17 - al-Isra' (The Night Journey)

الْإِسْرَاء - - بَنِيْ إِسْرَآءِيْل
பனீ இஸ்ராயீல் (இஸ்ராயீலின் சந்ததிகள்)
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
17:1
سُبْحَانَ الَّذِي أَسْرَىٰ بِعَبْدِهِ لَيْلًا مِنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا ۚ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ
Subhana allathee asra biAAabdihi laylan mina almasjidi alharami ila almasjidi alaqsa allathee barakna hawlahu linuriyahu min ayatina innahu huwa alssameeAAu albaseeru


Glorified (and Exalted) is He (Allâh) [above all that (evil) they associate with Him] (Tafsir Qurtubî) Who took His slave (Muhammad [sal-Allâhu 'alayhi wa sallam]) for a journey by night from Al-Masjid Al-Harâm (at Makkah) to Al-Masjid Al-Aqsâ (in Jerusalem), the neighbourhood whereof We have blessed, in order that We might show him (Muhammad [sal-Allâhu 'alayhi wa sallam]) of Our Ayât (proofs, evidences, lessons, signs, etc.). Verily, He is the All-Hearer, the All-Seer.
Hilali & Khan

Exalted is He who took His Servant by night from al-Masjid al-Haram to al-Masjid al-Aqsa, whose surroundings We have blessed, to show him of Our signs. Indeed, He is the Hearing, the Seeing.
Saheeh International

(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் (முஹம்மது (ஸல்) என்னும்) தன் அடியாரை(க் கஅபாவாகிய) சிறப்புற்ற பள்ளியில் இருந்து (வெகு தூரத்தில் இருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஒரே இரவில் அழைத்துச் சென்றான். (அவ்வாறு அழைத்துச் சென்ற) நாம் அதனைச் சூழவுள்ளவை சிறப்புற்று ஓங்க அபிவிருத்தி அடைய செய்திருக்கிறோம். நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காகவே (அங்கு அழைத்துச் சென்றோம்.) நிச்சயமாக (உங்களது இறைவன்) செவியுறுபவனாகவும், உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான்.
தாருல் ஹுதா

(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான்.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

தன் அடியாரை (கஅபாவாகிய) சிறப்புப் பெற்ற பள்ளியிலிருந்து (பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு, இரவின் ஒரு பகுதியில் பயணம் செய்வித்தானே அத்தகையவன் மிகப் பரிசுத்தமானவன், (மஸ்ஜிதுல் அக்ஸாவாகிய) அது எத்தகையதென்றால் நாம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை அபிவிருத்தியடையச் செய்திருக்கிறோம், நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காகவே (அழைத்துச் சென்றோம்.) நிச்சயமாக (உமதிரட்சகனாகிய) அவனே செவியேற்கிறவன், பார்க்கிறவன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

Glory be to the One Who took His slave [Muhammad] by night from the Sacred Mosque [in Makkah] to the Aqsā Mosque [in Jerusalem] whose surroundings We have blessed, so that We may show him some of Our signs. Indeed, He is the All-Hearing, the All-Seeing.
Ruwwad Center

17:2
وَآتَيْنَا مُوسَى الْكِتَابَ وَجَعَلْنَاهُ هُدًى لِبَنِي إِسْرَائِيلَ أَلَّا تَتَّخِذُوا مِنْ دُونِي وَكِيلًا
Waatayna moosa alkitaba wajaAAalnahu hudan libanee israeela alla tattakhithoo min doonee wakeelan


And We gave Mûsâ (Moses) the Scripture and made it a guidance for the Children of Israel (saying): "Take none other than Me as (your) Wakîl (Protector, Lord, or Disposer of your affairs, etc).
Hilali & Khan

And We gave Moses the Scripture and made it a guidance for the Children of Israel that you not take other than Me as Disposer of affairs,
Saheeh International

நாம் மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம். இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு அதனை ஒரு வழிகாட்டியாக அமைத்து "நீங்கள் என்னைத் தவிர (மற்ற எவரையும் உங்களுக்கு) பொறுப்பாளனாக எடுத்துக் கொள்ளக்கூடாது" என்று அவர்களுக்குக் கட்டளையிட்டோம்.
தாருல் ஹுதா

இன்னும், நாம் மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம்; நாம் அதை இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு வழிகாட்டியாக ஆக்கி, “என்னையன்றி வேறு எவரையும் நீங்கள் பாதுகாவலனாக ஆக்கிக் கொள்ளாதீர்கள் (எனக் கட்டளையிட்டோம்).
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

மேலும், மூஸாவிற்கு வேதத்ததையும் நாம் கொடுத்தோம், அதனை இஸ்ராயீலின் மக்களுக்கு வழிகாட்டியாகவும் ஆக்கி, “நீங்கள் என்னைத் தவிர (மற்றெவரையும் உங்கள் செயல்களுக்கு) பொறுப்பாளராக எடுத்துக் கொள்ள வேண்டாம்” (என்றும் கட்டளையிட்டோம்.)
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

We gave Moses the Scripture and made it a guide for the Children of Israel, “Do not take besides Me anyone as a Disposer of Affairs.
Ruwwad Center

17:3
ذُرِّيَّةَ مَنْ حَمَلْنَا مَعَ نُوحٍ ۚ إِنَّهُ كَانَ عَبْدًا شَكُورًا
Thurriyyata man hamalna maAAa noohin innahu kana AAabdan shakooran


"O offspring of those whom We carried (in the ship) with Nûh (Noah)! Verily, he was a grateful slave."
Hilali & Khan

O descendants of those We carried [in the ship] with Noah. Indeed, he was a grateful servant.
Saheeh International

(இஸ்ராயீலின் சந்ததிகளே உங்கள் மூதாதைகளைக் கப்பலில்) நாம் நூஹ்வுடன் சுமந்து (வெள்ளப்பிரளயத்திலிருந்து பாதுகாத்துக்) கொண்டோம். அவர்களின் சந்ததிகளே! அவர் நிச்சயமாக (அதற்கு) மிக்க நன்றி செலுத்தும் அடியாராகவே இருந்தார். (அவ்வாறே இஸ்ராயீலின் சந்ததிகளாகிய நீங்களும் எனக்கு நன்றி செலுத்துங்கள்.)
தாருல் ஹுதா

நாம் நூஹுடன் கப்பலில் ஏற்றி(க் காப்பாற்றி)யவர்களின் சந்ததியினரே! நிச்சயமாக அவர் நன்றி செலுத்தும் அடியாராக இருந்தார்.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

(நபி) நூஹுடன் (கப்பலில்) நாம் ஏற்றிக் காப்பாற்றிக்) கொண்டவர்களின் சந்ததிகளே! நிச்சயமாக அவர் (அதற்கு) மிக்க நன்றி செலுத்தும் அடியாராகவே இருந்தார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

O descendants of those whom We carried [on board] with Noah. He was indeed a grateful slave.”
Ruwwad Center

17:4
وَقَضَيْنَا إِلَىٰ بَنِي إِسْرَائِيلَ فِي الْكِتَابِ لَتُفْسِدُنَّ فِي الْأَرْضِ مَرَّتَيْنِ وَلَتَعْلُنَّ عُلُوًّا كَبِيرًا
Waqadayna ila banee israeela fee alkitabi latufsidunna fee alardi marratayni walataAAlunna AAuluwwan kabeeran


And We decreed for the Children of Israel in the Scripture: indeed you would do mischief in the land twice and you will become tyrants and extremely arrogant!
Hilali & Khan

And We conveyed to the Children of Israel in the Scripture that, "You will surely cause corruption on the earth twice, and you will surely reach [a degree of] great haughtiness.
Saheeh International

இஸ்ராயீலின் சந்ததிகளே! நிச்சயமாக நீங்கள் பூமியில் இரண்டு முறை விஷமம் செய்வீர்கள் என்றும், நிச்சயமாக நீங்கள் பெரும் மேன்மைகளை அடை(ந்து கர்வம் கொண்டு அநியாயம் செய்)வீர்கள்! என்றும் (உங்களுக்கு அளித்த) வேதத்தில் நாம் முடிவு செய்துள்ளோம்.
தாருல் ஹுதா

நாம் இஸ்ராயீலின் சந்ததியினருக்கு (முன்னறிவிப்பாக தவ்ராத்) வேதத்தில்: “நிச்சயமாக நீங்கள் பூமியில் இருமுறை குழப்பம் உண்டாக்குவீர்கள்; (அல்லாஹ்வுக்கு வழிபடாது) ஆணவத்துடன், பெரும் அழிச்சாட்டியங்கள் செய்பவர்களாக நடந்து கொள்வீர்கள்” என்று அறிவித்தோம்.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

இஸ்ராயீலின் மக்களுக்கு, “நிச்சயமாக நீங்கள் இரு தடவை பூமியில் குழப்பம் செய்வீர்கள்” என்றும், நிச்சயமாக நீங்கள் (அகம்பாவத்துடன் அக்கிரமங்கள் செய்து) பெரும் உயர்வாக உயர்வீர்கள்” என்றும் (உங்களுக்களிக்கப்பட்ட) வேதத்தில் நாம் முடிவு செய்திருந்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

We declared to the Children of Israel in the Scripture, “You will surely spread corruption on earth twice, and you will surely become exceedingly arrogant.
Ruwwad Center

17:5
فَإِذَا جَاءَ وَعْدُ أُولَاهُمَا بَعَثْنَا عَلَيْكُمْ عِبَادًا لَنَا أُولِي بَأْسٍ شَدِيدٍ فَجَاسُوا خِلَالَ الدِّيَارِ ۚ وَكَانَ وَعْدًا مَفْعُولًا
Faitha jaa waAAdu oolahuma baAAathna AAalaykum AAibadan lana olee basin shadeedin fajasoo khilala alddiyari wakana waAAdan mafAAoolan


So, when the promise came for the first of the two, We sent against you slaves of Ours given to terrible warfare. They entered the very innermost parts of your homes. And it was a promise (completely) fulfilled.
Hilali & Khan

So when the [time of] promise came for the first of them, We sent against you servants of Ours - those of great military might, and they probed [even] into the homes, and it was a promise fulfilled.
Saheeh International

அவ்விரண்டில் முதல் தவணை வந்த சமயத்தில் (நீங்கள் செய்து கொண்டிருந்த குற்றங்களுக்குத் தண்டனையாக இரக்கமற்ற) பெரும் பலவான்களாகிய மனிதர்களை உங்கள் மீது ஏவிவிட்டோம். அவர்கள் (பைத்துல் முகத்தஸிலிருந்த உங்கள்) வீடுகளுக்கு ஊடுருவிச்சென்று (தங்கள் கைக்குக் கிட்டியதையெல்லாம் இடித்தழித்து நாசமாக்கி) விட்டார்கள். (அதனால் பைத்துல் முகத்தஸிலிருந்த ஆலயமும், அவ்வூரும் அழிந்து நாசமாயின. இவ்வாறு நம்முடைய முந்திய) வாக்குறுதி நிறைவேறியது.
தாருல் ஹுதா

எனவே, அவ்விரண்டில் முதலாவது வாக்குறுதி (நிறைவேறும் காலம்) வந்த போது, உங்களுக்கு எதிராக (போரில்) கொடிய வலிமையுடைய நம் அடியார்களை ஏவி விட்டோம்; அவர்கள் உங்கள் வீடுகளில் புகுந்து (உங்களையும். உங்கள் பொருள்களையும்) தேடி (அழித்து) விட்டார்கள்; (இவ்வாறு முதல்) வாக்குறுதி நிறைவேறியது.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

எனவே, அவ்விரண்டில் முதல் வாக்குறுதி வந்த சமயத்தில் நம் அடியார்களில் பெரும் பலசாலிக(ளாகிய மனிதர்க)ளை உங்களுக்கு எதிராக (உங்கள் மீது ஏவி) அனுப்பினோம், அவர்கள் (பைத்துல் முகத்தஸிலிருந்த உங்கள்) வீடுகளுக்குள் ஊடுருவிச் சென்று விட்டார்கள், அது நிறைவேற்றப்பட்ட வாக்காகவும் இருந்தது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

When the first of the two warnings came to pass, We sent against you some of Our slaves of great might, and they ravaged through the land; this warning was bound to be fulfilled.
Ruwwad Center

17:6
ثُمَّ رَدَدْنَا لَكُمُ الْكَرَّةَ عَلَيْهِمْ وَأَمْدَدْنَاكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَجَعَلْنَاكُمْ أَكْثَرَ نَفِيرًا
Thumma radadna lakumu alkarrata AAalayhim waamdadnakum biamwalin wabaneena wajaAAalnakum akthara nafeeran


Then We gave you a return of victory over them. And We helped you with wealth and children and made you more numerous in man-power.
Hilali & Khan

Then We gave back to you a return victory over them. And We reinforced you with wealth and sons and made you more numerous in manpower
Saheeh International

பின்னர் (உங்கள்) காலச் சக்கரத்தைத் திருப்பி உங்களுக்கு வெற்றியைக் கொடுத்து (ஏராளமான) பொருள்களையும் மக்களையும் கொண்டு நாம் உங்களுக்கு உதவி புரிந்து உங்களைப் பெரும் கூட்டத்தினராகவும் ஆக்கினோம்.
தாருல் ஹுதா

பின்னர் அவர்கள் மீது வெற்றியடையும் வாய்ப்பை உங்கள்பால் திருப்பினோம்; ஏராளமான பொருள்களையும், புதல்வர்களையும் (தந்தது) கொண்டு உங்களுக்கு உதவி செய்து, உங்களைத் திரளான கூட்டத்தினராகவும் ஆக்கினோம்.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

பின்னர், அவர்கள் மீது நீங்கள் வெற்றி கொள்ளும் வாய்ப்பை உங்கள் வகையில் திருப்பினோம், (ஏராளமான) பொருட்களையும், ஆண் மக்களையும் (நல்கியது) கொண்டு நாம் உங்களுக்கு உதவி புரிந்தோம், மேலும், உங்களை எண்ணிக்கையில் (அவர்களை விட) மிக அதிகமானவர்களாக நாம் ஆக்கினோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

Then We gave you the upper hand over them and strengthened you with wealth and children, and made you greater in number.
Ruwwad Center

17:7
إِنْ أَحْسَنْتُمْ أَحْسَنْتُمْ لِأَنْفُسِكُمْ ۖ وَإِنْ أَسَأْتُمْ فَلَهَا ۚ فَإِذَا جَاءَ وَعْدُ الْآخِرَةِ لِيَسُوءُوا وُجُوهَكُمْ وَلِيَدْخُلُوا الْمَسْجِدَ كَمَا دَخَلُوهُ أَوَّلَ مَرَّةٍ وَلِيُتَبِّرُوا مَا عَلَوْا تَتْبِيرًا
In ahsantum ahsantum lianfusikum wain asatum falaha faitha jaa waAAdu alakhirati liyasoooo wujoohakum waliyadkhuloo almasjida kama dakhaloohu awwala marratin waliyutabbiroo ma AAalaw tatbeeran


(And We said): "If you do good, you do good for your own selves, and if you do evil (you do it) against yourselves." Then, when the second promise came to pass, (We permitted your enemies) to disgrace your faces and to enter the mosque (of Jerusalem) as they had entered it before, and to destroy with utter destruction all that fell in their hands.
Hilali & Khan

[And said], "If you do good, you do good for yourselves; and if you do evil, [you do it] to yourselves." Then when the final promise came, [We sent your enemies] to sadden your faces and to enter the temple in Jerusalem, as they entered it the first time, and to destroy what they had taken over with [total] destruction.
Saheeh International

(அச்சமயம் அவர்களை நோக்கி) நீங்கள் நன்மை செய்தால் (அது) உங்களுக்குத்தான் நன்று. நீங்கள் தீமை செய்தால் அது உங்களுக்கே (கேடாகும் என்றும் நாம் கூறினோம். எனினும், அவர்கள் அநியாயம் செய்யவே ஆரம்பித்தனர். ஆகவே) இரண்டாவது தவணை வந்த சமயத்தில் (உங்களைத் துன்புறுத்தி) உங்களுடைய முகங்களை கெடுத்து, (துன்புறுத்தி) முந்திய தடவை மஸ்ஜிதுல் அக்ஸாவில் நுழைந்தவாறே (இந்தத் தடவையும் அதனுள்) நுழைந்து, தங்கள் கைக்குக் கிடைத்தவைகளையெல்லாம் இடித்தழித்து நாசமாக்கக் கூடிய (கடின சித்தமுடைய) அவர்களை (நாம் உங்கள் மீது) ஏவினோம்.
தாருல் ஹுதா

நீங்கள் நன்மை செய்தால் உங்களுக்கே நன்மை செய்து கொள்கிறீர்கள். நீங்கள் தீமை செய்தால் அதுவும் உங்களுக்கே(தீமை)யாகும், உங்கள் முகங்களை சோகம் அடையச் செய்வதற்காகவும் பைத்துல் முகத்தஸில் முதல் முறையாக அவர்கள் நுழைந்தது போல் நுழைந்து அவர்கள் தாங்கள் கைப்பற்றிக் கொண்டவைகளை முற்றாக அழித்து விடுவதற்காகவும் (எதிரிகளை) இரண்டாம் வாக்குறுதி வரும்பொழுது (நாம் அனுப்பினோம்).
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

நீங்கள் நன்மை செய்தால் உங்கள் ஆத்மாக்களுக்கே நன்மை செய்துகொள்கிறீர்கள், நீங்கள் தீமை செய்தால் அ(தன் தீமையான)து அவற்றின் மீதேயாகும், (என்று நாம் கூறினோம், பின்னும், அவர்கள் அக்கிரமம் செய்யத் தலைப் பட்டனர், ஆகவே,) இரண்டாவது தவணை வந்த சமயத்தில், உங்களுடைய முகங்களை அவர்கள் இழிவடையச் செய்வதற்காகவும், (அக்ஸா) பள்ளியில் முந்திய தடவை அதில் அவர்கள் நுழைந்தவாறே (இந்தத் தடவையும்) அவர்கள் நுழைந்து விடுவதற்காகவும், எவற்றை அவர்கள் மிகைத்து விட்டார்களோ அவற்றையெல்லாம் அவர்கள் (இடித்தழித்து) பெரும் சேதத்தை விளைவித்து விடுவதற்காகவும் (அவர்களை நாம் உங்கள் மீது ஏவி அனுப்பினோம்.)
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

If you do good, it is for your own good, but if you do evil, it is to your own loss. Then when the second warning came to pass, your enemies would disgrace and suppress you, and enter the Temple [of Jerusalem] as they entered it the first time, and utterly destroy whatever fell into their power.
Ruwwad Center

17:8
عَسَىٰ رَبُّكُمْ أَنْ يَرْحَمَكُمْ ۚ وَإِنْ عُدْتُمْ عُدْنَا ۘ وَجَعَلْنَا جَهَنَّمَ لِلْكَافِرِينَ حَصِيرًا
AAasa rabbukum an yarhamakum wain AAudtum AAudna wajaAAalna jahannama lilkafireena haseeran


[And We said in the Taurât (Torah)]: "It may be that your Lord may show mercy to you, but if you return (to sins), We shall return (to Our punishment). And We have made Hell a prison for the disbelievers.
Hilali & Khan

[Then Allah said], "It is expected, [if you repent], that your Lord will have mercy upon you. But if you return [to sin], We will return [to punishment]. And We have made Hell, for the disbelievers, a prison-bed."
Saheeh International

(நீங்கள் விஷமம் செய்வதைவிட்டுப் பின்னும் விலகிக் கொண்டால்) உங்கள் இறைவன் உங்கள் மீது கருணைப் புரியலாம். (அவ்வாறன்றி உங்கள் விஷமத்தின் பக்கமே) பின்னும் நீங்கள் திரும்பினால் நாமும் (உங்களை முன் போல தண்டிக்க) முன் வருவோம். அன்றி (இத்தகைய) நிராகரிப்பவரை நரகம் சூழ்ந்து கொள்ளும்படியும் செய்வோம்.
தாருல் ஹுதா

(இதன் பின்னரும் நீங்கள் திருந்திக் கொண்டால்) உங்கள் இறைவன் உங்கள் மீது கருணை புரியப்போதும். ஆனால், நீங்கள் (பாவத்தின் பக்கமே) திரும்புவீர்களானால், நாமும் (முன் போல் தண்டிக்கத்) திரும்புவோம்; மேலும் காஃபிர்களுக்கு ஜஹன்ன(ம் எனும் நரக)த்தைச் சிறைச்சாலையாக ஆக்கி வைத்துள்ளோம்.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

(நீங்கள் குழப்பம் செய்வதைவிட்டு விலகிக் கொண்டால்,) உங்கள் இரட்சகன் உங்கள் மீது கருணை புரியப் போதுமானவன், (அவ்வாறின்றி, உங்கள் குழப்பத்தின் பாலே) பின்னும் நீங்கள் திரும்புவீர்களானால், நாமும் (தண்டிக்கத்) திரும்புவோம், இன்னும், நிராகரிப்போருக்கு நரகத்தைச் சிறைச்சாலையாக நாம் ஆக்கியுள்ளோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

Your Lord may bestow mercy upon you, but if you return [to sin], We will return [to punishment]. And We have made Hell a prison for the disbelievers.”
Ruwwad Center

17:9
إِنَّ هَٰذَا الْقُرْآنَ يَهْدِي لِلَّتِي هِيَ أَقْوَمُ وَيُبَشِّرُ الْمُؤْمِنِينَ الَّذِينَ يَعْمَلُونَ الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ أَجْرًا كَبِيرًا
Inna hatha alqurana yahdee lillatee hiya aqwamu wayubashshiru almumineena allatheena yaAAmaloona alssalihati anna lahum ajran kabeeran


Verily, this Qur'ân guides to that which is most just and right and gives glad tidings to the believers (in the Oneness of Allâh and His Messenger Muhammad [sal-Allâhu 'alayhi wa sallam]), who work deeds of righteousness, that they shall have a great reward (Paradise).
Hilali & Khan

Indeed, this Qur'an guides to that which is most suitable and gives good tidings to the believers who do righteous deeds that they will have a great reward.
Saheeh International

நிச்சயமாக இந்தக் குர்ஆன் (உங்களுக்கு) மிக்க நேரானதற்கு வழி காட்டுகின்றது; அன்றி (உங்களில்) நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்பவர்களுக்கு நிச்சயமாக மிகப் பெரிய கூலி உண்டு என்றும் நற்செய்தி கூறுகிறது.
தாருல் ஹுதா

நிச்சயமாக இந்த குர்ஆன் முற்றிலும் நேராக இருக்கும் நல் வழியைக் காட்டுகிறது; அன்றியும் நற்கருமங்கள் செய்து வரும் முஃமின்களுக்கு, நிச்சயமாக மிகப் பெரும் நற்கூலியுண்டு என்றும் நன்மாராயங் கூறுகிறது.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

நிச்சயமாக இந்தக் குர் ஆன், (மனிதர்களுக்கு) எது மிகமிக நேர்மையானதோ அதன்பால் வழிகாட்டுகிறது, நற்கருமங்களையும் செய்கிறார்களே அத்தகைய விசுவாசிகள் - அவர்களுக்கு நிச்சயமாக மிகப் பெரிய நற்கூலி உண்டென்று நன்மாராயமும் கூறுகின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

Indeed, this Qur’an guides to what is most upright, and gives glad tidings to the believers who do righteous deeds that they will have a great reward.
Ruwwad Center

17:10
وَأَنَّ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ أَعْتَدْنَا لَهُمْ عَذَابًا أَلِيمًا
Waanna allatheena la yuminoona bialakhirati aAAtadna lahum AAathaban aleeman


And that those who believe not in the Hereafter, for them We have prepared a painful torment (Hell).
Hilali & Khan

And that those who do not believe in the Hereafter - We have prepared for them a painful punishment.
Saheeh International

அன்றி, (உங்களில்) எவர்கள் மறுமையை நம்பவில்லையோ அவர்களுக்கு நிச்சயமாக நாம் மிகத் துன்புறுத்தும் வேதனையை தயார்படுத்தி வைத்து இருக்கிறோம் (என்றும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது.)
தாருல் ஹுதா

மேலும், எவர்கள் மறுமை நாள் மீது நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுக்கு நிச்சயமாக நாம், நோவினை தரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றோம்.  
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

மேலும், நிச்சயமாக மறுமையை விசுவாசங்கொள்ளவில்லையே அத்தகையோர்-அவர்களுக்கு நாம் மிகத் துன்புறுத்தும் வேதனையை தயாராக்கி வைத்திருக்கிறோம் (என்று எச்சரிக்கையும் செய்கிறது)
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

And that those who do not believe in the Hereafter, We have prepared for them a painful punishment.
Ruwwad Center

17:11
وَيَدْعُ الْإِنْسَانُ بِالشَّرِّ دُعَاءَهُ بِالْخَيْرِ ۖ وَكَانَ الْإِنْسَانُ عَجُولًا
WayadAAu alinsanu bialshsharri duAAaahu bialkhayri wakana alinsanu AAajoolan


And man invokes (Allâh) for evil as he invokes (Allâh) for good and man is ever hasty [i.e., if he is angry with somebody, he invokes (saying): "O Allâh! Curse him," and that one should not do, but one should be patient].
Hilali & Khan

And man supplicates for evil as he supplicates for good, and man is ever hasty.
Saheeh International

மனிதன் நன்மையைக் கோரி பிரார்த்திப்பதைப் போலவே (சில சமயங்களில் அறியாமையினால்) தீமையைக் கோரியும் பிரார்த்திக்கிறான். ஏனென்றால், மனிதன் (இயற்கையாகவே பொறுமையிழந்த) அவசரக்காரனாக இருக்கிறான்.
தாருல் ஹுதா

மனிதன், நன்மைக்காக பிரார்த்தனை செய்வது போலவே (சில சமயம்) தீமைக்காகவும் பிரார்த்திக்கின்றான்; (ஏனென்றால்) மனிதன் அவசரக்காரனாக இருக்கின்றான்.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

மேலும், மனிதன் – நன்மையைக் கோரி அவன் பிரார்த்திப்பதைப் போலவே (சில சமயங்களில்) தீமையைக் கோரியும் பிரார்த்திக்கின்றான், மனிதன் (பொறுமையிழந்த) அவசரக்காரனாகவே இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

Man prays for evil as he prays for good, for man is ever hasty.
Ruwwad Center

17:12
وَجَعَلْنَا اللَّيْلَ وَالنَّهَارَ آيَتَيْنِ ۖ فَمَحَوْنَا آيَةَ اللَّيْلِ وَجَعَلْنَا آيَةَ النَّهَارِ مُبْصِرَةً لِتَبْتَغُوا فَضْلًا مِنْ رَبِّكُمْ وَلِتَعْلَمُوا عَدَدَ السِّنِينَ وَالْحِسَابَ ۚ وَكُلَّ شَيْءٍ فَصَّلْنَاهُ تَفْصِيلًا
WajaAAalna allayla waalnnahara ayatayni famahawna ayata allayli wajaAAalna ayata alnnahari mubsiratan litabtaghoo fadlan min rabbikum walitaAAlamoo AAadada alssineena waalhisaba wakulla shayin fassalnahu tafseelan


And We have appointed the night and the day as two Ayât (signs etc.). Then, We have obliterated the sign of the night (with darkness) while We have made the sign of the day illuminating, that you may seek bounty from your Lord, and that you may know the number of the years and the reckoning. And We have explained everything (in detail) with full explanation.
Hilali & Khan

And We have made the night and day two signs, and We erased the sign of the night and made the sign of the day visible that you may seek bounty from your Lord and may know the number of years and the account [of time]. And everything We have set out in detail.
Saheeh International

இரவையும் பகலையும் நாம் இரு அத்தாட்சிகளாக்கினோம். (அதில்) இரவின் அத்தாட்சியை மங்கச் செய்தோம். (பல இடங்களிலும் சுற்றித் திரிந்து) உங்கள் இறைவனின் அருளை நீங்கள் தேடிக்கொள்வதற்காக பகலின் அத்தாட்சியைப் பிரகாசமாக்கினோம். ஆண்டுகளின் எண்ணிக்கையை(யும் மாதங்களின் கணக்கையும் இதன் மூலம்) நீங்கள் அறிந்து கொள்கின்றீர்கள். ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாகவே நாம் விவரித்துள்ளோம்.
தாருல் ஹுதா

இரவையும், பகலையும் நாம் இரண்டு அத்தாட்சிகளாக ஆக்கினோம்; பின்னர் இரவின் அத்தாட்சி மங்கி (இருளாகி)டச் செய்தோம்; உங்கள் இறைவனுடைய அருட்கொடையை நீங்கள் தேடிக்கொள்வதற்காகவும் - ஆண்டுகளின் எண்ணிக்கைகளையும் கணக்குகளையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும், பகலின் அத்தாட்சியைப் பிரகாசமாக்கினோம் - மேலும் நாம் ஒவ்வொரு பொருளையும் தெளிவாக விவரித்திருக்கிறோம்.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

இரவையும், பகலையும் இரு சான்றுகளாக நாம் ஆக்கினோம்.) (அதில்) இரவின் சான்றினை மங்கச் செய்தோம், (பல பகுதிகளுக்கும் சென்று) நீங்கள் உங்கள் இரட்சகனின் பேரருளைத் தேடிக் கொள்வதற்காகவும், ஆண்டுகளின் எண்ணிக்கையையும், (மாதங்களின்) கணக்கையும் நீங்கள் அறிந்துகொள்வதற்காகவும், பகலின் சான்றினை பார்ப்பதற்குரிய (பிரகாசமான)தாக ஆக்கினோம், ஒவ்வொரு பொருளையும் - அதைத் தெளிவாக நாம் விவரித்துள்ளோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

We have made the day and night as two signs. We darkened the night and made the day bright, so that you may seek your Lord’s bounty and know the number of years and calculation [of time]. And We have expounded everything in detail.
Ruwwad Center

17:13
وَكُلَّ إِنْسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ ۖ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنْشُورًا
Wakulla insanin alzamnahu tairahu fee AAunuqihi wanukhriju lahu yawma alqiyamati kitaban yalqahu manshooran


And We have fastened every man's deeds to his neck, and on the Day of Resurrection, We shall bring out for him a Book which he will find wide open.
Hilali & Khan

And [for] every person We have imposed his fate upon his neck, and We will produce for him on the Day of Resurrection a record which he will encounter spread open.
Saheeh International

ஒவ்வொரு மனிதனின் செயலைப் பற்றிய (விரிவான தினசரிக் குறிப்பை அவனுடைய கழுத்தில் மாட்டியிருக்கிறோம். மறுமை நாளில் அதனை அவனுக்கு ஒரு புத்தகமாக எடுத்துக் கொடுப்போம். அவன் (அதனை) விரித்துப் பார்ப்பான்.
தாருல் ஹுதா

ஒவ்வொரு மனிதனுடைய செயல் குறிப்பையும் அவனுடைய கழுத்தில் நாம் மாட்டி இருக்கிறோம்; கியாமத் நாளில் அவனுக்காக ஓர் ஏட்டை வெளிப்படுத்துவோம் - திறக்கப்பட்ட நிலையில் அதனை அவன் பெற்றுக் கொள்வான்.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

மேலும், ஒவ்வொரு மனிதனின் செயலைப்பற்றிய (தினசரிக்)குறிப்பை அவனுடைய கழுத்தில் அவனுக்கு நாம் மாட்டி இருக்கின்றோம், மறுமை நாளில் அவனுக்காக ஒரு புத்தகத்தையும் வெளிப்படுத்துவோம், அவன் அதனை விரிக்கப்பட்டதாகப் பெற்றுக் கொள்வான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

