بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ |
41:1 حم Hameem Hâ-Mîm.[These letters are one of the miracles of the Qur'ân, and none but Allâh (Alone) knows their meanings.] Hilali & KhanHa, Meem. Saheeh Internationalஹாமீம். தாருல் ஹுதாஹா, மீம். ஜான் டிரஸ்ட் நிறுவனம்ஹாமீம். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Hā Mīm. Ruwwad Center |
41:2 تَنْزِيلٌ مِنَ الرَّحْمَٰنِ الرَّحِيمِ Tanzeelun mina alrrahmani alrraheemi A revelation from (Allâh) the Most Gracious, the Most Merciful. Hilali & Khan[This is] a revelation from the Entirely Merciful, the Especially Merciful - Saheeh Internationalஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையவனுமா(கிய அல்லாஹ்வா)ல் இது இறக்கப்பட்டுள்ளது. தாருல் ஹுதாஅளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோனிடத்திலிருந்து இறக்கியருளப்பட்டது; ஜான் டிரஸ்ட் நிறுவனம்அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோனிடமிருந்து இறக்கப்பட்டுள்ளது. மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)A revelation from the Most Compassionate, the Most Merciful, Ruwwad Center |
41:3 كِتَابٌ فُصِّلَتْ آيَاتُهُ قُرْآنًا عَرَبِيًّا لِقَوْمٍ يَعْلَمُونَ Kitabun fussilat ayatuhu quranan AAarabiyyan liqawmin yaAAlamoona A Book whereof the Verses are explained in detail – a Qur'ân in Arabic for a people who know. Hilali & KhanA Book whose verses have been detailed, an Arabic Qur'an for a people who know, Saheeh Internationalஇது (குர்ஆன் என்னும்) வேதமாகும். அறிவுள்ள மக்களுக்காக இதன் வசனங்கள் அரபி மொழியில் விவரிக்கப் பட்டுள்ளன. தாருல் ஹுதாஅரபுமொழியில் அமைந்த இக் குர்ஆனுடைய வசனங்கள் அறிந்துணரும் மக்களுக்குத் தெளிவாக்கப்பட்டுள்ளது. ஜான் டிரஸ்ட் நிறுவனம்(இது) வேதமாகும், அறிந்து கொள்ளும் சமூகத்தாருக்காக அரபி (மொழி)க் குர் ஆனாக அதனுடைய வசனங்கள் தனித்தனியாக்கப்பட்டு (தெளிவு செய்யப்பட்டு)ள்ளன. மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)a Book whose verses are well explained; an Arabic Qur’an for people who understand, Ruwwad Center |
41:4 بَشِيرًا وَنَذِيرًا فَأَعْرَضَ أَكْثَرُهُمْ فَهُمْ لَا يَسْمَعُونَ Basheeran wanatheeran faaAArada aktharuhum fahum la yasmaAAoona Giving glad tidings [of Paradise to the one who believes in the Oneness of Allâh (i.e. Islâmic Monotheism) and fears Allâh much (abstains from all kinds of sins and evil deeds) and loves Allâh much (performing all kinds of good deeds which He has ordained)] and warning (of punishment in the Hell-fire to the one who disbelieves in the Oneness of Allâh), but most of them turn away, so they hear not. Hilali & KhanAs a giver of good tidings and a warner; but most of them turn away, so they do not hear. Saheeh International(நல்லோருக்கு இது) நற்செய்தி கூறுகின்றதாகவும் (பாவிகளுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றதாகவும் இருக்கின்றது. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதனைப்) புறக்கணித்து விட்டனர். ஆதலால், அவர்கள் இதற்கு செவி சாய்ப்பதில்லை. தாருல் ஹுதாநன்மாராயம் கூறுவதாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதாகவும் (அது இருக்கின்றது); ஆனால் அவர்களில் பெரும்பாலோர் புறக்கணிக்கின்றனர்; அவர்கள் செவியேற்பதும் இல்லை. ஜான் டிரஸ்ட் நிறுவனம்(விசுவாசிகளுக்கு இது) நன்மாராயம் கூறுகின்றதாகவும், (நிராகரித்தோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றதாகவும்_(இருக்கின்றது) பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் (இதனைப்) புறக்கணித்து விட்டனர்_(ஆகவே,) அவர்கள் (இதற்குச்) செவிசாய்க்கமாட்டார்கள். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)as a bearer of glad tidings and a warner; yet most of them turn away and they do not listen. Ruwwad Center |
41:5 وَقَالُوا قُلُوبُنَا فِي أَكِنَّةٍ مِمَّا تَدْعُونَا إِلَيْهِ وَفِي آذَانِنَا وَقْرٌ وَمِنْ بَيْنِنَا وَبَيْنِكَ حِجَابٌ فَاعْمَلْ إِنَّنَا عَامِلُونَ Waqaloo quloobuna fee akinnatin mimma tadAAoona ilayhi wafee athanina waqrun wamin baynina wabaynika hijabun faiAAmal innana AAamiloona And they say: "Our hearts are under coverings (screened) from that to which you invite us; and in our ears is deafness, and between us and you is a screen, so work you (on your way); verily, we are working (on our way)." Hilali & KhanAnd they say, "Our hearts are within coverings from that to which you invite us, and in our ears is deafness, and between us and you is a partition, so work; indeed, we are working." Saheeh Internationalஅன்றி, "நீங்கள் எதன் பக்கம் எங்களை அழைக்கின்றீர்களோ (அதனைக் கவனிக்க முடியாதபடி) எங்களுடைய உள்ளங்கள் திரையிடப்பட்டு விட்டன. (நீங்கள் கூறுவதைச் செவியுற முடியாதவாறு) எங்களுடைய செவிகள் செவிடுபட்டுவிட்டன. எங்களுக்கும் உங்களுக்கும் இடையில் திரையிட(ப்பட்டுத் தடுக்க)ப்பட்டு விட்டது. ஆகவே, நீங்கள் (விரும்பியதைச்) செய்து கொண்டிருங்கள். நாங்களும் (நாங்கள் விரும்பியதையே) செய்து கொண்டிருப்போம்" என்றும், (இதனை நிராகரிப்பவர்கள்) கூறுகின்றனர். தாருல் ஹுதாமேலும் அவர்கள்: “நீர் எதன் பக்கம் எங்களை அழைக்கின்றீரோ அதனை விட்டும் எங்கள் இருதயங்கள் மூடப்பட்டுள்ளன; எங்கள் காதுகளில் மந்தம் இருக்கின்றது; எங்களுக்கிடையிலும் உமக்கிடையிலும் திரை இருக்கிறது; ஆகவே, நீர் (உம் வேலையைச்) செய்து கொண்டிரும்; நிச்சயமாக நாங்கள் (எங்கள் வேலையைச்) செய்து கொண்டிருப்பவர்கள்” என்று கூறினர். ஜான் டிரஸ்ட் நிறுவனம்அன்றியும், “நீர் எதன்பால் எங்களை அழைக்கின்றீரோ அதைவிட்டும் எங்களுடைய இதயங்கள் திரைகளில் இருக்கின்றன, எங்களுடைய செவிகளில் அடைப்பும் இருக்கிறது, எங்களுக்கும், உமக்குமிடையே திரை இருக்கிறது, ஆகவே, நீர் (உம் காரியத்தைச்) செய்து கொண்டிருப்பீராக! நிச்சயமாக, நாங்களும் (எங்கள் காரியத்தைச்) செய்து கொண்டிருப்போம்” என்றும் (நிராகரிப்போர்) கூறுகின்றனர். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)They say, “Our hearts are covered against what you are calling us to; there is deafness in our ears, and there is a barrier between us and you. So carry on [in your way], we will carry on [in our way].” Ruwwad Center |
41:6 قُلْ إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ يُوحَىٰ إِلَيَّ أَنَّمَا إِلَٰهُكُمْ إِلَٰهٌ وَاحِدٌ فَاسْتَقِيمُوا إِلَيْهِ وَاسْتَغْفِرُوهُ ۗ وَوَيْلٌ لِلْمُشْرِكِينَ Qul innama ana basharun mithlukum yooha ilayya annama ilahukum ilahun wahidun faistaqeemoo ilayhi waistaghfiroohu wawaylun lilmushrikeena Say (O Muhammad [sal-Allâhu 'alayhi wa sallam]): "I am only a human being like you. It is revealed to me that your Ilâh (God) is One Ilâh (God – Allâh), therefore take Straight Path to Him (with true Faith – Islâmic Monotheism) and obedience to Him, and seek forgiveness of Him. And woe to Al-Mushrikûn (the polytheists, idolaters, disbelievers in the Oneness of Allâh). Hilali & KhanSay, O [Muhammad], "I am only a man like you to whom it has been revealed that your god is but one God; so take a straight course to Him and seek His forgiveness." And woe to those who associate others with Allah - Saheeh Internationalஆகவே, (நபியே!) நீங்கள் கூறுங்கள்: மெய்யாகவே நான் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான். ஆயினும், உங்களுடைய வணக்கத்திற்குரிய இறைவன் ஒரே ஒருவன்தான் என்று எனக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதலால், அவனையே நோக்கி நீங்கள் உறுதியாக நில்லுங்கள். அவனிடம் நீங்கள் மன்னிப்பையும் கேளுங்கள். அவனுக்கு இணைவைப்பவர்களுக்குக் கேடுதான். தாருல் ஹுதா“நான் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான் - ஆனால் எனக்கு வஹீ அறிவிக்கப்படுகிறது; நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒருவனேதான், ஆகவே அவனையே நோக்கி நீங்கள் உறுதியாக நிற்பீர்களாக; இன்னும், அவனிடம் நீங்கள் மன்னிப்புக் கேளுங்கள் - அன்றியும் (அவனுக்கு) இணை வைப்போருக்குக் கேடுதான்” என்று (நபியே!) நீர் கூறும். ஜான் டிரஸ்ட் நிறுவனம்(ஆகவே நபியே!) நீர் கூறுவீராக: “நான் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான், (ஆனால்) உங்களுடைய (வணக்கத்திற்குரிய) நாயன் ஒரே ஒரு நாயன்தான் என்று எனக்கு வஹீ அறிவிக்கப்படுகிறது, ஆதலால், (செயல்களைக் கலப்பற்றதாக்கி) அவனளவிலேயே நீங்கள் உறுதியாக நில்லுங்கள், அவனிடம் நீங்கள் பிழை பொறுக்கவும் தேடுங்கள், இன்னும், (அவனுக்கு) இணைவைத்துக் கொண்டிருப்போருக்குக் கேடுதான். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Say [O Prophet], “I am only a human being like yourselves; it has been revealed to me that your god is only One God, so seek the straight path to Him and seek His forgiveness, and woe to those who associate partners with Him, Ruwwad Center |
41:7 الَّذِينَ لَا يُؤْتُونَ الزَّكَاةَ وَهُمْ بِالْآخِرَةِ هُمْ كَافِرُونَ Allatheena la yutoona alzzakata wahum bialakhirati hum kafiroona Those who give not the Zakât (obligatory charity) and they are disbelievers in the Hereafter. Hilali & KhanThose who do not give zakah, and in the Hereafter they are disbelievers. Saheeh Internationalஎவர்கள் ஜகாத்து கொடுப்பதில்லையோ அவர்கள் மறுமையையும் நிராகரிப்பவர்கள்தாம். தாருல் ஹுதாஅவர்கள் தாம் ஜகாத்தைக் கொடுக்காதவர்கள்; மறுமையை நிராகரிப்பவர்களும் அவர்களே! ஜான் டிரஸ்ட் நிறுவனம்அவர்கள் எத்தகையோரென்றால், ஜகாத்தைக் கொடுக்கமாட்டார்கள், இன்னும், அவர்கள் தாம் மறுமையை நிராகரிக்கக்கூடியவர்கள். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)those who do not give zakah, and who disbelieve in the Hereafter. Ruwwad Center |
41:8 إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ Inna allatheena amanoo waAAamiloo alssalihati lahum ajrun ghayru mamnoonin Truly, those who believe (in the Oneness of Allâh, and in His Messenger Muhammad [sal-Allâhu 'alayhi wa sallam] – Islâmic Monotheism) and do righteous good deeds, for them will be an endless reward that will never stop (i.e. Paradise). Hilali & KhanIndeed, those who believe and do righteous deeds - for them is a reward uninterrupted. Saheeh International(ஆயினும்,) எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கின்றார்களோ (அவர்கள் மறுமையை நம்புபவர்கள்தாம்.) அவர்களுக்கு நிச்சயமாக (ஒரு காலத்திலும்) முடிவுறாத (நிலையான) கூலியுண்டு. தாருல் ஹுதா“நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு முடிவேயில்லாத (நிலையான) கூலியுண்டு.” ஜான் டிரஸ்ட் நிறுவனம்நிச்சயமாக, விசுவாசங்கொண்டு நற்கருமங்களும் செய்கின்றார்களே அத்தகையோர்_அவர்களுக்கு முடிவில்லாத (நிலையான) கூலியுண்டு. மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Those who believe and do righteous deeds, they will have a never-ending reward. Ruwwad Center |
41:9 قُلْ أَئِنَّكُمْ لَتَكْفُرُونَ بِالَّذِي خَلَقَ الْأَرْضَ فِي يَوْمَيْنِ وَتَجْعَلُونَ لَهُ أَنْدَادًا ۚ ذَٰلِكَ رَبُّ الْعَالَمِينَ Qul ainnakum latakfuroona biallathee khalaqa alarda fee yawmayni watajAAaloona lahu andadan thalika rabbu alAAalameena Say (O Muhammad [sal-Allâhu 'alayhi wa sallam]): "Do you verily disbelieve in Him Who created the earth in two Days? And you set up rivals (in worship) with Him? That is the Lord of the 'آlamîn (mankind, jinn and all that exists)." Hilali & KhanSay, "Do you indeed disbelieve in He who created the earth in two days and attribute to Him equals? That is the Lord of the worlds." Saheeh International(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "(இவ்வளவு பெரிய) பூமியை இரண்டே நாள்களில் படைத்தவனை நீங்கள் நிராகரித்துவிட்டு (மற்றவைகளை) அவனுக்கு இணையாக்குகின்றீர்களா? அவன்தான் உலகத்தார் அனைவரையும் படைத்த இறைவன்." தாருல் ஹுதா“பூமியை இரண்டே நாட்களில் படைத்தவனை நிராகரித்து அவனுக்கு இணைகளையும் நிச்சயமாக நீங்கள் தான் ஏற்படுத்துகிறீர்கள்? அவன் அகிலத்தாருக்கெல்லாம் இறைவன்” என்று (நபியே!) கூறுவீராக. ஜான் டிரஸ்ட் நிறுவனம்(நபியே!) நீர் கூறுவீராக: “பூமியை இரண்டே நாட்களில் படைத்தானே அத்தகையவனைத் திட்டமாக நீங்கள் நிராகரித்துவிட்டு, அவனுக்குச் சமமானவர்களையும் நீங்கள் ஆக்குகிறீர்களா? அவன் (தான்) அகிலத்தாரின் இரட்சகனாவான்.” மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Say, “Do you disbelieve in the One Who created the earth in two Days and you set up rivals to Him? Such is the Lord of the worlds. Ruwwad Center |
