بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ |
12:1 الر ۚ تِلْكَ آيَاتُ الْكِتَابِ الْمُبِينِ Aliflamra tilka ayatu alkitabi almubeenu Alif-Lâm-Râ.[These letters are one of the miracles of the Qur'ân, and none but Allâh (Alone) knows their meanings.] These are the Verses of the Clear Book (the Qur'ân that makes clear the legal and illegal things, legal laws, a guidance and a blessing). Hilali & KhanAlif, Lam, Ra. These are the verses of the clear Book. Saheeh Internationalஅலிஃப்; லாம்; றா. இந்த அத்தியாயம் தெளிவான இவ்வேதத்தின் சில வசனங்களாகும். தாருல் ஹுதாஅலிஃப், லாம், றா. இவை தெளிவான இவ்வேதத்தின் வசனங்களாகும். ஜான் டிரஸ்ட் நிறுவனம்அலிப் லாம் றா. இவை தெளிவான (இவ்)வேதத்தின் வசனங்களாகும். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Alif Lām Ra. These are the verses of the clear Book. Ruwwad Center |
12:2 إِنَّا أَنْزَلْنَاهُ قُرْآنًا عَرَبِيًّا لَعَلَّكُمْ تَعْقِلُونَ Inna anzalnahu quranan AAarabiyyan laAAallakum taAAqiloona Verily, We have sent it down as an Arabic Qur'ân in order that you may understand. Hilali & KhanIndeed, We have sent it down as an Arabic Qur'an that you might understand. Saheeh International(அரபிகளே!) நீங்கள் நன்கறிந்து கொள்வதற்காக குர்ஆன் என்னும் இவ்வேதத்தை நிச்சயமாக நாமே (உங்களுடைய) அரபி மொழியில் இறக்கி வைத்தோம். தாருல் ஹுதாநீங்கள் விளங்கிக் கொள்வதற்காக, இதனை அரபி மொழியிலான குர்ஆனாக நிச்சயமாக நாமே இறக்கி வைத்தோம். ஜான் டிரஸ்ட் நிறுவனம்நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இதனை அரபி மொழியிலான குர் ஆனாக நிச்சயமாக நாம் இறக்கி வைத்தோம். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)We have sent it down as an Arabic Qur’an so that you may understand. Ruwwad Center |
12:3 نَحْنُ نَقُصُّ عَلَيْكَ أَحْسَنَ الْقَصَصِ بِمَا أَوْحَيْنَا إِلَيْكَ هَٰذَا الْقُرْآنَ وَإِنْ كُنْتَ مِنْ قَبْلِهِ لَمِنَ الْغَافِلِينَ Nahnu naqussu AAalayka ahsana alqasasi bima awhayna ilayka hatha alqurana wain kunta min qablihi lamina alghafileena We relate to you (Muhammad [sal-Allâhu 'alayhi wa sallam]) the best of stories through Our Revelations to you, of this Qur'ân. And before this (i.e. before the coming of Divine Revelation to you), you were among those who knew nothing about it (the Qur'ân). Hilali & KhanWe relate to you, [O Muhammad], the best of stories in what We have revealed to you of this Qur'an although you were, before it, among the unaware. Saheeh International(நபியே!) வஹ்யி மூலம் நாம் உங்களுக்கு அறிவிக்கும் இந்தக் குர்ஆனின் மூலம் சரித்திரங்களில் மிக்க அழகானதொன்றை உங்களுக்கு நாம் விவரிக்கின்றோம். இதற்கு முன்னர் நிச்சயமாக நீங்கள் இதனை அறியாதவராகவே இருந்தீர்கள். தாருல் ஹுதா(நபியே!) நாம் வஹீ மூலம் உம் மீது இந்த குர்ஆனை அருள் செய்தது கொண்டு மிக அழகான வரலாற்றை உமக்கு நாம் கூறுகின்றோம் - இதற்குமுன் (இது குறித்து) ஏதும் அறியாதவர்களில் (ஒருவராய்) நீர் இருந்தீர். ஜான் டிரஸ்ட் நிறுவனம்(நபியே!) இந்தக் குர் ஆனை நாம் உமக்கு அறிவித்திருப்பதின் மூலம் மிக்க அழகான வரலாற்றை உமக்கு நாம் கூறுகிறோம், இதற்கு முன்னர் நிச்சயமாக (இதனைப்பற்றி) அறியாதவர்களில் (ஒருவராக) நீர் இருந்தீர். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)We relate to you [O Prophet] the best of stories through Our revelation of this Qur’an, although before this you were unaware of them. Ruwwad Center |
12:4 إِذْ قَالَ يُوسُفُ لِأَبِيهِ يَا أَبَتِ إِنِّي رَأَيْتُ أَحَدَ عَشَرَ كَوْكَبًا وَالشَّمْسَ وَالْقَمَرَ رَأَيْتُهُمْ لِي سَاجِدِينَ Ith qala yoosufu liabeehi ya abati innee raaytu ahada AAashara kawkaban waalshshamsa waalqamara raaytuhum lee sajideena (Remember) when Yûsuf (Joseph) said to his father: "O my father! Verily, I saw (in a dream) eleven stars and the sun and the moon – I saw them prostrating themselves to me." Hilali & Khan[Of these stories mention] when Joseph said to his father, "O my father, indeed I have seen [in a dream] eleven stars and the sun and the moon; I saw them prostrating to me." Saheeh Internationalயூஸுஃப் (நபி, யஅகூப் நபியாகிய) தன் தந்தையை நோக்கி "என் தந்தையே! பதினொரு நட்சத்திரங்களும், சூரியனும், சந்திரனும் எனக்குச் சிரம் பணிய மெய்யாகவே நான் (கனவு) கண்டேன்" என்று கூறிய சமயத்தில், தாருல் ஹுதாயூஸுஃப் தம் தந்தையாரிடம்: “என் அருமைத் தந்தையே! பதினோரு நட்சத்திரங்களும், சூரியனும், சந்திரனும் - (இவை யாவும்) எனக்குச் சிரம் பணிவதை மெய்யாகவே (கனவில்) நான் கண்டேன்” என்று கூறியபொழுது. ஜான் டிரஸ்ட் நிறுவனம்யூஸுஃப் தன் தந்தையிடம் “என் தந்தையே! பதினொரு நட்சத்திரங்களையும் சூரியனையும், சந்திரனையும் நிச்சயமாக நான் (கனவில்) கண்டேன், எனக்குச் சிரம் பணிபவையாக அவற்றை நான் கண்டேன்” என்று கூறிய சமயத்தில், மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)[Remember] when Joseph said to his father, “O my father, I saw [in a dream] eleven stars, the sun and the moon – I saw them prostrating to me.” Ruwwad Center |
12:5 قَالَ يَا بُنَيَّ لَا تَقْصُصْ رُؤْيَاكَ عَلَىٰ إِخْوَتِكَ فَيَكِيدُوا لَكَ كَيْدًا ۖ إِنَّ الشَّيْطَانَ لِلْإِنْسَانِ عَدُوٌّ مُبِينٌ Qala ya bunayya la taqsus ruyaka AAala ikhwatika fayakeedoo laka kaydan inna alshshaytana lilinsani AAaduwwun mubeenun He (the father) said: "O my son! Relate not your vision to your brothers, lest they should arrange a plot against you. Verily, Shaitân (Satan) is to man an open enemy! Hilali & KhanHe said, "O my son, do not relate your vision to your brothers or they will contrive against you a plan. Indeed Satan, to man, is a manifest enemy. Saheeh International(யஅகூப் நபி யூஸுஃபை நோக்கி) "என் அருமைக் குழந்தையே! நீ கண்ட கனவை உன் சகோதரர்களிடம் கூறாதே. (அவ்வாறு கூறினால்,) அவர்கள் உனக்கு யாதேனும் தீங்கிழைக்கச் சதி செய்வார்கள். ஏனெனில், நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்கமான எதிரியாக இருக்கிறான். (சதி செய்யுமாறு அவர்களை அவன் தூண்டக்கூடும்)" என்று கூறினார். தாருல் ஹுதா“என் அருமை மகனே! உமது கனவை உன் சகோதரர்களிடம் சொல்லிக் காட்ட வேண்டாம்; (அவ்வாறு செய்தால்) அவர்கள், உனக்கு(த் தீங்கிழைக்க) சதி செய்வார்கள்; ஏனெனில் (அவ்வாறு சதி செய்யத் தூண்டும்) ஷைத்தான், நிச்சயமாக மனிதனுக்குப் பகிரங்க விரோதியாக இருக்கின்றான். ஜான் டிரஸ்ட் நிறுவனம்“என் அருமை மகனே! நீர் கண்ட கனவை உம் சகோதரர்களிடம் சொல்லிக்காட்ட வேண்டாம், (அவ்வாறு செய்தால்) அவர்கள் உமக்கு யாதேனும் தீங்கிழைக்கச் சதி செய்வார்கள். (ஏனெனில்,) நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்கு பகிரங்கமான விரோதியாக இருக்கிறான்” என்று (யஃகூப் நபியாகிய) அவர் கூறினார். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)He said, “O my son, do not relate your vision to your brothers, lest they devise a plot against you, for Satan is a sworn enemy to mankind. Ruwwad Center |
12:6 وَكَذَٰلِكَ يَجْتَبِيكَ رَبُّكَ وَيُعَلِّمُكَ مِنْ تَأْوِيلِ الْأَحَادِيثِ وَيُتِمُّ نِعْمَتَهُ عَلَيْكَ وَعَلَىٰ آلِ يَعْقُوبَ كَمَا أَتَمَّهَا عَلَىٰ أَبَوَيْكَ مِنْ قَبْلُ إِبْرَاهِيمَ وَإِسْحَاقَ ۚ إِنَّ رَبَّكَ عَلِيمٌ حَكِيمٌ Wakathalika yajtabeeka rabbuka wayuAAallimuka min taweeli alahadeethi wayutimmu niAAmatahu AAalayka waAAala ali yaAAqooba kama atammaha AAala abawayka min qablu ibraheema waishaqa inna rabbaka AAaleemun hakeemun "Thus will your Lord choose you and teach you the interpretation of dreams (and other things) and perfect His Favour on you and on the offspring of Ya'qûb (Jacob), as He perfected it on your fathers, Ibrâhîm (Abraham) and Ishâq (Isaac) aforetime! Verily, your Lord is All-Knowing, All-Wise." Hilali & KhanAnd thus will your Lord choose you and teach you the interpretation of narratives and complete His favor upon you and upon the family of Jacob, as He completed it upon your fathers before, Abraham and Isaac. Indeed, your Lord is Knowing and Wise." Saheeh Internationalதவிர, "(நீ கனவில் கண்ட) இவ்வாறே உன் இறைவன் உன்னைத் தேர்ந்தெடுத்து கனவுகளின் வியாக்கியானங்களையும் உனக்குக் கற்றுக் கொடுத்து, உன் மீதும், யஅகூபின் (மற்ற) சந்ததிகள் மீதும் அவன் தன் அருளை முழுமையாக்கி வைப்பான். இவ்வாறே இப்றாஹீம், இஸ்ஹாக் ஆகிய உங்களுடைய இரு மூதாதைகள் மீதும் தன் அருளை முழுமைப்படுத்தி வைத்தான். நிச்சயமாக உன் இறைவன் (அனைத்தையும்) நன்கறிந்தவனும் ஞானமுடைய வனாகவும் இருக்கின்றான்" (என்றும் கூறினார்கள்). தாருல் ஹுதாஇவ்வாறு உன் இறைவன் உன்னைத் தேர்ந்தெடுத்து கனவுகளின் விளக்கத்தை உனக்குக் கற்றுக்கொடுத்து அவனுடைய அருளை உன் மீதும், யஃகூபின் சந்ததியார் மீதும் நிரப்பமாக்கி வைப்பான் - இதற்கு முன்னர் உன்னுடைய மூதாதையராகிய இப்றாஹீம், இஸ்ஹாக் (ஆகிய) இருவர் மீதும் தன் அருளை அவன் நிரப்பமாக்கி வைத்தது போல், நிச்சயமாக உம் இறைவன் யாவற்றையும் நன்கறிந்தோனும், மிக்க ஞானமுடையவனுமாக இருக்கின்றான்.” ஜான் டிரஸ்ட் நிறுவனம்மேலும், “(நீர் கனவில் கண்ட) அவ்வாறே உமதிரட்சகன் உம்மைத் தேர்ந்தெடுத்து கனவுகளின் விளக்கங்களையும் உமக்குக் கற்றுக் கொடுத்து இதற்கு முன்னர் இப்றாஹீம், இஷ்ஹாக் (ஆகிய உம்முடைய இரு மூதாதையர் மீதும் (தம் அருளாகிய) அதனைப் பூர்த்தியாக்கி வைத்தவாரே உம் மீதும், யஃகூபின் (மற்ற) குடும்பத்தினர் மீதும் அவன் தன் அருளைப் பூர்த்தியாக்கி வைப்பான், நிச்சயமாக உமதிரட்சகன் (யாவற்றையும்) நன்கறிகிறவன், தீர்க்கமான அறிவுடையவன்” (என்றும் கூறினார்.) மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Thus our Lord will choose you and teach you the interpretation of dreams, and He will complete His favor upon you and upon the house of Jacob, just as He completed it upon your forefathers Abraham and Isaac before. Indeed, your Lord is All-Knowing, All-Wise.” Ruwwad Center |
12:7 لَقَدْ كَانَ فِي يُوسُفَ وَإِخْوَتِهِ آيَاتٌ لِلسَّائِلِينَ Laqad kana fee yoosufa waikhwatihi ayatun lilssaileena Verily, in Yûsuf (Joseph) and his brethren, there were Ayât (proofs, evidences, lessons, signs, etc.) for those who ask. Hilali & KhanCertainly were there in Joseph and his brothers signs for those who ask, Saheeh International(நபியே!) நிச்சயமாக யூஸுஃப் மற்றும் அவரது சகோதரர்களுடைய சரித்திரத்தைப் பற்றி வினவுகின்ற (யூதர்களாகிய இ)வர்களுக்கு இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன. தாருல் ஹுதாநிச்சயமாக யூஸுஃபிடத்திலும் அவர்களுடைய சகோதரர்களிடத்திலும் (அவர்களைப் பற்றி) விசாரிப்பவர்களுக்கு பல படிப்பினைகள் இருக்கின்றன. ஜான் டிரஸ்ட் நிறுவனம்(நபியே!) நிச்சயமாக யூஸுஃபின் சரித்திரத்திலும் அவரது சகோதரர்களின் சரித்திரத்திலும் வினவுகின்றவர்களுக்கு பல படிப்பினைகள் இருக்கின்றன. மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)In the story of Joseph and his brothers there are lessons for those who seek [them]. Ruwwad Center |
12:8 إِذْ قَالُوا لَيُوسُفُ وَأَخُوهُ أَحَبُّ إِلَىٰ أَبِينَا مِنَّا وَنَحْنُ عُصْبَةٌ إِنَّ أَبَانَا لَفِي ضَلَالٍ مُبِينٍ Ith qaloo layoosufu waakhoohu ahabbu ila abeena minna wanahnu AAusbatun inna abana lafee dalalin mubeenin When they said: "Truly, Yûsuf (Joseph) and his brother (Benjamin) are dearer to our father than we, while we are 'Usbah (a strong group). Really, our father is in a plain error. Hilali & KhanWhen they said, "Joseph and his brother are more beloved to our father than we, while we are a clan. Indeed, our father is in clear error. Saheeh International(யஅகூப் நபி தன் பன்னிரண்டு மகன்களில் யூஸுஃபையும், புன்யாமீனையும் அதிகமாக நேசிப்பதைக் கண்ணுற்ற மற்ற மகன்கள் பொறாமை கொண்டு) நாம் பலசாலிகளாக இருந்தும் யூஸுஃபும், அவருடைய சகோதரரும் நம் தந்தைக்கு நம்மைவிட அதிகப் பிரியமுள்ளவர்களாக இருக்கின்றனர். (இதில்) நம் தந்தை நிச்சயமாக பகிரங்கமான தவறில் இருக்கிறார்" என்றும், தாருல் ஹுதா(யூஸுஃபுடைய சகோதரர்கள்) கூறினார்கள்: “யூஸுஃபும், அவருடைய சகோதரரும் நம் தந்தைக்கு நம்மைவிட அதிகப் பிரியமுள்ளவர்களாக இருக்கின்றனர் - நாமோ (பலமுள்ள) கூட்டதினராக இருக்கின்றோம்; நிச்சயமாக நம் தந்தை பகிரங்கமான தவறிலேயே இருக்கின்றார் (என்றும்), ஜான் டிரஸ்ட் நிறுவனம்“நாம் (பலசாலிகளான) ஒரு கூட்டமாக இருந்தும், நிச்சயமாக யூஸுஃபும் அவருடைய சகோதரரும் நம் தந்தைக்கு நம்மைவிட அதிகப் பிரியமுள்ளவர்களாயிருக்கின்றனர், (இதில்) நிச்சயமாக நம் தந்தை பகிரங்கமான தவற்றில் இருக்கிறார்” என்று அவர்கள் கூறிய சமயத்தை (நினைவு கூர்வீராக!) மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)When they said, “Joseph and his brother are dearer to our father than we are, although we are a group of so many. Indeed, our father is clearly mistaken. Ruwwad Center |
12:9 اقْتُلُوا يُوسُفَ أَوِ اطْرَحُوهُ أَرْضًا يَخْلُ لَكُمْ وَجْهُ أَبِيكُمْ وَتَكُونُوا مِنْ بَعْدِهِ قَوْمًا صَالِحِينَ Oqtuloo yoosufa awi itrahoohu ardan yakhlu lakum wajhu abeekum watakoonoo min baAAdihi qawman saliheena "Kill Yûsuf (Joseph) or cast him out to some (other) land, so that the favour of your father may be given to you alone, and after that you will be a righteous folk (by intending repentance before committing the sin)." Hilali & KhanKill Joseph or cast him out to [another] land; the countenance of your father will [then] be only for you, and you will be after that a righteous people." Saheeh Internationalஆகவே, "யூஸுஃபைக் கொலை செய்து விடுங்கள். அல்லது பூமியில் எங்கேனும் அப்புறப்படுத்திவிடுங்கள். (அதன் பின்) உங்கள் தந்தையின் பார்வை முற்றிலும் உங்கள் பக்கமே இருக்கும். இதன் பின்னர், நீங்கள் (இறைவனிடம் மன்னிப்புத் தேடிக்கொண்டு) நல்ல மனிதர்களாகி விடுங்கள்" என்றும் கூறினார்கள். தாருல் ஹுதா“யூஸுஃபை” கொன்றுவிடுங்கள், அல்லது அவரை (தொலைவான) ஒரு நாட்டில் எறிந்துவிடுங்கள்; (அப்பொழுது) உங்கள் தந்தையின் கவனம் உங்கள் பக்கமே இருக்கும்; இதன்பின் நீங்கள் நல்ல மனிதர்களாகி விடுவீர்கள்” என்றும் கூறியபொழுது, ஜான் டிரஸ்ட் நிறுவனம்“(ஆகவே) யூஸுஃபைக் கொலை செய்துவிடுங்கள், அல்லது பூமியில் எங்கேனும் எறிந்து விடுங்கள், உங்கள் தந்தையின் முகம் (கவனம்) முற்றிலும் உங்கள் பக்கமே இருக்கும், இதன் பின்னர், நீங்கள் (அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடிக்கொண்டு) நல்லவர்களான கூட்டத்தினராகிவிடுவீர்கள்” (என்று கூறினார்கள்.) மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Kill Joseph or cast him out to another land, so that your father’s attention will only be to you; then you will become righteous people.” Ruwwad Center |
12:10 قَالَ قَائِلٌ مِنْهُمْ لَا تَقْتُلُوا يُوسُفَ وَأَلْقُوهُ فِي غَيَابَتِ الْجُبِّ يَلْتَقِطْهُ بَعْضُ السَّيَّارَةِ إِنْ كُنْتُمْ فَاعِلِينَ Qala qailun minhum la taqtuloo yoosufa waalqoohu fee ghayabati aljubbi yaltaqithu baAAdu alssayyarati in kuntum faAAileena One from among them said: "Kill not Yûsuf (Joseph), but if you must do something, throw him down to the bottom of a well; he will be picked up by some caravan of travellers." Hilali & KhanSaid a speaker among them, "Do not kill Joseph but throw him into the bottom of the well; some travelers will pick him up - if you would do [something]." Saheeh International(அதற்கு) அவர்களில் ஒருவர், "யூஸுஃபை நீங்கள் கொலை செய்யாதீர்கள். நீங்கள் அவருக்கு ஏதும் (கெடுதல்) செய்தே தீர வேண்டுமென்று கருதினால், ஆழமான ஒரு பாழ்கிணற்றில் அவரை எறிந்துவிடுங்கள். வழிப்போக்கரில் எவரேனும் அவரை (கிணற்றில் இருந்து) எடுத்துக் கொள்ளக்கூடும்" என்று கூறினார். தாருல் ஹுதாஅவர்களில் ஒருவர்: “நீங்கள் யூஸுஃபை கொலை செய்யாதீர்கள், நீங்கள் அவரை (ஏதாவது) செய்தே ஆகவேண்டுமென்றால் - அவரை ஓர் ஆழமான கிணற்றில் தள்ளிவிடுங்கள்; (அப்போது அவ்வழி செல்லும்) பிரயாணிகளில் சிலர் அவரை எடுத்துக் கொள்ளக்கூடும்” என்று கூறினார். ஜான் டிரஸ்ட் நிறுவனம்(அதற்கு) அவர்களில் (நற்போதனை) கூறக்கூடிய ஒருவர், “யூஸுஃபை நீங்கள் கொலை செய்யாதீர்கள; இன்னும், நீங்கள் (அவருக்கு ஏதும் தீமை) செய்பவர்களாக இருந்தால், ஆழமான ஒரு பாழ் கிணற்றில் அவரை போட்டு விடுங்கள்; பிரயாணிகளில் சிலர் அவரை(க் கிணற்றிலிருந்து) எடுத்துக் கொள்ளக்கூடும்” என்று கூறினார். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)One of them said, “Do not kill Joseph; but if you must do something, then throw him into the bottom of the well, so that some travelers may pick him up.” Ruwwad Center |
12:11 قَالُوا يَا أَبَانَا مَا لَكَ لَا تَأْمَنَّا عَلَىٰ يُوسُفَ وَإِنَّا لَهُ لَنَاصِحُونَ Qaloo ya abana ma laka la tamanna AAala yoosufa wainna lahu lanasihoona They said: "O our father! Why do you not trust us with Yûsuf (Joseph) though we are indeed his well-wishers?" Hilali & KhanThey said, "O our father, why do you not entrust us with Joseph while indeed, we are to him sincere counselors? Saheeh International(பின்னர் அவர்கள் தங்கள் தந்தையிடம் வந்து,) "எங்கள் தந்தையே! என்ன காரணத்தால் யூஸுஃபைப் பற்றி நீங்கள் எங்களை நம்புவதில்லை? நாங்களோ, மெய்யாகவே அவருக்கு நன்மையை நாடுபவர்களாகவே இருக்கிறோம்" என்றும், தாருல் ஹுதா(பிறகு தம் தந்தையிடம் வந்து,) “எங்கள் தந்தையே! யூஸுஃபுடைய விஷயத்தில் நீங்கள் ஏன் எங்களை நம்புவதில்லை? மெய்யாகவே, நாங்கள் அவருக்கு நன்மையை நாடுபவர்களாகவே இருக்கின்றோம். ஜான் டிரஸ்ட் நிறுவனம்(பின்னர் அவர்கள் தங்கள் தந்தையிடம் வந்து) “எங்கள் தந்தையே! யூஸுஃபை ப்பற்றி (அவர் விஷயத்தில்) நீங்கள் எங்களை நம்பாமலிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? நாங்களோ, நிச்சயமாக அவருக்கு நன்மையை நாடுபவர்களாக இருக்கிறோம்” என்று கூறினார்கள். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)They said, “O our father, why do you not trust us with Joseph, although we truly care for him? Ruwwad Center |
12:12 أَرْسِلْهُ مَعَنَا غَدًا يَرْتَعْ وَيَلْعَبْ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ Arsilhu maAAana ghadan yartaAA wayalAAab wainna lahu lahafithoona "Send him with us tomorrow to enjoy himself and play, and verily, we will take care of him." Hilali & KhanSend him with us tomorrow that he may eat well and play. And indeed, we will be his guardians. Saheeh International"நாளைய தினம் அவரை எங்களுடன் அனுப்பி வையுங்கள். அவர் (காட்டிலுள்ள கனிகளைப்) புசித்துக்கொண்டும், விளையாடிக் கொண்டும் இருப்பார். நிச்சயமாக நாங்கள் அவரைப் பாதுகாத்துக் கொள்வோம்" என்றும் கூறினார்கள். தாருல் ஹுதா“நாளைக்கு அவரை எங்களுடன் அனுப்பி வையுங்கள். (காட்டிலுள்ள கனிகளைப்) புசித்துக் கொண்டும் விளையாடிக் கொண்டும் இருப்பார்; நிச்சயமாக நாங்கள் அவரைப் பாதுகாத்துக் கொள்வோம்” என்று கூறினார்கள். ஜான் டிரஸ்ட் நிறுவனம்“நாளைய தினம் அவரை எங்களுடன் அனுப்பி வையுங்கள், அவர் (காட்டிலுள்ள கனிகளை) நன்கு புசித்துக் கொண்டும், விளையாடிக்கொண்டும் இருப்பார், நிச்சயமாக, நாங்கள் அவரைப் பாதுகாத்துக் கொள்வோராகவும் இருக்கிறோம்” என்று கூறினார்கள். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Send him with us tomorrow so that he may enjoy himself and play; we will surely keep him safe.” Ruwwad Center |
12:13 قَالَ إِنِّي لَيَحْزُنُنِي أَنْ تَذْهَبُوا بِهِ وَأَخَافُ أَنْ يَأْكُلَهُ الذِّئْبُ وَأَنْتُمْ عَنْهُ غَافِلُونَ Qala innee layahzununee an thathhaboo bihi waakhafu an yakulahu alththibu waantum AAanhu ghafiloona He [Ya'qûb (Jacob)] said: "Truly, it saddens me that you should take him away. I fear lest a wolf should devour him, while you are careless of him." Hilali & Khan[Jacob] said, "Indeed, it saddens me that you should take him, and I fear that a wolf would eat him while you are of him unaware." Saheeh International(அதற்கவர்) "நீங்கள் அவரை அழைத்துச் செல்வது எனக்குத் துக்கத்தை உண்டு பண்ணிவிடும். அன்றி, நீங்கள் (விளையாடிக் கொண்டு) அவரை மறந்து பராமுகமாய் இருக்கும் சமயத்தில் ஓநாய் அவரை (அடித்துத்) தின்றுவிடும் என்றும் நான் பயப்படுகின்றேன்" என்று கூறினார். தாருல் ஹுதா(அதற்கு யஃகூப்,) “நீங்கள் அவரை அழைத்துச் செல்வது, நிச்சயமாக என்னைக் கவலைக்குள் ஆக்குகிறது; மேலும், நீங்கள் அவரை கவனியாது, பராமுகமாகயிருக்கும்போது அவரை ஓநாய் (பிடித்துத்) தின்றுவிடுமோ என்று நான் பயப்படுகிறேன்” என்று கூறினார். ஜான் டிரஸ்ட் நிறுவனம்அ(தற்க)வர் “நீங்கள் அவரை (அழைத்து)க் கொண்டு செல்வது நிச்சயமாக என்னைக் கவலையடையச் செய்கிறது, நீங்கள் (விளையாடிக் கொண்டு) அவரை விட்டும் பாராமுகமானவர்களாகயிருக்கும் நிலையில் ஓநாய் அவரை (அடித்துத்) தின்று விடும் என்று நான் பயப்படுகிறேன்” என்று கூறினார். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)He said, “It truly saddens me that you should take him away, and I fear that a wolf may eat him when you are negligent of him.” Ruwwad Center |
12:14 قَالُوا لَئِنْ أَكَلَهُ الذِّئْبُ وَنَحْنُ عُصْبَةٌ إِنَّا إِذًا لَخَاسِرُونَ Qaloo lain akalahu alththibu wanahnu AAusbatun inna ithan lakhasiroona They said: "If a wolf devours him, while we are 'Usbah (a strong group to guard him), then surely, we are the losers." Hilali & KhanThey said, "If a wolf should eat him while we are a [strong] clan, indeed, we would then be losers." Saheeh Internationalஅதற்கவர்கள், "பலசாலிகளான நாங்கள் இருந்தும் அவரை ஒரு ஓநாய் தின்பதென்றால் நிச்சயமாக நாங்கள் நஷ்டவாளிகள் ஆகிவிடுவோம்" என்று கூறி (சம்மதிக்கச் செய்து), தாருல் ஹுதா(அதற்கு) அவர்கள் “நாங்கள் (பலசாலிகளான) ஒரு கூட்டமாக இருந்தும், அவரை ஓநாய் தின்று விடுமானால், நிச்சயமாக நாங்கள் நஷ்டவாளிகளாக ஆகியிருப்போம்“ என்று கூறினார்கள். ஜான் டிரஸ்ட் நிறுவனம்அ(தற்க)வர்கள், “(ஆற்றல் மிக்க) ஒரு கூட்டத்தினராக நாங்கள் இருந்தும் அவரை ஓர் ஓநாய் தின்றுவிடுமானால், நிச்சயமாக நாங்கள் அப்போது நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்” என்று கூறினர். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)They said, “If a wolf were to eat him, despite our strong group, then we would surely be losers!” Ruwwad Center |
12:15 فَلَمَّا ذَهَبُوا بِهِ وَأَجْمَعُوا أَنْ يَجْعَلُوهُ فِي غَيَابَتِ الْجُبِّ ۚ وَأَوْحَيْنَا إِلَيْهِ لَتُنَبِّئَنَّهُمْ بِأَمْرِهِمْ هَٰذَا وَهُمْ لَا يَشْعُرُونَ Falamma thahaboo bihi waajmaAAoo an yajAAaloohu fee ghayabati aljubbi waawhayna ilayhi latunabiannahum biamrihim hatha wahum la yashAAuroona So, when they took him away, they all agreed to throw him down to the bottom of the well, and We revealed to him: "Indeed, you shall (one day) inform them of this their affair, when they know (you) not." Hilali & KhanSo when they took him [out] and agreed to put him into the bottom of the well... But We inspired to him, "You will surely inform them [someday] about this affair of theirs while they do not perceive [your identity]." Saheeh International(யூஸுஃபை) அழைத்துச் சென்று, அவரை ஆழமான ஒரு பாழ்கிணற்றில் எறிந்துவிட வேண்டுமென்றே அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து முடிவு கட்டி (எறிந்தும் விட்ட)னர். "அவர்களுடைய இச்செயலைப் பற்றி (ஒரு காலத்தில்) நீங்கள் அவர்களுக்கு அறிவுறுத்துவீர்கள். அப்பொழுது அவர்கள் (உங்களை) அறிந்து கொள்ளவும் மாட்டார்கள்" என்று நாம் யூஸுஃபுக்கு வஹ்யி அறிவித்தோம். தாருல் ஹுதா(இவ்வாறாக) அவர்கள் அவரை அழைத்துச் சென்று ஆழமான கிணற்றில் தள்ளிவிட ஒன்று சேர்த்து முடிவு செய்த போது, “நீர் அவர்களின் இச்செயலைப்பற்றி அவர்களுக்கு (ஒரு காலத்தில்) உணர்த்துவீர். அது சமயம் அவர்கள் உம்மை அறிந்து கொள்ள மாட்டார்கள்” என்று நாம் யூஸுஃபுக்கு வஹீ அறிவித்தோம். ஜான் டிரஸ்ட் நிறுவனம்ஆகவே, (யூஸுஃபாகிய) அவரை (அழைத்து)க் கொண்டு சென்று, அவரை ஆழமான ஒரு பாழ்கிணற்றில் ஆக்கிவிட வேண்டுமென்றே அவர்கள் ஒருமித்து முடிவு செய்தபோது, “அவர்களோ (உம்மை) அறியாதவர்களாக இருக்க அவர்களுடைய இக்காரியத்தைப்பற்றி (ஒரு காலத்தில்) நீர் அவர்களுக்கு நிச்சயமாகத் தெரிவிப்பீர்” என்று (யூஸுஃபாகிய) அவருக்கு நாம் வஹீ அறிவித்தோம். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Then when they took him away and they agreed to cast him into the bottom of the well, We inspired him: “You will surely inform them of this affair of theirs when they will not realize [who you are].” Ruwwad Center |
12:16 وَجَاءُوا أَبَاهُمْ عِشَاءً يَبْكُونَ Wajaoo abahum AAishaan yabkoona . And they came to their father in the early part of the night weeping. Hilali & KhanAnd they came to their father at night, weeping. Saheeh Internationalஅன்று பொழுதடைந்தபின், அவர்கள் தங்கள் தந்தையிடம் அழுதுகொண்டே வந்து, தாருல் ஹுதாஇன்னும், அவர்கள் (அன்று) பொழுது சாய்ந்ததும் தங்களுடைய தந்தையாரிடம் அழுது கொண்டே வந்தார்கள். ஜான் டிரஸ்ட் நிறுவனம்மேலும், (அன்று) பொழுதடைந்த பின் அவர்கள் தங்கள் தந்தையிடம் அழுதவர்களாகவே வந்தனர். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)At night they came to their father, crying. Ruwwad Center |
12:17 قَالُوا يَا أَبَانَا إِنَّا ذَهَبْنَا نَسْتَبِقُ وَتَرَكْنَا يُوسُفَ عِنْدَ مَتَاعِنَا فَأَكَلَهُ الذِّئْبُ ۖ وَمَا أَنْتَ بِمُؤْمِنٍ لَنَا وَلَوْ كُنَّا صَادِقِينَ Qaloo ya abana inna thahabna nastabiqu watarakna yoosufa AAinda mataAAina faakalahu alththibu wama anta bimuminin lana walaw kunna sadiqeena They said:"O our father! We went racing with one another, and left Yûsuf (Joseph) by our belongings and a wolf devoured him; but you will never believe us even when we speak the truth." Hilali & KhanThey said, "O our father, indeed we went racing each other and left Joseph with our possessions, and a wolf ate him. But you would not believe us, even if we were truthful." Saheeh International"எங்கள் தந்தையே! நிச்சயமாக யூஸுஃபை எங்கள் சாமான்களிடம் விட்டுவிட்டு ஓடி (விளையாடிக் கொண்டே வெகுதூரம் சென்று) விட்டோம். அச்சமயம் அவரை ஓநாய் (அடித்துத்) தின்றுவிட்டது. நாங்கள் (எவ்வளவு) உண்மை சொன்ன போதிலும் (அதனை) நீங்கள் நம்பவே மாட்டீர்கள்" என்று கூறினார்கள். தாருல் ஹுதா“எங்கள் தந்தையே! நாங்கள் யூஸுஃபை எங்களுடைய சாமான்களிடத்தில் விட்டுவிட்டு, ஓடி(யாடி விளையாடிக் கொண்டே வெகுதூரம்) சென்று விட்டோம்; அப்போது ஓநாய் அவரை(ப் பிடித்துத்) தின்று விட்டது - ஆனால் நாங்கள் உண்மையே சொன்ன போதிலும், நீங்கள் எங்களை நம்பவே மாட்டீர்கள்!” என்று கூறினார்கள். ஜான் டிரஸ்ட் நிறுவனம்“எஙகள் தந்தையே! நிச்சயமாக நாங்கள் ஒருவரை ஒருவர்) முந்திக் கொண்டு சென்று விட்டோம், யூஸுஃபை எங்கள் சாமான்களிடம் நாங்கள் விட்டுவிட்டோம், அப்போது அவரை ஓநாய் (அடித்துத்) தின்று விட்டது, நாங்கள் (எவ்வளவு) உண்மையாளர்களாக இருப்பினும் நீர் எங்களை நம்பக் கூடியவர் அல்லர்” என்று கூறினார்கள். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)They said, “O our father, we went off racing one another and left Joseph with our belongings, and a wolf ate him. But you will never believe us, no matter how truthful we may be.” Ruwwad Center |