We have bound every man’s deeds to his neck. On the Day of Resurrection We will bring forth for him a record which he will find spread open.
Ruwwad Center

17:14
اقْرَأْ كِتَابَكَ كَفَىٰ بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيبًا
Iqra kitabaka kafa binafsika alyawma AAalayka haseeban


(It will be said to him): "Read your Book. You yourself are sufficient as a reckoner against you this Day."
Hilali & Khan

[It will be said], "Read your record. Sufficient is yourself against you this Day as accountant."
Saheeh International

(அச்சமயம் அவனை நோக்கி) "இன்றைய தினம் உன்னுடைய கணக்கைப் பார்க்க நீயே போதுமானவன். ஆகவே, உன் (குறிப்புப்) புத்தகத்தை நீ படித்துப் பார்" (என்று கூறுவோம்.)
தாருல் ஹுதா

“நீ உம் புத்தகத்தைப் படித்துப் பார்! இன்று உனக்கு எதிராக உன்னுடைய ஆத்மாவே கணக்கதிகாரியாக இருக்கப் போதும்” (என்று அப்போது நாம் கூறுவோம்).
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

“உன்னுடைய புத்தகத்தை நீயே படித்துப்பார், இன்றையத்தினம் உனக்கு (எதிராக) நீயே கணக்குப் பார்ப்பவனாக இருக்கப்போதும்” (என்று அவனிடம் கூறப்படும்.)
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

[It will be said,] “Read your record; this Day you are sufficient to take account of yourself.”
Ruwwad Center

17:15
مَنِ اهْتَدَىٰ فَإِنَّمَا يَهْتَدِي لِنَفْسِهِ ۖ وَمَنْ ضَلَّ فَإِنَّمَا يَضِلُّ عَلَيْهَا ۚ وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ ۗ وَمَا كُنَّا مُعَذِّبِينَ حَتَّىٰ نَبْعَثَ رَسُولًا
Mani ihtada fainnama yahtadee linafsihi waman dalla fainnama yadillu AAalayha wala taziru waziratun wizra okhra wama kunna muAAaththibeena hatta nabAAatha rasoolan


Whoever goes right, then he goes right only for the benefit of his own self. And whoever goes astray, then he goes astray to his own loss. No one laden with burdens can bear another's burden. And We never punish until We have sent a Messenger (to give warning).
Hilali & Khan

Whoever is guided is only guided for [the benefit of] his soul. And whoever errs only errs against it. And no bearer of burdens will bear the burden of another. And never would We punish until We sent a messenger.
Saheeh International

எவன் நேரான வழியில் செல்கிறானோ அவன் தன்னுடைய நன்மைக்காகவே நேரான வழியில் செல்கிறான். எவன் தவறான வழியில் செல்கிறானோ அவன் (தவறான வழியில் சென்று) தனக்கே தீங்கிழைத்துக் கொள்கிறான். ஒருவனுடைய பாவச்சுமையை மற்றொருவன் சுமக்க மாட்டான். (நம்முடைய யாதொரு) தூதரை அனுப்பாத வரையில் நாம் (எவரையும்) வேதனை செய்வதில்லை.
தாருல் ஹுதா

எவன் நேர்வழியில் செல்கின்றானோ, அவன் தன்னுடைய நன்மைக்காகவே நேர் வழியில் செல்கிறான்; எவன் வழி கேட்டில் செல்கின்றானோ, அவன் தனக்கே கேடு செய்து கொண்டான்; (நிச்சயமாக) ஒருவனுடைய பாவச்சுமையை மற்றொருவன் சுமக்கமாட்டான்; (நம்) தூதரை அனுப்பாத வரையில் (எவரையும்) நாம் வேதனை செய்வதில்லை.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

எவர் நேர் வழியில் செல்கின்றாரோ, அவர் நேர் வழியில் செல்வதெல்லாம் தன(து நன்மை)க்காகவேதான், எவர் வழிகேட்டில் செல்கின்றாரோ அவர் வழி கெடுவதெல்லாம் தனக்கே (தீங்கிழைத்துக் கொள்ளத்)தான், இன்னும், (பாவத்தைச்) சுமக்கக்கூடிய (ஒரு ஆத்மாவான)து மற்றொன்றின் (பாவச்) சுமையைச் சுமக்காது, மேலும், (நம்முடைய) தூதரை அனுப்பாத வரையில் நாம் (எவரையும்) வேதனை செய்பவர்களாக இல்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

Whoever accepts guidance, it is only for his own good; and whoever goes astray, it is only for his own loss. No bearer of burden will bear the burden of another, nor do We punish until We have sent a messenger.
Ruwwad Center

17:16
وَإِذَا أَرَدْنَا أَنْ نُهْلِكَ قَرْيَةً أَمَرْنَا مُتْرَفِيهَا فَفَسَقُوا فِيهَا فَحَقَّ عَلَيْهَا الْقَوْلُ فَدَمَّرْنَاهَا تَدْمِيرًا
Waitha aradna an nuhlika qaryatan amarna mutrafeeha fafasaqoo feeha fahaqqa AAalayha alqawlu fadammarnaha tadmeeran


And when We decide to destroy a town (population), We (first) send a definite order (to obey Allâh and be righteous) to those among them [or We (first) increase in number those of its population] who lead a life of luxury. Then, they transgress therein, and thus the word (of torment) is justified against it (them). Then We destroy it with complete destruction.
Hilali & Khan

And when We intend to destroy a city, We command its affluent but they defiantly disobey therein; so the word comes into effect upon it, and We destroy it with [complete] destruction.
Saheeh International

யாதொரு ஊரை (அவ்வூராரின் தீய செயலின் காரணமாக) நாம் அழித்துவிடக் கருதினால், அதில் சுகமாக வாழ்பவர்களை நாம் ஏவுகிறோம். அவர்கள் அதில் விஷமம் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். பின்னர், அவர்கள் மீது நம்முடைய வாக்கு ஏற்பட்டு அவ்வூரை நாம் அடியோடு அழித்து விடுகிறோம்.
தாருல் ஹுதா

நாம் ஓர் ஊரை (அதன் தீமையின் காரணமாக) அழிக்க நாடினால், அதிலுள்ள (வசதியான) சுகவாசிகளை (நேர்வழியைப் பின்பற்றி வாழுமாறு) நாம் ஏவுவோம்; ஆனால் அவர்களோ (நம் ஏவலுக்கு கட்டுப் படாமல்) வரம்பு மீறி நடப்பார்கள். அப்போது, அவ்வூரின் மீது, (வேதனை பற்றிய நம்) வாக்கு உண்மையாகி விடுகிறது - அப்பால், நாம் அதனை அடியோடு அழித்து விடுகிறோம்.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

மேலும், ஏதேனும் ஓர் ஊரை நாம் அழித்துவிட நாடினால், அதில் சுகமாக வாழ்வோரை (நம் கட்டளைகளுக்குக் கீழப்படிந்து நடக்குமாறு) நாம் ஏவுவோம், (ஆனால்,) அவர்கள் (நம் கட்டளைகளை மீறி) அதில் பாவம் செய்(ய ஆரம்பித்து விடு)வார்கள், பின்னர், அதன் மீது (வேதனை பற்றிய) நம்முடைய வாக்கு உறுதியாகிவிடுகிறது, ஆகவே, அதனை நாம் அடியோடு அழித்துவிடுகிறோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

Whenever We decide to destroy a town, We command its affluent ones [to obey Allah] but they defiantly disobey, so the punishment becomes inevitable, and We destroy it completely.
Ruwwad Center

17:17
وَكَمْ أَهْلَكْنَا مِنَ الْقُرُونِ مِنْ بَعْدِ نُوحٍ ۗ وَكَفَىٰ بِرَبِّكَ بِذُنُوبِ عِبَادِهِ خَبِيرًا بَصِيرًا
Wakam ahlakna mina alqurooni min baAAdi noohin wakafa birabbika bithunoobi AAibadihi khabeeran baseeran


And how many generations have We destroyed after Nûh (Noah)! And Sufficient is your Lord as Well-Acquainted and All-Beholder of the sins of His slaves.
Hilali & Khan

And how many have We destroyed from the generations after Noah. And sufficient is your Lord, concerning the sins of His servants, as Acquainted and Seeing.
Saheeh International

நூஹ்வுக்குப் பின்னர் நாம் எத்தனையோ வகுப்பாரை (அவர்களின் அநியாயத்தின் காரணமாக) அழிந்திருக்கிறோம். தன் அடியார்களின் பாவங்களை அறிந்து கொள்வதற்கு உங்களது இறைவனே போதுமானவன். (மற்றெவரின் உதவியும் தேவை யில்லை.) அவன் (அனைத்தையும்) நன்கறிந்தவனும் உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான்.
தாருல் ஹுதா

நூஹுக்குப்பின் எத்தனை தலைமுறையினரை நாம் அழித்திருக்கின்றோம்? இன்னும், தன் அடியார்களின் பாவங்களை நன்கறிந்தவனாகவும், கூர்ந்து நோக்குபவனாகவும் இருப்பதற்கு உம் இறைவன் போதுமானவன்.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

நூஹுவுக்குப் பின் நாம் எத்தனையோ தலை முறையினரை அழித்திருக்கிறோம், தன் அடியார்களின் பாவங்களை நன்கு உணர்பவனாக பார்க்கிறவனாக இருப்பதற்கு உமதிரட்சகனே போதுமானவன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

How many generations We have destroyed since the time Noah! Your Lord is sufficient as All-Aware and All-Seeing of the sins of His slaves.
Ruwwad Center

17:18
مَنْ كَانَ يُرِيدُ الْعَاجِلَةَ عَجَّلْنَا لَهُ فِيهَا مَا نَشَاءُ لِمَنْ نُرِيدُ ثُمَّ جَعَلْنَا لَهُ جَهَنَّمَ يَصْلَاهَا مَذْمُومًا مَدْحُورًا
Man kana yureedu alAAajilata AAajjalna lahu feeha ma nashao liman nureedu thumma jaAAalna lahu jahannama yaslaha mathmooman madhooran


Whoever desires the quick-passing (transitory enjoyment of this world), We readily grant him what We will for whom We like. Then, afterwards, We have appointed for him Hell; he will burn therein disgraced and rejected (– far away from Allâh's Mercy).
Hilali & Khan

Whoever should desire the immediate - We hasten for him from it what We will to whom We intend. Then We have made for him Hell, which he will [enter to] burn, censured and banished.
Saheeh International

எவர்கள், (மறுமையைப் புறக்கணித்து விட்டு) இம்மையை மட்டும் விரும்புகிறார்களோ அவர்களில் நாம் நாடியவர்களுக்கு நாம் நாடியதை இம்மையிலேயே கொடுத்து விடுகிறோம். பின்னர், மறுமையில் நரகத்தைத்தான் அவர்களுக்கு தயார்படுத்தி வைத்திருக்கிறோம். அவர்கள் நிந்திக்கப்பட்டவர்களாகவும், சபிக்கப்பட்டவர்களாகவும் அதில் நுழைவார்கள்.
தாருல் ஹுதா

எவர்கள் (மறுமையைப் புறக்கணித்தும் விரைவில் அழியும்) இவ்வாழ்க்கையை விரும்புகிறார்களோ, அவர்களில் நாம் நாடியவர்களுக்கு நாம் நாடுவதை (இவ்வுலகிலேயே) விரைந்து கொடுத்து விடுவோம்; பின்னரோ அ(த்தகைய)வருக்காக, நாம் ஜஹன்ன(ம் நரக)த்தைச் சித்தப்படுத்தி வைத்திருக்கிறோம்; அதில் அவர் பழிக்கப் பட்டவராகவும் சபிக்கப்பட்டவராகவும் நுழைவார்.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

எவர் (மறுமையை மறந்துவிட்டு) இம்மையை நாடுகிறவராக இருக்கிறாரோ, அவருக்கு அதில் நாம் நாடியவருக்குத் துரிதமாக கொடுத்துவிடுகிறோம், பின்னர், மறுமையில் அ(த்தகைய)வருக்காக நரகத்தை நாம் ஆக்குகின்றோம், அத்தகையவர் நிந்திக்கப்பட்டவராக, (அல்லாஹ்வின் அருளிலிருந்து) தூரமாக்கப்பட்டவராக அதில் நுழைவார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

Whoever desires this fleeting life, We hasten therein whatever We will to whoever We please. Then We prepare for him Hell, which he will enter, despised and rejected.
Ruwwad Center

17:19
وَمَنْ أَرَادَ الْآخِرَةَ وَسَعَىٰ لَهَا سَعْيَهَا وَهُوَ مُؤْمِنٌ فَأُولَٰئِكَ كَانَ سَعْيُهُمْ مَشْكُورًا
Waman arada alakhirata wasaAAa laha saAAyaha wahuwa muminun faolaika kana saAAyuhum mashkooran


And whoever desires the Hereafter and strives for it, with the necessary effort due for it (i.e. does righteous deeds of Allâh's obedience) while he is a believer (in the Oneness of Allâh – Islâmic Monotheism) – then such are the ones whose striving shall be appreciated, (thanked and rewarded by Allâh).
Hilali & Khan

But whoever desires the Hereafter and exerts the effort due to it while he is a believer - it is those whose effort is ever appreciated [by Allah].
Saheeh International

எவர்கள் மறுமையை விரும்பி அதற்காகப் பெரும் முயற்சியையும் எடுத்துக்கொண்டு நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருக்கிறார்களோ, அத்தகையவர்களின் செயல்கள் (அல்லாஹ் விடத்தில் மிக்க அன்பாக) அங்கீகரிக்கப்படும்.
தாருல் ஹுதா

இன்னும் எவர் மறுமையை நாடி அதற்காகத் தக்க பிரயாசையுடன், முஃமினாகவும் இருந்து முயல்கின்றாரோ, அ(த்தகைய)வர்களின் முயற்சி (அல்லாஹ்விடத்தில் நற்கூலிக்குரியதாக) ஏற்றுக் கொள்ளப்படும்.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

இன்னும், எவர் மறுமையை நாடி அவர் விசுவாசியாக இருக்க, அதற்குரிய முயற்சியையும் அதன் பொருட்டு முயன்றாரோ அத்தகையோர் - அவர்களின் முயற்சி (அல்லாஹ்விடம்) அங்கீகரிக்கப்பட்டதாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

But whoever desires the Hereafter and strives for it as he should, being a believer – it is those whose efforts will be appreciated.
Ruwwad Center

17:20
كُلًّا نُمِدُّ هَٰؤُلَاءِ وَهَٰؤُلَاءِ مِنْ عَطَاءِ رَبِّكَ ۚ وَمَا كَانَ عَطَاءُ رَبِّكَ مَحْظُورًا
Kullan numiddu haolai wahaolai min AAatai rabbika wama kana AAatao rabbika mahthooran


On each – these as well as those – We bestow from the Bounties of your Lord. And the Bounties of your Lord can never be forbidden.
Hilali & Khan

To each [category] We extend - to these and to those - from the gift of your Lord. And never has the gift of your Lord been restricted.
Saheeh International

(இம்மையை விரும்பும்) அவர்களுக்கும் (மறுமையை விரும்பும்) இவர்களுக்கும் ஆக அனைவருக்கும் உங்கள் இறைவன் தன் கொடையைக் கொண்டே உதவி செய்கிறான். உங்கள் இறைவனின் கொடை (இவ்விருவரில் எவருக்குமே) தடை செய்யப்படுவதில்லை.
தாருல் ஹுதா

இ(ம்மையை விரும்புப)வர்களுக்கும், (மறுமையை ஆசிக்கும்) மற்றவர்களுக்கும் உமது இறைவனாகிய நமது அருட்கொடையிலிருந்து நாமே உதவி செய்கிறோம்; உமது இறைவனின் அருட்கொடை (எவருக்கும்) தடுக்கப்பட்டதாக இல்லை.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

(இம்மையை விரும்பும்) இவர்களுக்கும், (மறுமையை விரும்பும்) அவர்களுக்கும் (இவ்விருவரில்) – ஒவ்வொருவருக்கும், உம்முடைய இரட்சகனின் அன்பளிப்பிலிருந்து நாம் அதிகப்படுத்துகின்றோம், மேலும் உமதிரட்சகனின் அன்பளிப்பு (இவ்விருசாராருக்கும்) தடுக்கப்பட்டதாக இல்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

We give both – the latter and the former – from the bounty of your Lord, and Your Lord’s bounty is not restricted.
Ruwwad Center

17:21
انْظُرْ كَيْفَ فَضَّلْنَا بَعْضَهُمْ عَلَىٰ بَعْضٍ ۚ وَلَلْآخِرَةُ أَكْبَرُ دَرَجَاتٍ وَأَكْبَرُ تَفْضِيلًا
Onthur kayfa faddalna baAAdahum AAala baAAdin walalakhiratu akbaru darajatin waakbaru tafdeelan


See how We prefer some of them to others (in this world), and verily, the Hereafter will be greater in degrees and greater in preferment.
Hilali & Khan

Look how We have favored [in provision] some of them over others. But the Hereafter is greater in degrees [of difference] and greater in distinction.
Saheeh International

(நபியே!) சிலரை சிலர் மீது எவ்வாறு மேன்மையாக்கி வைத்திருக்கிறோம் என்பதை, நீங்கள் கவனித்துப் பாருங்கள்! மறுமை (வாழ்க்கை)யோ பதவிகளாலும் எவ்வளவோ பெரிது; சிறப்பிப்பதாலும் எவ்வளவோ பெரிது.
தாருல் ஹுதா

(நபியே!) நாம் எவ்வாறு அவர்களில் சிலரைச் சிலரைவிட (இம்மையில்) மேன்மைப்படுத்தி இருக்கிறோம் என்பதை நீர் கவனிப்பீராக! எனினும் மறுமை (வாழ்க்கை) பதவிகளிலும் மிகப் பெரிது, மேன்மையிலும் மிகப் பெரிதாகும்.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

(நபியே! இவர்களில்) சிலரைச் சிலரை விட எவ்வாறு மேன்மையாக்கி வைத்திருக்கின்றோம் என்பதை நீர் (கவனித்துப்) பார்ப்பீராக! மறுமையோ, பதவிகளால் மிகப் பெரியதும், சிறப்பால் மிகப் பெரியதுமாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

See how We have favored some over others [in this world], but the Hereafter has higher ranks and greater degrees of excellence for some over others.
Ruwwad Center

17:22
لَا تَجْعَلْ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ فَتَقْعُدَ مَذْمُومًا مَخْذُولًا
La tajAAal maAAa Allahi ilahan akhara fataqAAuda mathmooman makhthoolan


Set not up with Allâh any other ilâh (god), (O man)! (This Verse is addressed to Prophet Muhammad [sal-Allâhu 'alayhi wa sallam], but its implication is general to all mankind), or you will sit down reproved, forsaken (in the Hell-fire).
Hilali & Khan

Do not make [as equal] with Allah another deity and [thereby] become censured and forsaken.
Saheeh International

(நபியே!) அல்லாஹ்வுடன் மற்றொருவனை வணக்கத்திற் குரியவனாக ஆக்காதீர்கள். (அவ்வாறு செய்தால்) நீங்கள் நிந்திக்கப்பட்டவராகவும் உதவியற்றவராகவும் அமர்ந்து விடுவீர்கள்.
தாருல் ஹுதா

அல்லாஹ்வுடன் மற்றோர் ஆண்டவனை நீர் (இணை) ஆக்க வேண்டாம்; (அப்படிச் செய்தால்) நீர் பழிக்கப்பட்டவராகவும், உதவி அற்றவராகவும் அமைந்து விடுவீர்.  
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

(நபியே!) அல்லாஹ்வுடன் மற்றோர் வணக்கத்திற்குரியவனை (இணையாக) நீர் ஆக்க வேண்டாம், (அவ்வாறு செய்தால்) நீர் நிந்திக்கப்பட்டவராக உதவியற்றவராக, அமர்ந்து விடுவீர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

Do not set up with Allah any other god, or else you will be despised and forsaken.
Ruwwad Center

17:23
وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا ۚ إِمَّا يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُلْ لَهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا
Waqada rabbuka alla taAAbudoo illa iyyahu wabialwalidayni ihsanan imma yablughanna AAindaka alkibara ahaduhuma aw kilahuma fala taqul lahuma offin wala tanharhuma waqul lahuma qawlan kareeman


And your Lord has decreed that you worship none but Him. And that you be dutiful to your parents. If one of them or both of them attain old age in your life, say not to them a word of disrespect, nor shout at them but address them in terms of honour.
Hilali & Khan

And your Lord has decreed that you not worship except Him, and to parents, good treatment. Whether one or both of them reach old age [while] with you, say not to them [so much as], "uff," and do not repel them but speak to them a noble word.
Saheeh International

(நபியே!) உங்களது இறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக்கூடாதென்று (கட்டளையிட்டி ருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளை யிட்டிருக்கிறான். உங்களிடம் இருக்கும் அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமையை அடைந்து விட்டபோதிலும் அவர்களை வெருட்டவும் வேண்டாம்; அவர்களை (நிந்தனையாகச்) "சீ" என்றும் சொல்ல வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும்) மிக்க மரியாதையாக(வும் அன்பாகவுமே) பேசுங்கள்.
தாருல் ஹுதா

அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

(நபியே!) உமதிரட்சகன் - அவனைத் தவிர (மற்றெவரையும்) நீங்கள் வணங்கக் கூடாதென்றும், பெற்றோர்க்கு உபகாரம் செய்ய வேண்டுமென்றும், கட்டளையிட்டிருக்கின்றான், அவ்விருவரில் ஒருவரோ, அல்லது அவ்விருவருமோ உம்மிடத்தில் திண்ணமாக முதுமையை அடைந்து விட்டால், அவ்விருவருக்கும் (இழித்துக் கூறப்படும் வார்த்தைகளிலுள்ள) “சீ” என்று (கூட) நீ சொல்ல வேண்டாம், (உம்மிடமிருந்து) அவ்விருவரையும் விரட்டி விடவும் வேண்டாம், அவ்விருவருக்கும் மரியாதையான வார்த்தையைக் கூறுவீராக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

Your Lord has ordained that you worship none but Him, and show kindness to parents. If one or both of them reach old age in your care, do not say to them a word of annoyance nor scold them, rather speak to them noble words,
Ruwwad Center

17:24
وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا
Waikhfid lahuma janaha alththulli mina alrrahmati waqul rabbi irhamhuma kama rabbayanee sagheeran


And lower to them the wing of submission and humility through mercy, and say: "My Lord! Bestow on them Your Mercy as they did bring me up when I was young."
Hilali & Khan

And lower to them the wing of humility out of mercy and say, "My Lord, have mercy upon them as they brought me up [when I was] small."
Saheeh International

அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடங்கள்! அன்றி "என் இறைவனே! நான் குழந்தையாக இருந்தபொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்துப் பாதுகாத்தவாறே நீயும் அவ்விருவர் மீதும் அன்பும் அருளும் புரிவாயாக!" என்றும் நீங்கள் பிரார்த்தியுங்கள்!
தாருல் ஹுதா

இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக; மேலும், “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” என்று கூறிப் பிரார்த்திப்பீராக!
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

இன்னும், இவ்விருவருக்காக இரக்கத்துடன் பணிவு எனும் இறக்கையை நீர் தாழ்த்துவீராக! மேலும் “என் இரட்சகனே! நான் குழந்தையாக இருந்தபொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்தது போன்று நீயும் அவ்விருவருக்கும் அருள்புரிவாயாக!” என்றும் பிரார்த்தித்துக்) கூறுவீராக.!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

and lower to them the wing of humility out of mercy, and say, “My Lord, have mercy upon them as they raised me when I was small.”
Ruwwad Center

17:25
رَبُّكُمْ أَعْلَمُ بِمَا فِي نُفُوسِكُمْ ۚ إِنْ تَكُونُوا صَالِحِينَ فَإِنَّهُ كَانَ لِلْأَوَّابِينَ غَفُورًا
Rabbukum aAAlamu bima fee nufoosikum in takoonoo saliheena fainnahu kana lilawwabeena ghafooran


Your Lord knows best what is in your inner-selves. If you are righteous, then, verily, He is Ever Most Forgiving to those who turn to Him again and again in obedience, and in repentance.
Hilali & Khan

Your Lord is most knowing of what is within yourselves. If you should be righteous [in intention] - then indeed He is ever, to the often returning [to Him], Forgiving.
Saheeh International

உங்கள் மனதிலுள்ளதை உங்கள் இறைவன்தான் மிக்க நன்கறிவான். நீங்கள் நன்னடத்தையுடையவர்களாக இருந்து (உங்களில் எவர்) மன்னிப்புக் கோரிய(போதிலும் அ)வர்களின் குற்றங்களை நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவே இருக்கின்றான்.
தாருல் ஹுதா

(பெற்றோரை நடத்துவது பற்றி) உங்களுடைய உள்ளங்களிலிருப்பதை உங்களுடைய இறைவனே நன்கு அறிவான்; நீங்கள் ஸாலிஹானவர்களாக (இறைவன் ஏவலுக்கு இசைந்து நடப்பவர்களாக) இருந்தால்; (உள்ளந்திருந்தி உங்களில் எவர் மன்னிப்பு கோருகிறாரோ அத்தகைய) மன்னிப்புக் கோருபவர்களுக்கு (அல்லாஹ்) மிக மன்னிப்பவனாக இருக்கின்றான்.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

(பெற்றோரை நடத்துவது பற்றி) உங்கள் உள்ளங்களில் இருப்பதை உங்கள் இரட்சகன் மிக்க அறிந்தவன், நீங்கள் நன்னடத்தையுடையவர்களாக இருந்தால் அப்போது நிச்சயமாக (மன்னிப்புக் கோரி, அல்லாஹ்வின்பால்) திரும்புகின்றவர்களுக்கு அவன் மன்னிப்பவனாகவே இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

Your Lord knows best what is in your hearts. If you are righteous, He is All-Forgiving to those who constantly turn to Him.
Ruwwad Center

17:26
وَآتِ ذَا الْقُرْبَىٰ حَقَّهُ وَالْمِسْكِينَ وَابْنَ السَّبِيلِ وَلَا تُبَذِّرْ تَبْذِيرًا
Waati tha alqurba haqqahu waalmiskeena waibna alssabeeli wala tubaththir tabtheeran


And give to the kinsman his due and to the Miskîn (needy) and to the wayfarer. But spend not wastefully (your wealth) in the manner of a spendthrift. [Tafsir At-Tabarî (Verse 9:60)]
Hilali & Khan

And give the relative his right, and [also] the poor and the traveler, and do not spend wastefully.
Saheeh International

உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர் களுக்கும் அவரவர்களுடைய உரிமைகளைக் கொடுத்து வரவும். (செல்வத்தை) அளவு கடந்து வீண் செலவு செய்ய வேண்டாம்.
தாருல் ஹுதா

இன்னும், உறவினருக்கு அவருடைய உரிமை (பாத்தியதை)களைக் கொடுப்பீராக; மேலும், ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும், (அவரவர்களுக்கு உரியதைக் கொடுத்து விடுவீராக!) வீணாகப் (பொருளை) விரையஞ் செய்யாதீர்.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

இன்னும், உறவினருக்கு அவரின் உரிமையை வழங்குவீராக! மேலும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்கும் (அவரவர்களுடைய உரிமையை வழங்குவீராக! செல்வத்தை) அளவு கடந்து வீண் விரயம் செய்யாதுமிருப்பீராக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

Give relatives their due, and the needy and the stranded travelers, and do not spend wastefully.
Ruwwad Center

17:27
إِنَّ الْمُبَذِّرِينَ كَانُوا إِخْوَانَ الشَّيَاطِينِ ۖ وَكَانَ الشَّيْطَانُ لِرَبِّهِ كَفُورًا
Inna almubaththireena kanoo ikhwana alshshayateeni wakana alshshaytanu lirabbihi kafooran


Verily, the spendthrifts are brothers of the Shayâtîn (devils), and the Shaitân (Devil-Satan) is ever ungrateful to his Lord.
Hilali & Khan

Indeed, the wasteful are brothers of the devils, and ever has Satan been to his Lord ungrateful.
Saheeh International

ஏனென்றால், மிதமிஞ்சி செலவு செய்பவர்கள் ஷைத்தானுடைய சகோதரர்களாக இருக்கின்றனர். ஷைத்தானோ தன் இறைவனுக்குக் கூட நன்றி செலுத்தா(து மாறு செய்)தவன்.
தாருல் ஹுதா

நிச்சயமாக விரயஞ் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

நிச்சயமாக வீண் விரயம் செய்வோர், ஷைத்தானுடைய சகோதரர்களாக இருக்கின்றனர், ஷைத்தானோ, தன் இரட்சகனுக்கு நன்றி செலுத்தா(து மாறு செய்)தவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

Indeed, the wasteful are Satans’ brothers, and Satan is ever ungrateful to his Lord.
Ruwwad Center

17:28
وَإِمَّا تُعْرِضَنَّ عَنْهُمُ ابْتِغَاءَ رَحْمَةٍ مِنْ رَبِّكَ تَرْجُوهَا فَقُلْ لَهُمْ قَوْلًا مَيْسُورًا
Waimma tuAAridanna AAanhumu ibtighaa rahmatin min rabbika tarjooha faqul lahum qawlan maysooran


And if you (O Muhammad [sal-Allâhu 'alayhi wa sallam]) turn away from them (kindred, needy, wayfarer, whom We have ordered you to give their rights, but if you have no money at the time they ask you for it) and you are awaiting a mercy from your Lord for which you hope, then, speak to them a soft, kind word (i.e. Allâh will give me and I shall give you).
Hilali & Khan

And if you [must] turn away from the needy awaiting mercy from your Lord which you expect, then speak to them a gentle word.
Saheeh International

(நபியே! உங்களிடம் பொருள்கள் இல்லாமல் அதற்காக) நீங்கள் உங்கள் இறைவனின் அருளை எதிர்பார்த்திருக்கும் சமயத்தில் (உங்களிடம் யாரேனும் வந்து ஏதும் கேட்டு) அவர்களை நீங்கள் புறக்கணிக்கும்படி நேரிட்டால் (அவர்களுடன் கடுகடுப்பாகப் பேசாதீர்கள்.) மிக்க அன்பான வார்த்தைகளையே அவர்களுக்குக் கூறுங்கள்.
தாருல் ஹுதா

(உம்மிடம் பொருளில்லாமல் அதற்காக) நீர் உம்முடைய இறைவனின் அருளை ஆதரவு வைத்து (அதை) எதிர்ப்பார்த்திருக்கும் சமயத்தில் (உம்மிடம் எவரேனும் எதுவும் கேட்டு,) அவர்களை நீர் புறக்கணிக்கும்படி நேரிட்டால், (அப்போது) அவர்களிடம் கனிவான, அன்பான சொல்லையே சொல்வீராக!
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

(நபியே!) நீர் உமதிரட்சகனின் அருளை எதிர்பார்த்திருக்கும் சமயத்தில் (உம்மிடம் யாரேனும் வந்து ஏதேனும் பொருள் கேட்டு, நீர் ஒன்றும் கொடுக்க இயலாமல் போய்) அவர்களை நீர் புறக்கணிக்கும்படி நேரிட்டால் அவர்களுக்கு (அன்பான) கடினமில்லாச் சொல்லையே கூறுவீராக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