41:10 وَجَعَلَ فِيهَا رَوَاسِيَ مِنْ فَوْقِهَا وَبَارَكَ فِيهَا وَقَدَّرَ فِيهَا أَقْوَاتَهَا فِي أَرْبَعَةِ أَيَّامٍ سَوَاءً لِلسَّائِلِينَ WajaAAala feeha rawasiya min fawqiha wabaraka feeha waqaddara feeha aqwataha fee arbaAAati ayyamin sawaan lilssaileena He placed therein (i.e. the earth) firm mountains from above it, and He blessed it, and measured therein its sustenance (for its dwellers) in four Days equal (i.e. all these four 'days' were equal in the length of time) for all those who ask (about its creation). Hilali & KhanAnd He placed on the earth firmly set mountains over its surface, and He blessed it and determined therein its [creatures'] sustenance in four days without distinction - for [the information] of those who ask. Saheeh Internationalஅவனே பூமியின் மீது பெரும் மலைகளை அமைத்து, அதில் எல்லா விதமான பாக்கியங்களையும் புரிந்தான். அன்றி, அதில் (வசிப்பவர்களுக்கு) வேண்டிய உணவையும் நான்கு நாள்களில் நிர்ணயம் செய்தான். (அதுவும் நல்லவர்கள் தீயவர்கள் என்ற வித்தியாசமின்றி) கேட்பவர்கள் அனைவருக்கும் சமமாகக் கிடைக்குமாறும் செய்தான். தாருல் ஹுதாஅவனே, அதன் மேலிருந்து உயரமான மலைகளை அமைத்தான்; அதன் மீது (சகல விதமான) பாக்கியங்களையும் பொழிந்தான்; இன்னும், அதில் அவற்றின் உணவுகளை நான்கு நாட்களில் சீராக நிர்ணயித்தான்; (இதைப் பற்றி) கேட்கக் கூடியவர்களுக்கு (இதுவே விளக்கமாகும்). ஜான் டிரஸ்ட் நிறுவனம்அவனே அதில்_ அதன் மேல் (பகுதியில்) இருந்து உறுதியான மலைகளை அமைத்தான், அதில் அபிவிருத்தியை நல்கினான், மேலும், அதில் அதன் உணவுகளை நான்கு நாட்களில் நிர்ணயம் செய்தான், (இவ்வாறு செய்ததைப் பற்றிக்) கேட்போருக்கு (பதில்) நிறைவாகி விட்டது. மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)He placed on it firm mountains standing high above it, and showered His blessings upon it, and measured its sustenance totaling exactly four Days, for all who ask. Ruwwad Center |
41:11 ثُمَّ اسْتَوَىٰ إِلَى السَّمَاءِ وَهِيَ دُخَانٌ فَقَالَ لَهَا وَلِلْأَرْضِ ائْتِيَا طَوْعًا أَوْ كَرْهًا قَالَتَا أَتَيْنَا طَائِعِينَ Thumma istawa ila alssamai wahiya dukhanun faqala laha walilardi itiya tawAAan aw karhan qalata atayna taiAAeena Then He rose over (Istawâ) towards the heaven when it was smoke, and said to it and to the earth: "Come both of you willingly or unwillingly." They both said: "We come willingly." Hilali & KhanThen He directed Himself to the heaven while it was smoke and said to it and to the earth, "Come [into being], willingly or by compulsion." They said, "We have come willingly." Saheeh Internationalபின்னர், வானத்தைப் படைக்கக் கருதினான். அது ஒருவகை புகைதான். அதனையும் பூமியையும் அவன் நோக்கி "நீங்கள் விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி (வழிபட்டு) என்னிடம் வாருங்கள்" என்று கூறினான். அதற்கு அவைகள், "இதோ நாங்கள் விருப்பத்துடனேயே வந்தோம்" என்று கூறின. தாருல் ஹுதாபிறகு அவன் வானம் புகையாக இருந்தபோது (அதைப்) படைக்க நாடினான்; ஆகவே அவன் அதற்கும் பூமிக்கும்: “நீங்கள் விருப்புடனாயினும் அல்லது வெறுப்பிருப்பினும் வாருங்கள்” என்று கூறினான். (அதற்கு) அவையிரண்டும் “நாங்கள் விருப்புடனேயே வருகின்றோம்” என்று கூறின. ஜான் டிரஸ்ட் நிறுவனம்பின்னர் வானத்தை_அது புகையாக இருக்கும் நிலையில் அவன் நாடினான், பின்னர், அவன் அதற்கும், பூமிக்கும் “நீங்களிருவரும் கீழ்ப்படிந்தோ, அல்லது நிர்ப்பந்தமாகவோ வாருங்கள்” என்று கூறினான், (அதற்கு) அவை இரண்டும் “நாங்கள் கீழ்ப்படிந்தவர்களாகவே வந்தோம்” என்று கூறின. மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Then He turned to the heaven when it was all smoke, and said to it and to the earth, ‘Come into being, willingly or unwillingly.’ They both said, ‘We come willingly.’ Ruwwad Center |
41:12 فَقَضَاهُنَّ سَبْعَ سَمَاوَاتٍ فِي يَوْمَيْنِ وَأَوْحَىٰ فِي كُلِّ سَمَاءٍ أَمْرَهَا ۚ وَزَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَحِفْظًا ۚ ذَٰلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ Faqadahunna sabAAa samawatin fee yawmayni waawha fee kulli samain amraha wazayyanna alssamaa alddunya bimasabeeha wahifthan thalika taqdeeru alAAazeezi alAAaleemi Then He completed and finished their creation (as) seven heavens in two Days and He made in each heaven its affair. And We adorned the nearest (lowest) heaven with lamps (stars) to be an adornment as well as to guard (from the devils by using them as missiles against the devils). Such is the Decree of the All-Mighty, the All-Knower. Hilali & KhanAnd He completed them as seven heavens within two days and inspired in each heaven its command. And We adorned the nearest heaven with lamps and as protection. That is the determination of the Exalted in Might, the Knowing. Saheeh Internationalபின்னர் (அந்த புகையை) இரண்டு நாள்களில் ஏழு வானங்களாக முடிவு செய்து திட்டமிட்டு, ஒவ்வொரு வானத்திலும் நடைபெற வேண்டிய விஷயங்களை (அவைகளுக்கு) அறிவித்தான். பின்னர், (இவ்வளவும் செய்த) நாமே (பூமிக்குச்) சமீபமான வானத்தை (நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்காரமாக்கி வைத்து, (அதனை அவைகளுக்குப்) பாதுகாப்பாகவும் ஆக்கினோம். இவையெல்லாம், (அனைவரையும்) மிகைத்தவனும் (அனைத் தையும்) அறிந்தவனுடைய ஏற்பாடுதான். தாருல் ஹுதாஆகவே, இரண்டு நாட்களில் அவற்றை ஏழு வானங்களாக அவன் ஏற்படுத்தினான்; ஒவ்வொரு வானத்திற்கும் அதற்குரிய கடமை இன்னதென அறிவித்தான்; இன்னும், உலகத்திற்கு சமீபமான வானத்தை நாம் விளக்குகளைக் கொண்டு அலங்கரித்தோம்; இன்னும் அதனைப் பாதுகாப்பாகவும் ஆக்கினோம்; இது யாவரையும் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாகிய (இறை)வனுடைய ஏற்பாடேயாகும். ஜான் டிரஸ்ட் நிறுவனம்பின்னர், அவன் அவைகளை இரண்டு நாட்களில் ஏழு வானங்களாக சமப்படுத்திமுடித்தான், ஒவ்வொரு வானத்திலும் அதனுடைய காரியத்தை அறிவித்தான், மேலும், நாமே தாழ்வாக உள்ள (முதல்) வானத்தை (நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்கரித்தோம், (அதனை ஷைத்தான்களை விட்டும்) பாதுகாக்கப்பட்டதாகவும் (ஆக்கினோம்), இது (யாவரையும்) மிகைத்தோன், (யாவையும்) நன்கு அறிந்தோனின் ஏற்பாடாகும். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)He then formed them into seven heavens in two Days and assigned to each heaven its mandate. And We adorned the lowest heaven with lamps [stars] which also serves as a protection. That is the design of the All-Mighty, the All-Knowing.” Ruwwad Center |
41:13 فَإِنْ أَعْرَضُوا فَقُلْ أَنْذَرْتُكُمْ صَاعِقَةً مِثْلَ صَاعِقَةِ عَادٍ وَثَمُودَ Fain aAAradoo fuqul anthartukum saAAiqatan mithla saAAiqati AAadin wathamooda But if they turn away, then say (O Muhammad [sal-Allâhu 'alayhi wa sallam]): "I have warned you of a Sâ'iqah (a destructive awful cry, torment, hit, thunderbolt) like the Sâ'iqah which overtook 'آd and Thamûd (people)." Hilali & KhanBut if they turn away, then say, "I have warned you of a thunderbolt like the thunderbolt [that struck] 'Aad and Thamud. Saheeh International(ஆகவே, நபியே! இவ்வளவு தூரம் அறிவித்த) பின்னும் அவர்கள் (நம்பிக்கை கொள்ளாது) புறக்கணித்தால், நீங்கள் கூறுங்கள்: "ஆது, ஸமூது என்னும் மக்களுக்கு ஏற்பட்ட இடி முழக்கம் போன்றதொரு இடி முழக்கத்தையே நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றேன்." தாருல் ஹுதாஆகவே, அவர்கள் புறக்கணித்து விடுவார்களாயின், “ஆது, ஸமூது (கூட்டத்தாரு)க்கு உண்டான (இடி முழக்கம், புயல்) போன்ற வேதனையைப் போல் (இடி முழக்கம், புயல்) கொண்ட வேதனையை நான் உங்களுக்கு அச்சுறுத்துகின்றேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!. ஜான் டிரஸ்ட் நிறுவனம்ஆகவே, (நபியே!) அவர்கள் (பின்னும் விசுவாசங்கொள்ளாது) புறக்கணித்து விடுவார்களாயின் அப்போது, “ஆது, ஸமூதுடைய (சமூகத்தார்க்கு ஏற்பட்ட) இடி முழக்கம் போன்றதோர் இடி முழக்கத்தையே, நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கின்றேன்” என்று நீர் கூறுவீராக! மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)But if they turn away, then say, “I warn you of a blast like the one that befell ‘Ād and Thamūd, Ruwwad Center |
41:14 إِذْ جَاءَتْهُمُ الرُّسُلُ مِنْ بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ أَلَّا تَعْبُدُوا إِلَّا اللَّهَ ۖ قَالُوا لَوْ شَاءَ رَبُّنَا لَأَنْزَلَ مَلَائِكَةً فَإِنَّا بِمَا أُرْسِلْتُمْ بِهِ كَافِرُونَ Ith jaathumu alrrusulu min bayni aydeehim wamin khalfihim alla taAAbudoo illa Allaha qaloo law shaa rabbuna laanzala malaikatan fainna bima orsiltum bihi kafiroona When the Messengers came to them, from before them and behind them (saying): "Worship none but Allâh," they said: "If our Lord had so willed, He would surely have sent down angels. So, indeed we disbelieve in that with which you have been sent." Hilali & Khan[That occurred] when the messengers had come to them before them and after them, [saying], "Worship not except Allah." They said, "If our Lord had willed, He would have sent down the angels, so indeed we, in that with which you have been sent, are disbelievers." Saheeh Internationalஅவர்களிடத்தில் நம்முடைய தூதர்களில் பலர் அவர்களுக்கு முன்னும் பின்னுமாக வந்து, (அவர்களை நோக்கி) "அல்லாஹ்வைத் தவிர மற்ற எதனையும் வணங்காதீர்கள்" என்று கூறியதற்கு அவர்கள், "எங்கள் இறைவன் (மெய்யாகவே எங்களுக்கு யாதொரு தூதரை அனுப்ப) விரும்பியிருந்தால், மலக்குகளையே (தூதராக) இறக்கி வைத்திருப்பான். ஆகவே, நிச்சயமாக நாங்கள், நீங்கள் கொண்டு வந்த (தூ)தை நிராகரிக்கின்றோம்" என்று கூறினார்கள். தாருல் ஹுதா“அல்லாஹ்வையன்றி (வேறு) எதனையும் நீங்கள் வணங்காதீர்கள்” என்று அவர்களுக்கு முன்னாலும், பின்னாலும் அவர்களிடம் தூதர்கள் வந்த போது: “எங்கள் இறைவன் நாடியிருந்தால் அவன் மலக்குகளை(த் தூதர்களாக) இறக்கியிருப்பான். ஆகவேதான், நீங்கள் எதனைக்கொண்டு அனுப்பப்பட்டிருக்கிறீர்களோ அதனை நாங்கள் நிச்சயமாக நிராகரிக்கிறோம்” என்று சொன்னார்கள். ஜான் டிரஸ்ட் நிறுவனம்“அல்லாஹ்வைத் தவிர (மற்ற) எதனையும் நீங்கள் வணங்காதீர்கள்” என்று (கூறி நம்முடைய) தூதர்கள் அவர்களுக்கு முன்பாகவும், அவர்களுக்குப் பின்பாகவும் அவர்களிடத்தில் வந்தபோது, (அத்தூதர்களிடம்) அவர்கள் “எங்கள் இரட்சகன் நாடியிருந்தால், அவன் மலக்குகளை (த்தூதர்களாக) திட்டமாக இறக்கி வைத்திருப்பான், ஆகவே, நிச்சயமாக, நீங்கள் எதைக் கொண்டு அனுப்பப்பட்டிருக்கிறீர்களோ அதை நாங்கள் நிராகரிக்கக் கூடியவர்கள் தாம்” என்று கூறினார்கள். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)when the messengers came to them from the front and from behind [saying], “Worship none but Allah,” they said, “If our Lord had willed, He would have sent down angels; so we disbelieve in what you have been sent with.” Ruwwad Center |
41:15 فَأَمَّا عَادٌ فَاسْتَكْبَرُوا فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَقَالُوا مَنْ أَشَدُّ مِنَّا قُوَّةً ۖ أَوَلَمْ يَرَوْا أَنَّ اللَّهَ الَّذِي خَلَقَهُمْ هُوَ أَشَدُّ مِنْهُمْ قُوَّةً ۖ وَكَانُوا بِآيَاتِنَا يَجْحَدُونَ Faamma AAadun faistakbaroo fee alardi bighayri alhaqqi waqaloo man ashaddu minna quwwatan awalam yaraw anna Allaha allathee khalaqahum huwa ashaddu minhum quwwatan wakanoo biayatina yajhadoona As for 'آd, they were arrogant in the land without right, and they said: "Who is mightier than us in strength?" See they not that Allâh Who created them was mightier in strength than them. And they used to deny Our Ayât (proofs, evidences, verses, lessons, revelations, etc.)! Hilali & KhanAs for 'Aad, they were arrogant upon the earth without right and said, "Who is greater than us in strength?" Did they not consider that Allah who created them was greater than them in strength? But they were rejecting Our signs. Saheeh Internationalஆது என்னும் மக்களோ, பூமியில் நியாயமின்றிப் பெருமைகொண்டு, எங்களைவிட பலசாலி யாரென்று கூறினார்கள். அவர்களைப் படைத்தவன் நிச்சயமாக அவர்களைவிட பலசாலி என்பதை அவர்கள் கவனித்திருக்க வேண்டாமா? (எனினும்,) அவர்கள் நம்முடைய (இத்தகைய) அத்தாட்சிகளையும் தர்க்கித்து நிராகரித்துக்கொண்டே இருந்தார்கள். தாருல் ஹுதாஅன்றியும் ஆது(க் கூட்டத்தார்) பூமியில் அநியாயமாகப் பெருமையடித்துக் கொண்டு, “எங்களை விட வலிமையில் மிக்கவர்கள் யார்?” என்று கூறினார்கள் - அவர்களைப் படைத்த அல்லாஹ் நிச்சயமாக அவர்களை விட வலிமையில் மிக்கவன் எனபதை அவர்கள் கவனித்திருக்க வில்லையா? இன்னும் அவர்கள் நம் அத்தாட்சிகளை மறுத்தவாறே இருந்தார்கள். ஜான் டிரஸ்ட் நிறுவனம்ஆகவே, ஆது (கூட்டத்தார்) பற்றிய விளக்கமாவது, அவர்கள் பூமியில் நியாயமின்றிப் பெருமையடித்துக் கொண்டிருந்தார்கள், எங்களைவிட பலத்தால் மிக்கவர் யார்? என்றும் கூறினார்கள், அவர்களை படைத்தானே அத்தகைய அல்லாஹ்_அவன் நிச்சயமாக, அவர்களைவிட பலத்தால் மிக்கவன் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? அவர்கள் நம்முடைய (இத்தகைய) அத்தாட்சிகளை மறுப்பவர்களாகவும் இருந்தார்கள். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)As for ‘Ād, they were arrogant in the land without right, and said, “Who is more powerful than us?” Did they not see that Allah, Who created them, is more powerful than them? Yet they continued to reject Our signs. Ruwwad Center |