12:18 وَجَاءُوا عَلَىٰ قَمِيصِهِ بِدَمٍ كَذِبٍ ۚ قَالَ بَلْ سَوَّلَتْ لَكُمْ أَنْفُسُكُمْ أَمْرًا ۖ فَصَبْرٌ جَمِيلٌ ۖ وَاللَّهُ الْمُسْتَعَانُ عَلَىٰ مَا تَصِفُونَ Wajaoo AAala qameesihi bidamin kathibin qala bal sawwalat lakum anfusukum amran fasabrun jameelun waAllahu almustaAAanu AAala ma tasifoona And they brought his shirt stained with false blood. He said: "Nay, but your own selves have made up a tale. So (for me) patience is most fitting. And it is Allâh (Alone) Whose Help can be sought against that (lie) which you describe." Hilali & KhanAnd they brought upon his shirt false blood. [Jacob] said, "Rather, your souls have enticed you to something, so patience is most fitting. And Allah is the one sought for help against that which you describe." Saheeh Internationalஅன்றி, (தங்கள் தந்தைக்குக் காண்பிப்பதற்காக) அவருடைய சட்டையில் (ஆட்டின்) பொய்யான இரத்தத்தைத் தோய்த்துக் கொண்டு வந்(து காண்பித்)தார்கள். (இரத்தம் தோய்ந்த அச்சட்டைக் கிழியாதிருப்பதைக் கண்டு "ஓநாய் அடித்துத் தின்ன) இல்லை" உங்கள் மனம் ஒரு (தீய) காரியத்தை உங்களுக்கு அழகாகக் காண்பித்து விட்டது. (அவ்வாறு செய்து விட்டீர்கள்.) ஆகவே, (அத்துக்கத்தைச்) சகித்துக் கொள்வதுதான் நன்று. நீங்கள் கூறியவற்றில் (இருந்து யூஸுஃபை பாதுகாக்குமாறு) அல்லாஹ் விடம் உதவி தேடுகிறேன்" என்று கூறினார்கள். தாருல் ஹுதா(மேலும், தங்கள் கூற்றை மெய்ப்பிக்க) யூஸுஃபுடைய சட்டையில் பொய்யான இரத்தத்தைத் தடவிக்கொண்டு வந்திருந்தார்கள்; “இல்லை, உங்கள் மனம் ஒரு (தீய) காரியத்தை உங்களுக்கு அழகாகக் காண்பித்துவிட்டது; எனவே (எனக்கு இந்நிலையில் அழகிய) பொறுமையை மேற்கொள்வதே நலமாக இருக்கும்;மேலும், நீங்கள் கூறும் விஷயத்தில் அல்லாஹ்வே உதவி தேடப்படுபவன்” என்று கூறினார். ஜான் டிரஸ்ட் நிறுவனம்அன்றியும் (தங்கள் கூற்றைப் பலப்படுத்த) அவருடைய சட்டையில் (ஆட்டின் பொய்யான இரத்தத்தை(த் தோய்த்து)க் கொண்டு வந்(து காண்பித்)தார்கள், (இரத்தம் தோய்ந்த அச்சட்டை கிழியாதிருப்பதைக் கண்ட யாஃகூப் நபி) “இல்லை, உங்கள் மனங்கள் ஒரு (தீய) காரியத்தை உங்களுக்கு அழகாகக் காண்பித்து விட்டன, ஆகவே, அழகான பொறுமை(யைக்கடைப் பிடிப்பது)தான் நன்று, மேலும், நீங்கள் வர்ணிக்கின்றவற்றிலிருந்து (யூஸுஃபை இரட்சிக்க) அல்லாஹ்வே உதவி தேடப்படுபவன், (அவனிடமே உதவி தேடுகிறேன்)”, என்று கூறினார். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)They brought his shirt, stained with false blood. He said, “Nay; rather your souls have enticed you to commit something. But I will bear it with beautiful patience. It is Allah’s help that I seek against what you claim.” Ruwwad Center |
12:19 وَجَاءَتْ سَيَّارَةٌ فَأَرْسَلُوا وَارِدَهُمْ فَأَدْلَىٰ دَلْوَهُ ۖ قَالَ يَا بُشْرَىٰ هَٰذَا غُلَامٌ ۚ وَأَسَرُّوهُ بِضَاعَةً ۚ وَاللَّهُ عَلِيمٌ بِمَا يَعْمَلُونَ Wajaat sayyaratun faarsaloo waridahum faadla dalwahu qala ya bushra hatha ghulamun waasarroohu bidaAAatan waAllahu AAaleemun bima yaAAmaloona And there came a caravan of travellers and they sent their water-drawer, and he let down his bucket (into the well). He said: "What a good news! Here is a boy." So they hid him as merchandise (a slave). And Allâh was All-Knower of what they did. Hilali & KhanAnd there came a company of travelers; then they sent their water drawer, and he let down his bucket. He said, "Good news! Here is a boy." And they concealed him, [taking him] as merchandise; and Allah was knowing of what they did. Saheeh Internationalபின்னர் (கிணற்றின் சமீபமாக) ஒரு பயணக் கூட்டம் வந்தது. அவர்கள் தங்களின் ஆளை (தண்ணீர் கொண்டு வர) அனுப்பி னார்கள். அவன் தன் வாளியைக் (கிணற்றில்) விட்டான். (அதில் யூஸுஃப் உட்கார்ந்து கொண்டார். அதில் யூஸுஃப் இருப்பதைக் கண்டு "உங்களுக்கு) நற்செய்தி! இதோ ஒரு (அழகிய) சிறுவன்! என்று (யூஸுஃபைச் சுட்டிக் காட்டிக்) கூறினான். (அவரைக் கண்ணுற்ற அவர்கள்) தங்கள் வர்த்தகப்பொருளாக (ஆக்கிக் கொள்ளக் கருதி) அவரை மறைத்துக் கொண்டார்கள். அல்லாஹ் அவர்கள் செய்வதை நன்கறிந்தவனாகவே இருக்கின்றான். தாருல் ஹுதாபின்னர் (அக்கிணற்றருகே) ஒரு பயணக்கூட்டம் வந்தது; அவர்களில் தண்ணீர் கொண்டு வருபவரை(த் தண்ணீருக்காக அக்கூட்டத்தினர்) அனுப்பினார்கள். அவர் தம் வாளியை(க் கிணற்றில்) விட்டார். “நற்செய்தி! இதோ ஓர் (அழகிய) சிறுவன்!” என்று கூறினார் - (யூஸுஃபை தூக்கியெடுத்து) அவரை ஒரு வியாபாரப் பொருளாக(க் கருதி) மறைத்து வைத்துக் கொண்டார்கள்; அவர்கள் செய்ததை எல்லாம் அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான். ஜான் டிரஸ்ட் நிறுவனம்(பின்னர், அக்கிணற்றின் சமீபமாக) ஒரு பிரயாணக் கூட்டமும் வந்தது, தங்களது தண்ணீர் கொண்டு வருபவரை(த் தண்ணீருக்காக) அவர்கள் அனுப்பினார்கள், அவர் தன் வாளியை (அக் கிணற்றில்) விட்டார், (யூஸுஃப் அதில் உட்கார்ந்து கொண்டார், அதைக் கண்டு “உங்களுக்கு ஓ நன்மாராயமே! இதோ ஓர் (அழகிய) சிறுவன்” என்று (யூஸுஃபைச் சுட்டிக் காட்டிக்) கூறினார், (அவரைக் கண்ணுற்ற அவர்கள், தங்கள்) வர்த்தகப் பொருளாக அவரை (ஆக்கிக் கொள்ளக் கருதி) மறைத்துக் கொண்டார்கள், மேலும், அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிகிறவன். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Some travelers came and sent their water fetcher, who lowered his bucket into the well. He cried out, “Oh, what good news; here is a boy!” They kept him hidden as merchandise, but Allah is All-Knowing of what they did. Ruwwad Center |
12:20 وَشَرَوْهُ بِثَمَنٍ بَخْسٍ دَرَاهِمَ مَعْدُودَةٍ وَكَانُوا فِيهِ مِنَ الزَّاهِدِينَ Washarawhu bithamanin bakhsin darahima maAAdoodatin wakanoo feehi mina alzzahideena And they sold him for a low price, – for a few dirhams (i.e. for a few silver coins). And they were of those who regarded him insignificant. Hilali & KhanAnd they sold him for a reduced price - a few dirhams - and they were, concerning him, of those content with little. Saheeh International(இதற்குள் அவருடைய சகோதரர்கள் அங்கு வந்து "இவன் தப்பி ஓடி வந்துவிட்ட எங்கள் அடிமை" எனக் கூறி அவர்களிடமே) ஒரு சொற்ப தொகையான பணத்திற்கு விற்றுவிட்டார்கள். (ஏனென்றால், அவருடைய சகோதரர்கள்) அவரை மிக்க வெறுத்த வர்களாகவே இருந்தனர். தாருல் ஹுதா(இதற்குள் அவருடைய சகோதரர்கள் ஓடிவந்து) அவரை அவர்கள் (விரல்விட்டு) எண்ணக்கூடிய சில வெள்ளிக் காசுகளுக்கு அற்பமான கிரயத்திற்கு விற்றுவிட்டார்கள். அவர் விஷயத்தில் அவர்கள் பற்றற்றவர்களாக இருந்தார்கள். ஜான் டிரஸ்ட் நிறுவனம்மேலும், அவரை அவர்கள் அற்பக் கிரயத்திற்கு-(விரல் விட்டு எண்ணப்படுகின்ற (சொற்ப) வெள்ளிக் காசுகளுக்கு விற்று விட்டார்கள், மேலும், அவர்கள் அதில் பற்றற்றவர்களாக இருந்தனர். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)They sold him for a meager price, a few silver coins; they were quite indifferent about him. Ruwwad Center |
12:21 وَقَالَ الَّذِي اشْتَرَاهُ مِنْ مِصْرَ لِامْرَأَتِهِ أَكْرِمِي مَثْوَاهُ عَسَىٰ أَنْ يَنْفَعَنَا أَوْ نَتَّخِذَهُ وَلَدًا ۚ وَكَذَٰلِكَ مَكَّنَّا لِيُوسُفَ فِي الْأَرْضِ وَلِنُعَلِّمَهُ مِنْ تَأْوِيلِ الْأَحَادِيثِ ۚ وَاللَّهُ غَالِبٌ عَلَىٰ أَمْرِهِ وَلَٰكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ Waqala allathee ishtarahu min misra liimraatihi akrimee mathwahu AAasa an yanfaAAana aw nattakhithahu waladan wakathalika makkanna liyoosufa fee alardi walinuAAallimahu min taweeli alahadeethi waAllahu ghalibun AAala amrihi walakinna akthara alnnasi la yaAAlamoona And he (the man) from Egypt who bought him, said to his wife: "Make his stay comfortable, may be he will profit us or we shall adopt him as a son." Thus did We establish Yûsuf (Joseph) in the land, that We might teach him the interpretation of events. And Allâh has full power and control over His Affairs, but most of men know not. Hilali & KhanAnd the one from Egypt who bought him said to his wife, "Make his residence comfortable. Perhaps he will benefit us, or we will adopt him as a son." And thus, We established Joseph in the land that We might teach him the interpretation of events. And Allah is predominant over His affair, but most of the people do not know. Saheeh International(அவரை வாங்கியவரும், அவரை எகிப்துக்குக் கொண்டு வந்து அந்நாட்டு அதிபதியிடம் விற்றுவிட்டார்.) எகிப்தில் அவரை வாங்கியவர், தன் மனைவியை நோக்கி "நீ இவரை கண்ணியமாக வைத்துக் கொள்; அவரால் நாம் நன்மை அடையலாம்; அல்லது அவரை நாம் நம்முடைய (சுவீகாரப்) புத்திரனாக்கிக் கொள்ளலாம்" என்று கூறினார். யூஸுஃப் அவ்வூரில் ஆதிக்கம் செலுத்துவதற் காகவும் (முன்னர் அவர் கண்டது போன்ற) கனவுகளின் வியாக்கி யானங்களை அவருக்குக் கற்பிப்பதற்காகவும் இவ்வாறு நாம் அவருக்கு வசதி செய்தோம். அல்லாஹ் தன் காரியத்தை நிறைவேற்றுவதில் (அனைவரையும்) மிகைத்தவனாக இருக்கிறான். ஆனால், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (இதனை) அறிந்து கொள்ள மாட்டார்கள். தாருல் ஹுதா(யூஸுஃபை) மிஸ்ரு நாட்டில் வாங்கியவர் தம் மனைவியை நோக்கி, “இவர் (நம்மிடம்) தங்குவதை சங்கையாக வைத்துக்கொள்; ஒருவேளை இவர் நமக்கு (மிக்க) நன்மையைக் கொண்டு வரலாம்; அல்லது இவரை நாம் (நம் சுவீகார) புத்திரனாக ஆக்கிக் கொள்ளலாம்” என்று கூறினார். இவ்வாறு நாம் யூஸுஃபுக்குப் பூமியிலே (தக்க) வசதியளித்தோம்; இன்னும் நாம் அவருக்குக் கனவுகளுக்குப் பலன் கூறுவதையும் கற்றுக் கொடுத்தோம்; அல்லாஹ் தன் காரியத்தில் வெற்றியாளனாக இருக்கிறான் - ஆனால் மக்களில் பெரும்பாலோர் (இதனை) அறிந்து கொள்ள மாட்டார்கள். ஜான் டிரஸ்ட் நிறுவனம்(யூஸுஃபை வாங்கியவர் அவரை எகிப்துக்குக் கொண்டு வந்து விற்று விட்டார்.) எகிப்தில் அவரை வாங்கியவர் தன் மனைவியிடம், “நீ அவர் தங்குமிடத்தை கண்ணியமாக வைத்துக் கொள், அவர் நமக்குப்பயன் தரலாம், அல்லது அவரை நாம் (சுவீகாரப்) புத்திரனாக எடுத்துக் கொள்ளலாம்” என்று கூறினார், அவ்வாறே அந்த (எகிப்து) பூமியில் யூஸுஃபுக்கு நாம் இடமளித்தோம், கனவுகளின் விளக்கங்களை அவருக்குக் கற்பிப்பதற்காகவும் (நாம் அவருக்கு இடமளித்தோம்.) அல்லாஹ், தன் காரியத்தில் (யாவரையும்) மிகைத்தவன் எனினும், மனிதர்களில் பெரும்பாலோர் (இதனை) அறிந்து கொள்ள மாட்டார்கள். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)The man in Egypt who bought him said to his wife, “Make his stay comfortable; perhaps he will benefit us or we may adopt him as a son.” This is how We established Joseph in the land, so that We may teach him the interpretation of dreams. Allah’s decree always prevails, but most people do not know. Ruwwad Center |
12:22 وَلَمَّا بَلَغَ أَشُدَّهُ آتَيْنَاهُ حُكْمًا وَعِلْمًا ۚ وَكَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ Walamma balagha ashuddahu ataynahu hukman waAAilman wakathalika najzee almuhsineena And when he [Yûsuf (Joseph)] attained his full manhood, We gave him wisdom and knowledge (the Prophethood), thus We reward the Muhsinûn (doers of good. See the footnote of V.9:120). Hilali & KhanAnd when Joseph reached maturity, We gave him judgment and knowledge. And thus We reward the doers of good. Saheeh Internationalஅவர் தன் வாலிபத்தை அடைந்ததும், நாம் அவருக்கு ஞானத்தையும், கல்வியையும் கொடுத்தோம். நல்லொழுக்க முடையவர்களுக்கு இவ்வாறுதான் நாம் கூலித் தருகிறோம். தாருல் ஹுதாஅவர் தம் வாலிபத்தை அடைந்ததும், அவருக்கு நாம் ஞானத்தையும், கல்வியையும் கொடுத்தோம். இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் நற்கூலி வழங்குகிறோம். ஜான் டிரஸ்ட் நிறுவனம்இன்னும், அவர் தன் வாலிபத்தை அடைந்தபொழுது நாம் அவருக்கு சட்ட நுணுக்கத்தையும், கல்வியையும் கொடுத்தோம்; இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி தருகிறோம். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)When he reached his prime, We gave him wisdom and knowledge. This is how We reward those who do good. Ruwwad Center |
12:23 وَرَاوَدَتْهُ الَّتِي هُوَ فِي بَيْتِهَا عَنْ نَفْسِهِ وَغَلَّقَتِ الْأَبْوَابَ وَقَالَتْ هَيْتَ لَكَ ۚ قَالَ مَعَاذَ اللَّهِ ۖ إِنَّهُ رَبِّي أَحْسَنَ مَثْوَايَ ۖ إِنَّهُ لَا يُفْلِحُ الظَّالِمُونَ Warawadathu allatee huwa fee baytiha AAan nafsihi waghallaqati alabwaba waqalat hayta laka qala maAAatha Allahi innahu rabbee ahsana mathwaya innahu la yuflihu alththalimoona And she, in whose house he was, sought to seduce him (to do an evil act), and she closed the doors and said: "Come on, O you." He said: "I seek refuge in Allâh (or Allâh forbid)! Truly, he (your husband) is my master! He made my living in a great comfort! (So I will never betray him). Verily, the Zâlimûn (wrong and evildoers) will never be successful." Hilali & KhanAnd she, in whose house he was, sought to seduce him. She closed the doors and said, "Come, you." He said, "[I seek] the refuge of Allah. Indeed, he is my master, who has made good my residence. Indeed, wrongdoers will not succeed." Saheeh Internationalஅவரிருந்த வீட்டின் எஜமானி (அவரைக் காதலித்துத் தன்னை அலங்கரித்துக் கொண்டு) எல்லாக் கதவுகளையும் மூடிவிட்டு தன் விருப்பத்திற்கு இணங்குமாறு அவரை "வாரும்" என்றழைத்தாள். அதற்கவர், "(என்னை) அல்லாஹ் பாதுகாத்துக் கொள்வானாகவும்! நிச்சயமாக என் எஜமானாகிய (உன் கண)வர் என்னை மிக்க (அன்பாகவும்) கண்ணியமாகவும் வைத்திருக்கிறார். (இத்தகைய நன்மை செய்பவர்களுக்குத் துரோகம் செய்யும்) அநியாயக்காரர்கள் நலம்பெற மாட்டார்கள்" என்று கூறினார். தாருல் ஹுதாஅவர் எந்தப் பெண்ணின் வீட்டில் இருந்தாரோ, அவள் அவர்மீது விருப்பங்கொண்டு, கதவுகளைத் தாழிட்டுக் கொண்டு (தன் விருப்பதிற்கு இணங்குமாறு) “வாரும்” என்று அழைத்தாள் - (அதற்கு அவர் மறுத்து,) “அல்லாஹ் (இத்தீய செயலிலிருந்து) என்னைக் காத்தருள்வானாக; நிச்சயமாக (உன் கணவர்) என் எஜமானர், என் இடத்தை அழகாக (கண்ணியமாக) வைத்திருக்கிறார் - அநியாயம் செய்பவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்” என்று சொன்னார். ஜான் டிரஸ்ட் நிறுவனம்மேலும், அவர் எவளுடைய வீட்டில் இருந்தாரோ, அவள், அவர் மீது காதல் கொண்டு, தன் விருப்பத்திற்கிணங்குமாறு எல்லாக் கதவுகளையும் மூடிவிட்டு, அவரை “வாரும்” என்றழைத்தாள், அ(தற்க)வர் “அல்லாஹ் (இத் தீய செயலிலிருந்து) காத்தருள்வானாகவும் நிச்சயமாக, என் எஜமானனாகிய(உன் கண)வர் என் தங்குமிடத்தை அழகாக்கி வைத்திருக்கிறார், நிச்சயமாக (இத்தகைய நன்மை செய்வோருக்குத் துரோகம் செய்யும்) அநியாயக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள்” என்று கூறினார். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)But the woman in whose house he was living tried to seduce him. She bolted the doors and said, “Come here to me!” He said, “I seek refuge with Allah! My master has made my stay good. Indeed, the wrongdoers will never succeed.” Ruwwad Center |
12:24 وَلَقَدْ هَمَّتْ بِهِ ۖ وَهَمَّ بِهَا لَوْلَا أَنْ رَأَىٰ بُرْهَانَ رَبِّهِ ۚ كَذَٰلِكَ لِنَصْرِفَ عَنْهُ السُّوءَ وَالْفَحْشَاءَ ۚ إِنَّهُ مِنْ عِبَادِنَا الْمُخْلَصِينَ Walaqad hammat bihi wahamma biha lawla an raa burhana rabbihi kathalika linasrifa AAanhu alssooa waalfahshaa innahu min AAibadina almukhlaseena And indeed she did desire him, and he would have inclined to her desire, had he not seen the evidence of his Lord. Thus it was, that We might turn away from him evil and illegal sexual intercourse. Surely, he was one of Our chosen (guided) slaves. Hilali & KhanAnd she certainly determined [to seduce] him, and he would have inclined to her had he not seen the proof of his Lord. And thus [it was] that We should avert from him evil and immorality. Indeed, he was of Our chosen servants. Saheeh Internationalஅவள் அவரைக் காதலிப்பதில் உறுதிகொண்டு விட்டாள்; அவர் தன் இறைவனுடைய எச்சரிப்பைக் கண்டிராவிடில் அவரும் அவளைக் காதலித்தே இருப்பார். எனினும், கெடுதல்களிலிருந்தும் மானக்கேடான செயல்களிலிருந்தும் அவரைத் திருப்பி விடுவதற்காக நாம் அவருக்கு இவ்வாறு எச்சரிக்கை செய்தோம். நிச்சயமாக, அவர் நம்முடைய (உண்மையான) பரிசுத்தமான அடியார்களில் ஒருவராக இருந்தார். தாருல் ஹுதாஆனால் அவளோ அவரைத் திடமாக விரும்பினாள்; அவரும் தம் இறைவனின் ஆதாரத்தைக் கண்டிராவிட்டால் அவள் மீது விருப்பம் கொண்டே இருப்பார்; இவ்வாறு நாம் அவரைவிட்டுத் தீமையையும் மானக்கேடான செயல்களையும் திருப்பிவிட்டோம் - ஏனெனில் நிச்சயமாக அவர் நம் தூய்மையான அடியார்களில் ஒருவராக இருந்தார். ஜான் டிரஸ்ட் நிறுவனம்அவள் அவரை (அடைய) திடமாக ஆசை கொண்டு விட்டாள், அவர் தன் இரட்சகனுடைய சான்றைக் கண்டிராவிடில், அவரும் அவள்மீது ஆசை கொண்டே இருப்பார், தீமையையும் மானக்கேடான செயல்களையும் அவரைவிட்டும் நாம் திருப்பிவிடுவதற்காக (அவருக்கு) இவ்வாறு (எச்சரிக்கை செய்தோம்.) நிச்சயமாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட நம் அடியார்களில் உள்ளவராவார். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)She advanced towards him, and he would have succumbed to her; were it not that he saw a sign from his Lord. This is how We kept evil and shameful acts away from him. Indeed, he was one of Our chosen slaves. Ruwwad Center |
12:25 وَاسْتَبَقَا الْبَابَ وَقَدَّتْ قَمِيصَهُ مِنْ دُبُرٍ وَأَلْفَيَا سَيِّدَهَا لَدَى الْبَابِ ۚ قَالَتْ مَا جَزَاءُ مَنْ أَرَادَ بِأَهْلِكَ سُوءًا إِلَّا أَنْ يُسْجَنَ أَوْ عَذَابٌ أَلِيمٌ Waistabaqa albaba waqaddat qameesahu min duburin waalfaya sayyidaha lada albabi qalat ma jazao man arada biahlika sooan illa an yusjana aw AAathabun aleemun So, they raced with one another to the door, and she tore his shirt from the back. They both found her lord (i.e. her husband) at the door. She said: "What is the recompense (punishment) for him who intended an evil design against your wife, except that he be put in prison or a painful torment?" Hilali & KhanAnd they both raced to the door, and she tore his shirt from the back, and they found her husband at the door. She said, "What is the recompense of one who intended evil for your wife but that he be imprisoned or a painful punishment?" Saheeh International(யூஸுஃப் அவளை விட்டுத் தப்பித்துக்கொள்ளக் கருதி வெளியில் செல்ல ஓடினார். அவள் அவரைப் பிடித்துக்கொள்ளக் கருதி அவர் பின் ஓடினாள்.) இருவரும், ஒருவர் ஒருவரை முந்திக் கொள்ள கதவின் பக்கம் விரைந்து ஓடினார்கள். (யூஸுஃப் முந்திக் கொள்ளவே அவருடைய சட்டையைப் பிடித்திழுத்தாள்.) ஆகவே, அவருடைய சட்டையின் பின்புறம் கிழிந்துவிட்டது. அச்சமயம், வாசற்படியில் அவளுடைய கணவர் இருப்பதை இருவரும் கண்டனர். (ஆகவே, அவள் பயந்து, தான் தப்பித்துக்கொள்ளக் கருதி) அவரை நோக்கி "உங்களுடைய மனைவிக்குத் தீங்கிழைக்கக் கருதியவனுக்குச் சிறையில் இடுவதோ அல்லது துன்புறுத்தும் வேதனையைத் தருவதோ அன்றி வேறு தண்டனை உண்டா?" என்று கேட்டாள். தாருல் ஹுதா(யூஸுஃப் அவளை விட்டும் தப்பி ஓட முயன்று) ஒருவரை ஒருவர் முந்திக் கொள்ள வாசலின் பக்கம் ஓடினார்கள்; அவள் அவருடைய சட்டையைப் பின்புறத்தில் கிழித்து விட்டாள்; அப்போது அவளுடைய கணவரை வாசல் பக்கம் இருவரும் கண்டனர். உடன் (தன் குற்றத்தை மறைக்க) “உம் மனைவிக்குத் தீங்கிழைக்க நாடிய இவருக்குச் சிறையிலிடப்படுவதோ அல்லது நோவினை தரும் வேதனையைத் தருவதோ அன்றி வேறு என்ன தண்டனை இருக்கமுடியும்?” என்று கேட்டாள். ஜான் டிரஸ்ட் நிறுவனம்(யூஸுஃப் அவளை விட்டுத் தப்பிக்க வெளியில் செல்ல ஓடினார், அவள் அவரைப் பிடிக்க இவ்வாறாக) இருவரும் ஒருவரை ஒருவர் முந்திக் கொள்ள வாசல் பக்கம் ஓடினார்கள், (யூஸுஃப், முந்திக் கொள்ளவே அவருடைய சட்டையை அவள் பிடித்திழுத்தாள்.) ஆகவே அவருடைய சட்டையைப் பின்புறமாக அவள் கிழித்துவிட்டாள்; (அச்சமயம்) வாசலில் அவளுடைய கணவரை இருவரும் காணப்பெற்றனர், (ஆகவே, அவள் தான் தப்பிக்க அவரிடம்) “உம்முடைய மனைவிக்குத் தீங்கை நாடியவனுக்கு அவன் சிறையிலிடப்படுவதையோ அல்லது துன்புறுத்தும் வேதனையையோ தவிர (வேறு) என்ன தண்டனை (இருக்கக்கூடும்?) என்று கூறினாள். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)They both rushed to the door and she tore his shirt from behind, and they found her husband at the door. She said, “What is the punishment for someone who tried to dishonor your wife, except to be imprisoned or a painful punishment?” Ruwwad Center |
12:26 قَالَ هِيَ رَاوَدَتْنِي عَنْ نَفْسِي ۚ وَشَهِدَ شَاهِدٌ مِنْ أَهْلِهَا إِنْ كَانَ قَمِيصُهُ قُدَّ مِنْ قُبُلٍ فَصَدَقَتْ وَهُوَ مِنَ الْكَاذِبِينَ Qala hiya rawadatnee AAan nafsee washahida shahidun min ahliha in kana qameesuhu qudda min qubulin fasadaqat wahuwa mina alkathibeena He [Yûsuf (Joseph)] said: "It was she that sought to seduce me;" and a witness of her household bore witness (saying): "If it be that his shirt is torn from the front, then her tale is true and he is a liar! Hilali & Khan[Joseph] said, "It was she who sought to seduce me." And a witness from her family testified. "If his shirt is torn from the front, then she has told the truth, and he is of the liars. Saheeh International(யூஸுஃப் அதனை மறுத்து) "அவள்தான் என்னை வற்புறுத்தித் தன்னிடம் அழைத்தாள்" என்று கூறினார். (இதற்கிடையில் அங்கிருந்த) அவளுடைய குடும்பத்திலுள்ள ஒருவர் (இதற்கு) சாட்சியமாகக் கூறியதாவது: "அவருடைய சட்டை முன்புறம் கிழிந்திருந்தால் அவள் உண்மையே சொல்லுகிறாள்; அவர் பொய்யரே! (அன்றி) தாருல் ஹுதா(இதை மறுத்து யூஸுஃப்;) “இவள் தான் என்னை வற்புறுத்தித் தன்னிடம் அழைத்தாள்” என்று கூறினார்; (இதற்கிடையில்) அவள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் சாட்சி(யாகப் பின்வருமாறு) கூறினார்: “இவருடைய சட்டை முன்புறத்தில் கிழிந்திருந்தால், அவள் உண்மை சொல்கிறாள்; இவர் பொய்யராவார். ஜான் டிரஸ்ட் நிறுவனம்(யூஸுஃப் அதனை மறுத்து) “அவள்தான் தன் விருப்பத்திற்கிணங்குமாறு என்னை அழைத்தாள்” என்று கூறினார், (அது சமயம்) அவளுடைய குடும்பத்திலிருந்த சாட்சியாளர் ஒருவர் (பின் வருமாறு) சாட்சி கூறினார், “அவருடைய சட்டை முன்புறமாகக் கிழிக்கப்பட்டிருந்தால் அவள் உண்மை சொல்கிறாள், அவரோ பொய்யர்களில் உள்ளவராவார். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Joseph said, “It was she who tried to seduce me.” A witness from her own household suggested: “If his shirt is torn from the front, then she is telling the truth and he is a liar. Ruwwad Center |
12:27 وَإِنْ كَانَ قَمِيصُهُ قُدَّ مِنْ دُبُرٍ فَكَذَبَتْ وَهُوَ مِنَ الصَّادِقِينَ Wain kana qameesuhu qudda min duburin fakathabat wahuwa mina alssadiqeena "But if it be that his shirt is torn from the back, then she has told a lie and he is speaking the truth!" Hilali & KhanBut if his shirt is torn from the back, then she has lied, and he is of the truthful." Saheeh Internationalஅவருடைய சட்டைப் பின்புறம் கிழிந்திருந்தால், அவள் பொய் சொல்லுகிறாள்; அவர் உண்மை கூறுபவர்தான்" (என்றார்). தாருல் ஹுதா“ஆனால் இவருடைய சட்டை பின்புறமாகக் கிழிந்திருந்தால், அவள் பொய் சொல்லுகிறாள்; அவர் உண்மையாளர்களில் உள்ளவர்.” ஜான் டிரஸ்ட் நிறுவனம்அன்றியும் அவருடைய சட்டை பின்புறமாகக் கிழிக்கப்பட்டிருந்தால், அவள் பொய் சொல்கிறாள், அவர் உண்மையாளவர்களில் உள்ளவராவார்” என்றார். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)But if his shirt is torn from the back, then she is lying and he is truthful.” Ruwwad Center |
12:28 فَلَمَّا رَأَىٰ قَمِيصَهُ قُدَّ مِنْ دُبُرٍ قَالَ إِنَّهُ مِنْ كَيْدِكُنَّ ۖ إِنَّ كَيْدَكُنَّ عَظِيمٌ Falamma raa qameesahu qudda min duburin qala innahu min kaydikunna inna kaydakunna AAatheemun So, when he (her husband) saw his [Yûsuf's (Joseph's)] shirt torn at the back, he (her husband) said: "Surely, it is a plot of you women! Certainly mighty is your plot! Hilali & KhanSo when her husband saw his shirt torn from the back, he said, "Indeed, it is of the women's plan. Indeed, your plan is great. Saheeh International(ஆகவே, அவளது கணவர்) யூஸுஃபுடைய சட்டையைக் கவனித்ததில், அது பின்புறமாகக் கிழிந்திருப்பதைக் கண்டு (தன் மனைவியை நோக்கி) "நிச்சயமாக இது (பெண்களாகிய) உங்களுடைய சதியே; நிச்சயமாக உங்களின் சதி மகத்தானது" என்று கூறி, தாருல் ஹுதா(யூஸுஃபுடைய) சட்டை பின்புறமாகக் கிழிந்திருந்ததை அவர் கண்டபோது, நிச்சயமாக இது (பெண்களாகிய) உங்கள் சதியேயாகும் - நிச்சயமாக உங்களுடைய சதி மகத்தானதே! ஜான் டிரஸ்ட் நிறுவனம்ஆகவே, (யூஸுஃபாகிய) அவருடைய சட்டையை – அது பின்புறமாகக் கிழிக்கப்பட்டிருப்பதை அவர் பார்த்தபோது (தன் மனைவியிடம்) “நிச்சயமாக இது பெண்களாகிய) உங்களுடைய சதியிலுள்ளதே! நிச்சயமாக உஙகளின் சதி மகத்தானது” என்று கூறினார். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)When he saw that his shirt was torn from the back, he said, “This is your guile [O women]; your guile is great indeed! Ruwwad Center |
12:29 يُوسُفُ أَعْرِضْ عَنْ هَٰذَا ۚ وَاسْتَغْفِرِي لِذَنْبِكِ ۖ إِنَّكِ كُنْتِ مِنَ الْخَاطِئِينَ Yoosufu aAArid AAan hatha waistaghfiree lithanbiki innaki kunti mina alkhatieena "O Yûsuf (Joseph)! Turn away from this! (O woman!) Ask forgiveness for your sin. Verily, you were of the sinful." Hilali & KhanJoseph, ignore this. And, [my wife], ask forgiveness for your sin. Indeed, you were of the sinful." Saheeh International(யூஸுஃபை நோக்கி) "யூஸுஃபே! நீங்கள் இதனை இம்மட்டில் விட்டுவிடுங்கள். (இதைப்பற்றி எவரிடமும் கூற வேண்டாம்" என்று கூறி மீண்டும் அவளை நோக்கி) "நீ உன் பாவத்திற்கு மன்னிப்பைத் தேடிக்கொள். நிச்சயமாக நீதான் குற்றம் செய்திருக்கிறாய்" என்று கூறினார். தாருல் ஹுதா(என்றும்) “யூஸுஃபே! இதனை நீர் இம்மட்டில் விட்டு விடும். (பெண்ணே!) உனது பாவத்திற்காக மன்னிப்புத் தேடிக் கொள்; நிச்சயமாக நீ தவறு செய்தவர்களில் ஒருத்தியாக இருக்கின்றாய்” என்றும் கூறினார். ஜான் டிரஸ்ட் நிறுவனம்(யூஸுஃபிடம்,) ”யூஸுஃபே! நீர் இதனை விட்டும் புறக்கணித்து விடும் (என்று கூறி மீண்டும் அவளிடம்,) நீ உன் பாவத்திற்கு மன்னிப்புத் தேடிக்கொள், நிச்சயமாக நீ தவறு செய்தவர்களில் இருக்கிறாய்” என்று (அவளது கணவராகிய) அவர் கூறினார் . மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)O Joseph, forget about this; but you [O wife], seek forgiveness for your sin, for it was you who have done wrong.” Ruwwad Center |
12:30 وَقَالَ نِسْوَةٌ فِي الْمَدِينَةِ امْرَأَتُ الْعَزِيزِ تُرَاوِدُ فَتَاهَا عَنْ نَفْسِهِ ۖ قَدْ شَغَفَهَا حُبًّا ۖ إِنَّا لَنَرَاهَا فِي ضَلَالٍ مُبِينٍ Waqala niswatun fee almadeenati imraatu alAAazeezi turawidu fataha AAan nafsihi qad shaghafaha hubban inna lanaraha fee dalalin mubeenin And women in the city said: "The wife of Al-'Azîz is seeking to seduce her (slave) young man, indeed she loves him violently; verily, we see her in plain error." Hilali & KhanAnd women in the city said, "The wife of al-'Azeez is seeking to seduce her slave boy; he has impassioned her with love. Indeed, we see her [to be] in clear error." Saheeh International(இவ்விஷயம் வெளியில் பரவவே) அப்பட்டினத்திலுள்ள பெண்கள் பலரும் (இதனை இழிவாகக் கருதி) "அதிபதியின் மனைவி தன்னிடமுள்ள (கேவலம்) ஒரு (அடிமை) வாலிபனைத் தனக்கு இணங்கும்படி வற்புறுத்துகிறாள். காதல் அவளை மயக்கி விட்டது! நிச்சயமாக அவள் மிகத் தவறான வழியில் இருப்பதையே நாங்கள் காண்கிறோம்" என்று (இழிவாகப்) பேசலானார்கள். தாருல் ஹுதாஅப்பட்டிணத்தில் சில பெண்கள்; “அஜீஸின் மனைவி தன்னிடமுள்ள ஓர் இளைஞரைத் தனக்கு இணங்கும்படி வற்புறுத்தியிருக்கிறாள்; (அவர் மேலுள்ள) ஆசை அவளை மயக்கி விட்டது - நிச்சயமாக நாம் அவளை பகிரங்கமான வழிகேட்டில் தான் காண்கிறோம்” என்று பேசிக் கொண்டார்கள். ஜான் டிரஸ்ட் நிறுவனம்அப்பட்டணத்திலுள்ள பெண்கள், பலரும் “(எகிப்திய அரசின்) அமைச்சருடைய மனைவி தன்னுடைய (அடிமை) வாலிபனை தன் விருப்பத்திற்கிணங்குமாறு அழைக்கிறாள், காதலால் அவர் அவளை மிகைந்து விட்டார், நிச்சயமாக, அவளை பகிரங்கமான வழிகேட்டிலேயே நாம் காண்கின்றோம்” என்று (இழிவாகக்) கூறினர். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Some women in the city said, “The chief minister’s wife is trying to seduce her slave-boy; his love has overwhelmed her heart. We see that she is clearly mistaken.” Ruwwad Center |