But if you must turn away from them [those in need] while hoping to receive bounty from your Lord, then say to them words of comfort.
Ruwwad Center

17:29
وَلَا تَجْعَلْ يَدَكَ مَغْلُولَةً إِلَىٰ عُنُقِكَ وَلَا تَبْسُطْهَا كُلَّ الْبَسْطِ فَتَقْعُدَ مَلُومًا مَحْسُورًا
Wala tajAAal yadaka maghloolatan ila AAunuqika wala tabsutha kulla albasti fataqAAuda malooman mahsooran


And let not your hand be tied (like a miser) to your neck, nor stretch it forth to its utmost reach (like a spendthrift), so that you become blameworthy and in severe poverty.
Hilali & Khan

And do not make your hand [as] chained to your neck or extend it completely and [thereby] become blamed and insolvent.
Saheeh International

(உங்களுடைய பொருள்களில் ஒன்றையுமே செலவு செய்யாது) உங்களுடைய கையைக் கழுத்தில் மாட்டிக் கொள்ளாதீர்கள்! அன்றி, (உங்களிடம் இருப்பதை எல்லாம் கொடுத்து) உங்களுடைய கையை முற்றிலும் விரித்தும் விடாதீர்கள்! அதனால் நீங்கள் நிந்திக்கப்பட்டவராகவும் முடைப்பட்டவராகவும் தங்கி விடுவீர்கள்.
தாருல் ஹுதா

(உலோபியைப் போல் எதுவும் வழங்காது) உம் கையை உம் கழுத்தில் கட்டப் பட்டதாக்கிக் கொள்ளாதீர்; அன்றியும், (அனைத்தையும் செலவழித்து உம் கையை) ஒரே விரிப்பாக விரித்து விடாதீர்; அதனால் நீர் நிந்திக்கப்பட்டவராகவும், (கையில் எதுவுமில்லாது) துக்கப்பட்டவராகவும் அமைந்து விடுவீர்.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

மேலும், (உலோபியைப் போன்று செலவு செய்யாது) உம்முடைய கையை உம்முடைய கழுத்தில் கட்டப்பட்டதாக ஆக்கிக் கொள்ளாதீர்! அன்றியும் (உம்மிடம் இருப்பதை செலவழித்துவிட்டு) அ(க்கையான)தை ஒரே விரிப்பாக விரித்தும் விடாதீர்! அதனால் நீர் நிந்திக்கப்பட்டவராக முடைப்பட்டவராக உட்கார்ந்துவிடுவீர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

Do not be too tight-fisted, nor too open-handed, for you will end up blameworthy and destitute.
Ruwwad Center

17:30
إِنَّ رَبَّكَ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَشَاءُ وَيَقْدِرُ ۚ إِنَّهُ كَانَ بِعِبَادِهِ خَبِيرًا بَصِيرًا
Inna rabbaka yabsutu alrrizqa liman yashao wayaqdiru innahu kana biAAibadihi khabeeran baseeran


Truly, your Lord enlarges the provision for whom He wills and straitens (for whom He wills). Verily, He is Ever Well-Acquainted, All-Seer of His slaves.
Hilali & Khan

Indeed, your Lord extends provision for whom He wills and restricts [it]. Indeed He is ever, concerning His servants, Acquainted and Seeing.
Saheeh International

நிச்சயமாக உங்கள் இறைவன், தான் விரும்பியவர்களுக்கு விரிவாகக் கொடுக்கின்றான்; (தான் விரும்பியவர்களுக்கு சுருக்கிக் குறைத்தும்) அளவாகவும் கொடுக்கின்றான். ஏனென்றால், நிச்சயமாக அவன், தன் அடியார்(களின் தன்மை)களை நன்கறிந்தவனாகவும், செயலை உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான். (ஆதலால், ஒவ்வொருவரின் தகுதிக்கும் தக்கவாறு கொடுக்கிறான்.)
தாருல் ஹுதா

நிச்சயமாக உம்முடைய இறைவன் தான் நாடியவருக்கு விசாலமாக உணவு (சம்பத்து)களை வழங்குகிறான்; (தான் நாடியவருக்கு) அளவாகவும் கொடுக்கிறான் - நிச்சயமாக அவன் தன் அடியார்(களின் இரகசிய பரகசியங்)களை நன்கு அறிந்தவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.  
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

நிச்சயமாக உமதிரட்சகன், தான் நாடியவர்களுக்கு வாழ்வாதாரத்தை விரிவாகக் கொடுக்கின்றான், (தான் நாடியவர்களுக்கு) அளவாகவும் கொடுக்கின்றான், (ஏனென்றால்) நிச்சயமாக அவன் தன் அடியார்(களின் தன்மை)களை நன்குணர்ந்தவனாக பார்ப்பவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

Your Lord extends provision to whom He wills or restricts it. He is All-Aware and All-Seeing of His slaves.
Ruwwad Center

17:31
وَلَا تَقْتُلُوا أَوْلَادَكُمْ خَشْيَةَ إِمْلَاقٍ ۖ نَحْنُ نَرْزُقُهُمْ وَإِيَّاكُمْ ۚ إِنَّ قَتْلَهُمْ كَانَ خِطْئًا كَبِيرًا
Wala taqtuloo awladakum khashyata imlaqin nahnu narzuquhum waiyyakum inna qatlahum kana khitan kabeeran


And kill not your children for fear of poverty. We shall provide for them as well as for you. Surely, the killing of them is a great sin.
Hilali & Khan

And do not kill your children for fear of poverty. We provide for them and for you. Indeed, their killing is ever a great sin.
Saheeh International

(மனிதர்களே!) நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொலை செய்து விடாதீர்கள். நாம் அவர்களுக்கும் உணவளிப்போம்; உங்களுக்கும் (அளிப்போம்.) அவர்களைக் கொலை செய்வது நிச்சயமாக (அடாத) பெரும் பாவமாகும்.
தாருல் ஹுதா

நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் - அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

(மனிதர்களே!) நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள், அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கைத் தேவைகளை) வழங்குகிறோம், நிச்சயமாக அவர்களைக் கொலை செய்வது பெரும் குற்றமாக இருக்கிறது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

Do not kill your children for fear of poverty, for We provide for them and for you. Indeed, killing them is a great sin.
Ruwwad Center

17:32
وَلَا تَقْرَبُوا الزِّنَا ۖ إِنَّهُ كَانَ فَاحِشَةً وَسَاءَ سَبِيلًا
Wala taqraboo alzzina innahu kana fahishatan wasaa sabeelan


And come not near to unlawful sex. Verily, it is a Fâhishah (i.e. anything that transgresses its limits: a great sin), and an evil way (that leads one to Hell unless Allâh forgives him).
Hilali & Khan

And do not approach unlawful sexual intercourse. Indeed, it is ever an immorality and is evil as a way.
Saheeh International

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் விபசாரத்திற்கு நெருங்கவும் வேண்டாம். ஏனென்றால், நிச்சயமாக அது மானக்கேடானதாகவும், தீய வழியாகவும் இருக்கிறது.
தாருல் ஹுதா

நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

(விசுவாசங்கொண்டோரே! நீங்கள் விபச்சாரத்தையும் நெருங்காதீர்கள், நிச்சயமாக அது, மானக்கேடானதாக இருக்கிறது, இன்னும், அது (மனித குலத்திற்கு பெரும்கேடு விளைவிக்கும்) வழியால் மிகக் கெட்டது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

Do not go near adultery, for it is indeed a shameful act and an evil way.
Ruwwad Center

17:33
وَلَا تَقْتُلُوا النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ ۗ وَمَنْ قُتِلَ مَظْلُومًا فَقَدْ جَعَلْنَا لِوَلِيِّهِ سُلْطَانًا فَلَا يُسْرِفْ فِي الْقَتْلِ ۖ إِنَّهُ كَانَ مَنْصُورًا
Wala taqtuloo alnnafsa allatee harrama Allahu illa bialhaqqi waman qutila mathlooman faqad jaAAalna liwaliyyihi sultanan fala yusrif fee alqatli innahu kana mansooran


And do not kill anyone whose killing Allâh has forbidden, except for a just cause. And whoever is killed wrongfully (Mazlûman intentionally with hostility and oppression and not by mistake), We have given his heir the authority [to demand Qisâs, Law of Equality in punishment – or to forgive, or to take Diyah (blood money)]. But let him not exceed limits in the matter of taking life (i.e. he should not kill except the killer). Verily, he is helped (by the Islâmic law).
Hilali & Khan

And do not kill the soul which Allah has forbidden, except by right. And whoever is killed unjustly - We have given his heir authority, but let him not exceed limits in [the matter of] taking life. Indeed, he has been supported [by the law].
Saheeh International

(எவரையும் கொலை செய்வது ஆகாதென்று) அல்லாஹ் தடுத்திருக்க, நீங்கள் எம்மனிதனையும் நியாயமின்றி கொலை செய்து விடாதீர்கள். எவரேனும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டு விட்டால், அவனுடைய வாரிசுகளுக்கு(ப் பழி வாங்க) நாம் அதிகாரம் அளித்திருக்கிறோம். ஆனால், (கொலையாளியான) அவனைப் பழிவாங்குவதில் அளவு கடந்து (சித்திரவதை செய்து) விட வேண்டாம். நிச்சயமாக அவன் (பழிவாங்க) உதவி செய்யப் பெறுவான். (அதாவது: பழிவாங்க வாரிசுகளுக்கு உதவி செய்ய வேண்டும்.)
தாருல் ஹுதா

(கொலையை) அல்லாஹ் விலக்கியிருக்க நீங்கள் எந்த மனிதனையும் நியாயமான காரணமின்றிக் கொலை செய்து விடாதீர்கள்; எவரேனும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டு விட்டால், அவருடைய வாரிஸுக்கு (பதிலுக்கு பதில் செய்யவோ அல்லது மன்னிக்கவோ) நாம் அதிகாரம் கொடுத்திருக்கிறோம்; ஆனால் கொலையி(ன் மூலம் பதில் செய்வதி)ல் வரம்பு கடந்து விடக் கூடாது; நிச்சயமாக கொலையுண்டவரின் வாரிசு (நீதியைக் கொண்டு) உதவி செய்யப் பட்டவராவார்.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

மேலும் அல்லாஹ் தடுத்துள்ள எந்த உயிரையும் உரிமையின்றிக் கொலை செய்யாதீர்கள், எவரேனும் அநீதியிழைக்கப்பட்டவராக கொலை செய்யப்பட்டு விட்டால், (பழி வாங்க) அவனுடைய வாரிசுக்கு நாம் அதிகாரம் அளித்திருக்கிறோம்; ஆகவே (பழிவாங்க) கொலை செய்வதில் அவன் வரம்பு கடந்துவிட வேண்டாம், நிச்சயமாக (கொலையுண்டவரின் வாரிசாகிய) அவர் (நீதியைக்கொண்டு) உதவி செய்யப்பட்டவராவார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

Do not kill any soul that Allah has forbidden, except in the course of justice. If anyone is killed wrongfully, We have given his heir authority [of compensation], but he should not exceed the bounds in killing, for he is already supported [by law].
Ruwwad Center

17:34
وَلَا تَقْرَبُوا مَالَ الْيَتِيمِ إِلَّا بِالَّتِي هِيَ أَحْسَنُ حَتَّىٰ يَبْلُغَ أَشُدَّهُ ۚ وَأَوْفُوا بِالْعَهْدِ ۖ إِنَّ الْعَهْدَ كَانَ مَسْئُولًا
Wala taqraboo mala alyateemi illa biallatee hiya ahsanu hatta yablugha ashuddahu waawfoo bialAAahdi inna alAAahda kana masoolan


And come not near to the orphan's property except to improve it, until he attains the age of full strength. And fulfil (every) covenant. Verily, the covenant will be questioned about.
Hilali & Khan

And do not approach the property of an orphan, except in the way that is best, until he reaches maturity. And fulfill [every] commitment. Indeed, the commitment is ever [that about which one will be] questioned.
Saheeh International

(நம்பிக்கையாளர்களே!) அநாதைக் குழந்தைகள் வாலிபத்தை அடையும் வரையில் (அவர்களுடைய பொருளுக்குப் பாதுகாப்பாளராக இருந்தால்) நீங்கள் நியாயமான முறையிலன்றி அவர்களுடைய பொருளை நெருங்காதீர்கள். உங்கள் வாக்குறுதியை நீங்கள் முழுமையாக நிறைவேற்றுங்கள். ஏனென்றால், மறுமையில் வாக்குறுதியைப் பற்றி (உங்களிடம்) நிச்சயமாகக் கேட்கப்படும்.
தாருல் ஹுதா

அநாதைகள் பிராயமடையும் வரை, (அவர்களின் பொறுப்பேற்றிருக்கும்) நீங்கள், நியாயமான முறையிலன்றி அவர்களுடைய பொருளை நெருங்காதீர்கள், இன்னும் (நீங்கள் அல்லாஹ்விடமோ, மனிதர்களிடமோ கொடுத்த) வாக்குறுதியை நிறை வேற்றுங்கள்; நிச்சயமாக (அவ்) வாக்குறுதி (பற்றித் தீர்ப்பு நாளில் உங்களிடம்) விசாரிக்கப்படும்.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

மேலும், (விசுவாசங்கொண்டோரே! அநாதையின் செல்வத்திற்கு – அவர் தன் பருவ வயதை எய்தும் வரையில் எது அழகிய முறையோ அதைத் தவிர – (வேறு வழியில் அதை அனுபவிக்க) நீங்கள் நெருங்காதீர்கள், இன்னும், வாக்குறுதியை நீங்கள் பரிபூரணமாக நிறைவேற்றுங்கள், (ஏனெனில்) நிச்சயமாக வாக்குறுதி (மறுமையில்) விசாரிக்கப்படக் கூடியதாக இருக்கின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

Do not approach the property of an orphan except with good [intent], until he reaches maturity; and fulfill the covenant, for you will certainly be questioned about the covenant.
Ruwwad Center

17:35
وَأَوْفُوا الْكَيْلَ إِذَا كِلْتُمْ وَزِنُوا بِالْقِسْطَاسِ الْمُسْتَقِيمِ ۚ ذَٰلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا
Waawfoo alkayla itha kiltum wazinoo bialqistasi almustaqeemi thalika khayrun waahsanu taweelan


And give full measure when you measure, and weigh with a balance that is straight. That is good (advantageous) and better in the end.
Hilali & Khan

And give full measure when you measure, and weigh with an even balance. That is the best [way] and best in result.
Saheeh International

நீங்கள் அளந்தால் முழுமையாக அளங்கள்; (நிறுத்தால்) சரியான எடையைக் கொண்டு நிறுங்கள். இது (உங்களுக்கு) மிக்க நன்று; மிக்க அழகான பலனையும் தரும்.
தாருல் ஹுதா

மேலும் நீங்கள் அளந்தால், அளவைப் பூர்த்தியாக அளவுங்கள்; (இன்னும்) சரியான தராசைக் கொண்டு நிறுத்துக் கொடுங்கள். இதுவே நன்மையுடையதாகவும், முடிவில் (பலன் தருவதில்) அழகானதுமாகும்.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

நீங்கள் அளந்தால், அளவை (குறைவின்றி) நிறைவு செய்யுங்கள், (நிறுத்தால்) சரியான தராசைக் கொண்டு நிறுங்கள், இது (உங்களுக்கு) மிக்க சிறந்ததும், முடிவால் மிக அழகானதுமாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

Give full measure when you measure, and weigh with accurate scales; that is fair and best in the end.
Ruwwad Center

17:36
وَلَا تَقْفُ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ ۚ إِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ أُولَٰئِكَ كَانَ عَنْهُ مَسْئُولًا
Wala taqfu ma laysa laka bihi AAilmun inna alssamAAa waalbasara waalfuada kullu olaika kana AAanhu masoolan


And follow not (O man, i.e., say not or do not or witness not) that of which you have no knowledge. Verily, the hearing, and the sight, and the heart of each of those ones will be questioned (by Allâh).
Hilali & Khan

And do not pursue that of which you have no knowledge. Indeed, the hearing, the sight and the heart - about all those [one] will be questioned.
Saheeh International

(நபியே!) நீங்கள் அறியாத யாதொரு விஷயத்தையும் நீங்கள் பின்தொடராதீர்கள்! ஏனென்றால், நிச்சயமாக காது, கண், உள்ளம் ஆகிய இவை ஒவ்வொன்றுமே (அவற்றின் செயலைப்பற்றி மறுமையில்) கேள்வி கேட்கப்படும்.
தாருல் ஹுதா

எதைப்பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடரவேண்டாம்; நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும்.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

(நபியே!) எதைப் பற்றி உமக்குத் தீர்க்கமான அறிவில்லையோ அதை நீர் பின் தொடராதீர்! (ஏனெனில்) நிச்சயமாக செவி, பார்வை, இதயம் (ஆகிய) இவை ஒவ்வொன்றும் - அதனைப் பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படக்கூடியதாக இருக்கின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

Do not follow that of which you have no knowledge. Indeed, the hearing, the sight, and the heart, all of them will be called to account.
Ruwwad Center

17:37
وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا ۖ إِنَّكَ لَنْ تَخْرِقَ الْأَرْضَ وَلَنْ تَبْلُغَ الْجِبَالَ طُولًا
Wala tamshi fee alardi marahan innaka lan takhriqa alarda walan tablugha aljibala toolan


And walk not on the earth with conceit and arrogance. Verily, you can neither rend nor penetrate the earth nor can you attain a stature like the mountains in height.
Hilali & Khan

And do not walk upon the earth exultantly. Indeed, you will never tear the earth [apart], and you will never reach the mountains in height.
Saheeh International

பூமியில் (பெருமையுடன்) கர்வம் கொண்டு நடக்க வேண்டாம். ஏனென்றால், நிச்சயமாகப் பூமியைப் பிளந்து விடவோ அல்லது மலையின் உச்சியை அடைந்து விடவோ உங்களால் முடியாது.
தாருல் ஹுதா

மேலும், நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம்; (ஏனென்றால்) நிச்சயமாக நீர் பூமியைப் பிளந்துவிட முடியாது; மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

மேலும், பூமியில் கர்வம் கொண்டு நீர் நடக்க வேண்டாம், (அவ்வாறு நீர் நடப்பதால்), நிச்சயமாக நீர் பூமியை (ஆழத்தால்) பிளந்து விடவே மாட்டீர், இன்னும், உயரத்தால் மலைகளை அடைந்துவிடவே மாட்டீர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

Do not walk on the earth arrogantly; you cannot cleave the earth, nor can you reach the mountains in height.
Ruwwad Center

17:38
كُلُّ ذَٰلِكَ كَانَ سَيِّئُهُ عِنْدَ رَبِّكَ مَكْرُوهًا
Kullu thalika kana sayyiohu AAinda rabbika makroohan


All the bad aspects of these (the above mentioned things) are hateful to your Lord.
Hilali & Khan

All that - its evil is ever, in the sight of your Lord, detested.
Saheeh International

இவை அனைத்தும் உங்களது இறைவனிடத்தில் வெறுக்கப்பட்ட தீய காரியங்களாகும்.
தாருல் ஹுதா

இவையனைத்தின் தீமையும் உம் இறைவனிடத்தில் வெறுக்கப்பட்டதாக இருக்கிறது.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

(மேற் கூறப்பட்ட) அவை ஒவ்வொன்றும் - அதன் தீமை உமதிரட்சகனிடத்தில் வெறுக்கப்பட்டதாக இருக்கின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

The evil of all these actions is hateful to your Lord.
Ruwwad Center

17:39
ذَٰلِكَ مِمَّا أَوْحَىٰ إِلَيْكَ رَبُّكَ مِنَ الْحِكْمَةِ ۗ وَلَا تَجْعَلْ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ فَتُلْقَىٰ فِي جَهَنَّمَ مَلُومًا مَدْحُورًا
Thalika mimma awha ilayka rabbuka mina alhikmati wala tajAAal maAAa Allahi ilahan akhara fatulqa fee jahannama malooman madhooran


This is (part) of Al-Hikmah (wisdom, good manners and high character) which your Lord has revealed to you (O Muhammad [sal-Allâhu 'alayhi wa sallam]). And set not up with Allâh any other ilâh (god) lest you should be thrown into Hell, blameworthy and rejected (from Allâh's Mercy).
Hilali & Khan

That is from what your Lord has revealed to you, [O Muhammad], of wisdom. And, [O mankind], do not make [as equal] with Allah another deity, lest you be thrown into Hell, blamed and banished.
Saheeh International

(நபியே!) இவை உங்கள் இறைவனால் உங்களுக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்ட ஞான(உபதேச)ங்களாகும். ஆகவே, அல்லாஹ்வுடன் மற்றொருவனை வணக்கத்திற்குரியவனாக ஆக்காதீர்கள். (அவ்வாறு செய்தால்) நீங்கள் நிந்திக்கப்பட்ட வராகவும், சபிக்கப்பட்டவராகவும் நரகத்தில் எறியப்படுவீர்கள்.
தாருல் ஹுதா

இவையெல்லாம் உம்முடைய இறைவன் உமக்கு வஹீ (மூலம்) அறிவித்துள்ள ஞான உபதேசங்களாகும். ஆகவே அல்லாஹ்வுடன் வேறு நாயனை (இணையாக) ஏற்படுத்தாதீர்; (அப்படிச் செய்தால்) நீர் நிந்திக்கப்பட்டவராகவும் துரத்தப்பட்டவராகவும் நரகத்தில் எறியப்படுவீர்.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

(நபியே! மேற்கூறப்பட்ட) அவை, தீர்க்கமான அறிவிலிருந்து உம்முடைய இரட்சகன் உமக்கு (வஹீ மூலம்) அறிவித்தவற்றில் உள்ளவையாகும், ஆகவே, அல்லாஹ்வுடன், மற்றோர் வணக்கத்திற்குரியவனை (இணையாக) ஆக்காதீர், (அவ்வாறு செய்தால்), அப்பொழுது நிந்திக்கப்பட்டவராக, (அல்லாஹ்வின் அனைத்து நன்மைகளிலிருந்து) தூரமாக்கப்பட்டவராக நரகத்தில் நீர் எறியப்படுவீர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

This is part of the wisdom that your Lord has revealed to you [O Prophet]. Do not set up any other god with Allah, or you will be thrown into Hell, blameworthy and rejected.
Ruwwad Center

17:40
أَفَأَصْفَاكُمْ رَبُّكُمْ بِالْبَنِينَ وَاتَّخَذَ مِنَ الْمَلَائِكَةِ إِنَاثًا ۚ إِنَّكُمْ لَتَقُولُونَ قَوْلًا عَظِيمًا
Afaasfakum rabbukum bialbaneena waittakhatha mina almalaikati inathan innakum lataqooloona qawlan AAatheeman


Has then your Lord (O pagans of Makkah!) preferred for you sons, and taken for Himself from among the angels daughters? Verily, you indeed utter an awful saying.
Hilali & Khan

Then, has your Lord chosen you for [having] sons and taken from among the angels daughters? Indeed, you say a grave saying.
Saheeh International

(மனிதர்களே!) உங்கள் இறைவன், ஆண் மக்களை உங்களுக்குச் சொந்தமாக்கி விட்டு, மலக்குகளைத் தனக்குப் பெண் மக்களாக ஆக்கிக் கொண்டானா? இவ்வாறு கூறும் நீங்கள் நிச்சயமாக மகத்தான (பொய்க்) கூற்றையே கூறுகிறீர்கள்.
தாருல் ஹுதா

(முஷ்ரிக்குகளே!) உங்கள் இறைவன் உங்களுக்கு ஆண் மக்களை அளித்து விட்டு (தனக்கு மட்டும்) மலக்குகளிலிருந்து பெண் மக்களை எடுத்துக்கொண்டானா? நிச்சயமாக நீங்கள் மிகப்பெரும் (பொய்க்) கூற்றையே கூறுகிறீர்கள்.  
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

(மனிதர்களே!) உங்கள் இரட்சகன் உங்களுக்கு (மட்டும்) ஆண் மக்களைத் தேர்ந்தெடுத்து விட்டு(த் தனக்கு மட்டும்) மலக்குகளிலிருந்து பெண் மக்களை ஆக்கிக் கொண்டானா? (இவ்வாறு கூறும்) நீங்கள், நிச்சயமாக, மகத்தான (பொய்க்) கூற்றையே கூறுகிறீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

Has your Lord favored you with sons and has taken for Himself angels as daughters? You are indeed making a monstrous claim.
Ruwwad Center

17:41
وَلَقَدْ صَرَّفْنَا فِي هَٰذَا الْقُرْآنِ لِيَذَّكَّرُوا وَمَا يَزِيدُهُمْ إِلَّا نُفُورًا
Walaqad sarrafna fee hatha alqurani liyaththakkaroo wama yazeeduhum illa nufooran


And surely, We have explained [Our Promises, Warnings and (set forth many) examples] in this Qur'ân that they (the disbelievers) may take heed, but it increases them in naught save aversion.
Hilali & Khan

And We have certainly diversified [the contents] in this Qur'an that mankind may be reminded, but it does not increase the disbelievers except in aversion.
Saheeh International

இவர்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டு இந்தக் குர்ஆனில் நிச்சயமாக நாம் பற்பல வகைகளில் (நல்லுபதேசங்களைக்) கூறியிருக்கிறோம். எனினும், (இவை அனைத்தும்) அவர்களுக்கு வெறுப்பையேயன்றி அதிகப்படுத்தவில்லை.
தாருல் ஹுதா

இன்னும் அவர்கள் (சிந்தித்துப்) படிப்பினைகள் பெறுவதற்காக இந்த குர்ஆனில் திட்டமாக(ப் பல்வேறு) விளக்கங்களைக் கூறியுள்ளோம்; எனினும், (இவை யாவும்) அவர்களுக்கு (உண்மையிலிருந்து) வெறுப்பைத் தவிர (வேறெதையும்) அதிகப்படுத்தவில்லை!
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

இன்னும், அவர்கள் நல்லுணர்ச்சி பெறுவதற்காக (இந்தக்) குர் ஆனில் நிச்சயமாக நாம் பற்பல வகையில் (நல்லுபதேசங்களைத் திரும்பத்திரும்பக்) கூறி இருக்கின்றோம், மேலும் புறக்கணிப்பைத் தவிர, (வேறெதனையும் அது அவர்களுக்கு அதிகப்படுத்தவில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

We have explained things in various ways in this Qur’an, so that they may take heed, but it only increases them in aversion.
Ruwwad Center

17:42
قُلْ لَوْ كَانَ مَعَهُ آلِهَةٌ كَمَا يَقُولُونَ إِذًا لَابْتَغَوْا إِلَىٰ ذِي الْعَرْشِ سَبِيلًا
Qul law kana maAAahu alihatun kama yaqooloona ithan laibtaghaw ila thee alAAarshi sabeelan


Say (O Muhammad [sal-Allâhu 'alayhi wa sallam] to these polytheists, pagans): "If there had been other âlihah (gods) along with Him as they assert, then they would certainly have sought out a way to the Lord of the Throne (seeking His Pleasures and to be near to Him).
Hilali & Khan

Say, [O Muhammad], "If there had been with Him [other] gods, as they say, then they [each] would have sought to the Owner of the Throne a way."
Saheeh International

(ஆகவே, நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: நீங்கள் சொல்வது போல் அல்லாஹ்வுடன் வேறு தெய்வங்கள் இருந்தால், அவை அர்ஷையுடைய (அல்லாஹ்வாகிய அ)வன் பக்கம் செல்லக்கூடிய வழியைக் கண்டுபிடித்து (அவனிடம் சென்றே) இருக்கும்.
தாருல் ஹுதா

(நபியே!) நீர் சொல்வீராக: அவர்கள் கூறுவதுபோல் அவனுடன் வேறு தெய்வங்கள் இருந்தால், அப்போது அவை அர்ஷுடையவன் (அல்லாஹ் தஆலாவின்) அளவில் ஒரு வழியைத் தேடிக்கண்டு பிடித்துச் (சென்று) இருக்கும் என்று.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

(ஆகவே, நபியே! அவர்களிடம்) நீர் கூறுவீராக! அவர்கள் சொல்லுகின்றதைப்போன்று அவனுடன் வேறு வணக்கத்திற்குரியவர்கள் (தெய்வங்கள்) இருந்தால், அப்போது அர்ஷுடைய (அல்லாஹ்வாகிய அ)வனின் பக்கம் (அவனை மிகைக்க) ஒரு வழியை அவர்கள் தேடி இருப்பார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

Say, “If there were other gods besides Him – as they claim – they would have surely sought a way to the Lord of the Throne.”
Ruwwad Center

17:43
سُبْحَانَهُ وَتَعَالَىٰ عَمَّا يَقُولُونَ عُلُوًّا كَبِيرًا
Subhanahu wataAAala AAamma yaqooloona AAuluwwan kabeeran


Glorified and Exalted is He High above (the great falsehood) that they say! (i.e. forged statements that there are other gods along with Allâh, but He is Allâh, the One, the Self-Sufficient Master, Whom all creatures need. He begets not, nor was He begotten, and there is none comparable or coequal to Him).
Hilali & Khan

Exalted is He and high above what they say by great sublimity.
Saheeh International

அவன் மிகப் பரிசுத்தமானவன். இவர்கள் கூறும் கூற்றில் இருந்து அவன் மிக்க உயர்ந்தவன்.
தாருல் ஹுதா

அவன் மிகவும் பரிசுத்தமானவுன்; இன்னும் அவர்கள் கூறும் கூற்றுக்களை விட்டு அப்பாற்பட்டவனாக இருக்கின்றான்.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

அவன் மிகப் பரிசுத்தமானவன், அவர்கள் கூறுவதை விட்டும் மிகப் பெரும் உயர்வாக (அவன்) உயர்ந்து விட்டான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

Glorified and Highly Exalted is He far above what they claim!
Ruwwad Center

17:44
تُسَبِّحُ لَهُ السَّمَاوَاتُ السَّبْعُ وَالْأَرْضُ وَمَنْ فِيهِنَّ ۚ وَإِنْ مِنْ شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَٰكِنْ لَا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ ۗ إِنَّهُ كَانَ حَلِيمًا غَفُورًا
Tusabbihu lahu alssamawatu alssabAAu waalardu waman feehinna wain min shayin illa yusabbihu bihamdihi walakin la tafqahoona tasbeehahum innahu kana haleeman ghafooran


The seven heavens and the earth and all that is therein, glorify Him and there is not a thing but glorifies His Praise. But you understand not their glorification. Truly, He is Ever Forbearing, Oft-Forgiving.
Hilali & Khan

The seven heavens and the earth and whatever is in them exalt Him. And there is not a thing except that it exalts [Allah] by His praise, but you do not understand their [way of] exalting. Indeed, He is ever Forbearing and Forgiving.
Saheeh International

ஏழு வானங்களும் பூமியும் இவற்றிலுள்ள அனைத்தும் அவனைப் புகழ்ந்து கொண்டே இருக்கின்றன. (இவற்றில்) ஒன்றுமே அவனைத் துதி செய்து புகழாதிருக்கவில்லை. எனினும், அவை துதி செய்து புகழ்வதை நீங்கள் அறிந்து கொள்வதில்லை. நிச்சயமாக அவன் பொறுமையுடையவனும், மன்னிப்புடையவனாகவும் இருக்கின்றான்.
தாருல் ஹுதா

