بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ |
52:1 وَالطُّورِ Waalttoori By the Tûr (Mount); Hilali & KhanBy the mount Saheeh Internationalதூர் என்னும் மலையின் மீது சத்தியமாக! தாருல் ஹுதாதூர் (மலை) மீது சத்தியமாக! ஜான் டிரஸ்ட் நிறுவனம்தூர் (மலை) மீது சத்தியமாக! மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)By the mount of Tūr, Ruwwad Center |
52:2 وَكِتَابٍ مَسْطُورٍ Wakitabin mastoorin And by the Book Inscribed. Hilali & KhanAnd [by] a Book inscribed Saheeh Internationalவிரித்த ஏட்டில் வரி வரியாக தாருல் ஹுதாஎழுதப்பட்ட வேதத்தின் மீது சத்தியமாக! ஜான் டிரஸ்ட் நிறுவனம்எழுதப்பட்ட நூலின் மீது சத்தியமாக! மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)and by the Book inscribed Ruwwad Center |
52:3 فِي رَقٍّ مَنْشُورٍ Fee raqqin manshoorin In parchment unrolled. Hilali & KhanIn parchment spread open Saheeh Internationalஎழுதப்பட்ட வேத நூலின் மீது சத்தியமாக! தாருல் ஹுதாவிரித்து வைக்கப்பட்ட ஏட்டில்- ஜான் டிரஸ்ட் நிறுவனம்விரித்துவைக்கப்பட்ட ஏட்டில்_ மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)on an unrolled parchment, Ruwwad Center |
52:4 وَالْبَيْتِ الْمَعْمُورِ Waalbayti almaAAmoori And by Al-Bait Al-Ma'mûr (the house over the heavens parallel to the Ka'bah at Makkah, continuously visited by the angels); Hilali & KhanAnd [by] the frequented House Saheeh Internationalபைத்துல் மஃமூர் (என்னும் ஆலயத்தின்) மீது சத்தியமாக! தாருல் ஹுதாபைத்துல் மஃமூர் மீது சத்தியமாக! ஜான் டிரஸ்ட் நிறுவனம்பைத்துல் மஃமூர் மீது சத்தியமாக! மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)and by the much-frequented House [in heaven], Ruwwad Center |
52:5 وَالسَّقْفِ الْمَرْفُوعِ Waalssaqfi almarfooAAi And by the roof raised high (i.e. the heaven). Hilali & KhanAnd [by] the heaven raised high Saheeh Internationalஉயர்ந்த முகட்டின் மீது சத்தியமாக! தாருல் ஹுதாஉயர்த்தப்பட்ட முகட்டின் மீது சத்தியமாக! ஜான் டிரஸ்ட் நிறுவனம்உயர்த்தப்பட்ட முகட்டின் மீது சத்தியமாக! மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)and by the canopy raised high, Ruwwad Center |
52:6 وَالْبَحْرِ الْمَسْجُورِ Waalbahri almasjoori And by the sea kept filled (or it will be fire kindled on the Day of Resurrection). Hilali & KhanAnd [by] the sea filled [with fire], Saheeh International(தொடர்ந்து) அலைகள் மோதிக் கொண்டிருக்கும் சமுத்திரத்தின் மீது சத்தியமாக! தாருல் ஹுதாபொங்கும் கடலின் மீது சத்தியமாக! ஜான் டிரஸ்ட் நிறுவனம்(நெருப்பினால்) மூட்டப்பட்ட கடலின் மீது சத்தியமாக! மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)and by the sea ever filled. Ruwwad Center |
52:7 إِنَّ عَذَابَ رَبِّكَ لَوَاقِعٌ Inna AAathaba rabbika lawaqiAAun Verily, the torment of your Lord will surely come to pass. Hilali & KhanIndeed, the punishment of your Lord will occur. Saheeh International(நபியே!) நிச்சயமாக உங்களது இறைவனின் வேதனை (அவர்களுக்கு) வந்தே தீரும். தாருல் ஹுதாநிச்சயமாக உம்முடைய இறைவன் (விதித்திருக்கும்) வேதனை சம்பவிக்கும். ஜான் டிரஸ்ட் நிறுவனம்(நபியே!) நிச்சயமாக உமதிரட்சகனின் வேதனை (அவர்களுக்கு) நிகழும்_ மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)The punishment of your Lord will surely come to pass; Ruwwad Center |
52:8 مَا لَهُ مِنْ دَافِعٍ Ma lahu min dafiAAin There is none that can avert it. Hilali & KhanOf it there is no preventer. Saheeh Internationalஎவராலும் அதனைத் தடுக்க முடியாது. தாருல் ஹுதாஅதனைத் தடுப்பவர் எவருமில்லை. ஜான் டிரஸ்ட் நிறுவனம்அதனைத் தடுப்பவர் எவருமில்லை. மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)there is none who can avert it. Ruwwad Center |
52:9 يَوْمَ تَمُورُ السَّمَاءُ مَوْرًا Yawma tamooru alssamao mawran On the Day when the heaven will shake with a dreadful shaking, Hilali & KhanOn the Day the heaven will sway with circular motion Saheeh Internationalவானமும் துடிதுடித்துக் குமுறும் நாளில், தாருல் ஹுதாவானம் துடித்துச் சுற்றிக் குமுறும் நாளில்; ஜான் டிரஸ்ட் நிறுவனம்வானம் கடுமையாக அசைந்து (திருகையைப் போன்று) சுற்றும் நாளில், மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)On the Day when the heaven will convulse violently, Ruwwad Center |
52:10 وَتَسِيرُ الْجِبَالُ سَيْرًا Wataseeru aljibalu sayran And the mountains will move away with a (horrible) movement. Hilali & KhanAnd the mountains will pass on, departing - Saheeh Internationalமலைகள் (பெயர்ந்து) பறந்தோடும் (நாளில்) தாருல் ஹுதாஇன்னும், மலைகள் தூள் தூளாகி விடும் போது, ஜான் டிரஸ்ட் நிறுவனம்இன்னும், மலைகள் (இடம் பெயர்ந்து) ஒரே நடையாக நடக்கும். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)and the mountains will move a horrible movement, Ruwwad Center |
52:11 فَوَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ Fawaylun yawmaithin lilmukaththibeena Then woe that Day to the deniers. Hilali & KhanThen woe, that Day, to the deniers, Saheeh International(நபியே! உங்களைப்) பொய்யாக்கும் இவர்களுக்கு அந்நாளில் கேடுதான். தாருல் ஹுதா(சன்மார்க்கத்தை எதிர்த்து அதைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தோருக்கு அந்நாளில் கேடுதான். ஜான் டிரஸ்ட் நிறுவனம்(நபியே! உம்மைப்) பொய்ப்பித்துக் கொண்டிருந்தோருக்கு அந்நாளில் கேடுதான். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)then woe to the deniers on that Day, Ruwwad Center |
52:12 الَّذِينَ هُمْ فِي خَوْضٍ يَلْعَبُونَ Allatheena hum fee khawdin yalAAaboona Who are playing in falsehood. Hilali & KhanWho are in [empty] discourse amusing themselves. Saheeh Internationalஅவர்கள் (வீண் விதண்டாவாதத்தில்) மூழ்கி விளையாடிக் கொண்டு இருக்கின்றனர். தாருல் ஹுதாஎவர்கள் (பொய்யானவற்றில்) மூழ்கி விளையாடிக் கொண்டிருக்கின்றனரோ, ஜான் டிரஸ்ட் நிறுவனம்அவர்கள் எத்தகையோரென்றால், வீண் விதண்டாவாதத்தில் (மூழ்கி) விளையாடுகின்றனர். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)those who amuse themselves in falsehood. Ruwwad Center |
