பட்டியல்
மூண்று அடிப்படைகள்
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
இஸ்லாத்தின் மூன்று அடிப்படை விடயங்கள் .
ஆசிரியர்: இமாம் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் .
தமிழில் அப்துல் ஜவாத் ஜவாஹிர்
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பிக்கின்றேன்! அல்லாஹ் உன் மீது அருள் புரிவானாக! நான்கு விடயங்களை அறிவது நம்மீது கடமையாகும் என்பதை நீ அறிந்து கொள்.
- முதலாவது அறிவு அதாவது அல்லாஹ்வையும் அவன் நபியையும் இஸ்லாமிய மார்க்கத்தையும் ஆதாரப்பூர்வமாக அறியத் தேவையான அறிவு.
- இரண்டாவது அந்த அறிவின் படி அமல் செய்வது.
- மூன்றாவது அதன்பால் மக்களை அழைப்பது.
- நான்காவது இவ்வாறு அழைப்புக் கொடுக்கும் போது ஏற்படுகின்ற இன்னல்கள் மீது பொறுமை செய்வது .
وَالْعَصْرِ إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ
இமாம் ஷாபியீ (ரஹ்) கூறினார்கள்...
அல்லாஹ் 'அஸ்ர்' என்ற இந்த அத்தியாயத்தை மட்டும் இறக்கியிருந்தாலும், இந்த ஒரு அத்தியாயம்; மட்டுமே தம் படைப்புகள் மீது (அவர்கள் செய்த தவறுகளுக்காக) ஆதாரம் எடுத்துக் கொள்வதற்குப் போதுமானதாகும்.
அந்த அளவிற்கு மிக முக்கியமான கருத்துக்களை இவ்வத்தியாயம் உள்ளடக்கியுள்ளது.
(அல்லாஹ்வை வணங்கி வழிபடுவதற்கு அறிவு மிக அவசியம் என்பதைக் குறிக்கும் வண்ணம்) இமாம் புஹாரி (ரஹ்) அவர்கள், 'சொல், செயலிற்கு முன் அது பற்றிய அறிவு அவசியம்' என்ற ஒரு பாடத்தை ஒதுக்கி அப்பாடத்தில் அறிவின் முக்கியத்துவத்தைக் குறிக்கின்ற ஹதீஸ்களைக் கூறியுள்ளார்கள்.
அறிவு எந்த அளவுற்கு அவசியம் என்பதைக் கீழ் காணும் இறை வசனம் தெளிவுபடுத்துகிறது.
சொல் செயலுக்கு முன் அறிவைக்கொண்டு அல்லாஹ் ஆரம்பித்துள்ளான்.எனவே (சொல் செயலுக்கு முன் அதைப்பற்றிய அறிவு மிக அவசியமாகும். அல்லாஹ் உனக்கு அருள் புரிவானாக! கீழ் காணும் மூன்று விடயங்களை அறிந்து அதன் படி அமல் செய்வது முஸ்லிமான ஒவ்வொரு ஆண், பெண் மீதும் கடமையானதாகும் என்று நீ அறிந்து கொள்.
-
நிச்சயமாக அல்லாஹ் நம்மைப் படைத்து நமக்கு உணவும் அளித்தான். அவன் நம்மை வீணாக விட்டுவிடவில்லை. மாறாக, நமக்கு அவனுடைய தூதரையும் அனுப்பிவைத்தான், யார் அவர்களுக்கு வழிப்படுகின்றானோ அவன் சுவர்க்கம் செல்வான்,யார் அவர்களுக்கு மாறு செய்வானோ அவன் நரகம் புகுவான்.
அதற்கு ஆதாரம் கீழ் காணும் இறை வசனமாகும்.