ஏழு வானங்களும், பூமியும், அவற்றில் உள்ளவர்களும் அவனைத் துதி செய்து கொண்டிருக்கின்றனர்; இன்னும் அவன் புகழைக் கொண்டு துதி செய்யாத பொருள் (எதுவும்) இல்லை. எனினும் அவற்றின் துதி செய்வதை நீங்கள் உணர்ந்து கொள்ளமாட்டீர்கள், நிச்சயமாக அவன் பொறுமையுடையவனாகவும், மிக மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

ஏழு வானங்களும், பூமியும், அவற்றில் உள்ளவையும் அவனைத் துதி செய்கின்றன, (இவற்றில்) எப்பொருளும் அவனின் புகழைக் கொண்டு துதி செய்து கொண்டே தவிர இல்லை, எனினும், அவற்றின் துதியை நீங்கள் விளங்கிக் கொள்ள மாட்டீர்கள், நிச்சயமாக அவன் மிகச் சகித்துக் கொள்ளக்கூடியவனாக, மிக்க மன்னிக்கக் கூடியவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

The seven heavens and the earth, and all those in them glorify Him. There is not a single thing that does not glorify Him with His praise, but you do not understand their glorification. Indeed, He is Most Forbearing, All-Forgiving.
Ruwwad Center

17:45
وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا
Waitha qarata alqurana jaAAalna baynaka wabayna allatheena la yuminoona bialakhirati hijaban mastooran


And when you (Muhammad [sal-Allâhu 'alayhi wa sallam]) recite the Qur'ân, We put between you and those who believe not in the Hereafter, an invisible veil (or screen their hearts, so they hear or understand it not).
Hilali & Khan

And when you recite the Qur'an, We put between you and those who do not believe in the Hereafter a concealed partition.
Saheeh International

(நபியே!) நீங்கள் குர்ஆனை ஓத ஆரம்பித்தால் உங்களுக்கும் மறுமையை நம்பாதவர்களுக்கும் இடையில் தடுத்துக் கொள்ளக்கூடிய ஒரு திரையை ஆக்கி விடுகிறோம்.
தாருல் ஹுதா

(நபியே!) நீர் குர்ஆனை ஓதினால் உமக்கிடையிலும் மறுமையின் மீது ஈமான் கொள்ளாதவர்களுக்கிடையிலும் மறைக்கப்பட்டுள்ள ஒரு திரையை அமைத்து விடுகிறோம்.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

மேலும், (நபியே!) நீர் குர் ஆனை ஓதினால் உமக்கும், மறுமையை நம்பிக்கை கொள்ளாதோருக்குமிடையில் மறைக்கப்பட்டிருக்கக்கூடிய ஒரு திரையை நாம் ஆக்கி விடுகிறோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

When you recite the Qur’an, We place between you and those who do not believe in the Hereafter an invisible barrier.
Ruwwad Center

17:46
وَجَعَلْنَا عَلَىٰ قُلُوبِهِمْ أَكِنَّةً أَنْ يَفْقَهُوهُ وَفِي آذَانِهِمْ وَقْرًا ۚ وَإِذَا ذَكَرْتَ رَبَّكَ فِي الْقُرْآنِ وَحْدَهُ وَلَّوْا عَلَىٰ أَدْبَارِهِمْ نُفُورًا
WajaAAalna AAala quloobihim akinnatan an yafqahoohu wafee athanihim waqran waitha thakarta rabbaka fee alqurani wahdahu wallaw AAala adbarihim nufooran


And We have put coverings over their hearts lest they should understand it (the Qur'ân), and in their ears deafness. And when you make mention of your Lord Alone [Lâ ilâha illallâh (none has the right to be worshipped but Allâh) Islâmic Monotheism in the Qur'ân, they turn on their backs, fleeing in extreme dislike.
Hilali & Khan

And We have placed over their hearts coverings, lest they understand it, and in their ears deafness. And when you mention your Lord alone in the Qur'an, they turn back in aversion.
Saheeh International

அன்றி, அவர்களுடைய உள்ளங்களிலும், (அவர்கள்) அதனை விளங்கிக்கொள்ள முடியாதவாறு திரையை அமைத்து அவர்களுடைய காதுகளைச் செவிடாக்கி விடுகிறோம். திருக்குர்ஆனில் உங்கள் இறைவன் ஒருவனைப் பற்றியே நீங்கள் கூறிக்கொண்டிருந்தால், அவர்கள் வெறுத்துத் தங்கள் முதுகுப்புறமே (திரும்பிச்) சென்று விடுகின்றனர்.
தாருல் ஹுதா

இன்னும், அவர்கள் அதனை விளங்கிக் கொள்வதை விட்டும் அவர்களுடைய இருதயங்களின் மேல் மூடிகளையும், அவர்களுடைய காதுகளின் மீது செவிட்டுத்தனத்தையும் நாம் அமைத்து விடுகிறோம்; இன்னும் குர்ஆனில், உம்முடைய இறைவன் ஒருவனை மட்டும் நீர் குறிப்பிடும் போது, அவர்கள் வெறுப்படைந்து தம் பின்புறங்களில் (திரும்பி விரண்டவர்களாகப்) பின்வாங்கி விடுகிறார்கள்.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

மேலும், அவர்களுடைய இதயங்களின் மீது, அதனை அவர்கள் விளங்கிக் கொள்ள முடியாதவாறு திரைகளையும் (அமைத்து) அவர்களுடைய காதுகளில் அடைப்பையும் ஆக்கிவிடுகின்றோம், மேலும், குர் ஆனில் உம்முடைய இரட்சகனை (மட்டும் அவர்களின் கூட்டுக்காரர்களைத் தவிர்த்து) அவனைத் தனித்தவனாக நீர் கூறினால், அவர்கள் வெறுப்படைந்து தங்கள் பின் புறங்களில் (திரும்பிச்) சென்று விடுகின்றனர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

We have placed covers on their hearts so that they do not understand it, and deafness in their ears. When you mention your Lord alone in the Qur’an, they turn their backs in aversion.
Ruwwad Center

17:47
نَحْنُ أَعْلَمُ بِمَا يَسْتَمِعُونَ بِهِ إِذْ يَسْتَمِعُونَ إِلَيْكَ وَإِذْ هُمْ نَجْوَىٰ إِذْ يَقُولُ الظَّالِمُونَ إِنْ تَتَّبِعُونَ إِلَّا رَجُلًا مَسْحُورًا
Nahnu aAAlamu bima yastamiAAoona bihi ith yastamiAAoona ilayka waith hum najwa ith yaqoolu alththalimoona in tattabiAAoona illa rajulan mashooran


We know best of what they listen to, when they listen to you. And when they take secret counsel, then the Zâlimûn (polytheists and wrong doers) say: "You follow none but a bewitched man."
Hilali & Khan

We are most knowing of how they listen to it when they listen to you and [of] when they are in private conversation, when the wrongdoers say, "You follow not but a man affected by magic."
Saheeh International

அவர்கள் உங்களுக்கு செவி சாய்த்தால் என்ன நோக்கத்துடன் செவி சாய்க்கின்றார்கள் என்பதை நாம் நன்கறிவோம். அவர்கள் (தங்களுக்குள் உங்களைப் பற்றி) இரகசியமாகப் பேசிக் கொண்டால், "சூனியத்திற்குள்ளான மனிதனையேயன்றி (வேறொருவரையும்) நீங்கள் பின்பற்றவில்லை" என்று (நம்பிக்கையாளர்களை நோக்கிக்) கூறுகின்றனர் (என்பதையும் நாம் நன்கறிவோம்).
தாருல் ஹுதா

(நபியே!) அவர்கள் உமக்குச் செவி சாய்த்தால், என்ன நோக்கத்துடன் செவி சாய்க்கின்றார்கள் என்பதையும் அவர்கள் தமக்குள் இரகசியமாக ஆலோசனை செய்யும் போது, “சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே அன்றி (வேறெவரையும்) நீங்கள் பின்பற்றவில்லை” என்று (தங்களுக்குள்) அந்த அநியாயக்காரர்கள் சொல்வதையும் நாம் நன்கறிவோம்.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

அவர்கள் உமக்குச் செவி சாய்க்கின்றபொழுது எதற்கு (என்ன நோக்கத்துடன்) செவி சாய்க்கிறார்கள் என்பதையும், மேலும், அவர்கள் (தங்களுக்குள்) இரகசியமாக ஆலோசனை செய்யும் சமயத்தில், “சூனியம் செய்யப்பட்ட மனிதனையேயன்றி (வேறொருவரையும்) நீங்கள் பின்பற்றவில்லை” என்று அநியாயக்காரர்கள் (உம்மைப் பற்றிக்) கூறுகின்றபோதும் நாம் மிக்க அறிவோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

We are well aware of what they wish to hear when they listen to you, and what they say when they converse in private, when the wrongdoers say, “You are not following but a bewitched man.”
Ruwwad Center

17:48
انْظُرْ كَيْفَ ضَرَبُوا لَكَ الْأَمْثَالَ فَضَلُّوا فَلَا يَسْتَطِيعُونَ سَبِيلًا
Onthur kayfa daraboo laka alamthala fadalloo fala yastateeAAoona sabeelan


See what examples they have put forward for you. So they have gone astray, and never can they find a way.
Hilali & Khan

Look how they strike for you comparisons; but they have strayed, so they cannot [find] a way.
Saheeh International

(நபியே!) உங்களுக்கு எத்தகைய பட்டம் சூட்டுகிறார்கள் என்பதை நீங்கள் கவனியுங்கள். இவர்கள் வழிகெட்டே விட்டார்கள். (நேரான) வழியை அடைய இவர்களால் முடியாது.
தாருல் ஹுதா

(நபியே!) உமக்கு அவர்கள் எத்தகைய உவமைகளைச் சொல்கிறார்கள் என்பதை கவனித்துப்பாரும்! ஆகவே, அவர்கள் வழிகெட்டு விட்டார்கள்; (நேரான) வழிக்கு அவர்கள் சக்திப்பெற மாட்டார்கள்.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

(நபியே!) உமக்கு எப்படி உதாரணங்களை அவர்கள் கூறுகிறார்கள் என்பதை நீர் கவனிப்பீராக! (அவ்வாறு கூறுவதால்) அவர்கள் வழிகெட்டு விட்டார்கள், ஆகவே, (நேர்) வழியை அடைய அவர்கள் சக்தி பெற மாட்டார்கள்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

See how they call you names! Thus they have gone astray and cannot find a way.
Ruwwad Center

17:49
وَقَالُوا أَإِذَا كُنَّا عِظَامًا وَرُفَاتًا أَإِنَّا لَمَبْعُوثُونَ خَلْقًا جَدِيدًا
Waqaloo aitha kunna AAithaman warufatan ainna lamabAAoothoona khalqan jadeedan


And they say: "When we are bones and fragments (destroyed), should we really be resurrected (to be) a new creation?"
Hilali & Khan

And they say, "When we are bones and crumbled particles, will we [truly] be resurrected as a new creation?"
Saheeh International

"நாம் (இறந்து) எலும்பாகி, உக்கி, மக்கிப்போனதன் பின்னர் புதிய ஒரு படைப்பாக உயிர்ப்பிக்கப்படுவோமா?" என்று அவர்கள் கேட்கிறார்கள்.
தாருல் ஹுதா

இன்னும:; “(இறந்து பட்டு) எலும்புகளாகவும், உக்கிப்போனவைகளாகவும் நாங்கள் ஆகிவிட்ட பிறகு, நிச்சயமாக புதிய படைப்பாக நாங்கள் எழுப்பப்படுகிறவர்களா?” என்றும் அவர்கள் கேட்கிறார்கள்.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

“நாங்கள் (இறந்து) எலும்புகளாகவும், மக்கிப் போனவையாகவும் ஆகி விட்டாலுமா நிச்சயமாக புதிய படைப்பாக நாங்கள் எழுப்பப்படுகிறவர்கள்? என்றும் அவர்கள் கேட்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

They say, “What! When we are turned into bones and dust, will we really be resurrected as a new creation?”
Ruwwad Center

17:50
قُلْ كُونُوا حِجَارَةً أَوْ حَدِيدًا
Qul koonoo hijaratan aw hadeedan


Say (O Muhammad [sal-Allâhu 'alayhi wa sallam]): "Be you stones or iron,"
Hilali & Khan

Say, "Be you stones or iron
Saheeh International

(அதற்கு நபியே!) நீங்கள் கூறுங்கள்: நீங்கள் (உக்கி, மக்கி, மண்ணாவது என்ன?) கல்லாகவோ இரும்பாகவோ ஆகிவிடுங்கள்.
தாருல் ஹுதா

(நபியே!) நீர் கூறும்: “நீங்கள் கல்லாகவோ, இரும்பாகவோ ஆகுங்கள்.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

(அதற்கு, நபியே!) நீர் கூறுவீராக! “நீங்கள் கல்லாகவோ, இரும்பாகவோ ஆகிவிடுங்கள் -
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

Say, “Be you stones or iron,
Ruwwad Center

17:51
أَوْ خَلْقًا مِمَّا يَكْبُرُ فِي صُدُورِكُمْ ۚ فَسَيَقُولُونَ مَنْ يُعِيدُنَا ۖ قُلِ الَّذِي فَطَرَكُمْ أَوَّلَ مَرَّةٍ ۚ فَسَيُنْغِضُونَ إِلَيْكَ رُءُوسَهُمْ وَيَقُولُونَ مَتَىٰ هُوَ ۖ قُلْ عَسَىٰ أَنْ يَكُونَ قَرِيبًا
Aw khalqan mimma yakburu fee sudoorikum fasayaqooloona man yuAAeeduna quli allathee fatarakum awwala marratin fasayunghidoona ilayka ruoosahum wayaqooloona mata huwa qul AAasa an yakoona qareeban


"Or some created thing that is yet greater (or harder) in your breasts (thoughts to be resurrected, even then you shall be resurrected)." Then, they will say: "Who shall bring us back (to life)?" Say: "He Who created you first!" Then, they will shake their heads at you and say: "When will that be?" Say: "Perhaps it is near!"
Hilali & Khan

Or [any] creation of that which is great within your breasts." And they will say, "Who will restore us?" Say, "He who brought you forth the first time." Then they will nod their heads toward you and say, "When is that?" Say, "Perhaps it will be soon -
Saheeh International

அல்லது மிகப் பெரிதென உங்கள் மனதில் தோன்றும் வேறொரு பொருளாகவாகிலும் ஆகிவிடுங்கள். இவ்வாறு மாறிய பின்னர் "எங்களை எவன் உயிர்ப்பிப்பான்?" என்று அவர்கள் கேட்கட்டும். (அவ்வாறு கேட்டால் நபியே! நீங்கள் அவர்களை நோக்கி) "உங்களை முதலாவதாக எவன் படைத்தானோ அவன்தான் (நீங்கள் மரணித்த பின்னும் உங்களை எழுப்புவான்)" என்று கூறுங்கள். அதற்கவர்கள் தங்கள் தலையை உங்கள் அளவில் சாய்த்து "அந்நாள் எப்பொழுது (வரும்)?" என்று கேட்பார்கள். அதற்கு நீங்கள் (அவர்களை நோக்கி "அது தூரத்தில் இல்லை) வெகு சீக்கிரத்தில் வந்துவிடலாம்" என்று கூறுங்கள்.
தாருல் ஹுதா

“அல்லது மிகப் பெரிதென உங்கள் நெஞ்சங்களில் தோன்றும் வேறொரு படைப்பாய் ஆகுங்கள்;” (எப்படியானாலும் நீங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள்). “எங்களை எவன் (மறுமுறையும் உயிர் கொடுத்து) மீட்டுவான்?” என்று அவர்கள் கேட்பார்கள். “உங்களை எவன் முதலில் படைத்தானோ, அவன் தான்!” என்று (நபியே!) நீர் கூறும்; அப்போது அவர்கள் தங்களுடைய சிரசுகளை உம் பக்கம் சாய்த்து, (பரிகாசமாக) அது எப்போது (நிகழும்)? என்று கேட்பார்கள். “அது வெகு சீக்கிரத்தில் ஏற்படலாம்” என்று கூறுவீராக!
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

“அல்லது உங்கள் நெஞ்சங்களில் பெரிதாக இருப்பதிலிருந்து (அவ்வாறு தோன்றும்) ஒரு படைப்பாக ஆகிவிடுங்கள்.” (இவ்வாறு ஆகிய) பின்னர் எங்களை எவன் (உயிர் கொடுத்து) மீட்டுவான் என்று அவர்கள் கேட்பார்கள், (அவ்வாறு கேட்டால், நபியே! நீர்) “உங்களை முதலாவதாக எவன் படைத்தானோ அவன்தான் (நீங்கள் மரணித்த பின்னும் உங்களை எழுப்புவான்) என்று கூறுவீராக! அப்போது அவர்கள் தங்கள் சிரசுகளை உம் அளவில் சாய்த்து, “அது எப்பொழுது (வரும்)?” என்றும் கேட்பார்கள், (அதற்கு) “அது வெகு சமீபத்தில் ஏற்பட்டுவிடலாம்” என்று நீர் கூறுவீராக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

or any other substance you think is harder to bring back to life.” They will then say, “Who will bring us back [to life]?” Say, “The One Who created you the first time.” They will shake their heads at you and say, “When will that be?” Say, “Perhaps it is soon.”
Ruwwad Center

17:52
يَوْمَ يَدْعُوكُمْ فَتَسْتَجِيبُونَ بِحَمْدِهِ وَتَظُنُّونَ إِنْ لَبِثْتُمْ إِلَّا قَلِيلًا
Yawma yadAAookum fatastajeeboona bihamdihi watathunnoona in labithtum illa qaleelan


On the Day when He will call you, and you will answer (His Call) with (words of) His praise and obedience, and you will think that you have stayed (in this world) but a little while!
Hilali & Khan

On the Day He will call you and you will respond with praise of Him and think that you had not remained [in the world] except for a little."
Saheeh International

(இன்றைய தினம் நீங்கள் இறைவனை வெறுத்தபோதிலும் அவன்) உங்களை (விசாரணைக்காக) அழைக்கும் நாளில் நீங்கள் அவனைப் புகழ்ந்துகொண்டே அவனிடம் வருவீர்கள். (இறந்த பின்) வெகு சொற்ப (நேர)மே அன்றி தங்கியிருக்கவில்லை என்றும் (அன்றைய தினம்) நீங்கள் எண்ணுவீர்கள்!
தாருல் ஹுதா

உங்களை (இறுதியில்) அவன் அழைக்கும் நாளில், நீங்கள் அவன் புகழை ஓதியவர்களாக பதில் கூறுவீர்கள்; (மரணத்திற்குப் பின்) சொற்ப(கால)மே தங்கியிருந்ததாக நீங்கள் நினைப்பீர்கள்.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

உங்களை அவன் அழைக்கும் நாளில், நீங்கள் அவனின் புகழைக்கொண்டு (அதைக் கூறியவர்களாக) பதில் கூறுவீர்கள், (இறந்த பின்) வெகு சொற்ப (நேர)மேயன்றி தங்கியிருக்கவில்லை – என்றும் (அன்றையத் தினம்) நீங்கள் எண்ணுவீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

On the Day when He calls you, you will respond by praising Him, thinking that you had not stayed [on earth] except for a little while.
Ruwwad Center

17:53
وَقُلْ لِعِبَادِي يَقُولُوا الَّتِي هِيَ أَحْسَنُ ۚ إِنَّ الشَّيْطَانَ يَنْزَغُ بَيْنَهُمْ ۚ إِنَّ الشَّيْطَانَ كَانَ لِلْإِنْسَانِ عَدُوًّا مُبِينًا
Waqul liAAibadee yaqooloo allatee hiya ahsanu inna alshshaytana yanzaghu baynahum inna alshshaytana kana lilinsani AAaduwwan mubeenan


And say to My slaves (i.e. the true believers of Islâmic Monotheism) that they should (only) say those words that are the best. (Because) Shaitân (Satan) verily, sows a state of conflict and disagreements among them. Surely, Shaitân (Satan) is to man a plain enemy.
Hilali & Khan

And tell My servants to say that which is best. Indeed, Satan induces [dissension] among them. Indeed Satan is ever, to mankind, a clear enemy.
Saheeh International

(நபியே! எனக்கு கட்டுப்பட்ட) என்னுடைய அடியார்களுக்கு நீங்கள் கூறுங்கள்: அவர்கள் (எந்த மனிதருடன் பேசியபோதிலும்) எது மிக அழகியதோ அதையே கூறவும். நிச்சயமாக ஷைத்தான் அவர்களுக்கிடையில் (கெட்ட வார்த்தைகளைக் கூறும்படி செய்து) கெடுதலே செய்வான். (ஏனென்றால்,) நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்கமான எதிரியாக இருக்கிறான். (ஆகவே, எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்.)
தாருல் ஹுதா

(நபியே!) என் அடியார்களுக்கு அவர்கள் அழகியதையே சொல்ல வேண்டும் என்று கூறுவீராக! நிச்சயமாக ஷைத்தான் அவர்களுக்கிடையில் (தீயதைத் தூண்டி) விஷமஞ் செய்வான்; நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்கமான பகைவனாக இருக்கின்றான்.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

என்னுடைய அடியார்களுக்கு (நபியே!) நீர் கூறுவீராக! (எம் மனிதருடன் பேசியபோதிலும்) எது நல்லதோ அதையே அவர்கள் கூறவும் நிச்சயமாக ஷைத்தான் அவர்களுக்கிடையில் குழப்பம் செய்வான், (ஏனென்றால்) நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்கமான விரோதியாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

Tell My slaves that they should say what is best, for Satan sows discord among them. Indeed, Satan is a sworn enemy to mankind.
Ruwwad Center

17:54
رَبُّكُمْ أَعْلَمُ بِكُمْ ۖ إِنْ يَشَأْ يَرْحَمْكُمْ أَوْ إِنْ يَشَأْ يُعَذِّبْكُمْ ۚ وَمَا أَرْسَلْنَاكَ عَلَيْهِمْ وَكِيلًا
Rabbukum aAAlamu bikum in yasha yarhamkum aw in yasha yuAAaththibkum wama arsalnaka AAalayhim wakeelan


Your Lord knows you best; if He wills, He will have mercy on you, or if He wills, He will punish you. And We have not sent you (O Muhammad [sal-Allâhu 'alayhi wa sallam]) as a guardian over them.
Hilali & Khan

Your Lord is most knowing of you. If He wills, He will have mercy upon you; or if He wills, He will punish you. And We have not sent you, [O Muhammad], over them as a manager.
Saheeh International

(மனிதர்களே!) உங்களை உங்கள் இறைவன் நன்கறிந்தே இருக்கிறான். அவன் விரும்பினால் உங்களுக்கு அருள் புரிவான் அல்லது அவன் விரும்பினால் உங்களை வேதனை செய்வான். ஆகவே, (நபியே!) உங்களை அவர்களுக்குப் பொறுப்பாளியாக நாம் அனுப்பவில்லை.
தாருல் ஹுதா

உங்களுடைய இறைவன் உங்களைப் பற்றி நன்கறிவான்; அவன் நாடினால் உங்களுக்கு கிருபை செய்வான்; அல்லது அவன் நாடினால் உங்களை வேதனை செய்வான்; நாம் உம்மை அவர்களுக்கு வகீலாக (பொறுப்பாளியாக) அனுப்பவில்லை.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

உங்களுடைய இரட்சகன் உங்களைப் (பற்றி) மிக்க அறிந்தவன், அவன் நாடினால் உங்களுக்கு அவன் அருள் புரிவான், அல்லது அவன் நாடினால் உங்களை வேதனை செய்வான். இன்னும், அவர்கள் மீது பொறுப்பாளராக (நபியே!) உம்மை நாம் அனுப்பவில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

Your Lord knows you best: if He wills, He will have mercy on you; or if He wills, He will punish you. We have not sent you [O Prophet] to be in charge of them.
Ruwwad Center

17:55
وَرَبُّكَ أَعْلَمُ بِمَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۗ وَلَقَدْ فَضَّلْنَا بَعْضَ النَّبِيِّينَ عَلَىٰ بَعْضٍ ۖ وَآتَيْنَا دَاوُودَ زَبُورًا
Warabbuka aAAlamu biman fee alssamawati waalardi walaqad faddalna baAAda alnnabiyyeena AAala baAAdin waatayna dawooda zabooran


And your Lord knows best all who are in the heavens and the earth. And indeed, We have preferred some of the Prophets to others, and to Dawûd (David) We gave the Zabûr (Psalms).
Hilali & Khan

And your Lord is most knowing of whoever is in the heavens and the earth. And We have made some of the prophets exceed others [in various ways], and to David We gave the book [of Psalms].
Saheeh International

வானங்களிலும் பூமியிலும் என்னென்ன இருக்கின்றது என்பதையும் உங்கள் இறைவன் நன்கறிவான். (நபியே! உங்களது இறைவனாகிய) நாம் நபிமார்களில் சிலரை சிலர்மீது மெய்யாகவே மேன்மையாக்கி வைத்து, தாவூது (நபி)க்கு "ஜபூர்" என்னும் வேதத்தைக் கொடுத்தோம்.
தாருல் ஹுதா

உம்முடைய இறைவன் வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்களைப் பற்றி நன்கு அறிவான்; நபிமார்களில் சிலரை வேறு சிலரைவிடத் திட்டமாக நாம் மேன்மையாக்கியிருக்கிறோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (வேதத்தையும்) கொடுத்தோம்.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

வானங்கள் மற்றும் பூமியில் உள்ளவர்களைப் பற்றியும் உமதிரட்சகன் மிக்க அறிந்தவன், நபிமார்களில் சிலரை, வேறு சிலரை விடவும் நிச்சயமாக நாம் மேன்மையாக்கி வைத்தோம், இன்னும் (நபி) தாவூதுக்கு ஜபூர் (என்னும்) வேதத்தை நாம் கொடுத்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

Your Lord knows best all those in the heavens and on earth. We have surely favored some prophets over others, and We gave David the Psalms.
Ruwwad Center

17:56
قُلِ ادْعُوا الَّذِينَ زَعَمْتُمْ مِنْ دُونِهِ فَلَا يَمْلِكُونَ كَشْفَ الضُّرِّ عَنْكُمْ وَلَا تَحْوِيلًا
Quli odAAu allatheena zaAAamtum min doonihi fala yamlikoona kashfa alddurri AAankum wala tahweelan


Say (O Muhammad [sal-Allâhu 'alayhi wa sallam]): "Call upon those – besides Him – whom you pretend [to be gods like angels, 'خsâ (Jesus), 'Uzair (Ezra) and others]. They have neither the power to remove the adversity from you nor even to shift it from you to another person."
Hilali & Khan

Say, "Invoke those you have claimed [as gods] besides Him, for they do not possess the [ability for] removal of adversity from you or [for its] transfer [to someone else]."
Saheeh International

(நபியே! இணைவைத்து வணங்குபவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: அல்லாஹ்வையன்றி (வேறு தெய்வங்கள் இருப்பதாக) நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறீர்களே அவைகளை நீங்கள் (உங்கள் கஷ்டங்களை நீக்க) அழையுங்கள். (அவ்வாறழைத்தால்) அவை உங்களுடைய யாதொரு கஷ்டத்தை நீக்கி வைக்கவோ அல்லது (அதனைத்) தட்டிவிடவோ சக்தியற்றவை (என்பதை) அறிந்து கொள்வீர்கள்.
தாருல் ஹுதா

அவனையன்றி (வேறு தெய்வங்கள் இருப்பதாக) நீங்கள் எண்ணிக்கொண்டிருப்பவர்களை அழைத்துப்பாருங்கள்; அவர்கள் உங்களுடைய கஷ்டத்தை நிவர்த்திக்கவோ அல்லது திருப்பிவிடவோ சக்தி பெறவில்லை (என்பதை அறிவீர்கள்).
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

“அல்லாஹ்வையன்றி (வேறு வணக்கத்திற்குரியவர்கள் இருப்பதாக) நீங்கள் எண்ணிக்கொண்டு இருக்கின்றீர்களே, அத்தகையவர்களை நீங்கள் (உங்கள் கஷ்டங்களை நீக்க) அழையுங்கள், (அவ்வாறு அழைத்தால்) அவர்கள் உங்களை விட்டும் யாதொரு கஷ்டத்தை நீக்கி வைக்கவும் (அதனைத்) திருப்பி விடவும் சக்தி பெற மாட்டார்கள்” என்று நபியே! நீர் கூறுவீராக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

Say, “Call upon those whom you claimed [to be gods] besides Him; they have no power to remove harm or avert it from you.”
Ruwwad Center

17:57
أُولَٰئِكَ الَّذِينَ يَدْعُونَ يَبْتَغُونَ إِلَىٰ رَبِّهِمُ الْوَسِيلَةَ أَيُّهُمْ أَقْرَبُ وَيَرْجُونَ رَحْمَتَهُ وَيَخَافُونَ عَذَابَهُ ۚ إِنَّ عَذَابَ رَبِّكَ كَانَ مَحْذُورًا
Olaika allatheena yadAAoona yabtaghoona ila rabbihimu alwaseelata ayyuhum aqrabu wayarjoona rahmatahu wayakhafoona AAathabahu inna AAathaba rabbika kana mahthooran


Those whom they call upon [like 'خsâ (Jesus) – son of Maryam (Mary), 'Uzair (Ezra), angels and others] desire (for themselves) means of access to their Lord (Allâh), as to which of them should be the nearest; and they ['خsâ (Jesus), 'Uzair (Ezra), angels and others] hope for His Mercy and fear His torment. Verily, the torment of your Lord is (something) to be afraid of!
Hilali & Khan

Those whom they invoke seek means of access to their Lord, [striving as to] which of them would be nearest, and they hope for His mercy and fear His punishment. Indeed, the punishment of your Lord is ever feared.
Saheeh International

இவர்கள் யாரை பிரார்த்தித்து அழைக்கின்றார்களோ அவர்களுமோ தங்கள் இறைவனிடம் தங்களில் மிக நெருக்க மானவராக யார் ஆகமுடியும் என்பதற்காக நன்மை செய்வதையே ஆசை வைத்துக் கொண்டும், அவனுடைய அருளையே எதிர் பார்த்து அவனுடைய வேதனைக்குப் பயந்து கொண்டும் இருக்கின்றார்கள். ஏனென்றால், நிச்சயமாக உங்களது இறைவனின் வேதனையோ, மிக மிக பயப்படக் கூடியதே!
தாருல் ஹுதா

(அல்லாஹ்வையன்றி) இவர்கள் யாரை பிரார்த்திக்கின்றார்களோ அவர்கள், ஏன் அவர்களில் மிகவும் (இறைவனுக்கு) நெருக்கமானவர்கள் கூட தங்கள் இறைவன்பால் (கொண்டு செல்ல) நற்கருமங்களை செய்து கொண்டும் அவனது அருளை எதிர்பார்த்தும் அவனது தண்டனைக்கு அஞ்சியுமே இருக்கின்றனர். நிச்சயமாக உமது இறைவனின் தண்டனை அச்சப்படத் தக்கதாகவே உள்ளது.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

எவர்களை (இணைவைத்துக் கொண்‌‍‌டிருப்போரான) அவர்கள் அழைக்கிறார்களோ அத்தகையோர்– தங்கள் இரட்சகனின்பால், (நற்செயல்கள் செய்வது கொண்டு) அவர்களில் யார் மிக்க நெருக்கமானவர்கள் என்றுநெருக்கத்தை தேடுகிறார்கள்; அவனது அருளை ஆதரவும் வைக்கிறார்கள்; அவனது வேதனையை பயப்படவும் செய்கிறார்கள்; நிச்சயமாக உமதிரட்சகனின் வேதனை எச்சரிக்கப்பட்டதாக இருக்கின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