52:13 يَوْمَ يُدَعُّونَ إِلَىٰ نَارِ جَهَنَّمَ دَعًّا Yawma yudaAAAAoona ila nari jahannama daAAAAan The Day when they will be pushed down by force to the fire of Hell, with a horrible, forceful pushing. Hilali & KhanThe Day they are thrust toward the fire of Hell with a [violent] thrust, [its angels will say], Saheeh Internationalஅவர்கள் நரகத்தின் பக்கம் (அடித்து) வெருட்டி ஓட்டப்படும் நாளில், தாருல் ஹுதாஅந்நாளில் அவர்கள் நரக நெருப்பின் பால் இழுக்கப்படுவோராக இழுக்கப்படுவர். ஜான் டிரஸ்ட் நிறுவனம்அவர்கள் நரகத்தின்பால் ஒரே தள்ளாகத் தள்ளப்படும் நாளில். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)On the Day when they will be shoved into the Fire forcefully, Ruwwad Center |
52:14 هَٰذِهِ النَّارُ الَّتِي كُنْتُمْ بِهَا تُكَذِّبُونَ Hathihi alnnaru allatee kuntum biha tukaththiboona This is the Fire which you used to deny. Hilali & Khan"This is the Fire which you used to deny. Saheeh International(அவர்களை நோக்கி) "நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்த நரக நெருப்பு இதுதான்" என்று கூறப்படும். தாருல் ஹுதாஅந்நாளில்: (அவர்களுக்குக் கூறப்படும்:) “நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்த (நரக) நெருப்பு இதுதான். ஜான் டிரஸ்ட் நிறுவனம்(அவர்களிடம்) “நீங்கள் எதனைப் பொய்யாக்கிக் கொண்டிருந்தீர்களோ, அந்(நரக) நெருப்பு இதுதான்” (என்று கூறப்படும்.) மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)[They will be told,] “This is the Fire which you used to deny. Ruwwad Center |
52:15 أَفَسِحْرٌ هَٰذَا أَمْ أَنْتُمْ لَا تُبْصِرُونَ Afasihrun hatha am antum la tubsiroona Is this magic or do you not see? Hilali & KhanThen is this magic, or do you not see? Saheeh Internationalஇது வெறும் சூனியம்தானா? இதனை நீங்கள் (உங்கள் கண்ணால்) பார்க்கவில்லையா? தாருல் ஹுதா“இது சூனியம் தானா? அல்லது பார்க்க முடியாது (குருடர்களாக) ஆகிவிட்டீர்களா? ஜான் டிரஸ்ட் நிறுவனம்“எனவே இது (வெறும்) சூனியம்தானா? அல்லது (இதனை) நீங்கள் (உங்கள் கண்ணால்) காணமுடியாதவர்களாகி விட்டீர்களா?” மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Is this [punishment] magic, or do you not see? Ruwwad Center |
52:16 اصْلَوْهَا فَاصْبِرُوا أَوْ لَا تَصْبِرُوا سَوَاءٌ عَلَيْكُمْ ۖ إِنَّمَا تُجْزَوْنَ مَا كُنْتُمْ تَعْمَلُونَ Islawha faisbiroo aw la tasbiroo sawaon AAalaykum innama tujzawna ma kuntum taAAmaloona Taste you therein its heat and whether you are patient or impatient, it is all the same. You are only being requited for what you used to do. Hilali & Khan[Enter to] burn therein; then be patient or impatient - it is all the same for you. You are only being recompensed [for] what you used to do." Saheeh Internationalஅதில் நுழைந்து விடுங்கள். (அதன் வேதனையைப் பொறுத்துச்) சகித்துக் கொண்டிருங்கள்; அல்லது சகிக்காதிருங்கள். (இரண்டும்) உங்களுக்குச் சமமே! (வேதனையில் ஓர் அணுவளவும் குறைக்க முடியாது.) நீங்கள் செய்தவைகளுக்குரிய கூலிதான் உங்களுக்குக் கொடுக்கப்படும். தாருல் ஹுதா“நீங்கள் அதில் நுழையுங்கள்; பிறகு நீங்கள் (அதன் வேதனையைச்) சகித்துக் கொள்ளுங்கள்; அல்லது சகித்துக் கொள்ளாதிருங்கள்; (இரண்டும்) உங்களுக்குச் சமமே; நிச்சயமாக நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றிற்காகத்தான் நீங்கள் கூலி கொடுக்கப்படுகிறீர்கள்.” ஜான் டிரஸ்ட் நிறுவனம்“இதில் நீங்கள் நுழைந்து விடுங்கள், (இதன் வேதனையைச் சகித்துப்) பொறுமையாயிருங்கள், அல்லது பொறுமையாய் இல்லாதிருங்கள், (இரண்டும்) உங்களுக்குச் சமமே, (வேதனையில் ஓர் அணுவளவும் குறைக்கப் படமாட்டீர்கள்). நீங்கள் கூலி கொடுக்கப்படுவதெல்லாம் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றிற்குத்தான்” (என்று கூறப்படும்). மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Burn in it, whether you bear it patiently or impatiently, it makes no difference to you; you are recompensed only for what you used to do.” Ruwwad Center |
52:17 إِنَّ الْمُتَّقِينَ فِي جَنَّاتٍ وَنَعِيمٍ Inna almuttaqeena fee jannatin wanaAAeemin Verily, the Muttaqûn (the pious. See V.2:2) will be in Gardens (Paradise) and Delight. Hilali & KhanIndeed, the righteous will be in gardens and pleasure, Saheeh Internationalஅல்லாஹ்வுக்குப் பயந்து நடந்தவர்கள் நிச்சயமாக மிக சுகம் தரும் சுவனபதிகளில் இ(ன்பம் அனுபவித்துக் கொண்டி) ருப்பார்கள். தாருல் ஹுதாநிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் சுவர்க்கச் சோலைகளிலும், (இறையருளில்) இன்புற்றும் இருப்பார்கள். ஜான் டிரஸ்ட் நிறுவனம்நிச்சயமாக பயபக்தியுடையவர்கள் சுவனபதிகளிலும், (அல்லாஹ்வின்) அருட்கொடையிலும் (திளைத்து) இருப்பார்கள். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Indeed, the righteous will be in gardens and bliss, Ruwwad Center |
52:18 فَاكِهِينَ بِمَا آتَاهُمْ رَبُّهُمْ وَوَقَاهُمْ رَبُّهُمْ عَذَابَ الْجَحِيمِ Fakiheena bima atahum rabbuhum wawaqahum rabbuhum AAathaba aljaheemi Enjoying that which their Lord has bestowed on them, and (the fact that) their Lord saved them from the torment of the blazing Fire. Hilali & KhanEnjoying what their Lord has given them, and their Lord protected them from the punishment of Hellfire. Saheeh Internationalதங்கள் இறைவன் தங்களுக்கு அளித்திருப்பவைகளைப் பற்றியும், நரக வேதனையிலிருந்து தங்களைத் தங்கள் இறைவன் பாதுகாத்துக் கொண்டதைப் பற்றியும் மகிழ்ச்சியடைந்தவர்களாக இருப்பார்கள். தாருல் ஹுதாஅவர்களுடைய இறைவன் அவர்களுக்கு அளித்ததை அனுபவித்தவர்களாகயிருப்பார்கள் - அன்றியும், அவர்களுடைய இறைவன் நரக வேதனையிலிருந்து அவர்களைப் பாதுகாத்துக் கொண்டான். ஜான் டிரஸ்ட் நிறுவனம்தங்கள் இரட்சகன் தங்களுக்கு அளித்திருப்பவைகளை அனுபவித்தவர்களாக இருப்பர், மேலும், அவர்களின் இரட்சகன் அவர்களை நரக வேதனையிலிருந்து காத்துக் கொண்டான். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)enjoying what their Lord has given them, and their Lord protected them from the punishment of the Blazing Fire. Ruwwad Center |