إِنَّا أَرْسَلْنَا إِلَيْكُمْ رَسُولًا شَاهِدًا عَلَيْكُمْ كَمَا أَرْسَلْنَا إِلَىٰ فِرْعَوْنَ رَسُولًا
فَعَصَىٰ فِرْعَوْنُ الرَّسُولَ فَأَخَذْنَاهُ أَخْذًا وَبِيلًا(மனிதர்களே!) நிச்சயமாக நாம் உங்களிடம் நம்முடைய ஒரு தூதரை அனுப்பி வைத்தோம். (மறுமையில்) அவர் உங்களுக்குச் சாட்சியாக வருவார். இவ்வாறே ஃபிர்அவ்னிடமும் முன்னர் ஒரு தூதரை நாம் அனுப்பி வைத்தோம். எனினும், ஃபிர்அவ்ன் அத்தூதருக்கு மாறு செய்தான். ஆகவே, நாம் அவனைப் பலமாகப் பிடித்துக்கொண்டோம். []73 ஸூரத்துல் முஸ்ஸம்மில் (போர்வை போர்த்தியவர்) 15-16] -
இறைவனால் அனுப்பப்பட்ட நபியாக இருந்தாலும் சரி. அல்லது அவனோடு நெருங்கிய மலக்காக இருந்தாலும் சரி,இறைவனுக்கு செலுத்த வேண்டிய வணக்க வழிபாடுகளில் அவனோடு யாரையும் இணைவைப்பதை அல்லாஹ் நிச்சயமாக விரும்பமாட்டான்.
அதற்கு ஆதாரம் கீழ் காணும் இறை வசனமாகும்.
وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًاநிச்சயமாக பள்ளிவாசல் (மஸ்ஜிது)களெல்லாம், அல்லாஹ்வை வணங்குவதற்காக உள்ளன. ஆகவே, (அவைகளில்) அல்லாஹ்வுடன் மற்றெவரையும் (பெயர் கூறி) அழைக்காதீர்கள். [72 ஸூரத்துல் ஜின்னு: 18] -
அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்கு தகுதியானவன் என நம்பி, அவனது தூதருக்கு வழிபடுபவன், தனது நெருங்கிய குடும்பத்தினர்களாக இருப்பினும் சரி, அல்லாஹ், அவனது தூதரின் விரோதிகள் யாரையும் தனது காரிய பரிபாலராக ஆக்கிக் கொள்வது கூடாது.
அதற்கு ஆதாரம் கீழ் காணும் இறை வசனமாகும்.
لَا تَجِدُ قَوْمًا يُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ يُوَادُّونَ مَنْ حَادَّ اللَّهَ وَرَسُولَهُ وَلَوْ كَانُوا آبَاءَهُمْ أَوْ أَبْنَاءَهُمْ أَوْ إِخْوَانَهُمْ أَوْ عَشِيرَتَهُمْ ۚ أُولَٰئِكَ كَتَبَ فِي قُلُوبِهِمُ الْإِيمَانَ وَأَيَّدَهُمْ بِرُوحٍ مِنْهُ ۖ وَيُدْخِلُهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا ۚ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ ۚ أُولَٰئِكَ حِزْبُ اللَّهِ ۚ أَلَا إِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْمُفْلِحُونَ(நபியே!) எந்த மக்கள் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் (மெய்யாகவே) நம்பிக்கை கொண்டிருக்கின்றார்களோ அவர்கள், எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்பவர்களாக இருக்கின்றார்களோ (அவர்களை நேசிக்க மாட்டார்கள்.) அவர்கள், தங்களுடைய பெற்றோர்களாக இருந்த போதிலும், அல்லது தங்களுடைய சந்ததிகளாக இருந்தபோதிலும், அல்லது தங்களுடைய சகோதரர்களாக இருந்தபோதிலும், அல்லது தங்களுடைய நெருங்கிய உறவினர்களாக இருந்தபோதிலும், அவர்களுடன் நேசம் கொண்டு உறவாடுவதை நீங்கள் காண மாட்டீர்கள். இவர்களுடைய உள்ளங்களில் அல்லாஹ் நம்பிக்கையை பதிய வைத்துத் தன்னுடைய அருளைக் கொண்டும் இவர்களைப் பலப்படுத்தி வைத்திருக்கின்றான். தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளிலும் இவர்களைப் புகுத்தி விடுவான். அதில் என்றென்றும் இவர்கள் தங்கிவிடுவார்கள். இவர்களைப் பற்றி அல்லாஹ் திருப்தியடைவான். அவர்களும் அல்லாஹ்வைப் பற்றித் திருப்தியடைவார்கள். இவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர். நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர்தாம் வெற்றி அடைந்தவர்கள் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள். []58 ஸூரத்துல் முஜாதலா 22]
அல்லாஹ்வை வணங்க உனக்கு அவன் நேர்வழி காட்டுவானாக!