Those whom they call upon seek means of nearness to their Lord, each trying to become closer, hoping for His Mercy and fearing His punishment. Indeed, the punishment of your Lord is fearsome.
Ruwwad Center

17:58
وَإِنْ مِنْ قَرْيَةٍ إِلَّا نَحْنُ مُهْلِكُوهَا قَبْلَ يَوْمِ الْقِيَامَةِ أَوْ مُعَذِّبُوهَا عَذَابًا شَدِيدًا ۚ كَانَ ذَٰلِكَ فِي الْكِتَابِ مَسْطُورًا
Wain min qaryatin illa nahnu muhlikooha qabla yawmi alqiyamati aw muAAaththibooha AAathaban shadeedan kana thalika fee alkitabi mastooran


And there is not a town (population) but We shall destroy it before the Day of Resurrection, or punish it with a severe torment. That is written in the Book (of Our Decrees)
Hilali & Khan

And there is no city but that We will destroy it before the Day of Resurrection or punish it with a severe punishment. That has ever been in the Register inscribed.
Saheeh International

(அநியாயக்காரர்கள் வசிக்கும்) எந்த ஊரையும் மறுமை நாள் வருவதற்கு முன்னதாக நாம் அழித்துவிடாமல் அல்லது கடினமான வேதனை செய்யாமல் விடுவதில்லை. இவ்வாறே (நம்மிடமுள்ள நிகழ்ச்சிக் குறிப்பாகிய) "லவ்ஹுல் மஹ்ஃபூளி"ல் வரையப்பட்டுவிட்டது.
தாருல் ஹுதா

இன்னும் கியாம நாளைக்கு முன்னே (அழிச்சாட்டியம் செய்யும்) எந்த ஊரையும் நாம் அழிக்காமலோ, அல்லது கடுமையான வேதனைக் கொண்டு வேதனை செய்யாமலோ இருப்பதில்லை; இது(லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) ஏட்டில் வரையப்பெற்றே இருக்கிறது.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

(அக்கிரமக்காரர்கள் வசிக்கும்) எந்த ஊரையும் - மறுமை நாளைக்கு முன்னதாக நாம் அதை – அழிப்போராகவோ, அல்லது அதனைக் கடினமான வேதனையாக வேதனை செய்வோராகவோ தவிர இல்லை, இது (நம்மிடமுள்ள) பதிவேட்டில் எழுதப்பட்டதாக இருக்கின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

There is no [disbelieving] town except that We will destroy it before the Day of Resurrection or punish it severely. This is written in the Record.
Ruwwad Center

17:59
وَمَا مَنَعَنَا أَنْ نُرْسِلَ بِالْآيَاتِ إِلَّا أَنْ كَذَّبَ بِهَا الْأَوَّلُونَ ۚ وَآتَيْنَا ثَمُودَ النَّاقَةَ مُبْصِرَةً فَظَلَمُوا بِهَا ۚ وَمَا نُرْسِلُ بِالْآيَاتِ إِلَّا تَخْوِيفًا
Wama manaAAana an nursila bialayati illa an kaththaba biha alawwaloona waatayna thamooda alnnaqata mubsiratan fathalamoo biha wama nursilu bialayati illa takhweefan


And nothing stops Us from sending the Ayât (proofs, evidences, signs) but that the people of old denied them. And We sent the she-camel to Thamûd as a clear sign, but they did her wrong. And We sent not the signs except to warn, and to make them afraid (of destruction).
Hilali & Khan

And nothing has prevented Us from sending signs except that the former peoples denied them. And We gave Thamud the she-camel as a visible sign, but they wronged her. And We send not the signs except as a warning.
Saheeh International

(நாம் அனுப்பிய அத்தாட்சிகளை) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (அவர்கள் விரும்பியவாறு நாம் கொடுத்த அத்தாட்சிகளையும் அவர்களே) பொய்யாக்கி விட்டனர் என்ற காரணத்தைத் தவிர, (இவர்கள் கோரும்) அத்தாட்சிகளை அனுப்பி வைக்க வேறொன்றும் தடையாக இல்லை. (இதற்கு முன்னர்) "ஸமூது" என்னும் மக்களுக்கு (அவர்கள் விரும்பியவாறே) ஒரு பெண் ஒட்டகத்தை அத்தாட்சியாகக் கொடுத்திருந்தோம். அவர்களோ வரம்பு மீறி அதற்குத் தீங்கிழைத்து விட்டனர். (அவர்கள் விரும்புகின்ற) இத்தகைய அத்தாட்சிகளையெல்லாம் (அவர்களுக்குப்) பயமுறுத்தும் பொருட்டேயன்றி நாம் அனுப்புவதில்லை.
தாருல் ஹுதா

(நம்முடைய அத்தாட்சிகளை இவர்களுக்கு) முந்தியவர்களும் பொய்ப்பித்ததைத் தவிர (வேறு எதுவும் இவர்கள் கோரும்) அத்தாட்சிகளை அனுப்ப நம்மைத் தடுக்கவில்லை; (இதற்கு முன்) நாம் “ஸமூது” கூட்டத்தாருக்கு ஒரு பெண் ஒட்டகத்தைக் கண்கூடான அத்தாட்சியாகக் கொடுத்திருந்தோம்; அவர்களோ (வரம்பு மீறி) அதற்கு அநியாயம் செய்தனர்; (மக்களை) அச்சமூட்டி எச்சரிப்பதற்காவே அன்றி நாம் (இத்தகைய) அத்தாட்சிகளை அனுப்புவதில்லை.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

(நம்முடைய அத்தாட்சிகளை) முன்னிருந்தவர்கள் பொய்யாக்கிவிட்டனர் என்பதைத் தவிர, (இவர்கள் கோரும்) அத்தாட்சிகளை அனுப்ப (வேறெதுவும்) நம்மைத் தடுக்கவில்லை, (இதற்கு முன்னர்) ஸமூது சமூகத்தார்ககு ஒருபெண் ஒட்டகத்தைக் கண்கூடான அத்தாட்சியாகக் கொடுத்திருந்தோம், அவர்களோ, (வரம்பு மீறி) அதற்கு அநியாயம் செய்து விட்டனர், (இத்தகைய) அத்தாட்சிகளை(யெல்லாம் மனிதர்களுக்குப்) பயமுறுத்துவதற்காகவே அன்றி நாம் அனுப்பவில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

Nothing prevents Us from sending signs except that the earlier people denied them. We gave Thamūd the she-camel as a clear sign, but they wrongfully rejected her. We do not send signs except as a warning.
Ruwwad Center

17:60
وَإِذْ قُلْنَا لَكَ إِنَّ رَبَّكَ أَحَاطَ بِالنَّاسِ ۚ وَمَا جَعَلْنَا الرُّؤْيَا الَّتِي أَرَيْنَاكَ إِلَّا فِتْنَةً لِلنَّاسِ وَالشَّجَرَةَ الْمَلْعُونَةَ فِي الْقُرْآنِ ۚ وَنُخَوِّفُهُمْ فَمَا يَزِيدُهُمْ إِلَّا طُغْيَانًا كَبِيرًا
Waith qulna laka inna rabbaka ahata bialnnasi wama jaAAalna alrruya allatee araynaka illa fitnatan lilnnasi waalshshajarata almalAAoonata fee alqurani wanukhawwifuhum fama yazeeduhum illa tughyanan kabeeran


And (remember) when We told you: "Verily, your Lord has encompassed mankind (i.e. they are in His Grip)." And We made not the vision which We showed you (O Muhammad [sal-Allâhu 'alayhi wa sallam] as an actual eye-witness and not as a dream on the night of Al-Isrâ') but a trial for mankind, and (likewise) the accursed tree (Zaqqûm, mentioned) in the Qur'ân. We warn and make them afraid but it only increases them in naught save great disbelief, oppression and disobedience to Allâh.
Hilali & Khan

And [remember, O Muhammad], when We told you, "Indeed, your Lord has encompassed the people." And We did not make the sight which We showed you except as a trial for the people, as was the accursed tree [mentioned] in the Qur'an. And We threaten them, but it increases them not except in great transgression.
Saheeh International

(நபியே!) "உங்கள் இறைவன் அம்மனிதர்களைச் சூழ்ந்து கொண்டான். (அவர்கள் உங்களுக்குத் தீங்கிழைக்க முடியாது)" என்று நாம் உங்களுக்குக் கூறியதை நீங்கள் கவனித்துப் பாருங்கள். உங்களுக்கு நாம் (மிஃராஜில்) காண்பித்த காட்சியும், சபிக்கப்பட்ட (கள்ளி) மரத்தை (அது மறுமையில் பாவிகளின் உணவென) குர்ஆனில் நாம் கூறியிருப்பதும் மனிதர்களை சோதிப்பதற்காக வேயன்றி வேறில்லை. (நபியே! நம் வேதனையைப் பற்றி) நாம் அவர்களுக்குப் பயமுறுத்துவது பின்னும் (பின்னும்) அவர்களுடைய பெரும் அட்டூழியத்தையே அதிகரிக்கச் செய்கின்றது.
தாருல் ஹுதா

(நபியே!) நிச்சயமாக உம்முடைய இறைவன் மனிதர்களைச் சூழ்ந்து கொண்டிருக்கின்றான் என்று உமக்குக் கூறியதை (நினைவு கூர்வீராக! மிஃராஜின் போது) நாம் உமக்குக்காட்டிய காட்சியையும் குர்ஆனில் சபிக்கப்பட்டும் (ஜக்கூம்) மரத்தையும் மனிதர்களுக்கு சோதனையாகவே தவிர நாம் ஆக்கவில்லை. இன்னும் நாம் அவர்களை அச்சுறுத்துகின்றோம்; ஆனால், இது அவர்களுடைய பெரும் அழிச்சாட்டியத்தையே அதிகரிக்கச் செய்கின்றது.  
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

மேலும், நிச்சயமாக உமதிரட்சகன் மனிதர்களை (தன் அறிவால், சக்தியால்) சூழ்ந்து கொண்டான், என்று நாம் உமக்கு கூறியதை (நபியே! நீர் நினைவு கூர்வீராக! மேலும், உமக்கு நாம் (மிஃராஜின் போது) காண்பித்த காட்சியையும், குர் ஆனில் சபிக்கப்பட்ட மரத்தையும் மனிதர்களுக்கு சோதனையாகவே தவிர நாம் ஆக்கவில்லை, இன்னும், அவர்களை நாம் பயமுறுத்துகிறோம், ஆனால், பெரும் அழிச்சாட்டியத்தைத் தவிர (வேறு எதையும்) அவர்களுக்கு அது அதிகப்படுத்துவதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

And [remember, O Prophet] when We told you, “Your Lord encompasses all people [with His knowledge and might].” We did not make the sight which We showed you except as a test for people, as well as the cursed tree [mentioned] in the Qur’an. We keep threatening them, yet it only increases them to greater transgression.
Ruwwad Center

17:61
وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ قَالَ أَأَسْجُدُ لِمَنْ خَلَقْتَ طِينًا
Waith qulna lilmalaikati osjudoo liadama fasajadoo illa ibleesa qala aasjudu liman khalaqta teenan


And (remember) when We said to the angels: "Prostrate yourselves to Adam." They prostrated themselves except Iblîs (Satan). He said: "Shall I prostrate myself to one whom You created from clay?"
Hilali & Khan

And [mention] when We said to the angles, "Prostrate to Adam," and they prostrated, except for Iblees. He said, "Should I prostrate to one You created from clay?"
Saheeh International

மலக்குகளை நோக்கி, "ஆதமுக்குச் சிரம் பணியுங்கள்" என நாம் கூறிய சமயத்தில் இப்லீஸைத் தவிர (மலக்குகள் அனைவரும் அவருக்குச்) சிரம் பணிந்தார்கள். அவனோ "நீ மண்ணால் படைத்தவனுக்கு நான் சிரம் பணிவதா?" என்று கேட்டான்.
தாருல் ஹுதா

இன்னும், (நினைவு கூர்வீராக!) நாம் மலக்குகளிடம் “ஆதமுக்கு நீங்கள் ஸுஜூது செய்யுங்கள்” என்று கூறிய போது, இப்லீஸை தவிர அவர்கள் ஸுஜூது செய்தார்கள்; அவனோ: “களி மண்ணால் நீ படைத்தவருக்கா நான் ஸுஜூது செய்ய வேண்டும்?” என்று கூறினான்.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

மேலும், மலக்குகளிடம், “ஆதமுக்கு நீங்கள் சிரம் பணியுங்கள்” என்று நாம் கூறிய சமயத்தில் இப்லீஸைத் தவிர (மலக்குகளான) அவர்கள் சிரம் பணிந்தார்கள், அவனோ, “களிமண்ணால் நீ படைத்தவருக்கு நான் சிரம் பணிவேனா?” என்று கூறினான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

And [remember] when We said to the angels, “Prostrate to Adam;” they all prostrated except Iblīs, who said, “Should I prostrate to whom You created from clay?”
Ruwwad Center

17:62
قَالَ أَرَأَيْتَكَ هَٰذَا الَّذِي كَرَّمْتَ عَلَيَّ لَئِنْ أَخَّرْتَنِ إِلَىٰ يَوْمِ الْقِيَامَةِ لَأَحْتَنِكَنَّ ذُرِّيَّتَهُ إِلَّا قَلِيلًا
Qala araaytaka hatha allathee karramta AAalayya lain akhkhartani ila yawmi alqiyamati laahtanikanna thurriyyatahu illa qaleelan


[Iblîs (Satan)] said: "See this one whom You have honoured above me, if You give me respite (keep me alive) to the Day of Resurrection, I will surely seize and mislead his offspring (by sending them astray) all but a few!"
Hilali & Khan

[Iblees] said, "Do You see this one whom You have honored above me? If You delay me until the Day of Resurrection, I will surely destroy his descendants, except for a few."
Saheeh International

(பின்னும் இறைவனை நோக்கி) "என்னைவிட நீ கௌரவப்படுத்தி இருப்பவர் இவரல்லவா என்பதை நீ கவனித்தாயா?" (என்று ஏளனமாக ஆதமைச் சுட்டிக் காண்பித்து) "நீ என்னை மறுமை நாள் வரையில் பிற்படுத்தி வைத்தால் வெகு சிலரைத் தவிர இவருடைய சந்ததிகள் அனைவரையும் நான் வழிகெடுத்து (வேரறுத்து) விடுவேன்" என்று கூறினான்.
தாருல் ஹுதா

“எனக்கு மேலாக கண்ணியப் படுத்திய இவரைப் பார்த்தாயா? நீ எனக்கு கியாம நாள்வரை அவகாசம் கொடுத்தால், நாம் இவருடைய சந்ததிகளில் சிலரைத் தவிர (மற்றவர்களை) நிச்சயமாக வழிகெடுத்து விடுவேன்” என்று (இப்லீஸ்) கூறினான்.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

(அன்றியும்,) “என்னைவிட மேலாக நீ கண்ணியப் படுத்திய (ஆதமாகிய) இவரை நீ பார்த்தாயா? என்னை மறுமை நாள் வரையில் பிற்படுத்தி (வாழ) வைத்தால், சிலரைத் தவிர இவருடைய சந்ததியினரை நான் (வழி கெடுத்து) திண்ணமாக வேரறுத்து விடுவேன்?” என்று (இப்லீஸாகிய) அவன் கூறினான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

He added, “Do You see this one whom You have honored above me? If you give me respite until the Day of Resurrection, I will surely overpower his offspring, except for a few.”
Ruwwad Center

17:63
قَالَ اذْهَبْ فَمَنْ تَبِعَكَ مِنْهُمْ فَإِنَّ جَهَنَّمَ جَزَاؤُكُمْ جَزَاءً مَوْفُورًا
Qala ithhab faman tabiAAaka minhum fainna jahannama jazaokum jazaan mawfooran


(Allâh) said: "Go, and whosoever of them follows you, surely, Hell will be the recompense of you (all) an ample recompense.
Hilali & Khan

[Allah] said, "Go, for whoever of them follows you, indeed Hell will be the recompense of you - an ample recompense.
Saheeh International

(அதற்கு இறைவன், இங்கிருந்து) "நீ அப்புறப்பட்டுவிடு. அவருடைய சந்ததிகளில் உன்னைப் பின்பற்றியவர்களுக்கும் (உனக்கும்) முற்றிலும் தகுதியான கூலி நிச்சயமாக நரகம்தான்" என்றும்,
தாருல் ஹுதா

“நீ போய் விடு; அவர்களில் உன்னைப் பின்பற்றுபவர் இருந்தால் - நிச்சயமாக நரகம் தான் உங்கள் கூலியில் நிறப்பமான கூலியாக இருக்கும்.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

(அதற்கு) “நீ சென்று விடு, அவர்களில் யார் உன்னைப் பின்பற்றுகிறாரோ, (அவருக்கும் உனக்கும்) நிச்சயமாக நரகம்தான் நிரப்பமான கூலியாக உங்களுடைய கூலியாகும்” என்று (அல்லாஹ்வாகிய) அவன் கூறினான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

Allah said, “Be gone! Whoever among them follows you, Hell will be an ample recompense for you all.
Ruwwad Center

17:64
وَاسْتَفْزِزْ مَنِ اسْتَطَعْتَ مِنْهُمْ بِصَوْتِكَ وَأَجْلِبْ عَلَيْهِمْ بِخَيْلِكَ وَرَجِلِكَ وَشَارِكْهُمْ فِي الْأَمْوَالِ وَالْأَوْلَادِ وَعِدْهُمْ ۚ وَمَا يَعِدُهُمُ الشَّيْطَانُ إِلَّا غُرُورًا
Waistafziz mani istataAAta minhum bisawtika waajlib AAalayhim bikhaylika warajlika washarikhum fee alamwali waalawladi waAAidhum wama yaAAiduhumu alshshaytanu illa ghurooran


"And befool them gradually those whom you can among them with your voice (i.e. songs, music, and any other call for Allâh's disobedience), make assaults on them with your cavalry and your infantry, share with them wealth and children (by tempting them to earn money by illegal ways usury, or by committing illegal sexual intercourse), and make promises to them." But Satan promises them nothing but deceit.
Hilali & Khan

And incite [to senselessness] whoever you can among them with your voice and assault them with your horses and foot soldiers and become a partner in their wealth and their children and promise them." But Satan does not promise them except delusion.
Saheeh International

(அன்றி) "நீ உனக்குச் சாத்தியமான அளவு கூச்சல் போட்டு அவர்களைத் தூண்டிவிடு. உன்னுடைய குதிரைப் படைகளையும், காலாட்படைகளையும் அவர்கள் மீது ஏவிவிடு. அவர்களுடைய பொருளிலும் சந்ததியிலும் நீ கூட்டாக இருந்துகொண்டு அவர்களுக்கு (நயத்தையும் பயத்தையும் காட்டி) வாக்களி" என்றும் கூறினான். ஆகவே, ஷைத்தான் (ஆகிய நீ) அவர்களுக்கு வாக்களிப்பதெல்லாம் ஏமாற்றமே அன்றி வேறில்லை.
தாருல் ஹுதா

“இன்னும் அவர்களிலிருந்து நீ எவரை (வழி சறுகச் செய்ய) சக்தி பெற்றிருக்கிறாயோ அவர்களை உம் கூப்பாட்டைக் கொண்டு வழி சறுகச் செய்; உன்னுடைய குதிரைப் படையையும் காலாட் படையையும் கொண்டு அவர்களுக்கு எதிராக முழக்கமிடச் செய், அவர்களுடைய செல்வங்களிலும், குழந்தைகளிலும் நீ கூட்டாக இருந்து கொள்; அவர்களுக்கு(ப் பொய்யான) வாக்குறுதிகளையும் கொடு!” (என்றும் அல்லாஹ் கூறினான்); ஆகவே, ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதெல்லாம் வெறும் ஏமாற்றேயன்றி வேறில்லை.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

இன்னும், “அவர்களிலிருந்து (வழி தவறச்செய்ய) நீ சக்தி பெற்றிருக்கின்றவர்களை உன் கூப்பாட்டைக் கொண்டு வழி தவறச் செய், உன்னுடைய குதிரைப் படைகளையும், காலாட் படைகளையும் அவர்கள் மீது ஏவி விடு, (அவர்களுடைய) செல்வங்களிலும், பிள்ளைகளிலும் நீ கூட்டாகவும் இருந்து கொள், இன்னும், (பொய்யானவற்றைக் கொண்டு) அவர்களுக்கு வாக்களித்து விடு, ஏமாற்றத்தைத் தவிர, வேறு எதையும் ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதில்லை” என்றும் (அல்லாஹ்வாகிய) அவன் கூறினான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

Entice with your voice whoever of them you can; mobilize against them your cavalry and infantry; manipulate them in their wealth and children, and make promises to them.” But Satan does not promise them except delusion.
Ruwwad Center

17:65
إِنَّ عِبَادِي لَيْسَ لَكَ عَلَيْهِمْ سُلْطَانٌ ۚ وَكَفَىٰ بِرَبِّكَ وَكِيلًا
Inna AAibadee laysa laka AAalayhim sultanun wakafa birabbika wakeelan


"Verily, My slaves (i.e. the true believers of Islâmic Monotheism) – you have no authority over them. And All-Sufficient is your Lord as a Guardian."
Hilali & Khan

Indeed, over My [believing] servants there is for you no authority. And sufficient is your Lord as Disposer of affairs.
Saheeh International

நிச்சயமாக எனது (மனத்தூய்மையுடைய) அடியார்கள் மீது உனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை" (என்றும் கூறினான். ஆகவே, அவர்களை) பொறுப்பேற்றுக் கொள்ள உங்கள் இறைவ(னாகிய நா)னே போதுமானவன்.
தாருல் ஹுதா

“நிச்சயமாக (முஃமினான) என்னுடைய அடியார்கள் மீது உனக்கு எந்த அதிகாரமுமில்லை” (என்றும் அல்லாஹ் கூறினான்; நபியே! அந்த என் நல்லடியார்களைக்) காத்துக் கொள்ள உம்முடைய இறைவன் போதுமானவன்.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

“நிச்சயமாக என்னுடைய அடியார்கள் மீது ஷைத்தானே! உனக்கு எவ்வித அதிகாரமுமில்லை” (ஆகவே அவர்களுக்குப்) பொறுப்பேற்றுக் கொள்ள உமதிரட்சகனே போதுமானவன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

“You will have no authority over My slaves.” And sufficient is your Lord as a Guardian.
Ruwwad Center

17:66
رَبُّكُمُ الَّذِي يُزْجِي لَكُمُ الْفُلْكَ فِي الْبَحْرِ لِتَبْتَغُوا مِنْ فَضْلِهِ ۚ إِنَّهُ كَانَ بِكُمْ رَحِيمًا
Rabbukumu allathee yuzjee lakumu alfulka fee albahri litabtaghoo min fadlihi innahu kana bikum raheeman


Your Lord is He Who drives the ship for you through the sea, in order that you may seek of His bounty. Truly, He is Ever Most Merciful towards you.
Hilali & Khan

It is your Lord who drives the ship for you through the sea that you may seek of His bounty. Indeed, He is ever, to you, Merciful.
Saheeh International

(மனிதர்களே! கடலில் நீங்கள் பயணம் செய்யும்பொழுது) உங்கள் இறைவனே உங்கள் கப்பலைக் கடலில் செலுத்துகிறான். (அதன் மூலம் பல நாடுகளுக்கும் சென்று) அவனுடைய அருளை நீங்கள் தேடிக் கொள்கிறீர்கள். நிச்சயமாக அவன் உங்கள் மீது கிருபையுடையவனாக இருக்கின்றான்.
தாருல் ஹுதா

(மானிடர்களே!) உங்கள் இறைவன் எப்படிப்பட்டவன் என்றால் அவனுடைய அருட் கொடைகளை நீங்கள் தேடி(ச் சம்பாதித்து)க் கொள்ளும் பொருட்டுக் கப்பலை அவனே கடலில் செலுத்துகிறான்; நிச்சயமாக அவன் உங்கள் மீது மிக்க கிருபையுடையவனாக இருக்கின்றான்.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

உங்களுடைய இரட்சகன் எத்தகையவனென்றால், (கடலில் நீங்கள் யாத்திரை செய்து) அவனது பேரருளை நீங்கள் தேடிக் கொள்வதற்காக அவனே உங்களுக்காக கடலில் கப்பலை செலுத்துகின்றான், நிச்சயமாக அவன் உங்கள் மீது மிகக் கிருபையுடையவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

It is your Lord Who makes the ships sail for you through the sea, so that you may seek of His bounty. Indeed, He is ever Merciful to you.
Ruwwad Center

17:67
وَإِذَا مَسَّكُمُ الضُّرُّ فِي الْبَحْرِ ضَلَّ مَنْ تَدْعُونَ إِلَّا إِيَّاهُ ۖ فَلَمَّا نَجَّاكُمْ إِلَى الْبَرِّ أَعْرَضْتُمْ ۚ وَكَانَ الْإِنْسَانُ كَفُورًا
Waitha massakumu alddurru fee albahri dalla man tadAAoona illa iyyahu falamma najjakum ila albarri aAAradtum wakana alinsanu kafooran


And when harm touches you upon the sea, those that you call upon vanish from you except Him (Allâh Alone). But when He brings you safe to land, you turn away (from Him). And man is ever ungrateful.
Hilali & Khan

And when adversity touches you at sea, lost are [all] those you invoke except for Him. But when He delivers you to the land, you turn away [from Him]. And ever is man ungrateful.
Saheeh International

உங்களுக்கு கடலில் யாதொரு தீங்கேற்படும் சமயத்தில், அல்லாஹ்வைத் தவிர நீங்கள் (இறைவனென) அழைத்துக் கொண்டிருந்த அனைத்தும் மறைந்து விடுகின்றன. (இறைவன் ஒருவன்தான் உங்கள் கண் முன் இருப்பவன்.) அவன் உங்களைக் கரையில் சேர்த்து பாதுகாத்துக் கொண்டாலோ (அவனை) நீங்கள் புறக்கணித்து விடுகிறீர்கள். மனிதன் மகா நன்றி கெட்டவன்.
தாருல் ஹுதா

இன்னும், கடலில் உங்களை ஏதேனும் தங்கடம் (துன்பம்) தீண்டினால், அவனையன்றி நீங்கள் (தெய்வங்கள் என) எவற்றை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ, அவையாவும் மறைந்து விடும்; எனினும் (அல்லாஹ்) உங்களை ஈடேற்றிக் கரையளவில் கொண்டு வந்து சேர்க்கும் பொழுது நீங்கள் (அவனைப்) புறக்கணித்து விடுகிறீர்கள் - இன்னும், மனிதன் மகா நன்றி மறப்பவனாகவே இருக்கின்றான்.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

இன்னும், கடலில் உங்களை ஏதேனும் ஆபத்து அணுகினால், (அல்லாஹ்வாகிய) அவனையன்றி நீங்கள் யாரை (வணக்கத்திற்குரிய தெய்வங்கள் என்று) அழைக்கிறீர்களோ அவர்கள் (உங்களை விட்டும்) மறைந்து விடுவர், (அல்லாஹ்வாகிய) அவன் உங்களைக் கரையளவில் ஈடேற்றிச் சேர்க்கும்பொழுது (அல்லாஹ்வை) நீங்கள் புறக்கணித்து விடுகின்றீர்கள்! மேலும் மனிதன் மிக்க நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

When hardship strikes you at sea, you forget all those whom you invoke besides Him. Then when He brings you safe to the land, you turn away. Mankind is ever ungrateful.
Ruwwad Center

17:68
أَفَأَمِنْتُمْ أَنْ يَخْسِفَ بِكُمْ جَانِبَ الْبَرِّ أَوْ يُرْسِلَ عَلَيْكُمْ حَاصِبًا ثُمَّ لَا تَجِدُوا لَكُمْ وَكِيلًا
Afaamintum an yakhsifa bikum janiba albarri aw yursila AAalaykum hasiban thumma la tajidoo lakum wakeelan


Do you then feel secure that He will not cause a side of the land to swallow you up, or that He will not send against you a violent sandstorm? Then, you shall find no Wakîl (guardian – one to guard you from the torment).
Hilali & Khan

Then do you feel secure that [instead] He will not cause a part of the land to swallow you or send against you a storm of stones? Then you would not find for yourselves an advocate.
Saheeh International

(நன்றி கெட்ட) உங்களைப் பூமி விழுங்கிவிடாதென்றோ அல்லது உங்கள் மீது கல்மாரி பொழியாதென்றோ நீங்கள் அச்சமற்று விட்டீர்களா? (அவ்வாறு நிகழ்ந்தால்) உங்களுக்கு உதவி செய்பவர்கள் எவரையும் நீங்கள் காணமாட்டீர்கள்.
தாருல் ஹுதா

(கரை சேர்ந்த) பின் அவன் உங்களை பூமியின் ஒரு புறத்தில் புதையும்படி செய்து விட மாட்டான் என்றோ, அல்லது உங்கள் மீது கல்மாரியை அனுப்பமாட்டான் என்றோ அச்சந் தீர்ந்து இருக்கிறீர்களா? பின்னர் நீங்கள் உங்களைப் பாதுகாப்போர் எவரையும் காண மாட்டீர்கள்.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

(கரை சேர்ந்த பின்) கரையின் ஒரு பகுதியில் உங்களை அவன் விழுங்கச் செய்வதையோ அல்லது உங்கள் மீது கல் மாரியை அவன் அனுப்புவதையோ நீங்கள் அச்சமற்றிருக்கின்றீர்களா?” (அவ்வாறு நிகழ்ந்தால் அதன்) பின்னர், உங்களுக்கு உதவி செய்பவர் எவரையும் நீங்கள் காண மாட்டீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

Do you feel secure that He will not make some part of the land swallow you up, or send against you a storm of stones? Thereupon you will find none to protect you.
Ruwwad Center

17:69
أَمْ أَمِنْتُمْ أَنْ يُعِيدَكُمْ فِيهِ تَارَةً أُخْرَىٰ فَيُرْسِلَ عَلَيْكُمْ قَاصِفًا مِنَ الرِّيحِ فَيُغْرِقَكُمْ بِمَا كَفَرْتُمْ ۙ ثُمَّ لَا تَجِدُوا لَكُمْ عَلَيْنَا بِهِ تَبِيعًا
Am amintum an yuAAeedakum feehi taratan okhra fayursila AAalaykum qasifan mina alrreehi fayughriqakum bima kafartum thumma la tajidoo lakum AAalayna bihi tabeeAAan


Or do you feel secure that He will not send you back a second time to sea and send against you a hurricane of wind and drown you because of your disbelief? Then you will not find any avenger therein against Us.
Hilali & Khan

Or do you feel secure that He will not send you back into the sea another time and send upon you a hurricane of wind and drown you for what you denied? Then you would not find for yourselves against Us an avenger.
Saheeh International

அல்லது மற்றொரு தடவை உங்களை கடலில் கொண்டு போய் கடினமான புயல் காற்றை உங்கள் மீது ஏவி, உங்கள் நன்றி கெட்ட தன்மையின் காரணமாக உங்களை மூழ்கடித்துவிட மாட்டான் என்று நீங்கள் அச்சமற்று விட்டீர்களா? அச்சமயம் (நான் உங்களை அழித்துவிடாது தடுக்க) என்னைப் பின்தொடர்பவர்கள் ஒருவரையும் நீங்கள் காணமாட்டீர்கள்.
தாருல் ஹுதா