52:19 كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ Kuloo waishraboo haneean bima kuntum taAAmaloona "Eat and drink with happiness because of what you used to do." Hilali & Khan[They will be told], "Eat and drink in satisfaction for what you used to do." Saheeh International(அவர்களை நோக்கி) "நீங்கள் செய்த நன்மைகளின் காரணமாக (இதில் உள்ளவைகளை) மிக்க தாராளமாகப் புசித்துக் கொண்டும், பருகிக் கொண்டும் இருங்கள்" (என்றும் கூறப்படும்). தாருல் ஹுதா(அவர்களுக்குக் கூறப்படும்:) “நீங்கள் (நன்மைகளைச்) செய்து கொண்டிருந்ததற்காக, (சுவர்க்கத்தில்) தாராளமாகப் புசியுங்கள், பருகுங்கள்.” ஜான் டிரஸ்ட் நிறுவனம்(அவர்களிடம் உலகில் நன்மைகளிலிருந்து) “நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்காக மகிழ்ச்சியுடன் உண்ணுங்கள் இன்னும் பருகுங்கள்” (என்றும் கூறப்படும்). மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)“Eat and drink pleasantly for what you used to do, Ruwwad Center |
52:20 مُتَّكِئِينَ عَلَىٰ سُرُرٍ مَصْفُوفَةٍ ۖ وَزَوَّجْنَاهُمْ بِحُورٍ عِينٍ Muttakieena AAala sururin masfoofatin wazawwajnahum bihoorin AAeenin They will recline (with ease) on thrones arranged in ranks. And We shall marry them to Hûr (fair females) with wide lovely eyes. Hilali & KhanThey will be reclining on thrones lined up, and We will marry them to fair women with large, [beautiful] eyes. Saheeh Internationalஅணி அணியாகப் போடப்பட்ட கட்டில்களி(ல் உள்ள பஞ்சணைகளி)ன் மீது சாய்ந்தவண்ணமாக இருப்பார்கள். நாம் அவர்களுக்கு ("ஹூருல்ஈன்" என்னும்) கண்ணழகிகளாகிய கன்னிப் பெண்களை திருமணம் செய்து வைப்போம். தாருல் ஹுதாஅணி அணியாகப் போடப்பட்ட மஞ்சங்களின் மீது சாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள்; மேலும், நாம் அவர்களுக்கு, நீண்ட கண்களையுடைய (ஹூருல் ஈன்களை) மணம் முடித்து வைப்போம். ஜான் டிரஸ்ட் நிறுவனம்அணியணியாகப் போடப்பட்ட கட்டில்களி(ல் உள்ள மஞ்சங்களி)ன் மீது சாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள், நாம் அவர்களுக்கு (ஹூருல் ஈன் என்னும்) கண்ணழகி(களாகிய கன்னிகை)களை மணமுடித்து வைப்போம். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)reclining on lined up couches”. And We will marry them to houris of wide beautiful eyes. Ruwwad Center |
52:21 وَالَّذِينَ آمَنُوا وَاتَّبَعَتْهُمْ ذُرِّيَّتُهُمْ بِإِيمَانٍ أَلْحَقْنَا بِهِمْ ذُرِّيَّتَهُمْ وَمَا أَلَتْنَاهُمْ مِنْ عَمَلِهِمْ مِنْ شَيْءٍ ۚ كُلُّ امْرِئٍ بِمَا كَسَبَ رَهِينٌ Waallatheena amanoo waittabaAAathum thurriyyatuhum bieemanin alhaqna bihim thurriyyatahum wama alatnahum min AAamalihim min shayin kullu imriin bima kasaba raheenun And those who believe and whose offspring follow them in Faith, – to them shall We join their offspring, and We shall not decrease the reward of their deeds in anything. Every person is a pledge for that which he has earned. Hilali & KhanAnd those who believed and whose descendants followed them in faith - We will join with them their descendants, and We will not deprive them of anything of their deeds. Every person, for what he earned, is retained. Saheeh Internationalஎந்த நம்பிக்கையாளர்களின் சந்ததிகள், தங்கள் பெற்றோர்களைப் பின்பற்றி நம்பிக்கை கொள்கின்றார்களோ (அந்தச் சந்ததிகளின் நன்மைகள் குறைவாக இருந்தும் அவர்களின் பெற்றோர்கள் திருப்தியடையும் பொருட்டு) அவர்களுடைய சந்ததிகளையும் அவர்களுடன் (சுவனபதியில்) சேர்த்துவிடுவோம். இதனால் அவர்களுடைய பெற்றோர்களின் நன்மைகளில் ஒன்றையுமே நாம் குறைத்துவிட மாட்டோம். ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய செயலுக்குப் பிணையாக இருக்கின்றான். தாருல் ஹுதாஎவர்கள் ஈமான் கொண்டு, அவர்களுடைய சந்ததியாரும் ஈமானில் அவர்களைப் பின் தொடர்கிறார்களோ, அவர்களுடைய அந்த சந்ததியினரை அவர்களுடன் (சுவனத்தில் ஒன்று) சேர்த்து விடுவோம். (இதனால்) அவர்களுடைய செயல்களில் எந்த ஒன்றையும், நாம் அவர்களுக்குக் குறைத்து விட மாட்டோம் - ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதித்த செயல்களுக்குப் பிணையாக இருக்கின்றான். ஜான் டிரஸ்ட் நிறுவனம்இன்னும் விசுவாசங்கொண்டார்களே அத்தகையோர், அவர்களுடைய சந்ததிகளும் விசுவாசத்தின் மூலம் அவர்களை பின்பற்றினார்கள், (அத்தகைய அந்தச் சந்ததியினரின் படித்தரங்கள் குறைவாக இருப்பினும் அவர்களின் பெற்றோர்கள் இருக்கும் உயர் பதவிக்கு) அவர்களுடன் (சுவனபதியில்) அவர்களின் சந்ததியினரை சேர்த்து விடுவோம், (இதனால்) அவர்களுடைய (பெற்றோர்களின் நன்மையான) செயல்களில் எதனையும் அவர்களுக்கு நாம் குறைத்து விடமாட்டோம், ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதித்ததைக் கொண்டு பிணையாக்கபட்டிருக்கின்றான். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)As for those who believe and their offspring follow them in faith, We will cause their offspring to join them, and will not detract anything from [the reward of] their deeds. Everyone will be accountable for what he earned. Ruwwad Center |
52:22 وَأَمْدَدْنَاهُمْ بِفَاكِهَةٍ وَلَحْمٍ مِمَّا يَشْتَهُونَ Waamdadnahum bifakihatin walahmin mimma yashtahoona And We shall provide them with fruit and meat such as they desire. Hilali & KhanAnd We will provide them with fruit and meat from whatever they desire. Saheeh Internationalஅவர்கள் விரும்பிய (பற்பல வகை) கனி வர்க்கங்களையும், மாமிசங்களையும் அவர்களுக்கு (அனுதினமும்) நாம் (ஏராளமாகக்) கொடுத்து வருவோம். தாருல் ஹுதாஇன்னும் அவர்கள் விரும்பும் கனிவகைகளையும் இறைச்சியையும், நாம் அவர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருப்போம். ஜான் டிரஸ்ட் நிறுவனம்(பல வகையான) பழத்தையும், அவர்கள் விரும்பக்கூடியதிலிருந்து (பலவகையான) இறைச்சியையும் கொண்டு அவர்களும் நாம் (ஏராளமாகக் கொடுத்து) அதிகப்படுத்துவோம். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)And We will provide them with whatever fruit and meat they desire. Ruwwad Center |