(மில்லத்தே ஹனீபிய்யா) (1) என்ற இப்றாஹீம் (அலை) அவர்களுடைய தூய்மையான மார்க்கம் என்பது, அல்லாஹ் ஒருவனை மட்டும் தூய்மையாக, கலங்கமற வணங்குவதாகும். (வணக்க வழிபாட்டில் எதையும் அல்லாஹ் அல்லாதவருக்கு செய்தல் கூடாது) இதையே அல்லாஹ் உலக மனிதர்கள் அனைவர்களுக்கும் கட்டளையிட்டுள்ளான். இதற்காகவே மனிதர்களையும் படைத்தான் என்பதை அறிந்து கொள்வது அவசியமாகும்.
இதுபற்றி அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்.
இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள ‘இறைவனை வணங்குவதற்காக’ என்பதின் பொருள் என்னவெனில், அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்கி, வணக்கத்தால் அவனை ஒருமைப் படுத்துவதாகும்.
"தவ்ஹீத்" என்னும் ஏக தெய்வக் கொள்கையே அல்லாஹ்வின் கட்டளைகளில் மிகப் பெரியதும் முக்கியமானதுமாகும். அதாவது, அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்கு தகுதியானவன், என்று வணக்கத்தால் அவனை ஒருமைப்படுத்துவதாகும். அல்லாஹ் விலக்கியவற்றில் மிகப் பெரியதென்னவெனில், ‘ஷிர்க்’ என்னும் இணை வைத்தலாகும். அதாவது அல்லாஹ்வுடன் அவன் அல்லாதவர்களை அழைத்து உதவி தேடுவதாகும்.
இதற்கு கீழ்காணும் இறைவசனம் ஆதாரமாகும்.
وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا ۖ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَىٰ وَالْيَتَامَىٰ وَالْمَسَاكِينِ وَالْجَارِ ذِي الْقُرْبَىٰ وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنْبِ وَابْنِ السَّبِيلِ وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ ۗ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُورًا
அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனுக்கு யாதொன்றையும் இணையாக்காதீர்கள். தாய், தந்தைக்கு நன்றி செய்யுங்கள். (அவ்வாறே) உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அந்நிய அண்டை வீட்டாருக்கும், (எப்பொழுதும்) உங்களுடன் இருக்கக் கூடிய நண்பர்களுக்கும், பயணிகளுக்கும், உங்களிடம் உள்ள அடிமைகளுக்கும், (அன்புடன் நன்றி செய்யுங்கள்.) எவன் கர்வம் கொண்டு பெருமையாக நடக்கின்றானோ; அவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை. [4 ஸூரத்துன்னிஸா:36]
மூன்று அடிப்படை விடயங்கள்
முதலாவது அடிப்படை விடயம்.
அல்லாஹ்வை அறிவதாகும்.
உன்னுடைய இறைவன் யார் என்று உன்னிடம் கேட்கப்பட்டால் நீ சொல்,
என்னையும் உலகத்திலுள்ள அனைவர்களையும் தனது அருட்கொடையால் வளர்த்து பரிபாலிப்பவனே, எனது இறைவன். அவன்தான் நான் வணங்குவதற்கு தகுதியானவன். நான் வணங்குவதற்கு தகுதியானவன் அவனைத்தவிர வேறு யாருமில்லை, என நீ பதில் கூறவேண்டும்.
இதற்கு ஆதாரம் பின்வரும் இறைவசனமாகும்.
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
எல்லாப் நன்றியும், புகழும் அல்லாஹ்வுக்கே! (அவன்தான்) அகிலத்தார் யாவரையும் படைத்து வளர்த்து தகுந்த பக்குவப்படுத்துபவன். [1 அல்ஃபாத்திஹா: 2]
அல்லாஹ்வைத்தவிர மற்ற படைப்பினங்கள் எல்லாவற்றிற்கும் சிருஷ்டி என்று சொல்லப்படும். அந்த சிருஷ்டிகளில் நானும் ஒருவன் என்று நீ கூறு.