அல்லது, அவன் மீண்டும் ஒரு தடவை அக்கடலில் உங்களை மீளச் செய்து, (எல்லாவற்றையும்) முறித்துத் தள்ளும் புயல் காற்றை உங்கள் மீதனுப்பி, நீங்கள் நிராகரித்ததற்காக உங்களை மூழ்கடித்து விடமாட்டான் என்றும் நீங்கள் அச்சந்தீர்ந்து இருக்கிறீர்களா? (அப்படி நேர்ந்தால் ஏன் இவ்விஷயத்தை அவ்வாறு செய்தோம் ஏன் இவ்விஷயத்தை அவ்வாறு செய்தோம் என) நம்மைத் தொடர்ந்து உங்களுக்காக(க் கேட்போர்) எவரையும் காணமாட்டீர்கள்.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

அல்லது (அல்லாஹ்வாகிய) அவன் மீண்டும் ஒரு முறை உங்களைக் கடலில் திரும்ப (பிரயாணிக்க)ச் செய்து (நீங்கள் கடலில் இருக்கும் பொழுது எல்லாவற்றையும் அழித்து விடும்) புயல் காற்றை உங்கள் மீது அவன் அனுப்பி, நீங்கள் நிராகரித்ததன் காரணமாக உங்களை மூழ்கடித்து விடுவதை நீங்கள் அச்சமற்றிருக்கின்றீர்களா? (அவ்வாறெல்லாம் செய்ததன்) பின்னர், அதற்காக நம்மை(த் தொடர்ந்து) பழிவாங்குபவர் எவரையும் உங்களுக்காக நீங்கள் காண மாட்டீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

Or do you feel secure that He will not send you back [to sea] once again, and send upon you a violent storm to drown you on account of your disbelief? Thereupon you will find none to help you against Us.
Ruwwad Center

17:70
وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَىٰ كَثِيرٍ مِمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا
Walaqad karramna banee adama wahamalnahum fee albarri waalbahri warazaqnahum mina alttayyibati wafaddalnahum AAala katheerin mimman khalaqna tafdeelan


And indeed We have honoured the Children of Adam, and We have carried them on land and sea, and have provided them with At-Tayyibât (lawful good things), and have preferred them to many of those whom We have created with a marked preferment.
Hilali & Khan

And We have certainly honored the children of Adam and carried them on the land and sea and provided for them of the good things and preferred them over much of what We have created, with [definite] preference.
Saheeh International

ஆதமுடைய சந்ததியை நிச்சயமாக நாம் கண்ணியப்படுத்தினோம். கரையில் (வாகனங்கள் மீதும்) கடலில் (கப்பல்கள் மீதும்) நாம்தான் அவர்களைச் சுமந்து செல்(லும்படிச் செய்)கிறோம். நல்ல உணவுகளையும் நாமே அவர்களுக்கு அளிக்கிறோம். நாம் படைத்த (மற்ற உயிரினங்களில்) பலவற்றின் மீது (பொதுவாக) நாம் அவர்களை மிக மிக மேன்மையாக்கி வைத்திருக்கிறோம்.
தாருல் ஹுதா

நிச்சயமாக, நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம்; இன்னும், கடலிலும், கரையிலும் அவர்களைச் சுமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள (படைப்புகள்) பலவற்றையும் விட அவர்களை (தகுதியால்) மேன்மைப் படுத்தினோம்.  
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

மேலும், ஆதமுடைய மக்களைத் திட்டமாக நாம் கண்ணியப்படுத்தினோம், கரையிலும், கடலிலும் நாம் அவர்களை சுமந்து சென்றோம், நல்லவற்றிலிருந்து அவர்களுக்கு நாமே உணவளித்தோம், நாம் படைத்தவற்றில் அனேகவற்றை விட (தகுதியில்) நாம் அவர்களை மிகமிக மேன்மையாக்கியும் வைத்திருக்கின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

We have honored the children of Adam, carried them on land and sea, provided for them good things and favored them above many of those whom We have created.
Ruwwad Center

17:71
يَوْمَ نَدْعُو كُلَّ أُنَاسٍ بِإِمَامِهِمْ ۖ فَمَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَأُولَٰئِكَ يَقْرَءُونَ كِتَابَهُمْ وَلَا يُظْلَمُونَ فَتِيلًا
Yawma nadAAoo kulla onasin biimamihim faman ootiya kitabahu biyameenihi faolaika yaqraoona kitabahum wala yuthlamoona fateelan


(And remember) the Day when We shall call together all human beings with their (respective) Imâm [their Prophets, or their records of good and bad deeds, or their Holy Books like the Qur'ân, the Taurât (Torah), the Injîl (Gospel), or the leaders whom the people followed in this world]. So whosoever is given his record in his right hand, such will read their records, and they will not be dealt with unjustly in the least.
Hilali & Khan

[Mention, O Muhammad], the Day We will call forth every people with their record [of deeds]. Then whoever is given his record in his right hand - those will read their records, and injustice will not be done to them, [even] as much as a thread [inside the date seed].
Saheeh International

ஒவ்வொரு மனிதனையும் அவர்களின் தலைவர்களுடன் (விசாரணைக்காக) நாம் அழைக்கும் நாளில், அவர்களின் (தினசரி குறிப்புப்) புத்தகம் அவர்களுடைய வலது கையில் கொடுக்கப் பட்டால் அவர்கள் தங்களுடைய அ(த் தினசரி குறிப்பு)ப் புத்தகத்தை (மிக்க மகிழ்ச்சியோடு) வாசிப்பார்கள். (அவர்களுடைய கூலியில்) ஓர் அணுவளவு (குறைத்து)ம் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
தாருல் ஹுதா

(நபியே!) நாம் எல்லா மக்களையும் அவரவர்களுடைய தலைவர்களுடன் அழைக்கும் நாளை (நீர் நினைவூட்டுவீராக; அந்நாளில்) எவருடைய (செயல் குறிப்பு) ஏடு அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுகிறதோ, அ(த்தகைய நற்பேறுடைய)வர்கள் தம் ஏடுகளை (நிம்மதியுடன்) படிப்பார்கள்; இன்னும், அவர்கள் அணுவளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

ஓவ்வொரு மனிதரையும் அவரவருடைய தலைவருடன் (அந்தந்த சமூகத்தாரின் நபியுடன் விசாரணைக்காக) நாம் அழைக்கும் நாளில், அவர்களின் (செயல்கள் எழுதப்பட்ட) புத்தகம், எவர்களுடைய வலது கையில் கொடுக்கப்பட்டதோ அவர்கள், தங்களுடைய அப்புத்தகத்தை (மிக்க மகிழ்ச்சியோடு வாசிப்பார்கள், (அவர்களுடைய கூலியில்) ஓர் அணுவளவும் (குறைத்து) அநியாயம் செய்யப்படவுமாட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

On the Day when We will summon every community with its leader. Those who are given their record in their right hand will read their record [happily]; they will not be wronged even as much as the thread of a date stone.
Ruwwad Center

17:72
وَمَنْ كَانَ فِي هَٰذِهِ أَعْمَىٰ فَهُوَ فِي الْآخِرَةِ أَعْمَىٰ وَأَضَلُّ سَبِيلًا
Waman kana fee hathihi aAAma fahuwa fee alakhirati aAAma waadallu sabeelan


And whoever is blind in this world (i.e., does not see Allâh's Signs and believes not in Him), will be blind in the Hereafter, and more astray from the Path.
Hilali & Khan

And whoever is blind in this [life] will be blind in the Hereafter and more astray in way.
Saheeh International

எவர்கள் இம்மையில் (நேரான வழியைக் காணாது) குருடர்களாகி விட்டார்களோ அவர்கள் மறுமையிலும் குருடர்களே! ஆகவே, அவர்கள் வழி தப்பி விடுவார்கள்.
தாருல் ஹுதா

யார் இம்மையில் (நேர்வழியடையாக்) குருடனாக இருக்கிறானோ அவன் மறுமையிலும் (நற்பேற்றைக் காணாக்) குருடன்தான்; இன்னும், அவன் நேர்வழியில் மிகவும் தவறியவனாவான்.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

எவர் இ(ம்மையான)தில் (நேர் வழியைக் காணாது) குருடராக இருக்கின்றாரோ, அவர் மறுமையிலும் குருடரே, இன்னும், பாதையால் அவர் மிகத் தவறியவராவார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

But whoever was blind [from the truth] in this life will be even blinder in the Hereafter and further astray from the right way.
Ruwwad Center

17:73
وَإِنْ كَادُوا لَيَفْتِنُونَكَ عَنِ الَّذِي أَوْحَيْنَا إِلَيْكَ لِتَفْتَرِيَ عَلَيْنَا غَيْرَهُ ۖ وَإِذًا لَاتَّخَذُوكَ خَلِيلًا
Wain kadoo layaftinoonaka AAani allathee awhayna ilayka litaftariya AAalayna ghayrahu waithan laittakhathooka khaleelan


Verily, they were about to tempt you away from that which We have revealed (the Qur'ân) to you (O Muhammad [sal-Allâhu 'alayhi wa sallam]), to fabricate something other than it against Us, and then they would certainly have taken you a Khalîl (an intimate friend)!
Hilali & Khan

And indeed, they were about to tempt you away from that which We revealed to you in order to [make] you invent about Us something else; and then they would have taken you as a friend.
Saheeh International

நாம் உங்களுக்கு வஹ்யி மூலம் அறிவித்ததை நீங்கள் விட்டு (விட்டு) அதல்லாததை நம்மீது நீங்கள் பொய்யாகக் கற்பனை செய்து கூறும்படி உங்களை அவர்கள் திருப்பிவிடவே இருந்தார்கள். (அவ்வாறு நீங்கள் செய்திருந்தால்) உங்களை அவர்கள் தங்கள் நண்பராகவும் எடுத்துக் கொண்டிருப்பார்கள்.
தாருல் ஹுதா

(நபியே!) இன்னும் நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்தோமே அதை விட்டும், அதல்லாததை நம்மீது நீர் இட்டுக்கட்டிக் கூறும்படி உம்மைத் திருப்பிவிடவே அவர்கள் முனைந்தார்கள்; (அவ்வாறு நீர் செய்திருந்தால்) உம்மை தம் உற்ற நண்பராகவும் அப்போது எடுத்துக் கொண்டிருப்பார்கள்.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

நிச்சயமாக நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்தோமே, அதனை விட்டு (விட்டு) அதல்லாததை நீர் நம் மீது பொய்யாகக் கற்பனை செய்து கூறும்படி உம்மை அவர்கள் திசை திருப்பவே முனைந்தார்கள், (அவ்வாறு நீர் செய்திருந்தால்,) அப்போது உம்மை அவர்கள் (தங்கள்) உற்ற நண்பராகவும் ஆக்கிக் கொண்டிருப்பார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

They were about to tempt you away from what We have revealed to you [O Prophet], so that you would fabricate something else and attribute it to Us; then they would have surely taken you as a close friend.
Ruwwad Center

17:74
وَلَوْلَا أَنْ ثَبَّتْنَاكَ لَقَدْ كِدْتَ تَرْكَنُ إِلَيْهِمْ شَيْئًا قَلِيلًا
Walawla an thabbatnaka laqad kidta tarkanu ilayhim shayan qaleelan


And had We not made you stand firm, you would nearly have inclined to them a little.
Hilali & Khan

And if We had not strengthened you, you would have almost inclined to them a little.
Saheeh International

உங்களை நாம் உறுதியாக்கி வைக்காவிடில் நீங்கள் ஒரு சிறிதேனும் அவர்கள் பக்கம் சாய்ந்துவிடக் கூடுமாயிருந்தது.
தாருல் ஹுதா

மேலும், நாம் உம்மை (ஹக்கான பாதையில்) உறுதிப்படுத்தி வைத்திருக்க வில்லையெனின் நீர் கொஞ்சம் அவர்கள் பக்கம் சாய்ந்து போயிருத்தல் கூடும்.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

உம்மை நாம் உண்மை வழியில் நிலைப்படுத்தி வைக்காவிடில், நீர் ஒரு சிறிதேனும் அவர்களின் பக்கம் சாய்ந்து விட சமீபித்திருப்பீர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

Had We not made you stand firm, you would nearly have inclined to them a little.
Ruwwad Center

17:75
إِذًا لَأَذَقْنَاكَ ضِعْفَ الْحَيَاةِ وَضِعْفَ الْمَمَاتِ ثُمَّ لَا تَجِدُ لَكَ عَلَيْنَا نَصِيرًا
Ithan laathaqnaka diAAfa alhayati wadiAAfa almamati thumma la tajidu laka AAalayna naseeran


In that case We would have made you taste a double portion (of punishment) in this life and a double portion (of punishment) after death. And then you would have found none to help you against Us.
Hilali & Khan

Then [if you had], We would have made you taste double [punishment in] life and double [after] death. Then you would not find for yourself against Us a helper.
Saheeh International

(அவ்வாறு நீங்கள் சாய்ந்திருந்தால்) அந்நேரத்தில் நீங்கள் உயிராக இருக்கும்போதும் நீங்கள் மரணித்த பின்னரும் இரு மடங்கு (வேதனையைச்) சுவைக்கும்படி நாம் செய்திருப்போம். அதன் பின்னர், நமக்கு எதிராக உங்களுக்கு உதவி செய்பவர்கள் ஒருவரையும் நீங்கள் காணமாட்டீர்கள்.
தாருல் ஹுதா

(அவ்வாறு நீர் சாய்ந்திருந்தால்) நீர் இவ்வாழ்நாளில் இரு மடங்கு (வேதனையும்,) மரணத்தில் இரு மடங்கு (வேதனையு)ம் நுகருமாறு நாம் செய்திருப்போம்; பின்பு, நமக்கு எதிராக உமக்கு உதவியாளர் எவரையும் நீர் காணமாட்டீர்.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

அப்பொழுது (அவ்வாறு நீர் சமீபித்திருந்தால்) ஜீவியத்தில் இருமடங்கு (வேதனையையும்), உமது மரணத்தில் இரு மடங்கு (வேதனையையும்) நாம் உம்மைச் சுவைக்கச் செய்திருப்போம்; பின்னர், நமக்கு எதிராக உமக்கு உதவியாளரை நீர் பெற்றுக் கொள்ள மாட்டீர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

In that case, We would have made you taste double punishment, both in this life and after death. Thereupon you would have found no helper against Us.
Ruwwad Center

17:76
وَإِنْ كَادُوا لَيَسْتَفِزُّونَكَ مِنَ الْأَرْضِ لِيُخْرِجُوكَ مِنْهَا ۖ وَإِذًا لَا يَلْبَثُونَ خِلَافَكَ إِلَّا قَلِيلًا
Wain kadoo layastafizzoonaka mina alardi liyukhrijooka minha waithan la yalbathoona khilafaka illa qaleelan


And verily, they were about to frighten you so much as to drive you out from the land. But in that case, they would not have stayed (therein) after you, except for a little while.
Hilali & Khan

And indeed, they were about to drive you from the land to evict you therefrom. And then [when they do], they will not remain [there] after you, except for a little.
Saheeh International

(நபியே! உங்களுடைய) ஊரிலிருந்து உங்களுடைய காலைப் பெயர்த்து அதிலிருந்து உங்களை வெளிப்படுத்தி விடவே அவர்கள் முடிவு கட்டியிருந்தார்கள். அவ்வாறவர்கள் செய்திருந்தால் உங்களுக்குப் பின்னர் வெகு சொற்பநாள்களே அன்றி அங்கு அவர்கள் இருந்திருக்க மாட்டார்கள்.
தாருல் ஹுதா

(நபியே!) உம்மை (உம்முடைய) பூமியிலிருந்து அடி பெயரச்செய்து, அதை விட்டும் உம்மை வெளியேற்றிவிட முனைகிறார்கள்; ஆனால் அவர்களோ உமக்குப்பின்னர் சொற்ப நாட்களேயன்றி (அங்கு) தங்கியிருக்க மாட்டார்கள்.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

நிச்சயமாக (நபியே! உம்முடைய) ஊரிலிருந்து உம்மை அடி பெயரச்செய்து அதிலிருந்து உம்மை வெளியேற்றிவிட அவர்கள் முனைகின்றார்கள், (அப்படிச் செய்திருந்தால்,) உமக்குப் பின்னர் வெகு சொற்பமேயன்றி அவர்களும் அங்கு (மக்காவில்) தங்கியிருக்க மாட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

They were about to provoke you so as to drive you out of the land [of Makkah], but then they would not have remained after you, except for a little while.
Ruwwad Center

17:77
سُنَّةَ مَنْ قَدْ أَرْسَلْنَا قَبْلَكَ مِنْ رُسُلِنَا ۖ وَلَا تَجِدُ لِسُنَّتِنَا تَحْوِيلًا
Sunnata man qad arsalna qablaka min rusulina wala tajidu lisunnatina tahweelan


(This was Our) Sunnah (rule or way) with the Messengers We sent before you (O Muhammad [sal-Allâhu 'alayhi wa sallam]), and you will not find any alteration in Our Sunnah (rule or way).
Hilali & Khan

[That is Our] established way for those We had sent before you of Our messengers; and you will not find in Our way any alteration.
Saheeh International

உங்களுக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களைப் பற்றி நடைபெற்ற வழக்கமும் (இதுவாகவே) இருந்தது. நம்முடைய அந்த வழக்கத்தில் யாதொரு மாறுதலையும் நீங்கள் காணமாட்டீர்கள்.
தாருல் ஹுதா

திடமாக, உமக்கு முன்னர் நாம் அனுப்பிய நம் தூதர்களைப் பொறுத்தும் இது வழிமுறையாக இருந்து வந்தது; நம்முடைய (இவ்)வழிமுறையில் எந்த மாற்றத்தையும் நீர் காணமாட்டீர்.  
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

நம்முடைய தூதர்களிலிருந்து உமக்கு முன்னர் திட்டமாக நாம் அனுப்பியவர்களின் வழி முறையாக (இதுவே) இருந்தது, நம்முடைய (அந்த) வழி முறையில் நீர் யாதொரு மாற்றத்தையும் காண மாட்டீர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

Such was Our way with the messengers We sent before you, and you will find no change in Our way.
Ruwwad Center

17:78
أَقِمِ الصَّلَاةَ لِدُلُوكِ الشَّمْسِ إِلَىٰ غَسَقِ اللَّيْلِ وَقُرْآنَ الْفَجْرِ ۖ إِنَّ قُرْآنَ الْفَجْرِ كَانَ مَشْهُودًا
Aqimi alssalata lidulooki alshshamsi ila ghasaqi allayli waqurana alfajri inna qurana alfajri kana mashhoodan


Perform As-Salât (the prayers) from mid-day till the darkness of the night (i.e. the Zuhr, 'Asr, Maghrib, and 'Ishâ' prayers), and recite the Qur'ân in the early dawn (i.e. the morning - Fajr prayer). Verily, the recitation of the Qur'ân in the early dawn (i.e., the morning – Fajr prayer) is ever witnessed (attended by the angels in charge of mankind of the day and the night).
Hilali & Khan

Establish prayer at the decline of the sun [from its meridian] until the darkness of the night and [also] the Qur'an of dawn. Indeed, the recitation of dawn is ever witnessed.
Saheeh International

(நபியே!) சூரியன் சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரையில் (ளுஹர், அஸர், மஃரிப், இஷா ஆகிய நேரத்) தொழுகைகளைத் தொழுது வாருங்கள். ஃபஜ்ர் தொழுகையும் தொழுது வாருங்கள். ஏனென்றால், நிச்சயமாக ஃபஜ்ர் தொழுகையானது மலக்குகள் கலந்துகொள்ளும் தொழுகையாகும்.
தாருல் ஹுதா

(நபியே!) சூரியன் (உச்சியில்) சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரை (ளுஹ்ரு, அஸ்ரு, மஃரிப், இஷா) தொழுகையை நிலை நிறுத்துவீராக; இன்னும் ஃபஜ்ருடைய தொழுகையையும் (நிலைநிறுத்துவீராக); நிச்சயமாக ஃபஜ்ரு தொழுகை சான்று கூறுவதாகயிருக்கிறது.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

(நபியே!) சூரியன் (உச்சியை விட்டுச்) சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரையில் (லுஹர், அஷர், மஃக்ரிப், இஷா நேரத்) தொழுகைகளை நிறைவேற்றுவீராக! ஃபஜ்ருத் தொழுகையையும் (நிறைவேற்றுவீராக!) இன்னும் நிச்சயமாக ஃபஜ்ருத் தொழுகையானது (இரவின் மலக்குகளும், பகலின் மலக்குகளும் ஒருமித்து) ஆஜராகும் தொழுகையாக உள்ளது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

Establish prayer at the decline of the sun until the darkness of the night, and the recitation of dawn [prayer], for the recitation of dawn is ever witnessed [by the angles].
Ruwwad Center

17:79
وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَنْ يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا
Wamina allayli fatahajjad bihi nafilatan laka AAasa an yabAAathaka rabbuka maqaman mahmoodan


And in some parts of the night (also) offer the Salât (prayer) with it (i.e. recite the Qur'an in the prayer) as an additional prayer (Tahajjud optional prayer – Nawâfil) for you (O Muhammad [sal-Allâhu 'alayhi wa sallam]). It may be that your Lord will raise you to Maqâm Mahmûd (a station of praise and glory, i.e., the honour of intercession on the Day of Resurrection).
Hilali & Khan

And from [part of] the night, pray with it as additional [worship] for you; it is expected that your Lord will resurrect you to a praised station.
Saheeh International

தஹஜ்ஜத்து தொழுகை (உங்கள்மீது கடமையாக இல்லாவிடினும்) நீங்கள், நஃபிலாக இரவில் ஒரு (சிறிது) பாகத்தில் தொழுது வாருங்கள்! (இதன் அருளால் "மகாமே மஹ்மூத்" என்னும்) மிக்க புகழ்பெற்ற இடத்தில் உங்கள் இறைவன் உங்களை அமர்த்தலாம்.
தாருல் ஹுதா

இன்னும் இரவில் (ஒரு சிறு) பகுதியில் உமக்கு உபரியான தஹஜ்ஜத் தொழுகையைத் தொழுது வருவீராக; (இதன் பாக்கியத்தினால்) உம்முடைய இறைவன், “மகாமம் மஹ்முதா” என்றும் (புகழ் பெற்ற) தலத்தில் உம்மை எழுப்பப் போதும்.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

நீர் உமக்கு உபரியாக இரவிலும் “தஹஜ்ஜுத்” தொழுகையை (குர் ஆனாகிய) இதை (ஓதுவதைக் கொண்டு நிறைவேற்றுவீராக! (இதனால் மக்காமே மஹ்மூத் என்னும்) மிக்க புகழ் பெற்ற இடத்தில் உம்மை உமதிரட்சகன் (மறுமையில்) எழுப்பப் போதுமானவன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

And wake up during the night and pray, as an additional prayer for you [O Prophet], so your Lord may raise you to a praised status [of Grand Intercession].
Ruwwad Center

17:80
وَقُلْ رَبِّ أَدْخِلْنِي مُدْخَلَ صِدْقٍ وَأَخْرِجْنِي مُخْرَجَ صِدْقٍ وَاجْعَلْ لِي مِنْ لَدُنْكَ سُلْطَانًا نَصِيرًا
Waqul rabbi adkhilnee mudkhala sidqin waakhrijnee mukhraja sidqin waijAAal lee min ladunka sultanan naseeran


And say (O Muhammad [sal-Allâhu 'alayhi wa sallam]): "My Lord! Let my entry (to the city of Al-Madinah) be good, and (likewise) my exit (from the city of Makkah) be good. And grant me from You an authority to help me (or a firm sign or a proof)."
Hilali & Khan

And say, "My Lord, cause me to enter a sound entrance and to exit a sound exit and grant me from Yourself a supporting authority."
Saheeh International

அன்றி, "என் இறைவனே! என்னை (மதீனாவில் நுழைய வைக்க வேண்டுமென்று நீ கருதினால்) நல்லவிதமாகவே நுழைய வை. (மக்காவிலிருந்து என்னை வெளிப்படுத்த வேண்டுமென்று நீ கருதினால்) நல்லவிதமாகவே என்னை வெளிப்படுத்தி வை. உன்னிடமிருந்து ஒரு வெற்றியை நீ எனக்கு உதவியாக்கித் தந்தருள்" என்று (நபியே!) நீங்கள் பிரார்த்தியுங்கள்!
தாருல் ஹுதா

“என் இறைவனே! என்னை சிறந்த முறையில் நுழையச் செய்வாயாக! மேலும் சிறந்த முறையில் என்னை வெளிப்படுத்துவாயாக! மேலும் உன்புறத்திலிருந்து எனக்கு உதவி செய்யும் ஒரு சக்தியை ஆக்குவாயாக! என்று கூறுவீராக.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

அன்றியும், “என் இரட்சகனே! என்னை (மதீனாவில்) உண்மையான பிரவேசமாக பிரவேசிக்க வைப்பாயாக! (மக்காவிலிருந்து) உண்மையான வெளியேற்றுதலாக என்னை வெளியேற்றி வைப்பாயாக! உன்னிடமிருந்து உதவியைப் பெறும் அதிகாரத்தையும் எனக்கு நீ ஆக்கித் தருவாயாக!” என்று (நபியே!) நீர் (பிரார்த்தித்துக்) கூறுவீராக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

And say, “My Lord, make me enter an honorable entrance and make me exit an honorable exit, and grant me from Yourself a supporting authority.”
Ruwwad Center

17:81
وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ ۚ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا
Waqul jaa alhaqqu wazahaqa albatilu inna albatila kana zahooqan


And say: "Truth (i.e. Islâmic Monotheism or this Qur'ân or Jihâd against polytheists) has come and Bâtil (falsehood, i.e. Satan or polytheism) has vanished. Surely, Bâtil is ever bound to vanish."
Hilali & Khan

And say, "Truth has come, and falsehood has departed. Indeed is falsehood, [by nature], ever bound to depart."
Saheeh International

அன்றி, "சத்தியம் வந்தது; அசத்தியம் மறைந்தது. நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும்" என்றும் கூறுங்கள்.
தாருல் ஹுதா

(நபியே!) இன்னும், “சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்” என்று கூறுவீராக.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

அன்றியும், “சத்தியம் வந்து விட்டது, அசத்தியம் அழிந்துவிட்டது, நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும்” என்றும் கூறுவீராக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

And say, “The truth has come and falsehood has perished. Indeed, falsehood is bound to perish.”
Ruwwad Center

17:82
وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ ۙ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا
Wanunazzilu mina alqurani ma huwa shifaon warahmatun lilmumineena wala yazeedu alththalimeena illa khasaran


And We send down of the Qur'ân that which is a healing and a mercy to those who believe (in Islâmic Monotheism and act on it), and it increases the Zâlimûn (polytheists and wrong doers) in nothing but loss.
Hilali & Khan

And We send down of the Qur'an that which is healing and mercy for the believers, but it does not increase the wrongdoers except in loss.
Saheeh International

நம்பிக்கை கொண்டவர்களுக்கு அருளாகவும் பரிகார மாகவும் உள்ளவைகளையே இந்தத் திருக்குர்ஆனில் நாம் இறக்கியிருக்கிறோம். எனினும், அநியாயக்காரர்களுக்கோ (இது) நஷ்டத்தையே தவிர (வேறு எதனையும்) அதிகரிப்பதில்லை.
தாருல் ஹுதா

இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

விசுவாசங்கொண்டோருக்கு எது குணப்படுத்துமோ அதையும், இன்னும் அருளையும் இந்தக் குர் ஆனிலிருந்து நாம் இறக்கி வைக்கிறோம், இன்னும், அக்கிரமக்காரர்களுக்கு இது நஷ்டத்தையே தவிர (வேறெதையும்) அதிகமாக்காது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

We send down the Qur’an as a healing and mercy for the believers, but it does not increase the wrongdoers except in loss.
Ruwwad Center

17:83
وَإِذَا أَنْعَمْنَا عَلَى الْإِنْسَانِ أَعْرَضَ وَنَأَىٰ بِجَانِبِهِ ۖ وَإِذَا مَسَّهُ الشَّرُّ كَانَ يَئُوسًا
Waitha anAAamna AAala alinsani aAArada wanaa bijanibihi waitha massahu alshsharru kana yaoosan


And when We bestow Our Grace on man (the disbeliever), he turns away and becomes arrogant (far away from the Right Path). And when evil touches him, he is in great despair.
Hilali & Khan

And when We bestow favor upon the disbeliever, he turns away and distances himself; and when evil touches him, he is ever despairing.
Saheeh International

நாம் மனிதனுக்கு அருள் புரிந்தால் (அதற்கு அவன் நன்றி செலுத்துவதற்குப் பதிலாக நம்மை) புறக்கணித்து முகம் திரும்பிக் கொள்கிறான். அவனை யாதொரு தீங்கு அணுகினாலோ நம்பிக்கை இழந்துவிடுகிறான்.
தாருல் ஹுதா

நாம் மனிதனுக்கு அருட்கொடைகளை வழங்கினால் அவன் (நன்றி செலுத்தாமல்) புறக்கணித்து(த் தோளை உயர்த்திப்) பெருமை கொள்கிறான்; அவனை (ஏதேனுமொரு) தீங்கு தொடுமானால் அவன் நிராசை கொண்டவனாகி விடுகிறான்.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

மேலும், நாம் மனிதனுக்கு அருட்கொடைகளை வழங்கினால், அவன் புறக்கணித்து (நம்மை விட்டும்) அவன் வெகு தூரத்தில் சென்றும் விடுகின்றான், அவனை (ஏதேனும் ஒரு) தீங்கு அணுகினாலோ (நம்பிக்கை இழந்து) நிராசையுடையவனாகி விடுகிறான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

When We bestow favor upon man, he turns away and distances himself, but when evil befalls him, he is in utter despair.
Ruwwad Center

17:84
قُلْ كُلٌّ يَعْمَلُ عَلَىٰ شَاكِلَتِهِ فَرَبُّكُمْ أَعْلَمُ بِمَنْ هُوَ أَهْدَىٰ سَبِيلًا
Qul kullun yaAAmalu AAala shakilatihi farabbukum aAAlamu biman huwa ahda sabeelan


Say (O Muhammad [sal-Allâhu 'alayhi wa sallam] to mankind): "Each one does according to Shakilatihi (i.e. his way or his religion or his intentions), and your Lord knows best of him whose path (religion) is right."
Hilali & Khan

Say, "Each works according to his manner, but your Lord is most knowing of who is best guided in way."
Saheeh International

(ஆகவே, நபியே!) நீங்கள் கூறுங்கள்: ஒவ்வொரு மனிதனும் தனக்குத் தோன்றியவைகளையே செய்கிறான். ஆகவே, நேரான வழியில் செல்பவன் யார் என்பதை உங்கள் இறைவன்தான் நன்கறிவான்.
தாருல் ஹுதா

(நபியே!) நீர் கூறுவீராக: “ஒவ்வொருவனும் தன் வழியிலேயே செயல் படுகிறான்; ஆனால் நேரான வழியில் செல்பவர் யார் என்பதை உங்கள் இறைவன் நன்கு அறிவான்.”
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

“ஒவ்வொருவரும் தன் வழியிலேயே செயல்படுகிறார், ஆகவே, நேர் வழியில் செல்பவர் யார் என்பதை உங்கள் இரட்சகன்தான் மிக்க அறிந்தவன்” என்று (நபியே! நீர்) கூறுவீராக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