52:23 يَتَنَازَعُونَ فِيهَا كَأْسًا لَا لَغْوٌ فِيهَا وَلَا تَأْثِيمٌ YatanazaAAoona feeha kasan la laghwun feeha wala tatheemun There they shall pass from hand to hand a (wine) cup, free from any Laghw (dirty, false, evil vain talk between them), and free from sin (because it will be lawful for them to drink). Hilali & KhanThey will exchange with one another a cup [of wine] wherein [results] no ill speech or commission of sin. Saheeh Internationalஒருவருடைய கிண்ணத்தை மற்றொருவர் (களிப்பால்) பிடுங்கிக் கொள்வார். (அதனால்) மனத்தாங்கலோ அல்லது மரியாதைக்குறைவோ ஏற்படாது. தாருல் ஹுதா(அமுதம் நிறைந்த) ஒருவர் கோப்பையை மற்றொருவர் பறித்துக் கொள்வர்; ஆனால் அதில் வீணுமில்லை, குற்றமிழைப்பதும் இல்லை. ஜான் டிரஸ்ட் நிறுவனம்அ(ச்சுவனத்)தில் ஒருவருக்கொருவர் (மதுக்) கோப்பையை பரிமாறிக் கொள்வர், (அதில்) வீணானது இருக்காது, (அதை அருந்துவதால்) குற்றமிழைப்பதோ ஏற்படுவதில்லை. மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)They will pass around to one another a glass [of pure wine] which does not lead to idle talk or sin. Ruwwad Center |
52:24 وَيَطُوفُ عَلَيْهِمْ غِلْمَانٌ لَهُمْ كَأَنَّهُمْ لُؤْلُؤٌ مَكْنُونٌ Wayatoofu AAalayhim ghilmanun lahum kaannahum luluon maknoonun And there will go round boy-servants of theirs, to serve them as if they were preserved pearls. Hilali & KhanThere will circulate among them [servant] boys [especially] for them, as if they were pearls well-protected. Saheeh Internationalஅவர்களுக்குப் பணி செய்ய எந்நேரமும் சிறுவர்கள் பலர் சுற்றிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் பதிந்த முத்துக்களைப் போல் (பிரகாசமாகத் தோற்றமளிப்பார்கள்.) தாருல் ஹுதாஅவர்களுக்கு(ப் பணி விடைக்கு) உள்ள சிறுவர்கள், அவர்களைச் சுற்றிக் கொண்டே இருப்பார்கள்; அவர்கள் பதித்த ஆணி முத்துகளைப் போல் (இருப்பார்கள்). ஜான் டிரஸ்ட் நிறுவனம்மேலும், அவர்களுக்குரிய (பணிபுரியும்) சிறுவர்கள் அவர்களைச் சுற்றிகொண்டே இருப்பார்கள், அவர்கள் (சிப்பிகளில்) மறைத்து வைக்கப்பட்ட (கைபடாத) முத்துக்களைப் போல் (பிரகாசமான தோற்றமளிப்பவர்களாக) இருப்பர். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)They will be served by their servant boys, as if they were well-protected pearls. Ruwwad Center |
52:25 وَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ يَتَسَاءَلُونَ Waaqbala baAAduhum AAala baAAdin yatasaaloona And some of them draw near to others, questioning. Hilali & KhanAnd they will approach one another, inquiring of each other. Saheeh Internationalஅவர்களில் ஒருவர் மற்றொருவரை நோக்கியிருந்து கொண்டு (உல்லாசமாக) உரையாட ஆரம்பித்து, தாருல் ஹுதாஅவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி விசாரித்துக் கொள்வார்கள். ஜான் டிரஸ்ட் நிறுவனம்மேலும், அவர்கள் ஒருவருக்கொருவர் விசாரித்துக் கொள்பவர்களாக அவர்களில் சிலர் (மற்ற) சிலரின் பால் முன்னோக்கியிருப்பார்கள். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)They will turn to one another with questions. Ruwwad Center |
52:26 قَالُوا إِنَّا كُنَّا قَبْلُ فِي أَهْلِنَا مُشْفِقِينَ Qaloo inna kunna qablu fee ahlina mushfiqeena Saying: "Aforetime, we were afraid (of the punishment of Allâh) in the midst of our families. Hilali & KhanThey will say, "Indeed, we were previously among our people fearful [of displeasing Allah]. Saheeh International"இதற்கு முன்னர், நாம் நம்முடைய குடும்பத்தைப் பற்றி (அவர்களுடைய கதி என்னவாகுமோ என்று) மெய்யாகவே பயந்து கொண்டே இருந்தோம். தாருல் ஹுதா“இதற்கு முன் (உலகில்) நாம் நம் குடும்பத்தாரிடையே இருந்த போது (வேதனை பற்றி) நிச்சயமாக அஞ்சியவர்களாகவே இருந்தோம். ஜான் டிரஸ்ட் நிறுவனம்“நாங்கள் முன்பு, எங்கள் குடும்பத்தாரிடையே (அவர்களுடைய நிலை என்னவாகுமோ என்று) நிச்சயமாக பயந்தவர்களாக இருந்தோம்” என்று கூறுவார்கள். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)They will say, “Before this, we used to be in awe [of Allah] when we were living among our people. Ruwwad Center |
52:27 فَمَنَّ اللَّهُ عَلَيْنَا وَوَقَانَا عَذَابَ السَّمُومِ Famanna Allahu AAalayna wawaqana AAathaba alssamoomi "So Allâh has been gracious to us, and has saved us from the torment of the Fire. Hilali & KhanSo Allah conferred favor upon us and protected us from the punishment of the Scorching Fire. Saheeh Internationalஆயினும், அல்லாஹ் நம்மீது அருள் புரிந்து கொடிய வேதனையிலிருந்து நம்மை(யும் நம் குடும்பத்தினரையும்) காப்பாற்றினான். தாருல் ஹுதா“ஆனால் அல்லாஹ் நம்மீது உபகாரம் செய்து கொடிய வேதனையிலிருந்து நம்மை காப்பாற்றினான். ஜான் டிரஸ்ட் நிறுவனம்“ஆயினும், அல்லாஹ் எங்கள் மீது பேருபகாரம் செய்து நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்துவிட்டான். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Therefore Allah conferred favor upon us and protected us from the punishment of the Scorching Fire. Ruwwad Center |