உன்னுடைய இறைவனை நீ எப்படி அறிந்து கொண்டாய்? என உன்னிடம் கேட்கப்படும் போது பின் வருமாறு கூறவேண்டும்.
இறைவனின் அத்தாட்சிகளைக் கொண்டும், அவன் படைப்பினங்களை சிந்திப்பதன் மூலமும் அவனை அறிந்தேன். இரவும் பகலும் சூரியனும் சந்திரனும் அவன் அத்தாட்சிகளாகும். வானங்கள,; பூமி, பிரபஞ்சம் அனைத்தும் இறைவனால் படைக்கப்பட்டவைகளாகும். (எனவே இவைகளைப் படைத்தவனே என் இறைவன்).
இதற்கு ஆதாரம் கீழ் வரும் இறைவசனமாகும்.
وَمِنْ آيَاتِهِ اللَّيْلُ وَالنَّهَارُ وَالشَّمْسُ وَالْقَمَرُ ۚ لَا تَسْجُدُوا لِلشَّمْسِ وَلَا لِلْقَمَرِ وَاسْجُدُوا لِلَّهِ الَّذِي خَلَقَهُنَّ إِنْ كُنْتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ
"இரவும், பகலும், சூரியனும், சந்திரனும் (இறைவனை அறிவிப்பதற்குரிய) அத்தாட்சிகளாயிருக்கின்றன. ஆகவே, மெய்யாகவே நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குபவர்களாக இருந்தால் சூரியனுக்கும், (சிரம் பணியாதீர்கள்;) சந்திரனுக்கும் சிரம் பணியாதீர்கள். இவைகளை படைத்தவன் எவனோ அவனுக்கே சிரம் பணியுங்கள்" (என்றும் நபியே! நீங்கள் கூறுங்கள்.)
[41 ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா ( ஸூரத்து புஸ்ஸிலத்):37]
மேலும் இறை வசனம் கூறுவதாவது :
إِنَّ رَبَّكُمُ اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَىٰ عَلَى الْعَرْشِ يُغْشِي اللَّيْلَ النَّهَارَ يَطْلُبُهُ حَثِيثًا وَالشَّمْسَ وَالْقَمَرَ وَالنُّجُومَ مُسَخَّرَاتٍ بِأَمْرِهِ ۗ أَلَا لَهُ الْخَلْقُ وَالْأَمْرُ ۗ تَبَارَكَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ
நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்து அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான். அவனே இரவால் பகலை மூடுகிறான்; (பகலால் இரவை மூடுகிறான்.) அது வெகு தீவிரமாகவே அதனைப் பின் தொடர்கிறது. (அவனே) சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் (படைத்தான். இவை அனைத்தும்) அவனது கட்டளைக்கு உட்பட்டவைகளே. படைப்பினங்களும் (படைத்தலும்) அதன் ஆட்சியும் அவனுக்கு உரியதல்லவா? அனைத்து உலகங்களையும் படைத்து, வளர்த்து, பரிபக்குவப்படுத்தும் அல்லாஹ் மிக்க பாக்கியமுடையவன். [7 ஸூரத்துல் அஃராஃப் :54 ]
(உலகத்தாரையும் அதிலுள்ளவற்றையும்) இரட்சித்துப் பரிபாலிக்கக்கூடியவனே வணக்கத்திற்குத் தகுதியானவன்.
இதற்கு ஆதாரம் கீழ் காணும்இறைவசனமாகும்.
يَا أَيُّهَا النَّاسُ اعْبُدُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ وَالَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ فِرَاشًا وَالسَّمَاءَ بِنَاءً وَأَنْزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَكُمْ ۖ فَلَا تَجْعَلُوا لِلَّهِ أَنْدَادًا وَأَنْتُمْ تَعْلَمُونَ
மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தவர்களையும் படைத்த இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் இறை அச்சமுடையவர்களாக ஆகலாம்.