41:16 فَأَرْسَلْنَا عَلَيْهِمْ رِيحًا صَرْصَرًا فِي أَيَّامٍ نَحِسَاتٍ لِنُذِيقَهُمْ عَذَابَ الْخِزْيِ فِي الْحَيَاةِ الدُّنْيَا ۖ وَلَعَذَابُ الْآخِرَةِ أَخْزَىٰ ۖ وَهُمْ لَا يُنْصَرُونَ Faarsalna AAalayhim reehan sarsaran fee ayyamin nahisatin linutheeqahum AAathaba alkhizyi fee alhayati alddunya walaAAathabu alakhirati akhza wahum la yunsaroona So, We sent upon them a furious wind in days of evil omen (for them) that We might give them a taste of disgracing torment in this present worldly life. But surely the torment of the Hereafter will be more disgracing, and they will never be helped. Hilali & KhanSo We sent upon them a screaming wind during days of misfortune to make them taste the punishment of disgrace in the worldly life; but the punishment of the Hereafter is more disgracing, and they will not be helped. Saheeh Internationalஆகவே, நாம் அவர்கள் மீது (வந்த வேதனையின்) கெட்ட நாள்களில் கொடிய புயல் காற்றை அனுப்பி, இழிவு தரும் வேதனையை இந்த உலகத்திலேயே அவர்கள் சுவைக்கும்படி செய்தோம். (அவர்களுக்கு) மறுமையிலுள்ள வேதனையோ, (இதனைவிட) இழிவு தரக்கூடியதாகும். (அங்கு எவராலும்) அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள். தாருல் ஹுதாஆதலினால், இவ்வுலக வாழ்வில் அவர்கள் இழிவு தரும் வேதனையைச் சுவைக்கும்படிச் செய்ய, கெட்ட நாட்களில் அவர்கள் மீது ஒரு கொடிய புயல் காற்றை அனுப்பினோம்; மேலும், மறுமையிலுள்ள வேதனையோ மிகவும் இழிவுள்ளதாகும்; அன்றியும் அவர்கள் (எவராலும்) உதவி செய்யப்பட மாட்டார்கள். ஜான் டிரஸ்ட் நிறுவனம்ஆகவே, இவ்வுலக வாழ்வில் இழிவு தரும் வேதனையை அவர்களுக்கு நாம் சுவைக்கச் செய்வதற்காக, துர்ச்சகுனமான நாட்களில் அவர்களின் மீது கொடிய புயல் காற்றை நாம் அனுப்பிவைத்தோம், மறுமையின் வேதனையோ, (இதனைவிட) மிக இழிவு தரக்கூடியதாகும், (அங்கு எவராலும்) அவர்கள் உதவி செய்யப்படவுமாட்டார்கள். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)So We sent against them a roaring wind for several inauspicious days to make them taste a disgracing punishment in the life of this world; but the punishment of the Hereafter is far more disgracing, and they will not be helped. Ruwwad Center |
41:17 وَأَمَّا ثَمُودُ فَهَدَيْنَاهُمْ فَاسْتَحَبُّوا الْعَمَىٰ عَلَى الْهُدَىٰ فَأَخَذَتْهُمْ صَاعِقَةُ الْعَذَابِ الْهُونِ بِمَا كَانُوا يَكْسِبُونَ Waamma thamoodu fahadaynahum faistahabboo alAAama AAala alhuda faakhathathum saAAiqatu alAAathabi alhooni bima kanoo yaksiboona And as for Thamûd, We showed and made clear to them the Path of Truth (Islâmic Monotheism through Our Messenger, i.e., showed them the way of success), but they preferred blindness to guidance; so the Sâ'iqah (a destructive awful cry, torment, hit, thunderbolt) of disgracing torment seized them because of what they used to earn. Hilali & KhanAnd as for Thamud, We guided them, but they preferred blindness over guidance, so the thunderbolt of humiliating punishment seized them for what they used to earn. Saheeh Internationalஸமூது என்னும் மக்களோ, அவர்களுக்கும் நாம் (நம்முடைய தூதரை அனுப்பி) நேரான வழியை அறிவித்தோம். எனினும், அவர்களும் நேரான வழியில் செல்லாது குருடராய் இருப்பதையே விரும்பினார்கள். ஆகவே, அவர்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயலின் காரணமாக இழிவான வேதனையைக் கொண்டுள்ள இடி முழக்கம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. தாருல் ஹுதாஸமூது (கூட்டத்தாருக்கோ) நாம் அவர்களுக்கு நேரான வழியைக் காண்பித்தோம், ஆயினும், அவர்கள் நேர்வழியைக் காட்டிலும் குருட்டுத்தனத்தையே நேசித்தார்கள். ஆகவே, அவர்கள் சம்பாதித்துக் கொண்ட(பாவத்)தின் காரணமாக, இழிவான வேதனையாகிய இடி முழக்கம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. ஜான் டிரஸ்ட் நிறுவனம்இன்னும் ஸமூது (கூட்டத்தார்) பற்றிய விளக்கமாவது அவர்களுக்கு நாம் நேர்வழியைக் காண்பித்தோம், எனினும், அவர்கள் நேர்வழியைவிட குருட்டுத்தனத்தையே விரும்பினார்கள். ஆகவே, அவர்கள் சம்பாதித்துக் கொண்டதன் காரணமாக இழிவான, வேதனையான இடி முழக்கம் அவர்களைப் பிடித்துக்கொண்டது. மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)As for Thamūd, We showed them guidance, but they preferred blindness over the guidance. So they were seized by the blast of a debasing punishment for what they used to commit. Ruwwad Center |
41:18 وَنَجَّيْنَا الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ Wanajjayna allatheena amanoo wakanoo yattaqoona And We saved those who believed and used to fear Allâh, keep their duty to Him and avoid evil. Hilali & KhanAnd We saved those who believed and used to fear Allah. Saheeh Internationalஅவர்களில் நம்பிக்கை கொண்டு (பாவத்திலிருந்து) விலகிக் கொண்டவர்களை நாம் பாதுகாத்துக் கொண்டோம். தாருல் ஹுதாஆனால், ஈமான் கொண்டு பயபக்தியுடன் இருந்தவர்களை நாம் ஈடேற்றினோம். ஜான் டிரஸ்ட் நிறுவனம்இன்னும் விசுவாசங்கொண்டு, பயந்துகொண்டிருந்தார்களே, அத்தகையோரை நாம் காப்பாற்றினோம். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)And We saved those who believed and feared Allah. Ruwwad Center |
41:19 وَيَوْمَ يُحْشَرُ أَعْدَاءُ اللَّهِ إِلَى النَّارِ فَهُمْ يُوزَعُونَ Wayawma yuhsharu aAAdao Allahi ila alnnari fahum yoozaAAoona And (remember) the Day that the enemies of Allâh will be gathered to the Fire, then they will be driven [(to the Fire), former ones being withheld till their later ones will join them]. Hilali & KhanAnd [mention, O Muhammad], the Day when the enemies of Allah will be gathered to the Fire while they are [driven] assembled in rows, Saheeh Internationalஅல்லாஹ்வுடைய எதிரிகளை நரகத்தின் பக்கம் ஒன்று சேர்க்கப்படும் நாளில் (அதன் சமீபமாக வந்ததும்) அவர்கள் (விசாரணைக்காக நல்லோரில் இருந்து) பிரித்து நிறுத்தப்படுவார்கள். தாருல் ஹுதாமேலும், அல்லாஹ்வின் பகைவர்கள் (நரகத்)தீயின் பால் ஒன்று திரட்டப்படும் நாளில், அவர்கள் (தனித் தனியாகப்) பிரிக்கப்படுவார்கள். ஜான் டிரஸ்ட் நிறுவனம்மேலும், அல்லாஹ்வுடைய விரோதிகள் நரகத்தின்பால் ஒன்று சேர்க்கப்படும் நாளில் (அவர்கள் தொடக்கம் முதல் கடைசி வரையில் உள்ளோரை வரிசைப்படுத்தி ஒருவரையொருவர் முந்திவிடாது மலக்குகளால்) அவர்கள் தடுத்து நிறுத்தப்படுவார்கள். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)And [consider] the Day when Allah’s enemies will be gathered to the Fire, driven in rows. Ruwwad Center |
41:20 حَتَّىٰ إِذَا مَا جَاءُوهَا شَهِدَ عَلَيْهِمْ سَمْعُهُمْ وَأَبْصَارُهُمْ وَجُلُودُهُمْ بِمَا كَانُوا يَعْمَلُونَ Hatta itha ma jaooha shahida AAalayhim samAAuhum waabsaruhum wajulooduhum bima kanoo yaAAmaloona Till, when they reach it (Hell-fire), their hearing (ears) and their eyes and their skins will testify against them as to what they used to do. Hilali & KhanUntil, when they reach it, their hearing and their eyes and their skins will testify against them of what they used to do. Saheeh Internationalஅச்சமயம் (பாவம் செய்த) அவர்களுக்கு விரோதமாக அவர்களுடைய செவிகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய (உடல்) தோல்களும் அவைகள் செய்தவைகளைப் பற்றி சாட்சி கூறும். தாருல் ஹுதாஇறுதியில், அவர்கள் (அத்தீயை) அடையும் போது, அவர்களுக்கு எதிராக அவர்களுடைய காதுகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய தோல்களும் அவை செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும். ஜான் டிரஸ்ட் நிறுவனம்இறுதியாக (நரகமாகிய) அதன் பால் அவர்கள் வந்தடைந்து விடுவார்களானால், (பாவம் செய்த) அவர்களுக்கு விரோதமாக அவர்களுடைய செவியும், அவர்களுடைய பார்வைகளும், அவர்களுடைய தோல்களும் அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)until when they reach it, their hearing, their sight and their skins will testify against them concerning what they used to do. Ruwwad Center |
41:21 وَقَالُوا لِجُلُودِهِمْ لِمَ شَهِدْتُمْ عَلَيْنَا ۖ قَالُوا أَنْطَقَنَا اللَّهُ الَّذِي أَنْطَقَ كُلَّ شَيْءٍ وَهُوَ خَلَقَكُمْ أَوَّلَ مَرَّةٍ وَإِلَيْهِ تُرْجَعُونَ Waqaloo lijuloodihim lima shahidtum AAalayna qaloo antaqana Allahu allathee antaqa kulla shayin wahuwa khalaqakum awwala marratin wailayhi turjaAAoona And they will say to their skins, "Why do you testify against us?" They will say: "Allâh has caused us to speak – as He causes all things to speak, and He created you the first time, and to Him you are made to return." Hilali & KhanAnd they will say to their skins, "Why have you testified against us?" They will say, "We were made to speak by Allah, who has made everything speak; and He created you the first time, and to Him you are returned. Saheeh Internationalஅதற்கவர்கள், தங்கள் தோல்களை நோக்கி, "எங்களுக்கு விரோதமாக நீங்கள் ஏன் சாட்சியம் கூறினீர்கள்?" என்று கேட்பார்கள். அதற்கு அவைகள், "எல்லா பொருள்களையும் பேசும்படி செய்கின்ற அல்லாஹ்வே எங்களையும் பேசும்படி செய்தான். அவன்தான் உங்களை முதல் முறையாகவும் படைத்தான். (இறந்த) பின்னரும் நீங்கள் அவனிடமே கொண்டு வரப்பட்டிருக் கின்றீர்கள்" என்றும் அவை கூறும். தாருல் ஹுதாஅவர்கள் தம் தோல்களை நோக்கி, “எங்களுக்கு எதிராக நீங்கள் ஏன் சாட்சி கூறினீர்கள்?” என்று கேட்பார்கள்; அதற்கு அவை: “எல்லாப் பொருட்களையும் பேசும் படிச் செய்யும் அல்லாஹ்வே, எங்களைப் பேசும்படிச் செய்தான்; அவன்தான் உங்களை முதல் தடவையும் படைத்தான்; பின்னரும் நீங்கள் அவனிடமே கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள்” என்று கூறும். ஜான் டிரஸ்ட் நிறுவனம்அ(தற்க)வர்கள், தங்களின் தோல்களிடம், “எங்களுக்கு எதிராக நீங்கள் ஏன் சாட்சி கூறினீர்கள்?” என்றும் கேட்பார்கள், அதற்கு அவைகள், ஒவ்வொரு பொருளையும் பேசச் செய்தவனாகிய அல்லாஹ்தான் எங்களைப் பேசவைத்தான், அவன் தான் உங்களை முதல் தடவையும் படைத்தான், (இறந்த பின்னரும்) நீங்கள் அவனிடமே திருப்பப்பட்டிருகின்றீர்கள்” என்று கூறும். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)They will say to their skins, “Why did you testify against us?” They will say, “It is Allah Who made us to speak, the One Who made everything speak. It is He Who created you the first time, and to Him you will be returned. Ruwwad Center |
41:22 وَمَا كُنْتُمْ تَسْتَتِرُونَ أَنْ يَشْهَدَ عَلَيْكُمْ سَمْعُكُمْ وَلَا أَبْصَارُكُمْ وَلَا جُلُودُكُمْ وَلَٰكِنْ ظَنَنْتُمْ أَنَّ اللَّهَ لَا يَعْلَمُ كَثِيرًا مِمَّا تَعْمَلُونَ Wama kuntum tastatiroona an yashhada AAalaykum samAAukum wala absarukum wala juloodukum walakin thanantum anna Allaha la yaAAlamu katheeran mimma taAAmaloona And you have not been hiding yourselves (in the world), lest your ears and your eyes and your skins should testify against you; but you thought that Allâh knew not much of what you were doing. Hilali & KhanAnd you were not covering yourselves, lest your hearing testify against you or your sight or your skins, but you assumed that Allah does not know much of what you do. Saheeh Internationalஉங்களுடைய செவிகளும், உங்களுடைய கண்களும், உங்களுடைய தோல்களும் உங்களுக்கு எதிராக சாட்சியம் கூறாமல் இருக்க, நீங்கள் உங்களுடைய பாவங்களை அவைகளுக்கு) மறைத்துக் கொள்ள முடியவில்லை. எனினும், நீங்கள் செய்பவை களில் அதிகமானவற்றை அல்லாஹ் அறியவே மாட்டான் என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்கள். தாருல் ஹுதா“உங்கள் காதுகளும், உங்கள் கண்களும், உங்கள் தோல்களும், உங்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லாமலிருக்கும் பொருட்டு, உ(ங்கள் பாவ)ங்களை நீங்கள் மறைத்துக் கொள்ளவில்லை; அன்றியும், நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றில் மிகுதமானதை நிச்சயமாக அல்லாஹ் அறியமாட்டான் என்று நீங்கள் எண்ணிக்கொண்டீர்கள். ஜான் டிரஸ்ட் நிறுவனம்“உங்களுடைய செவிப்புலனும், உங்களுடைய பார்வைகளும், உங்களுடைய தோல்களும் உங்களுக்கெதிராக சாட்சியங்கூறாமலிருக்க, நீங்கள் (உங்களுடைய செயல்களை அவைகளுக்கு) மறைத்துக்கொள்ளக் கூடியவர்களாக நீங்கள் இருந்திருக்கவில்லை, எனினும், நீங்கள் செய்பவற்றிலிருந்து அநேகவற்றை நிச்சயமாக அல்லாஹ் அறியமாட்டான் என்று நீங்கள் எண்ணிக்கொண்டிருந்தீர்கள். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)You did not bother to hide yourselves [when committing sins] from your hearing, your sight, and your skins lest they testify against you; rather you thought that Allah does not know much of what you do. Ruwwad Center |