52:28 إِنَّا كُنَّا مِنْ قَبْلُ نَدْعُوهُ ۖ إِنَّهُ هُوَ الْبَرُّ الرَّحِيمُ Inna kunna min qablu nadAAoohu innahu huwa albarru alrraheemu "Verily, We used to invoke Him (Alone and none else) before. Verily, He is Al-Barr (the Most Subtle, Kind, Courteous, and Generous), the Most Merciful." Hilali & KhanIndeed, we used to supplicate Him before. Indeed, it is He who is the Beneficent, the Merciful." Saheeh Internationalஇதற்கு முன்னர் (வேதனையிலிருந்து நம்மை காக்கும்படி) மெய்யாகவே நாம் அவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டு இருந்தோம். மெய்யாகவே அவன் நன்றி செய்பவனும் பேரன்புடையவனுமாக இருக்கின்றான்" என்றும் கூறுவார்கள். தாருல் ஹுதா“நிச்சயமாக நாம் முன்னே (உலகில்) அவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தோம்; நிச்சயமாக அவனே மிக்க நன்மை செய்பவன்; பெருங்கிருபையுடையவன்.” ஜான் டிரஸ்ட் நிறுவனம்நிச்சயமாக (இதற்கு) முன்னர் (வேதனையிலிருந்து எங்களைக் காக்குமாறு) நாங்கள் அவனை (பிரார்த்தனை செய்து) அழைத்துக் கொண்டிருந்தோம், நிச்சயமாக, அவனே மிகக் கூடுதலாக உபகாரம் செய்பவன், மிகக்கிருபையுடையவன்” (என்றும் கூறுவார்கள்). மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Indeed, we used to call upon Him before. He is indeed the Most Kind, Most Merciful.” Ruwwad Center |
52:29 فَذَكِّرْ فَمَا أَنْتَ بِنِعْمَتِ رَبِّكَ بِكَاهِنٍ وَلَا مَجْنُونٍ Fathakkir fama anta biniAAmati rabbika bikahin wala majnoonin Therefore, remind (mankind of Islâmic Monotheism, O Muhammad [sal-Allâhu 'alayhi wa sallam]). By the Grace of Allâh, you are neither a soothsayer nor a madman. Hilali & KhanSo remind [O Muhammad], for you are not, by the favor of your Lord, a soothsayer or a madman. Saheeh International(நபியே!) நீங்கள் (நிராகரிப்பவர்களுக்கு வேதனையை) ஞாபகமூட்டிக்கொண்டே இருங்கள். உங்களது இறைவனின் அருளால் நீங்கள் குறி சொல்பவருமல்ல; பைத்தியக்காரருமல்ல. தாருல் ஹுதாஎனவே, (நபியே! நீர் மக்களுக்கு நல்லுபதேசத்தால்) நினைவுறுத்திக் கொண்டிருப்பீராக! உம்முடைய இறைவனின் அருளால், நீர் குறிகாரரும் அல்லர்; பைத்தியக்காரருமல்லர். ஜான் டிரஸ்ட் நிறுவனம்ஆகவே, (நபியே! அல்லாஹ்வின் தூதை எத்திவைத்து, அவன் இறக்கிவைத்த குர் ஆனின் மூலம்) அவர்களுக்கு நினைவுபடுத்துவீராக! உமது இரட்சகனின் அருளால் நீர் குறிகாரரல்லர், பைத்திக்காரருமல்லர். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)So keep exhorting [O Prophet], for you are not, by the grace of your Lord, a soothsayer or a madman. Ruwwad Center |
52:30 أَمْ يَقُولُونَ شَاعِرٌ نَتَرَبَّصُ بِهِ رَيْبَ الْمَنُونِ Am yaqooloona shaAAirun natarabbasu bihi rayba almanooni Or do they say: "(Muhammad [sal-Allâhu 'alayhi wa sallam] is) a poet! We await for him some calamity by time!" Hilali & KhanOr do they say [of you], "A poet for whom we await a misfortune of time?" Saheeh International(உங்களைப் பற்றி) அவர்கள் (நீங்கள்) ஒரு கவிஞர்தான் என்று கூறுகின்றனரா? (இக்கூற்றுக்குத் தண்டனையாக அவர்கள் மீது சம்பவிக்கக் கூடிய) காலச்சக்கரத்தை எதிர்பார்த்திருப்போம். தாருல் ஹுதாஅல்லது அவர்கள் (உம்மைப் பற்றி, “அவர்) புலவர்; அவருக்குக் காலத்தின் துன்பத்தைக் கொண்டு நாங்கள் வழி பார்த்துக் இருக்கிறோம்” என்று கூறுகிறார்களா? ஜான் டிரஸ்ட் நிறுவனம்அல்லது_(உம்மைப்பற்றி, ”அவர்) ஒரு கவிஞர் தாம், அவருக்கு (இறப்பெனும்) காலச்சூழலை நாம் எதிர்பார்த்திருப்போம்” என்று அவர்கள் கூறுகின்றனரா? மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Or do they say: “He is a poet for whom we await a misfortune”? Ruwwad Center |
52:31 قُلْ تَرَبَّصُوا فَإِنِّي مَعَكُمْ مِنَ الْمُتَرَبِّصِينَ Qul tarabbasoo fainnee maAAakum mina almutarabbiseena Say (O Muhammad [sal-Allâhu 'alayhi wa sallam] to them): "Wait! I am with you among the waiters!" Hilali & KhanSay, "Wait, for indeed I am, with you, among the waiters." Saheeh Internationalஆகவே (அவர்களை நோக்கி, அதனை) "நீங்களும் எதிர் பார்த்திருங்கள். (என்ன நடக்கிறது என்பதை) நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர்பார்த்திருக்கின்றேன்" என்று கூறுங்கள். தாருல் ஹுதா“நீங்களும் வழி பார்த்திருங்கள் - நிச்சயமாக நானும் உங்களுடன் வழி பார்க்கிறேன்” என்று (நபியே!) நீர் கூறும். ஜான் டிரஸ்ட் நிறுவனம்(ஆகவே, அவர்களிடம் “அதனை) நீங்கள் எதிர்பார்த்திருங்கள், (என்ன நடக்கிறதென்பதை நிச்சயமாக நான் உங்களுடன் எதிர்பார்ப்பவர்களிலுள்ளவன்” என்று கூறுவீராக! மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Say, “Wait, I too am waiting with you.” Ruwwad Center |
52:32 أَمْ تَأْمُرُهُمْ أَحْلَامُهُمْ بِهَٰذَا ۚ أَمْ هُمْ قَوْمٌ طَاغُونَ Am tamuruhum ahlamuhum bihatha am hum qawmun taghoona Or do their minds command them this [i.e. to tell a lie against you (Muhammad [sal-Allâhu 'alayhi wa sallam])] or are they a people transgressing all bounds? Hilali & KhanOr do their minds command them to [say] this, or are they a transgressing people? Saheeh International(நபியே! உங்களை குறிகாரர் என்றும், பைத்தியக்காரர் என்றும் கூறும்படி) அவர்களுடைய அறிவுதான் அவர்களைத் தூண்டுகின்றதா? அல்லது (இயற்கையாகவே) அவர்கள் விஷமிகள்தானா? தாருல் ஹுதாஅல்லது, அவர்களுடைய புத்திகள் தாம் அவர்களை இவ்வா(றெல்லாம் பேசுமா)று ஏவுகின்றனவா? அல்லது அவர்கள் வரம்பு மீறிய சமூகத்தாரா? ஜான் டிரஸ்ட் நிறுவனம்“அல்லது (நபியே! உம்மை பற்றி கவிஞர், பைத்தியக்காரர், குறிகாரர் என்றெல்லாம் கூறுமாறு) அவர்களுடைய அறிவுகள்தான் இவ்வாறு அவர்களை ஏவுகின்றனவா? அல்லது அவர்கள் வரம்புமீறிய கூட்டத்தினரா?” மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Do their minds prompt them to say such things, or are they a transgressing people? Ruwwad Center |
52:33 أَمْ يَقُولُونَ تَقَوَّلَهُ ۚ بَلْ لَا يُؤْمِنُونَ Am yaqooloona taqawwalahu bal la yuminoona Or do they say: "He (Muhammad [sal-Allâhu 'alayhi wa sallam]) has forged it (this Qur'ân)?" Nay! They believe not! Hilali & KhanOr do they say, "He has made it up"? Rather, they do not believe. Saheeh Internationalஅல்லது (நமது நபியாகிய) இவர் பொய்யாகவே அதனைக் கற்பனை செய்து கொண்டாரென்று அவர்கள் கூறுகின்றனரா? அன்று! (மனமுரண்டாகவே) இதனை அவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை. தாருல் ஹுதாஅல்லது, இ(வ்வேதத்)தை நீர் இட்டுக் கட்டினீர் என்று அவர்கள் கூறுகின்றனரா? அல்ல. அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள். ஜான் டிரஸ்ட் நிறுவனம்அல்லது, “அவர் அதனைக் கற்பனை செய்து கொண்டார்” என்று அவர்கள் கூறுகின்றனரா? இல்லை! அவர்கள் விசுவாசங்கொள்ள மாட்டார்கள். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Or do they say, “He has made it [the Qur’an] up”? Rather, they are not willing to believe. Ruwwad Center |