12:31 فَلَمَّا سَمِعَتْ بِمَكْرِهِنَّ أَرْسَلَتْ إِلَيْهِنَّ وَأَعْتَدَتْ لَهُنَّ مُتَّكَأً وَآتَتْ كُلَّ وَاحِدَةٍ مِنْهُنَّ سِكِّينًا وَقَالَتِ اخْرُجْ عَلَيْهِنَّ ۖ فَلَمَّا رَأَيْنَهُ أَكْبَرْنَهُ وَقَطَّعْنَ أَيْدِيَهُنَّ وَقُلْنَ حَاشَ لِلَّهِ مَا هَٰذَا بَشَرًا إِنْ هَٰذَا إِلَّا مَلَكٌ كَرِيمٌ Falamma samiAAat bimakrihinna arsalat ilayhinna waaAAtadat lahunna muttakaan waatat kulla wahidatin minhunna sikkeenan waqalati okhruj AAalayhinna falamma raaynahu akbarnahu waqattaAAna aydiyahunna waqulna hasha lillahi ma hatha basharan in hatha illa malakun kareemun So when she heard of their accusation, she sent for them and prepared a banquet for them; she gave each one of them a knife (to cut the foodstuff with), and she said [to Yûsuf (Joseph)]: "Come out before them." Then, when they saw him, they exalted him (at his beauty) and (in their astonishment) cut their hands. They said: "How perfect is Allâh (or Allâh forbid)! No man is this! This is none other than a noble angel!" Hilali & KhanSo when she heard of their scheming, she sent for them and prepared for them a banquet and gave each one of them a knife and said [to Joseph], "Come out before them." And when they saw him, they greatly admired him and cut their hands and said, "Perfect is Allah! This is not a man; this is none but a noble angel." Saheeh International(அந்தப்) பெண்களின் (இந்த) இழிமொழிகளை அவள் செவியுறவே, அப்பெண்களுக்காக ஒரு விருந்து சபையைக் கூட்டி, அதற்கு அவர்களை அழைத்து அங்கு வந்த ஒவ்வொருத்திக்கும் ஒரு கனியும் (அதை அறுத்துப் புசிக்க) ஒரு கத்தி(யும்) கொடுத்து அவரை (அலங்கரித்து) அவர்கள் முன் வரும்படிக் கூறினாள். அவரை அப்பெண்கள் காணவே (அவருடைய அழகைக் கண்டு) அவரை மிக்க உயர்வானவராக எண்ணி (மெய்மறந்து, கனியை அறுப்பதற்குப் பதிலாக) தங்கள் கை (விரல்)களையே அறுத்துக் கொண்டு "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இவர் மனிதரல்ல! இவர் (அனைவரின் மனதையும் கவரக்கூடிய) அழகு வாய்ந்த ஒரு வானவரே அன்றி வேறில்லை" என்று கூறினார்கள். தாருல் ஹுதாஅப் பெண்களின் பேச்சுக்களை (அஜீஸின் மனைவி) கேட்டபோது (விருந்திற்காகச்) சாய்மானங்கள் சித்தம் செய்து அப் பெண்களுக்கு அழைப்பனுப்பினாள்; (விருந்திற்கு வந்த) அப் பெண்களில் ஒவ்வொருத்திக்கும் (பழங்களை நறுக்கித் தின்பதற்காக) ஒரு கத்தியும் கொடுத்தாள். “இப் பெண்கள் எதிரே செல்லும்” என்று (யூஸுஃபிடம்) கூறினாள்; அப் பெண்கள் அவரைப் பார்த்ததும் (அவரழகில் மயங்கி) அவரை மிக மேன்மையாகக் கண்டார்கள். (அவர் அழகில் மெய் மறந்து) தம் கைகளையும் வெட்டிக்கொண்டனர்: “அல்லாஹ்வே பெரியவன்; இவர் மனிதரே அல்லர்! இவர் மேன்மைக்குரிய ஒரு மலக்கேயன்றி வேறில்லை” என்று கூறினார்கள். ஜான் டிரஸ்ட் நிறுவனம்அவர்களின் சூழ்ச்சியை (-எகிப்திய அரசின் அமைச்சருடைய மனைவியாகிய அவள் செவியுற்றபோது (அழைத்து வருபவரை அப்பெண்களாகிய)வர்கள்பால் அனுப்பினாள், அவர்களுக்காக ஒரு விருந்து சபையை ஏற்பாடும் செய்தாள், அ(ங்கு வந்திருந்த)வர்களில் ஒவ்வொருத்திக்கும் (ஒரு பழமும்) ஒரு கத்தியும் கொடுத்தாள், இன்னும் (யூஸுஃபாகிய) அவரை (அலங்கரித்து) அவர்கள் முன் வெளிப்படுவீராக” என்று கூறினாள், (அப்பெண்களாகிய) அவர்கள் அவரைப் பார்த்த பொழுது (அவருடைய அழகில் மயங்கி) அவரை மிக்க மேன்மையாகக் கண்டு, தங்கள் கை (விரல்)களை அறுத்துக் கொண்டனர், மேலும் “அல்லாஹ் பரிசுத்தமானவன், இவர் மனிதரல்ல!! இவர் மேன்மைக்குரிய ஒரு மலக்கே தவிர (வேறு) இல்லை” என்று கூறினார்கள். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)When she heard of their gossip, she invited them and arranged for them a banquet, and gave each one of them a knife, and said [to Joseph], “Come out before them.” When they saw him, they were stunned by his beauty that they cut their hands, and said, “Great God! This cannot be human; this must be a noble angel.” Ruwwad Center |
12:32 قَالَتْ فَذَٰلِكُنَّ الَّذِي لُمْتُنَّنِي فِيهِ ۖ وَلَقَدْ رَاوَدْتُهُ عَنْ نَفْسِهِ فَاسْتَعْصَمَ ۖ وَلَئِنْ لَمْ يَفْعَلْ مَا آمُرُهُ لَيُسْجَنَنَّ وَلَيَكُونًا مِنَ الصَّاغِرِينَ Qalat fathalikunna allathee lumtunnanee feehi walaqad rawadtuhu AAan nafsihi faistAAsama walain lam yafAAal ma amuruhu layusjananna walayakoonan mina alssaghireena She said: "This is he (the young man) about whom you did blame me, and I did seek to seduce him, but he refused. And now if he refuses to obey my order, he shall certainly be cast into prison, and will be one of those who are disgraced." Hilali & KhanShe said, "That is the one about whom you blamed me. And I certainly sought to seduce him, but he firmly refused; and if he will not do what I order him, he will surely be imprisoned and will be of those debased." Saheeh Internationalஅதற்கவள் "நீங்கள் எவரைப் பற்றி என்னை நிந்தித்தீர்களோ அவர் இவர்தான். நிச்சயமாக நான் அவரை எனக்கு இசையும்படி வற்புறுத்தினேன்; எனினும், அவர் தப்பித்துக் கொண்டார். இனியும் அவர் நான் கூறுவதைச் செய்யாவிடில் நிச்சயமாக அவர் சிறையிலிடப்பட்டு சிறுமைப்படுத்தப்படுவார்" என்று கூறினாள். தாருல் ஹுதாஅதற்கவள் “நீங்கள் எவர் சம்பந்தமாக என்னை நிந்தித்தீர்களோ, அவர்தாம் இவர்; நிச்சயமாக நான் அவரை என் விருப்பத்திற்கு இணங்கும்படி வற்புறுத்தினேன் - ஆனால் அவர் (மன உறுதியுடன்) தம்மைக் காத்துக் கொண்டார். இனியும் அவர் நான் இடும் கட்டளைக்கிணங்கி நடந்து கொள்ளாவிட்டால் சிறையில் தள்ளப்படுவார்; மேலும் அவர் சிறுமை அடைந்தவர்களில் ஒருவராகவும் ஆகிவிடுவார்” என்று சொன்னாள். ஜான் டிரஸ்ட் நிறுவனம்அ(தற்க)வள், ‘நீங்கள் எவரைப் பற்றி என்னை நிந்தித்தீர்களோ அவர் இவர்தான், நிச்சயமாக நான்தான் என் விருப்பத்திற்கிணங்குமாறு அவரை நான் அழைத்தேன், எனினும், அவர் மன உறுதியுடன் தப்பித்து(விலகி)க் கொண்டார், இனியும் நான் கட்டளையிடுகிறபடி அவர் செய்யாவிடில், நிச்சயமாக அவர் சிறையிலிடப்படுவார், மேலும் அவர் சிறுமைப்பட்டவர்களில் உள்ளவராக நிச்சயமாக ஆகிவிடுவார்” என்று கூறினாள். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)She said, “This is the one for whose love you reproached me. I did try to seduce him but he abstained. If he does not follow my order, he will surely be imprisoned and will be fully humiliated.” Ruwwad Center |
12:33 قَالَ رَبِّ السِّجْنُ أَحَبُّ إِلَيَّ مِمَّا يَدْعُونَنِي إِلَيْهِ ۖ وَإِلَّا تَصْرِفْ عَنِّي كَيْدَهُنَّ أَصْبُ إِلَيْهِنَّ وَأَكُنْ مِنَ الْجَاهِلِينَ Qala rabbi alssijnu ahabbu ilayya mimma yadAAoonanee ilayhi wailla tasrif AAannee kaydahunna asbu ilayhinna waakun mina aljahileena He said: "O my Lord! Prison is dearer to me than that to which they invite me. Unless You turn away their plot from me, I will feel inclined towards them and be one (of those who commit sin and deserve blame or those who do deeds) of the ignorant." Hilali & KhanHe said, "My Lord, prison is more to my liking than that to which they invite me. And if You do not avert from me their plan, I might incline toward them and [thus] be of the ignorant." Saheeh Internationalஅதற்கவர், "என் இறைவனே! அவர்கள் என்னை அழைக்கும் (இத்தீய) காரியத்தைவிட சிறைக்கூடமே எனக்கு விருப்பமானது. ஆகவே, இப்பெண்களின் சூழ்ச்சியிலிருந்து நீ என்னைத் தடுத்துக் கொள்ளாவிட்டால் இப்பெண்களிடம் சிக்கி (பாவம் செய்யும்) அறிவீனர்களில் நானும் ஒருவனாக ஆகி விடுவேன்" என்று பிரார்த்தித்தார். தாருல் ஹுதா(அதற்கு) அவர், “என் இறைவனே! இவர்கள் என்னை எதன் பக்கம் அழைக்கிறார்களோ, அ(த்தீய)தை விடச் சிறைக்கூடமே எனக்கு அதிக விருப்பமுடையதாகும்; இவர்களின் சதியை விட்டு நீ என்னைக் காப்பாற்றவில்லையானால், நான் இவர்கள் பால் சாய்ந்து (பாவத்தால்) அறிவில்லாதவர்களில் ஒருவனாகிவிடுவேன்” என்று (பிரார்த்தித்தவராக) கூறினார். ஜான் டிரஸ்ட் நிறுவனம்அ(தற்க)வர் “என் இரட்சகனே! அவர்கள் என்னை எதன் பக்கம் அழைக்கிறார்களோ அ(த் தீய காரியத்)தை விட சிறைக்கூடமே எனக்கு மிக விருப்பமானதாகும், ஆகவே, (இப்பெண்களாகிய) அவர்களுடைய சூழ்ச்சியிலிருந்து நீ என்னைத் திருப்பாவிட்டால் அவர்களின் பக்கம் சாய்ந்து விடுவேன், மேலும் (பாவம் செய்யும்) அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடுவேன்” என்று (பிரார்த்தித்துக்) கூறினார். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Joseph said, “My Lord, I would rather be in prison than that to which they are calling me. Unless you protect me from their guile, I may succumb to them and fall into ignorance.” Ruwwad Center |
12:34 فَاسْتَجَابَ لَهُ رَبُّهُ فَصَرَفَ عَنْهُ كَيْدَهُنَّ ۚ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ Faistajaba lahu rabbuhu fasarafa AAanhu kaydahunna innahu huwa alssameeAAu alAAaleemu So his Lord answered his invocation and turned away from him their plot. Verily, He is the All-Hearer, the All-Knower. Hilali & KhanSo his Lord responded to him and averted from him their plan. Indeed, He is the Hearing, the Knowing. Saheeh International(அவரது பிரார்த்தனையை) அவருடைய இறைவன் அங்கீகரித்துக் கொண்டு, பெண்களின் சூழ்ச்சியை அவரைவிட்டுத் திருப்பிவிட்டான். நிச்சயமாக அவன் அனைத்தையும் செவியுறுபவனாகவும், நன்கறிந்தவனாகவும் இருக்கிறான். தாருல் ஹுதாஎனவே அவருடைய இறைவன் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான்; அப்பெண்களுடைய சதியை அவரை விட்டு நீக்கிவிட்டான்; நிச்சயமாக அவன் (யாவற்றையும்) கேட்பவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான். ஜான் டிரஸ்ட் நிறுவனம்எனவே அவரது பிரார்த்தனையை அவருடைய இரட்சகன் அங்கீகரித்தான், பின்னர், (அப்பெண்களாகிய) அவர்களின் சூழச்சியை அவரைவிட்டும் திருப்பிவிட்டான், நிச்சயமாக அவனே செவியுறுகிறவன், யாவையும் நன்கறிகிறவன். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)So his Lord answered his prayer and protected him from their guile. He is the All-Hearing, the All-Knowing. Ruwwad Center |
12:35 ثُمَّ بَدَا لَهُمْ مِنْ بَعْدِ مَا رَأَوُا الْآيَاتِ لَيَسْجُنُنَّهُ حَتَّىٰ حِينٍ Thumma bada lahum min baAAdi ma raawoo alayati layasjununnahu hatta heenin Then it occurred to them, after they had seen the proofs (of his innocence), to imprison him for a time. Hilali & KhanThen it appeared to them after they had seen the signs that al-'Azeez should surely imprison him for a time. Saheeh International(யூஸுஃப் நிரபராதி என்பதற்குரிய) ஆதாரங்களை அவர்கள் கண்டதன் பின்னரும் (இச்சம்பவத்தைப் பற்றி என்ன செய்யலாமென அவர்கள் ஆலோசனை செய்தனர். அவளுடைய பார்வையிலிருந்து யூஸுஃபை மறைத்து விடுவதே நலமெனக் கருதி அதற்காகச்) சிறிது காலம் அவரை சிறையிலிடுவதே தகுமென அவர்களுக்குத் தோன்றியது. (ஆகவே, அவரை சிறைக்கூடத்திற்கு அனுப்பி விட்டனர்.) தாருல் ஹுதா(யூஸுஃப் குற்றமற்றவர் என்பதற்குப் பல) அத்தாட்சிகளை அவர்கள் பார்த்த பின்னரும், ஒரு காலம் வரை அவர் சிறையிலிடப்பட வேண்டும் என்றே அவர்களுக்குத் தோன்றியது. ஜான் டிரஸ்ட் நிறுவனம்பின்னர், (யூஸுஃப் தூயவர் என்பதற்குரிய) அத்தாட்சிகளை அவர்கள் கண்டதன் பிறகு, சிறிது காலம் வரை (யூஸுஃபாகிய) அவரை, அவர்கள் நிச்சயமாக சிறையிடுவார்கள் என அவர்களுக்குத் தோன்றியது. (ஆகவே, அவரைச் சிறையிலிட்டனர்). மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Then it occurred to them after they saw the signs [of his innocence] that they should imprison him for some time. Ruwwad Center |
12:36 وَدَخَلَ مَعَهُ السِّجْنَ فَتَيَانِ ۖ قَالَ أَحَدُهُمَا إِنِّي أَرَانِي أَعْصِرُ خَمْرًا ۖ وَقَالَ الْآخَرُ إِنِّي أَرَانِي أَحْمِلُ فَوْقَ رَأْسِي خُبْزًا تَأْكُلُ الطَّيْرُ مِنْهُ ۖ نَبِّئْنَا بِتَأْوِيلِهِ ۖ إِنَّا نَرَاكَ مِنَ الْمُحْسِنِينَ Wadakhala maAAahu alssijna fatayani qala ahaduhuma innee aranee aAAsiru khamran waqala alakharu innee aranee ahmilu fawqa rasee khubzan takulu alttayru minhu nabbina bitaweelihi inna naraka mina almuhsineena And there entered with him two young men in the prison. One of them said: "Verily, I saw myself (in a dream) pressing wine." The other said: "Verily, I saw myself (in a dream) carrying bread on my head and birds were eating thereof." (They said): "Inform us of the interpretation of this. Verily, we think you are one of the Muhsinûn (doers of good)." Hilali & KhanAnd there entered the prison with him two young men. One of them said, "Indeed, I have seen myself [in a dream] pressing wine." The other said, "Indeed, I have seen myself carrying upon my head [some] bread, from which the birds were eating. Inform us of its interpretation; indeed, we see you to be of those who do good." Saheeh International(அவர் சிறைச்சென்ற சமயத்தில் வெவ்வேறு குற்றங்களுக்காக இன்னும்) இரு வாலிபர்களும் அவருடன் சிறைச் சென்றார்கள். அவ்விருவரில் ஒருவன் (ஒரு நாளன்று யூஸுஃபை நோக்கி) "நான் திராட்சை ரஸம் பிழிந்து கொண்டிருப்பதாக மெய்யாகவே கனவு கண்டேன்" என்று கூறினான். மற்றவன் "நான் என் தலையில் ரொட்டிகளைச் சுமந்து செல்வதாகவும், அதை பட்சிகள் (கொத்திக் கொத்திப்) புசிப்பதாகவும் மெய்யாகவே கனவு கண்டேன்" என்று கூறி (யூஸுஃபை நோக்கி,) "நிச்சயமாக நாங்கள் உங்களை மிக்க (ஞானமுடைய) நல்லோர்களில் ஒருவராகவே காண்கிறோம்; ஆதலால், இக்கனவுகளின் வியாக்கியானங்களை நீங்கள் எங்களுக்கு அறிவிப்பீராக!" (என்று கூறினான்). தாருல் ஹுதாஅவருடன் இரண்டு வாலிபர்களும் சிறையில் புகுந்தனர்; அவ்விருவரில் ஒருவன், “நான் திராட்சை மது பிழிவதாக நிச்சயமாக ஒரு கனவு கண்டேன்” என்று கூறினான். மற்றவன், “நான் என் தலைமீது ரொட்டி சுமப்பதாகவும், அதிலிருந்து பறவைகள் தின்பதாகவும் கனவு கண்டேன்” என்று கூறினான். (பின் இருவரும் “யூஸுஃபே!) எங்களுக்கு இவற்றின் விளக்கத்தை அறிவிப்பீராக; மெய்யாக நாங்கள் உம்மை (ஞானமுள்ள முஹ்ஸின்களில்) - நன்மை செய்பவர்களில் ஒருவராகக் காண்கிறோம்” (என்று கூறினார்கள்). ஜான் டிரஸ்ட் நிறுவனம்மேலும், (மற்ற குற்றங்களுக்காக வேறு) இரு வாலிபர்கள் அவருடன் சிறையில் நுழைந்தனர், அவ்விவருவரில் ஒருவன், நான் (திராட்சையைப் பிழிந்து) மதுரஸம் தயார் செய்து கொண்டிருப்பதாக நிச்சயமாக என்னை நான் (கனவில்) கண்டேன்” என்று கூறினான், மற்றவன், “என் தலையின் மீது ரொட்டியை சுமந்து கொண்டிருக்க அதிலிருந்து பட்சிகள் (கொத்திப்) புசிப்பதாக நிச்சயமாக என்னை நான் (கனவில்) கண்டேன்,” என்று கூறி, “இவற்றின் விளக்கத்தை எங்களுக்கு நீர் தெரிவிப்பீராக! நிச்சயமாக நாங்கள் உம்மை மிக்க (ஞானமுடைய) நல்லவர்களில் (ஒருவராகக்) காண்கிறோம்” (என்று யூஸுஃபிடம் கூறினார்கள்.) மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Two young men went to prison with him. One of them said, “I dreamt that I was pressing wine.” The other said, “I dreamt that I was carrying bread on my head of which birds were eating. Tell us their interpretation, for we see you as one of those who do good.” Ruwwad Center |
12:37 قَالَ لَا يَأْتِيكُمَا طَعَامٌ تُرْزَقَانِهِ إِلَّا نَبَّأْتُكُمَا بِتَأْوِيلِهِ قَبْلَ أَنْ يَأْتِيَكُمَا ۚ ذَٰلِكُمَا مِمَّا عَلَّمَنِي رَبِّي ۚ إِنِّي تَرَكْتُ مِلَّةَ قَوْمٍ لَا يُؤْمِنُونَ بِاللَّهِ وَهُمْ بِالْآخِرَةِ هُمْ كَافِرُونَ Qala la yateekuma taAAamun turzaqanihi illa nabbatukuma bitaweelihi qabla an yatiyakuma thalikuma mimma AAallamanee rabbee innee taraktu millata qawmin la yuminoona biAllahi wahum bialakhirati hum kafiroona He said: "No food will come to you (in wakefulness or in dream) as your provision, but I will inform (in wakefulness) its interpretation before it (the food) comes. This is of that which my Lord has taught me. Verily, I have abandoned the religion of a people that believe not in Allâh and are disbelievers in the Hereafter (i.e. the Kan'ânyyûn of Egypt who were polytheists and used to worship the sun and other false deities). Hilali & KhanHe said, "You will not receive food that is provided to you except that I will inform you of its interpretation before it comes to you. That is from what my Lord has taught me. Indeed, I have left the religion of a people who do not believe in Allah, and they, in the Hereafter, are disbelievers. Saheeh International(அதற்கு யூஸுஃப் அவர்களை நோக்கி,) "நீங்கள் புசிக்கக் கூடிய உணவு (வெளியிலிருந்து) உங்களிடம் வந்து சேருவதற்கு முன்னதாகவும் (இக்கனவுகளின் பலன்) உங்களிருவருக்கும் நிறைவேறுவதற்கு முன்னதாகவும் (அக்கனவுகளின்) பலனை நீங்கள் அடைவதற்கு முன்னதாகவும் (அதனை) நான் உங்களுக்கு அறிவித்து விடுவேன்; (கனவுகளுக்கு வியாக்கியானம் கூறும்) இதனை என் இறைவனே எனக்கு அறிவித்து இருக்கிறான். ஏனென்றால், அல்லாஹ்வை நம்பிக்கைக் கொள்ளாது மறுமை யையும் நிராகரிக்கும் மக்களுடைய மார்க்கத்தை நிச்சயமாக நான் விட்டுவிட்டேன். தாருல் ஹுதாஅதற்கு அவர் கூறினார்: “உங்களிருவருக்கும் அளிக்கக்கூடிய உணவு உங்களிடம் வ(ந்து சே)ருவதற்கு முன்னரும் - (இக்கனவுகளின்) பலனை நீங்களிருவரும் அடைவதற்கு முன்னரும் - இவற்றின் விளக்கத்தை உங்களிலிருவருக்கும் கூறிவிடுகிறேன். இது என் இறைவன் எனக்குக் கற்றுக் கொடுத்தவற்றிலிருந்தும் உள்ளவை; அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களும், மறுமையை நிராகரிப்பவர்களுமான சமூகத்தாரின் மார்க்கத்தை நான் நிச்சயமாக விட்டு விட்டேன். ஜான் டிரஸ்ட் நிறுவனம்(அதற்கு யூஸுஃப்,) நீங்களிருவரும் எதை உணவாக வழங்கப்படுகிறீர்களோ அது உங்களிருவருக்கும் வந்து சேரும் முன் அதன் விளக்கத்தை உங்களிருவருக்கும் நான் அறிவித்தே அல்லாது (அந்த) உணவு உங்களிருவருக்கும் வருவதில்லை, இவ்விரண்டு(க்குரிய விளக்கமும்) என் இரட்சகன் எனக்குக் கற்றுக் கொடுத்தவற்றில் உள்ளவையாகும், அல்லாஹ்வை விசுவாசிக்காத சமூகத்தாரின் மார்க்கத்தை நிச்சயமாக நான் விட்டுவிட்டேன், இன்னும் அவர்கள்-அவர்களே மறுமையை நிராகரிக்கக் கூடியவர்கள். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Joseph said, “Before there comes to you the meal which you will be given, I will inform you of their interpretation. This is part of what my Lord has taught me. I have renounced the faith of people who do not believe in Allah and who deny the Hereafter. Ruwwad Center |
12:38 وَاتَّبَعْتُ مِلَّةَ آبَائِي إِبْرَاهِيمَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ ۚ مَا كَانَ لَنَا أَنْ نُشْرِكَ بِاللَّهِ مِنْ شَيْءٍ ۚ ذَٰلِكَ مِنْ فَضْلِ اللَّهِ عَلَيْنَا وَعَلَى النَّاسِ وَلَٰكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَشْكُرُونَ WaittabaAAtu millata abaee ibraheema waishaqa wayaAAqooba ma kana lana an nushrika biAllahi min shayin thalika min fadli Allahi AAalayna waAAala alnnasi walakinna akthara alnnasi la yashkuroona "And I have followed the religion of my fathers, – Ibrâhîm (Abraham), Ishâq (Isaac) and Ya'qûb (Jacob) [?], and never could we attribute any partners whatsoever to Allâh. This is from the Grace of Allâh to us and to mankind, but most men thank not (i.e. they neither believe in Allâh nor worship Him). Hilali & KhanAnd I have followed the religion of my fathers, Abraham, Isaac and Jacob. And it was not for us to associate anything with Allah. That is from the favor of Allah upon us and upon the people, but most of the people are not grateful. Saheeh Internationalஅன்றி, என்னுடைய மூதாதைகளாகிய இப்றாஹீம், இஸ்ஹாக், யஅகூப் ஆகிய இவர்களின் மார்க்கத்தையே நான் பின்பற்றியிருக்கிறேன். ஆதலால், அல்லாஹ்வுக்கு யாதொன்றையும் நாங்கள் இணையாக்குவது எங்களுக்குத் தகுமானதல்ல. இக்கொள்கை மீது இருப்பது எங்கள் மீதும் மற்ற மனிதர்கள் மீதும் அல்லாஹ் புரிந்த ஓர் அருளாகும். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள், (அல்லாஹ்வின் அருளுக்கு) நன்றி செலுத்துவதில்லை. தாருல் ஹுதா“நான் என் மூதாதையர்களான இப்றாஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரின் மார்க்கத்தைப் பின்பற்றுகிறேன்; அல்லாஹ்வுக்கு எதையும் நாங்கள் இணைவைப்பது எங்களுக்கு தகுமானதல்ல; இது எங்கள் மீதும் (இதர) மக்கள் மீதும் அல்லாஹ் புரிந்த அருளாகும் - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதில்லை. ஜான் டிரஸ்ட் நிறுவனம்அன்றியும், என்னுடைய மூதாதையர்களான இப்றாஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரின் மார்க்கத்தையே நான் பின்பற்றி விட்டேன், (ஆதலால்,) அல்லாஹ்வுக்கு எப்பொருளையும் நாங்கள் இணையாக்குவது எங்களுக்குத் தகுமானதல்ல, இ(க் கொள்கை மீது இருப்ப)து, எங்கள்மீதும், (மற்ற) மனிதர்கள் மீதும் அல்லாஹ் புரிந்த பேரருளாகும், எனினும், மனிதர்களில் பெரும்பாலோர், (அல்லாஹ்வின் அருளுக்கு) நன்றி செலுத்த மாட்டார்கள், மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)I follow the faith of my fathers – Abraham, Isaac and Jacob; it is not right for us to associate any partner with Allah. This is part of Allah’s grace upon us and upon people, but most people are ungrateful. Ruwwad Center |
12:39 يَا صَاحِبَيِ السِّجْنِ أَأَرْبَابٌ مُتَفَرِّقُونَ خَيْرٌ أَمِ اللَّهُ الْوَاحِدُ الْقَهَّارُ Ya sahibayi alssijni aarbabun mutafarriqoona khayrun ami Allahu alwahidu alqahharu "O two companions of the prison! Are many different lords (gods) better or Allâh, the One, the Irresistible? Hilali & KhanO [my] two companions of prison, are separate lords better or Allah, the One, the Prevailing? Saheeh Internationalசிறைக்கூடத்தில் இருக்கும் என்னிரு தோழர்களே! (யாதொருசக்தியுமற்ற) வெவ்வேறு தெய்வங்கள் நன்றா? அல்லது அனைவரையும் அடக்கி ஆளுகின்ற ஒரே இறைவனாகிய அல்லாஹ் ஒருவனே நன்றா? தாருல் ஹுதா“சிறையிலிருக்கும் என் இரு தோழர்களே! வெவ்வேறான பல தெய்வங்கள் இருப்பது நல்லதா? அல்லது (யாவரையும்) அடக்கி ஆள்கின்ற ஒருவனான அல்லாஹ்வா? ஜான் டிரஸ்ட் நிறுவனம்சிறைச்சாலையின் என்னிரு தோழர்களே! (யாதொரு சக்தியுமற்ற) பல்வேறு தெய்வங்கள் மேலா? அல்லது (யாவற்றையும்) அடக்கி ஆளுகின்ற ஒருவனான அல்லாஹ்வா? மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)O my two fellow prisoners, which is better: many different lords or Allah, the One, the Subjugator? Ruwwad Center |
12:40 مَا تَعْبُدُونَ مِنْ دُونِهِ إِلَّا أَسْمَاءً سَمَّيْتُمُوهَا أَنْتُمْ وَآبَاؤُكُمْ مَا أَنْزَلَ اللَّهُ بِهَا مِنْ سُلْطَانٍ ۚ إِنِ الْحُكْمُ إِلَّا لِلَّهِ ۚ أَمَرَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ ۚ ذَٰلِكَ الدِّينُ الْقَيِّمُ وَلَٰكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ Ma taAAbudoona min doonihi illa asmaan sammaytumooha antum waabaokum ma anzala Allahu biha min sultanin ini alhukmu illa lillahi amara alla taAAbudoo illa iyyahu thalika alddeenu alqayyimu walakinna akthara alnnasi la yaAAlamoona "You do not worship besides Him but only names which you have named (forged) – you and your fathers – for which Allâh has sent down no authority. The command (or the judgement) is for none but Allâh. He has commanded that you worship none but Him (i.e. His Monotheism); that is the (true) straight religion, but most men know not. Hilali & KhanYou worship not besides Him except [mere] names you have named them, you and your fathers, for which Allah has sent down no authority. Legislation is not but for Allah. He has commanded that you worship not except Him. That is the correct religion, but most of the people do not know. Saheeh Internationalஅல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவை அனைத்தும், நீங்களும் உங்கள் மூதாதைகளும் வைத்துக்கொண்ட வெறும் (கற்பனைப்) பெயர்களைத் தவிர (உண்மையில் அவை ஒன்றுமே) இல்லை. அல்லாஹ் இதற்கு யாதொரு ஆதாரத்தையும் இறக்கி வைக்கவுமில்லை; எல்லா அதிகாரங்களும் அல்லாஹ் ஒருவனுக்கே யன்றி (மற்றெவருக்கும்) இல்லை. அவனைத் தவிர (மற்ற எவற்றையும்) நீங்கள் வணங்கக்கூடாதென்று அவனே கட்டளை இட்டிருக்கின்றான். இதுதான் நேரான மார்க்கம். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (இதனை) அறிந்து கொள்ளவில்லை" (என்று யூஸுஃப் அவர்களுக்கு நல்லுபதேசம் செய்து,) தாருல் ஹுதா“அவனையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருப்பவை யாவும் நீங்கள் உங்கள் மூதாதையரும் வைத்துக் கொண்ட (வெறும் கற்பனைப்) பெயர்களேயன்றி வேறில்லை; அவற்றுக்கு அல்லாஹ் யாதொரு ஆதாரத்தையும் இறக்கி வைக்கவில்லை; அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவர்க்கும்) அதிகாரம் இல்லை. அவனையன்றி (வேறு எவரையும்) நீங்கள் வணங்கக் கூடாது என்று அவன் (உங்களுக்குக்) கட்டளையிட்டிருக்கின்றான். இதுவே நேரான மார்க்கமாகும்; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்வதில்லை. ஜான் டிரஸ்ட் நிறுவனம்அவனையன்றி நீங்கள் வணங்குபவை வெறும் (கற்பனைப்) பெயர்களைத் தவிர (வேறொன்றும்) இல்லை, நீங்களும் உங்கள் மூதாதையர்களும் அவற்றைப் பெயர்களாக வைத்துக் கொண்டீர்கள்; அல்லாஹ் இதற்கு யாதோர் ஆதாரத்தையும் இறக்கி வைக்கவில்லை; அல்லாஹ் ஒருவனுக்கேயன்றி (மற்றெவருக்கும்) அதிகாரம் இல்லை; அவனைத் தவிர மற்றெவரையும்) நீங்கள் வணங்கக் கூடாதென்று அவனே கட்டளையிட்டிருக்கின்றான்; இதுதான் நிலையான மார்க்கமாகும், எனினும், மனிதர்களில் பெரும்பாலோர் (இதனை அறிந்து கொள்ள மாட்டார்கள், (என்று யூஸுஃப் அவர்களுக்கு நல்லுபதேசம் செய்தபின்), மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)You worship none besides Him except names that you and your forefathers have made up, for which Allah has not sent down any authority. All power belongs to Allah alone; He has commanded that you should worship none except Him. This is the right religion, but most people do not know.” Ruwwad Center |
12:41 يَا صَاحِبَيِ السِّجْنِ أَمَّا أَحَدُكُمَا فَيَسْقِي رَبَّهُ خَمْرًا ۖ وَأَمَّا الْآخَرُ فَيُصْلَبُ فَتَأْكُلُ الطَّيْرُ مِنْ رَأْسِهِ ۚ قُضِيَ الْأَمْرُ الَّذِي فِيهِ تَسْتَفْتِيَانِ Ya sahibayi alssijni amma ahadukuma fayasqee rabbahu khamran waamma alakharu fayuslabu fatakulu alttayru min rasihi qudiya alamru allathee feehi tastaftiyani "O two companions of the prison! As for one of you, he (as a servant) will pour out wine for his lord (king or master) to drink; and as for the other, he will be crucified and birds will eat from his head. Thus is the case judged concerning which you both did inquire." Hilali & KhanO two companions of prison, as for one of you, he will give drink to his master of wine; but as for the other, he will be crucified, and the birds will eat from his head. The matter has been decreed about which you both inquire." Saheeh International(பின்னும் அவர்களை நோக்கி) "சிறைக்கூடத்தில் இருக்கும் என்னிரு தோழர்களே! (உங்கள் கனவுகளின் பலன்களாவன:) "உங்களில் ஒருவன் (விடுதலையடைந்து அவன் முன் செய்து கொண்டிருந்த வேலையையும் ஒப்புக்கொண்டு, முன் போலவே) தன் எஜமானனுக்குத் திராட்சை ரஸம் புகட்டிக் கொண்டிருப்பான். மற்றவனோ தூக்கிலிடப்பட்டு அவன் தலையை (காகம், கழுகு போன்ற) பறவைகள் (கொத்திக் கொத்தித்) தின்னும். நீங்கள் வியாக்கியானங்கோரிய (கனவுகளின்) பலன் விதிக்கப்பட்டு விட்டது. (அவ்வாறு நடந்தே தீரும்" என்று கூறினார்.) தாருல் ஹுதா“சிறையிலிருக்கும் என் இரு தோழர்களே! (உங்கள் கனவுகளின் பலன்களாவன:) உங்களிருவரில் ஒருவர் தம் எஜமானனுக்கு திராட்சை மதுவைப் புகட்டிக் கொண்டிருப்பார்; மற்றவரோ சிலுவையில் அறையப்பட்டு, அவர் தலையிலிருந்து பறவைகள் கொத்தித் தின்னும்; நீங்களிருவரும் விளக்கம் கோரிய காரியம் (கனவின் பலன்) விதிக்கப்பட்டுவிட்டது” (என்று யூஸுஃப் கூறினார்). ஜான் டிரஸ்ட் நிறுவனம்(அவர்களிடம்,) “சிறைச்சாலையின் என்னிரு தோழர்களே! (உங்கள் கனவுகளின் விளக்கம் உங்களில் ஒருவன் (முன்போலவே) தன் எஜமானனுக்கு மது ரஸம் புகட்டிக் கொண்டிருப்பான், மற்றொருவனோ சிலுவையில் அறையப்பட்டு அவன் தலையிலிருந்து பட்சிகள் (கொத்தித்) தின்னும், எதில் நீங்கள் இருவரும் விளக்கம் தேடினீர்களோ அக்காரியம் விதிக்கப்பட்டுவிட்டது, (அவ்வாறு நடந்தே தீரும்)” என்று கூறினார். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)“O my two fellow prisoners, as for one of you, he will serve wine to his master; as for the other, he will be crucified and the birds will eat from his head. The matter you are asking about has been decreed.” Ruwwad Center |