41:23 وَذَٰلِكُمْ ظَنُّكُمُ الَّذِي ظَنَنْتُمْ بِرَبِّكُمْ أَرْدَاكُمْ فَأَصْبَحْتُمْ مِنَ الْخَاسِرِينَ Wathalikum thannukumu allathee thanantum birabbikum ardakum faasbahtum mina alkhasireena And that thought of yours which you thought about your Lord, has brought you to destruction; and you have become (this Day) of those utterly lost! Hilali & KhanAnd that was your assumption which you assumed about your Lord. It has brought you to ruin, and you have become among the losers." Saheeh Internationalநீங்கள் உங்கள் இறைவனைப் பற்றி எண்ணிய உங்களுடைய (இத்தவறான) எண்ணம்தான் உங்களை அழித்துவிட்டது. ஆதலால், நீங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விட்டீர்கள். தாருல் ஹுதாஆகவே, உங்கள் இறைவனைப் பற்றி நீங்கள் எண்ணிய உங்களுடைய (தவறான) இந்த எண்ணம்தான் உங்களை அழித்து விட்டது; ஆகவே நீங்கள் நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிட்டீர்கள் (என்றும் அவை கூறும்). ஜான் டிரஸ்ட் நிறுவனம்“அதுதான் உங்கள் இரட்சகனைப்பற்றி நீங்கள் எண்ணிக்கொண்டிருந்த உங்களுடைய (தீய) எண்ணமாகும், அது உங்களை அழித்துவிட்டது, ஆதலால் நீங்கள் நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிட்டீர்கள்” (என்று அவை கூறும்). மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Such was your thought that you entertained about your Lord that ruined you, so you became losers.” Ruwwad Center |
41:24 فَإِنْ يَصْبِرُوا فَالنَّارُ مَثْوًى لَهُمْ ۖ وَإِنْ يَسْتَعْتِبُوا فَمَا هُمْ مِنَ الْمُعْتَبِينَ Fain yasbiroo faalnnaru mathwan lahum wain yastaAAtiboo fama hum mina almuAAtabeena Then, if they bear the torment patiently, then the Fire is the home for them, and if they seek to please Allâh, yet they are not of those who will ever be allowed to please Allâh. Hilali & KhanSo [even] if they are patient, the Fire is a residence for them; and if they ask to appease [Allah], they will not be of those who are allowed to appease. Saheeh Internationalஆகவே, அவர்கள் (ஏதும் பேசாது கஷ்டங்களைச்) சகித்துக் கொண்டிருந்தபோதிலும், அவர்கள் தங்குமிடம் நரகம்தான். அவர்கள் மன்னிப்பைக் கோரியபோதிலும், அவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள். தாருல் ஹுதாஆகவே, அவர்கள் (வேதனையைச் சகித்துப்) பொறுமையாக இருந்த போதிலும், அவர்களுக்கு (நரக) நெருப்புத்தான் தங்குமிடம் ஆகும் - அன்றி (கூக்குரலிட்டு) அவர்கள் மன்னிப்புக்கேட்ட போதிலும், அவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள். ஜான் டிரஸ்ட் நிறுவனம்பின்னர், அவர்கள் பொருத்துக் கொள்வார்களானால், அவர்கள் தங்குமிடம் நரகம்தான், இன்னும், அவர்கள் (நற்செயல்கள் செய்து அல்லாஹ்வைத்) திருப்திப்படுத்தத் தேடினால், (அல்லாஹ்வைத் திருத்திப்படுத்தும் எச்செயலையும் செய்ய) அவர்கள் சிரமப்படுத்தப் படுபவர்களில் உள்ளவர்களல்லர். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Even if they endure patiently, the Fire will still be their abode; and if they seek to make amends, they will not be allowed to do so. Ruwwad Center |
41:25 وَقَيَّضْنَا لَهُمْ قُرَنَاءَ فَزَيَّنُوا لَهُمْ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَحَقَّ عَلَيْهِمُ الْقَوْلُ فِي أُمَمٍ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِمْ مِنَ الْجِنِّ وَالْإِنْسِ ۖ إِنَّهُمْ كَانُوا خَاسِرِينَ Waqayyadna lahum quranaa fazayyanoo lahum ma bayna aydeehim wama khalfahum wahaqqa AAalayhimu alqawlu fee omamin qad khalat min qablihim mina aljinni waalinsi innahum kanoo khasireena And We have assigned for them (devils) intimate companions (in this world), who have made fair-seeming to them, what was before them (evil deeds which they were doing in the present worldly life and disbelief in the Reckoning and the Resurrection) and what was behind them (denial of the matters in the coming life of the Hereafter as regards punishment or reward). And the Word (i.e. the torment) is justified against them as it was justified against those who were among the previous generations of jinn and men that had passed away before them. Indeed they (all) were the losers. Hilali & KhanAnd We appointed for them companions who made attractive to them what was before them and what was behind them [of sin], and the word has come into effect upon them among nations which had passed on before them of jinn and men. Indeed, they [all] were losers. Saheeh Internationalநாம் அவர்களுக்கு, இணைபிரியாத (கெட்ட) தோழர்கள் சிலரை இணைத்துவிட்டோம். அவர்கள், அவர்களுக்கு முன்னும் பின்னுமுள்ள (தீய காரியங்கள்) அனைத்தையும் அவர்களுக்கு அழகாகக் காண்பித்து விட்டார்கள். ஆகவே, இவர்கள் மீதும், இவர்களுக்கு முன் சென்ற (இவர்களைப் போன்ற) மனிதர்களிலும், ஜின்களிலுமுள்ள கூட்டத்தினர்கள் மீதும் (தண்டனைக் குள்ளாவார்கள் என்ற) நம்முடைய வாக்கு உறுதியாகிவிட்டது. நிச்சயமாக இவர்கள் (அனைவரும்) நஷ்டமடைந்து விட்டனர். தாருல் ஹுதாநாம் அவர்களுக்கு (தீய) கூட்டாளிகளை இணைத்து விட்டோம்; ஆகவே, (அத்தீய கூட்டாளிகள்) அவர்களுக்கு, முன்னாலிருப்பதையும் பின்னாலிருப்பதையும் அழகாக்கிக் காண்பித்தார்கள்; அன்றியும் அவர்களுக்கு முன்னே சென்று போன ஜின்களும் மனிதர்களுமாகிய சமுதாயத்தார் மீது நம்வாக்கு உறுதியாகிவிட்டது - நிச்சயமாக அவர்கள் நஷ்டவாளிகளாயினர். ஜான் டிரஸ்ட் நிறுவனம்மேலும், நாம் அவர்களுக்கு (ஷைத்தான்களிலிருந்து) தோழர்களை இணைத்துவிட்டோம், ஆகவே, (அத்தோழர்கள்) அவர்களுக்கு முன்னிருப்பதையும், அவர்களுக்குப் பின்னிருப்பதையும் அவர்களுக்கு அழகாக்கிக் காண்பித்தார்கள், இன்னும், இவர்களுக்கு முன் சென்று போன ஜின்கள், மனிதர்கள், ஆகிய சமூகத்தவர்களுடன் நம்முடைய (வேதனையின்) வாக்கு இவர்களின் மீது உறுதியாகிவிட்டது, நிச்சயமாக இவர்கள் (யாவரும்) நஷ்டமடைந்தவர்களாக ஆகிவிட்டனர். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)We assigned to them [evil] associates who made appealing to them all that was before them and behind them, so the decree [of punishment] became due against them along with nations that passed before them of jinn and men, for indeed they were losers. Ruwwad Center |
41:26 وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَٰذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ Waqala allatheena kafaroo la tasmaAAoo lihatha alqurani wailghaw feehi laAAallakum taghliboona And those who disbelieve say: "Listen not to this Qur'ân, and make noise in the midst of its (recitation) that you may overcome." Hilali & KhanAnd those who disbelieve say, "Do not listen to this Qur'an and speak noisily during [the recitation of] it that perhaps you will overcome." Saheeh Internationalநிராகரிப்பவர்கள் (மற்றவர்களை நோக்கி) நீங்கள் "இந்தக் குர்ஆனை (உங்கள் காதாலும்) கேட்காதீர்கள். (எவர்கள் அதனை ஓதியபோதிலும் நீங்கள் அச்சமயம் சப்தமிட்டு) அதில் குழப்பம் உண்டு பண்ணினால் நீங்கள் வென்று விடுவீர்கள்" என்றும் கூறினார்கள். தாருல் ஹுதா“நீங்கள் இந்த குர்ஆனை செவி ஏற்காதீர்கள். (அது ஓதப்படும் போது) அதில் (குழப்பம் செய்து) கூச்சலிடுங்கள், நீங்கள் அதனால் மிகைத்து விடுவீர்கள்” என்றும் காஃபிர்கள் (தங்களைச் சார்ந்தோரிடம்) கூறினர். ஜான் டிரஸ்ட் நிறுவனம்மேலும், நிராகரித்து விட்டார்களே அத்தகையோர்_(மற்றவர்களிடம்) “நீங்கள் இந்தக் குர் ஆனை கேட்காதீர்கள், (அது ஓதப்படும் போது மற்றவர்கள் கேட்காதிருக்க) அதில் (கூச்சலிடுவது போன்ற) வீணானவற்றையும் செய்யுங்கள், நீங்கள் (அதனால்) மிகைத்துவிடலாம்” என்று கூறினர். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Those who disbelieve say, “Do not listen to this Qur’an, but make noise [when it is recited], so that you may prevail.” Ruwwad Center |
41:27 فَلَنُذِيقَنَّ الَّذِينَ كَفَرُوا عَذَابًا شَدِيدًا وَلَنَجْزِيَنَّهُمْ أَسْوَأَ الَّذِي كَانُوا يَعْمَلُونَ Falanutheeqanna allatheena kafaroo AAathaban shadeedan walanajziyannahum aswaa allathee kanoo yaAAmaloona But surely, We shall cause those who disbelieve to taste a severe torment, and certainly, We shall requite them the worst of what they used to do. Hilali & KhanBut We will surely cause those who disbelieve to taste a severe punishment, and We will surely recompense them for the worst of what they had been doing. Saheeh Internationalஆகவே, நிச்சயமாக இந்நிராகரிப்பவர்கள் கடினமான வேதனையைச் சுவைக்கும்படி செய்வோம். நிச்சயமாக நாம் இவர்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயல்களைவிட தீயதான வேதனையைக் கூலியாக அவர்களுக்குக் கொடுத்தே தீருவோம். தாருல் ஹுதாஆகவே, காஃபிர்களை நாம் நிச்சயமாக கொடிய வேதனையைச் சுவைக்க செய்வோம் - அன்றியும், நிச்சயமாக அவர்கள் செய்து கொண்டிருந்ததில் மிகத் தீயதை அவர்களுக்குக் கூலியாக கொடுப்போம். ஜான் டிரஸ்ட் நிறுவனம்ஆகவே, நாம் நிச்சயமாக நிராகரித்துவிட்டோரை கடினமான வேதனையைச் சுவைக்குமாறு செய்வோம். இன்னும், நிச்சயமாக, நாம் அவர்கள் செய்துகொண்டிருந்தவற்றில் மிகத்தீயதை அவர்களுக்குக் கூலியாக் கொடுப்போம். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)We will surely make those who disbelieve taste a severe punishment, and We will surely recompense them according to the worst of what they used to do. Ruwwad Center |
41:28 ذَٰلِكَ جَزَاءُ أَعْدَاءِ اللَّهِ النَّارُ ۖ لَهُمْ فِيهَا دَارُ الْخُلْدِ ۖ جَزَاءً بِمَا كَانُوا بِآيَاتِنَا يَجْحَدُونَ Thalika jazao aAAdai Allahi alnnaru lahum feeha daru alkhuldi jazaan bima kanoo biayatina yajhadoona That is the recompense of the enemies of Allâh: the Fire. Therein will be for them the eternal home, a (deserving) recompense for that they used to deny Our Ayât (proofs, evidences, verses, lessons, signs, revelations, etc.). Hilali & KhanThat is the recompense of the enemies of Allah - the Fire. For them therein is the home of eternity as recompense for what they, of Our verses, were rejecting. Saheeh Internationalஅல்லாஹ்வுடைய (இந்த) எதிரிகளுக்கு, இத்தகைய நரகம்தான் கூலிஆகும். நம்முடைய வசனங்களை இவ்வாறு அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததற்குக் கூலியாக இவர்களுக்கு நிலையான வீடு நரகத்தில்தான். தாருல் ஹுதாஅதுவேதான் அல்லாஹ்வுடைய பகைவர்களுக்குள்ள கூலியாகும் - அதாவது நரகம்; நம் வசனங்களை அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததன் கூலியாக அவர்களுக்கு நிரந்தரமான வீடு அ(ந்நரகத்)தில் உண்டு. ஜான் டிரஸ்ட் நிறுவனம்அதுவே, அல்லாஹ்வுடைய விரோதிகளுக்குரிய கூலி(யான) நரகமாகும், நம்முடைய வசனங்களை (இவ்வாறு) அவர்கள் மறுத்துக்கொண்டிருந்ததன் கூலியாக, அவர்களுக்கு நிலையான வீடு அ(ந்நரகத்)தில் இருக்கிறது. மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Such is the recompense of the enemies of Allah: the Fire, which will be their eternal home, as a recompense for their rejection of Our verses. Ruwwad Center |
41:29 وَقَالَ الَّذِينَ كَفَرُوا رَبَّنَا أَرِنَا اللَّذَيْنِ أَضَلَّانَا مِنَ الْجِنِّ وَالْإِنْسِ نَجْعَلْهُمَا تَحْتَ أَقْدَامِنَا لِيَكُونَا مِنَ الْأَسْفَلِينَ Waqala allatheena kafaroo rabbana arina allathayni adallana mina aljinni waalinsi najAAalhuma tahta aqdamina liyakoona mina alasfaleena And those who disbelieve will say: "Our Lord! Show us those among jinn and men who led us astray, that we may crush them under our feet so that they become the lowest." Hilali & KhanAnd those who disbelieved will [then] say, "Our Lord, show us those who misled us of the jinn and men [so] we may put them under our feet that they will be among the lowest." Saheeh Internationalநிராகரித்தவர்கள் அந்நாளில் (இறைவனை நோக்கி,) "எங்கள் இறைவனே! எங்களை வழிகெடுத்த மனிதர்களையும், ஜின்களையும் எங்களுக்கு நீ காண்பி. அவர்கள் இழிவுக்குள்ளாகும் பொருட்டு, நாங்கள் அவர்களை எங்கள் கால்களுக்குக் கீழாக்கி மிதிப்போம்" என்று கூறுவார்கள். தாருல் ஹுதா(அந்நாளில்:) காஃபிர்கள்: “எங்கள் இறைவா! ஜின்களிலிருந்தும் மனிதனிலிருந்தும் எங்களை வழி கெடுத்தோரை எங்களுக்குக் காட்டுவாயாக! அவ்விருவரும் தாழ்ந்தவர்களாக ஆவதற்காக நாங்கள் எங்களுடைய கால்களுக்குக் கீழாக்கி (மிதிப்போம்)” எனக் கூறுவார்கள். ஜான் டிரஸ்ட் நிறுவனம்நிராகரிப்போர் (அந்நாளில் அல்லாஹ்விடம்) “எங்கள் இரட்சகனே! ஜின்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும், எங்களை வழிகெடுத்த இரு சாராரையும் எங்களுக்கு காண்பிப்பாயாக! அவ்விருவரும் தாழ்ந்தோரில் ஆகிவிடுவதற்காக அவ்விருவரையும் நாங்கள் எங்கள் பாதங்களுக்குக் கீழ் ஆக்குவோம்” என்று கூறுவார்கள். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Those who disbelieved will say, “Our Lord, show us those jinn and men who led us astray; we will trample them under our feet, so that they become among the lowest.” Ruwwad Center |