52:34 فَلْيَأْتُوا بِحَدِيثٍ مِثْلِهِ إِنْ كَانُوا صَادِقِينَ Falyatoo bihadeethin mithlihi in kanoo sadiqeena Let them then produce a recitation like it (the Qur'ân) if they are truthful. Hilali & KhanThen let them produce a statement like it, if they should be truthful. Saheeh International(நபியே! இதனை நீங்கள் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டீரென்று கூறுவதில்) அவர்கள் உண்மை சொல்பவர் களாயிருந்தால் (அவர்களும் கற்பனை செய்துகொண்டு) இதைப் போன்ற யாதொரு வாக்கியத்தைக் கொண்டு வரவும். தாருல் ஹுதாஆகவே, (இவ்வாறெல்லாம் கூறும்) அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால், இ(வ்வேதத்)தைப் போன்ற ஒரு செய்தியை அவர்கள் கொண்டு வரட்டும். ஜான் டிரஸ்ட் நிறுவனம்எனவே, (நபியே! இவ்வாறு கூறுவதில்) அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால், இதைப்போன்ற செய்தியை அவர்கள் கொண்டு வரட்டும். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Then let them produce a discourse like this, if they are truthful. Ruwwad Center |
52:35 أَمْ خُلِقُوا مِنْ غَيْرِ شَيْءٍ أَمْ هُمُ الْخَالِقُونَ Am khuliqoo min ghayri shayin am humu alkhaliqoona Or were they created by nothing? Or were they themselves the creators? Hilali & KhanOr were they created by nothing, or were they the creators [of themselves]? Saheeh Internationalஅல்லது இவர்கள் எவருடைய படைப்பும் இல்லாமல் தாமாகவே உண்டாகி விட்டனரா? அல்லது இவர்கள் தம்மைத்தாமே படைத்துக் கொண்டனரா? தாருல் ஹுதாஅல்லது, அவர்கள் எந்தப் பொருளின்றியும் (தாமாகவே) படைக்கப்பட்டனரா? அல்லது அவர்கள் (எதையும்) படைக்கிற (சக்தியுடைய)வர்களா? ஜான் டிரஸ்ட் நிறுவனம்அல்லது, அவர்கள் எப்பொருளுமின்றி (தாமகாவே) படைக்கப்பட்டு விட்டனரா? அல்லது அவர்கள்தான் படைக்கின்றவர்களா? மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Were they created by none, or were they the creators [of themselves]? Ruwwad Center |
52:36 أَمْ خَلَقُوا السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۚ بَلْ لَا يُوقِنُونَ Am khalaqoo alssamawati waalarda bal la yooqinoona Or did they create the heavens and the earth? Nay, but they have no firm Belief. Hilali & KhanOr did they create the heavens and the earth? Rather, they are not certain. Saheeh Internationalஅல்லது வானங்களையும் பூமியையும் இவர்கள் படைத்தார்களா? அன்று. (இவைகளை எல்லாம் படைத்தவன் அல்லாஹ்தான். அவனை) இவர்கள் நம்புவதில்லை. தாருல் ஹுதாஅல்லது, வானங்களையும் பூமியையும் அவர்கள் படைத்தார்களா? அல்ல. அவர்கள் உறுதி கொள்ளமாட்டார்கள். ஜான் டிரஸ்ட் நிறுவனம்அல்லது, வானங்களையும், பூமியையும் அவர்கள் படைத்தார்களா? அல்ல! (இவைகளையெல்லாம் படைத்தவன் அல்லாஹ்தான்! அவனை) இவர்கள் உறுதி கொள்ள மாட்டார்கள். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Or did they create the heavens and earth? Rather, they are not certain in faith. Ruwwad Center |
52:37 أَمْ عِنْدَهُمْ خَزَائِنُ رَبِّكَ أَمْ هُمُ الْمُصَيْطِرُونَ Am AAindahum khazainu rabbika am humu almusaytiroona Or are with them the treasures of your Lord? Or are they the tyrants with the authority to do as they like? Hilali & KhanOr have they the depositories [containing the provision] of your Lord? Or are they the controllers [of them]? Saheeh Internationalஅல்லது இவர்களிடமே உங்களது இறைவனின் பொக்கிஷங்கள் அனைத்தும் இருக்கின்றனவா? அல்லது இவர்கள் அதனைப் பங்கிடக்கூடிய அதிகாரிகளா? தாருல் ஹுதாஅல்லது, அவர்களிடம் உம்முடைய இறைவனின் பொக்கிஷங்கள் இருக்கின்றனவா? அல்லது இவர்கள் தாம் (எல்லாவற்றையும்) அடக்கியாள்பவர்களா? ஜான் டிரஸ்ட் நிறுவனம்அல்லது, அவர்களிடம் உமதிரட்சகனின் களஞ்சியங்கள் இருக்கின்றனவா? அல்லது இவர்களே (அவற்றை) ஆதிக்கம் செலுத்துபவர்களா? மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Or do they possess the treasures of your Lord, or do they have full control [of everything]? Ruwwad Center |
52:38 أَمْ لَهُمْ سُلَّمٌ يَسْتَمِعُونَ فِيهِ ۖ فَلْيَأْتِ مُسْتَمِعُهُمْ بِسُلْطَانٍ مُبِينٍ Am lahum sullamun yastamiAAoona feehi falyati mustamiAAuhum bisultanin mubeenin Or have they a stairway (to heaven), by means of which they listen (to the talks of the angels)? Then let their listener produce some manifest proof. Hilali & KhanOr have they a stairway [into the heaven] upon which they listen? Then let their listener produce a clear authority. Saheeh Internationalஅல்லது இவர்களுக்கு (வானத்தில் ஏறக்கூடிய) ஏணி இருந்து (அங்குச் சென்று, அங்கு நடைபெறும் பேச்சுகளைக்) கேட்டு வருகின்றனரா? அவ்வாறாயின், (அவைகளை) இவர்கள் கேட்டு வந்ததற்குத் தெளிவான ஓர் ஆதாரத்தைக் கொண்டு வரவும். தாருல் ஹுதாஅல்லது, அவர்களுக்கு ஏணி இருந்து அதன் மூலம் (வானத்தின் இரகசியங்களை) கேட்டு வருகின்றார்களா? அவ்வாறாயின், அவர்களில் கேட்டு வந்தவர் செவியேற்றதைத் தெளிவான ஆதாரத்துடன் கொண்டு வரட்டும். ஜான் டிரஸ்ட் நிறுவனம்அல்லது, இவர்களுக்கு (வானத்தில் ஏறிச்செல்ல) ஏணி இருந்து, அதில் (ஏறி அங்கு பேசப்படுபவற்றைச்) செவிமடுக்கிறார்களா? அவ்வாறாயின், அவர்களில் கேட்டு வந்தவர் தெளிவான ஒரு சான்றைக் கொண்டு வரட்டும். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Or do they have a stairway [to the heaven] by which they eavesdrop? Then let those who eavesdrop produce a compelling proof. Ruwwad Center |