அவனே பூமியை நீங்கள் வசிக்கும் இடமாகவும், வானத்தை ஒரு முகடாகவும் அமைத்து, மேகத்திலிருந்து மழையைப் பொழிவித்து, அதனைக் கொண்டு (நீங்கள்) புசிக்கக்கூடிய கனி வர்க்கங்களையும் உங்களுக்கு வெளியாக்குகின்றான். ஆகவே (இவைகளையெல்லாம்) நீங்கள் தெளிவாக அறிந்துகொண்டே அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாக்காதீர்கள். [2 ஸூரத்துல் பகரா: 21-22]
இப்னு கதீர் (ரஹ்) அவர்கள கூறுகிறார்கள்,
மேற்கூறப்பட்ட இறைவசனத்தில் உள்ளவைகளைப் படைத்தவனே வணக்கத்திற்குத் தகுதியானவன். இஸ்லாம், ஈமான், இஹ்ஸான் எனும் (கருணை) இவைகள் அல்லாஹ்வால் கட்டளையிடப்பட்ட வணக்கங்களாகும். இந்த வணக்கங்களின் வகையைச் சார்ந்ததுதான் பிரார்த்தனை, பயம், ஆதரவு, பொறுப்புச் சாட்டல்,
ஆசை வைத்தல், பக்தி பூர்வமான பயம், உள்ளச்சம், பச்சாத்தாபம், உதவி தேடல், காவல்தேடல், குர்பானி கொடுத்தல் மற்றும் நேர்ச்சை,செய்தல் போன்றவைக ளும்,மேலும், இவை அல்லாத அல்லாஹ்வால் கட்டளையிடப்பட்ட வணக்க வகைகள் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானதாகும்.
இதற்கு ஆதாரம் கீழ் காணும் இறை வசனமாகும்.
وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا
நிச்சயமாக பள்ளிவாசல் (மஸ்ஜிது)களெல்லாம், அல்லாஹ்வை வணங்குவதற்காக உள்ளன. ஆகவே, (அவைகளில்) அல்லாஹ்வுடன் மற்றெவரையும் (பெயர் கூறி) அழைக்காதீர்கள். [72 ஸூரத்துல் ஜின்னு: 18]
மேல் கூறப்பட்ட வணக்க வழிபாடுகளின் வகைகளில் எதையேனும் அல்லாஹ் அல்லாதவர்களுக்கு செய்பவன் இறைவனுக்கு இணை வைத்தவனாக, காஃபிராக ஆகிவிடுகிறான்.
இதற்கு ஆதாரம் கீழ் காணும்இறைவசனமாகும்.
وَمَنْ يَدْعُ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ لَا بُرْهَانَ لَهُ بِهِ فَإِنَّمَا حِسَابُهُ عِنْدَ رَبِّهِ ۚ إِنَّهُ لَا يُفْلِحُ الْكَافِرُونَ
(நபியே!) எவன் அல்லாஹ்வுடன் வேறு இறைவனை (வணக்கத்திற்குரியவன் என) அழைக்கின்றானோ அவனிடத்தில் அதற்குரிய யாதொரு அத்தாட்சியும் இல்லை. அவனுடைய (பாவக்) கணக்கு அவனுடைய இறைவனிடத்தில்தான் (தீர்க்கப்படும்). நிச்சயமாக (உண்மையை) நிராகரிக்கும் இத்தகையவர் வெற்றி பெறமாட்டார்கள். [23 ஸூரத்துல் முஃமினூன்:117]
ஹதீஸில் வந்துள்ளதாவது,
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الدُّعَاءُ مُخُّ الْعِبَادَةِ "
அனஸ்(ரலி) அறிவிக்கிறார்கள்: 'துஆ என்பது வணக்கங்களின் மூளையாகும்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
[ திர்மிதி :3371 புலூகுல் மராம்:1578 (இது லயீஃப் ஹதீஸ்)]
மேலும் இறைவன் கூறும் ஆதாரமாவது ,
وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ ۚ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ
உங்கள் இறைவன் கூறுகின்றான்: "நீங்கள் (உங்களுக்கு வேண்டியவை அனைத்தையும்) என்னிடமே கேளுங்கள். நான் உங்களுடைய பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொள்வேன். எவர்கள் என்னை வணங்காது பெருமையடிக்கின்றனரோ, அவர்கள் நிச்சயமாக சிறுமைப்பட்டவர்களாக நரகம் புகுவார்கள். [40 ஸூரத்துல் முஃமின்/ஙாஃபிர் (ஈமான் கொண்டவர்/மன்னிப்பவன்):60 ]
பயம்
அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும். (அஞ்சவேண்டும்) என்பதற்கு கீழ் காணும் இறை வசனம் ஆதாரமாகும்.فَلَا تَخَافُوهُمْ وَخَافُونِ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ
நீங்கள் உண்மை நம்பிக்கையாளர்களாக இருந்தால் அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; எனக்கே பயப்படுங்கள். [3 ஸூரத்துல்ஆல இம்ரான்:175]
ஆதரவு வைத்தல்..