41:30 إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ Inna allatheena qaloo rabbuna Allahu thumma istaqamoo tatanazzalu AAalayhimu almalaikatu alla takhafoo wala tahzanoo waabshiroo bialjannati allatee kuntum tooAAadoona Verily, those who say: "Our Lord is Allâh (Alone)," and then they stand firm, on them the angels will descend (at the time of their death) (saying): "Fear not, nor grieve! But receive the glad tidings of Paradise which you have been promised! Hilali & KhanIndeed, those who have said, "Our Lord is Allah " and then remained on a right course - the angels will descend upon them, [saying], "Do not fear and do not grieve but receive good tidings of Paradise, which you were promised. Saheeh Internationalஎனினும், எவர்கள் எங்கள் இறைவன் அல்லாஹ்தான் என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்துமிருந்தார்களோ அவர்களிடம் நிச்சயமாக மலக்குகள் வந்து (அவர்களை நோக்கி) "நீங்கள் (ஒன்றுக்கும்) பயப்படாதீர்கள்; கவலைப்படாதீர்கள். உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவனபதியைக் கொண்டு சந்தோஷ மடையுங்கள்" என்றும், தாருல் ஹுதாநிச்சயமாக எவர்கள்: “எங்கள் இறைவன் அல்லாஹ்தான்” என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, நிச்சயமாக அவர்கள்பால் மலக்குகள் வந்து, “நீங்கள் பயப்படாதீர்கள்; கவலையும் பட வேண்டாம் - உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்” (எனக் கூறியவாறு) இறங்குவார்கள். ஜான் டிரஸ்ட் நிறுவனம்(எனினும்) நிச்சயமாக “எங்கள் இரட்சகன் அல்லாஹ்தான் என்று கூறி பின்னர், (அதன் மீது) உறுதியாக நிலைத்துமிருந்தார்களே அத்தகையோர்_அவர்களின் மீது மலக்குகள் (மரண வேளையில்) இறங்கி (செல்ல இருக்கும் மறுமையைப் பற்றி) நீங்கள் பயப்படாதீர்கள், (நீங்கள் இவ்வுலகில் விட்டுச் செல்லும் மனைவி, மக்கள், சொத்து சுகம் யாவற்றையும் பற்றி) கவலையும்படாதீர்கள். நீங்கள் வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்தீர்களே, அத்தகைய சுவனபதியைக் கொண்டு நன்மாராயம் பெறுங்கள்” (எனக் கூறுவார்கள்). மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Those who say, “Our Lord is Allah,” then remain steadfast, the angels will descend upon them [at the time of death, saying], “Do not fear, nor grieve, but receive glad tidings of Paradise which you were promised. Ruwwad Center |
41:31 نَحْنُ أَوْلِيَاؤُكُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ ۖ وَلَكُمْ فِيهَا مَا تَشْتَهِي أَنْفُسُكُمْ وَلَكُمْ فِيهَا مَا تَدَّعُونَ Nahnu awliyaokum fee alhayati alddunya wafee alakhirati walakum feeha ma tashtahee anfusukum walakum feeha ma taddaAAoona "We have been your friends in the life of this world and are (so) in the Hereafter. Therein you shall have (all) that your inner selves desire, and therein you shall have (all) for which you ask. Hilali & KhanWe [angels] were your allies in worldly life and [are so] in the Hereafter. And you will have therein whatever your souls desire, and you will have therein whatever you request [or wish] Saheeh International"நாங்கள் அவ்வுலக வாழ்க்கையிலும் உங்களுக்கு உதவியாக இருந்தோம்; மறுமையிலும் (உங்களுக்கு உதவியாளர்களே.) சுவனபதியில் உங்கள் மனம் விரும்பியதெல்லாம் உங்களுக்கு உண்டு. அதில் நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும்" என்றும், தாருல் ஹுதா“நாங்கள் உலக வாழ்விலும், மறுமையிலும் உங்களுக்கு உதவியாளர்கள்; மேலும் (சுவர்க்கத்தில்) உங்கள் மனம் விரும்பியதெல்லாம் அதில் உங்களுக்கு இருக்கிறது - அதில் நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும். ஜான் டிரஸ்ட் நிறுவனம்நாங்கள் உலக வாழ்விலும், மறுமையிலும் உங்களுக்கு உதவியாளர்கள், அ(ச்சுவனத்)தில் உங்கள் மனம் விரும்பியவை உங்களுக்குண்டு, இன்னும், அதில் நீங்கள் தேடுகின்றவை உங்களுக்குண்டு. மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)We are your allies in the life of this world and in the Hereafter. You will have therein whatever your souls desire, and you will have therein whatever you ask for, Ruwwad Center |
41:32 نُزُلًا مِنْ غَفُورٍ رَحِيمٍ Nuzulan min ghafoorin raheemin "An entertainment from (Allâh), the Oft-Forgiving, Most Merciful." Hilali & KhanAs accommodation from a [Lord who is] Forgiving and Merciful." Saheeh International"பாவங்களை மன்னித்துக் கிருபை செய்பவனின் விருந்தாளியாக (அதில் தங்கி) இருங்கள்" என்றும் (மலக்குகள்) கூறுவார்கள். தாருல் ஹுதா“மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவனிடமிருந்துள்ள விருந்தாகும்” (இது என்று கூறுவார்கள்). ஜான் டிரஸ்ட் நிறுவனம்(பாவங்களை) மிகவும் மன்னிப்பவனான, பெருங்கிருபையுடையோனிடமிருந்துள்ள விருந்தாக_(இது உங்களுக்குண்டு என்று மலக்குகள் கூறுவார்கள்). மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)a hospitality from the All-Forgiving, the Most Merciful One.” Ruwwad Center |
41:33 وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ Waman ahsanu qawlan mimman daAAa ila Allahi waAAamila salihan waqala innanee mina almuslimeena And who is better in speech than he who [says: "My Lord is Allâh (believes in His Oneness)," and then stands firm (acts upon His Order), and] invites (men) to Allâh's (Islâmic Monotheism), and does righteous deeds, and says: "I am one of the Muslims." Hilali & KhanAnd who is better in speech than one who invites to Allah and does righteousness and says, "Indeed, I am of the Muslims." Saheeh Internationalஎவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து(த் தானும்) நற்செயல்களைச் செய்து "நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களில் ஒருவன்" என்றும் கூறுகின்றாரோ, அவரைவிட அழகான வார்த்தை கூறுபவர் யார்? தாருல் ஹுதாஎவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து: “நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார்?” (இருக்கின்றார்?) ஜான் டிரஸ்ட் நிறுவனம்எவர் அல்லாஹ் அளவில் (மனிதர்களை) அழைத்து(த் தாமும்) நற்கருமங்களையும் செய்து, நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்த) முஸ்லிம்களில் உள்ளேன் என்றும் கூறுகின்றாரோ, அவரைவிடச் சொல்லால் மிக்க அழகானவர் யார்? மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Who is better in speech than one who calls to Allah, does righteous deeds, and says, “I am one of the Muslims [submitting to Allah]”? Ruwwad Center |
41:34 وَلَا تَسْتَوِي الْحَسَنَةُ وَلَا السَّيِّئَةُ ۚ ادْفَعْ بِالَّتِي هِيَ أَحْسَنُ فَإِذَا الَّذِي بَيْنَكَ وَبَيْنَهُ عَدَاوَةٌ كَأَنَّهُ وَلِيٌّ حَمِيمٌ Wala tastawee alhasanatu wala alssayyiatu idfaAA biallatee hiya ahsanu faitha allathee baynaka wabaynahu AAadawatun kaannahu waliyyun hameemun The good deed and the evil deed cannot be equal. Repel (the evil) with one which is better (i.e. Allâh orders the faithful believers to be patient at the time of anger, and to excuse those who treat them badly) then verily he, between whom and you there was enmity, (will become) as though he was a close friend. Hilali & KhanAnd not equal are the good deed and the bad. Repel [evil] by that [deed] which is better; and thereupon the one whom between you and him is enmity [will become] as though he was a devoted friend. Saheeh Internationalநன்மையும் தீமையும் சமமாகிவிடாது. (ஆதலால், நபியே! தீமையை) நீங்கள் மிக அழகியதைக் கொண்டு தடுத்துக் கொள்ளுங்கள். அவ்வாறாயின், உங்களுடைய கொடிய எதிரியை அதே சமயத்தில் உங்களுடைய உண்மையான, மிக்க நெருங்கிய நண்பனைப் போல் காண்பீர்கள். தாருல் ஹுதாநன்மையும் தீமையும் சமமாக மாட்டா, நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக! அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார். ஜான் டிரஸ்ட் நிறுவனம்நன்மையும் தீமையும் சமமாகிவிடாது (ஆதலால், நபியே!) எது மிக அழகானதோ அதைக்கொண்டு (தீமையை) தடுத்துக்கொள்வீராக! அப்பொழுது எவருக்கும் உமக்குமிடையே பகைமை இருந்ததோ அவர், உம்முடைய உற்ற சிநேகிதரைப் போல் ஆகிவிடுவார். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Good and evil are not equal. Repel evil with what is good; the one whom you have enmity with will become as if he was a close friend. Ruwwad Center |
41:35 وَمَا يُلَقَّاهَا إِلَّا الَّذِينَ صَبَرُوا وَمَا يُلَقَّاهَا إِلَّا ذُو حَظٍّ عَظِيمٍ Wama yulaqqaha illa allatheena sabaroo wama yulaqqaha illa thoo haththin AAatheemin But none is granted it (the above quality) except those who are patient – and none is granted it except the owner of the great portion (of happiness in the Hereafter, i.e., Paradise, and of a high moral character) in this world. Hilali & KhanBut none is granted it except those who are patient, and none is granted it except one having a great portion [of good]. Saheeh Internationalபொறுமையுடையவர்களைத் தவிர மற்றெவரும் இதனை அடைய மாட்டார்கள். அன்றி, பெரும் பாக்கியமுடையவர்களைத் தவிர மற்றெவரும் இதனை அடையமாட்டார்கள். தாருல் ஹுதாபொறுமையாக இருந்தார்களே அவர்கள் தவிர வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்; மேலும், மகத்தான நற்பாக்கியம் உடையவர்கள் தவிர, வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள். ஜான் டிரஸ்ட் நிறுவனம்பொறுமையாய் இருந்தார்களே அத்தகையோரைத் தவிர, (வேறு) எவரும் அதனை அடையமாட்டார்கள், மேலும், மகத்தான பாக்கியத்தையுடையோரைத் தவிர, (மற்ற) எவரும் அதனை அடையமாட்டார்கள். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)But none can attain this except those who are patient, and none can attain this except those who are greatly fortunate. Ruwwad Center |
41:36 وَإِمَّا يَنْزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ ۖ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ Waimma yanzaghannaka mina alshshaytani nazghun faistaAAith biAllahi innahu huwa alssameeAAu alAAaleemu And if an evil whisper from Shaitân (Satan) tries to turn you away (from doing good), then seek refuge in Allâh. Verily, He is the All-Hearer, the All-Knower. Hilali & KhanAnd if there comes to you from Satan an evil suggestion, then seek refuge in Allah. Indeed, He is the Hearing, the Knowing. Saheeh International(நபியே!) ஷைத்தானுடைய யாதொரு ஊசலாட்டம் (தீய காரியங்களைச் செய்யும்படி) உங்களைத் தூண்டும் சமயத்தில் (உங்களை அதிலிருந்து) பாதுகாத்துக் கொள்ளும்படி அல்லாஹ் விடத்தில் நீங்கள் கோருவீராக! நிச்சயமாக அவன் (அனைத்தையும்) செவியுறுபவனும் நன்கறிபவனாகவும் இருக்கின்றான். (ஆதலால், அவன் உங்களை பாதுகாத்துக் கொள்வான்.) தாருல் ஹுதாஉங்களுக்கு ஷைத்தானிடத்திலிருந்து ஏதேனும் ஊசாட்டம் (தீயதைச் செய்ய) உம்மைத் தூண்டுமாயின், உடனே அல்லாஹ்விடம் காவல் தேடிக் கொள்வீராக! நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியேற்பவன்; நன்கறிபவன். ஜான் டிரஸ்ட் நிறுவனம்மேலும், (நபியே!) ஷைத்தானிலிருந்து ஏதேனுமொரு ஊசாட்டம் உம்மைத் தொட்டுவிடுமாயின் தாமதமின்றி அல்லாஹ்விடத்தில் நீர் காவல் தேடிக் கொள்வீராக! நிச்சயமாக அவனே, (யாவரையும்) செவியேற்பவன், நன்கறிபவன். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)If you are prompted by Satan’s provocation, seek refuge with Allah, for He is indeed the All-Hearing, the All-Knowing. Ruwwad Center |