52:39 أَمْ لَهُ الْبَنَاتُ وَلَكُمُ الْبَنُونَ Am lahu albanatu walakumu albanoona Or has He (Allâh) only daughters and you have sons? Hilali & KhanOr has He daughters while you have sons? Saheeh Internationalஅல்லது (நீங்கள் கூறுகின்றபடி) அல்லாஹ்வுக்குப் பெண் சந்ததிகள்; உங்களுக்கு மட்டும் ஆண் சந்ததிகளா? தாருல் ஹுதாஅல்லது, அவனுக்குப் பெண் மக்களும் உங்களுக்கு ஆண் மக்களுமா? ஜான் டிரஸ்ட் நிறுவனம்அல்லது, (உங்கள் கற்பனைகளில் உள்ளவாறு அல்லாஹ்வாகிய) அவனுக்குப் பெண் மக்களும், உங்களுக்கு (மட்டும்) ஆண் மக்களுமா? மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Or does He have daughters while you have sons? Ruwwad Center |
52:40 أَمْ تَسْأَلُهُمْ أَجْرًا فَهُمْ مِنْ مَغْرَمٍ مُثْقَلُونَ Am tasaluhum ajran fahum min maghramin muthqaloona Or is it that you (O Muhammad [sal-Allâhu 'alayhi wa sallam]) ask a wage from them (for your preaching of Islâmic Monotheism) so that they are burdened with a load of debt? Hilali & KhanOr do you, [O Muhammad], ask of them a payment, so they are by debt burdened down? Saheeh Internationalஅல்லது நீங்கள் ஏதும் அவர்களிடம் கூலி கேட்டு அந்தப் பளுவை இவர்கள் சுமக்க முடியாமல் இருக்கின்றனரா? தாருல் ஹுதாஅல்லது, நீர் அவர்களிடம் ஏதாவது கூலி கேட்டு, (அதைக் கொடுத்ததினால்) அவர்கள் கடன் பட்டு சுமையேற்றப்பட்டிருக்கின்றார்களா, ஜான் டிரஸ்ட் நிறுவனம்அல்லது, அவர்களிடம் நீர் ஏதேனும் கூலி கேட்கிறீரா? எனவே அவர்கள் கடனால் பளுவாக்கப்பட்டவர்களா? மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Or are you asking them [O Prophet] for a reward so they find it too burdensome? Ruwwad Center |
52:41 أَمْ عِنْدَهُمُ الْغَيْبُ فَهُمْ يَكْتُبُونَ Am AAindahumu alghaybu fahum yaktuboona Or that the Ghaib (Unseen) is with them, and they write it down? Hilali & KhanOr have they [knowledge of] the unseen, so they write [it] down? Saheeh Internationalஅல்லது இவர்களிடம் மறைவான விஷய(த்தின் ஞான)ம் இருக்கின்றதா? இவர்கள் (அதனை அல்லாஹ்வைப் போல்) எழுதி வருகின்றனரா? தாருல் ஹுதாஅல்லது, அவர்களிடம் மறைவான செய்திகளிலிருந்து, அவற்றை அவர்கள் எழுதுகின்றார்களா, ஜான் டிரஸ்ட் நிறுவனம்அல்லது, அவர்களிடம் (அல்லாஹ்வைப் போல்) மறைவானது (அது பற்றிய அறிவு) இருக்கிறதா? எனவே அவர்கள் (அதனை) எழுதுகிறார்களா? மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Or do they have [knowledge of] the unseen so they are writing it down? Ruwwad Center |
52:42 أَمْ يُرِيدُونَ كَيْدًا ۖ فَالَّذِينَ كَفَرُوا هُمُ الْمَكِيدُونَ Am yureedoona kaydan faallatheena kafaroo humu almakeedoona Or do they intend a plot (against you O Muhammad [sal-Allâhu 'alayhi wa sallam])? But those who disbelieve (in the Oneness of Allâh – Islâmic Monotheism) are themselves plotted against! Hilali & KhanOr do they intend a plan? But those who disbelieve - they are the object of a plan. Saheeh Internationalஅல்லது யாதொரு சூழ்ச்சி செய்ய இவர்கள் கருது கின்றனரா? அவ்வாறாயின், இந்நிராகரிப்பவர்கள்தாம் சூழ்ச்சிக் குள்ளாவார்கள். தாருல் ஹுதாஅல்லது, அவர்கள் (உமக்கு எதிராக) ஏதாவது சூழ்ச்சி செய்ய நாடுகிறார்களா, அப்படியானால், அந்த காஃபிர்கள் தாம் சூழச்சிக்குள்ளாவார்கள். ஜான் டிரஸ்ட் நிறுவனம்அல்லது ஏதேனுமொரு சூழ்ச்சி செய்ய அவர்கள் நாடுகிறார்களா? அவ்வாறாயின், நிராகரித்தார்களே அவர்கள்தாம் சூழ்ச்சிக்குள்ளாக்கப்படுபவர்கள். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Or do they intend a plot [against the Prophet]? But the plot of the disbelievers will rebound against themselves. Ruwwad Center |
52:43 أَمْ لَهُمْ إِلَٰهٌ غَيْرُ اللَّهِ ۚ سُبْحَانَ اللَّهِ عَمَّا يُشْرِكُونَ Am lahum ilahun ghayru Allahi subhana Allahi AAamma yushrikoona Or have they an ilâh (a god) other than Allâh? Glorified is Allâh from all that they ascribe as partners (to Him) Hilali & KhanOr have they a deity other than Allah? Exalted is Allah above whatever they associate with Him. Saheeh Internationalஅல்லது அல்லாஹ்வையன்றி இவர்களுக்கு வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் இருக்கின்றானா? இவர்கள் இணை வைப்பவைகளை விட்டும் அல்லாஹ் மிக்க பரிசுத்தமானவன். தாருல் ஹுதாஅல்லது, அவர்கள் அல்லாஹ் அல்லாமல் (வேறு) நாயன் இருக்கின்றானா, அவர்கள் இணை வைப்பதை விட்டும் அல்லாஹ் மிகத் தூயவன். ஜான் டிரஸ்ட் நிறுவனம்அல்லது, அவர்களுக்கு அல்லாஹ் அல்லாத (வணக்கத்திற்குரிய வேறு) நாயன் இருக்கின்றானா? அவர்கள் இணைவைப்பதை விட்டும் அல்லாஹ் மிகத் தூயவன். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Or do they have a god other than Allah? Glory be to Allah far above what they associate with Him. Ruwwad Center |
52:44 وَإِنْ يَرَوْا كِسْفًا مِنَ السَّمَاءِ سَاقِطًا يَقُولُوا سَحَابٌ مَرْكُومٌ Wain yaraw kisfan mina alssamai saqitan yaqooloo sahabun markoomun And if they were to see pieces of the heaven falling down, they would say: "Clouds gathered in heaps!" Hilali & KhanAnd if they were to see a fragment from the sky falling, they would say, "[It is merely] clouds heaped up." Saheeh Internationalவானம் இடிந்து அதிலிருந்த ஒரு துண்டு விழுவதை இவர்கள் கண்ணால் கண்டபோதிலும் (அது வானமல்ல;) மேகம் தான் என்றும், ஆனால் அது உறைந்து இறுகிவிட்டதென்றும் கூறுவார்கள். தாருல் ஹுதாவானத்திலிருந்து ஒரு துண்டு விழுவதை அவர்கள் கண்டார்களானால், அதை அடர்த்தியான மேகம் என்று அவர்கள் கூறிவிடுவார்கள். ஜான் டிரஸ்ட் நிறுவனம்மேலும், வானத்திலிருந்து (இடிந்து) துண்டுகள் விழுவதை அவர்கள் (கண்ணால்) காண்பார்களானால், (அது வானமல்ல,) அது அடர்த்தியான மேகம்தான்” என்று கூறுவார்கள். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)If they were to see pieces of the sky falling down, they would still say, “[This is only] a mass of clouds.” Ruwwad Center |