அல்லாஹ் ஒருவனிடமே ஆதரவு வைக்க வேண்டும் என்பதற்கு ஆதாரம் கீழ்காணும் இறைவசனமாகும்.فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا
எவர் தன் இறைவனைச் சந்திக்க விரும்புகிறாரோ அவர் நற்செயல்களைச் செய்து தன் இறைவனுக்கு ஒருவரையும் இணையாக்காது (அவனையே) வணங்கி வருவாராக!" [18 ஸூரத்துல் கஹ்ஃபு: 110]
பாரம் சாட்டல்..
அல்லாஹ் ஒருவனிடமே நம் காரியங்களை பாரம் சாட்ட வேண்டும் என்பதற்கு ஆதாரம் கீழ் காணும் இறை வசனமாகும்.وَعَلَى اللَّهِ فَتَوَكَّلُوا إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ
நீங்கள் (உண்மை) நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வையே நம்புங்கள் [5 ஸூரத்துல் மாயிதா : 23]
மேலும் கூறுகிறான்..
وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ ۚ
எவர்கள் அல்லாஹ்வை முற்றிலும் நம்புகின்றார்களோ, அவர்களுக்கு அவனே (முற்றிலும்) போதுமானவன் [ 65 ஸூரத்துத் தலாஃக் : 3]
ஆசை வைத்தல்,பக்திபூர்வமான பயம், உள்ளச்சம்.
இவைகள் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே செய்ய வேண்டும் என்பதற்கு ஆதாரம் கீழ் காணும் இறை வசனமாகும்.إِنَّهُمْ كَانُوا يُسَارِعُونَ فِي الْخَيْرَاتِ وَيَدْعُونَنَا رَغَبًا وَرَهَبًا ۖ وَكَانُوا لَنَا خَاشِعِينَ
....நிச்சயமாக இவர்கள் அனைவரும் நன்மையான காரியங்களைச் செய்வதில் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டிருந்தார்கள். (நம்முடைய அருளை) விரும்பியும் (நம்முடைய தண்டனையைப்) பயந்தும் நம்மிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். இவர்கள் அனைவரும் நம்மிடம் மிக்க உள்ளச்சமுடையவர்களாகவும் இருந்தார்கள். [ 21 ஸூரத்துல் அன்பியா : 90]
உள்ளச்சம்.
فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِيஅவர்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டாம். எனக்கே நீங்கள் பயப்படுங்கள். [ 2 ஸூரத்துல் பகரா : 150]
திரும்புதல்/மீளுதல்
திரும்புதல் அல்லாஹ் ஒருவனிடமே செய்ய வேண்டும் என்பதற்கு ஆதாரம் கீழ் காணும் இறை வசனமாகும்.وَأَنِيبُوا إِلَىٰ رَبِّكُمْ وَأَسْلِمُوا لَهُ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَكُمُ الْعَذَابُ ثُمَّ لَا تُنْصَرُونَ
ஆகவே, (மனிதர்களே!) உங்களை வேதனை வந்தடைவ தற்கு முன்னதாகவே, நீங்கள் உங்கள் இறைவன் பக்கம் திரும்பி, அவனுக்கு முற்றிலும் வழிபட்டு நடங்கள். (வேதனை வந்து விட்டாலோ,) பின்னர் (ஒருவராலும்) நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள். [ 39 ஸூரத்துஜ்ஜுமர் : 54]
உதவி தேடல்
அல்லாஹ் ஒருவனிடமே உதவி தேட வேண்டும் என்பதற்கு ஆதாரம் கீழ் காணும் இறைவசனமாகும்.إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
(அல்லாஹ்வே!) நாங்கள் உன்னையே வணங்குகிறோம்; உன்னிடமே உதவி தேடுகிறோம். [ 1 அல்ஃபாத்திஹா : 5]
ஹதீஸில் வந்துள்ளதாவது, நீ உதவி தேடும் போது அல்லாஹ் ஓருவனிடமே உதவி தேடு.