41:37 وَمِنْ آيَاتِهِ اللَّيْلُ وَالنَّهَارُ وَالشَّمْسُ وَالْقَمَرُ ۚ لَا تَسْجُدُوا لِلشَّمْسِ وَلَا لِلْقَمَرِ وَاسْجُدُوا لِلَّهِ الَّذِي خَلَقَهُنَّ إِنْ كُنْتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ Wamin ayatihi allaylu waalnnaharu waalshshamsu waalqamaru la tasjudoo lilshshamsi wala lilqamari waosjudoo lillahi alathee khalaqahunna in kuntum iyyahu taAAbudoona And from among His Signs are the night and the day, and the sun and the moon. Prostrate yourselves not to the sun nor to the moon, but prostrate yourselves to Allâh Who created them, if you (really) worship Him. Hilali & KhanAnd of His signs are the night and day and the sun and moon. Do not prostrate to the sun or to the moon, but prostate to Allah, who created them, if it should be Him that you worship. Saheeh International"இரவும், பகலும், சூரியனும், சந்திரனும் (இறைவனை அறிவிப்பதற்குரிய) அத்தாட்சிகளாயிருக்கின்றன. ஆகவே, மெய்யாகவே நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குபவர்களாக இருந்தால் சூரியனுக்கும், (சிரம் பணியாதீர்கள்;) சந்திரனுக்கும் சிரம் பணியாதீர்கள். இவைகளை படைத்தவன் எவனோ அவனுக்கே சிரம் பணியுங்கள்" (என்றும் நபியே! நீங்கள் கூறுங்கள்.) தாருல் ஹுதாஇரவும், பகலும்; சூரியனும், சந்திரனும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைதாம். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வையே வணங்குகிறவர்களாக இருந்தால் சூரியனுக்கும், சந்திரனுக்கும் ஸுஜூது செய்யாதீர்கள் - இவற்றைப் படைத்தவனாகிய அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்யுங்கள். ஜான் டிரஸ்ட் நிறுவனம்இரவும், பகலும், சூரியனும், சந்திரனும் (அல்லாஹ்வைப்பற்றி அறிவிக்கக்கூடிய) அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும், நீங்கள் சூரியனுக்கும், சந்திரனுக்கும் ஸஜ்தா செய்யவேண்டாம், நீங்கள் அவனையே வணங்குபவர்களாக இருந்தால், அவற்றை படைத்தவனாகிய அல்லாஹ்விற்கே ஸஜ்தா செய்யுங்கள். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Among His signs are the night and the day, the sun and the moon. Do not prostrate to the sun or to the moon, but prostrate to Allah Who created them, if you truly worship Him. Ruwwad Center |
41:38 فَإِنِ اسْتَكْبَرُوا فَالَّذِينَ عِنْدَ رَبِّكَ يُسَبِّحُونَ لَهُ بِاللَّيْلِ وَالنَّهَارِ وَهُمْ لَا يَسْأَمُونَ ۩ Faini istakbaroo faallatheena AAinda rabbika yusabbihoona lahu biallayli waalnnahari wahum la yasamoona But if they are too proud (to do so), then there are those who are with your Lord (angels) glorify Him night and day, and never are they tired. Hilali & KhanBut if they are arrogant - then those who are near your Lord exalt Him by night and by day, and they do not become weary. Saheeh International(நபியே!) பின்னும், இவர்கள் கர்வம் (கொண்டு இறைவனை வணங்காது விலகிக்) கொள்வார்களாயின், (அதனால் அவனுக்கு யாதொரு நஷ்டமும் இல்லை.) உங்களது இறைவனிடத்தில் உள்ளவர்(களாகிய மலக்கு)கள் இரவும் பகலும் அவனைத் துதி செய்து புகழ்ந்துகொண்டே இருக்கின்றனர். (இதில்) அவர்கள் சோர்வடைவதே இல்லை. தாருல் ஹுதாஆனால் (அல்லாஹ்வை வணங்காது எவரேனும்) பெருமையடித்தவர்களாக இருப்பின் (அவனுக்கு நஷ்டமில்லை), உம் இறைவனிடம் இருப்பவர்கள் (வானவர்கள்) இரவிலும் பகலிலும் அவனை தஸ்பீஹு செய்து (துதித்துக்) கொண்டேயிருக்கிறார்கள்; அவர்கள் (அதில்) சோர்வடைவதுமில்லை. ஜான் டிரஸ்ட் நிறுவனம்(நபியே!) பின்னும், இவர்கள் பெருமையடித்துக் (கொண்டு அல்லாஹ்வை வணங்காது விலகிக்) கொள்வார்களாயின், அப்போது உமதிரட்சகனிடத்தில் உள்ளவர் (களாகிய மலக்கு)கள் இரவிலும், பகலிலும் அவனைத் துதிசெய்து (புகழ்ந்து) கொண்டேயிருக்கின்றனர், அவர்கள் (அதில்) சோர்வடையவும் மாட்டார்கள். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)But if they show arrogance, then those [angels] who are with your Lord glorify Him night and day, and they never grow weary. Ruwwad Center |
41:39 وَمِنْ آيَاتِهِ أَنَّكَ تَرَى الْأَرْضَ خَاشِعَةً فَإِذَا أَنْزَلْنَا عَلَيْهَا الْمَاءَ اهْتَزَّتْ وَرَبَتْ ۚ إِنَّ الَّذِي أَحْيَاهَا لَمُحْيِي الْمَوْتَىٰ ۚ إِنَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ Wamin ayatihi annaka tara alarda khashiAAatan faitha anzalna AAalayha almaa ihtazzat warabat inna allathee ahyaha lamuhyee almawta innahu AAala kulli shayin qadeerun And among His Signs (is this), that you see the earth barren, but when We send down water (rain) to it, it is stirred to life and growth (of vegetations). Verily, He Who gives it life, surely is Able to give life to the dead (on the Day of Resurrection). Indeed He is Able to do all things. Hilali & KhanAnd of His signs is that you see the earth stilled, but when We send down upon it rain, it quivers and grows. Indeed, He who has given it life is the Giver of Life to the dead. Indeed, He is over all things competent. Saheeh International(நபியே! பயிர்கள் கருகி) பூமி வெட்ட வெளியாக இருப்பதை நீங்கள் காண்பதும் மெய்யாகவே அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும். அதன்மீது நாம் மழையை பொழியச் செய்தால், அதில் (முளை கிளம்பிப்) பசுமையாகி வளர்கிறது. (இவ்வாறு இறந்துபோன) பூமியை எவன் உயிர்ப்பிக்கிறானோ அவன் மரணித்தவர்களையும் மெய்யாகவே உயிர்ப்பிப்பான். நிச்சயமாக அவன் (அனைத்தின் மீதும்) ஆற்றலுடையவன். தாருல் ஹுதாபூமியானது காய்ந்து வரண்டு கிடப்பதை நீர் பார்ப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் நின்றுள்ளதாகும்; அதன் மீது நாம் மழையை பொழியச் செய்தால், அது (புற் பூண்டுகள் கிளம்பிப்) பசுமையாக வளர்கிறது; (இவ்வாறு மரித்த பூமியை) உயிர்ப்பித்தவனே, நிச்சயமாக இறந்தவர்களையும் திட்டமாக உயிர்ப்பிக்கிறவன்; நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையவன். ஜான் டிரஸ்ட் நிறுவனம்(நபியே!) காய்ந்து விட்டதாக பூமியை நிச்சயமாக நீர் காண்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும், அதன் மீது நாம் நீரை இறக்கி வைத்தால், அது செழிப்படைந்து வளர்கிறது, அதை நிச்சயமாக உயிர்ப்பித்தானே அத்தகையவன் மரணித்தோரையும் உயிர்ப்பிக்கக் கூடியவனாவான், நிச்சயமாக அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)And among His signs is that you see the land withered, but when We send down rain upon it, it stirs and swells. He Who gives it life will surely give life to the dead, for He is Most Capable of all things. Ruwwad Center |
41:40 إِنَّ الَّذِينَ يُلْحِدُونَ فِي آيَاتِنَا لَا يَخْفَوْنَ عَلَيْنَا ۗ أَفَمَنْ يُلْقَىٰ فِي النَّارِ خَيْرٌ أَمْ مَنْ يَأْتِي آمِنًا يَوْمَ الْقِيَامَةِ ۚ اعْمَلُوا مَا شِئْتُمْ ۖ إِنَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ Inna allatheena yulhidoona fee ayatina la yakhfawna AAalayna afaman yulqa fee alnnari khayrun am man yatee aminan yawma alqiyamati iAAmaloo ma shitum innahu bima taAAmaloona baseerun Verily, those who turn away from Our Ayât (proofs, evidences, verses, lessons, signs, revelations, etc. by attacking, distorting and denying them) are not hidden from Us. Is he who is cast into the Fire better or he who comes secure on the Day of Resurrection? Do what you will. Verily, He is All-Seer of what you do (this is a severe threat to the disbelievers). Hilali & KhanIndeed, those who inject deviation into Our verses are not concealed from Us. So, is he who is cast into the Fire better or he who comes secure on the Day of Resurrection? Do whatever you will; indeed, He is Seeing of what you do. Saheeh Internationalநிச்சயமாக எவர்கள் நம்முடைய வசனங்களில் தப்பர்த்தங்களை(த் தங்கள் தீய செயல்களுக்கு ஆதாரமாக)க் கற்பிக் கின்றார்களோ, அவர்களுடைய செயல்களில் (ஒன்றுமே) நிச்சயமாக நமக்கு மறைந்துவிடாது. மறுமையில் நரகத்தில் எறியப்படுபவன் நல்லவனா? அல்லது எத்தகைய பயமற்றவனாக(ச் சுவனபதிக்கு) வருபவன் மேலானவனா? (மனிதர்களே!) நீங்கள் விரும்பியதைச் செய்து கொண்டிருங்கள். நீங்கள் செய்பவைகளை நிச்சயமாக அவன் உற்று நோக்கினவனாகவே இருக்கின்றான். தாருல் ஹுதாநிச்சயமாக எவர்கள் நம்முடைய வசனங்களில் குறை காண்கிறார்களோ அவர்(களுடைய செயல்)கள் நமக்கு மறைக்கப்படவில்லை - ஆகவே, நரகத்தில் எறியப்படுபவன் நல்லவனா? அல்லது கியாம நாளன்று அச்சம் தீர்ந்து வருப(வன் நல்ல)வனா? நீங்கள் விரும்பியதைச் செய்து கொண்டிருங்கள் - நிச்சயமாக அவன் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவனாகவே இருக்கிறான். ஜான் டிரஸ்ட் நிறுவனம்நிச்சயமாக, நம்முடைய வசனங்களில் (அனர்த்தம் கூறி பிழை சேர்க்க பொய்யின்பால்) சாய்ந்து விடுகின்றார்களே அத்தகையோர்_நம்மிலிருந்து அவர்கள் மறைந்து விடமாட்டார்கள், ஆகவே, (மறுமையில்) நரகத்தில் எறியப்படுபவன் சிறந்தவனா? அல்லது மறுமை நாளில் எத்தகைய பயமுமற்றவனாக வருப(வன் மேலான)வனா (மனிதர்களே!) நீங்கள் நாடியதைச் செய்துகொண்டிருங்கள், நீங்கள் செய்பவற்றை நிச்சயமாக, அவன் பார்க்கக் கூடியவன். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Those who distort the meanings of Our verses are not hidden from Us. Is one who will be cast into the Fire better or one who will come safely on the Day of Resurrection? Do whatever you wish, for He is All-Seeing of what you do. Ruwwad Center |
41:41 إِنَّ الَّذِينَ كَفَرُوا بِالذِّكْرِ لَمَّا جَاءَهُمْ ۖ وَإِنَّهُ لَكِتَابٌ عَزِيزٌ Inna allatheena kafaroo bialththikri lamma jaahum wainnahu lakitabun AAazeezun Verily, those who disbelieved in the Reminder (i.e. the Qur'ân) when it came to them (shall receive the punishment). And verily, it is an honourable well-fortified respected Book (because it is Allâh's Speech, and He has protected it from corruption). (See V.15:9) Hilali & KhanIndeed, those who disbelieve in the message after it has come to them... And indeed, it is a mighty Book. Saheeh Internationalநிச்சயமாக எவர்கள் தங்களிடம் வந்த நல்லுபதேசத்தை நிராகரிக்கின்றார்களோ (அவர்கள் மறுமையில் தங்கள் நிலைமையை உணர்ந்து கொள்வார்கள். ஏனென்றால்) நிச்சயமாக இது மிக கண்ணியமான வேதமாகும். தாருல் ஹுதாநிச்சயமாக, எவர்கள் நல்லுபதேசம் (குர்ஆன்) தம்மிடம் வந்த போது அதை நிராகரித்தார்களோ (அவர்கள் உண்மையை உணர்வார்கள்); ஏனெனில் அதுவே நிச்சயமாக மிகவும் கண்ணியமான வேதமாகும். ஜான் டிரஸ்ட் நிறுவனம்நிச்சயமாக, (குர் ஆனாகிய) நல்லுபதேசத்தை_அது அவர்களிடம் வந்தபோது நிராகரிக்கின்றார்களே அத்தகையோர்_(அவர்கள் மறுமையில் தங்கள் நிலையை அறிந்துகொள்வார்கள்,) மேலும், நிச்சயமாக இது, மிக்க கண்ணியமானதொரு வேதமாகும். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Those who disbelieve in the Reminder when it comes to them [will be punished], for it is truly a mighty Book. Ruwwad Center |
41:42 لَا يَأْتِيهِ الْبَاطِلُ مِنْ بَيْنِ يَدَيْهِ وَلَا مِنْ خَلْفِهِ ۖ تَنْزِيلٌ مِنْ حَكِيمٍ حَمِيدٍ La yateehi albatilu min bayni yadayhi wala min khalfihi tanzeelun min hakeemin hameedin Falsehood cannot come to it from before it or behind it, (it is) sent down by the All-Wise, Worthy of all praise (Allâh [Subhânahu wa Ta'âla]). Hilali & KhanFalsehood cannot approach it from before it or from behind it; [it is] a revelation from a [Lord who is] Wise and Praiseworthy. Saheeh Internationalஇதற்கு முன்னும் சரி, இதற்குப் பின்னும் சரி உண்மைக்கு மாறான யாதொரு விஷயமும் (திருக்குர்ஆனாகிய) இதனை (அணுகவே) அணுகாது. மிக்க புகழும் ஞானமும் உடையவனால் (இது) இறக்கப்பட்டது. தாருல் ஹுதாஅதனிடம், அதற்கு முன்னிருந்தோ அதற்குப் பின்னிருந்தோ உண்மைக்குப் புறம்பான எதுவும் நெருங்காது; (இது) புகழுக்குரிய ஞானம் மிக்கவன் - (அல்லாஹ்)விடமிருந்து இறங்கியுள்ளது. ஜான் டிரஸ்ட் நிறுவனம்(குர் ஆனாகிய இதில்) இதற்கு முன்னிருந்தோ, இதற்குப் பின்னிருந்தோ பொய் இதனிடம் வராது, தீர்க்கமான அறிவுடைய, மிக்க புகழுக்குரியவனிடமிருந்து (இது) இறக்கப் பட்டுள்ளதாகும். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)No falsehood can approach it from the front or from behind; a revelation from the One Who is All-Wise, Praiseworthy. Ruwwad Center |
41:43 مَا يُقَالُ لَكَ إِلَّا مَا قَدْ قِيلَ لِلرُّسُلِ مِنْ قَبْلِكَ ۚ إِنَّ رَبَّكَ لَذُو مَغْفِرَةٍ وَذُو عِقَابٍ أَلِيمٍ Ma yuqalu laka illa ma qad qeela lilrrusuli min qablika inna rabbaka lathoo maghfiratin wathoo AAiqabin aleemin Nothing is said to you (O Muhammad [sal-Allâhu 'alayhi wa sallam]) except what was said to the Messengers before you. Verily, your Lord is the Possessor of forgiveness, and (also) the Possessor of painful punishment. Hilali & KhanNothing is said to you, [O Muhammad], except what was already said to the messengers before you. Indeed, your Lord is a possessor of forgiveness and a possessor of painful penalty. Saheeh International(நபியே!) உங்களுக்கு முன் வந்த தூதர்களுக்குக் கூறப்பட்டது எதுவோ, அதனைத் தவிர (வேறொன்றும்) உங்களுக்குக் கூறப்படவில்லை. (ஆகவே, இவர்கள் கூறும் நிந்தனைகளைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள்.) நிச்சயமாக உங்களது இறைவன் (நல்லவர்களை) மிக மன்னிப்பவனாகவும், (தீயவர்களைத்) துன்புறுத்தி வேதனை செய்பவனாகவும் இருக்கின்றான். தாருல் ஹுதா(நபியே!) உமக்கு முன்னர் வந்த தூதர்களுக்குக் கூறப்பட்டதேயன்றி உமக்குக் கூறப்படவில்லை; நிச்சயமாக உம்முடைய இறைவன் மிக மன்னிப்போனாகவும் நோவினை செய்யும் வேதனை செய்யக் கூடியோனுமாக இருக்கின்றான். ஜான் டிரஸ்ட் நிறுவனம்(நபியே!) உமக்கு முன் (வந்த) தூதர்களுக்குத் திட்டமாகக் கூறப்பட்டதைத் தவிர (வேறெதுவும்) உமக்குக் கூறப்படவில்லை, நிச்சயமாக, உமதிரட்சகன் மன்னிப்புடையவன், துன்புறுத்தும் தண்டனையுடையவன். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Nothing is said to you [O Prophet] except what was already said to the messengers before you. Indeed, your Lord is All-Forgiving, but Severe in punishment. Ruwwad Center |