52:45 فَذَرْهُمْ حَتَّىٰ يُلَاقُوا يَوْمَهُمُ الَّذِي فِيهِ يُصْعَقُونَ Fatharhum hatta yulaqoo yawmahumu allathee feehi yusAAaqoona So leave them alone till they meet their Day, in which they will sink into a fainting (with horror). Hilali & KhanSo leave them until they meet their Day in which they will be struck insensible - Saheeh International(நபியே!) இவர்களுடைய அறிவு பறந்துவிடக் கூடிய நாளை இவர்கள் சந்திக்கும் வரையில் நீங்கள் இவர்களை விட்டுவிடுங்கள். தாருல் ஹுதாஆகவே அச்சத்தால் அவர்கள் உணர்விழக்கும் நாளைச் சந்திக்கும்வரை, அவர்களை விட்டு விடுவீர்களாக. ஜான் டிரஸ்ட் நிறுவனம்ஆகவே, (நபியே!) எதில் அவர்கள் அழிக்கப்படுவார்களோ, அத்தகைய அவர்களுடைய நாளை அவர்கள் சந்திக்கும் வரையில் நீர் அவர்களை விட்டுவிடுவீராக! மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)So leave them alone until they encounter their Day in which they will be struck down, Ruwwad Center |
52:46 يَوْمَ لَا يُغْنِي عَنْهُمْ كَيْدُهُمْ شَيْئًا وَلَا هُمْ يُنْصَرُونَ Yawma la yughnee AAanhum kayduhum shayan wala hum yunsaroona The Day when their plotting shall not avail them at all nor will they be helped (i.e. they will receive their torment in Hell). Hilali & KhanThe Day their plan will not avail them at all, nor will they be helped. Saheeh Internationalஅந்நாளில் இவர்களுடைய சூழ்ச்சிகள் ஒன்றுமே இவர்களுக்குப் பயனளிக்காது. எவர்களுடைய உதவியும் இவர் களுக்குக் கிடைக்காது. தாருல் ஹுதாஅந்நாளில், அவர்களுடைய சூழ்ச்சிகள் எதுவும் அவர்களுக்குப் பயன் அளிக்காது; அன்றியும் (எவராலும்) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள். ஜான் டிரஸ்ட் நிறுவனம்அந்நாளில், அவர்களுடைய சூழ்ச்சிகள் எதுவும் அவர்களுக்குப் பயனளிக்காது, (எவராலும்) அவர்கள் உதவியும் செய்யப்படமாட்டார்கள். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)the Day their plots will not avail them in the least, nor will they be helped. Ruwwad Center |
52:47 وَإِنَّ لِلَّذِينَ ظَلَمُوا عَذَابًا دُونَ ذَٰلِكَ وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ Wainna lillatheena thalamoo AAathaban doona thalika walakinna aktharahum la yaAAlamoona And verily, for those who do wrong, there is another punishment (i.e. the torment in this world and in their graves) before this; but most of them know not. (Tafsir At-Tabarî) Hilali & KhanAnd indeed, for those who have wronged is a punishment before that, but most of them do not know. Saheeh Internationalநிச்சயமாக இவ்வக்கிரமக்காரர்களுக்கு (மறுமையில்) வேதனையன்றி (இம்மையிலும்) வேதனையிருக்கின்றது. எனினும் அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதனை) அறிந்துகொள்ள மாட்டார்கள். தாருல் ஹுதாஅன்றியும், அநியாயம் செய்து கொண்டு இருந்தவர்களுக்கு நிச்சயமாக மற்றொரு வேதனையும் (இம்மையில்) உண்டு எனினும் அவர்களில் பெரும்பாலோர் இதை அறிய மாட்டார்கள். ஜான் டிரஸ்ட் நிறுவனம்அன்றியும், நிச்சயமாக அநியாயம் செய்துகொண்டிருந்தோர்க்கு (மறுமையின் வேதனையாகிய) அதுமட்டுமின்றி (இம்மையில்) மற்றொரு வேதனையுமிருக்கின்றது, எனினும், அவர்களில் பெரும்பாலோர் (இதனை) அறிந்துகொள்ளமாட்டார்கள். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)And for the wrongdoers, there will be another punishment before that, but most of them do not know. Ruwwad Center |
52:48 وَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ فَإِنَّكَ بِأَعْيُنِنَا ۖ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ حِينَ تَقُومُ Waisbir lihukmi rabbika fainnaka biaAAyunina wasabbih bihamdi rabbika heena taqoomu So wait patiently (O Muhammad [sal-Allâhu 'alayhi wa sallam]) for the Decision of your Lord, for verily, you are under Our Eyes; and glorify the Praises of your Lord when you get up from sleep. Hilali & KhanAnd be patient, [O Muhammad], for the decision of your Lord, for indeed, you are in Our eyes. And exalt [Allah] with praise of your Lord when you arise. Saheeh International(நபியே!) உங்களது இறைவனின் தீர்ப்பைப் பொறுமையாக எதிர்பார்த்திருங்கள். நிச்சயமாக நீங்கள் நம் கண்களுக்கு முன்பாகவே இருக்கின்றீர்கள். (ஆகவே, அவர்கள் உங்களைத் தங்கள் இஷ்டப்படி துன்புறுத்த முடியாது.) ஆயினும், நீங்கள் (நித்திரையிலிருந்து) எழுந்த நேரத்தில் உங்களது இறைவனின் புகழைக் கூறித் துதி செய்வீராக! தாருல் ஹுதாஎனவே (நபியே!) உம்முடைய இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திருப்பீராக; நிச்சயமாக நீர் நம் கண்காணிப்பில் இருக்கின்றீர்; மேலும் நீங்கள் எழுந்திருக்கும் சமயத்தில் உம் இறைவனின் புகழைக் கூறித் தஸ்பீஹு செய்வீராக, ஜான் டிரஸ்ட் நிறுவனம்மேலும், (நபியே!) உமதிரட்சகனின் தீர்ப்பை (எதிர்பார்த்துப்) பொருத்திருப்பீராக! நிச்சயமாக நீர் நம் கண்களுக்கு முன்பாகவே இருக்கின்றீர், (ஆகவே, அவர்கள் உமக்கு எவ்வித இடையூறும் செய்து விட முடியாது.) மேலும் (நீர் நித்திரையிலிருந்து) எழுந்த நேரத்தில் உமதிரட்சகனின் புகழைக்கொண்டு துதி செய்து கொண்டிருப்பீராக! மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Be patient [O Prophet] with your Lord’s decree, for indeed you are under Our [watchful] Eyes. And glorify the praises of your Lord when you rise. Ruwwad Center |
52:49 وَمِنَ اللَّيْلِ فَسَبِّحْهُ وَإِدْبَارَ النُّجُومِ Wamina allayli fasabbihhu waidbara alnnujoomi And in the nighttime also glorify His Praises – and at the setting of the stars. Hilali & KhanAnd in a part of the night exalt Him and after [the setting of] the stars. Saheeh Internationalஇரவின் ஒரு பாகத்திலும், நட்சத்திரங்கள் மறையும் (காலை) நேரத்திலும் அவனை துதி செய்து கொண்டிருப்பீராக! தாருல் ஹுதாஇன்னும், இரவின் ஒரு பாகத்திலும், நட்சத்திரங்கள் அடையும் நேரத்திலும் அவனைத்(துதி செய்து) தஸ்பீஹு செய்வீராக! ஜான் டிரஸ்ட் நிறுவனம்இரவின் ஒரு பாகத்திலும், நட்சத்திரங்கள் மறையும் (காலை) நேரத்திலும் அவனைத் துதி செய்து கொண்டிருப்பீராக! மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)And glorify Him at night and when the stars fade away. Ruwwad Center |