஒருவ)னையே வணங்குவீராக! (சகல காரியங்களையும் ஒப்படைத்து முழுமையாக) அவன் மீதே நம்பிக்கையும் வைப்பீராக! உமதிரட்சகன், நீங்கள் செய்வவைகளைப் பற்றி பாராமுகமானவனாகவுமில்லை. மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)To Allah belongs the unseen of the heavens and earth, and to Him will return all matters. So worship Him and put your trust in Him, for your Lord is not unaware of what you do. Ruwwad Center |