41:44 وَلَوْ جَعَلْنَاهُ قُرْآنًا أَعْجَمِيًّا لَقَالُوا لَوْلَا فُصِّلَتْ آيَاتُهُ ۖ أَأَعْجَمِيٌّ وَعَرَبِيٌّ ۗ قُلْ هُوَ لِلَّذِينَ آمَنُوا هُدًى وَشِفَاءٌ ۖ وَالَّذِينَ لَا يُؤْمِنُونَ فِي آذَانِهِمْ وَقْرٌ وَهُوَ عَلَيْهِمْ عَمًى ۚ أُولَٰئِكَ يُنَادَوْنَ مِنْ مَكَانٍ بَعِيدٍ Walaw jaAAalnahu quranan aAAjamiyyan laqaloo lawla fussilat ayatuhu aaAAjamiyyun waAAarabiyyun qul huwa lillatheena amanoo hudan washifaon waallatheena la yuminoona fee athanihim waqrun wahuwa AAalayhim AAaman olaika yunadawna min makanin baAAeedin And if We had sent this as a Qur'ân in a foreign language (other than Arabic), they would have said: "Why are not its Verses explained in detail (in our language)? What! (A Book) not in Arabic and (the Messenger) an Arab?" Say: "It is for those who believe, a guide and a healing. And as for those who disbelieve, there is heaviness (deafness) in their ears, and it (the Qur'ân) is blindness for them. They are those who are called from a place far away (so they neither listen nor understand)." Hilali & KhanAnd if We had made it a non-Arabic Qur'an, they would have said, "Why are its verses not explained in detail [in our language]? Is it a foreign [recitation] and an Arab [messenger]?" Say, "It is, for those who believe, a guidance and cure." And those who do not believe - in their ears is deafness, and it is upon them blindness. Those are being called from a distant place. Saheeh Internationalஇதனை அரபி அல்லாத மொழியில் நாம் இறக்கி வைத்திருந்தால், (இந்த மக்காவாசிகள்) இதனுடைய வசனங்கள் (நம்முடைய அரபி மொழியில்) விவரித்துக் கூறப்பட்டிருக்க வேண்டாமா? என்றும், இதுவோ அரபி அல்லாத மொழி; நாமோ அதனை அறியாத) அரபிகள் என்றும் கூறுவார்கள். (நபியே!) நீங்கள் கூறுங்கள்: "இது (அவர்களுடைய அரபி மொழியில் இருப்பதுடன்) நம்பிக்கை கொண்டவர்களுக்கு நேரான வழியாகவும், (சந்தேக நோயுள்ள உள்ளங்களுக்கு) நல்லதொரு பரிகாரமாகவும் இருக்கின்றது. எவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுடைய காதுகளுக்கு செவிடாகவும், அவர்களுடைய பார்வையை போக்கக் கூடியதாகவும் இருக்கின்றது. அவர்கள் (உங்கள் சமீபத்திலிருந்த போதிலும்) வெகு தொலை தூரத்திலிருந்து அழைக்கப்படுபவர்கள் (போல் இருக்கின்றனர்). தாருல் ஹுதாநாம் இதை (குர்ஆனை) அரபியல்லாத வேறு மொழியில் இறக்கியிருந்தால்; இதன் வசனங்கள் தெளிவாக விளக்கப்பட்டிருக்கக் கூடாதா? (சொல்) அஜமீ (வேற்று மொழி); (தூதர்)) அரபியரா?” என்று அவர்கள் கூறியிருப்பார்கள். “இது ஈமான் கொண்டவர்களுக்கு ஒரு வழிகாட்டியும், (அரு) மருந்துமாகும்” என்று கூறுவீராக! ஆனால் ஈமான் கொள்ளாதவர்களுக்கு, அவர்களுடைய காதுகளில் செவிட்டுத்தன்மை இருக்கிறது; இன்னும், அவர் (கண்)களில் குருட்டுத்தனமும் இருக்கிறது; எனவே அவர்கள் வெகு தொலைவான இடத்திலிருந்து அழைக்கப்படுபவர்கள் (போல் இருக்கின்றனர்). ஜான் டிரஸ்ட் நிறுவனம்மேலும், “அரபி அல்லாத (மொழியின்) குர் ஆனாக இதனை நாம் ஆக்கி வைத்திருந்தால், (இந்த மக்காவாசிகள்) இதனுடைய வசனங்கள் (நம் மொழியில்) விவரித்துக் கூறப்பட்டிருக்க வேண்டாமோ? (வேதம்) அரபி அல்லாத (மொழியுடைய)தும், (நபியோ) அரபியருமா? என்று கூறுவார்கள். (நபியே!) நீர் கூறுவீராக, இது (அரபி மொழிவேதமாக இருப்பதுடன்) விசுவாசங்கொண்டவர்களுக்கு நேர்வழியாகவும், (உடல் மற்றும் மனநோய்களை) குணப்படுத்துவதாகவும் இருக்கின்றது, இன்னும் விசுவாசங்கொள்ளவில்லையே அவர்களுடைய காதுகளில் அடைப்பு இருக்கின்றது, இது அவர்கள் விஷயத்தில் குருட்டுத்தனத்தையுடையதாகவும் இருக்கிறது (ஆகவே, அவர்கள் இதன் உண்மையைப் பார்க்கமாட்டார்கள்) அவர்கள் வெகு தொலை தூரத்திலிருந்து அழைக்கப்படு(பவர்கள் போன்று கேட்காதவர்களாக இருக்)கின்றனர். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)If We had made it a non-Arabic Qur’an, they would have said, “If only its verses were made clear? What! A non-Arabic [book] and an Arab [messenger]?” Say, “It is a guidance and healing for those who believe. As for those who do not believe, there is deafness in their ears and they are blind to [understand] it – it is as if they are being called from a far off place.” Ruwwad Center |
41:45 وَلَقَدْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ فَاخْتُلِفَ فِيهِ ۗ وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَبِّكَ لَقُضِيَ بَيْنَهُمْ ۚ وَإِنَّهُمْ لَفِي شَكٍّ مِنْهُ مُرِيبٍ Walaqad atayna moosa alkitaba faikhtulifa feehi walawla kalimatun sabaqat min rabbika laqudiya baynahum wainnahum lafee shakkin minhu mureebin And indeed We gave Mûsâ (Moses) the Scripture, but dispute arose therein. And had it not been for a Word that went forth before from your Lord, (the torment would have overtaken them) and the matter would have been settled between them. But truly, they are in grave doubt thereto (i.e. about the Qur'ân). (Tafsir Al-Qurtubi) Hilali & KhanAnd We had already given Moses the Scripture, but it came under disagreement. And if not for a word that preceded from your Lord, it would have been concluded between them. And indeed they are, concerning the Qur'an, in disquieting doubt. Saheeh Internationalநிச்சயமாக நாம் மூஸாவுக்கு ஒரு வேதத்தைக் கொடுத்திருந்தோம். (அவருடைய மக்கள்) அதில் பல பிரிவுகளை உண்டு பண்ணிவிட்டனர். (அவர்களை விசாரித்துத் தீர்ப்புக் கூறுவது மறுமையில்தான் என்று) உங்களது இறைவனின் வாக்கு முன்னதாகவே ஏற்பட்டிருக்காவிடில், அவர்களுடைய காரியம் (இதுவரையில்) முடிந்தே போயிருக்கும். நிச்சயமாக இவர்களும் பெரும் சந்தேகத்தில் ஆழ்ந்து கிடக்கின்றனர். தாருல் ஹுதாநிச்சயமாக நாம் மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம்; ஆனால், அதில் மாறுபாடுகள் செய்யப்பட்டு விட்டன; அன்றியும் உமது இறைவனிடமிருந்து ஏற்கனவே வாக்கு ஏற்படாது போயிருந்தால், அவர்களுக்கிடையே தீர்ப்பு அளிக்கப்பட்டே இருக்கும் - நிச்சயமாக அவர்களும் ஆழ்ந்த சந்தேகத்திலேயே இருக்கின்றனர். ஜான் டிரஸ்ட் நிறுவனம்மேலும், திட்டமாக நாம் மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம், அதில் மாறுபாடுகள் செய்யப்பட்டுவிட்டன, (அவர்களின் விசாரணை மறுமையில்தான் என்று) உமதிரட்சகனிடமிருந்து வாக்கு முந்தியிருக்காவிடில், அவர்களுக்கிடையில் (இம்மையில்) திட்டமாக தீர்ப்பளிப்பக்கப்பட்டிருக்கும், நிச்சயமாக அவர்களும் (_குர் ஆனாகிய) இதில் அவநம்பிக்கை ஏற்படுத்தக்கூடிய சந்தேகத்தில் இருக்கிறார்கள். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)We gave Moses the Scripture, but differences arose concerning it. Were it not for a prior decree from your Lord, it would have been judged between them. Surely they are in a disquieting doubt about it. Ruwwad Center |
41:46 مَنْ عَمِلَ صَالِحًا فَلِنَفْسِهِ ۖ وَمَنْ أَسَاءَ فَعَلَيْهَا ۗ وَمَا رَبُّكَ بِظَلَّامٍ لِلْعَبِيدِ Man AAamila salihan falinafsihi waman asaa faAAalayha wama rabbuka bithallamin lilAAabeedi Whosoever does righteous good deed, it is for (the benefit of) his own self; and whosoever does evil, it is against his own self. And your Lord is not at all unjust to (His) slaves. Hilali & KhanWhoever does righteousness - it is for his [own] soul; and whoever does evil [does so] against it. And your Lord is not ever unjust to [His] servants. Saheeh Internationalஎவர் நன்மைகள் செய்கின்றாரோ, அது அவருக்கே நன்று. எவர் பாவம் செய்கின்றாரோ, அது அவருக்கே கேடாகும். உங்களது இறைவன் (தன்) அடியார்கள் எவருக்கும் அறவே தீங்கு செய்வ தில்லை. (அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கின்றனர். தாருல் ஹுதாஎவர் ஸாலிஹான (நல்ல) அமல் செய்கிறாரோ (அது) அவருக்கே நன்மையாகும், எவர் பாவம் செய்கிறாரோ (அது) அவருக்கே கேடாகும் - அன்றியும் உம்முடைய இறைவன் (தன்) அடியார்களுக்குச் சிறிதும் அநியாயம் செய்பவன் அல்லன். ஜான் டிரஸ்ட் நிறுவனம்எவர் நல்ல செயல் செய்கிறாரோ, (அது) அவருக்கே (நன்மையாகும்), எவரேனும் தீமை செய்தால் அவருக்கே (அது) கேடாகும், மேலும், உமதிரட்சகன் (தன்) அடியார்களுக்கு அநியாயம் செய்பவன் அல்லன்! மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Whoever does a righteous deed, it is to his own benefit; and whoever does an evil deed, it is to his own loss. Your Lord is not unjust to His slaves. Ruwwad Center |
41:47 إِلَيْهِ يُرَدُّ عِلْمُ السَّاعَةِ ۚ وَمَا تَخْرُجُ مِنْ ثَمَرَاتٍ مِنْ أَكْمَامِهَا وَمَا تَحْمِلُ مِنْ أُنْثَىٰ وَلَا تَضَعُ إِلَّا بِعِلْمِهِ ۚ وَيَوْمَ يُنَادِيهِمْ أَيْنَ شُرَكَائِي قَالُوا آذَنَّاكَ مَا مِنَّا مِنْ شَهِيدٍ Ilayhi yuraddu AAilmu alssaAAati wama takhruju min thamaratin min akmamiha wama tahmilu min ontha wala tadaAAu illa biAAilmihi wayawma yunadeehim ayna shurakaee qaloo athannaka ma minna min shaheedin To Him (Alone) is referred the knowledge of the Hour. No fruit comes out of its sheath, nor does a female conceive nor brings forth (young ones), except by His Knowledge. And on the Day when He will call to them (polytheists) (saying): "Where are My (so-called) partners (whom you did invent)?" They will say: "We inform You that none of us bears witness to it (that they are Your partners)!" Hilali & KhanTo him [alone] is attributed knowledge of the Hour. And fruits emerge not from their coverings nor does a female conceive or give birth except with His knowledge. And the Day He will call to them, "Where are My 'partners'?" they will say, "We announce to You that there is [no longer] among us any witness [to that]." Saheeh International(நபியே! "விசாரணைக் காலமாகிய மறுமை எப்பொழுது வரும்?" என அவர்கள் அடிக்கடி உங்களிடம் கேட்கின்றனர். அதற்கு நீங்கள் கூறுங்கள்:) மறுமையைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே விடப்பட்டுள்ளது. (ஆகவே, அதைப் பற்றி நான் ஒன்றும் கூறுவதற்கில்லை.) அவன் அறியாமல் யாதொரு கனியும் அதன் மொட்டிலிருந்து வெளிப்படுவதில்லை. யாதொரு பெண் கர்ப்பமாவதுமில்லை; பிரசவிப்பதுமில்லை. (ஆகவே, அவை அனைத்தையும் அவனே நன்கறிவான். விசாரணைக் காலமாகிய) அந்நாளில் (இறைவன் அவர்களை நோக்கி) "நீங்கள் எனக்கு இணையாக்கியவை(களாகிய பொய்யான தெய்வங்)கள் எங்கே?" என்று கேட்பான். அதற்கு அவர்கள் "எங்களில் அவ்வாறு கூறுபவர்கள் ஒருவருமே (இன்றைய தினம்) இல்லையென்று (எங்கள் இறைவனே!) உனக்கு அறிவித்து விடுகின்றோம்" என்று கூறுவார்கள். தாருல் ஹுதா(இறுதித் தீர்ப்பின்) வேளைக்குரிய ஞானம் அவனுக்கு சொந்தமானது; இன்னும், அவன் அறியாமல் பழங்களில் எதுவும் அவற்றின் பாளைகளிலிருந்து வெளிப்படுவதில்லை; (அவன் அறியாது) எந்தப் பெண்ணும் சூல் கொள்வதுமில்லை; பிரசவிப்பதுமில்லை; (இறுதித் தீர்ப்புக்கான) அந்நாளில் அவன் “எனக்கு இணையாக்கப்பட்டவை எங்கே?” என்று அவர்களிடம் கேட்பான்; அப்போது அவர்கள் “எங்களில் எவருமே (அவ்வாறு) சாட்சி கூறுபவர்கள் இல்லை” என்று நாங்கள் உனக்கு அறிவித்துவிடுகிறோம்” என்று கூறுவார்கள். ஜான் டிரஸ்ட் நிறுவனம்(நபியே!) மறுமை நாள் பற்றிய அறிவு அவன் பக்கமே திருப்பப்படும், அவன் அறிவில் இல்லாது, கனிகளில் எதுவும் அதன் பாளைகளிலிருந்து வெளியாவதுமில்லை, யாதொரு பெண்ணும் கர்ப்பமாவதுமில்லை, அவள் பிரசவிப்பதுமில்லை, மேலும் என்னுடைய இணையாளர்கள் எங்கே? என்று அவன் அவர்களை அழைக்கும் நாளில், “எங்களில் (அதற்கு) சாட்சி கூறுவோர் ஒருவருமே இல்லையென்று நாங்கள் உனக்கு அறிவித்துவிடுகின்றோம்” என்று அவர்கள் கூறுவார்கள். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)The knowledge of the Hour is with Him alone. No fruit emerges from its husk, nor does any female conceive or give birth without His knowledge. On the Day when He will call them, “Where are My [claimed] partners?” They will say, “We declare before you that none of us can bear witness to that.” Ruwwad Center |
41:48 وَضَلَّ عَنْهُمْ مَا كَانُوا يَدْعُونَ مِنْ قَبْلُ ۖ وَظَنُّوا مَا لَهُمْ مِنْ مَحِيصٍ Wadalla AAanhum ma kanoo yadAAoona min qablu wathannoo ma lahum min maheesin And those whom they used to invoke before (in this world) shall disappear from them, and they will perceive that they have no place of refuge (from Allâh's punishment). Hilali & KhanAnd lost from them will be those they were invoking before, and they will be certain that they have no place of escape. Saheeh Internationalஇதற்கு முன்னர் அவர்கள் (இறைவனென) அழைத்துக் கொண்டிருந்தவைகளெல்லாம் அவர்களை விட்டும் மறைந்து போய்விடும். தங்களுக்குத் தப்ப வழியில்லை என்பதையும் அவர்கள் நன்கு அறிந்துகொள்வார்கள். தாருல் ஹுதாஅன்றியும், முன்னால் அவர்கள் (தெய்வங்கள் என) அழைத்துக் கொண்டிருந்தவை அவர்களை விட்டும் மறைந்துவிடும். எனவே அவர்களுக்குப் புகலிடமில்லை என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள். ஜான் டிரஸ்ட் நிறுவனம்இன்னும் (இதற்கு) முன்னர் அவர்கள் (வணக்கத்திற்குரிய தெய்வங்களென) அழைத்துக் கொண்டிருந்தவை(யாவும்) அவர்களை விட்டு மறைந்து விடும், தங்களுக்கு(த் தப்பி) ஓடுமிடமும் இல்லை என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Whatever they used to supplicate before will vanish from them, and they will realize that they have no escape. Ruwwad Center |