Say, “Everyone acts in his own way, but your Lord knows best whose way is best guided.”
Ruwwad Center

17:85
وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ ۖ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي وَمَا أُوتِيتُمْ مِنَ الْعِلْمِ إِلَّا قَلِيلًا
Wayasaloonaka AAani alrroohi quli alrroohu min amri rabbee wama ooteetum mina alAAilmi illa qaleelan


And they ask you (O Muhammad [sal-Allâhu 'alayhi wa sallam]) concerning the Rûh (the spirit). Say: "The Rûh (the spirit) is one of the things, the knowledge of which is only with my Lord. And of knowledge, you (mankind) have been given only a little."
Hilali & Khan

And they ask you, [O Muhammad], about the soul. Say, "The soul is of the affair of my Lord. And mankind have not been given of knowledge except a little."
Saheeh International

(நபியே!) ரூஹைப் பற்றி (யூதர்களாகிய) அவர்கள் உங்களிடம் கேட்கிறார்கள். அதற்கு நீங்கள் "அது எனது இறைவனின் கட்டளையால் ஏற்பட்டது. (அதைப் பற்றி) வெகு சொற்ப ஞானமேயன்றி உங்களுக்குக் கொடுக்கப்படவில்லை. (ஆதலால், அதன் நுட்பங்களை நீங்கள் அறிந்துகொள்ள முடியாது)" என்று கூறுங்கள்.
தாருல் ஹுதா

(நபியே!) “உம்மிடம் ரூஹை (ஆத்மாவைப்) பற்றி அவர்கள் கேட்கிறார்கள். “ரூஹு” என் இறைவனுடைய கட்டளையிலிருந்தே உண்டானது; இன்னும் ஞானத்திலிருந்து உங்களுக்கு அளிக்கப்பட்டது மிகச் சொற்பமேயன்றி வேறில்லை” எனக் கூறுவீராக.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

(நபியே!) ரூஹை! ஆன்மாவை)ப் பற்றி (யூதர்களாகிய) அவர்கள் உம்மிடம் கேட்கின்றார்கள், (அதற்கு) நீர் “ரூஹு எனது இரட்சகனின் கட்டளையில் உள்ளதாகும், (அதைப் பற்றிய) அறிவிலிருந்து வெகு சொற்பமே தவிர நீங்கள் கொடுக்கப்படவில்லை, (ஆதலால் அதன் நுட்பங்களை நீங்கள் அறிந்து கொள்ள முடியாது)” என்று கூறுவீராக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

They ask you [O Prophet] about the soul. Say, “The soul is only known to my Lord, and you have not been given knowledge except a little.”
Ruwwad Center

17:86
وَلَئِنْ شِئْنَا لَنَذْهَبَنَّ بِالَّذِي أَوْحَيْنَا إِلَيْكَ ثُمَّ لَا تَجِدُ لَكَ بِهِ عَلَيْنَا وَكِيلًا
Walain shina lanathhabanna biallathee awhayna ilayka thumma la tajidu laka bihi AAalayna wakeelan


And if We willed, We could surely take away that which We have revealed to you (i.e. this Qur'ân). Then you would find no protector for you against Us in that respect.
Hilali & Khan

And if We willed, We could surely do away with that which We revealed to you. Then you would not find for yourself concerning it an advocate against Us.
Saheeh International

(நபியே!) நாம் விரும்பினால் வஹ்யி மூலம் உங்களுக்கு அறிவித்த இந்தக் குர்ஆனையே (உங்களிடமிருந்து) போக்கி விடுவோம். பின்னர், (இதனை உங்களிடம் கொண்டு வர) நமக்கு விரோதமாக உங்களுக்கு உதவி செய்ய எவரையும் நீங்கள் காணமாட்டீர்கள்.
தாருல் ஹுதா

(நபியே!) நாம் நாடினால் உமக்கு நாம் வஹீயாக நாம் அறிவித்ததை (குர்ஆனை) போக்கிவிடுவோம்; பின்னர், நமக்கெதிராக உமக்குப் பொறுப்பேற்கக் கூடிய எவரையும் நீர் காணமாட்டீர்.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

மேலும், நபியே! நாம் நாடினால் உமக்கு வஹீ மூலம் அறிவித்திருந்தோமே அத்தகைய (குர் ஆனாகிய)தை (உம்மிடமிருந்து) நிச்சயமாக நாம் போக்கி விடுவோம், பிறகு (இதனை உம்மிடம் கொண்டு வர) நமக்கு விரோதமாக அதற்காகப் பொறுப்பேற்கக் கூடிய எவரையும் நீர் காண மாட்டீர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

If We willed, We could surely take away what We have revealed to you, then you would find no guardian to plead its return from Us,
Ruwwad Center

17:87
إِلَّا رَحْمَةً مِنْ رَبِّكَ ۚ إِنَّ فَضْلَهُ كَانَ عَلَيْكَ كَبِيرًا
Illa rahmatan min rabbika inna fadlahu kana AAalayka kabeeran


Except as a mercy from your Lord. Verily, His Grace to you (O Muhammad [sal-Allâhu 'alayhi wa sallam]) is ever great.
Hilali & Khan

Except [We have left it with you] as a mercy from your Lord. Indeed, His favor upon you has ever been great.
Saheeh International

ஆனால், உங்கள் இறைவனுடைய அருளின் காரணமாகவே (அவ்வாறு அவன் செய்யவில்லை.) நிச்சயமாக உங்கள்மீது அவனுடைய அருள் மிகப்பெரிதாகவே இருக்கிறது.
தாருல் ஹுதா

ஆனால் உம் இறைவனுடைய ரஹ்மத்தைத் தவிர (இவ்வாறு நிகழாமல் இருப்பதற்கு வேறெதுவுமில்லை); நிச்சயமாக உம் மீது அவனுடைய அருட்கொடை மிகப் பெரிதாகவே இருக்கிறது.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

உமதிரட்சகனின் அருளாகவே தவிர (அதை நாம் விட்டு வைத்திருக்கவில்லை). நிச்சயமாக உம்மீது அவனுடைய பேரருள் மிகப் பெரிதாகவே இருக்கிறது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

nevertheless it is a mercy from your Lord, for His favor to you is truly great.
Ruwwad Center

17:88
قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنْسُ وَالْجِنُّ عَلَىٰ أَنْ يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا
Qul laini ijtamaAAati alinsu waaljinnu AAala an yatoo bimithli hatha alqurani la yatoona bimithlihi walaw kana baAAduhum libaAAdin thaheeran


Say: "If mankind and the jinn were together to produce the like of this Qur'ân, they could not produce the like thereof, even if they helped one another."
Hilali & Khan

Say, "If mankind and the jinn gathered in order to produce the like of this Qur'an, they could not produce the like of it, even if they were to each other assistants."
Saheeh International

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து, சிலர் சிலருக்கு உதவியாக இருந்து இதைப்போன்ற ஒரு குர்ஆனைக் கொண்டுவர முயற்சித்தபோதிலும் இதைப்போல் கொண்டுவர அவர்களால் (முடியவே) முடியாது.
தாருல் ஹுதா

“இந்த குர்ஆனை போன்ற ஒன்றைக் கொண்டுவருவதற்காக மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து (முயன்று), அவர்களில் ஒரு சிலர் சிலருக்கு உதவிபுரிபவர்களாக இருந்தாலும், இது போன்ற ஒன்றை அவர்கள் கொண்டு வரமுடியாது” என்று (நபியே) நீர் கூறும்.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

“இந்தக் குர் ஆனைப் போன்று கொண்டு வருவதற்கு மனிதர்களும், ஜின்களும் ஒன்று சேர்ந்தாலும் இதனைப் போன்று அவர்கள் கொண்டுவர மாட்டார்கள், அவர்களில் சிலர் சிலருக்கு உதவியாளராக இருந்தாலும் சரியே!” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

Say, “If all humans and jinn were to come together to produce something similar to this Qur’an, they would not be able to produce the like of it, even if they collaborated with one another.”
Ruwwad Center

17:89
وَلَقَدْ صَرَّفْنَا لِلنَّاسِ فِي هَٰذَا الْقُرْآنِ مِنْ كُلِّ مَثَلٍ فَأَبَىٰ أَكْثَرُ النَّاسِ إِلَّا كُفُورًا
Walaqad sarrafna lilnnasi fee hatha alqurani min kulli mathalin faaba aktharu alnnasi illa kufooran


And indeed We have fully explained to mankind, in this Qur'ân, every kind of similitude, but most of mankind refuse (the truth and accept nothing) but disbelief.
Hilali & Khan

And We have certainly diversified for the people in this Qur'an from every [kind] of example, but most of the people refused [anything] except disbelief.
Saheeh International

இந்தக் குர்ஆனில் எல்லா உதாரணங்களையும் மனிதர்களுக்கு(த் திரும்பத் திரும்ப) விவரித்துக் கூறியிருக்கிறோம். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் இதனை நிராகரிக்காமல் இருக்கவில்லை.
தாருல் ஹுதா

நிச்சயமாக, இந்த குர்ஆனில் மனிதர்களுக்காக சகலவிதமான உதாரணங்களையும் (மிகவும் தெளிவாக) விவரித்துள்ளோம்; எனினும், மனிதர்களில் மிகுதியானவர்கள் (இதை) நிராகரிக்காதிருக்கவில்லை.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

மேலும், இந்தக் குர் ஆனில், சகல உதாரணங்களையும் மனிதர்களுக்கு நாம் (திருப்பித் திருப்பி) விவரித்துத் தெளிவாக்கியுள்ளோம், ஆனால், மனிதர்களில் பெரும்பாலோர் (இதனை) நிராகரிப்பதைத் தவிர (வேறு எதையும்) ஏற்பதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

We have explained every kind of example for mankind in this Qur’an, yet most people persist in disbelief.
Ruwwad Center

17:90
وَقَالُوا لَنْ نُؤْمِنَ لَكَ حَتَّىٰ تَفْجُرَ لَنَا مِنَ الْأَرْضِ يَنْبُوعًا
Waqaloo lan numina laka hatta tafjura lana mina alardi yanbooAAan


And they say: "We shall not believe in you (O Muhammad [sal-Allâhu 'alayhi wa sallam]), until you cause a spring to gush forth from the earth for us;
Hilali & Khan

And they say, "We will not believe you until you break open for us from the ground a spring.
Saheeh International

(நபியே!) "இப்பூமி வெடித்து, ஒரு ஊற்றுக்கண் தோன்றினாலன்றி நாம் உங்களை நம்பிக்கை கொள்ள மாட்டோம்" என்று அவர்கள் கூறுகின்றனர்.
தாருல் ஹுதா

இன்னும், அவர்கள் கூறுகிறார்கள்: “நீர் எங்களுக்காகப் பூமியிலிருந்து ஒரு நீர் ஊற்றைப் பீறிட்டு வரும்படி செய்யும் வரையில், உம் மீது நாங்கள் நம்பிக்கை கொள்ள மாட்டோம்.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

இன்னும், “(நபியே! இப்)பூமியிலிருந்து, நீர் ஒரு நீரூற்றை எங்களுக்காக பீறிட்டு ஓடச் செய்யும் வரை உம்மை நாங்கள் விசுவாசிக்கவே மாட்டோம்” என்று அவர்கள் கூறினார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

They say, “We will never believe in you until you cause a spring to gush forth for us from the earth,
Ruwwad Center

17:91
أَوْ تَكُونَ لَكَ جَنَّةٌ مِنْ نَخِيلٍ وَعِنَبٍ فَتُفَجِّرَ الْأَنْهَارَ خِلَالَهَا تَفْجِيرًا
Aw takoona laka jannatun min nakheelin waAAinabin fatufajjira alanhara khilalaha tafjeeran


"Or you have a garden of date palms and grapes, and cause rivers to gush forth in its midst abundantly;
Hilali & Khan

Or [until] you have a garden of palm tress and grapes and make rivers gush forth within them in force [and abundance]
Saheeh International

"அல்லது மத்தியில் தொடர்ந்து நீரருவிகள் ஓடிக் கொண்டிருக்கக் கூடிய திராட்சை, பேரீச்சை மரங்களையுடைய ஒரு சோலை உங்களுக்கு இருந்தால் அன்றி (உங்களை நம்பிக்கை கொள்ள மாட்டோம்" என்றும் கூறுகின்றனர்.)
தாருல் ஹுதா

“அல்லது பேரீச்சை மரங்களும், திராட்சைக் கொடிகளும் (நிரப்பி) உள்ள தோட்டம் ஒன்று உமக்கு இருக்க வேண்டும். அதன் நடுவே ஆறுகளை நீர் ஒலித்தோடச் செய்ய வேண்டும்.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

–அல்லது பேரீச்சை திராட்சை (மரங்களை)யுடைய ஒரு தோட்டம் உமக்கு இருந்து அவைகளுக்கிடையில் ஆறுகளை (ஏற்படுத்தி) நீர் ஓடச் செய்யும்வரை –
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

or until you have a garden of date palm and grapevines, and you cause rivers to flow abundantly in their midst,
Ruwwad Center

17:92
أَوْ تُسْقِطَ السَّمَاءَ كَمَا زَعَمْتَ عَلَيْنَا كِسَفًا أَوْ تَأْتِيَ بِاللَّهِ وَالْمَلَائِكَةِ قَبِيلًا
Aw tusqita alssamaa kama zaAAamta AAalayna kisafan aw tatiya biAllahi waalmalaikati qabeelan


"Or you cause the heaven to fall upon us in pieces, as you have pretended, or you bring Allâh and the angels before (us) face to face;
Hilali & Khan

Or you make the heaven fall upon us in fragments as you have claimed or you bring Allah and the angels before [us]
Saheeh International

"அல்லது நீங்கள் எண்ணுகிற பிரகாரம் வானத்தின் முகடு இடிந்து, அதில் ஒரு துண்டு எங்கள் (தலை) மீது விழுந்தாலன்றி அல்லது அல்லாஹ்வையும் மலக்குகளையும் நம் முன் கொண்டு வந்தாலன்றி (உங்களை நாம் நம்பிக்கை கொள்ள மாட்டோம்" என்றும் கூறுகின்றனர்.)
தாருல் ஹுதா

“அல்லது நீர் எண்ணுவது போல் வானம் துண்டு துண்டாக இடிந்து எங்கள் மேல் விழச் செய்யும் வரை; அல்லது அல்லாஹ்வையும் மலக்குகளையும் (நமக்குமுன்) நேருக்கு நேராகக் கொண்டு வந்தாலன்றி.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

– அல்லது நீர் எண்ணியது போன்று எங்களின்மீது வானத்திலிருந்து துண்டுகளை விழச்செய்யும்வரை – அல்லது அல்லாஹ்வையும், மலக்குகளையும் (நம்) முன்பாக நீர் கொண்டு வரும்வரை –
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

or you make the sky to fall upon us in pieces – as you claim – or bring Allah and the angels before us face to face,
Ruwwad Center

17:93
أَوْ يَكُونَ لَكَ بَيْتٌ مِنْ زُخْرُفٍ أَوْ تَرْقَىٰ فِي السَّمَاءِ وَلَنْ نُؤْمِنَ لِرُقِيِّكَ حَتَّىٰ تُنَزِّلَ عَلَيْنَا كِتَابًا نَقْرَؤُهُ ۗ قُلْ سُبْحَانَ رَبِّي هَلْ كُنْتُ إِلَّا بَشَرًا رَسُولًا
Aw yakoona laka baytun min zukhrufin aw tarqa fee alssamai walan numina liruqiyyika hatta tunazzila AAalayna kitaban naqraohu qul subhana rabbee hal kuntu illa basharan rasoolan


"Or you have a house of Zukhruf (like silver and pure gold), or you ascend up into the sky, and even then we will put no faith in your ascension until you bring down for us a Book that we would read." Say (O Muhammad [sal-Allâhu 'alayhi wa sallam]): "Glorified (and Exalted) is my Lord [(Allâh) above all that evil they (polytheists) associate with Him]! Am I anything but a man, sent as a Messenger?"
Hilali & Khan

Or you have a house of gold or you ascend into the sky. And [even then], we will not believe in your ascension until you bring down to us a book we may read." Say, "Exalted is my Lord! Was I ever but a human messenger?"
Saheeh International

"அல்லது (மிக்க அழகான) தங்கத்தினாலாகிய ஒரு மாளிகை உங்களுக்கு இருந்தாலன்றி (நாம் நம்பிக்கை கொள்ள மாட்டோம்.) அல்லது நீங்கள் வானத்தின் மீது ஏறியபோதிலும் நாம் ஓதக்கூடிய ஒரு வேதத்தை (நேராக) நம்மீது நீங்கள் இறக்கிவைக்காத வரையில் நீங்கள் வானத்தில் ஏறியதையும் நம்பமாட்டோம்" என்றும் கூறுகின்றனர். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: "என் இறைவன் மிகப் பரிசுத்தமானவன். நான் (உங்களைப் போன்ற) ஒரு மனிதன்தான். எனினும், நான் (அவனால் அனுப்பப்பட்ட) ஒரு தூதர் என்பதைத் தவிர வேறெதுவும் உண்டா?"
தாருல் ஹுதா

“அல்லது ஒரு தங்கமாளிகை உமக்கு இருந்தாலன்றி (உம் மீது நம்பிக்கை கொள்ளோம்); அல்லது வானத்தின் மீது நீர் ஏறிச் செல்ல வேண்டும், (அங்கிருந்து) எங்களுக்காக நாங்கள் படிக்கக் கூடிய ஒரு (வேத) நூலை நீர் கொண்டு வந்து தரும் வரையில், நீர் (வானத்தில்) ஏறியதையும் நாங்கள் நம்ப மாட்டோம்” என்று கூறுகின்றனர். “என் இறைவன் மிகத் தூயவன், நான் (இறைவனுடைய) தூதனாகிய ஒரு மனிதனே தவிர வேறெதுவுமாக இருக்கின்றேனா?” என்று (நபியே! நீர் பதில்) கூறுவீராக.  
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

–அல்லது (மிக்க அழகான) பொன்னாலாகிய ஒரு (மாளிகை) வீடு உமக்கு ஆகும்வரை, அல்லது வானத்தில் நீர் உயர்ந்து செல்லும்வரை (உம்மை விசுவாசிக்க மாட்டோம்.) இன்னும், நாம் ஓதக்கூடிய ஒரு வேதத்தை நீர் (நேராக) நம் மீது இறக்கி வைக்கும் வரை (நீர் வானத்தில்) ஏறியதை நம்பவே மாட்டோம் (என்றும் கூறுகின்றனர், அதற்கு) “என் இரட்சகன் மிகப் பரிசுத்தமானவன், நான் (அல்லாஹ்வின்) தூதனாகிய ஒரு மனிதனாகவே தவிர இருக்கின்றேனா?” என்று நீர் கூறுவீராக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

or until you have a house of gold, or you ascend to the heaven, and even then we will never believe in your ascension unless you bring down to us a book which we can read.” Say, “Glory be to my Lord! Am I anything but a human, sent as a messenger?”
Ruwwad Center

17:94
وَمَا مَنَعَ النَّاسَ أَنْ يُؤْمِنُوا إِذْ جَاءَهُمُ الْهُدَىٰ إِلَّا أَنْ قَالُوا أَبَعَثَ اللَّهُ بَشَرًا رَسُولًا
Wama manaAAa alnnasa an yuminoo ith jaahumu alhuda illa an qaloo abaAAatha Allahu basharan rasoolan


And nothing prevented men from believing when the guidance came to them, except that they said: "Has Allâh sent a man as (His) Messenger?"
Hilali & Khan

And what prevented the people from believing when guidance came to them except that they said, "Has Allah sent a human messenger?"
Saheeh International

மனிதர்களிடம் ஒரு நேரான வழி வந்த சமயத்தில் அவர்கள் "அல்லாஹ் ஒரு மனிதரையா (தன்னுடைய) தூதராக அனுப்பி வைத்தான்" என்று கூறுவதைத் தவிர அவர்கள் நம்பிக்கை கொள்வதைத் தடை செய்வதற்கு ஒன்றுமேயில்லை.
தாருல் ஹுதா

மனிதர்களிடம் நேர்வழி (காட்டி) வந்த போது, “ஒரு மனிதரையா அல்லாஹ் (தன்) தூதராக அனுப்பினான்” என்று கூறுவதைத் தவிர அவர்கள் ஈமான் கொள்வதை வேறெதுவும் தடுக்கவில்லை.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

மனிதர்களை – அவர்களிடம் நேர் வழி வந்த சமயத்தில், “அல்லாஹ் ஒரு மனிதரையா (தன்) தூதராக அனுப்பி வைத்தான்” என்று அவர்கள் கூறுவதைத் தவிர - அவர்கள் விசுவாசங்கொள்வதை (வேறெதுவும்) தடுக்கவில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

Nothing prevented people from believing when guidance came to them except that they said, “Has Allah sent a human as a messenger?”
Ruwwad Center

17:95
قُلْ لَوْ كَانَ فِي الْأَرْضِ مَلَائِكَةٌ يَمْشُونَ مُطْمَئِنِّينَ لَنَزَّلْنَا عَلَيْهِمْ مِنَ السَّمَاءِ مَلَكًا رَسُولًا
Qul law kana fee alardi malaikatun yamshoona mutmainneena lanazzalna AAalayhim mina alssamai malakan rasoolan


Say: "If there were on the earth, angels walking about in peace and security, We should certainly have sent down for them from the heaven an angel as a Messenger."
Hilali & Khan

Say, "If there were upon the earth angels walking securely, We would have sent down to them from the heaven an angel [as a] messenger."
Saheeh International

(அதற்கு) நீங்கள் கூறுங்கள்: பூமியில் (மனிதர்களுக்குப் பதிலாக) மலக்குகளே வசித்திருந்து, அதில் அவர்கள் நிம்மதியாக நடந்து திரிந்து கொண்டுமிருந்தால் நாமும் வானத்திலிருந்து (அவர்கள் இனத்தைச் சார்ந்த) ஒரு மலக்கையே (நம்முடைய) தூதராக அவர்களிடம் அனுப்பியிருப்போம். (ஆகவே, மனிதர்களாகிய அவர்களிடம் மனிதராகிய உங்களை நம்முடைய தூதராக அனுப்பியதில் தவறொன்றுமில்லை.)
தாருல் ஹுதா

(நபியே!) நீர் கூறும்: “பூமியில் மலக்குகளே வசித்து (இருந்து அதில்) அவர்களே நிம்மதியாக நடமாடிக் கொண்டிருந்தால், நிச்சயமாக நாம் அவர்களிடம் ஒரு மலக்கையே வானத்திலிருந்து (நம்) தூதராக இறக்கியிருப்போம்” என்று.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

(அதற்கு) நீர் கூறுவீராக! “பூமியில் மலக்குகள் (வசித்து) இருந்து, (அதில் அவர்கள் நிம்மதியுடையோராக நடந்து திரிந்து கொண்டிருந்தால், நிச்சயமாக நாம் வானத்திலிருந்து ஒரு மலக்கையே (நம்முடைய) தூதராக அவர்களிடம் இறக்கி வைத்திருப்போம், (எனினும், அவர்கள் மனிதர்களாக இருப்பதனால் ஒரு மனிதரே தவிர அவர்களுக்குத் தூதராக வர மாட்டார்.)
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

Say, “If there had been angels walking on earth peacefully, We would have certainly sent down to them from the heaven an angel as a messenger.”
Ruwwad Center

17:96
قُلْ كَفَىٰ بِاللَّهِ شَهِيدًا بَيْنِي وَبَيْنَكُمْ ۚ إِنَّهُ كَانَ بِعِبَادِهِ خَبِيرًا بَصِيرًا
Qul kafa biAllahi shaheedan baynee wabaynakum innahu kana biAAibadihi khabeeran baseeran


Say: "Sufficient is Allâh for a witness between me and you. Verily, He is Ever Well-Acquainted, All-Seer of His slaves."
Hilali & Khan

Say, "Sufficient is Allah as Witness between me and you. Indeed he is ever, concerning His servants, Acquainted and Seeing."
Saheeh International

(பின்னும்) நீங்கள் கூறுங்கள்: "எனக்கும் உங்களுக்கும் இடையில் அல்லாஹ் ஒருவனே போதுமான சாட்சியாக இருக்கின்றான். ஏனென்றால், நிச்சயமாக அவன்தான் தன் அடியார்களை நன்கறிந்தவனும், உற்றுநோக்குபவனுமாக இருக்கின்றான்.
தாருல் ஹுதா

“எனக்கிடையிலும், உங்களுக்கிடையிலும் சாட்சியாக இருக்க அல்லாஹ்வே போதுமானவன்; நிச்சயமாக அவன் தன் அடியார்களைப் பற்றி நன்கு அறிந்தவனாகவும், (யாவற்றையும்) பார்ப்பவனாகவும் இருக்கின்றான்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

(இன்னும்) நீர் கூறுவீராக! “எனக்கும் உங்களுக்குமிடையிலும் (உண்மையை நிலைநிறுத்த) சாட்சியாக அல்லாஹ் ஒருவனே போதுமானவன், (ஏனென்றால்,) நிச்சயமாக அவன் தன் அடியார்களைப்பற்றி நன்குணர்பவனாக, (சாட்சியாக இருக்க, யாவற்றையும்) பார்ப்பவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

Say, “Allah is Sufficient as a witness between me and you. He is indeed All-Aware, All-Seeing of His slaves.”
Ruwwad Center

17:97
وَمَنْ يَهْدِ اللَّهُ فَهُوَ الْمُهْتَدِ ۖ وَمَنْ يُضْلِلْ فَلَنْ تَجِدَ لَهُمْ أَوْلِيَاءَ مِنْ دُونِهِ ۖ وَنَحْشُرُهُمْ يَوْمَ الْقِيَامَةِ عَلَىٰ وُجُوهِهِمْ عُمْيًا وَبُكْمًا وَصُمًّا ۖ مَأْوَاهُمْ جَهَنَّمُ ۖ كُلَّمَا خَبَتْ زِدْنَاهُمْ سَعِيرًا
Waman yahdi Allahu fahuwa almuhtadi waman yudlil falan tajida lahum awliyaa min doonihi wanahshuruhum yawma alqiyamati AAala wujoohihim AAumyan wabukman wasumman mawahum jahannamu kullama khabat zidnahum saAAeeran


And he whom Allâh guides, he is led aright; but he whom He sends astray, for such you will find no Auliyâ' (helpers and protectors) besides Him, and We shall gather them together on the Day of Resurrection on their faces, blind, dumb and deaf; their abode will be Hell; whenever it abates, We shall increase for them the fierceness of the Fire.
Hilali & Khan

And whoever Allah guides - he is the [rightly] guided; and whoever He sends astray - you will never find for them protectors besides Him, and We will gather them on the Day of Resurrection [fallen] on their faces - blind, dumb and deaf. Their refuge is Hell; every time it subsides We increase them in blazing fire.
Saheeh International

எவர்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறானோ அவர்கள்தான் நேரான வழியை அடைவார்கள். எவர்களை (அல்லாஹ்) தவறான வழியில் விட்டு விடுகிறானோ அத்தகையவர் களுக்கு அவனையன்றி உதவி செய்பவர்களை நீங்கள் காண மாட்டீர்கள். அன்றி, மறுமைநாளில் அவர்களைக் குருடர்களாகவும், ஊமையர்களாகவும், செவிடர்களாகவும் (ஆக்கி) அவர்கள் தங்கள் முகத்தால் நடந்து வரும்படி (செய்து) அவர்களை ஒன்று சேர்ப்போம். அவர்கள் தங்குமிடம் நரகம்தான். (அதன்) அனல் தணியும் போதெல்லாம் மென்மேலும் கொழுந்து விட்டெரியும்படி செய்து கொண்டே இருப்போம்.
தாருல் ஹுதா

அல்லாஹ் யாரை நேர்வழியில் செலுத்துகிறானோ, அவர் தாம் நேர்வழிப்பெற்றவர் ஆவார்; இன்னும் அவன் யாரை வழிகேட்டில் விடுகிறானோ அ(த்தகைய)வருக்கு உதவி செய்வோர் அவனையன்றி வேறு எவரையும் நீர் காணமாட்டீர்; மேலும் அவர்களைக் குருடர்களாகவும், ஊமைகளாகவும், செவிடர்களாகவும் தம் முகங்களில் குப்புற வரும்படி செய்து கியாம நாளில் ஒன்று சேர்ப்போம்; இன்னும் அவர்கள் ஒதுங்கும் இடம் நரகமேயாகும்; (நரக நெருப்பு). அணையும் போதெல்லாம் நாம் அவர்களுக்கு நெருப்பை அதிகமாக்குவோம்.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

மேலும், அல்லாஹ் எவரை நேர்வழியில் செலுத்துகிறானோ அவர் தாம் நேர் வழி பெற்றவராவார், எவர்களை (அல்லாஹ்) தவறான வழியில் விட்டுவிடுகிறானோ அவர்களுக்கு அவனையன்றி (வேறு) உதவியாளரை நீர் காணமாட்டீர், மேலும், அவர்களைக் குருடர்களாகவும், ஊமையர்களாகவும், செவிடர்களாகவும் (ஆக்கி) அவர்கள் தங்கள் முகங்கள் மீது குப்புற வரும்படி(ச்செய்து) அவர்களை (மறுமை நாளில்) ஒன்று சேர்ப்போம், அவர்கள் தங்குமிடம் நரகந்தான், அ(தன் நெருப்பான)து தணியும் போதெல்லாம் (அது) கொழுந்து விட்டெரிவதை அவர்களுக்கு (பின்னும்) நாம் அதிகப்படுத்துவோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

Whoever Allah guides is truly guided; and whoever He causes to stray, you will find none to protect them besides Him. On the Day of Resurrection, We will gather [and drag] them on their faces – deaf, dumb and blind. Their abode will be Hell; every time it subsides, We will flare it up for them.
Ruwwad Center

17:98
ذَٰلِكَ جَزَاؤُهُمْ بِأَنَّهُمْ كَفَرُوا بِآيَاتِنَا وَقَالُوا أَإِذَا كُنَّا عِظَامًا وَرُفَاتًا أَإِنَّا لَمَبْعُوثُونَ خَلْقًا جَدِيدًا
Thalika jazaohum biannahum kafaroo biayatina waqaloo aitha kunna AAithaman warufatan ainna lamabAAoothoona khalqan jadeedan


That is their recompense, because they denied Our Ayât (proofs, verses, evidences, lessons, signs, revelations, etc.) and said: "When we are bones and fragments, shall we really be raised up as a new creation?"
Hilali & Khan

That is their recompense because they disbelieved in Our verses and said, "When we are bones and crumbled particles, will we [truly] be resurrected [in] a new creation?"
Saheeh International

அவர்கள், நம்முடைய வசனங்களை நிராகரித்து விட்டதுடன் "நாம் (மரணித்து) எலும்பாகவும், உக்கி மண்ணாகவும் போனதன் பின்னர் மெய்யாகவே நாம் புதிய படைப்பாக எழுப்பப்படுவோமா?" என்று கூறிக் கொண்டிருந்ததும்தான் இத்தகைய (கொடிய) தண்டனையை அவர்கள் அடைவதற்குரிய காரணமாகும்.
தாருல் ஹுதா