12:42 وَقَالَ لِلَّذِي ظَنَّ أَنَّهُ نَاجٍ مِنْهُمَا اذْكُرْنِي عِنْدَ رَبِّكَ فَأَنْسَاهُ الشَّيْطَانُ ذِكْرَ رَبِّهِ فَلَبِثَ فِي السِّجْنِ بِضْعَ سِنِينَ Waqala lillathee thanna annahu najin minhuma othkurnee AAinda rabbika faansahu alshshaytanu thikra rabbihi falabitha fee alssijni bidAAa sineena And he said to the one whom he knew to be saved: "Mention me to your lord (i.e. your king, so as to get me out of the prison)." But Shaitân (Satan) made him forget to mention it to his lord [or Satan made {Yûsuf (Joseph)} to forget the remembrance of his Lord (Allâh) as to ask for His Help, instead of others]. So [Yûsuf (Joseph)] stayed in prison a few (more) years. Hilali & KhanAnd he said to the one whom he knew would go free, "Mention me before your master." But Satan made him forget the mention [to] his master, and Joseph remained in prison several years. Saheeh Internationalஅன்றி, அவ்விருவரில் எவன் விடுதலை அடைவானென அவர் எண்ணினாரோ (அவனை நோக்கி) நீ உன் எஜமானனிடம் என்னைப் பற்றி (அநியாயமாக சிறையிடப்பட்டிருக்கிறேன் என்று) கூறுவாயாக! என்றும் சொன்னார். எனினும் (சிறைக்கூடத்திலிருந்து விடுதலையாகி வெளியேறிய) அவன் தன் எஜமானனிடம் கூற இருந்த (எண்ணத்)தை ஷைத்தான் மறக்கடித்து விட்டான். ஆதலால், அவர் சிறைக்கூடத்தில் (பின்னும்) பல ஆண்டுகள் தங்கிவிட்டார். தாருல் ஹுதாஅவ்விருவரில் யார் விடுதலை அடைவார் என்று எண்ணினாரோ அவரிடம், “என்னைப் பற்றி உம் எஜமானனிடம் கூறுவீராக!” என்றும் சொன்னார்; ஆனால் (சிறையிலிருந்து விடுதலையாகிய) அவர் தம் எஜமானனிடம் (இதைப் பற்றிக்) கூறுவதிலிருந்து ஷைத்தான் அவரை மறக்கடித்து விட்டான்; ஆகவே அவர் சிறைக்கூடத்தில் (பின்னும்) சில ஆண்டுகள் இருக்க வேண்டியவரானார். ஜான் டிரஸ்ட் நிறுவனம்அவ்விருவரில் எவர் நிச்சயமாக விடுதலை பெறுவார் என அவர் எண்ணினாரோ அத்தகையவரிடம், “நீ உன் எஜமானனிடம் என்னைப் பற்றிக் கூறுவாயாக” என்று (யூஸீஃபாகிய) அவர் கூறினார், ஆனால் (சிறைக் கூடத்திலிருந்து வெளியேறிய அவர் தன் எஜமானனிடம் கூற இருந்த (எண்ணத்)தை ஷைத்தான் அவருக்கு மறக்கடித்துவிட்டான், ஆதலால் அவர் சிறைக் கூடத்தில் (பின்னும்) சில ஆண்டுகள் தங்கிவிட்டார். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Then he said to the one he knew would be saved, “Mention me to your master.” But Satan made him forget to mention this to his master, so he remained in prison for several years. Ruwwad Center |
12:43 وَقَالَ الْمَلِكُ إِنِّي أَرَىٰ سَبْعَ بَقَرَاتٍ سِمَانٍ يَأْكُلُهُنَّ سَبْعٌ عِجَافٌ وَسَبْعَ سُنْبُلَاتٍ خُضْرٍ وَأُخَرَ يَابِسَاتٍ ۖ يَا أَيُّهَا الْمَلَأُ أَفْتُونِي فِي رُؤْيَايَ إِنْ كُنْتُمْ لِلرُّؤْيَا تَعْبُرُونَ Waqala almaliku innee ara sabAAa baqaratin simanin yakuluhunna sabAAun AAijafun wasabAAa sunbulatin khudrin waokhara yabisatin ya ayyuha almalao aftoonee fee ruyaya in kuntum lilrruya taAAburoona And the king (of Egypt) said: "Verily, I saw (in a dream) seven fat cows, whom seven lean ones were devouring, and seven green ears of corn, and (seven) others dry. O notables! Explain to me my dream, if it be that you can interpret dreams." Hilali & KhanAnd [subsequently] the king said, "Indeed, I have seen [in a dream] seven fat cows being eaten by seven [that were] lean, and seven green spikes [of grain] and others [that were] dry. O eminent ones, explain to me my vision, if you should interpret visions." Saheeh International(ஒரு நாளன்று) எகிப்தின் அரசர் (தன் பிரதானிகளை நோக்கி) "என் பிரதானிகளே! கொழுத்துப் பருத்த ஏழு பசுக்களை, இளைத்து வற்றிய ஏழு பசுக்கள் புசிப்பதாகவும், நன்கு விளைந்த பசுமையான ஏழு கதிர்களையும் காய்ந்து உலர்ந்த (சாவியான ஏழு) வேறு கதிர்களையும் என் கனவில் கண்டேன். என் பிரதானிகளே! நீங்கள் கனவுகளுக்கு வியாக்கியானம் கூறக் கூடியவர்களாக இருந்தால் என்னுடைய இக்கனவின் பலனை அறிவியுங்கள்" என்று கூறினார். தாருல் ஹுதாநான் ஏழு கொழுத்த பசுக்களை, ஏழு மெலிந்த பசுக்கள் தின்பதையும்; ஏழு பசுமையான கதிர்களையும், வேறு (ஏழு) காய்ந்து (சாவியாகி விட்ட) கதிர்களையும் திடமாக நான் கனவில் கண்டேன்; பிரதானிகளே! நீங்கள் கனவு விளக்கம் கூறக் கூடியவர்களாக இருந்தால், என்னுடைய (இக்)கனவின் பலனை எனக்கு அறிவியுங்கள்” என்று (தம் பிரதானிகளையழைத்து எகிப்து நாட்டு) அரசர் கூறினார். ஜான் டிரஸ்ட் நிறுவனம்மேலும், (எகிப்தின்) அரசர், (தம் பிரதானிகளிடம்,) “கொழுத்துப் பருத்த ஏழு பசுக்கள் - அவற்றை இளைத்து வற்றிய ஏழு பசுக்கள் புசிப்பதாகவும், நன்கு விளைந்த பசுமையான ஏழு கதிர்களையும், காய்ந்த வேறு (ஏழு) கதிர்களையும் நிச்சயமாக நான் (கனவில்) கண்டேன், என் பிரதானிகளே! நீங்கள் கனவுகளுக்கு விளக்கம் கூறக்கூடியவர்களாக இருந்தால் என்னுடைய கனவுக்கு விளக்கம் கூறுங்கள்” என்று கூறினார். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)The King said, “I dreamt of seven fat cows eaten up by seven lean ones; and seven green ears of grain and [seven] others withered. O chiefs, explain my dream to me, if you can interpret dreams.” Ruwwad Center |
12:44 قَالُوا أَضْغَاثُ أَحْلَامٍ ۖ وَمَا نَحْنُ بِتَأْوِيلِ الْأَحْلَامِ بِعَالِمِينَ Qaloo adghathu ahlamin wama nahnu bitaweeli alahlami biAAalimeena . They said: "Mixed up false dreams and we are not skilled in the interpretation of dreams." Hilali & KhanThey said, "[It is but] a mixture of false dreams, and we are not learned in the interpretation of dreams." Saheeh Internationalஅதற்கவர்கள், "இது (அஜீரணத்தாலும்) சிதறிய சிந்தனையாலும் ஏற்பட்ட (வீணான) கனவுதான். (இத்தகைய வீண்) கனவுகளுக்குரிய விளக்கங்களை நாங்கள் அறிந்தவர்களல்ல" என்று கூறினார்கள். தாருல் ஹுதா“(இவை) குழப்பமான கனவுகளேயாகும், எனவே நாங்கள் (இக்) கனவுகளுக்கு விளக்கங் கூற அறிந்தவர்கள் அல்லர்” என்று கூறினார்கள். ஜான் டிரஸ்ட் நிறுவனம்அ(தற்க)வர்கள், “இது பொய்க் கனவுகளாகும், (இத்தகைய) பொய்க் கனவுகளுக்கு விளக்கம் கூற தாங்கள் அறிந்தோராக இல்லை” என்று கூறினார்கள். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)They said, “These are jumbled dreams, and we do not know the interpretation of such dreams.” Ruwwad Center |
12:45 وَقَالَ الَّذِي نَجَا مِنْهُمَا وَادَّكَرَ بَعْدَ أُمَّةٍ أَنَا أُنَبِّئُكُمْ بِتَأْوِيلِهِ فَأَرْسِلُونِ Waqala allathee naja minhuma waiddakara baAAda ommatin ana onabbiokum bitaweelihi faarsilooni Then the man who was released (one of the two who were in prison), now at length remembered and said: "I will tell you its interpretation, so send me forth." Hilali & KhanBut the one who was freed and remembered after a time said, "I will inform you of its interpretation, so send me forth." Saheeh International(யூஸுஃபின் சிறைத்) தோழர்கள் இருவரில் விடுதலை அடைந்தவன் பல ஆண்டுகளுக்குப் பின்னர் (அச்சமயம் அவரை) நினைத்து (அவர் தன் கனவுக்குக்கூறிய வியாக்கியானம் முற்றிலும் சரிவர நடைபெற்றதையும் எண்ணி, அரசரை நோக்கி) "அரசரது கனவின் வியாக்கியானத்தை நான் உங்களுக்கு அறிவிக்க முடியும். என்னை (சிறைக் கூடத்திலுள்ள யூஸுஃபிடம்) அனுப்பி வையுங்கள்" என்று கூறினான். (அவ்வாறே அரசரும் யூஸுஃபிடம் அவனை அனுப்பி வைத்தார்.) தாருல் ஹுதாஅவ்விருவரில் (சிறையிலிருந்து) விடுதலையடைந்திருந்தவர், நீண்ட காலத்திற்குப் பின்னர், (யூஸுஃபை) நினைவு கூர்ந்து “இக்கனவின் விளக்கத்தை நான் உங்களுக்கு அறிவிப்பேன், என்னை (யூஸுஃபிடம்) அனுப்பி வையுங்கள்” என்று சொன்னார். ஜான் டிரஸ்ட் நிறுவனம்மேலும் அவ்விருவரில், விடுதலையடைந்தவர், இன்னும் பல ஆண்டுகளுக்குப் பின்னர் (யூஸுஃபை) நினைவுபடுத்திக் கொண்டவராகிய அவர், “இக்கனவின் விளக்கத்தை நான் உங்களுக்கு அறிவிப்பேன், ஆகவே, என்னை (சிறைக்கூடத்திற்கு) அனுப்பி வையுங்கள்” என்று கூறினான். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)The freed prisoner remembered after a long time had passed, and said, “I will inform you of its interpretation, so send me forth.” Ruwwad Center |
12:46 يُوسُفُ أَيُّهَا الصِّدِّيقُ أَفْتِنَا فِي سَبْعِ بَقَرَاتٍ سِمَانٍ يَأْكُلُهُنَّ سَبْعٌ عِجَافٌ وَسَبْعِ سُنْبُلَاتٍ خُضْرٍ وَأُخَرَ يَابِسَاتٍ لَعَلِّي أَرْجِعُ إِلَى النَّاسِ لَعَلَّهُمْ يَعْلَمُونَ Yoosufu ayyuha alssiddeequ aftina fee sabAAi baqaratin simanin yakuluhunna sabAAun AAijafun wasabAAi sunbulatin khudrin waokhara yabisatin laAAallee arjiAAu ila alnnasi laAAallahum yaAAlamoona (He said): "O Yûsuf (Joseph), the man of truth! Explain to us (the dream) of seven fat cows whom seven lean ones were devouring, and of seven green ears of corn, and (seven) others dry, that I may return to the people, and that they may know." Hilali & Khan[He said], "Joseph, O man of truth, explain to us about seven fat cows eaten by seven [that were] lean, and seven green spikes [of grain] and others [that were] dry - that I may return to the people; perhaps they will know [about you]." Saheeh International(அவன் சிறைக்கூடம் சென்று யூஸுஃபை நோக்கி "கனவுகளுக்கு) உண்மை (யான வியாக்கியானம்) கூறுங்கள். யூஸுஃபே! கொழுத்துப் பருத்த ஏழு பசுக்களை, இளைத்து வற்றிய ஏழு பசுக்கள் புசிப்பதைப் போலும், முதிர்ந்து விளைந்த பசுமையான ஏழு கதிர்களையும் (சாவியாகிய) காய்ந்த மற்ற ஏழு கதிர்களையும் (கனவில் கண்டால் அதன் பலன் என்ன? அதனை) நீங்கள் எமக்கு அறிவியுங்கள் (என்னை அனுப்பிய) மக்கள் (இதனைத்) தெரிந்து கொள்வதற்காக அவர்களிடம் நான் செல்ல வேண்டியது இருக்கின்றது" என்று கூறினான். தாருல் ஹுதா(சிறையில் யூஸுஃபை கண்ட) அவர், “யூஸுஃபே! உண்மையாளரே! ஏழு கொழுத்த பசுக்களை, ஏழு மெலிந்த பசுக்கள் தின்பதையும்; பசுமையான ஏழு கதிர்களையும் வேறு (ஏழு) காய்ந்து (சாவியாகிவிட்ட) கதிர்களையும் (கனவில் கண்டால் அக்கனவுக்குப் பலன் என்ன என்பதை) எனக்கு அறிவிப்பீராக; மக்கள் அறிந்து கொள்வதற்காக அவர்களிடம் திரும்பிப் போய்(ச் சொல்ல) வேண்டியிருக்கிறது” (என்று கூறினார்). ஜான் டிரஸ்ட் நிறுவனம்(சிறைக்கூடம் சென்று அவன்,) “யூஸுஃபே! உண்மையாளரே கொழுத்துப் பருத்த ஏழு பசுக்களை – அவற்றை இளைத்து வற்றிய ஏழு பசுக்கள் புசிப்பதைப் பற்றியும், நன்கு விளைந்த பசுமையான ஏழு கதிர்களையும் (சாவியாகிய) காய்ந்து உலர்ந்த மற்ற (ஏழு) கதிர்களையும் (கனவில் கண்டால் அதன் பொருள் என்ன? என்பதைப்) பற்றி நீர் எங்களுக்கு அறிவிப்பீராக! என்னை (அனுப்பிய) மக்கள் (இதனைத்) தெரிந்து கொள்வதற்காக அவர்களிடம் நான் திரும்பிச் செல்ல வேண்டியதிருக்கின்றது” (என்று கேட்டார்.) மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)[He said], “Joseph, O man of truth, tell us about seven fat cows eaten up by seven lean ones, and seven green ears of grain and [seven] others withered, so that I may return to the people and that they may know.” Ruwwad Center |
12:47 قَالَ تَزْرَعُونَ سَبْعَ سِنِينَ دَأَبًا فَمَا حَصَدْتُمْ فَذَرُوهُ فِي سُنْبُلِهِ إِلَّا قَلِيلًا مِمَّا تَأْكُلُونَ Qala tazraAAoona sabAAa sineena daaban fama hasadtum fatharoohu fee sunbulihi illa qaleelan mimma takuloona [Yûsuf (Joseph)] said: "For seven consecutive years, you shall sow as usual and that (the harvest) which you reap you shall leave it in the ears, (all) except a little of it which you may eat. Hilali & Khan[Joseph] said, "You will plant for seven years consecutively; and what you harvest leave in its spikes, except a little from which you will eat. Saheeh Internationalஅதற்கவர் கூறியதாவது: "தொடர்ந்து (வழக்கம் போல் நல்லவிதமாக) ஏழு ஆண்டுகள் நீங்கள் விவசாயம் செய்வீர்கள். அதில் நீங்கள் அறுவடை செய்யும் விளைச்சல்களில் நீங்கள் புசிப்பதற்கு வேண்டிய ஒரு சொற்ப அளவைத்தவிர மற்ற அனைத்தையும் அதன் கதிர்களிலேயே விட்டு வையுங்கள். தாருல் ஹுதா“நீங்கள் தொடர்ந்து ஏழு ஆண்டுகளுக்கு (நல்லபடியாக) விவசாயம் செய்வீர்கள்; பிறகு நீங்கள் அறுவடை செய்த - (விளைச்ச)லில், நீங்கள் உண்பதற்கு வேண்டிய ஒரு சிறிய அளவைத்தவிர, அதனை அதற்குரிய கதிர்களிலேயே விட்டு வையுங்கள். ஜான் டிரஸ்ட் நிறுவனம்அ(தற்க)வர், “தொடர்ந்து வழக்கப்படி (நல்ல விதமாக) ஏழு ஆண்டுகள் நீங்கள் விவசாயம் செய்வீர்கள், நீங்கள் அறுவடை செய்வதை – நீங்கள் உண்பதற்கு வேண்டிய ஒரு சொற்ப அளவைத் தவிர – (மற்ற யாவற்றையும்) அதன் கதிர்களிலேயே விட்டு வையுங்கள் என்று கூறினார். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Joseph said, “You will grow crops for seven consecutive years. But whatever you harvest, leave it in the ear, except for a little that you may eat. Ruwwad Center |
12:48 ثُمَّ يَأْتِي مِنْ بَعْدِ ذَٰلِكَ سَبْعٌ شِدَادٌ يَأْكُلْنَ مَا قَدَّمْتُمْ لَهُنَّ إِلَّا قَلِيلًا مِمَّا تُحْصِنُونَ Thumma yatee min baAAdi thalika sabAAun shidadun yakulna ma qaddamtum lahunna illa qaleelan mimma tuhsinoona "Then will come after that, seven hard (years), which will devour what you have laid by in advance for them, (all) except a little of that which you have guarded (stored). Hilali & KhanThen will come after that seven difficult [years] which will consume what you saved for them, except a little from which you will store. Saheeh Internationalஅதற்குப் பின்னர், கடினமான (பஞ்சத்தையுடைய) ஏழு ஆண்டுகள் வரும். நீங்கள் கதிர்களில் பத்திரப்படுத்தி வைத்திருந்த வைகளில் (விதைப்புக்கு வேண்டிய) சொற்ப அளவைத் தவிர, (நீங்கள் சேகரித்திருந்த) அனைத்தையும் (அப்பஞ்சம்) தின்றுவிடும். தாருல் ஹுதா“பின்னும், அதற்கப்பால் கடினமான (பஞ்சத்தையுடை வருடங்கள்) ஏழு வரும்; நீங்கள் பஞ்சமான ஆண்டுகளுக்காக பத்திரப்படுத்தி முன்னமேயே வைத்திருப்பதில் சொற்ப (அளவை)த் தவிர மற்றதை அவை (அந்த பஞ்ச ஆண்டுகள்) தின்றுவிடும். ஜான் டிரஸ்ட் நிறுவனம்“பின்னர், அதற்கப்பால், கடினமான (பஞ்சத்தைக் கொண்ட) ஏழு (ஆண்டுகள்) வரும், நீங்கள் சேமித்து வைத்திருப்பவற்றிலிருந்து, (பஞ்சமான வருடங்களாகிய) இவைகளுக்காக நீங்கள் (கதிர்களில்) முற்படுத்தி வைத்தவற்றில் குறைவானவற்றைத் தவிர (மற்றதை) அவை தின்றுவிடும். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Then after that will come seven years of hardship which will devour all what you had stored, except for a little that you may set aside. Ruwwad Center |
12:49 ثُمَّ يَأْتِي مِنْ بَعْدِ ذَٰلِكَ عَامٌ فِيهِ يُغَاثُ النَّاسُ وَفِيهِ يَعْصِرُونَ Thumma yatee min baAAdi thalika AAamun feehi yughathu alnnasu wafeehi yaAAsiroona "Then thereafter will come a year in which people will have abundant rain and in which they will press (wine and oil)." Hilali & KhanThen will come after that a year in which the people will be given rain and in which they will press [olives and grapes]." Saheeh Internationalஅதற்குப் பின்னர் ஒரு ஆண்டு வரும்; அதில் ஏராளமாக மழை பெய்து (ஒலிவம், திராட்சை ஆகியவை நன்கு வளர்ந்து, திராட்சை ஆகியவற்றின்) ரஸத்தை மனிதர்கள் பிழிந்துகொண்டு (சுகமாக) இருப்பார்கள்" (என்றும் கூறினார்). தாருல் ஹுதாபின்னும், அதற்கப்பால் ஓராண்டு வரும், அதில் மக்களுக்கு நல்ல மழை பெய்யும்; அதில் (விளையும் கனிகளிலிருந்து) அவர்கள் பழரசங்கள் பிழிந்து (சுகமாக) இருப்பார்கள்” என்று கூறினார். ஜான் டிரஸ்ட் நிறுவனம்பின்னர், “அதற்கப்பால் ஒரு வருடம் வரும், அதில் மனிதர்கள் ஏராளமாக மழை பொழிவிக்கப்படுவர், (கனி வர்க்கங்களிளிருந்து அவற்றின் ரஸத்தைப்) பிழிந்து கொண்டுமிருப்பார்கள்” (என்றும் கூறினார்.) மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Then after that will come a year in which people will have abundant rain, and in which they will press [grapes and olives].” Ruwwad Center |
12:50 وَقَالَ الْمَلِكُ ائْتُونِي بِهِ ۖ فَلَمَّا جَاءَهُ الرَّسُولُ قَالَ ارْجِعْ إِلَىٰ رَبِّكَ فَاسْأَلْهُ مَا بَالُ النِّسْوَةِ اللَّاتِي قَطَّعْنَ أَيْدِيَهُنَّ ۚ إِنَّ رَبِّي بِكَيْدِهِنَّ عَلِيمٌ Waqala almaliku itoonee bihi falamma jaahu alrrasoolu qala irjiAA ila rabbika faisalhu ma balu alnniswati allatee qattaAAna aydiyahunna inna rabbee bikaydihinna AAaleemun And the king said: "Bring him to me." But when the messenger came to him, [Yûsuf (Joseph)] said: "Return to your lord and ask him, 'What happened to the women who cut their hands? Surely, my Lord (Allâh) is All-Knower of their plot."' Hilali & KhanAnd the king said, "Bring him to me." But when the messenger came to him, [Joseph] said, "Return to your master and ask him what is the case of the women who cut their hands. Indeed, my Lord is Knowing of their plan." Saheeh International(யூஸுஃப் நபி கூறியவற்றை அரசரிடம் வந்து அவன் விபரமாக அறிவித்தான்.) அதற்கு அரசர் "(இவ்வியாக்கியானம் கூறிய) அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்" எனக் கட்டளையிட்டார். அவருடைய தூதர் யூஸுஃபிடம் (அவரை அழைத்துச்) செல்ல (வர)வே (அவர் தூதருடன் செல்ல மறுத்து அவரை நோக்கி) "நீங்கள் உங்கள் எஜமானனிடம் திரும்பி சென்று, தங்களுடைய கை (விரல்)களை வெட்டிக்கொண்ட பெண்களின் (உண்மை) விஷயமென்ன? (எதற்காக அப்பெண்கள் தங்கள் கைகளை வெட்டிக் கொண்டனர்?) என்று அவரைக் கேளுங்கள். நிச்சயமாக அந்தப் பெண்களின் சூழ்ச்சியை என் இறைவன் நன்கறிந்தவன்" என்று கூறினார். தாருல் ஹுதா(“இவ்விவரம் அரசருக்கு அறிவிக்கப்பட்டதும்) அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று அரசர் கூறினார்; (அவருடைய) தூதர் யூஸுஃபிடம் வந்தபோது அவர், “நீர் உம் எஜமானரிடம் திரும்பிச் சென்று, “தம் கைகளை வெட்டிக்கொண்ட பெண்களின் உண்மை நிலை என்ன?” என்று அவரிடம் கேளும். நிச்சயமாக என் இறைவன் அப்பெண்களின் சதியை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்” என்று கூறினார். ஜான் டிரஸ்ட் நிறுவனம்மேலும், (கனவுகளின் விளக்கம் பற்றி அவன் கேட்டு வந்ததை அரசருக்கு அவன் அறிவிக்கவே) அதற்கு அரசர், (இவ்விளக்கங் கூறிய) “அவரை என்னிடம் கொண்டு வாருங்கள்” எனக்(கட்டளையிட்டுக்) கூறினார், அவருடைய தூதர் யூஸுஃபிடம் (இது பற்றிச் சொல்ல) வரவே, (அவரிடம்) “நீர் உம் எஜமானனிடம் திரும்பிச் சென்று, தங்கள் கைகளை வெட்டிக் கொண்டவர்களான பெண்களின் நிலை என்ன?” என்று அவரைக்கேளும், நிச்சயமாக அவர்களின் சூழ்ச்சியை என் இரட்சகன் நன்கறிந்தவன்” என்று கூறினார். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)The King said, “Bring him to me.” But when the messenger came to him, he said, “Go back to your master and ask him, ‘What was the case of the women who cut their hands?’ Indeed, my Lord is All-Knowing of their guile.” Ruwwad Center |
12:51 قَالَ مَا خَطْبُكُنَّ إِذْ رَاوَدْتُنَّ يُوسُفَ عَنْ نَفْسِهِ ۚ قُلْنَ حَاشَ لِلَّهِ مَا عَلِمْنَا عَلَيْهِ مِنْ سُوءٍ ۚ قَالَتِ امْرَأَتُ الْعَزِيزِ الْآنَ حَصْحَصَ الْحَقُّ أَنَا رَاوَدْتُهُ عَنْ نَفْسِهِ وَإِنَّهُ لَمِنَ الصَّادِقِينَ Qala ma khatbukunna ith rawadtunna yoosufa AAan nafsihi qulna hasha lillahi ma AAalimna AAalayhi min sooin qalati imraatu alAAazeezi alana hashasa alhaqqu ana rawadtuhu AAan nafsihi wainnahu lamina alssadiqeena (The King) said (to the women): "What was your affair when you did seek to seduce Yûsuf (Joseph)?" The women said: "Allâh forbid! No evil know we against him!" The wife of Al-'Azîz said: "Now the truth is manifest (to all); it was I who sought to seduce him, and he is surely of the truthful." Hilali & KhanSaid [the king to the women], "What was your condition when you sought to seduce Joseph?" They said, "Perfect is Allah! We know about him no evil." The wife of al-'Azeez said, "Now the truth has become evident. It was I who sought to seduce him, and indeed, he is of the truthful. Saheeh International(இதைக் கேள்வியுற்ற அரசர் அப்பெண்களை அழைத்து) "நீங்கள் யூஸுஃபை உங்கள் விருப்பத்திற்கிணங்குமாறு அழைத்த போது உங்களுக்கு ஏற்பட்டதென்ன?" என்று கேட்டார். அதற்கு அப்பெண்கள் "அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன்; நாங்கள் அவரிடத்தில் யாதொரு தீங்கையும் அறியவில்லை" என்று கூறி விட்டார்கள். அதிபதியின் மனைவியோ இச்சமயம் உண்மை வெளிப்பட்டு விட்டது; நான்தான் அவரை விரும்பி அழைத்தேன். (இதனை மறுத்து அவர் கூறியதில்) நிச்சயமாக அவர் உண்மையே சொன்னார்" என்று கூறினாள். தாருல் ஹுதா(இவ்விவரம் அறிந்த அரசர் அப் பெண்களை அழைத்து) “நீங்கள் யூஸுஃபை உங்கள் விருப்பத்திற்கு இணங்குமாறு அழைத்தபோது உங்களுக்கு நேர்ந்தது என்ன?” என்று கேட்டார்; (அதற்கு) அப் பெண்கள், “அல்லாஹ் எங்களை காப்பானாக! நாங்கள் அவரிடத்தில் யாதொரு கெடுதியையும் அறியவில்லை” என்று கூறினார்கள்; அஜீஸுடைய மனைவி, “இப்பொழுது (எல்லோருக்கும்) உண்மை வெளிப்பட்டு விட்டது. நான் தான் இவரை என் விருப்பத்திற்கு இணங்குமாறு வற்புறுத்தினேன். நிச்சயமாக அவர் உண்மையாளர்களில் உள்ளவர்” என்று கூறினாள். ஜான் டிரஸ்ட் நிறுவனம்(அதற்கரசர், அப்பெண்களை அழைத்து,) “நீங்கள் யூஸுஃபை (கண்டு) விரும்பியபோது, உங்களுக்கு நேர்ந்ததென்ன?” என்று கேட்டார், அ(தற்க)வர்கள், “அல்லாஹ் தூய்மையானவன் நாங்கள் அவரிடத்தில் யாதொரு தீங்கையும் அறியவில்லை” என்று கூறிவிட்டார்கள், (எகிப்திய அரசின்) அமைச்சருடைய மனைவி, “உண்மை இப்போது வெளிப்பட்டுவிட்டது, நான்தான் என் விருப்பத்திற்கிணங்குமாறு அவரை அழைத்தேன், (யூஸுஃப் அழைக்கவில்லை) நிச்சயமாக, அவர் உண்மையாளர்களில் உள்ளவர்” என்று கூறினாள்- மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)The king said, “What happened when you [O women] tried to seduce Joseph?” They said, “Allah forbid; we know nothing bad about him.” The chief minister’s wife said, “Now the truth has come to light. It was I who tried to seduce him, and he is surely the truthful. Ruwwad Center |
12:52 ذَٰلِكَ لِيَعْلَمَ أَنِّي لَمْ أَخُنْهُ بِالْغَيْبِ وَأَنَّ اللَّهَ لَا يَهْدِي كَيْدَ الْخَائِنِينَ Thalika liyaAAlama annee lam akhunhu bialghaybi waanna Allaha la yahdee kayda alkhaineena [Then Yûsuf (Joseph) said: "I asked for this enquiry] in order that he (Al-'Azîz) may know that I betrayed him not in (his) absence. And verily, Allâh guides not the plot of the betrayers." Hilali & KhanThat is so al-'Azeez will know that I did not betray him in [his] absence and that Allah does not guide the plan of betrayers. Saheeh International(இதனைக் கேள்வியுற்ற யூஸுஃப் "முன்னர் சென்றுபோன விஷயங்களை இவ்வாறு விசாரணைச் செய்யும்படி நான் கூறிய) இதன் காரணம்; நிச்சயமாக நான் (என் எஜமானாகிய) அவர் மறைவாயிருந்த சமயத்தில் அவருக்கு நான் துரோகம் செய்ய வில்லை என்பதை அவர் அறிந்து கொள்வதுடன், நிச்சயமாக அல்லாஹ் துரோகிகளின் சூழ்ச்சியை நடைபெற விடுவதில்லை என் (பதை அறிவிப்)பதற்காகவுமே" (என்று கூறினார்). தாருல் ஹுதாஇ(வ் விசாரணையை நான் விரும்பிய)தன் காரணம்; “நிச்சயமாக அவர் (என் எஜமானர்) இல்லாத போது அவருக்கு நான் துரோகம் செய்யவில்லை என்பதை அவர் அறிந்து கொள்வதுடன், நிச்சயமாக அல்லாஹ் துரோகிகளின் சதியை நடைபெற விடுவதில்லை என்பதை அறிவிப்பதற்காகவுமேயாகும். ஜான் டிரஸ்ட் நிறுவனம்இதன் காரணம்: “நிச்சயமாக (என்னைவிட்டு அவரும், அவரை விட்டு நானும் மறைவாக இருந்த சமயத்தில் அவருக்கு நான் துரோகம் செய்யவில்லை என்பதையும் நிச்சயமாக அல்லாஹ் துரோகிகளின் சூழ்ச்சிக்கு வழி காட்ட மாட்டான் என்பதையும் அவர் அறிந்து கொள்வதற்காகவேதான்” (என்றும்), மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)That is because Joseph should know that I did not betray him in his absence, for Allah does not let the guile of the betrayers to succeed.” Ruwwad Center |
12:53 وَمَا أُبَرِّئُ نَفْسِي ۚ إِنَّ النَّفْسَ لَأَمَّارَةٌ بِالسُّوءِ إِلَّا مَا رَحِمَ رَبِّي ۚ إِنَّ رَبِّي غَفُورٌ رَحِيمٌ Wama obarrio nafsee inna alnnafsa laammaratun bialssooi illa ma rahima rabbee inna rabbee ghafoorun raheemun "And I free not myself (from the blame). Verily, the (human) self is inclined to evil, except when my Lord bestows His Mercy (upon whom He wills). Verily, my Lord is Oft-Forgiving, Most Merciful." Hilali & KhanAnd I do not acquit myself. Indeed, the soul is a persistent enjoiner of evil, except those upon which my Lord has mercy. Indeed, my Lord is Forgiving and Merciful." Saheeh Internationalஅன்றி, "நான் (தவறுகளிலிருந்து) தூய்மையானவன்" என்று என்னை பரிசுத்தம் செய்து கொள்ளவில்லை. ஏனென்றால், என் இறைவன் அருள் புரிந்தாலன்றி மனிதனின் சரீர இச்சை, பாவம் செய்யும்படித் தூண்டக்கூடியதாகவே இருக்கின்றது. நிச்சயமாக என் இறைவன் மிக்க மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்" (என்றார்.) தாருல் ஹுதா“அன்றியும், நான் என் மனதைப் பாவத்தைவிட்டும் பரிசுத்தமாக்கி விட்டதாகவும் (கூற) இல்லை, ஏனெனில் மன இச்சையானது தீமையைத் தூண்டக்கூடியதாக இருக்கிறது - என் இறைவன் அருள்புரிந்தாலன்றி; நிச்சயமாக என் இறைவன் மிக்க மன்னிப்பவனாகவும், அருளாளனாகவும் இருக்கின்றான்” (என்றுங் கூறினார்). ஜான் டிரஸ்ட் நிறுவனம்“மேலும், நான் (யூஸுஃபின் மீது மோகங்கொள்ளவில்லை என்று கூறி என் மனதை நான் தூய்மைப்படுத்தவில்லை; (ஏனென்றால்) நிச்சயமாக என் இரட்சகன் அருள் புரிந்தவரையன்றி (மனிதனுடைய) மனம் பாவம் செய்யும்படி அதிகம் தூண்டக்கூடியதாகவே இருக்கின்றது, நிச்சயமாக என் இரட்சகன் மிக்க மன்னிப்பவன், மிகக் கிருபையுடையவன்” (என்று எகிப்திய அரசரின் அமைச்சருடைய மனைவி கூறனாள்.) (16) மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)I do not absolve myself of blame. Indeed, the human soul prompts one to evil, except those to whom my Lord may show mercy. Indeed, my Lord is All-Forgiving, Most Merciful.” Ruwwad Center |
12:54 وَقَالَ الْمَلِكُ ائْتُونِي بِهِ أَسْتَخْلِصْهُ لِنَفْسِي ۖ فَلَمَّا كَلَّمَهُ قَالَ إِنَّكَ الْيَوْمَ لَدَيْنَا مَكِينٌ أَمِينٌ Waqala almaliku itoonee bihi astakhlishu linafsee falamma kallamahu qala innaka alyawma ladayna makeenun ameenun And the king said: "Bring him to me that I may attach him to my person." Then, when he spoke to him, he said: "Verily, this day, you are with us high in rank and fully trusted." Hilali & KhanAnd the king said, "Bring him to me; I will appoint him exclusively for myself." And when he spoke to him, he said, "Indeed, you are today established [in position] and trusted." Saheeh International(யூஸுஃபின் ஞானத்தை அறிந்த அரசர்) "அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்! என் சொந்த வேலைக்கு அவரை அமர்த்திக் கொள்வேன்" என்று (அழைத்து வரச் செய்து) அவருடன் பேசவே (அவரது தொலைநோக்கு சிந்தனையைக் கண்டு) "நிச்சயமாக நீங்கள் இன்றிலிருந்து நம்மிடம் பெரும் மதிப்பும் நம்பிக்கையும் பெற்று விட்டீர்கள்" என்றார். தாருல் ஹுதாஇன்னும், அரசர் கூறினார்: “அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்; அவரை நான் என் நெருங்கிய - (ஆலோசக)ராக அமர்த்திக் கொள்வேன்” (இவ்வாறு அரசரிடம் யூஸுஃபு வந்ததும்) அவரிடம் பேசி (அவர் ஞானத்தை நன்கறிந்த பொழுது) “நிச்சயமாக நீர் இன்றிலிருந்து நம்மிடம் பெரும் அந்தஸ்துள்ளவராகவும் நம்பிக்கைக்குரியவராகவும் (உயர்ந்து) இருக்கிறீர்” என்று கூறினார். ஜான் டிரஸ்ட் நிறுவனம்(சிறைச்சாலையிலிருக்கும் யூஸுஃபின் ஞானத்தை அறிந்த) அரசர் “அவரை என்னிடம் (அழைத்துக்) கொணடு வாருங்கள் எனக்கு மட்டும் பிரத்தியேகமானவராக அவரை நான் அமர்த்திக் கொள்வேன்” என்று கூறினார், (ஆகவே சிறையிலிருந்து வெளியாகிய) அவருடன் பேசியபொழுது, நிச்சயமாக நீர் இன்றிலிருந்து நம்மிடம் பெரும் மதிப்பும் நம்பிக்கையும் பெற்றவராக இருக்கிறீர்” என்று கூறினார். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)The King said, “Bring him to me, so that I will appoint him [as an adviser] exclusively to myself.” Then when he spoke to him, he said, “You are today in a highly esteemed position and fully trusted by us.” Ruwwad Center |
12:55 قَالَ اجْعَلْنِي عَلَىٰ خَزَائِنِ الْأَرْضِ ۖ إِنِّي حَفِيظٌ عَلِيمٌ Qala ijAAalnee AAala khazaini alardi innee hafeethun AAaleemun [Yûsuf (Joseph)] said: "Set me over the store-houses of the land; I will indeed guard them with full knowledge (as a minister of finance in Egypt)." Hilali & Khan[Joseph] said, "Appoint me over the storehouses of the land. Indeed, I will be a knowing guardian." Saheeh International(அதற்கவர்) "தேசியக் களஞ்சியங்களின் நிர்வாகியாக என்னை ஆக்கி விடுங்கள். நிச்சயமாக நான் அவற்றைப் பாதுகாக்க நன்கறிந்தவன்" என்று சொன்னார். (அவ்வாறே அரசர் ஆக்கினார்.) தாருல் ஹுதா(யூஸுஃப்) கூறினார்: “(இந்த) பூமியின் களஞ்சியங்களுக்கு என்னை (அதிகாரியாய்) ஆக்கிவிடுவீராக; நிச்சயமாக நான் (அவற்றைப்) பாதுகாக்க நன்கறிந்தவன்.” ஜான் டிரஸ்ட் நிறுவனம்அ(தற்க)வர், “இந்தப் பூமியின் களஞ்சியங்களின் மீது (நிர்வாகியாக) என்னை ஆக்கிவிடும், நிச்சயமாக நான் (அவற்றைப்) பாதுகாக்கக் கூடியவன், நன்கறிந்தவன்” என்று சொன்னார் (அரசரும் அவ்வாறே செய்தார்.) மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Joseph said, “Put me in charge of the storehouses of the land; I am indeed a good keeper and knowledgeable.” Ruwwad Center |