41:49 لَا يَسْأَمُ الْإِنْسَانُ مِنْ دُعَاءِ الْخَيْرِ وَإِنْ مَسَّهُ الشَّرُّ فَيَئُوسٌ قَنُوطٌ La yasamu alinsanu min duAAai alkhayri wain massahu alshsharru fayaoosun qanootun Man (the disbeliever) does not get tired of asking good (things from Allâh); but if an evil touches him, then he gives up all hope and is lost in despair. Hilali & KhanMan is not weary of supplication for good [things], but if evil touches him, he is hopeless and despairing. Saheeh International(பிரார்த்தனை செய்து) நன்மையைக் கேட்பதில் மனிதன் (ஒருபொழுதும்) சடைவதில்லை. எனினும், அவனை யாதொரு தீங்கு அணுகும் சமயத்தில் அவன் மனமுடைந்து நம்பிக்கையிழந்து விடுகின்றான். தாருல் ஹுதாமனிதன் (நம்மிடம் பிரார்த்தனை செய்து) நல்லதைக் கேட்பதற்குச் சோர்வடைவதில்லை; ஆனால் அவனைக் கெடுதி தீண்டுமாயின் அவன் மனமுடைந்து நிராசையுள்ளவனாகின்றான். ஜான் டிரஸ்ட் நிறுவனம்(பிரார்த்தித்து) நன்மையைக் கேட்பதில் மனிதன் (ஒரு பொழுதும்) சோர்வடையமாட்டான், இன்னும், அவனை (ஒரு) தீமை தொடுமானால் அப்பொழுது அவன் நம்பிக்கையிழந்தவன், நிராசையானவன். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Man never tires of asking for good, but if evil touches him, he is desperate and despondent. Ruwwad Center |
41:50 وَلَئِنْ أَذَقْنَاهُ رَحْمَةً مِنَّا مِنْ بَعْدِ ضَرَّاءَ مَسَّتْهُ لَيَقُولَنَّ هَٰذَا لِي وَمَا أَظُنُّ السَّاعَةَ قَائِمَةً وَلَئِنْ رُجِعْتُ إِلَىٰ رَبِّي إِنَّ لِي عِنْدَهُ لَلْحُسْنَىٰ ۚ فَلَنُنَبِّئَنَّ الَّذِينَ كَفَرُوا بِمَا عَمِلُوا وَلَنُذِيقَنَّهُمْ مِنْ عَذَابٍ غَلِيظٍ Walain athaqnahu rahmatan minna min baAAdi darraa massathu layaqoolanna hatha lee wama athunnu alssaAAata qaimatan walain rujiAAtu ila rabbee inna lee AAindahu lalhusna falanunabbianna allatheena kafaroo bima AAamiloo walanutheeqannahum min AAathabin ghaleethin And truly, if We give him a taste of mercy from Us, after some adversity (severe poverty or disease) has touched him, he is sure to say: "This is due to my (merit); I think not that the Hour will be established. But if I am brought back to my Lord, surely there will be for me the best (wealth) with Him." Then, We verily will show to the disbelievers what they have done, and We shall make them taste a severe torment. Hilali & KhanAnd if We let him taste mercy from Us after an adversity which has touched him, he will surely say, "This is [due] to me, and I do not think the Hour will occur; and [even] if I should be returned to my Lord, indeed, for me there will be with Him the best." But We will surely inform those who disbelieved about what they did, and We will surely make them taste a massive punishment. Saheeh Internationalமனிதனைப் பிடித்திருந்த கஷ்டத்தை நீக்கிய பின்னர், நம்முடைய அருளை அவன் சுவைக்கும்படி நாம் செய்தாலோ "இது எனக்கு வரவேண்டியதாக இருந்ததே வந்தது. மறுமை ஏற்படும் என்று நான் நம்பவேயில்லை. அவ்வாறே (மறுமை ஏற்பட்டு) எனதிறைவனிடம் நான் கொண்டு போகப்பட்டாலும், அவனிடத்திலும் நிச்சயமாக எனக்கு நன்மையே கிடைக்கும் என்று கூறுகின்றான். ஆனால், எவர்கள் நிராகரிக்கின்றார்களோ, அவர்கள் செய்த (தீய) காரியங்களை அந்நாளில் நாம் நிச்சயமாக அவர்களுக்குத் தெளிவாக எடுத்துக் காண்பிப்போம். அன்றி, கடினமான வேதனையை அவர்கள் சுவைக்கும்படியும் நிச்சயமாக நாம் செய்வோம். தாருல் ஹுதாஎனினும் அவனைத் தீண்டியிருந்த கெடுதிக்குப் பின் நாம் அவனை நம் ரஹ்மத்தை - கிருபையைச் சுவைக்கச் செய்தால், அவன் “இது எனக்கு உரியதே யாகும்; அன்றியும் (விசாரணைக்குரிய) வேளை ஏற்படுமென நான் நினைக்கவில்லை; நான் என்னுடைய இறைவனிடம் திருப்பி அனுப்பப்பட்டாலும், நிச்சயமாக அவனிடத்தில் எனக்கு நன்மையே கிடைக்கும்” என்று திடமாகச் சொல்கிறான். ஆகவே காஃபிர்கள் செய்தவற்றை அவர்களுக்கு நிச்சயமாக நாம் தெரிவிப்போம்; மேலும் நாம் அவர்களை நிச்சயமாக, கடுமையான வேதனையைச் சுவைக்கச் செய்வோம். ஜான் டிரஸ்ட் நிறுவனம்அவனைத் தொட்டிருந்த கெடுதிக்குப் பின்னர், நம்மிடமிருந்து அருளை அவனுக்கு நாம் சுவைக்கச் செய்தால் இது எனக்குரியதே என்றும், மறுமை நாள் நிலைபெறக்கூடியது என நான் எண்ணவில்லை என்றும், (அவ்வாறு மறுமை ஏற்பட்டு) என் இரட்சகனிடம் நான் திருப்பிக் கொண்டு போகப்பட்டாலும், அவனிடத்தில் நிச்சயமாக எனக்கே நன்மை உண்டு என்றும் திடமாகக் கூறுகிறான், எனவே, நிராகரித்தோர்க்கு அவர்கள் செய்தவற்றை (அந்நாளில்) நிச்சயமாக நாம் தெரிவிப்போம், அன்றியும், கடினமான வேதனையிலிருந்து அவர்களை நிச்சயமாக நாம் சுவைக்கச் செய்வோம். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)But if We give him a taste of mercy from Us after being inflicted with adversity, he will surely say, “This is my due, and I do not think that the Hour will ever come, but if I am brought back to my Lord, I will surely have with Him the best [reward].” We will surely inform the disbelievers of what they did, and We will surely make them taste a harsh punishment. Ruwwad Center |
41:51 وَإِذَا أَنْعَمْنَا عَلَى الْإِنْسَانِ أَعْرَضَ وَنَأَىٰ بِجَانِبِهِ وَإِذَا مَسَّهُ الشَّرُّ فَذُو دُعَاءٍ عَرِيضٍ Waitha anAAamna AAala alinsani aAArada wanaa bijanibihi waitha massahu alshsharru fathoo duAAain AAareedin And when We show favour to man, he withdraws and turns away; but when evil touches him, then he has recourse to long supplications. Hilali & KhanAnd when We bestow favor upon man, he turns away and distances himself; but when evil touches him, then he is full of extensive supplication. Saheeh Internationalமனிதனுக்கு நாம் (யாதொரு) அருள் புரிந்தால், அவன் (நமக்கு நன்றி செலுத்துவதற்குப் பதிலாக) நம்மை(யும் நம்முடைய கட்டளைகளையும்) புறக்கணித்து நம்மிலிருந்தும் விலகி விடுகின்றான். அவனை யாதொரு தீங்கு தொடர்ந்தாலோ, வெகு அகல நீளமான பிரார்த்தனை செய்(து அதனை நீக்குமாறு நம்மிடம் கோரு)கின்றான். தாருல் ஹுதாஅன்றியும், மனிதனுக்கு நாம் அருள் புரிந்தால் அவன் (நன்றியுணர்வின்றி) நம்மைப் புறக்கணித்து, விலகிச் செல்கிறான் - ஆனால் அவனை ஒரு கெடுதி தீண்டினால் நீண்ட பிரார்த்தனை செய்(பவனா)கின்றான். ஜான் டிரஸ்ட் நிறுவனம்இன்னும், நாம் அருட்கொடையை மனிதனுக்கு நல்கினால் (நம்மை) அவன் புறக்கணித்து, தன் பக்கமே (திரும்பி முற்றிலும் நன்றி செய்யாது) தூரமாகி விடுகிறான். மேலும், அவனை (ஏதும்) கெடுதி தொட்டால், வெகு நீண்ட பிரார்த்தனையுடையவனாகின்றான். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)When We bestow favor upon man, he turns away and distances himself [from Us]; but when evil touches him, he is full of prolonged supplication. Ruwwad Center |
41:52 قُلْ أَرَأَيْتُمْ إِنْ كَانَ مِنْ عِنْدِ اللَّهِ ثُمَّ كَفَرْتُمْ بِهِ مَنْ أَضَلُّ مِمَّنْ هُوَ فِي شِقَاقٍ بَعِيدٍ Qul araaytum in kana min AAindi Allahi thumma kafartum bihi man adallu mimman huwa fee shiqaqin baAAeedin Say: "Tell me, if it (the Qur'ân) is from Allâh, and you disbelieve in it? Who is more astray than one who is in opposition far away (from Allâh's right path and His obedience). Hilali & KhanSay, "Have you considered: if the Qur'an is from Allah and you disbelieved in it, who would be more astray than one who is in extreme dissension?" Saheeh International"(இவ்வேதம் உண்மையாகவே) அல்லாஹ்விடமிருந்து வந்திருந்தும், அதனை நீங்கள் நிராகரித்துவிட்டால் (அதற்குக்) கடினமான விரோதத்திலிருக்கும் உங்களைவிட வெகுதூரமான வழிகேட்டிலிருப்பவர்கள் யார்? என்பதை நீங்கள் கவனித்தீர்களா?" என்று (நபியே!) நீங்கள் (அவர்களைக்) கேளுங்கள். தாருல் ஹுதா“(இந்த வேதம்) அல்லாஹ்விடமிருந்துள்ளதாக இருந்தும், இதை நீங்கள் நிராகரித்தால், உங்கள் நிலை என்னவாகும்; தூரமான விரோதத்திலுள்ளவர்(களாகிய உங்)களை விட, அதிக வழிகேடன் யார் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?” என்று (நபியே!) நீர் கேளும். ஜான் டிரஸ்ட் நிறுவனம்அ(வ் வேதமான)து அல்லாஹ்விடமிருந்துள்ளதாக இருந்து, பின்னர் இதை நீங்கள் நிராகரித்துவிட்டால், (உங்கள் நிலை என்னவாகும் இவ்வாறு) தூரமான பிரிவினையில் இருக்கும் அவனைவிட மிக வழிகெட்டவன் யார் என்பதை எனக்குத் தெரிவியுங்கள் என்று (நபியே!) நீர் கேட்பீராக! மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Say, “Did you ever consider, if this [Qur’an] is really from Allah, but you reject it, who can be more astray than someone who is in extreme defiance?” Ruwwad Center |
41:53 سَنُرِيهِمْ آيَاتِنَا فِي الْآفَاقِ وَفِي أَنْفُسِهِمْ حَتَّىٰ يَتَبَيَّنَ لَهُمْ أَنَّهُ الْحَقُّ ۗ أَوَلَمْ يَكْفِ بِرَبِّكَ أَنَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ شَهِيدٌ Sanureehim ayatina fee alafaqi wafee anfusihim hatta yatabayyana lahum annahu alhaqqu awalam yakfi birabbika annahu AAala kulli shayin shaheedun We will show them Our Signs in the universe, and in their own selves, until it becomes manifest to them that this (the Qur'ân) is the truth. Is it not sufficient in regard to your Lord that He is a Witness over all things? Hilali & KhanWe will show them Our signs in the horizons and within themselves until it becomes clear to them that it is the truth. But is it not sufficient concerning your Lord that He is, over all things, a Witness? Saheeh Internationalநிச்சயமாக இவ்வேதம் உண்மையானதுதான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு, நம்முடைய அத்தாட்சி களை (உலகத்தின்) பல பாகங்களிலும் காண்பிப்பதுடன், அவர்களுக்குள்ளாகவும் அதிசீக்கிரத்தில் நாம் (அத்தாட்சிகளைக்) காண்பிப்போம். (நபியே!) உங்கள் இறைவன் நிச்சயமாக அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்பது (உங்களுக்கு) போதாதா? தாருல் ஹுதாநிச்சயமாக (இவ்வேதம்) உண்மையானது தான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல கோணங்களிலும், அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம் அவர்களுக்குக் காண்பிப்போம்; (நபியே!) உம் இறைவன் நிச்சயமாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது உமக்குப் போதுமானதாக இல்லையா? ஜான் டிரஸ்ட் நிறுவனம்நிச்சயமாக (வேதமாகிய) இது, உண்மையானதுதான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் வரையில், (உலகின்) பல பாகங்களிலும், அவர்களிலும் நம்முடைய அத்தாட்சிகளை அவர்களுக்கு நாம் காண்பிப்போம், (நபியே!) உமதிரட்சனுக்கு, நிச்சயமாக அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் (அதுபற்றி நன்கறிந்து) சாட்சியாக இருக்கிறான் என்பது போதுமானதாக இல்லையா? மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)We will show them Our signs in the universe and in their own selves, until it becomes clear to them that this [Qur’an] is the truth. Is it not enough that your Lord is a Witness over all things? Ruwwad Center |
41:54 أَلَا إِنَّهُمْ فِي مِرْيَةٍ مِنْ لِقَاءِ رَبِّهِمْ ۗ أَلَا إِنَّهُ بِكُلِّ شَيْءٍ مُحِيطٌ Ala innahum fee miryatin min liqai rabbihim ala innahu bikulli shayin muheetun Verily, they are in doubt concerning the Meeting with their Lord? (i.e. Resurrection after their death, and their return to their Lord). Verily, He it is Who is surrounding all things! Hilali & KhanUnquestionably, they are in doubt about the meeting with their Lord. Unquestionably He is, of all things, encompassing. Saheeh Internationalநிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனைச் சந்திப்பதைப் பற்றியும் சந்தேகத்தில் இருக்கின்றார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். அவன் எல்லாவற்றையும் (தன் ஞானத்தால்) சூழ்ந்து (அறிந்து) கொண்டுமிருக்கின்றான் என்பதையும் நிச்சயமாக (நபியே! நீங்கள்) அறிந்துகொள்ளுங்கள். தாருல் ஹுதாஅறிந்து கொள்க: நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனைச் சந்திப்பது குறித்துச் சந்தேகத்தில் இருக்கிறார்கள்; அறிந்து கொள்க: நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்து (அறிந்தவனாக) இருக்கிறான். ஜான் டிரஸ்ட் நிறுவனம்நிச்சயமாக அவர்கள், தங்கள் இரட்சகனை சந்திப்பதைப்பற்றி சந்தேகத்தில் இருக்கிறார்கள் என்பதை (நபியே! நீர்) அறிந்து கொள்வீராக! நிச்சயமாக அவன், ஒவ்வொரு பொருளைப்பற்றியும் (தன் அறிவால்) சூழ்ந்து (அறிந்து) கொண்டிருக்கிறான் என்பதையும் அறிந்து கொள்வீராக! மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Indeed, they are in doubt concerning the meeting with their Lord; He truly encompasses all things. Ruwwad Center |