அவர்கள் தம் வசனங்களை நிராகரித்து, “நாம் (மரித்து) எலும்புகளாகவும், உக்கி மண்ணோடு மண்ணாகவும் ஆகிவிடுவோமாயின், (மீண்டும்) புதியதொரு படைப்பாக எழுப்பபடுவோமா?” என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்களே அதற்காக அவர்களுடைய கூலி இது தான்.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

நிச்சயமாக, அவர்கள் நம் வசனங்களை நிராகரித்து விட்டனர் என்பதாலும் அன்றியும் “எலும்புகளாகவும், மக்கிவிட்டதாகவும் நாம் ஆகிவிட்டாலும், நிச்சயமாக நாங்கள் புதிய படைப்பாக (உருவாக்கப்பட்டு) எழுப்பப்படுபவர்களா?” எனக் கூறியதாலும் அது அவர்களுக்குரிய கூலியாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

That will be their recompense because they rejected Our verses and said, “What! When we are turned into bones and crumbled particles, will we really be raised as a new creation?”
Ruwwad Center

17:99
أَوَلَمْ يَرَوْا أَنَّ اللَّهَ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ قَادِرٌ عَلَىٰ أَنْ يَخْلُقَ مِثْلَهُمْ وَجَعَلَ لَهُمْ أَجَلًا لَا رَيْبَ فِيهِ فَأَبَى الظَّالِمُونَ إِلَّا كُفُورًا
Awalam yaraw anna Allaha allathee khalaqa alssamawati waalarda qadirun AAala an yakhluqa mithlahum wajaAAala lahum ajalan la rayba feehi faaba alththalimoona illa kufooran


See they not that Allâh, Who created the heavens and the earth, is Able to create the like of them. And He has decreed for them an appointed term, whereof there is no doubt. But the Zâlimûn (polytheists and wrong doers) refuse (the truth – the message of Islâmic Monotheism, and accept nothing) but disbelief.
Hilali & Khan

Do they not see that Allah, who created the heavens and earth, is [the one] Able to create the likes of them? And He has appointed for them a term, about which there is no doubt. But the wrongdoers refuse [anything] except disbelief.
Saheeh International

மெய்யாகவே வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ் (மறுமுறையும்) அவர்களைப் போன்றே படைக்க ஆற்றலுடையவன் என்பதை அவர்கள் அறியவில்லையா? (இதற்காக) அவர்களுக்கு ஒரு தவணையை ஏற்படுத்தியிருக்கிறான். அதில் யாதொரு சந்தேகமுமில்லை. (இவ்வாறிருந்தும்) இவ்வக்கிரமக்காரர்கள் இதனை நிராகரிக்காமலில்லை!
தாருல் ஹுதா

நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைத்தவனாகிய அல்லாஹ் அவர்களைப் போன்றதைப் படைக்க ஆற்றலுடையவன் என்பதை அவர்கள் அறியவில்லையா? இன்னும் அவர்களுக்கு ஒரு குறிப்பட்ட தவணையையும் ஏற்படுத்தியிருக்கிறான்; இதில் சந்தேகமில்லை, எனினும், அக்கிரமக்காரர்கள் (இவ்வுண்மையை) நிராகரிக்காமல் இல்லை!
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைத்தானே அத்தகைய அல்லாஹ் (மறுதடவையும் முன்னிருந்த) அவர்களைப் போன்றே படைக்க ஆற்றலுடையோன் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? மேலும் (இதற்காக) அவர்களுக்கு ஒரு தவணையையும் ஏற்படுத்தியிருக்கிறான், அதில் யாதொரு சந்தேகமுமில்லை, ஆகவே அநியாயக்காரர்கள் நிராகரிப்பைத் தவிர வேறு எதையும் ஏற்பதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

Do they not see that Allah, Who created the heavens and earth, is able to create the like of them? He has decreed for them an appointed time, about which there is no doubt, yet the wrongdoers persist in denial.
Ruwwad Center

17:100
قُلْ لَوْ أَنْتُمْ تَمْلِكُونَ خَزَائِنَ رَحْمَةِ رَبِّي إِذًا لَأَمْسَكْتُمْ خَشْيَةَ الْإِنْفَاقِ ۚ وَكَانَ الْإِنْسَانُ قَتُورًا
Qul law antum tamlikoona khazaina rahmati rabbee ithan laamsaktum khashyata alinfaqi wakana alinsanu qatooran


Say (to the disbelievers): "If you possessed the treasures of the Mercy of my Lord (wealth, money provision), then you would surely hold back (from spending) for fear of (being exhausted), and man is ever miserly!"
Hilali & Khan

Say [to them], "If you possessed the depositories of the mercy of my Lord, then you would withhold out of fear of spending." And ever has man been stingy.
Saheeh International

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: என் இறைவனின் அருள் பொக்கிஷங்கள் அனைத்திற்கும் நீங்களே சொந்தக்காரர்களாக இருந்தால் அது செலவாகிவிடுமோ! எனப் பயந்து (எவருக்கும் எதுவுமே கொடுக்காது) நீங்கள் தடுத்துக் கொள்வீர்கள். மனிதன் பெரும் கஞ்சனாக இருக்கிறான்.
தாருல் ஹுதா

“என்னுடைய இறைவனின் (ரஹ்மத்து என்னும்) அருள் பொக்கிஷங்களை நீங்கள் சொந்தப்படுத்திக் கொண்டு இருப்பீர்களானாலும், அவை செலவாகி விடுமோ என்ற பயத்தினால், நீங்கள் (அவற்றைத்) தடுத்துக்கொள்வீர்கள் - மேலும், மனிதன் உலோபியாகவே இருக்கின்றான்” என்று (நபியே!) நீர் கூறும்.  
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

(நபியே!) நீர் கூறுவீராக! என் இரட்சகனின் அருட்களஞ்சியங்களை நீங்களே சொந்தப்படுத்திக்கொண்டு இருப்பீர்களானால், அப்போது அது செலவாகி விடுவதைப் பயந்து (எவருக்கும் எதையும் கொடுக்காது) நீங்கள் தடுத்துக் கொள்வீர்கள்! மனிதன் பெரும் உலோபியாகவும் இருக்கிறான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

Say, “If you were to own the treasuries of my Lord’s mercy, you would surely hold them back for fear of spending, for man is ever miserly.”
Ruwwad Center

17:101
وَلَقَدْ آتَيْنَا مُوسَىٰ تِسْعَ آيَاتٍ بَيِّنَاتٍ ۖ فَاسْأَلْ بَنِي إِسْرَائِيلَ إِذْ جَاءَهُمْ فَقَالَ لَهُ فِرْعَوْنُ إِنِّي لَأَظُنُّكَ يَا مُوسَىٰ مَسْحُورًا
Walaqad atayna moosa tisAAa ayatin bayyinatin faisal banee israeela ith jaahum faqala lahu firAAawnu innee laathunnuka ya moosa mashooran


And indeed We gave Mûsâ (Moses) nine clear signs. Ask then the Children of Israel, when he came to them, then Fir'aun (Pharaoh) said to him: "O Mûsâ (Moses)! I think you are indeed bewitched."
Hilali & Khan

And We had certainly given Moses nine evident signs, so ask the Children of Israel [about] when he came to them and Pharaoh said to him, "Indeed I think, O Moses, that you are affected by magic."
Saheeh International

நிச்சயமாக நாம் மூஸாவுக்கு தெளிவான ஒன்பது அத்தாட்சிகளைக் கொடுத்திருந்தோம். (நபியே! இதைப்பற்றி) நீங்கள் இஸ்ராயீலின் சந்ததிகளைக் கே(ட்டறிந்து கொள்)ளுங்கள். (மூஸா) அவர்களிடம் வந்தபொழுது, ஃபிர்அவ்ன் அவர்களை நோக்கி "மூஸாவே! நிச்சயமாக நீங்கள் சூனியத்தால் புத்தி மாறியவர் என நான் உங்களை எண்ணுகிறேன்" என்று கூறினான்.
தாருல் ஹுதா

நிச்சயமாக நாம் மூஸாவுக்குத் தெளிவான ஒன்பது அத்தாட்சிகளை கொடுத்திருந்தோம்; அவர் அவர்களிடம் (அவற்றைக் கொண்டு) வந்தபோது (என்ன நடந்தது என்று) பனீ இஸ்ராயீல்களிடம் (நபியே!) நீர் கேளும். ஃபிர்அவ்ன் அவரை நோக்கி “மூஸாவே! நிச்சயமாக நாம் உம்மை சூனியம் செய்யப்பட்டவராகவே எண்ணுகிறேன்” என்று கூறினான்.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

மேலும், திட்டமாக நாம் மூஸாவுக்குத் தெளிவான ஒன்பது அத்தாட்சிகளைக் கொடுத்திருந்தோம், (அதைப் பெற்றுக் கொண்டு) அவர், (தன் சமூகத்தினரான) அவர்களிடம் (அதைக் கொண்டு) வந்தபொழுது (என்ன நடந்ததென) இஸ்ராயீலின் மக்களிடம் (நபியே!) நீர், கேட்பீராக! அப்போது ஃபிர் அவ்ன் அவரிடம், “மூஸாவே! நிச்சயமாக நீர் சூனியம் செய்யப்பட்டவரென நான் உம்மை எண்ணுகிறேன்” என்று கூறினான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

We gave Moses nine clear signs. Ask the Children of Israel when he came to them, Pharaoh said to him, “O Moses, I certainly think that you are bewitched.”
Ruwwad Center

17:102
قَالَ لَقَدْ عَلِمْتَ مَا أَنْزَلَ هَٰؤُلَاءِ إِلَّا رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ بَصَائِرَ وَإِنِّي لَأَظُنُّكَ يَا فِرْعَوْنُ مَثْبُورًا
Qala laqad AAalimta ma anzala haolai illa rabbu alssamawati waalardi basaira wainnee laathunnuka ya firAAawnu mathbooran


[Mûsâ (Moses)] said: "Verily, you know that these signs have been sent down by none but the Lord of the heavens and the earth (as clear evidences, i.e. proofs of Allâh's Oneness and His Omnipotence). And I think you are indeed, O Fir'aun (Pharaoh), doomed to destruction (away from all good)!"
Hilali & Khan

[Moses] said, "You have already known that none has sent down these [signs] except the Lord of the heavens and the earth as evidence, and indeed I think, O Pharaoh, that you are destroyed."
Saheeh International

அதற்கு மூஸா (அவனை நோக்கி) "வானங்களையும் பூமியையும் படைத்த இறைவனே இவ்வத்தாட்சிகளை மனிதர்களுக்குப் படிப்பினையாக இறக்கி வைத்தான் என்பதை நிச்சயமாக நீ அறிவாய். ஃபிர்அவ்னே! உன்னை நிச்சயமாக அழிவு காலம் பிடித்துக்கொண்டது என நான் எண்ணுகிறேன்" என்று கூறினார்.
தாருல் ஹுதா

(அதற்கு) மூஸா “வானங்களையும் பூமியையும் படைத்த இறைவனைத் தவிர (வேறு யாரும்) இவற்றைத் தெளிவான சான்றுகளாக அனுப்பவில்லை என்பதை நிச்சயமாக நீ அறிவாய்; ஃபிர்அவ்னே! நிச்சயமாக நீ அழிக்கப்பட இருக்கிறாய் என்று (உன்னைப் பற்றி) நான் எண்ணுகின்றேன்” என்று கூறினார்.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

(அதற்கு) மூஸா, வானங்கள், மற்றும் பூமியின் இரட்சகனைத் தவிர (வேறு எவரும்) இவற்றை உங்களுக்குத் தெளிவான சான்றுகளாக இறக்கி வைக்கவில்லை என்பதைத் திட்டமாக நீ அறிந்து விட்டாய், மேலும், ஃபிர் அவ்னே! நிச்சயமாக நான் உன்னை, அழிக்கப்படுபவன் என்றே நான் எண்ணுகிறேன்” என்று கூறினார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

Moses said, “You already know that none sent down these [signs] except the Lord of the heavens and earth as clear proofs, and I certainly think that you, O Pharaoh, are doomed!”
Ruwwad Center

17:103
فَأَرَادَ أَنْ يَسْتَفِزَّهُمْ مِنَ الْأَرْضِ فَأَغْرَقْنَاهُ وَمَنْ مَعَهُ جَمِيعًا
Faarada an yastafizzahum mina alardi faaghraqnahu waman maAAahu jameeAAan


So, he resolved to turn them out of the land (of Egypt). But We drowned him and all who were with him.
Hilali & Khan

So he intended to drive them from the land, but We drowned him and those with him all together.
Saheeh International

(அதற்கு அவன் மூஸாவையும் அவருடைய மக்கள்) அனைவரையும் அவன் தன் நாட்டிலிருந்து விரட்டி விடவே எண்ணினான். எனினும், (அதற்குள்ளாக) அவனையும் அவனுடன் இருந்த (அவனுடைய மக்கள்) அனைவரையும் நாம் மூழ்கடித்து விட்டோம்.
தாருல் ஹுதா

ஆகவே (ஃபிர்அவ்ன்) அந்நாட்டை விட்டு (மூஸாவையும் பனீ இஸ்ராயீல்களையும்) விரட்டிவிட நாடினான்; ஆனால், நாம் அவனையும் அவனுடனிருந்தவர்கள் அனைவரையும் மூழ்கடித்தோம்.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

எனவே, (மூஸாவையும், அவருடைய சமூகத்தினருமான) அவர்களை தன் தேசத்திலிருந்து விரட்டி விடவே அவன் நாடினான், பின்னர், அவனையும் அவனுடனிருந்த (அவனுடைய சமூகத்தார்) யாவரையும் நாம் மூழ்கடித்து விட்டோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

So he decided to exile them out of the land, but We drowned him and all those who were with him.
Ruwwad Center

17:104
وَقُلْنَا مِنْ بَعْدِهِ لِبَنِي إِسْرَائِيلَ اسْكُنُوا الْأَرْضَ فَإِذَا جَاءَ وَعْدُ الْآخِرَةِ جِئْنَا بِكُمْ لَفِيفًا
Waqulna min baAAdihi libanee israeela oskunoo alarda faitha jaa waAAdu alakhirati jina bikum lafeefan


And We said to the Children of Israel after him: "Dwell in the land, then, when the final and the last promise comes near [i.e. the Day of Resurrection or the descent of Christ ('خsâ), son of Maryam (Mary) ['alayhis-salâm]  on the earth], We shall bring you altogether as a mixed crowd (gathered out of various nations)." (Tafsir Al-Qurtubî)
Hilali & Khan

And We said after Pharaoh to the Children of Israel, "Dwell in the land, and when there comes the promise of the Hereafter, We will bring you forth in [one] gathering."
Saheeh International

இதன் பின்னர் இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு நாம் கூறினோம்: "நீங்கள் இப்பூமியில் வசித்திருங்கள். மறுமையின் வாக்குறுதி வந்தால், உங்கள் அனைவரையும் (விசாரணைக்காக) நம்மிடம் கொண்டு வந்து ஒன்று சேர்ப்போம்.
தாருல் ஹுதா

இதன் பின்னர் நாம் பனூ இஸ்ராயீல்களுக்குச் சொன்னோம், நீங்கள் அந்த நாட்டில் குடியிருங்கள்; மறுமையின் வாக்குறுதி வந்தால், நாம் (உங்களையும், ஃபிர்அவனின் கூட்டத்தையும் விசாரணைக்காக) நம்மிடம் ஒன்று சேர்ப்போம்.”
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

இதன் பின்னர் இஸ்ராயீலின் மக்களுக்கு நாம் கூறினோம், “நீங்கள் இப்பூமியில் வசித்திருங்கள், மறுமையின் வாக்குறுதி வந்தால், உங்கள் யாவரையும் (எல்லாக் கிளையினரிலிருந்தும் விசாரணைக்காக) ஒரு சேர நம்மிடம் கொண்டு வந்து சேர்ப்போம்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

Thereafter We said to the Children of Israel, “Dwell in the land, but when the promise of the Hereafter comes, We will bring you all together.”
Ruwwad Center

17:105
وَبِالْحَقِّ أَنْزَلْنَاهُ وَبِالْحَقِّ نَزَلَ ۗ وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا مُبَشِّرًا وَنَذِيرًا
Wabialhaqqi anzalnahu wabialhaqqi nazala wama arsalnaka illa mubashshiran wanatheeran


And with truth We have sent it down (i.e. the Qur'ân), and with truth it has descended. And We have sent you (O Muhammad [sal-Allâhu 'alayhi wa sallam]) as nothing but a bearer of glad tidings (of Paradise, for those who follow your Message of Islâmic Monotheism), and a warner (of Hell-fire for those who refuse to follow your Message of Islâmic Monotheism).
Hilali & Khan

And with the truth We have sent the Qur'an down, and with the truth it has descended. And We have not sent you, [O Muhammad], except as a bringer of good tidings and a warner.
Saheeh International

முற்றிலும் உண்மையைக் கொண்டே இவ்வேதத்தை நாம் இறக்கினோம். அதுவும் உண்மையைக் கொண்டே இறங்கியது. (நபியே!) உங்களை நாம் (நன்மை செய்தவர்களுக்கு) நற்செய்தி கூறுபவராகவும் (பாவம் செய்பவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அன்றி அனுப்பவில்லை.
தாருல் ஹுதா

இன்னும், முற்றிலும் சத்தியத்தைக் கொண்டே நாம் இதனை (குர்ஆனை) இறக்கிவைத்தோம்; முற்றிலும் சத்தியத்தைக் கொண்டே இது இறங்கியது; மேலும், (நபியே!) நாம் உம்மை நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமேயன்றி அனுப்பவில்லை.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

இன்னும், உண்மையைக் கொண்டே (குர் ஆனாகிய) இதை நாம் இறக்கி வைத்தோம், அதுவும் உண்மையைக் கொண்டே இறங்கியது, மேலும், (நபியே!) நாம் உம்மை நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே தவிர அனுப்பவில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

With the truth We have sent down this [Qur’an] and with the truth it has descended, and We have not sent you [O Prophet] except as a bearer of glad tidings and a warner.
Ruwwad Center

17:106
وَقُرْآنًا فَرَقْنَاهُ لِتَقْرَأَهُ عَلَى النَّاسِ عَلَىٰ مُكْثٍ وَنَزَّلْنَاهُ تَنْزِيلًا
Waquranan faraqnahu litaqraahu AAala alnnasi AAala mukthin wanazzalnahu tanzeelan


And (it is) a Qur'ân which We have divided (into parts), in order that you might recite it to men at intervals. And We have revealed it by stages (in 23 years).
Hilali & Khan

And [it is] a Qur'an which We have separated [by intervals] that you might recite it to the people over a prolonged period. And We have sent it down progressively.
Saheeh International

(நபியே!) மனிதர்களுக்கு நீங்கள் சிறிது சிறிதாக ஓதிக் காண்பிக்கும் பொருட்டு இந்தக் குர்ஆனை பல பாகங்களாக நாம் பிரித்தோம். அதற்காகவே நாம் இதனைச் சிறுகச் சிறுகவும் இறக்கி வைக்கிறோம்.
தாருல் ஹுதா

இன்னும், மக்களுக்கு நீர் சிறிது சிறிதாக ஓதிக் காண்பிப்பதற்காகவே இந்த குர்ஆனை நாம் பகுதி, பகுதியாகப் பிரித்தோம்; இன்னும் நாம் அதனைப் படிப்படியாக இறக்கிவைத்தோம்.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

குர் ஆனை மனிதர்களுக்கு அதனைச் சிறிது சிறிதாக நீர் ஓதிக் காண்பிப்பதற்காக, அதனை நாம் பிரித்து (இறக்கி) வைத்தோம், இன்னும், அதனைப் படிப்படியாக இறக்கி வைத்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

This is a Qur’an that We have revealed over stages so that you may recite it to people at a slower pace, and We have sent it down in a successive manner.
Ruwwad Center

17:107
قُلْ آمِنُوا بِهِ أَوْ لَا تُؤْمِنُوا ۚ إِنَّ الَّذِينَ أُوتُوا الْعِلْمَ مِنْ قَبْلِهِ إِذَا يُتْلَىٰ عَلَيْهِمْ يَخِرُّونَ لِلْأَذْقَانِ سُجَّدًا
Qul aminoo bihi aw la tuminoo inna allatheena ootoo alAAilma min qablihi itha yutla AAalayhim yakhirroona lilathqani sujjadan


Say (O Muhammad [sal-Allâhu 'alayhi wa sallam] to them): "Believe in it (the Qur'ân) or do not believe (in it). Verily, those who were given knowledge before it (the Jews and the Christians like 'Abdullâh bin Salâm and Salmân Al-Farisî), when it is recited to them, they fall down on their faces in humble prostration."
Hilali & Khan

Say, "Believe in it or do not believe. Indeed, those who were given knowledge before it - when it is recited to them, they fall upon their faces in prostration,
Saheeh International

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் (இந்தக் குர்ஆனை) நம்பிக்கை கொள்ளுங்கள் அல்லது நம்பிக்கை கொள்ளாதிருங்கள். (அதைப் பற்றி நமக்கு ஒன்றும் குறைவில்லை.) நிச்சயமாக இதற்கு முன்னுள்ள (வேதங்களின்) மெய்யான ஞானம் எவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றதோ அவர்களிடம் (இவ்வேதம்) ஓதிக் காண்பிக்கப்பட்டால் அவர்கள் (இதனை நம்பிக்கை கொண்டு) முகங்குப்புற விழுந்து (எனக்கு) சிரம் பணிவார்கள்.
தாருல் ஹுதா

(நபியே!) “அதனை நீங்கள் நம்புங்கள், அல்லது நம்பாதிருங்கள்; (அதனால் நமக்கு கூடுதல், குறைவு எதுவுமில்லை.) நிச்சயமாக இதற்கு முன்னர் எவர் (வேத) ஞானம் கொடுக்கப்பட்டிருந்தார்களோ, அவர்களிடம் அது (குர்ஆன்) ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்கள் ஸுஜூது செய்தவர்களாக முகங்களின் மீது (பணிந்து) விழுவார்கள்” என்று (நபியே!) நீர் கூறும்.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

(நபியே!) நீர் கூறுவீராக! “இதனை நீங்கள் விசுவாசியுங்கள், அல்லது விசுவாசிக்காதிருங்கள், நிச்சயமாக இதற்கு முன் (வேத) அறிவு கொடுக்கப்பட்டிருந்தார்களே அத்தகையோர் - அவர்களுக்கு இது ஓதிக்காண்பிக்கப்பட்டால், (இதனை விசுவாசித்து பணிந்து) ஸுஜுது செய்தவர்களாக முகங்குப்புற விழுவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

Say, “Believe in it, or do not believe. Those who were given knowledge before it, when it is recited to them, they fall on their faces in prostration,
Ruwwad Center

17:108
وَيَقُولُونَ سُبْحَانَ رَبِّنَا إِنْ كَانَ وَعْدُ رَبِّنَا لَمَفْعُولًا
Wayaqooloona subhana rabbina in kana waAAdu rabbina lamafAAoolan


And they say: "Glorified is our Lord! Truly, the Promise of our Lord must be fulfilled."
Hilali & Khan

And they say, "Exalted is our Lord! Indeed, the promise of our Lord has been fulfilled."
Saheeh International

அன்றி, (அவர்கள்) "எங்கள் இறைவன் மிகப் பரிசுத்தமானவன். எங்கள் இறைவனின் வாக்குறுதி நிச்சயமாக நிறைவேறி விட்டது" என்றும் கூறுவார்கள்.
தாருல் ஹுதா

அன்றியும், “எங்கள் இறைவன் மிகப் பரிசுத்தமானவன்; எங்களுடைய இறைவனின் வாக்குறுதி நிறைவேறி விட்டது” என்றும் அவர்கள் கூறுவார்கள்.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

“எங்கள் இரட்சகன் மிகப் பரிசுத்தமானவன், எங்களுடைய இரட்சகனுடைய வாக்கு நிச்சயமாக நிறைவேற்றப்பட்டதாக ஆகிவிட்டது” என்றும் அவர்கள் கூறுவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

and they say, “Glory be to our Lord. The promise of our Lord is bound to be fulfilled.”
Ruwwad Center

17:109
وَيَخِرُّونَ لِلْأَذْقَانِ يَبْكُونَ وَيَزِيدُهُمْ خُشُوعًا ۩
Wayakhirroona lilathqani yabkoona wayazeeduhum khushooAAan


And they fall down on their faces weeping and it increases their humility.
Hilali & Khan

And they fall upon their faces weeping, and the Qur'an increases them in humble submission.
Saheeh International

அன்றி, அவர்கள் முகங்குப்புற விழுந்து அழுவார்கள். அவர்களுடைய உள்ளச்சமும் அதிகரிக்கும்.
தாருல் ஹுதா

இன்னும் அவர்கள் அழுதவர்களாக முகங்கள் குப்புற விழுவார்கள்; இன்னும் அவர்களுடைய உள்ளச்சத்தையும் (அது) அதிகப்படுத்தும்.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

இன்னும், அவர்கள் அழுதவர்களாக முகங்குப்புற விழுவார்கள், அவர்களுக்கு அது பயபக்தியை அதிகப்படுத்தும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

They fall down on their faces weeping, and it increases their humility.”
Ruwwad Center

17:110
قُلِ ادْعُوا اللَّهَ أَوِ ادْعُوا الرَّحْمَٰنَ ۖ أَيًّا مَا تَدْعُوا فَلَهُ الْأَسْمَاءُ الْحُسْنَىٰ ۚ وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتْ بِهَا وَابْتَغِ بَيْنَ ذَٰلِكَ سَبِيلًا
Quli odAAoo Allaha awi odAAoo alrrahmana ayyan ma tadAAoo falahu alasmao alhusna wala tajhar bisalatika wala tukhafit biha waibtaghi bayna thalika sabeelan


Say (O Muhammad [sal-Allâhu 'alayhi wa sallam]): "Invoke Allâh or invoke the Most Gracious (Allâh), by whatever name you invoke Him (it is the same), for to Him belong the Best Names. And offer your Salât (prayer) neither aloud nor in a low voice, but follow a way between.
Hilali & Khan

Say, "Call upon Allah or call upon the Most Merciful. Whichever [name] you call - to Him belong the best names." And do not recite [too] loudly in your prayer or [too] quietly but seek between that an [intermediate] way.
Saheeh International

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் அல்லாஹ் என்றழையுங்கள் அல்லது ரஹ்மான் என்றழையுங்கள்; (இவ்விரண்டில்) எப்பெயர் கொண்டு நீங்கள் அவனை அழைத்த போதிலும் (அழையுங்கள்.) அவனுக்கு அழகான (இன்னும்) பல திருப் பெயர்கள் இருக்கின்றன." (நபியே!) உங்களுடைய தொழுகையில் நீங்கள் மிக சப்தமிட்டு ஓதாதீர்கள்! அதிக மெதுவாகவும் ஓதாதீர்கள்! இதற்கு மத்திய வழியைக் கடைப்பிடியுங்கள்.
தாருல் ஹுதா

“நீங்கள் (அவனை) அல்லாஹ் என்று அழையுங்கள்; அல்லது அர்ரஹ்மான் என்றழையுங்கள்; எப்பெயரைக் கொண்டு அவனை நீங்கள் அழைத்தாலும், அவனுக்கு(ப் பல) அழகிய திருநாமங்கள் இருக்கின்றன” என்று (நபியே!) கூறுவீராக; இன்னும், உம்முடைய தொழுகையில் அதிக சப்தமிட்டு ஓதாதீர் மிக மெதுவாகவும் ஓதாதீர். மேலும் இவ்விரண்டிற்கும் இடையில் ஒரு மத்தயமான வழியைக் கடைப்பிடிப்பீராக.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

(நபியே!) நீர் கூறுவீராக! “அல்லாஹ் என்று அழையுங்கள், அல்லது அர்ரஹ்மான் என்று அழையுங்கள், (இவ்விரண்டில்) எதைக் கொண்டு நீங்கள் அவனை அழைத்த போதிலும் அவனுக்கு அழகான பெயர்கள் இருக்கின்றன, (நபியே!) உம்முடைய தொழுகையில் நீர் (மிக்க) சப்தமிட்டும் ஓத வேண்டாம், அதில் (மிக) மெதுவாகவும் ஓத வேண்டாம், இவற்றிற்கிடையே (மத்திய) ஒரு வழியைத் தேடிக் கொள்வீராக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

Say, “Call upon Allah or call upon the Most Compassionate – whichever name you call, to Him belong the Most Beautiful Names.” Do not be too loud in your prayer, nor too quiet, but seek a way in between.
Ruwwad Center

17:111
وَقُلِ الْحَمْدُ لِلَّهِ الَّذِي لَمْ يَتَّخِذْ وَلَدًا وَلَمْ يَكُنْ لَهُ شَرِيكٌ فِي الْمُلْكِ وَلَمْ يَكُنْ لَهُ وَلِيٌّ مِنَ الذُّلِّ ۖ وَكَبِّرْهُ تَكْبِيرًا
Waquli alhamdu lillahi allathee lam yattakhith waladan walam yakun lahu shareekun fee almulki walam yakun lahu waliyyun mina alththulli wakabbirhu takbeeran


And say: "All praise and thanks are Allâh's, Who has not begotten a son (or offspring), and Who has no partner in (His) Dominion, nor is He low to have a Walî (helper, protector or supporter). And magnify Him with all magnificence [Allâhu-Akbar (Allâh is the Most Great)]."
Hilali & Khan

And say, "Praise to Allah, who has not taken a son and has had no partner in [His] dominion and has no [need of a] protector out of weakness; and glorify Him with [great] glorification."
Saheeh International

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியதே! அவனுக்கு யாதொரு சந்ததியுமில்லை. அவனுடைய ஆட்சியில் அவனுக்குக் கூட்டாளி ஒருவருமில்லை. அவன் பலவீனனாக இருக்கின்றான் என்று (கூறுவதற்குமில்லை.) அவனுக்கு உதவியாளன் ஒருவனுமில்லை." ஆகவே, அவனை மிக மிகப் பெருமைப்படுத்திக் கூறுங்கள்.
தாருல் ஹுதா

“அன்றியும், (தனக்குச்) சந்ததியை எடுத்துக் கொள்ளாதவனும், (தன்) ஆட்சியில் தனக்குக் கூட்டாளி எவரும் இல்லாதவனும், எந்தவித பலஹீனத்தை கொண்டும் எந்த உதவியாளனும் (தேவை) இல்லாமலும் இருக்கிறானே அந்த நாயனுக்கே புகழ் அனைத்தும்” என்று (நபியே!) நீர் கூறுவீராக; இன்னும் (அவனை) எப்பொழுதும் பெருமைப் படுத்த வேண்டிய முறையில் பெருமைப் படுத்துவீராக.
ஜான் டிரஸ்ட் நிறுவனம்

இன்னும், “பிள்ளையை (தனக்கு) எடுத்துக் கொள்ளாதவனும், ஆட்சியில் தனக்கு துணைவன் இல்லாதவனும், இழிவிலிருந்து (காக்க) அவனுக்கு உதவி செய்பவரே இல்லாதவனும் ஆகிய - இத்தகைய அல்லாஹவிற்கே புகழ் அனைத்தும் உரித்தாகுக” எனவும் (நபியே!) நீர் கூறுவீராக! ஆகவே (மாபெரும் மகத்துவத்திற்குரிய) அவனை மிக மிக பெருமைப்படுத்துவீராக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)

And say, “All praise is for Allah Who has not taken a son, nor does He have any partner in His dominion, nor does He need any protector out of weakness. And proclaim His greatness immensely.”
Ruwwad Center