12:56 وَكَذَٰلِكَ مَكَّنَّا لِيُوسُفَ فِي الْأَرْضِ يَتَبَوَّأُ مِنْهَا حَيْثُ يَشَاءُ ۚ نُصِيبُ بِرَحْمَتِنَا مَنْ نَشَاءُ ۖ وَلَا نُضِيعُ أَجْرَ الْمُحْسِنِينَ Wakathalika makanna liyoosufa fee alardi yatabawwao minha haythu yashao nuseebu birahmatina man nashao wala nudeeAAu ajra almuhsineena Thus did We give full authority to Yûsuf (Joseph) in the land, to take possession therein, when or where he likes. We bestow of Our Mercy on whom We will, and We make not to be lost the reward of Al-Muhsinûn (the good-doers. See V.2:112). Hilali & KhanAnd thus We established Joseph in the land to settle therein wherever he willed. We touch with Our mercy whom We will, and We do not allow to be lost the reward of those who do good. Saheeh Internationalயூஸுஃப், அந்நாட்டில் தான் விரும்பிய இடமெல்லாம் சென்று, விரும்பும் காரியங்களை செய்துவர இவ்வாறு நாம் அவருக்கு வசதியளித்தோம். நாம் விரும்பியவர்களுக்கு (இவ்வாறே) அருள்புரிகிறோம். நன்மை செய்தவர்களின் கூலியை நாம் வீணாக்குவதில்லை. தாருல் ஹுதாயூஸுஃப் தான் விரும்பிய விதத்தில் காரியங்கள் செய்து வர அந்த நாட்டில் யூஸுஃபுக்கு நாம் இவ்வாறே வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தோம்; இவ்வாறே நாம் நாடியவருக்கு நமது அருள் கிடைக்கும் படிச் செய்கின்றோம். நன்மை செய்பவர்களின் கூலியை நாம் வீணாக்க மாட்டோம். ஜான் டிரஸ்ட் நிறுவனம்இவ்வாறே யூஸுஃபுக்கு பூமியில் அவர் விரும்பியவாறு வசித்துக் கொள்ள நாம் அவருக்கு வசதியளித்தோம், நாம் விரும்பியவர்களுக்கு (இவ்வாறே) நம் அருளை கிடைக்கும்படிச் செய்கிறோம், நன்மை செய்பவர்களின் கூலியை நாம் வீணாக்கிவிடவுமாட்டோம். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)This is how We established Joseph in the land so that he may settle wherever he wished. We extend Our mercy to whom We will, and We do not let the reward of those who do good to be lost. Ruwwad Center |
12:57 وَلَأَجْرُ الْآخِرَةِ خَيْرٌ لِلَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ Walaajru alakhirati khayrun lillatheena amanoo wakanoo yattaqoona And verily, the reward of the Hereafter is better for those who believe and used to fear Allâh and keep their duty to Him (by abstaining from all kinds of sins and evil deeds and by performing all kinds of righteous good deeds). Hilali & KhanAnd the reward of the Hereafter is better for those who believed and were fearing Allah. Saheeh Internationalஎனினும், (நமக்குப்) பயந்து நடக்கும் நம்பிக்கை யாளர்களுக்கு மறுமை(யில் நாம் கொடுக்கும்) கூலியோ (இதைவிட) மிக மேலானதாகும். (யூஸுஃப் கூறியவாறு தானியங்கள் பத்திரப் படுத்தப்பட்டு வந்தன. பஞ்சமும் ஏற்பட்டு, கன்ஆனிலிருந்த இவருடைய சகோதரர்கள் தானியத்திற்காக யூஸுஃபிடம் வந்தனர்.) தாருல் ஹுதாமேலும், பயபக்தியுடையவர்களான முஃமின்களுக்கு மறுமையின் கூலி மிகச் சிறந்ததாக இருக்கும். ஜான் டிரஸ்ட் நிறுவனம்மேலும், விசுவாசங்கொண்டு, பயபக்தியுடையவர்களாகவும் இருந்தார்களே அவர்களுக்கு மறுமையின் கூலியானது மிக மேலானதாக இருக்கும். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)But the reward of the Hereafter is better for those who believe and fear Allah. Ruwwad Center |
12:58 وَجَاءَ إِخْوَةُ يُوسُفَ فَدَخَلُوا عَلَيْهِ فَعَرَفَهُمْ وَهُمْ لَهُ مُنْكِرُونَ Wajaa ikhwatu yoosufa fadakhaloo AAalayhi faAAarafahum wahum lahu munkiroona And Yûsuf's (Joseph's) brethren came and they entered to him, and he recognized them, but they recognized him not. Hilali & KhanAnd the brothers of Joseph came [seeking food], and they entered upon him; and he recognized them, but he was to them unknown. Saheeh Internationalஆகவே, யூஸுஃபினுடைய சகோதரர்கள் அவரிடம் வந்தபொழுது, அவர்களை அவர் (தன் சகோதரர்கள்தாம் என) அறிந்துகொண்டார். ஆனால், அவர்களோ அவரை அறிந்து கொள்ளவில்லை. தாருல் ஹுதா(பின்னர் யூஸுஃபுடைய சகோதரர்கள் (மிஸ்ரு நாட்டுக்கு) வந்து, அவரிடம் நுழைந்த போது யூஸுஃப் அவர்களை அறிந்து கொண்டார்; ஆனால் அவர்களோ அவரை அறியாதவர்களாக இருந்தனர், ஜான் டிரஸ்ட் நிறுவனம்மேலும், யூஸுஃபுடைய சகோதரர்கள் (கன் ஆனிலிருந்து) வந்து, அவரிடம் நுழைந்தபொழுது அவர்களோ அவரை (யூஸுஃபை) அறியாதவர்களாக இருந்த நிலையில் அவர்களை (தன் சகோதரர்கள் என யூஸுஃபாகிய) அவர் அறிந்துகொண்டார். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)The brothers of Joseph came and presented themselves before him; he recognized them but they did not know him. Ruwwad Center |
12:59 وَلَمَّا جَهَّزَهُمْ بِجَهَازِهِمْ قَالَ ائْتُونِي بِأَخٍ لَكُمْ مِنْ أَبِيكُمْ ۚ أَلَا تَرَوْنَ أَنِّي أُوفِي الْكَيْلَ وَأَنَا خَيْرُ الْمُنْزِلِينَ Walamma jahhazahum bijahazihim qala itoonee biakhin lakum min abeekum ala tarawna annee oofee alkayla waana khayru almunzileena And when he had furnished them with their provisions (according to their need), he said: "Bring me a brother of yours from your father (he meant Benjamin). See you not that I give full measure, and that I am the best of the hosts? Hilali & KhanAnd when he had furnished them with their supplies, he said, "Bring me a brother of yours from your father. Do not you see that I give full measure and that I am the best of accommodators? Saheeh International(யூஸுஃப்) அவர்களுக்கு வேண்டிய தானியங்களை தயார்படுத்திக் கொடுத்து, (தம் சொந்த சகோதரர் புன்யாமீனின் சுகத்தை அவர்களிடம் தந்திரமாகப் பேசித் தெரிந்துகொண்டு "மறுமுறை நீங்கள் வந்தால்) தந்தை ஒன்றான உங்கள் சகோதர(ன் புன்யாமீ)னையும் அழைத்து வாருங்கள். (நீங்கள் குறைந்த கிரயம் கொடுத்தபோதிலும்) நிச்சயமாக நான் உங்களுக்கு(த் தானியங்களை) முழுமையாக அளந்து கொடுத்ததுடன், மிக்க மேலான விதத்தில் (உங்களுக்கு) விருந்து அளித்ததையும் நீங்கள் கவனிக்கவில்லையா? தாருல் ஹுதா(யூஸுஃப்) அவர்களுக்கு வேண்டிய பொருள் (தானியங்களைச்) சித்தம் செய்து கொடுத்த போது, (அவர்களை நோக்கி) “உங்கள் தந்தை வழிச் சகோதரனை (மறுமுறை நீங்கள் இங்கு வரும்போது) என்னிடம் அழைத்து வாருங்கள். நிச்சயமாக நான் உங்களுக்கு (தானியங்களை நிரப்பமாக) அளந்து கொடுத்ததையும், விருந்துபசாரம் செய்வதில் நான் “சிறந்தவன்” என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா? ஜான் டிரஸ்ட் நிறுவனம்மேலும், (யூஸுஃபாகிய) அவர் அவர்களுக்கு (வேண்டிய) தானியங்களைத் தயார்படுத்திக் கொடுத்தபோது (மறுமுறை நீங்கள் வந்தால்) “உங்களுடைய தந்தையிலிருந்துள்ள உங்களுக்குரிய சகோதர(ன் புன்யாமீ)னையும் என்னிடம் (அழைத்துக்) கொண்டு வாருங்கள், நான் நிச்சயமாக (உங்களுக்கு தானியங்களைப்) பூர்த்தியாக்குபவன் என்பதையும், விருந்துபசாரம் செய்பவர்களில் நான் மிகச் சிறந்தவன் என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா?” என்று கூறினார். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)When he prepared for them their rations, he said, “Bring me your step-brother; do you not see that I give full measure and I am the best host? Ruwwad Center |
12:60 فَإِنْ لَمْ تَأْتُونِي بِهِ فَلَا كَيْلَ لَكُمْ عِنْدِي وَلَا تَقْرَبُونِ Fain lam tatoonee bihi fala kayla lakum AAindee wala taqrabooni "But if you bring him not to me, there shall be no measure (of corn) for you with me, nor shall you come near me." Hilali & KhanBut if you do not bring him to me, no measure will there be [hereafter] for you from me, nor will you approach me." Saheeh Internationalநீங்கள் அவரை என்னிடம் கொண்டு வராவிடில் (என்னிடமுள்ள தானியத்தை) உங்களுக்கு அளந்து கொடுக்க முடியாது. நீங்கள் என்னை நெருங்கவும் முடியாது" என்று கூறினார். தாருல் ஹுதா“ஆகவே, நீங்கள் அவரை என்னிடம் அழைத்து வராவிட்டால், என்னிடமிருந்து உங்களுக்கு (தானிய) அளவையும் (இனி) இல்லை; நீங்கள் என்னை நெருங்கவும் கூடாது” என்று கூறினார். ஜான் டிரஸ்ட் நிறுவனம்“ஆகவே, நீங்கள் அவரை என்னிடம் கொண்டு வராவிடில், என்னிடம் உங்களுக்கு (தானியத்தை) அளப்பது இல்லை, நீங்கள் என்னை நெருங்கவும் வேண்டாம்” (என்று கூறினார்). மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)If you do not bring him to me, you will never receive any measure [of grain] from me, nor will you even come close to me.” Ruwwad Center |
12:61 قَالُوا سَنُرَاوِدُ عَنْهُ أَبَاهُ وَإِنَّا لَفَاعِلُونَ Qaloo sanurawidu AAanhu abahu wainna lafaAAiloona They said: "We shall try to get permission (for him) from his father, and verily, we shall do it." Hilali & KhanThey said, "We will attempt to dissuade his father from [keeping] him, and indeed, we will do [it]." Saheeh Internationalஅதற்கவர்கள் "நாங்கள் அவருடைய தந்தையிடம் கேட்டுக்கொண்டு (அவரை அழைத்துக் கொண்டு வருவதற்கு) வேண்டிய முயற்சிகளை நிச்சயமாகச் செய்வோம்" என்று கூறினார்கள். தாருல் ஹுதா“அவரது தந்தையிடத்தில் அவர் விஷயமாக நாம் ஓர் உபாயத்தை மேற்கொள்வோம். மேலும் நிச்சயமாக நாம் அதை செய்பவர்கள்தான்” என்று கூறினார்கள். ஜான் டிரஸ்ட் நிறுவனம்அ(தற்க)வர்கள், “நாங்கள் அவருடைய தந்தையிடம் (உங்களிடம் அவரைக் கொண்டுவர) அவரைப் பற்றி (சாத்தியமான எல்லா) முயற்சிகளையும் மேற்கொள்வோம், நிச்சயமாக நாங்கள் (அதைச்) செய்பவர்களாகவும் இருக்கிறோம்” என்று கூறினார்கள். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)They said, “We will persuade his father to send him, and we will surely do our best.” Ruwwad Center |
12:62 وَقَالَ لِفِتْيَانِهِ اجْعَلُوا بِضَاعَتَهُمْ فِي رِحَالِهِمْ لَعَلَّهُمْ يَعْرِفُونَهَا إِذَا انْقَلَبُوا إِلَىٰ أَهْلِهِمْ لَعَلَّهُمْ يَرْجِعُونَ Waqala lifityanihi ijAAaloo bidaAAatahum fee rihalihim laAAallahum yaAArifoonaha itha inqalaboo ila ahlihim laAAallahum yarjiAAoona And [Yûsuf (Joseph)] told his servants to put their money (with which they had bought the corn) into their bags, so that they might know it when they go back to their people; in order that they might come again. Hilali & KhanAnd [Joseph] said to his servants, "Put their merchandise into their saddlebags so they might recognize it when they have gone back to their people that perhaps they will [again] return." Saheeh International(பின்னர் யூஸுஃப்) தன் ஆட்களை நோக்கி "அவர்கள் கிரயமாகக் கொடுத்த பொருளை அவர்களுடைய (பொதி) மூட்டைகளில் (மறைத்து) வைத்துவிடுங்கள். அவர்கள் தங்கள் குடும்பம் சேர்ந்து (தானிய மூட்டைகளை அவிழ்க்கும்போது) அதனை அறிந்துகொண்டு (அதனை நம்மிடம் செலுத்தத்) திரும்பி வரக்கூடும்" என்று கூறினார். தாருல் ஹுதா(பின்னர் யூஸுஃப்) தம் பணியாட்களை நோக்கி, “அவர்கள் கிரயமாகக் கொடுத்த பொருளை அவர்களுடைய மூட்டைகளிலே வைத்து விடுங்கள்; அவர்கள் தம் குடும்பத்தாரிடம் சென்ற பிறகு இதை அறிந்தால், (நம்மிடம் அதைச் சேர்ப்பிக்க) அவர்கள் திரும்பி வரக்கூடும்” என்று கூறினார். ஜான் டிரஸ்ட் நிறுவனம்(பின்னர் யூஸுஃப்) தன் பிணையாட்களிடம் “(கிரயமாகக் கொடுத்த அவர்களின் பொருளை அவர்களுடைய (பொதி) மூட்டைகளில் ஆக்கி (மறைத்து வைத்து) விடுங்கள், அவர்கள் தங்கள் குடும்பத்தாரிடம் திரும்பிச் சென்றடைந்தால், (தானிய மூட்டைகளை அவிழ்க்கும்போது) அதனை அவர்கள் அறிந்துகொண்டு, (அதனை நம்மிடம் செலுத்த) அவர்கள் திரும்பி வரக்கூடும்” என்று கூறினார். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Joseph said to his servants, “Put their money in their saddlebags so that they may find them when they go back to their family; perhaps they will return.” Ruwwad Center |
12:63 فَلَمَّا رَجَعُوا إِلَىٰ أَبِيهِمْ قَالُوا يَا أَبَانَا مُنِعَ مِنَّا الْكَيْلُ فَأَرْسِلْ مَعَنَا أَخَانَا نَكْتَلْ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ Falamma rajaAAoo ila abeehim qaloo ya abana muniAAa minna alkaylu faarsil maAAana akhana naktal wainna lahu lahafithoona So, when they returned to their father, they said: "O our father! No more measure of grain shall we get (unless we take our brother). So send our brother with us, and we shall get our measure and truly, we will guard him." Hilali & KhanSo when they returned to their father, they said, "O our father, [further] measure has been denied to us, so send with us our brother [that] we will be given measure. And indeed, we will be his guardians." Saheeh International(தானியம் வாங்கிய) அவர்கள் தம் தந்தையிடம் திரும்பி வந்தபொழுது "எங்கள் தந்தையே! (புன்யாமீனையும் நாங்கள் அழைத்துச் செல்லாவிட்டால்) எங்களுக்கு(த் தானியம்) அளப்பது தடுக்கப்பட்டுவிடும். ஆதலால், எங்கள் சகோதரனையும் எங்களுடன் அனுப்பி வையுங்கள். நாங்கள் தானியம் வாங்கிக் கொண்டு நிச்சயமாக அவரையும் பாதுகாத்து வருவோம்" என்று கூறினார்கள். தாருல் ஹுதாஅவர்கள் தம் தந்தையாரிடம் திரும்பிய போது, அவரை நோக்கி: “எங்கள் தந்தையே! (நாங்கள் நம் சதோதரரை அழைத்துச் செல்லாவிட்டால்) நமக்கு(த் தானியம்) அளந்து கொடுப்பது தடுக்கப்பட்டுவிடும்; ஆகவே எங்களுடன் எங்களுடைய சகோதரனையும் அனுப்பிவையுங்கள். நாங்கள் (தானியம்) அளந்து வாங்கிக் கொண்டு வருவோம்; நிச்சயமாக நாங்கள் இவரை மிகவும் கவனமாக பாதுகாத்தும் வருவோம்” என்று சொன்னார்கள். ஜான் டிரஸ்ட் நிறுவனம்அவர்கள் தம் தந்தையிடம் திரும்பி வந்தபொழுது, “எங்கள் தந்தையே! எங்களுக்கு (த்தானியம்) அளப்பது தடுக்கப்பட்டுவிட்டது, ஆதலால், எங்கள் சகோதரனையும் எங்களுடன் அனுப்பிவையுங்கள், நாங்கள் தானியம் அளந்து வாங்கிக் கொண்டு, நிச்சயமாக அவரையும் பாதுகாப்பவர்களாக இருக்கிறோம்” என்று கூறினார்கள். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)When they returned to their father, they said, “O our father, we have been denied any further measure [of grain]; send our brother with us so that we may receive our measure, and we will surely protect him.” Ruwwad Center |
12:64 قَالَ هَلْ آمَنُكُمْ عَلَيْهِ إِلَّا كَمَا أَمِنْتُكُمْ عَلَىٰ أَخِيهِ مِنْ قَبْلُ ۖ فَاللَّهُ خَيْرٌ حَافِظًا ۖ وَهُوَ أَرْحَمُ الرَّاحِمِينَ Qala hal amanukum AAalayhi illa kama amintukum AAala akheehi min qablu faAllahu khayrun hafithan wahuwa arhamu alrrahimeena He said: "Can I entrust him to you except as I entrusted his brother [Yûsuf (Joseph)] to you aforetime? But Allâh is the Best to guard, and He is the Most Merciful of those who show mercy." Hilali & KhanHe said, "Should I entrust you with him except [under coercion] as I entrusted you with his brother before? But Allah is the best guardian, and He is the most merciful of the merciful." Saheeh International(அதற்கு யஅகூப்) "இதற்கு முன்னர் இவருடைய சகோதரர் (யூஸுஃப்) விஷயத்தில் நான் உங்களை நம்பி (மோசம் போ)னது போல் இவர் விஷயத்திலும் நான் உங்களை நம்புவதா? (முடியாது.) பாதுகாப்பதில் அல்லாஹ் மிக்க மேலானவன்; அவனே அருள் புரிபவர்களிலெல்லாம் மிக்க அருளாளன்" என்று கூறிவிட்டார். தாருல் ஹுதாஅதற்கு (யஃகூப்; “இதற்கு) முன்னர் இவருடைய சகோதரர் விஷயத்தில் உங்களை நம்பியது போன்று, இவர் விஷயத்திலும் நான் உங்களை நம்புவதா? (அது முடியாது.) பாதுகாப்பவர்களில் அல்லாஹ்வே மிகவும் மேலானவன்; கிருபையாளர்களில் அவனே எல்லோரையும்விட மிக்க கிருபையாளனாவான்” என்று கூறிவிட்டார். ஜான் டிரஸ்ட் நிறுவனம்அதற்கு (யாஃகூபாகிய) அவர், “இதற்கு முன்னர் இவருடைய சகோதரர் (யூஸுஃப்) விஷயத்தில் நான் உங்களை நம்பி (மோசம் போ)னது போல் அல்லாது இவர் விஷயத்திலும் நான் உங்களை நம்புவேனா? (முடியாது) ஆகவே, பாதுகாப்பவனில் அல்லாஹ் மிக்க மேலானவன், மேலும், அவனே அருள் புரிவோரிலெல்லாம் மிக்க அருளாளன்” என்று கூறிவிட்டார். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)He said, “Should I trust you with him as I trusted you earlier with his brother? But Allah is the best Protector, and He is the Most Merciful of those who show mercy.” Ruwwad Center |
12:65 وَلَمَّا فَتَحُوا مَتَاعَهُمْ وَجَدُوا بِضَاعَتَهُمْ رُدَّتْ إِلَيْهِمْ ۖ قَالُوا يَا أَبَانَا مَا نَبْغِي ۖ هَٰذِهِ بِضَاعَتُنَا رُدَّتْ إِلَيْنَا ۖ وَنَمِيرُ أَهْلَنَا وَنَحْفَظُ أَخَانَا وَنَزْدَادُ كَيْلَ بَعِيرٍ ۖ ذَٰلِكَ كَيْلٌ يَسِيرٌ Walamma fatahoo mataAAahum wajadoo bidaAAatahum ruddat ilayhim qaloo ya abana ma nabghee hathihi bidaAAatuna ruddat ilayna wanameeru ahlana wanahfathu akhana wanazdadu kayla baAAeerin thalika kaylun yaseerun And when they opened their bags, they found their money had been returned to them. They said: "O our father! What (more) can we desire? This, our money has been returned to us; so we shall get (more) food for our family, and we shall guard our brother and add one more measure of a camel's load. This quantity is easy (for the king to give)." Hilali & KhanAnd when they opened their baggage, they found their merchandise returned to them. They said, "O our father, what [more] could we desire? This is our merchandise returned to us. And we will obtain supplies for our family and protect our brother and obtain an increase of a camel's load; that is an easy measurement." Saheeh Internationalபின்னர், அவர்கள் தங்கள் சாமான் மூட்டைகளை அவிழ்த்தபொழுது அவர்கள் (கிரயமாகக்) கொடுத்த பொருள்கள் (அனைத்தும்) அவர்களிடமே திருப்பப்பட்டு விட்டதைக் கண்டு "எங்கள் தந்தையே! நமக்கு வேண்டியதென்ன? (பொருள்தானே!) இதோ! நாம் (கிரயமாகக்) கொடுத்த பொருள்கள் நம்மிடமே திருப்பப்பட்டுவிட்டன. (புன்யாமீனையும் அழைத்துச் செல்ல அனுமதி தாருங்கள்.) நம் குடும்பத்திற்கு வேண்டிய தானியங்களை வாங்கி வருவோம். எங்கள் சகோதரனையும் காப்பாற்றி வருவோம். (அவருக்காகவும்) ஓர் ஒட்டக (சுமை) தானியத்தை அதிகமாகவே கொண்டு வருவோம். (கொண்டு வந்திருக்கும்) இது வெகு சொற்ப தானியம்தான்" என்று கூறினார்கள். தாருல் ஹுதாஅவர்கள் தங்கள் (சாமான்) மூட்டைகளை அவிழ்த்தபோது, அவர்களுடைய கிரயப்பொருள் (யாவும்) அவர்களிடம் திருப்பப் பட்டிருப்பதைக் கண்டார்கள்; அவர்கள், “எங்கள் தந்தையே! (இதற்கு மேல்) நாம் எதைத் தேடுவோம்? இதோ, நம்முடைய (கிரயப்) பொருள்கள் நம்மிடமே திருப்பப்பட்டுவிட்டன; ஆகவே நம் குடும்பத்திற்கு (வேண்டிய) தானியங்களை நாங்கள் வாங்கி வருவோம்; எங்கள் சகோதரரையும் நாங்கள் பாதுகாத்துக்கொள்வோம்; மேலும், (அவருக்காக) ஓர் ஒட்டகை(ச் சுமை) தானியத்தை அதிகமாகக் கொண்டு வருவோம்; இது (அந்த மன்னரைப் பொறுத்த வரை) சாதாரணமான அளவுதான்” என்று கூறினார்கள். ஜான் டிரஸ்ட் நிறுவனம்இன்னும், அவர்கள் தங்கள் சாமான் (மூட்டை)களை அவிழ்த்தபொழுது அவர்கள் (கிரயமாகக்) கொடுத்த பொருளை அவர்களிடமே திருப்பப்பட்டு விட்டதைக் கண்டு, “எங்கள் தந்தையே! (இன்னும்,) நாங்கள் எதைத் தேடுவோம்? இதோ, நாம் (கிரயமாகக்) கொடுத்த பொருள் நம்மிடமே திருப்பப்பட்டுவிட்டது, (ஆகவே, புன்யாமீனையும் அழைத்துச் செல்ல அனுமதி தாருங்கள்.) நம் குடும்பத்திற்கு வேண்டிய தானியங்களையும் நாங்கள் வாங்கி வருவோம், எங்கள் சகோதரனையும், பாதுகாத்து வருவோம், (அவருக்காகவும்) ஓர் ஒட்டகச் சுமை தானியத்தை அதிகமாகவும் கொண்டு வருவோம், இ(வ்வாறு அவர்கள் அதிகமாகக் கொடுப்ப)து, எளிதான (தானிய) அளவைதான்” என்று கூறினார்கள். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)When they opened their baggage, they found that their money had been returned to them. They said, “O our father, what more could we ask for? Here is our money returned to us. We can bring more food to our family, protect our brother, and obtain an extra camel-load of grain. That measure is easily secured.” Ruwwad Center |
12:66 قَالَ لَنْ أُرْسِلَهُ مَعَكُمْ حَتَّىٰ تُؤْتُونِ مَوْثِقًا مِنَ اللَّهِ لَتَأْتُنَّنِي بِهِ إِلَّا أَنْ يُحَاطَ بِكُمْ ۖ فَلَمَّا آتَوْهُ مَوْثِقَهُمْ قَالَ اللَّهُ عَلَىٰ مَا نَقُولُ وَكِيلٌ Qala lan orsilahu maAAakum hatta tutooni mawthiqan mina Allahi latatunnanee bihi illa an yuhata bikum falamma atawhu mawthiqahum qala Allahu AAala ma naqoolu wakeelun He [Ya'qûb (Jacob)] said: "I will not send him with you until you swear a solemn oath to me in Allâh's Name, that you will bring him back to me unless you are yourselves surrounded (by enemies)," And when they had sworn their solemn oath, he said: "Allâh is the Witness to what we have said." Hilali & Khan[Jacob] said, "Never will I send him with you until you give me a promise by Allah that you will bring him [back] to me, unless you should be surrounded by enemies." And when they had given their promise, he said, "Allah, over what we say, is Witness." Saheeh International(அதற்கு அவர்களின் தந்தை) "நான் அவரை உங்களுடன் அனுப்பவே மாட்டேன். ஆயினும், உங்கள் அனைவரையுமே (யாதொரு ஆபத்து) சூழ்ந்து கொண்டாலன்றி நிச்சயமாக அவரை என்னிடம் கொண்டு வருவீர்களென்று அல்லாஹ்வின் மீது நீங்கள் (அனைவரும்) எனக்குச் சத்தியம் செய்து கொடுத்தாலன்றி" என்று கூறினார். அவர்கள் (அவ்வாறு) அவருக்குச் சத்தியம் செய்து கொடுக்கவே அதற்கு அவர் "நாம் செய்துகொண்ட இவ்வுடன்பாட்டிற்கு அல்லாஹ்வே சாட்சியாக இருக்கிறான்" என்று (கூறி புன்யாமீனை அழைத்துச் செல்ல அனுமதியளித்தார். தாருல் ஹுதாஅதற்கு யஃகூப் “உங்கள் யாவரையுமே (ஏதாவதோர் ஆபத்து) சூழ்ந்து (உங்களைச் சக்தியற்றவர்களாக ஆக்கிக்) கொண்டாலன்றி, நிச்சயமாக நீங்கள் அவரை என்னிடம் கொண்டு வருவீர்களென்று அல்லாஹ்வின் மீது நீங்கள் எனக்குச் சத்தியம்செய்து (வாக்குறுதி) கொடுத்தாலன்றி, நான் அவரை உங்களுடன் அனுப்பவே மாட்டேன்” என்று கூறினார்; அவர்கள் (அவ்வாறு) அவருக்குச் சத்தியம் செய்து (வாக்குறுதி) கொடுத்ததும் அவர் “நாம் பேசிக்கொண்டதற்கு அல்லாஹ்வே காவலனாக இருக்கின்றான்” என்று கூறினார். ஜான் டிரஸ்ட் நிறுவனம்(அதற்கு) “உங்கள் யாவரையும் (ஏதேனும் ஆபத்து) சூழ்ந்து கொண்டாலன்றி நிச்சயமாக அவரை என்னிடம் கொண்டு வருவீர்களென்று அல்லாஹ்வின் மீது நீங்கள் (யாவரும்) எனக்கு உறுதிமொழி கொடுக்கும்வரை, நான் அவரை உங்களுடன் அனுப்பவே மாட்டேன்” என்று (யாஃகூப் நபியாகிய) அவர் கூறினார், ஆகவே, அவர்கள் (அவ்வாறு) அவருககு உறுதிமொழி கொடுக்கவே, அதற்கு அவர் “நாம் பேசிக்கொண்டதற்கு அல்லாஹ்வே கண்காணிப்பவனாக இருக்கிறான்” என்று கூறினார். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)He said, “I will never send him with you unless you give me a pledge by Allah that you will surely bring him back to me, unless you are completely overpowered.” Then when they gave him their pledge, he said, “Allah is Witness to what we say.” Ruwwad Center |
12:67 وَقَالَ يَا بَنِيَّ لَا تَدْخُلُوا مِنْ بَابٍ وَاحِدٍ وَادْخُلُوا مِنْ أَبْوَابٍ مُتَفَرِّقَةٍ ۖ وَمَا أُغْنِي عَنْكُمْ مِنَ اللَّهِ مِنْ شَيْءٍ ۖ إِنِ الْحُكْمُ إِلَّا لِلَّهِ ۖ عَلَيْهِ تَوَكَّلْتُ ۖ وَعَلَيْهِ فَلْيَتَوَكَّلِ الْمُتَوَكِّلُونَ Waqala ya baniyya la tadkhuloo min babin wahidin waodkhuloo min abwabin mutafarriqatin wama oghnee AAankum mina Allahi min shayin ini alhukmu illa lillahi AAalayhi tawakkaltu waAAalayhi falyatawakkali almutawakkiloona And he said: "O my sons! Do not enter by one gate, but enter by different gates, and I cannot avail you against Allâh at all. Verily, the decision rests only with Allâh. In Him, I put my trust and let all those that trust, put their trust in Him." Hilali & KhanAnd he said, "O my sons, do not enter from one gate but enter from different gates; and I cannot avail you against [the decree of] Allah at all. The decision is only for Allah; upon Him I have relied, and upon Him let those who would rely [indeed] rely." Saheeh Internationalபின்னும் (அவர்களை நோக்கி) "என் அருமை மக்களே! (எகிப்தில் நீங்கள் அனைவரும்) ஒரே வாசலில் நுழையாதீர்கள். வெவ்வேறு வாசல்கள் வழியாக (தனித் தனியாக) நுழையுங்கள். அல்லாஹ்வின் கட்டளையில் யாதொன்றையும் நான் உங்களுக்குத் தடுத்துவிட முடியாது. ஏனென்றால், எல்லா அதிகாரங்களும் அல்லாஹ்வுக்கேயன்றி (வேறெவருக்கும்) இல்லை. நான் அவனிடமே பொறுப்பை ஒப்படைத்தேன். பொறுப்பை ஒப்படைக்க விரும்பு பவர்களும் அவனிடமே பொறுப்பை ஒப்படைக்கவும்" என்றார். தாருல் ஹுதா(பின்னும்) அவர், “என் (அருமை) மக்களே! நீங்கள் (மிஸ்ருக்குள்) ஒரே வாசல் வழியாக நுழையாதீர்கள்; வெவ்வேறு வாசல்களின் வழியாக நுழையுங்கள்; அல்லாஹ்வின் விதிகளில் யாதொன்றையும் நான் உங்களை விட்டுத்தடுத்து விட முடியாது; (ஏனென்றால்) அதிகாரமெல்லாம் அல்லாஹ்வுக்கேயன்றி (வேறு எவருக்கும்) இல்லை; அவன் மீதே நான் முழுமையாக நம்பிக்கை கொண்டுள்ளேன். எனவே, முழுமையாக நம்பிக்கை வைப்பவர்கள் அவன் மீதே முழு நம்பிக்கைவைப்பார்களாக!” என்று கூறினார். ஜான் டிரஸ்ட் நிறுவனம்இன்னும் (அவர்களிடம்,) “என் (அருமை) மக்களே! (எகிப்தினுள்) ஒரே வாசலில் நுழையாதீர்கள், வெவ்வேறு வாசல்களில் நுழையுங்கள், அல்லாஹ்விடமிருந்து (ஏற்படவிருக்கும்) எந்த ஒன்றை விட்டும் உங்களை நான் தடுத்துவிடவும் முடியாது, (ஏனென்றால், சகல) அதிகாரம் அல்லாஹ்வுக்கேயன்றி (வேறெவருக்கும்) இல்லை, (உங்கள் யாவரையும் அவனிடமே ஒப்படைத்து முழுமையாக) அவன் மீது நம்பிக்கை வைத்துவிட்டேன், ஆகவே, முழுமையாக நம்பிக்கை வைக்கிறவர்கள் (இவ்வாறே) அவன் மிதே (முழுமையாக நம்பிக்கை வைக்கவும்” என்றார். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)And he said, “O my sons, do not enter all from one gate, but enter from different gates. I cannot avail you anything against [the decree of] Allah; the decision belongs to Allah alone. In Him I put my trust, and in Him let the faithful put their trust.” Ruwwad Center |
12:68 وَلَمَّا دَخَلُوا مِنْ حَيْثُ أَمَرَهُمْ أَبُوهُمْ مَا كَانَ يُغْنِي عَنْهُمْ مِنَ اللَّهِ مِنْ شَيْءٍ إِلَّا حَاجَةً فِي نَفْسِ يَعْقُوبَ قَضَاهَا ۚ وَإِنَّهُ لَذُو عِلْمٍ لِمَا عَلَّمْنَاهُ وَلَٰكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ Walamma dakhaloo min haythu amarahum aboohum ma kana yughnee AAanhum mina Allahi min shayin illa hajatan fee nafsi yaAAqooba qadaha wainnahu lathoo AAilmin lima AAallamnahu walakinna akthara alnnasi la yaAAlamoona And when they entered according to their father's advice, it did not avail them in the least against (the Will of) Allâh; it was but a need of Ya'qûb's (Jacob) inner self which he discharged. And verily, he was endowed with knowledge because We had taught him, but most men know not. Hilali & KhanAnd when they entered from where their father had ordered them, it did not avail them against Allah at all except [it was] a need within the soul of Jacob, which he satisfied. And indeed, he was a possessor of knowledge because of what We had taught him, but most of the people do not know. Saheeh International(எகிப்துக்குச் சென்ற) அவர்கள் தங்கள் தந்தையின் கட்டளைப்படி (வெவ்வேறு பாதைகள் வழியாக) நுழைந்ததனால் யஅகூபினுடைய மனதிலிருந்த ஒரு எண்ணத்தை, அவர்கள் நிறைவேற்றியதைத் தவிர, அல்லாஹ்வுடைய யாதொரு விஷயத்தையும் அவர்களை விட்டும் தடுக்கக்கூடியதாக இருக்க வில்லை. (ஏனென்றால், புன்யாமீனை அவர்கள் விட்டுவிட்டு வரும்படியே நேர்ந்தது.) எனினும், நிச்சயமாக நாம் அவருக்கு (யூஸுஃபும் புன்யாமீனும் உயிருடன் இருக்கின்றனர் என்ற விஷயத்தை) அறிவித்திருந்ததால், அவர் (அதனை) அறிந்த வராகவே இருந்தார். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (அதனை) அறியாதவர்களாகவே இருந்தனர். தாருல் ஹுதா(மிஸ்ரு சென்ற) அவர்கள் தம் தந்தை தங்களுக்குக் கட்டளையிட்ட படி நுழைந்ததனால் யஃகூபுடைய மனதிலிருந்து ஒரு நாட்டத்தை அவர்கள் நிறைவேற்றி வைத்தார்களே தவிர, அல்லாஹ்விடமிருந்து (வரக்கூடிய) எதனையும் அது அவர்களை விட்டும் தடுக்கக்கூடியதாக இருக்கவில்லை; நாம்அவருக்கு அறிவித்துக் கொடுத்தவற்றில் நிச்சயமாக அவர் அறிவு(த் தேர்ச்சி) பெற்றவராக இருக்கின்றார்; எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் இதை அறியமாட்டார்கள். ஜான் டிரஸ்ட் நிறுவனம்மேலும், அவர்களின் தந்தை அவர்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்கள் (எகிப்தில்) நுழைந்தபோது யாஃகூபினுடைய மனதிலிருந்த ஒரு தேவையை-அதை அவர் நிறைவேற்றி விட்டார் என்பதைத் தவிர, அல்லாஹ்விடமிருந்து (ஏற்படயிருந்த) எந்த ஒன்றையும் அவர்களைவிட்டு அவர் தடுத்துவிடுபவராக இருக்கவில்லை, மேலும், நாம் அவருக்குக் கற்றுக் கொடுத்தவற்றில் நிச்சயமாக அவர் அறிவுடையவராக இருந்தார், எனினும், மனிதர்களில் பெரும்பாலோர் (அதனை) அறியமாட்டார்கள். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)When they entered as their father had instructed them, it could not avail them against [the decree of] Allah whatsoever, yet a need in Jacob’s heart was satisfied. He was indeed a man of knowledge because of what We had taught him, but most people do not know. Ruwwad Center |
12:69 وَلَمَّا دَخَلُوا عَلَىٰ يُوسُفَ آوَىٰ إِلَيْهِ أَخَاهُ ۖ قَالَ إِنِّي أَنَا أَخُوكَ فَلَا تَبْتَئِسْ بِمَا كَانُوا يَعْمَلُونَ Walamma dakhaloo AAala yoosufa awa ilayhi akhahu qala innee ana akhooka fala tabtais bima kanoo yaAAmaloona And when they went in before Yûsuf (Joseph), he took his brother (Benjamin) to himself and said: "Verily, I am your brother, so grieve not for what they used to do." Hilali & KhanAnd when they entered upon Joseph, he took his brother to himself; he said, "Indeed, I am your brother, so do not despair over what they used to do [to me]." Saheeh Internationalஅவர்கள் அனைவரும் யூஸுஃபிடம் சென்றபொழுது, அவர் தன் சகோதரன் புன்யாமீனை(த் தனியாக அழைத்து) அமர்த்திக்கொண்டு (அவரை நோக்கி) "நிச்சயமாக நான் உங்களுடைய சகோதரன் (யூஸுஃப்)தான். எனக்கு இவர்கள் செய்தவற்றைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள்" என்று (இரகசியமாகக்) கூறினார். (அன்றி, உங்களை நிறுத்திக்கொள்ள நான் ஓர் உபாயம் செய்வேன் என்றார்.) தாருல் ஹுதா(பின்னர்) அவர்கள் யாவரும் யூஸுஃபின் பால் பிரவேசித்த போது அவர் தம் சகோதர(ன் புன்யாமீ)னைத் தம்முடன் அமரச் செய்து “நிச்சயமாக நாம் உம்முடைய சகோதரன் (யுஸுஃப்); அவர்கள் (நமக்குச்) செய்தவை பற்றி(யெல்லாம்) விசாரப்படாதீர்” என்று (இரகசியமாகக்) கூறினார். ஜான் டிரஸ்ட் நிறுவனம்மேலும், யூஸுஃபிடம் அவர்கள் நுழைந்தபொழுது, அவர்கள் சகோதர(ன் புன்யாமீ)னைத் (தனியாக அழைத்து) தன்பால் ஒதுக்கிக் கொண்டு “நிச்சயமாக நான்தான் உம்முடைய சகோதரன் (யூஸுஃப்) ஆகவே, (எனக்கு இவர்கள்) செய்தவற்றைப் பற்றி நீர் கவலைப்படாதீர்” எனறு (இரகசியமாகக்) கூறினார். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)When they came into Joseph’s presence, he called his brother [Benjamin] aside, and said, “I am indeed your brother, so do not be saddened by their past actions.” Ruwwad Center |
12:70 فَلَمَّا جَهَّزَهُمْ بِجَهَازِهِمْ جَعَلَ السِّقَايَةَ فِي رَحْلِ أَخِيهِ ثُمَّ أَذَّنَ مُؤَذِّنٌ أَيَّتُهَا الْعِيرُ إِنَّكُمْ لَسَارِقُونَ Falamma jahhazahum bijahazihim jaAAala alssiqayata fee rahli akheehi thumma aththana muaththinun ayyatuha alAAeeru innakum lasariqoona So when he had furnished them forth with their provisions, he put the (golden) bowl in his brother's bag. Then a crier cried: "O you (in) the caravan! Surely, you are thieves!" Hilali & KhanSo when he had furnished them with their supplies, he put the [gold measuring] bowl into the bag of his brother. Then an announcer called out, "O caravan, indeed you are thieves." Saheeh Internationalபின்னர், அவர்களுக்கு வேண்டிய தானியங்களைத் தயார்படுத்தியபோது தன்னுடைய சகோதர(ன் புன்யாமீ)னுடைய சுமையில் (ஒரு பொற்)குவளையை வைத்துவிட்டார். பின்னர் (அவர்கள் விடை பெற்றுச் சிறிது தூரம் செல்லவே) ஒருவன் அவர்களை (நோக்கி) "ஓ! ஒட்டகக் கூட்டத்தார்களே! நிச்சயமாக நீங்கள் திருடர்களாக இருக்கிறீர்கள்" என்று சப்தமிட்டான். தாருல் ஹுதாபின்னர், அவர்களுடைய பொருள்களைச் சித்தம் செய்து கொடுத்த போது, தம் சகோதரர் (புன்யாமீன்) உடைய சுமையில் (பானங்கள் பருகுவதற்கான ஒரு பொற்)குவளையை (எவரும் அறியாது) வைத்து விட்டார்; (அவர்கள் புறப்பட்டுச் செல்லலானதும் அரசாங்க) அறிவிப்பாளர் ஒருவர், “ஓ! ஒட்டகக் கூட்டத்தார்களே! நிச்சயமாக நீங்கள் திருடர்களே!” என்று கூறினார். ஜான் டிரஸ்ட் நிறுவனம்பின்னர், அவர்களுக்கு வேண்டிய தானியங்களைத் தயார் செய்தபொழுது தன்னுடைய சகோதர(ன் புன்யாமீ)னுடைய சுமையில் (ஒரு பொற்) குவளையை ஆக்கி விட்டார், பின்னர், (அவர்கள் சிறிது தூரம் செல்லவே) “ஓ! ஒட்டகக் கூட்டத்தார்களே! நிச்சயமாக நீங்கள் திருடர்களே” என்று ஓர் அறிவிப்பாளர் அறிவித்தார். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)When he prepared for them their rations, he placed the [royal] drinking vessel in his brother’s saddlebag. Then an announcer called out, “O people of the caravan, you must be thieves!” Ruwwad Center |
12:71 قَالُوا وَأَقْبَلُوا عَلَيْهِمْ مَاذَا تَفْقِدُونَ Qaloo waaqbaloo AAalayhim matha tafqidoona They, turning towards them, said: "What is it that you have lost?" Hilali & KhanThey said while approaching them, "What is it you are missing?" Saheeh Internationalஅதற்கவர்கள், இவர்களை முன்னோக்கி வந்து "நீங்கள் எதை இழந்துவிட்டீர்கள்?" என்று கேட்டார்கள். தாருல் ஹுதா(அதற்கு) அவர்கள் இவர்களை முன்னோக்கி வந்து, “நீங்கள் எதனை இழந்து விட்டீர்கள்” எனக் கேட்டார்கள். ஜான் டிரஸ்ட் நிறுவனம்அ(தற்க)வர்கள், இவர்களை முன்னோக்கி வந்து “நீங்கள் எதை இழந்து விட்டீர்கள்?” என்று கேட்டார்கள். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)They said as they turned back, “What are you missing?” Ruwwad Center |
12:72 قَالُوا نَفْقِدُ صُوَاعَ الْمَلِكِ وَلِمَنْ جَاءَ بِهِ حِمْلُ بَعِيرٍ وَأَنَا بِهِ زَعِيمٌ Qaloo nafqidu suwaAAa almaliki waliman jaa bihi himlu baAAeerin waana bihi zaAAeemun They said: "We have lost the (golden) bowl of the king and for him who produces it is (the reward of) a camel load; and I will be bound by it." Hilali & KhanThey said, "We are missing the measure of the king. And for he who produces it is [the reward of] a camel's load, and I am responsible for it." Saheeh Internationalஅதற்கவர்கள், "அரசருடைய (அளவு) மரக்காலை நாங்கள் இழந்து விட்டோம். அதனை எவர் (தேடிக்) கொடுத்தபோதிலும் அவருக்கு ஒரு ஒட்டகைச் சுமை (தானியம் வெகுமதி) உண்டு. இதற்கு நானே பொறுப்பாளி" என்று (அவர்களில் ஒருவன்) கூறினான். தாருல் ஹுதா“நாங்கள் அரசருடைய (அளவு) மரக்காலை இழந்து விட்டோம்; அதனை எவர்கொண்டு வந்தாலும், அவருக்கு ஓர் ஒட்டகச் சுமை (தானியம் சன்மானமாக) உண்டு; இதற்கு நானே பொறுப்பாளி” என்று கூறினார்கள். ஜான் டிரஸ்ட் நிறுவனம்அ(தற்க)வர்கள், “அரசருடைய (ஒரு பொற்) குவளையை நாங்கள் இழந்துவிட்டோம், மேலும், அதனை எவர் (தேடிக்) கொண்டுவந்தபோதிலும் அவருக்கு ஓர் ஒட்டகச் சுமை(தானியம் வெகுமதி) உண்டு, இதற்கு நானே பொறுப்பாளியாவேன்” என்று (அவர்களில் ஒருவன்) கூறினான். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)They said, “We are missing the king’s measuring cup. Whoever brings it will have a camel-load [of grain]; and I guarantee it.” Ruwwad Center |
12:73 قَالُوا تَاللَّهِ لَقَدْ عَلِمْتُمْ مَا جِئْنَا لِنُفْسِدَ فِي الْأَرْضِ وَمَا كُنَّا سَارِقِينَ Qaloo taAllahi laqad AAalimtum ma jina linufsida fee alardi wama kunna sariqeena They said: "By Allâh! Indeed you know that we came not to make mischief in the land, and we are no thieves!" Hilali & KhanThey said, "By Allah, you have certainly known that we did not come to cause corruption in the land, and we have not been thieves." Saheeh Internationalஅதற்கு இவர்கள், "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் இவ்வூரில் விஷமம் செய்வதற்காக வரவில்லை என்பதை நீங்களும் நன்கறிவீர்கள். அன்றி, நாங்கள் திருடுபவர்களும் அல்ல" என்று கூறினார்கள். தாருல் ஹுதா(அதற்கு) அவர்கள், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக, நாங்கள் நாட்டிலே குழப்பம் உண்டாக்க வரவில்லை என்பதை நீங்கள் நிச்சயமாக அறிவீர்கள்; நாங்கள் திருடர்களுமல்லர்” என்றார்கள். ஜான் டிரஸ்ட் நிறுவனம்அ(தற்க)வர்கள் “அல்லாஹ்வின்மீது சத்தியமாக நாங்கள் (இப்)பூமியில் குழப்பம் செய்வதற்காக வரவில்லை என்பதைத் திட்டமாக நீங்களும், நன்கறிந்திருக்கிறீர்கள், அன்றியும், நாங்கள் திருடர்களாக இருந்ததுமில்லை” என்று கூறினார்கள். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)They said, “By Allah, you know well that we did not come to spread corruption in the land, nor are we thieves.” Ruwwad Center |
12:74 قَالُوا فَمَا جَزَاؤُهُ إِنْ كُنْتُمْ كَاذِبِينَ Qaloo fama jazaohu in kuntum kathibeena They [Yûsuf's (Joseph's) men] said: "What then shall be the penalty of him, if you are (proved to be) liars." Hilali & KhanThe accusers said, "Then what would be its recompense if you should be liars?" Saheeh Internationalஅதற்கு அவர்கள் "நீங்கள் (இதில்) பொய்யர்களாக இருந்தால் அதற்குரிய தண்டனை என்ன?" என்று கேட்டனர். தாருல் ஹுதா(அதற்கு) அவர்கள், “நீங்கள் பொய்யர்களாக இருந்தால், அதற்குரிய தண்டனை என்ன?” என்று கேட்டார்கள். ஜான் டிரஸ்ட் நிறுவனம்அ(தற்கவர்கள், “நீங்கள் (இதில்) பொய்யர்களாயிருந்தால், அதற்குரிய தண்டனை என்ன?” என்று கேட்டனர். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)They said, “What should the punishment be, if you are liars?” Ruwwad Center |
12:75 قَالُوا جَزَاؤُهُ مَنْ وُجِدَ فِي رَحْلِهِ فَهُوَ جَزَاؤُهُ ۚ كَذَٰلِكَ نَجْزِي الظَّالِمِينَ Qaloo jazaohu man wujida fee rahlihi fahuwa jazaohu kathalika najzee alththalimeena They [Yûsuf's (Joseph's) brothers] said: "His penalty should be that he, in whose bag it is found, should be held for the punishment (of the crime). Thus we punish the Zâlimûn (wrongdoers)!" Hilali & Khan[The brothers] said, "Its recompense is that he in whose bag it is found - he [himself] will be its recompense. Thus do we recompense the wrongdoers." Saheeh Internationalஅதற்கவர்கள் "எவனுடைய சுமையில் அது காணப்படுகிறதோ அவனே அதற்குரிய தண்டனையாவான். (ஆகவே, அவனை அடிமையாக வைத்துக் கொள்ளலாம். திருடும்) அநியாயக்காரர்களுக்கு இவ்வாறே நாங்கள் தண்டனை அளிப்போம்" என்று கூறினார்கள். தாருல் ஹுதாஅதற்குரிய தண்டனையாவது, “எவருடைய சுமையில் அது காணப்படுகிறதோ (அவரை பிடித்து வைத்துக் கொள்வதே) அதற்குத் தண்டனை; அநியாயம் செய்வோரை இவ்வாறே நாங்கள் தண்டிக்கிறோம்” என்று (அந்த சகோதரர்கள்) கூறினார்கள். ஜான் டிரஸ்ட் நிறுவனம்“இதற்குரிய தண்டனையானது, எவனுடைய சுமையில் அது காணப்படுகிறதோ அப்போது அவனே அதற்குரிய தண்டனையாகும், அநியாயக்காரர்களுக்கு இவ்வாறே நாங்கள் தண்டனை அளிப்போம்? என்று அவர்கள் கூறினார்கள். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)They said, “The punishment is that the one in whose saddlebag it is found should be enslaved in recompense. This is how we punish the wrongdoers.” Ruwwad Center |
12:76 فَبَدَأَ بِأَوْعِيَتِهِمْ قَبْلَ وِعَاءِ أَخِيهِ ثُمَّ اسْتَخْرَجَهَا مِنْ وِعَاءِ أَخِيهِ ۚ كَذَٰلِكَ كِدْنَا لِيُوسُفَ ۖ مَا كَانَ لِيَأْخُذَ أَخَاهُ فِي دِينِ الْمَلِكِ إِلَّا أَنْ يَشَاءَ اللَّهُ ۚ نَرْفَعُ دَرَجَاتٍ مَنْ نَشَاءُ ۗ وَفَوْقَ كُلِّ ذِي عِلْمٍ عَلِيمٌ Fabadaa biawAAiyatihim qabla wiAAai akheehi thumma istakhrajaha min wiAAai akheehi kathalika kidna liyoosufa ma kana liyakhutha akhahu fee deeni almaliki illa an yashaa Allahu narfaAAu darajatin man nashao wafawqa kulli thee AAilmin AAaleemun So he [Yûsuf (Joseph)] began (the search) in their bags before the bag of his brother. Then he brought it out of his brother's bag. Thus did We plan for Yûsuf (Joseph). He could not take his brother by the law of the king (as a slave), except that Allâh willed it. (So Allâh made the brothers to bind themselves with their way of "punishment, i.e. enslaving of a thief.") We raise to degrees whom We will, but over all those endowed with knowledge is the All-Knowing (Allâh). Hilali & KhanSo he began [the search] with their bags before the bag of his brother; then he extracted it from the bag of his brother. Thus did We plan for Joseph. He could not have taken his brother within the religion of the king except that Allah willed. We raise in degrees whom We will, but over every possessor of knowledge is one [more] knowing. Saheeh Internationalபின்னர் தன் சகோதர(ன் புன்யாமீ)னின் பொதியி(னைச் சோதிப்பத)ற்கு முன்னதாக மற்றவர்களின் பொதிகளைச் சோதிக்க ஆரம்பித்தார். (அவற்றில் அது கிடைக்காமல் போகவே) பின்னர் தன் சகோதரனின் மூட்டையிலிருந்து அதனை வெளிப்படுத்தினார். (தன் சகோதரனை எடுத்துக் கொள்ள) யூஸுஃபுக்கு இந்த உபாயத்தை நாம் கற்பித்தோம். அல்லாஹ் நாடினாலன்றி அவர் தன் சகோதரனை எடுத்துக்கொள்ள (எகிப்து) அரசரின் சட்டப்படி முடியாதிருந்தது. நாம் விரும்பியவர்களின் பதவிகளை உயர்த்துகிறோம். ஒவ்வொரு கல்விமானுக்கும் மேலான ஒரு கல்விமான் (இருந்தே) இருக்கிறான். (ஆனால், நாமோ அனைவரையும் விட மேலான கல்விமான்.) தாருல் ஹுதாஆகவே அவர் தம் சகோதர(ன் புன்யாமீ)னின் பொதி(யைச் சோதி)க்கு முன்னே, அவர்களுடைய பொதிகளை (சோதிக்க) ஆரம்பித்தார்; பின்பு அதனை தம் (சொந்த) சகோதரனின் பொதியிலிருந்து வெளிப்படுத்தினார்; இவ்வாறாக யூஸுஃபுக்காக நாம் ஓர் உபாயம் செய்து கொடுத்தோம்; அல்லாஹ் நாடினாலன்றி, அவர் தம் சகோதரனை எடுத்துக் கொள்ள அரசரின் சட்டப்படி இயலாதிருந்தார் - நாம் நாடியவர்களின் பதவிகளை நாம் உயர்த்துகின்றோம்; கல்வி அறிவுடைய ஒவ்வொருவருக்கும் மேலான அறிந்த ஒருவன் இருக்கவே செய்கிறான்! ஜான் டிரஸ்ட் நிறுவனம்ஆகவே, தன் சகோதர(ன் புன்யாமீனி)ன் பொதிக்கு முன்னதாக மற்றவர்களின் பொதிகளைச் சோதிக்க ஆரம்பித்தார், பின்னர் தன் சகோதரனின் பொதியிலிருந்து அதனை வெளிப்படுத்தினார், யூஸுஃபுக்கு இவ்வுபாயத்தை நாம் ஏற்படுத்திக்கொடுத்தோம், அல்லாஹ் நாடினாலன்றி, அவர் தன் சகோதரனை எடுத்துக் கொள்ள (எகிப்து) அரசரின் சட்டப்படி முடியாதிருந்தார், நாம் நாடியவர்களின் பதவிகளை உயர்த்துகிறோம், அறிவுடைய ஒவ்வொருவருக்கும் மேலாக (அவரைவிட) மிக அறிந்தவர் இருக்கிறார். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)So he began searching their bags before his brother’s bag, then he brought it out of his brother’s bag. This is how We planned for Joseph; he could not have detained his brother under the King’s law, unless Allah so willed. We raise in ranks whom We will, but above each one who possesses knowledge is the All-Knowing One. Ruwwad Center |
12:77 قَالُوا إِنْ يَسْرِقْ فَقَدْ سَرَقَ أَخٌ لَهُ مِنْ قَبْلُ ۚ فَأَسَرَّهَا يُوسُفُ فِي نَفْسِهِ وَلَمْ يُبْدِهَا لَهُمْ ۚ قَالَ أَنْتُمْ شَرٌّ مَكَانًا ۖ وَاللَّهُ أَعْلَمُ بِمَا تَصِفُونَ Qaloo in yasriq faqad saraqa akhun lahu min qablu faasarraha yoosufu fee nafsihi walam yubdiha lahum qala antum sharrun makanan waAllahu aAAlamu bima tasifoona They [Yûsuf's (Joseph's) brothers] said: "If he steals, there was a brother of his [Yûsuf (Joseph)] who did steal before (him)." But these things did Yûsuf (Joseph) keep in himself, revealing not the secrets to them. He said (within himself): "You are in worst case, and Allâh is the Best Knower of that which you describe!" Hilali & KhanThey said, "If he steals - a brother of his has stolen before." But Joseph kept it within himself and did not reveal it to them. He said, "You are worse in position, and Allah is most knowing of what you describe." Saheeh International(புன்யாமீனின் பொதியில் அளவு பாத்திரத்தைக் கண்ட யூஸுஃபின் மற்ற சகோதரர்கள்) அவன் (அதனைத்) திருடியிருந்தால் அவனுடைய சகோதரன் (யூஸுஃபும்) இதற்கு முன் நிச்சயமாகத் திருடியே இருப்பான் என்று (எப்ரூ மொழியில் தங்களுக்குள்) கூறிக்கொண்டனர். (இதனைச் செவியுற்ற எப்ரூ மொழி அறிந்த) யூஸுஃப் (அதன் உண்மையை) அவர்களுக்கு வெளியாக்காது, அதைத் தன் மனத்திற்குள் வைத்துக்கொண்டு "நீங்கள் மிகப் பொல்லாதவர்கள். (அவருடைய சகோதரர் திருடியதாக) நீங்கள் கூறுகிறீர்களே. அதனை அல்லாஹ் நன்கறிவான்" என்று கூறிவிட்டார். தாருல் ஹுதா(அப்போது) அவர்கள், “இவன் (அதைத்) திருடியிருந்தால் இவனுடைய சகோதரன் (யூஸுஃபும்) முன்னால் நிச்சயமாக திருடியிருக்கிறான்” என்று (தங்களுக்குள்) கூறிக்கொண்டார்கள்; (இச்செய்திகளைச் செவியேற்றும்) அவர்களிடம் வெளியிடாது யூஸுஃப் தம் மனதுக்குள் மறைத்து வைத்துக் கொண்டார்; அவர் “நீங்கள் தரத்தில் இன்னும் தீயவர்கள்; (இவர் சகோதரரும் திருடியிருப்பார் என்று) நீங்கள் வர்ணிக்கிறீர்களே அதை அல்லாஹ் நன்றாக அறிவான்” என்று (தமக்குள்ளே) சொல்லிக் கொண்டார். ஜான் டிரஸ்ட் நிறுவனம்(இவ்வாறு கண்ட யூஸுஃபின் மற்ற சகோதரர்கள்,)” அவன் (அதனைத் திருடியிருந்தால், அவனுடைய சகோதரன் (யூஸுஃபும்) இதற்கு முன் நிச்சயமாக திருடியே இருப்பான்” என்று கூறிக் கொண்டனர், யூஸுஃப் அவர்களுக்கு வெளியாக்காது அவர் அதைத் தன்மனதுக்குள் மறைத்து வைத்துக்கொண்டு “நீங்கள் இடத்தால் தீயவர்கள், (இவர் சகோதரரும் திருடியதாக) நீங்கள் வர்ணிக்கிறீர்களே அதனை அல்லாஹ் மிக்க அறிந்தவன்” என்று (மனதில்) கூறிக் கொண்டார். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)They said, “If he steals, then it was his brother [Joseph] who stole before.” Joseph kept it to himself and did not reveal it to them, and said [in his heart], “You are in a far worse position; and Allah knows best the truth of what you say.” Ruwwad Center |
12:78 قَالُوا يَا أَيُّهَا الْعَزِيزُ إِنَّ لَهُ أَبًا شَيْخًا كَبِيرًا فَخُذْ أَحَدَنَا مَكَانَهُ ۖ إِنَّا نَرَاكَ مِنَ الْمُحْسِنِينَ Qaloo ya ayyuha alAAazeezu inna lahu aban shaykhan kabeeran fakhuth ahadana makanahu inna naraka mina almuhsineena They said: "O ruler of the land! Verily, he has an old father (who will grieve for him); so take one of us in his place. Indeed we think that you are one of the Muhsinûn (good-doers. See the footnote of V.9:120)." Hilali & KhanThey said, "O 'Azeez, indeed he has a father [who is] an old man, so take one of us in place of him. Indeed, we see you as a doer of good." Saheeh Internationalஅதற்கவர்கள் (யூஸுஃபை நோக்கி எகிப்தின் அதிபதியாகிய) "அஜீஸை! (அவரைப் பற்றி கவலைப்படக்கூடிய) முதிர்ந்த வயதுடைய தந்தை அவருக்கு உண்டு. (நீங்கள் அவரைப் பிடித்துக் கொண்டால் இத்துக்கத்தால் அவர் இறந்துவிடுவார்.) ஆகவே, அவருக்குப் பதிலாக எங்களில் ஒருவரை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். நிச்சயமாக நாம் உங்களைப் பெரும் உபகாரிகளில் ஒருவராகவே காண்கிறோம்" என்று கூறினார்கள். தாருல் ஹுதாஅவர்கள் (யூஸுஃபை நோக்கி), (இந்நாட்டின் அதிபதி) அஜீஸே! நிச்சயமாக இவருக்கு முதிர்ச்சியடைந்துள்ள வயோதிகத் தந்தை இருக்கிறார். எனவே அவருடைய இடத்தில் எங்களில் ஒருவரை நீர் எடுத்துக் கொள்ளும்; நிச்சயமாக நாங்கள் உம்மைப் பரோபகாரம் செய்வேரில் ஒருவராகவே காண்கிறோம்” என்று கூறினார்கள். ஜான் டிரஸ்ட் நிறுவனம்அ(தற்க)வர்கள் (யூஸுஃபிடம், எகிப்திய அரசின்) “அமைச்சரே! நிச்சயமாக முதிர்ச்சியடைந்த வயோதிகரான தந்தை அவருக்கு இருக்கிறார், ஆகவே அவருக்குப் பதிலாக எங்களில் ஒருவரை நீர் எடுத்துக் கொள்வீராக! நிச்சயமாக நாம் உம்மை உபகாரம் செய்பவர்களில் (ஒருவராகக்)காண்கிறோம்” என்று கூறினார்கள். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)They said, “O chief minister, he has an elderly and vulnerable father, so take one of us instead of him, for we see that you are a kind man.” Ruwwad Center |
12:79 قَالَ مَعَاذَ اللَّهِ أَنْ نَأْخُذَ إِلَّا مَنْ وَجَدْنَا مَتَاعَنَا عِنْدَهُ إِنَّا إِذًا لَظَالِمُونَ Qala maAAatha Allahi an nakhutha illa man wajadna mataAAana AAindahu inna ithan lathalimoona He said: "Allâh forbid, that we should take anyone but him with whom we found our property. Indeed (if we did so), we should be Zâlimûn (wrong doers)." Hilali & KhanHe said, "[I seek] the refuge of Allah [to prevent] that we take except him with whom we found our possession. Indeed, we would then be unjust." Saheeh Internationalஅதற்கவர், எவரிடம் நம்முடைய பொருள் காணப்பட்டதோ அவரை அன்றி (மற்றெவரையும்) பிடித்துக்கொள்ளாது அல்லாஹ் என்னை காப்பானாக! (மற்றெவரையும் பிடித்துக்கொண்டால்) நிச்சயமாக நான் பெரும் அநியாயக்காரனாகி விடுவேன்" என்று கூறிவிட்டார். தாருல் ஹுதாஅதற்கவர், “எங்கள் பொருளை எவரிடம் நாங்கள் கண்டோமோ, அவரையன்றி (வேறு ஒருவரை) நாம் எடுத்துக் கொள்வதிலிருந்து அல்லாஹ் காப்பாற்றுவானாக! (அப்படிச் செய்தால்) நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்களாகி விடுவோம்” என்று கூறினார்கள். ஜான் டிரஸ்ட் நிறுவனம்அ(தற்க)வர், “எம்முடைய பொருளை எவரிடம் நாங்கள் பெற்றுக் கொண்டோமோ அவரைத் தவிர, (மற்றெவரையும்) பிடித்துக் கொள்ளாது (எங்களை) அல்லாஹ் காப்பாற்றுவானாக! (மற்றெவரையும் பிடித்துக் கொண்டால்) அச்சமயத்தில் நிச்சயமாக நாம் அநியாயக்காரர்களாகி விடுவோம்” என்று கூறி விட்டார். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Joseph said, “Allah forbid that we should take except the one with whom we found our property, for we would then be unjust.” Ruwwad Center |
12:80 فَلَمَّا اسْتَيْأَسُوا مِنْهُ خَلَصُوا نَجِيًّا ۖ قَالَ كَبِيرُهُمْ أَلَمْ تَعْلَمُوا أَنَّ أَبَاكُمْ قَدْ أَخَذَ عَلَيْكُمْ مَوْثِقًا مِنَ اللَّهِ وَمِنْ قَبْلُ مَا فَرَّطْتُمْ فِي يُوسُفَ ۖ فَلَنْ أَبْرَحَ الْأَرْضَ حَتَّىٰ يَأْذَنَ لِي أَبِي أَوْ يَحْكُمَ اللَّهُ لِي ۖ وَهُوَ خَيْرُ الْحَاكِمِينَ Falamma istayasoo minhu khalasoo najiyyan qala kabeeruhum alam taAAlamoo anna abakum qad akhatha AAalaykum mawthiqan mina Allahi wamin qablu ma farrattum fee yoosufa falan abraha alarda hatta yathana lee abee aw yahkuma Allahu lee wahuwa khayru alhakimeena So, when they despaired of him, they held a conference in private. The eldest among them said: "Know you not that your father did take an oath from you in Allâh's Name, and before this you did fail in your duty with Yûsuf (Joseph)? Therefore I will not leave this land until my father permits me, or Allâh decides my case (by releasing Benjamin) and He is the Best of the judges. Hilali & KhanSo when they had despaired of him, they secluded themselves in private consultation. The eldest of them said, "Do you not know that your father has taken upon you an oath by Allah and [that] before you failed in [your duty to] Joseph? So I will never leave [this] land until my father permits me or Allah decides for me, and He is the best of judges. Saheeh Internationalஅவரிடம் அவர்கள் நம்பிக்கையிழந்து விடவே, அவர்கள் (தங்களுக்குள்) தனித்து ஆலோசனை செய்தார்கள். அவர்களில் பெரியவர் (மற்றவர்களை நோக்கி) "உங்கள் தந்தை உங்களிடம் அல்லாஹ்வின் மீது உறுதியாக சத்தியம் வாங்கியிருப்பதை நீங்கள் அறியவில்லையா? இதற்கு முன்னர் நீங்கள் யூஸுஃப் விஷயத்தில் செய்த துரோகம் வேறு இருக்கிறது. ஆகவே, என் தந்தை எனக்கு அனுமதியளிக்கும் வரையில் அல்லது அல்லாஹ் எனக்கு யாதொரு தீர்ப்பளிக்கும் வரையில் இங்கிருந்து நான் அகல மாட்டேன்; தீர்ப்பளிப்பவர்களில் எல்லாம் அவன்தான் மிக்க மேலானவன்" என்று கூறினார். தாருல் ஹுதாஎனவே அவரிடம் அவர்கள் நம்பிக்கை இழந்து விடவே, அவர்கள் (தமக்குள்) தனித்து ஆலோசனை செய்தார்கள். அவர்களுக்குள் பெரியவர் சொன்னார்: நிச்சயமாக உங்களுடைய தந்தை உங்களிடமிருந்து அல்லாஹ்வின் மீது (ஆணையிட்டு) வாக்குறுதி வாங்கியிருக்கிறார் என்பதையும் முன்னர் யூஸுஃப் சம்பந்தமாக நீங்கள் பெருங்குறை செய்து விட்டீர்கள் என்பதையும் நீங்கள் அறியவில்லையா? ஆகவே, என் தந்தை எனக்கு அனுமதி அளிக்கும் வரை, அல்லது அல்லாஹ் எனக்கு (இது பற்றி) ஏதாவது தீர்ப்புச் செய்யும் வரை நான் இந்த பூமியை விட்டு ஒரு போதும் அகலவே மாட்டேன்; தீர்ப்பளிப்போரில் அவன் தான் மிகவும் மேலானவன். ஜான் டிரஸ்ட் நிறுவனம்அவரிடம் அவர்கள் நம்பிக்கை இழந்துவிடவே, அவர்கள் (தங்களுக்குள்) தனித்து ஆலோசனை செய்தார்கள், அவர்களில் பெரியவர், (மற்றவர்களிடம்), “உங்கள் தந்தை உங்களிடம் அல்லாஹ்வின் உறுதிமொழியை வாங்கியிருப்பதையும், இதற்கு முன்னர் நீங்கள் யூஸுஃப் விஷயத்தில் செய்த பெருங்குறையையும் நீங்கள் அறியவில்லையா? ஆகவே, என் தந்தை எனக்கு அனுமதியளிக்கும் வரையில், அல்லது அல்லாஹ் எனக்கு தீர்ப்பளிக்கும் வரையில் (நான் இருக்கும்) இப்பூமியிலிருந்து நான் அகலவே மாட்டேன், தீர்ப்பளிப்போரில் அவன்தான் மிக்க மேலானவன்” என்று கூறினார். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)When they lost hope in him, they conferred privately. The eldest of them said, “Do you not know that your father has taken from you a solemn pledge by Allah, and before this you failed with regard to Joseph? Therefore I will never leave this land until my father gives me permission or Allah decides for me, for He is the Best of Judges. Ruwwad Center |
12:81 ارْجِعُوا إِلَىٰ أَبِيكُمْ فَقُولُوا يَا أَبَانَا إِنَّ ابْنَكَ سَرَقَ وَمَا شَهِدْنَا إِلَّا بِمَا عَلِمْنَا وَمَا كُنَّا لِلْغَيْبِ حَافِظِينَ IrjiAAoo ila abeekum faqooloo ya abana inna ibnaka saraqa wama shahidna illa bima AAalimna wama kunna lilghaybi hafitheena "Return to your father and say, 'O our father! Verily, your son (Benjamin) has stolen, and we testify not except according to what we know, and we could not know the Unseen! Hilali & KhanReturn to your father and say, "O our father, indeed your son has stolen, and we did not testify except to what we knew. And we were not witnesses of the unseen, Saheeh International(மேலும் அவர்களை நோக்கி) "நீங்கள் (அனைவரும்) உங்கள் தந்தையிடம் திரும்பச் சென்று, எங்கள் தந்தையே! உங்கள் மகன் (புன்யாமீன்) மெய்யாகவே திருடிவிட்டான். உண்மையாகவே எங்களுக்குத் தெரிந்ததையே அன்றி (வேறொன்றும்) கூறவில்லை. மறைவாக நடைபெற்ற (இக்காரியத்)தில் இருந்து (அவரை) பாதுகாத்துக் கொள்ள எங்களால் முடியாமலாகி விட்டது என்றும்; தாருல் ஹுதாஆகவே, “நீங்கள் உங்கள் தந்தையாரிடம் திரும்பிச் சென்று, “எங்களுடைய தந்தையே! உங்கள் மகன் நிச்சயமாக திருடியிருக்கிறான்; நாங்கள் உறுதியாக அறிந்ததைத் தவிர (வேறெதையும்) கூறவில்லை; மேலும், நாங்கள் மறைவானவற்றின் காவலர்களாகவும் இருக்கவில்லை என்று கூறுங்கள்; ஜான் டிரஸ்ட் நிறுவனம்(மேலும், அவர்களிடம்) “நீங்கள் (யாவரும்) உங்கள் தந்தையிடம் திரும்பிச் சென்று எங்கள் தந்தையே! உங்கள் மகன் (புன்யமீன்) நிச்சயமாகத் திருடி விட்டான், உண்மையாகவே நாங்கள் கண்டதையே அன்றி (வேறெதையும்) நாங்கள் கூறவில்லை, இன்னும், மறைவானவற்றின் பாதுகாவலர்களாகவும், நாங்கள் இருக்கவில்லை” என்று கூறுங்கள். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Go back to your father and say, ‘O our father, your son has committed theft, and we did not tell you except what we saw, and we had no knowledge of the unseen. Ruwwad Center |
12:82 وَاسْأَلِ الْقَرْيَةَ الَّتِي كُنَّا فِيهَا وَالْعِيرَ الَّتِي أَقْبَلْنَا فِيهَا ۖ وَإِنَّا لَصَادِقُونَ Waisali alqaryata allatee kunna feeha waalAAeera allatee aqbalna feeha wainna lasadiqoona "And ask (the people of) the town where we have been, and the caravan in which we returned; and indeed we are telling the truth." Hilali & KhanAnd ask the city in which we were and the caravan in which we came - and indeed, we are truthful," Saheeh International(நாங்கள் சொல்வதை நீங்கள் நம்பாவிட்டால் நாங்கள் சென்றிருந்த அவ்வூராரையும் எங்களுடன் வந்த ஒட்டகக் கூட்டத்தினரையும் நீங்கள் கே(ட்டறிந்து கொள்)ளுங்கள். நிச்சயமாக நாங்கள் உண்மையே கூறுகிறோம்" (என்று சொல்லும்படியாகக் கூறி அவர்களை அனுப்பிவிட்டு, தான் மட்டும் யூஸுஃபிடமே இருந்து கொண்டார்.) தாருல் ஹுதா“நாங்கள் தங்கியிருந்த ஊர் வாசிகளையும், நாங்கள் முன்னோக்கி(ச் சேர்ந்து) வந்த ஒட்டகக் கூட்டத்தினரையும் நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள் - நிச்சயமாக நாங்கள் உண்மையே சொல்லுகின்றோம்“ (என்றும் சொல்லுங்கள்” என்று கூறித் தந்தையாரிடம் அனுப்பி வைத்தார்). ஜான் டிரஸ்ட் நிறுவனம்“(எங்கள் கூற்றை நீங்கள் நம்பாவிட்டால்,) நாங்கள் தங்கியிருந்த அவ்வூராரையும், எங்களுடன் வந்த ஒட்டகைக் கூட்டத்தினரையும் நீங்கள் கே(ட்டறிந்து கொள்)ளுங்கள், நிச்சயமாக நாங்கள் உண்மையாளர்களாவோம்” (என்று சொல்லுங்கள்), என்று கூறியனுப்பினார். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Ask [the people of] the town where we were and the caravan we came with, and we are surely telling the truth.” Ruwwad Center |
12:83 قَالَ بَلْ سَوَّلَتْ لَكُمْ أَنْفُسُكُمْ أَمْرًا ۖ فَصَبْرٌ جَمِيلٌ ۖ عَسَى اللَّهُ أَنْ يَأْتِيَنِي بِهِمْ جَمِيعًا ۚ إِنَّهُ هُوَ الْعَلِيمُ الْحَكِيمُ Qala bal sawwalat lakum anfusukum amran fasabrun jameelun AAasa Allahu an yatiyanee bihim jameeAAan innahu huwa alAAaleemu alhakeemu He [Ya'qûb (Jacob)] said: "Nay, but your own selves have beguiled you into something. So patience is most fitting (for me). May be Allâh will bring them all (back) to me. Truly, He! Only He is All-Knowing, the All-Wise." Hilali & Khan[Jacob] said, "Rather, your souls have enticed you to something, so patience is most fitting. Perhaps Allah will bring them to me all together. Indeed it is He who is the Knowing, the Wise." Saheeh International(ஊர் திரும்பிய மற்ற சகோதரர்கள் இதனைத் தங்கள் தந்தை யஅகூப் நபியிடம் கூறவே, அதற்கவர் "நீங்கள் கூறுவது) சரியன்று! உங்கள் மனம், ஒரு (தவறான) விஷயத்தைச் செய்யும்படி உங்களைத் தூண்டிவிட்டது. ஆகவே, (எவரையும் குறைகூறாது) சகித்துக் கொள்வதே மிக்க நன்று. அல்லாஹ் அவர்கள் அனைவரையும் என்னிடம் கொண்டு வந்து சேர்த்துவிடுவான். நிச்சயமாக அவன் அனைத்தையும் அறிந்தவனும், ஞானமுடைய வனாகவும் இருக்கின்றான்" என்று கூறிவிட்டு, தாருல் ஹுதா(ஊர் திரும்பியவர்கள் தம் தந்தையிடம் அவ்வாறே சொல்லவும்) “இல்லை! உங்களுடைய மனங்கள் (இவ்வாறே ஒரு தவறான) விஷயத்தைச் செய்யும்படித் தூண்டி விட்டிருக்கின்றன; ஆயினும், அழகான பொறுமையே (எனக்கு உகந்ததாகும்); அல்லாஹ் அவர்களனைவரையும் என்னிடம் கொண்டுவந்து சேர்க்கப் போதுமானவன்; நிச்சயமாக அவன் மிகவும் அறிந்தவனாகவும், மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்” என்று கூறினார். ஜான் டிரஸ்ட் நிறுவனம்(ஊர்) திரும்பியவர்கள் நடந்தவற்றைத் தங்கள் தந்தையிடம் கூறவே அதற்கவர், “நீங்கள் கூறுவது) சரியல்ல! உங்கள் மனங்கள் ஒரு (தவறான) விஷயத்தைச் செய்யும்படி உங்களைத் தூண்டிவிட்டன, ஆகவே, அழகான பொறுமையைக் கைக்கொள்வதே மிக்க நன்று, அல்லாஹ் அவர்கள் யாவரையும் என்னிடம் கொண்டுவந்து சேர்த்து வைக்கப் போதுமானவன், நிச்சயமாக அவனே யாவற்றையும் அறிந்தோன், தீர்க்கமான அறிவுடையோன்” என்று கூறினார். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)He said, “No, but your souls have enticed you to commit something. But I will bear this with beautiful patience; perhaps Allah will bring them all back to me, for He is the All-Knowing, the All-Wise.” Ruwwad Center |
12:84 وَتَوَلَّىٰ عَنْهُمْ وَقَالَ يَا أَسَفَىٰ عَلَىٰ يُوسُفَ وَابْيَضَّتْ عَيْنَاهُ مِنَ الْحُزْنِ فَهُوَ كَظِيمٌ Watawalla AAanhum waqala ya asafa AAala yoosufa waibyaddat AAaynahu mina alhuzni fahuwa katheemun And he turned away from them and said: "Alas, my grief for Yûsuf (Joseph)!" And he lost his sight because of the sorrow that he was suppressing. Hilali & KhanAnd he turned away from them and said, "Oh, my sorrow over Joseph," and his eyes became white from grief, for he was [of that] a suppressor. Saheeh Internationalஅவர்களை விட்டு விலகிச் சென்று, "யூஸுஃபைப் பற்றி என்னுடைய துக்கமே!" என்று அவர் சப்தமிட்டார். அவரது இரு கண்களும் துக்கத்தால் (அழுதழுது) வெளுத்துப் பூத்துப்போயின. பின்னர், அவர் தன் கோபத்தை விழுங்கி அடக்கிக் கொண்டார். தாருல் ஹுதாபின்னர் அவர்களை விட்டுத் திரும்பி “யூஸுஃபைப் பற்றி (எனக்கு ஏற்பட்டுள்ள) துக்கமே!” என்று (வியாகூலப்பட்டுக்) கூறினார்; துக்கத்தால் (அழுது அழுது) அவருடைய இரண்டு கண்களும் வெளுத்து(ப் பஞ்சடைந்து) விட்டன - பிறகு அவர் (தம் துக்கத்தை) விழுங்கி அடக்கிக் கொண்டார். ஜான் டிரஸ்ட் நிறுவனம்இன்னும் அவர்களை விட்டு அவர் விலகிச்சென்று “யூஸுஃபைப் பற்றி ஏற்பட்டிருக்கும் என்னுடைய துக்கமே!” என்று அவர் (வருத்தப்பட்டுக்)கூறினார், அவரது இரு கண்களும் துக்கத்தால் (அழுதழுது) வெளுத்துப் போயின, பின்னர், அவர் (தன் துக்கத்தையும்) விழுங்கி (அடக்கி)க் கொள்பவராக இருந்தார். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)He turned away from them and said, “O my sorrow for Joseph!” And his eyes turned white because of suppressing his grief. Ruwwad Center |
12:85 قَالُوا تَاللَّهِ تَفْتَأُ تَذْكُرُ يُوسُفَ حَتَّىٰ تَكُونَ حَرَضًا أَوْ تَكُونَ مِنَ الْهَالِكِينَ Qaloo taAllahi taftao tathkuru yoosufa hatta takoona haradan aw takoona mina alhalikeena They said: "By Allâh! You will never cease remembering Yûsuf (Joseph) until you become weak with old age, or until you be of the dead." Hilali & KhanThey said, "By Allah, you will not cease remembering Joseph until you become fatally ill or become of those who perish." Saheeh International(இந்நிலைமையைக் கண்ட அவருடைய மக்கள் அவரை நோக்கி,) "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் யூஸுஃபை நினைத்து இளைத்து (உருகி) இறந்துவிடும் வரையில் (அவருடைய எண்ணத்தை) விடமாட்டீர்கள்" என்று கடிந்து கூறினார்கள். தாருல் ஹுதா(இதைக் கண்ணுற்ற அவருடைய மக்கள்; தந்தையே!) “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் யூஸுஃபை நினைத்து (நினைத்து அழுது, நோயுற்று,) இளைத்து மடிந்து போகும் வரை (அவர் எண்ணத்தை விட்டும்) நீங்க மாட்டீர்கள்” என்று கூறினார்கள். ஜான் டிரஸ்ட் நிறுவனம்(இதனைக் கண்ட அவருடைய மக்கள் தந்தையே)” அல்லாஹ்வின் மீது சத்தியமாக (நீங்கள் யூஸுஃபை நினைத்து நினைத்து) இளைத்தவராக நீர் ஆகிவிடும்வரை அல்லது அழிந்துவிடுவோரில் நீர் ஆகிவிடும்வரை யூஸுஃபை நினைத்துக் கொண்டேயிருப்பீர்” என்று (கடிந்து) கூறினார்கள். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)They said, “By Allah, you will not cease to remember Joseph until your health is ruined or you die.” Ruwwad Center |
12:86 قَالَ إِنَّمَا أَشْكُو بَثِّي وَحُزْنِي إِلَى اللَّهِ وَأَعْلَمُ مِنَ اللَّهِ مَا لَا تَعْلَمُونَ Qala innama ashkoo baththee wahuznee ila Allahi waaAAlamu mina Allahi ma la taAAlamoona He said: "I only complain of my grief and sorrow to Allâh, and I know from Allâh that which you know not. Hilali & KhanHe said, "I only complain of my suffering and my grief to Allah, and I know from Allah that which you do not know. Saheeh Internationalஅதற்கவர் "என் கவலையையும் துக்கத்தையும் அல்லாஹ்விடமே நான் முறையிடுகிறேன். நீங்கள் அறியாத வற்றையும் அல்லாஹ்வி(ன் அருளி)னால் நான் அறிந்திருக்கிறேன். தாருல் ஹுதாஅதற்கவர், “என்னுடைய சஞ்சலத்தையும் கவலையையும் அல்லாஹ்விடமே முறையிடுகின்றேன்; அல்லாஹ்விடமிருந்து, நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன் (என்றும்); ஜான் டிரஸ்ட் நிறுவனம்அ(தற்க)வர், “என்னுடைய துக்கத்தையும், கவலையையும் நான் முறையிடுவதெல்லாம் அல்லாஹ்விடமேதான், நீங்கள் அறியாதவற்றையும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து நான் மிக்க அறிந்திருக்கிறேன்” என்று கூறினார். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)He said, “I only complain of my anguish and sorrow to Allah, and I know from Allah what you do not know. Ruwwad Center |
12:87 يَا بَنِيَّ اذْهَبُوا فَتَحَسَّسُوا مِنْ يُوسُفَ وَأَخِيهِ وَلَا تَيْأَسُوا مِنْ رَوْحِ اللَّهِ ۖ إِنَّهُ لَا يَيْأَسُ مِنْ رَوْحِ اللَّهِ إِلَّا الْقَوْمُ الْكَافِرُونَ Ya baniyya ithhaboo fatahassasoo min yoosufa waakheehi wala tayasoo min rawhi Allahi innahu la yayasu min rawhi Allahi illa alqawmu alkafiroona "O my sons! Go you and enquire about Yûsuf (Joseph) and his brother, and never give up hope of Allâh's Mercy. Certainly no one despairs of Allâh's Mercy, except the people who disbelieve." Hilali & KhanO my sons, go and find out about Joseph and his brother and despair not of relief from Allah. Indeed, no one despairs of relief from Allah except the disbelieving people." Saheeh Internationalஎன்னுடைய மக்களே! நீங்கள் சென்று யூஸுஃபையும், அவரது சகோதரரையும் தேடிப் பாருங்கள். அல்லாஹ்வின் அருளைப்பற்றி நீங்கள் நம்பிக்கை இழந்து விடாதீர்கள்; நிச்சயமாக (நன்றிகெட்ட) நம்பிக்கையற்றவர்களைத் தவிர (மற்றெவரும்) அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழந்துவிட மாட்டார்கள்" என்று(ம், பின்னும் ஒருமுறை எகிப்துக்குச் சென்று தேடும்படியும்) கூறினார். தாருல் ஹுதா“என் மக்களே! (மீண்டும் மிஸ்ருக்கு) நீங்கள் செல்லுங்கள்! யூஸுஃபையும் அவருடைய சகோதரரையும் தேடி விசாரியுங்கள்; (நம்மைத் தேற்றும்) அல்லாஹ்வின் அருளைப் பற்றி நம்பிக்கை இழக்காதீர்கள். ஏனென்றால் நிச்சயமாக காஃபிர்களின் கூட்டத்தைத் தவிர (வேறுயாரும்) அல்லாஹ்வின் அருளைப்பற்றி நம்பிக்கை இழக்கமாட்டார்கள்” என்றும் கூறினார். ஜான் டிரஸ்ட் நிறுவனம்“என்னுடைய மக்களே! நீங்கள் செல்லுங்கள், பின்னர், யூஸுஃபையும், அவரது சகோதரரையும் துருவித்தேடுங்கள்; அல்லாஹ்வின் அருளிலிருந்து நீங்கள் நம்பிக்கை இழந்துவிடாதீர்கள்! நிச்சயமாக (அல்லாஹ்வின் மீது நம்பிக்கையற்ற) நிராகரிப்போரைத் தவிர (மற்றெவரும்) அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழந்துவிட மாட்டார்கள்” (என்றும் கூறினார்.) மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)O my sons, go and find out about Joseph and his brother, and do not despair of Allah’s mercy. Indeed, no one despairs of Allah’s mercy except the disbelieving people.” Ruwwad Center |
12:88 فَلَمَّا دَخَلُوا عَلَيْهِ قَالُوا يَا أَيُّهَا الْعَزِيزُ مَسَّنَا وَأَهْلَنَا الضُّرُّ وَجِئْنَا بِبِضَاعَةٍ مُزْجَاةٍ فَأَوْفِ لَنَا الْكَيْلَ وَتَصَدَّقْ عَلَيْنَا ۖ إِنَّ اللَّهَ يَجْزِي الْمُتَصَدِّقِينَ Falamma dakhaloo AAalayhi qaloo ya ayyuha alAAazeezu massana waahlana alddurru wajina bibidaAAatin muzjatin faawfi lana alkayla watasaddaq AAalayna inna Allaha yajzee almutasaddiqeena Then, when they entered to him [Yûsuf (Joseph)], they said: "O ruler of the land! A hard time has hit us and our family, and we have brought but poor capital, so pay us full measure and be charitable to us. Truly, Allâh does reward the charitable." Hilali & KhanSo when they entered upon Joseph, they said, "O 'Azeez, adversity has touched us and our family, and we have come with goods poor in quality, but give us full measure and be charitable to us. Indeed, Allah rewards the charitable." Saheeh Internationalபிறகு, இவர்கள் (எகிப்துக்கு வந்து) யூஸுஃபிடம் சென்று அவரை நோக்கி ("மிஸ்ரின் அதிபதியாகிய) அஜீஸை! எங்களையும் எங்கள் குடும்பத்தையும் (பஞ்சத்தின்) கொடுமை பிடித்துக் கொண்டது. (எங்களிடமிருந்த) ஒரு அற்பப்பொருளையே நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். (அதனைக் கவனியாது) எங்களுக்கு வேண்டிய தானியத்தை முழுமையாக அளந்து கொடுத்து மேற்கொண்டும் எங்களுக்குத் தானமாகவும் கொடுத்தருள்வீராக! நிச்சயமாக அல்லாஹ் தானம் செய்பவர்களுக்குப் பிரதிபலன் அளிப்பான்" என்று கூறினார்கள். தாருல் ஹுதாஅவ்வாறே அவர்கள் (மிஸ்ரையடைந்து) யூஸுஃப் முன்னிலையில் வந்து அவரிடம்; “அஜீஸே! எங்களையும் எங்கள் குடும்பத்திலுள்ளவர்களையும் பெருந்துயர் பற்றிக்கொண்டது; நாங்கள் சொற்பமான பொருளையே கொண்டுவந்திருக்கின்றோம்; எங்களுக்கு நிரப்பமாகத் (தானியம்) அளந்து கொடுங்கள்; எங்களுக்கு (மேற்கொண்டு) தானமாகவும் கொடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் தானம் செய்பவர்களுக்கு நற்கூலி வழங்குகிறான்” என்று கூறினார்கள். ஜான் டிரஸ்ட் நிறுவனம்பிறகு, அவர்கள் (எகிப்துக்கு வந்து யூஸுஃபாகிய) அவர்பால் நுழைந்து அவரிடம் (எகிப்திய அரசின்) “அமைச்சரே” எங்களையும் எங்கள் குடும்பத்தினரையும் (பஞ்சத்தின்) கொடுமை பீடித்துக் கொண்டது, (எங்களிடமிருந்த) அற்பப்பொருளையே நாங்கள் கொணடு வந்திருக்கிறோம், ஆகவே, (அதனைப் பெற்றுக்கொண்டு) எங்களுக்கு வேண்டிய (தானியத்)தைப் பூரணமாக அளந்து கொடுத்து (மேற்கொண்டும்) எங்களுக்குத் தானமாகவும் கொடுத்தருள்வீராக! நிச்சயமாக அல்லாஹ் தானம் செய்வோருக்கு நற்கூலி அளிப்பான்” என்று கூறினார்கள். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)When they came into Joseph’s presence, they said, “O chief minister, we and our family have been struck with adversity, and we have brought some goods of scanty worth. So give us full measure [of grain] and be charitable to us, for Allah rewards those who are charitable.” Ruwwad Center |
12:89 قَالَ هَلْ عَلِمْتُمْ مَا فَعَلْتُمْ بِيُوسُفَ وَأَخِيهِ إِذْ أَنْتُمْ جَاهِلُونَ Qala hal AAalimtum ma faAAaltum biyoosufa waakheehi ith antum jahiloona He said: "Do you know what you did with Yûsuf (Joseph) and his brother, when you were ignorant?" Hilali & KhanHe said, "Do you know what you did with Joseph and his brother when you were ignorant?" Saheeh International(அச்சமயம் அவர் அவர்களை நோக்கி,) "நீங்கள் அறியாமையில் ஆழ்ந்து கிடந்தபோது யூஸுஃபையும் அவருடைய சகோதரரையும் என்ன செய்தீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா?" என்று கேட்டார். தாருல் ஹுதா(அதற்கு அவர்?) “நீங்கள் அறிவீனர்களாக இருந்த போது, யூஸுஃபுக்கும் அவர் சகோதரருக்கும் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா?” என்று வினவினார். ஜான் டிரஸ்ட் நிறுவனம்(அச்சமயம் அவர்,) “நீங்கள் அறிவீனர்களாக இருந்தபோது, யூஸுஃபையும் அவருடைய சகோதரரையும் என்ன செய்தீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)He said, “Do you know what you did to Joseph and his brother when you were ignorant?” Ruwwad Center |
12:90 قَالُوا أَإِنَّكَ لَأَنْتَ يُوسُفُ ۖ قَالَ أَنَا يُوسُفُ وَهَٰذَا أَخِي ۖ قَدْ مَنَّ اللَّهُ عَلَيْنَا ۖ إِنَّهُ مَنْ يَتَّقِ وَيَصْبِرْ فَإِنَّ اللَّهَ لَا يُضِيعُ أَجْرَ الْمُحْسِنِينَ Qaloo ainnaka laanta yoosufa qala ana yoosufu wahatha akhee qad manna Allahu AAalayna innahu man yattaqi wayasbir fainna Allaha la yudeeAAu ajra almuhsineena They said: "Are you indeed Yûsuf (Joseph)?" He said: "I am Yûsuf (Joseph), and this is my brother (Benjamin). Allâh has indeed been gracious to us. Verily, he who fears Allâh with obedience to Him (by abstaining from sins and evil deeds, and by performing righteous good deeds), and is patient, then surely, Allâh makes not the reward of the Muhsinûn (good-doers. See V.2:112) to be lost." Hilali & KhanThey said, "Are you indeed Joseph?" He said "I am Joseph, and this is my brother. Allah has certainly favored us. Indeed, he who fears Allah and is patient, then indeed, Allah does not allow to be lost the reward of those who do good." Saheeh Internationalஅதற்கவர்கள் (திடுக்கிட்டு) "மெய்யாகவே நீங்கள் யூஸுஃபாக இருப்பீரோ?" என்று கேட்டார்கள். அதற்கவர் "நான்தான் யூஸுஃப்! இவர் என் சகோதரர். நிச்சயமாக அல்லாஹ் எங்கள் மீது பேரருள் புரிந்திருக்கிறான். ஏனென்றால், நிச்சயமாக எவர் இறை அச்சமுடையவராக இருந்து, கஷ்டங்களையும் சகித்துக் கொள்கிறாரோ (அத்தகைய) நன்மை செய்தவரின் கூலியை நிச்சயமாக அல்லாஹ் வீணாக்கி விடுவதில்லை" என்று கூறினார். தாருல் ஹுதா(அப்போது அவர்கள்) “நிச்சயமாக நீர் தாம் யூஸுஃபோ? என்று கேட்டார்கள்; (ஆம்!) நான் தாம் யூஸுஃபு (இதோ!) இவர் என்னுடைய சகோதரராவர்; நிச்சயமாக அல்லாஹ் எங்கள் மீது அருள் புரிந்திருக்கின்றான்; எவர் (அவனிடம் பயபக்தியுடன் இருக்கிறார்களோ, இன்னும் பொறுமையையும் மேற்கொண்டிருக்கிறாரோ (அத்தகைய) நன்மை செய்வோர் கூலியை நிச்சயமாக அல்லாஹ் வீணாக்கிவிடமாட்டான்” என்று கூறினார். ஜான் டிரஸ்ட் நிறுவனம்அ(தற்க)வர்கள் (திடுக்கிட்டு) “நிச்சயமாக நீர்தான், யூஸுஃபா,” என்று கேட்டார்கள், அ(தற்க)வர், “நான்தான் யூஸுஃப், இவர் என் சகோதரர், திட்டமாக அல்லாஹ் எங்கள் மீது பேரருள் புரிந்திருக்கிறான், (ஏனென்றால்,) அது நிச்சயமாக எவர் பயபக்தியுடன் இருந்து (கஷ்டங்களையும் சகித்துப்) பொறுத்துக் கொள்கிறாரோ (அத்தகைய) நன்மை செய்தோரின் கூலியை நிச்சயமாக அல்லாஹ் வீணாக்கிவிட மாட்டான்” என்று கூறினார். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)They said, “Are you really Joseph?” He said, “I am Joseph, and this is my brother. Allah has surely been gracious to us. Whoever fears Allah and remains patient, Allah will never let the reward of those who do good to be lost.” Ruwwad Center |
12:91 قَالُوا تَاللَّهِ لَقَدْ آثَرَكَ اللَّهُ عَلَيْنَا وَإِنْ كُنَّا لَخَاطِئِينَ Qaloo taAllahi laqad atharaka Allahu AAalayna wain kunna lakhatieena They said: "By Allâh! Indeed Allâh has preferred you to us, and we certainly have been sinners." Hilali & KhanThey said, "By Allah, certainly has Allah preferred you over us, and indeed, we have been sinners." Saheeh Internationalஅதற்கவர்கள், "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் (உங்களுக்குப் பெரும்) தீங்கிழைத்தோம். ஆயினும் நிச்சயமாக அல்லாஹ் எங்களைவிட உங்களை மேன்மையாக்கி வைத்திருக்கிறான். (எங்களுக்கு நன்மை செய்ய அல்லாஹ் உங்களுக்குச் சந்தர்ப்பமும் அளித்திருக்கிறான்)" என்று கூறினார்கள். தாருல் ஹுதாஅதற்கவர்கள் “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாங்கள் உமக்குத் தவறு இழைத்தவர்களாக இருந்தும், நிச்சயமாக அல்லாஹ் எங்களை விட உம்மை மேன்மையுடையவராகத் தெரிவு செய்திருக்கின்றான்” என்று கூறினார்கள். ஜான் டிரஸ்ட் நிறுவனம்அ(தற்க)வர்கள், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் (உமக்கு பெரும்) தவறிழைத்தவர்களாக இருப்பினும், நிச்சயமாக அல்லாஹ் எங்களைவிட(பெருங்கிருபை கொண்டு) உம்மை மேன்மையாக்கி வைத்திருக்கிறான்” என்று கூறினார்கள். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)They said, “By Allah, Allah has favored you over us, and we have surely been sinful.” Ruwwad Center |
12:92 قَالَ لَا تَثْرِيبَ عَلَيْكُمُ الْيَوْمَ ۖ يَغْفِرُ اللَّهُ لَكُمْ ۖ وَهُوَ أَرْحَمُ الرَّاحِمِينَ Qala la tathreeba AAalaykumu alyawma yaghfiru Allahu lakum wahuwa arhamu alrrahimeena He said: "No reproach on you this day; may Allâh forgive you, and He is the Most Merciful of those who show mercy! Hilali & KhanHe said, "No blame will there be upon you today. Allah will forgive you; and He is the most merciful of the merciful." Saheeh Internationalஅதற்கவர் "இன்றைய தினம் (நான்) உங்கள் மீது யாதொரு குற்றமும் (சுமத்த) இல்லை. அல்லாஹ்(வும்) உங்கள் குற்றங்களை மன்னித்து விடுவானாக! அவன் கருணையாளர்களிலெல்லாம் மகா கருணையாளன்" என்றும் கூறினார். தாருல் ஹுதாஅதற்கவர், “இன்று உங்கள் மீது எவ்விதக் குற்றச்சாட்டும் இல்லை; அல்லாஹ் உங்களை மன்னித்தருள்வானாக! அவனே கிருபையாளர்களிலெல்லாம் மிக்க கிருபையாளனாக இருக்கின்றான்” என்று கூறினார். ஜான் டிரஸ்ட் நிறுவனம்அ(தற்க)வர் “இன்றையத்தினம் உங்கள் மீது யாதொரு நிந்தனையும் இல்லை, அல்லாஹ்(வும்) உங்கள் குற்றங்களை மன்னித்து விடுவானாக! அவனே கிருபையாளர்களிலெல்லாம் மகாக்கிருபையாளன்” என்று கூறினார். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)He said, “There is no blame on you today. May Allah forgive you, for He is the Most Merciful of those who show mercy. Ruwwad Center |
12:93 اذْهَبُوا بِقَمِيصِي هَٰذَا فَأَلْقُوهُ عَلَىٰ وَجْهِ أَبِي يَأْتِ بَصِيرًا وَأْتُونِي بِأَهْلِكُمْ أَجْمَعِينَ Ithhaboo biqameesee hatha faalqoohu AAala wajhi abee yati baseeran watoonee biahlikum ajmaAAeena "Go with this shirt of mine, and cast it over the face of my father, he will become clear-sighted, and bring to me all your family." Hilali & KhanTake this, my shirt, and cast it over the face of my father; he will become seeing. And bring me your family, all together." Saheeh International"நீங்கள் என்னுடைய இந்தச் சட்டையைக் கொண்டு போய் என் தந்தை முகத்தில் போடுங்கள். (அதனால் உடனே) அவர் (இழந்த) பார்வையை அடைந்து விடுவார். பின்னர் நீங்கள் உங்கள் குடும்பத்திலுள்ள அனைவரையும் அழைத்துக் கொண்டு என்னிடம் வாருங்கள்" என்று கூறி அனுப்பினார். தாருல் ஹுதா“என்னுடைய இந்தச் சட்டையை நீங்கள் எடுத்துக் கொண்டு சென்று, என் தந்தையாரின் முகத்தில் போடுங்கள்; அவருக்குக் கண்பார்வை வந்துவிடும்; இன்னும் உங்களுடைய குடும்பத்தார் அனைவரையும் என்னிடம் கொண்டு வாருங்கள்” (என்று கூறினார்). ஜான் டிரஸ்ட் நிறுவனம்“நீங்கள் என்னுடைய இந்தச் சட்டையைக் கொண்டுபோய் என் தந்தை முகத்தின் மீது போடுங்கள், (அதனால், உடனே) அவர் பார்வையுடையவராக(த்திரும்பி) வருவார், பின்னர், நீங்கள் உங்கள் குடும்பத்திலுள்ள யாவரையும் அழைத்துக் கொண்டு என்னிடம் வாருங்கள்” என்று கூறி (அனுப்பி)னார். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Take this shirt of mine and throw it over my father’s face; he will recover his sight. Then come back to me with all of your family.” Ruwwad Center |
12:94 وَلَمَّا فَصَلَتِ الْعِيرُ قَالَ أَبُوهُمْ إِنِّي لَأَجِدُ رِيحَ يُوسُفَ ۖ لَوْلَا أَنْ تُفَنِّدُونِ Walamma fasalati alAAeeru qala aboohum innee laajidu reeha yoosufa lawla an tufannidooni And when the caravan departed, their father said: "I do indeed feel the smell of Yûsuf (Joseph), if only you think me not a dotard (a person who has weakness of mind because of old age)." Hilali & KhanAnd when the caravan departed [from Egypt], their father said, "Indeed, I find the smell of Joseph [and would say that he was alive] if you did not think me weakened in mind." Saheeh Internationalஅவர்களின் ஒட்டக வாகனங்கள் (எகிப்திலிருந்து) பிரியவே, அவர்களின் தந்தை ("இதோ) யூஸுஃபுடைய வாடையை நிச்சயமாக நான் நுகர்கிறேன்; (இதனால்) என்னை நீங்கள் பைத்தியக் காரனென்று எண்ணாமலிருக்க வேண்டுமே!" என்றார். தாருல் ஹுதா(அவர்களுடைய) ஒட்டக வாகனங்கள் (மிஸ்ரை விட்டுப்) பிரிந்த நேரத்தில், அவர்களுடைய தந்தை, “நிச்சயமாக நான் யூஸுஃபின் வாடையை நுகர்கிறேன்; (இதன் காரணமாக) என்னை நீங்கள் பைத்தியக்காரன் என்று எண்ணாமல் இருக்க வேண்டுமே!” என்றார். ஜான் டிரஸ்ட் நிறுவனம்(அவர்களுடைய) ஒட்டகக்கூட்டம் (எகிப்திலிருந்து) பிரிந்த சமயமே அவர்களின் தந்தை “(இதோ) யூஸுஃபுடைய வாடையை நிச்சயமாக நான் நுகர்கிறேன், (முதுமையின் காரணமாக) அறிவு மங்கிப் பேசுவதாக என்னை நீங்கள் கூறாதிருக்க வேண்டுமே!” என்றார். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)When the caravan set out [from Egypt], their father said, “I certainly sense the fragrance of Joseph, even though you might think that I am senile.” Ruwwad Center |
12:95 قَالُوا تَاللَّهِ إِنَّكَ لَفِي ضَلَالِكَ الْقَدِيمِ Qaloo taAllahi innaka lafee dalalika alqadeemi They said: "By Allâh! Certainly, you are in your old error." Hilali & KhanThey said, "By Allah, indeed you are in your [same] old error." Saheeh International(இதனைச் செவியுற்ற அவருடைய மக்கள்) "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! மெய்யாகவே நீங்கள் உங்களுடைய பழைய தவறான எண்ணத்தில்தான் இருக்கிறீர்கள்" என்று கூறினார்கள். தாருல் ஹுதா(அதற்கவர்கள்) “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் உங்களுடைய பழைய தவறிலேயே இருக்கின்றீர்கள்” என்று சொன்னார்கள். ஜான் டிரஸ்ட் நிறுவனம்(இதனைச் செவியுற்ற அவருடைய ஏனைய மக்கள்) “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நிச்சயமாக நீர் உம்முடைய பழைய வழிகேட்டில்தான் இருக்கிறீர்” என்று கூறினார்கள். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)They said, “By Allah, you are still lost in your old delusion.” Ruwwad Center |
12:96 فَلَمَّا أَنْ جَاءَ الْبَشِيرُ أَلْقَاهُ عَلَىٰ وَجْهِهِ فَارْتَدَّ بَصِيرًا ۖ قَالَ أَلَمْ أَقُلْ لَكُمْ إِنِّي أَعْلَمُ مِنَ اللَّهِ مَا لَا تَعْلَمُونَ Falamma an jaa albasheeru alqahu AAala wajhihi fairtadda baseeran qala alam aqul lakum innee aAAlamu mina Allahi ma la taAAlamoona Then, when the bearer of the glad tidings arrived, he cast it (the shirt) over his face, and he became clear-sighted. He said: "Did I not say to you, 'I know from Allâh that which you know not.' " Hilali & KhanAnd when the bearer of good tidings arrived, he cast it over his face, and he returned [once again] seeing. He said, "Did I not tell you that I know from Allah that which you do not know?" Saheeh Internationalஅச்சமயம் (யூஸுஃபைப் பற்றி) நற்செய்தி கூறுபவரும் வந்து, (யூஸுஃபுடைய சட்டையை) அவர் (தந்தையின்) முகத்தில் போடவே, அவர் இழந்த (தன்) பார்வையை அடைந்து "(யூஸுஃப் உயிரோடிருப்பதைப் பற்றி) நீங்கள் அறியாதவற்றையெல்லாம் அல்லாஹ்வின் அருளைக் கொண்டு நிச்சயமாக நான் அறிவேன் என்பதாக (முன்னர்) நான் உங்களுக்குக் கூறவில்லையா?" என்று கேட்டார். தாருல் ஹுதாபிறகு, நன்மாராயங் கூறுபவர் வந்து, (சட்டையை) அவர் முகத்தில் போட்டபோது அவர் மீண்டும் பார்வையுடையோரானார்; “நீங்கள் அறியாததையெல்லாம் அல்லாஹ்விடமிருந்து நிச்சயமாக நான் அறிவேன் என்று உங்களிடம் கூறவில்லையா?” என்று (அவர்களை நோக்கிக்) கூறினார், ஜான் டிரஸ்ட் நிறுவனம்அப்போது (யூஸுஃபைப்பற்றி) நன்மாராயங்கூறுபவர் வந்து (யூஸுஃபுடைய சட்டையாகிய) அதனை அவர் (தந்தையின்) முகத்தின் மீது போடவே, அவர் (இழந்த தன்) பார்வையை அடைந்து, (யூஸுஃப் உயிரோடிருப்பதைப் பற்றி) நீங்கள் அறியாதவற்றையெல்லாம் அல்லாஹ்வின் புறத்திலிருந்து நிச்சயமாக நான் அறிவேன், என்பதாக (முன்னர்) நான் உங்களுக்குக் கூறவில்லையா?” என்று கேட்டார். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Then when the bearer of the glad tidings came, he threw it over his face, and he immediately recovered his sight. He said, “Did I not tell you that I know from Allah what you do not know?” Ruwwad Center |
12:97 قَالُوا يَا أَبَانَا اسْتَغْفِرْ لَنَا ذُنُوبَنَا إِنَّا كُنَّا خَاطِئِينَ Qaloo ya abana istaghfir lana thunoobana inna kunna khatieena They said: "O our father! Ask forgiveness (from Allâh) for our sins, indeed we have been sinners." Hilali & KhanThey said, "O our father, ask for us forgiveness of our sins; indeed, we have been sinners." Saheeh International(அதற்குள் எகிப்து சென்றிருந்த அவருடைய மற்ற பிள்ளைகளும் வந்து) "எங்கள் தந்தையே! எங்கள் பாவங்களை மன்னிக்கும்படி நீங்கள் பிரார்த்திப்பீராக! மெய்யாகவே நாங்கள் பெரும் தவறிழைத்துவிட்டோம்" என்று (அவர்களே) கூறினார்கள். தாருல் ஹுதா(அதற்கு அவர்கள்) “எங்களுடைய தந்தையே! எங்களுடைய பாவங்களை மன்னிக்குமாறு எங்களுக்காக (இறைவனிடம்) பிரார்த்தனை செய்யுங்கள், நிச்சயமாக நாங்கள் தவறு செய்தவர்களாக இருக்கின்றோம்” என்று கூறினார்கள். ஜான் டிரஸ்ட் நிறுவனம்“எங்கள் தந்தையே! எங்கள் பாவங்களை மன்னிக்குமாறு நீங்கள் எங்களுக்காக மன்னிப்புத் தேடுவீர்களாக! நிச்சயமாகவே நாங்கள் குற்றவாளிகளாகவே இருக்கிறோம்” என்று அவர்கள் கூறினார்கள். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)They said, “O our father, pray to Allah to forgive us our sins; we were certainly mistaken.” Ruwwad Center |
12:98 قَالَ سَوْفَ أَسْتَغْفِرُ لَكُمْ رَبِّي ۖ إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ Qala sawfa astaghfiru lakum rabbee innahu huwa alghafooru alrraheemu He said: "I will ask my Lord for forgiveness for you, verily, He! Only He is the Oft-Forgiving, the Most Merciful." Hilali & KhanHe said, "I will ask forgiveness for you from my Lord. Indeed, it is He who is the Forgiving, the Merciful." Saheeh Internationalஅதற்கவர், நான் என் இறைவனிடம் பின்னர் உங்களுக்காக மன்னிப்பைக் கோருவேன். நிச்சயமாக அவன் மிக மன்னிப் பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கிறான்" என்று கூறினார். தாருல் ஹுதாநான் உங்களுக்காக என் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுவேன். நிச்சயமாக அவன் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான் என்று கூறினார். ஜான் டிரஸ்ட் நிறுவனம்அ(தற்க)வர், “நான் என் இரட்சகனிடம் அடுத்து உங்களுக்காக மன்னிப்பைக் கோருவேன், நிச்சயமாக அவனே மிக மன்னிப்போன், மிகக் கிருபையுடையோன்” என்று கூறினார். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)He said, “I will ask my Lord to forgive you, for He is the All-Forgiving, the Most Merciful.” Ruwwad Center |
12:99 فَلَمَّا دَخَلُوا عَلَىٰ يُوسُفَ آوَىٰ إِلَيْهِ أَبَوَيْهِ وَقَالَ ادْخُلُوا مِصْرَ إِنْ شَاءَ اللَّهُ آمِنِينَ Falamma dakhaloo AAala yoosufa awa ilayhi abawayhi waqala odkhuloo misra in shaa Allahu amineena Then, when they came in before Yûsuf (Joseph), he took his parents to himself and said: "Enter Egypt, if Allâh wills, in security." Hilali & KhanAnd when they entered upon Joseph, he took his parents to himself and said, "Enter Egypt, Allah willing, safe [and secure]." Saheeh International(பின்னர், குடும்பத்துடன் கன்ஆனிலிருந்த) அவர்கள் யூஸுஃபிடம் (எகிப்துக்கு) வந்தபொழுது அவர் தன் தாய் தந்தையை (எகிப்தின் எல்லையில் காத்திருந்து மிக மரியாதையுடன் வரவேற்று ("இறைவன் அருளால்) நீங்கள் எகிப்தில் நுழையுங்கள்! அல்லாஹ் நாடினால் நீங்கள் அச்சமற்றவர்களாய் இருப்பீர்கள்" என்று கூறினார். தாருல் ஹுதா(பின்னர் குடும்பத்துடன்) அவர்கள் யூஸுஃபிடம் வந்தபோது, அவர் தம் தாய் தந்தையரை (கண்ணியத்துடன் வரவேற்றுத்) தம்முடன் வைத்துக் கொண்டார்; இன்னும் “அல்லாஹ் நாடினால் நீங்கள் மிஸ்ருக்குள் அச்ச மற்றவர்களாகப் பிரவேசியுங்கள்” என்றும் கூறினார். ஜான் டிரஸ்ட் நிறுவனம்(பின்னர், குடும்பத்துடன் கன் ஆனிலிருந்த) அவர்கள் யூஸுஃபிடம் (எகிப்துக்கு) வந்து நுழைந்தபொழுது, அவர் தன் தாய் தந்தையை (மிக்க மரியாதையுடன் வரவேற்று) தன் பக்கம் சேர்த்துக் கொண்டு, “அல்லாஹ் நாடினால் நீங்கள் அச்சமற்றவர்களாக எகிப்தில் நுழையுங்கள்” என்றும் கூறினார். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)When they came into Joseph’s presence, he embraced his parents and said, “Enter Egypt, if Allah wills, safe and secure. Ruwwad Center |
12:100 وَرَفَعَ أَبَوَيْهِ عَلَى الْعَرْشِ وَخَرُّوا لَهُ سُجَّدًا ۖ وَقَالَ يَا أَبَتِ هَٰذَا تَأْوِيلُ رُؤْيَايَ مِنْ قَبْلُ قَدْ جَعَلَهَا رَبِّي حَقًّا ۖ وَقَدْ أَحْسَنَ بِي إِذْ أَخْرَجَنِي مِنَ السِّجْنِ وَجَاءَ بِكُمْ مِنَ الْبَدْوِ مِنْ بَعْدِ أَنْ نَزَغَ الشَّيْطَانُ بَيْنِي وَبَيْنَ إِخْوَتِي ۚ إِنَّ رَبِّي لَطِيفٌ لِمَا يَشَاءُ ۚ إِنَّهُ هُوَ الْعَلِيمُ الْحَكِيمُ WarafaAAa abawayhi AAala alAAarshi wakharroo lahu sujjadan waqala ya abati hatha taweelu ruyaya min qablu qad jaAAalaha rabbee haqqan waqad ahsana bee ith akhrajanee mina alssijni wajaa bikum mina albadwi min baAAdi an nazagha alshshaytanu baynee wabayna ikhwatee inna rabbee lateefun lima yashao innahu huwa alAAaleemu alhakeemu And he raised his parents to the throne and they fell down before him prostrate. And he said: "O my father! This is the interpretation of my dream aforetime! My Lord has made it come true! He was indeed good to me, when He took me out of the prison, and brought you (all here) out of the bedouin life, after Shaitân (Satan) had sown enmity between me and my brothers. Certainly, my Lord is the Most Courteous and Kind to whom He wills. Truly, He! Only He is the All-Knowing, the All-Wise. Hilali & KhanAnd he raised his parents upon the throne, and they bowed to him in prostration. And he said, "O my father, this is the explanation of my vision of before. My Lord has made it reality. And He was certainly good to me when He took me out of prison and brought you [here] from bedouin life after Satan had induced [estrangement] between me and my brothers. Indeed, my Lord is Subtle in what He wills. Indeed, it is He who is the Knowing, the Wise. Saheeh Internationalபின்னர் அவர் தன் தாயையும், தந்தையையும் சிம்மாசனத்தின் மீது உயர்த்தி (அமர்த்தி)னார். (எகிப்தின் அதிபதியாக இருந்த) அவருக்கு (அக்காலத்திய முறைப்படி) அவர்கள் அனைவரும் சிரம் பணிந்து மரியாதைச் செலுத்தினார்கள். அச்சமயம் யூஸுஃப் (தன் தந்தையை நோக்கி) "என் தந்தையே! முன்னர் நான் கண்ட கனவின் வியாக்கியானம் இதுதான். என் இறைவன் அதனை உண்மையாக்கி விட்டான். (எவருடைய சிபாரிசுமின்றியே) சிறைக்கூடத்திலிருந்து என்னை அவன் வெளியேற்றியதுடன் எனக்கும், என் சகோதரருக்குமிடையில் ஷைத்தான் பிரிவினையை உண்டுபண்ணிய பின்னரும் உங்கள் அனைவரையும் பாலைவனத்திலிருந்து என்னிடம் கொண்டு வந்து ஒன்று சேர்த்ததன் மூலம் (என் இறைவன்) நிச்சயமாக என்மீது பேருபகாரம் புரிந்திருக்கிறான். நிச்சயமாக என் இறைவன், தான் விரும்பியவர்கள் மீது உள்ளன்புடையவனாக இருக்கிறான். நிச்சயமாக அவன் அனைத்தையும் நன்கறிந்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்" என்றார். தாருல் ஹுதாஇன்னும், அவர் தம் தாய் தந்தையரை அரியாசனத்தின் மீது உயர்த்தி (அமர்த்தி)னார்; அவர்கள் (எல்லோரும்) அவருக்கு (மரியாதை செலுத்தியவர்களாகச்) சிரம் பணிந்து வீழ்ந்தனர்; அப்போது அவர் (தம் தந்தையை நோக்கி), “என் தந்தையே! இது தான் என்னுடைய முந்தைய கனவின் விளக்கமாகும்; அதனை என் இறைவன் உண்மையாக்கினான்; மேலும், அவன் என்னைச் சிறைச்சாலையிலிருந்து வெளியாக்கியதுடன் எனக்கும் என் சகோதரர்களுக்குமிடையில் ஷைத்தான் பிரிவினையை உண்டு பண்ணி விட்ட பின்னர் உங்களை கிராமத்திலிருந்து கொண்டு வந்ததன் மூலம் அவன் நிச்சயமாக எனக்குப் பேருபகாரம் செய்துள்ளான்; நிச்சயமாக என் இறைவன், தான் நாடியவற்றை மிக நுட்பமாகச் செய்கிறவன், நிச்சயமாக அவன் (யாவற்றையும்) நன்கறிந்தவன்; மிக்க ஞானமுள்ளவன்” என்று கூறினார். ஜான் டிரஸ்ட் நிறுவனம்இன்னும், அவர் தன் பெற்றோரை சிம்மாசனத்தின் மீது உயர்த்தி (கண்ணியமாக அமரச்செய்யலா)னார், (எகிப்தின் அதிபதியாக இருந்த)அவருக்கு (அக்காலத்திய முறைப்படி) அவர்கள் அனைவரும் சிரம் பணிந்தவர்களாகவும் விழுந்தார்கள், அச்சமயம் யூஸுஃப் (தன் தந்தையிடம்) “என் தந்தையே! முன்னர் நான் கண்ட கனவின் விளக்கம் இதுதான், என் இரட்சகன் அதனைத் திட்டமாக உண்மையாக்கிவிட்டான், (எவருடைய சிபாரிசுமின்றியே) சிறைக்கூடத்திலிருந்து என்னை (அல்லாஹ்வாகிய) அவன் வெளியேற்றியபோது (அல்லாஹ்) எனக்குத் திட்டமாக பேருபகாரம் புரிந்துவிட்டான், எனக்கும், என் சகோதரர்களுக்குமிடையில் ஷைத்தான் பிரிவினையை உண்டுபண்ணிய பின்னரும், உங்கள் யாவரையும் கிராமப்புறத்திலிருந்து என்னிடம் கொண்டு வந்துள்ளான், நிச்சயமாக என் இரட்சகன், தான் நாடியதை மிக நுட்பமாகச் செய்கின்றவன், நிச்சயமாக அவனே (யாவற்றையும்) நன்கறிந்தோன், தீர்க்கமான அறிவுடையோன்” என்றார். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)He took his parents to the throne, and they all fell down to him in prostration before him. He said, “O my father, this is the interpretation of my old dream. My Lord has made it come true. He has been kind to me when He freed me from prison and brought you all here from the wilderness, after Satan caused a rift between me and my brothers. My Lord is gracious to whom He wills. Indeed, He is the All-Knowing, the All-Wise.” Ruwwad Center |
12:101 رَبِّ قَدْ آتَيْتَنِي مِنَ الْمُلْكِ وَعَلَّمْتَنِي مِنْ تَأْوِيلِ الْأَحَادِيثِ ۚ فَاطِرَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ أَنْتَ وَلِيِّي فِي الدُّنْيَا وَالْآخِرَةِ ۖ تَوَفَّنِي مُسْلِمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ Rabbi qad ataytanee mina almulki waAAallamtanee min taweeli alahadeethi fatira alssamawati waalardi anta waliyyee fee alddunya waalakhirati tawaffanee musliman waalhiqnee bialssaliheena "My Lord! You have indeed bestowed on me of the sovereignty, and taught me something of the interpretation of dreams – the (Only) Creator of the heavens and the earth! You are my Walî (Protector, Helper, Supporter, Guardian, God, Lord) in this world and in the Hereafter. Cause me to die as a Muslim (the one submitting to Your Will), and join me with the righteous." Hilali & KhanMy Lord, You have given me [something] of sovereignty and taught me of the interpretation of dreams. Creator of the heavens and earth, You are my protector in this world and in the Hereafter. Cause me to die a Muslim and join me with the righteous." Saheeh International(அன்றி) "என் இறைவனே! நிச்சயமாக நீ எனக்கு ஓர் ஆட்சியையும் தந்தருள்புரிந்து, கனவுகளின் வியாக்கியானங் களையும் எனக்குக் கற்பித்தாய். வானங்களையும் பூமியையும் நீதான் படைத்தாய். இம்மையிலும், மறுமையிலும் என்னை பாதுகாப்பவனும் நீதான். முற்றிலும் (உனக்கு) வழிப்பட்டவனாகவே என்னை நீ கைப்பற்றிக் கொள்வாயாக! நல்லடியார் கூட்டத்திலும் என்னை நீ சேர்த்து விடுவாயாக!" (என்று பிரார்த்தித்தார்.) தாருல் ஹுதா“என் இறைவனே! நிச்சயமாக நீ எனக்கு அரசாட்சியைத் தந்து, கனவுகளின் விளக்கங்களையும் எனக்கு கற்றுத்தந்தாய்; வானங்களையும் பூமியையும் படைத்தவனே! இம்மையிலும் மறுமையிலும் நீயே என் பாதுகாவலன்; முஸ்லிமாக (உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக இருக்கும் நிலையில்) என்னை நீ கைப்பறறிக் கொள்வாயாக! இன்னும் நல்லடியார் கூட்டத்தில் என்னைச் சேர்த்திடுவாயாக!” (என்று அவர் பிரார்த்தித்தார்.) ஜான் டிரஸ்ட் நிறுவனம்(அன்றி) “என் இரட்சகனே! நிச்சயமாக நீ எனக்கு ஓர் ஆட்சியையும் தந்(தருள் புரிந்)து கனவுகளின் விளக்கங்களையும் எனக்குக் கற்பித்தாய்! வானங்களை மற்றும் பூமியைப் படைத்தவனே! இம்மையிலும், மறுமையிலும் நீயே என் பாதுகாவலன், முற்றிலும் (உனக்கு) கீழ்ப்படிந்த (முஸ்லீமான)வனாகவே என்னை நீ கைப்பற்றிக் கொள்வாயாக! நல்லோர்களுடன் என்னையும் சேர்த்தருள்வாயாக” (என்று பிரார்த்தித்தார்.) மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)“My Lord, You have given me authority and taught me something of the interpretation of dreams. O Originator of the heavens and earth, You are my Protector in this world and in the Hereafter. Cause me to die as a Muslim [submitting to You], and join me with the righteous.” Ruwwad Center |
12:102 ذَٰلِكَ مِنْ أَنْبَاءِ الْغَيْبِ نُوحِيهِ إِلَيْكَ ۖ وَمَا كُنْتَ لَدَيْهِمْ إِذْ أَجْمَعُوا أَمْرَهُمْ وَهُمْ يَمْكُرُونَ Thalika min anbai alghaybi nooheehi ilayka wama kunta ladayhim ith ajmaAAoo amrahum wahum yamkuroona That is of the news of the Ghaib (Unseen) which We reveal to you (O Muhammad [sal-Allâhu 'alayhi wa sallam]). You were not (present) with them when they arranged their plan together, and (while) they were plotting. Hilali & KhanThat is from the news of the unseen which We reveal, [O Muhammad], to you. And you were not with them when they put together their plan while they conspired. Saheeh International(நபியே) இது (நீங்கள் அறியாத) மறைவான விஷயங்களில் உள்ளதாகும். அவர்கள் சூழ்ச்சி செய்து (யூஸுஃபைக் கிணற்றில் தள்ள வேண்டுமென்ற) தங்கள் திட்டத்தை வகுத்தபொழுது நீங்கள் அவர்களுடன் இருக்கவில்லை. (எனினும்) இவைகளை நாம் உங்களுக்கு வஹ்யி மூலமே அறிவித்தோம். தாருல் ஹுதா(நபியே!) இது (நீர் அறியாத) மறைவான செய்திகளில் உள்ளதாகும்; இதனை நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்தோம்; அவர்கள் (கூடிச்) சதி செய்து நம் திட்டத்தில் அவர்கள் ஒன்று சேர்ந்த பொழுது நீர் அவர்களுடன் இருக்கவில்லை. ஜான் டிரஸ்ட் நிறுவனம்(நபியே) இது (நீர் அறியாத) மறைவான செய்திகளில் உள்ளதாகும், இதை உமக்கு நாம் (வஹீ மூலமே) அறிவிக்கிறோம், இன்னும், அவர்கள் சூழ்ச்சி செய்கிறவர்களாக, (யூஸுஃபைக் கிணற்றில் தள்ள வேண்டுமென்று) தங்கள் காரியத்தில் முடிவெடுக்க ஒருமித்தபோது நீர் அவர்களிடத்தில் இருக்கவுமில்லை. மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)That is from the stories of the unseen which We reveal to you [O Prophet]; you were not with them when they agreed upon their plan as they were plotting. Ruwwad Center |
12:103 وَمَا أَكْثَرُ النَّاسِ وَلَوْ حَرَصْتَ بِمُؤْمِنِينَ Wama aktharu alnnasi walaw harasta bimumineena And most of mankind will not believe even if you desire it eagerly. Hilali & KhanAnd most of the people, although you strive [for it], are not believers. Saheeh Internationalநீங்கள் எவ்வளவுதான் விரும்பியபோதிலும் (அம்)மனிதரில் பெரும்பாலானவர்கள் (உங்களை நபி என்று) நம்பவே மாட்டார்கள். தாருல் ஹுதாஆனால் நீர் எவ்வளவு அதிகமாக விரும்பினாலும் (அம்) மனிதர்களில் பெரும் பாலோர் (உம்மை நபி என) நம்பமாட்டார்கள். ஜான் டிரஸ்ட் நிறுவனம்நீர் (எவ்வளவுதான்) பேராவல் கொண்டாலும் (அம்)மனிதர்களில் பெரும்பாலோர் (அல்லாஹ்வை) விசுவாசங்கொள்பவர்களாக இல்லை. மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)But most people will not believe, no matter how eager you may be. Ruwwad Center |
12:104 وَمَا تَسْأَلُهُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ ۚ إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِلْعَالَمِينَ Wama tasaluhum AAalayhi min ajrin in huwa illa thikrun lilAAalameena And no reward you (O Muhammad [sal-Allâhu 'alayhi wa sallam]) ask of them (those who deny your Prophethood) for it; it (the Qur'ân) is no less than a Reminder and an advice to the 'آlamîn (men and jinn). Hilali & KhanAnd you do not ask of them for it any payment. It is not except a reminder to the worlds. Saheeh Internationalஇதற்காக (நீங்கள் அவர்களிடத்தில் யாதொரு கூலியும் கேட்பது இல்லை. உலகத்தார் அனைவருக்கும் இது ஒரு நல்ல படிப்பினையே அன்றி வேறில்லை. தாருல் ஹுதாஇதற்காக நீர் அவர்களிடத்தில் எந்தக் கூலியும் கேட்பதில்லை. இஃது அகிலத்தார் அனைவருக்கும் நினைவூட்டும் நல்லுபதேசமே அன்றி வேறில்லை. ஜான் டிரஸ்ட் நிறுவனம்இதற்காக நீர் அவர்களிடத்தில் யாதொரு கூலியையும் கேட்பதில்லை, அகிலத்தார்க்கும் இது ஒரு நல்லுபதேசமே தவிர (வேறு) இல்லை. மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)You are not asking them for any reward. It is only a reminder to the worlds. Ruwwad Center |
12:105 وَكَأَيِّنْ مِنْ آيَةٍ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَمُرُّونَ عَلَيْهَا وَهُمْ عَنْهَا مُعْرِضُونَ Wakaayyin min ayatin fee alssamawati waalardi yamurroona AAalayha wahum AAanha muAAridoona And how many a sign in the heavens and the earth they pass by, while they are averse therefrom. Hilali & KhanAnd how many a sign within the heavens and earth do they pass over while they, therefrom, are turning away. Saheeh International(இவ்வாறே) வானங்களிலும் பூமியிலும் எத்தனையோ அத்தாட்சிகள் இருக்கின்றன. அவற்றின் முன் அவர்கள் (அனு தினமும்) செல்கின்றனர். எனினும், அவர்கள் அவற்றை (சிந்திக்காது) புறக்கணித்தே விடுகின்றனர். தாருல் ஹுதாஇன்னும் வானங்களிலும் பூமியிலும் எத்தனையோ அத்தாட்சிகள் இருக்கின்றன, ஆனால் அவற்றை அவர்கள் புறக்கணித்தவர்களாகவே அவற்றினருகே நடந்து செல்கின்றனர். ஜான் டிரஸ்ட் நிறுவனம்இன்னும், வானங்களில், மற்றும் பூமியில் எத்தனையோ அத்தாட்சிகள் இருக்கின்றன, (ஆனால்) அவற்றை(ச் சிந்திக்காது) புறக்கணித்தவர்களாகவே அவற்றின் பக்கம் அவர்கள் (அனுதினமும்) செல்கின்றனர். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)How many signs there are in the heavens and earth which they pass by without paying them any heed! Ruwwad Center |
12:106 وَمَا يُؤْمِنُ أَكْثَرُهُمْ بِاللَّهِ إِلَّا وَهُمْ مُشْرِكُونَ Wama yuminu aktharuhum biAllahi illa wahum mushrikoona And most of them believe not in Allâh except that they attribute partners to Him (i.e. they are Mushrikûn, i.e. polytheists. See Verse 6:121). Hilali & KhanAnd most of them believe not in Allah except while they associate others with Him. Saheeh Internationalஅவர்களில் பெரும்பாலானவர்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதில்லை. (அவ்வாறு அவர்களில் எவரேனும் நம்பிக்கை கொள்ளாதபோதிலும்) அவனுக்கு இணையும் வைக்கின்றனர். தாருல் ஹுதாமேலும் அவர்கள் இணைவைப்பவர்களாக இருக்கிற நிலையிலில்லாமல் அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதில்லை. ஜான் டிரஸ்ட் நிறுவனம்மேலும், அவர்களில் பெரும்பாலோர்-அவர்கள் இணை வைக்கிறவர்களாகவே தவிர அல்லாஹ்வை விசுவாசிப்பதில்லை. மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)And most of them do not believe in Allah except that they associate partners with Him. Ruwwad Center |
12:107 أَفَأَمِنُوا أَنْ تَأْتِيَهُمْ غَاشِيَةٌ مِنْ عَذَابِ اللَّهِ أَوْ تَأْتِيَهُمُ السَّاعَةُ بَغْتَةً وَهُمْ لَا يَشْعُرُونَ Afaaminoo an tatiyahum ghashiyatun min AAathabi Allahi aw tatiyahumu alssaAAatu baghtatan wahum la yashAAuroona Do they then feel secure from the coming against them of the covering veil of the torment of Allâh, or of the coming against them of the (Final) Hour, all of a sudden while they perceive not? Hilali & KhanThen do they feel secure that there will not come to them an overwhelming [aspect] of the punishment of Allah or that the Hour will not come upon them suddenly while they do not perceive? Saheeh International(அவர்களைச்) சூழ்ந்து கொள்ளக்கூடிய அல்லாஹ்வின் வேதனை அவர்களிடம் வராதென்றோ அல்லது அவர்கள் அறியாத நிலைமையில் திடுகூறாய் (அவர்களுடைய) முடிவு காலம் அவர்களுக்கு வராதென்றோ அவர்கள் அச்சமற்றிருக்கின்றனரா? தாருல் ஹுதா(அவர்களைச்) சூழ்ந்து கொள்ளக்கூடிய அல்லாஹ்வின் வேதனை அவர்களுக்கு வந்துவிடுவதைப் பற்றியும் அல்லது அவர்கள் அறியாதிருக்கும் போது திடீரென முடிவு காலம் வந்து விடுவதைப்பற்றியும் அவர்கள் அச்சமற்று இருக்கின்றார்களா? ஜான் டிரஸ்ட் நிறுவனம்(அவர்களைச்) சூழ்ந்து கொள்ளக்கூடிய அல்லாஹ்வின் வேதனை அவர்களிடம் வந்து விடுவதைப் பற்றியும், அல்லது அவர்கள் அறியாத நிலைமையில் திடுகூறாய் (அவர்களுடைய முடிவு காலமான) மறுமை அவர்களுக்கு வந்து விடுவதைப் பற்றியும் அவர்கள் அச்சமற்றிருக்கின்றனரா? மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Do they feel secure that an overwhelming punishment from Allah will not overtake them, or that the Hour will not come upon them by surprise when they least expect it? Ruwwad Center |
12:108 قُلْ هَٰذِهِ سَبِيلِي أَدْعُو إِلَى اللَّهِ ۚ عَلَىٰ بَصِيرَةٍ أَنَا وَمَنِ اتَّبَعَنِي ۖ وَسُبْحَانَ اللَّهِ وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ Qul hathihi sabeelee adAAoo ila Allahi AAala baseeratin ana wamani ittabaAAanee wasubhana Allahi wama ana mina almushrikeena Say (O Muhammad [sal-Allâhu 'alayhi wa sallam]): "This is my way; I invite to Allâh (i.e. to the Oneness of Allâh – Islâmic Monotheism) with sure knowledge, I and whosoever follows me (also must invite others to Allâh, i.e. to the Oneness of Allâh – Islâmic Monotheism with sure knowledge). And Glorified and Exalted is Allâh (above all that they associate as partners with Him). And I am not of the Mushrikûn (polytheists, pagans, idolaters and disbelievers in the Oneness of Allâh; those who worship others along with Allâh or set up rivals or partners to Allâh)." Hilali & KhanSay, "This is my way; I invite to Allah with insight, I and those who follow me. And exalted is Allah; and I am not of those who associate others with Him." Saheeh International(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "இதுவே எனது (நேரான) வழி. நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன். தெளிவான ஆதாரத்தின் மீதே நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கிறோம். (இணை துணைகளை விட்டு) அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன். ஆகவே, (அவனுக்கு) இணை வைப்பவர்களில் நானும் ஒருவனல்ல." தாருல் ஹுதா(நபியே!) நீர் சொல்வீராக! “இதுவே என்னுடைய (நேரிய) வழியாகும்; நான் அல்லாஹ்வின் பால் (உங்களை) அழைக்கின்றேன்; நானும் என்னைப் பின்பற்றியவர்களும் தெளிவான ஞானத்தின் மீதே இருக்கின்றோம்; அல்லாஹ் மிகத் தூய்மையானவன்; ஆகவே, அவனுக்கு இணைவைப்போரில் நானும் ஒருவனல்லன்.” ஜான் டிரஸ்ட் நிறுவனம்(நபியே!) நீர் கூறுவீராக! இதுவே எனது நேரான வழியாகும், நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன், தெளிவான ஆதாரத்தின் மீதே, நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கிறோம், அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன், நான் அவனுக்கு இணைவைப்போரில் உள்ளவனுமல்லன். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Say [O Prophet], “This is my way. I call to Allah with clear evidence – I and those who follow me. Glory be to Allah, and I am not one of those who associate partners with Him.” Ruwwad Center |
12:109 وَمَا أَرْسَلْنَا مِنْ قَبْلِكَ إِلَّا رِجَالًا نُوحِي إِلَيْهِمْ مِنْ أَهْلِ الْقُرَىٰ ۗ أَفَلَمْ يَسِيرُوا فِي الْأَرْضِ فَيَنْظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ ۗ وَلَدَارُ الْآخِرَةِ خَيْرٌ لِلَّذِينَ اتَّقَوْا ۗ أَفَلَا تَعْقِلُونَ Wama arsalna min qablika illa rijalan noohee ilayhim min ahli alqura afalam yaseeroo fee alardi fayanthuroo kayfa kana AAaqibatu allatheena min qablihim waladaru alakhirati khayrun lillatheena ittaqaw afala taAAqiloona And We sent not before you (as Messengers) any but men to whom We revealed, from among the people of townships. Have they not travelled in the land and seen what was the end of those who were before them? And verily, the home of the Hereafter is the best for those who fear Allâh and obey Him (by abstaining from sins and evil deeds, and by performing righteous good deeds). Do you not then understand? Hilali & KhanAnd We sent not before you [as messengers] except men to whom We revealed from among the people of cities. So have they not traveled through the earth and observed how was the end of those before them? And the home of the Hereafter is best for those who fear Allah; then will you not reason? Saheeh Internationalஉங்களுக்கு முன்னர் பற்பல ஊராருக்கும் நாம் அனுப்பிய தூதர்கள் அவ்வூர்களிலிருந்த மனிதர்களேயன்றி வேறில்லை. எனினும், அவர்களுக்கு (நம்முடைய கட்டளைகளை) வஹ்யி மூலம் அறிவித்தோம். இவர்கள் பூமியில் பிரயாணம் செய்யவில்லையா? (அவ்வாறு செய்தால்) இவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதை இவர்கள் கண்டுகொள்வார்கள். மறுமையின் வீடுதான் இறைஅச்சம் உடையவர்களுக்கு மிக்க மேலானது. இவ்வளவு கூட நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா? தாருல் ஹுதா(நபியே!) உமக்கு முன்னர் (பற்பல சமூகங்களுக்கும் ) நாம் அனுப்பிய தூதர்கள் (அந்தந்த சமூகங்களின்) ஊர்களிலிருந்த மனிதர்களேயன்றி வேறில்லை; அவர்களுக்கு நாம் வஹீ மூலம் (நம் கட்டளைகளை) அறிவித்தோம் - இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து இவர்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்க வில்லையா? மறுமை வீடுதான் பயபக்தியுடையவர்களுக்கு மிகவும் மேலானதாகும்; (இதனை) நீங்கள் (சிந்தித்து) விளங்கிக்கொள்ள வேண்டாமா? ஜான் டிரஸ்ட் நிறுவனம்உமக்கு முன்னர் ஊர்வாசிகளிலுள்ள (மனித இனத்தவர்களில்) ஆடவர்களை அல்லாமல் (மலக்குகளை) நாம் (தூதர்களாக) அனுப்பவில்லை, அவர்களுக்கு (நம்முடைய கட்டளைகளை) வஹீமூலம் அறிவிக்கின்றோம், அவர்கள் பூமியில் பிரயாணம் செய்யவில்லையா?” (அவ்வாறு பிரயாணம் செய்தால்) அவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எப்படி ஆயிற்று என்பதை அவர்கள் கண்டுகொள்வார்கள், மறுமையின் வீடோ பயபக்தியுடையோர்களுக்கு மிக்க மேலானது, நீங்கள் விளங்கிக் கொள்ள மாட்டீர்களா? மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)We did not send before you except men whom We gave revelation, from the people of each society. Have they not traveled in the land to see how was the end of those who came before them? But the home of the Hereafter is far better for those who fear Allah. Do you not then understand? Ruwwad Center |
12:110 حَتَّىٰ إِذَا اسْتَيْأَسَ الرُّسُلُ وَظَنُّوا أَنَّهُمْ قَدْ كُذِبُوا جَاءَهُمْ نَصْرُنَا فَنُجِّيَ مَنْ نَشَاءُ ۖ وَلَا يُرَدُّ بَأْسُنَا عَنِ الْقَوْمِ الْمُجْرِمِينَ Hatta itha istayasa alrrusulu wathannoo annahum qad kuthiboo jaahum nasruna fanujjiya man nashao wala yuraddu basuna AAani alqawmi almujrimeena (They were reprieved) until, when the Messengers gave up hope and thought that they were denied (by their people), then came to them Our Help, and whomsoever We willed were rescued. And Our punishment cannot be warded off from the people who are Mujrimûn (criminals, sinners, disbelievers, polytheists). Hilali & Khan[They continued] until, when the messengers despaired and were certain that they had been denied, there came to them Our victory, and whoever We willed was saved. And Our punishment cannot be repelled from the people who are criminals. Saheeh Internationalநம் தூதர்கள் (தாங்கள்) பொய்யாக்கப்பட்டு விட்டதாக நம்பிக்கை இழந்துவிடும் வரையிலும் (அவ்வக்கிரமக்காரர்களை நாம் விட்டு வைத்தோம். பின்னர்) நம் உதவி அவர்களை வந்தடைந்தது. நாம் நாடியவர்கள் பாதுகாக்கப்பட்டனர். நம் வேதனையை குற்றம் செய்யும் மக்களை விட்டு எவராலும் நீக்கிவிட முடியாது. தாருல் ஹுதா(நம்) தூதர்கள் நிச்சயமாக பொய்ப்படுத்தப்பட்டு விட்டார்கள் என்று எண்ணி நம்பிக்கை இழந்து விடும் பொழுது நமது உதவி அவர்களுக்கு வந்தது; நாம் நாடியவர்கள் காப்பாற்றப்பட்டனர். நமது தண்டனை குற்றம் புரிந்த கூட்டத்தாரைவிட்டும் நீக்கப்படாது. ஜான் டிரஸ்ட் நிறுவனம்(நபியே! எந்த சமூகத்தார் மீதும் தண்டனையை நாம் துரிதப்படுத்தவில்லை) எதுவரையெனில், (தம் சமூகத்தவர்கள் விசுவாசம் கொள்ளவே மாட்டார்கள் என அத்)தூதர்கள் நிராசை அடைந்து, நிச்சயமாக நாம் (அவர்களால்) பொய்ப் படுத்தப்பட்டு விட்டோம் என அவர்கள் உறுதி கொண்டுவிட்டனர், (அப்போது) அவர்களுக்கு நம்முடைய உதவி வந்தது, (பின்னர்) நாம் நாடியவர்கள் காப்பாற்றப்பட்டனர், குற்றவாளிகளான சமூகத்தாரை விட்டும், நம் தண்டனை நீக்கப்படவுமாட்டாது. மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Until when the messengers lost all hope and realized that they were dismissed as liars, Our help came to them, so We saved whom We willed, and Our punishment cannot be averted from the wicked people. Ruwwad Center |
12:111 لَقَدْ كَانَ فِي قَصَصِهِمْ عِبْرَةٌ لِأُولِي الْأَلْبَابِ ۗ مَا كَانَ حَدِيثًا يُفْتَرَىٰ وَلَٰكِنْ تَصْدِيقَ الَّذِي بَيْنَ يَدَيْهِ وَتَفْصِيلَ كُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً لِقَوْمٍ يُؤْمِنُونَ Laqad kana fee qasasihim AAibratun liolee alalbabi ma kana hadeethan yuftara walakin tasdeeqa allathee bayna yadayhi watafseela kulli shayin wahudan warahmatan liqawmin yuminoona Indeed in their stories, there is a lesson for men of understanding. It (the Qur'ân) is not a forged statement but a confirmation of (Allâh's existing Books) which were before it [i.e. the Taurât (Torah), the Injîl (Gospel) and other Scriptures of Allâh] and a detailed explanation of everything and a guide and a mercy for a people who believe. Hilali & KhanThere was certainly in their stories a lesson for those of understanding. Never was the Qur'an a narration invented, but a confirmation of what was before it and a detailed explanation of all things and guidance and mercy for a people who believe. Saheeh Internationalஅறிவுடையவர்களுக்கு (நபிகளாகிய) இவர்களுடைய சரித்திரங்களில் நல்லதோர் படிப்பினை நிச்சயமாக இருக்கிறது. (இது) பொய்யான கட்டுக் கதையன்று; ஆனால், அவர்களிடமுள்ள வேதத்தை உண்மையாக்கி வைத்து ஒவ்வொரு விஷயத்தையும் விவரித்துக் கூறுவதாக இருக்கிறது. அன்றி, நம்பிக்கையாளர்களுக்கு நேரான வழியாகவும் ஓர் அருளாகவும் இருக்கிறது. தாருல் ஹுதா(நிச்சயமாக) அவர்களின் வரலாறுகளில் அறிவுடையோருக்கு (நல்ல) படிப்பினை இருக்கிறது; இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாக இருக்கவில்லை, மாறாக இதற்கு முன் உள்ள (வேதத்)தையும் இது உண்மையாக்கி வைக்கிறது. ஒவ்வொரு விஷயத்தையும் இது விவரித்துக் காட்டுவதாகவும், நம்பிக்கை கொண்ட சமூகத்தவருக்கு நேர்வழியாகவும், ரஹ்மத்தாகவும் இருக்கிறது. ஜான் டிரஸ்ட் நிறுவனம்அறிவுடையோருக்கு (நபிமார்களாகிய) இவர்களுடைய வரலாற்றில் நல்லதொரு படிப்பினை திட்டமாக இருக்கிறது, (இந்தக் குர் ஆன்) பொய்யாகக் கற்பனை செய்யப்படுகின்ற செய்தியாக இருந்ததில்லை, ஆயினும், இதற்கு முன் உள்ள (வேதத்)தை உண்மையாக்கி வைத்து ஒவ்வொரு விஷயத்தையும் விவரித்துக் கூறுவதாகவும் இருக்கிறது, அன்றியும், விசுவாசங் கொண்டோருக்கு நேர் வழியாகவும், அருளாகவும் இருக்கிறது. மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)In their stories there is truly a lesson for people of understanding. This [Qur’an] is not a fabricated tale, rather a confirmation of what came before it, a detailed explanation of everything, a guidance and mercy for people who believe. Ruwwad Center |