பாதுகாவல் தேடுதல்
அல்லாஹ் ஒருவனைக்கொண்டே காவல் தேட வேண்டும் என்பதற்கு ஆதாரம் கீழ் காணும் இறை வசனமாகும்.قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ مَلِكِ النَّاسِ
(நபியே! பிரார்த்தனை செய்து) நீங்கள் கூறுங்கள்: மனிதர்களை படைத்து வளர்த்து காக்கும் இறைவனிடம் நான் பாதுகாப்பைக் கோருகின்றேன். (அவன்தான்) மனிதர்களின் (உண்மையான) அரசன். [ 114 ஸூரத்துந் நாஸ் : 1-2]
அபயம் தேடல்
அல்லாஹ் ஒருவனிடமே அபயம் தேட வேண்டும்; என்பதற்கு ஆதாரம் கீழ் காணும் இறை வசனமாகும்.إِذْ تَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ أَنِّي مُمِدُّكُمْ بِأَلْفٍ مِنَ الْمَلَائِكَةِ مُرْدِفِينَ
(உங்களை) பாதுகாக்குமாறு நீங்கள் உங்கள் இறைவனிடம் கோரியபோது "அணியணியாக உங்களைப் பின்பற்றி வரக்கூடிய ஆயிரம் மலக்குகளைக் கொண்டு நிச்சயமாக நான் உங்களுக்கு உதவி செய்வேன்" என்று அவன் உங்களுக்குப் பதிலளித்தான். [ 8 ஸூரத்துல் அன்ஃபால் : 9]
குர்பானி (அறுத்துப்பலியிடல்)
அல்லாஹ் ஒருவனுக்கே அறுத்து குர்பானி கொடுக்க வேண்டும் என்பதற்கு ஆதாரம் கீழ் காணும் இறை வசனமாகும்.قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لَا شَرِيكَ لَهُ ۖ وَبِذَٰلِكَ أُمِرْتُ وَأَنَا أَوَّلُ الْمُسْلِمِينَ
(அன்றி,) நீங்கள் கூறுங்கள்: "நிச்சயமாக என்னுடைய தொழுகையும், என்னுடைய (மற்ற) வணக்கங்களும், என் வாழ்வும், என் மரணமும் உலகத்தாரை படைத்து வளர்த்து பரிபக்குவப்படுத்தும் அல்லாஹ்வுக்கே உரித்தானவை. அவனுக்கு யாதொரு இணையுமில்லை; (துணையுமில்லை.) இவ்வாறே நான் ஏவப்பட்டுள்ளேன். ஆகவே, அவனுக்கு வழிப்பட்டவர்களில் நான் முதன்மையானவன்" (என்றும் கூறுங்கள்.) [ 6 ஸூரத்துல் அன்ஆம் : 162-163]
ஹதீஸிலிருந்து ஆதாரம்
وَلَعَنَ اللَّهُ مَنْ ذَبَحَ لِغَيْرِ اللَّهِ
"அல்லாஹ் அல்லாதவர்களுக்கு அறுத்துப் பலியிடுபவனை (குர்பானி கொடுப்பவனை) அல்லாஹ் சபிக்கின்றான்", என பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.[ஸுனன் நஸயீ : 4422]
நேர்ச்சை
அல்லாஹ் ஒருவனுக்கே நேர்ச்சை செய்ய வேண்டும் என்பதற்கு ஆதாரம் கீழ் காணும் இறைவசனமாகும்.يُوفُونَ بِالنَّذْرِ وَيَخَافُونَ يَوْمًا كَانَ شَرُّهُ مُسْتَطِيرًا
இவர்கள் (தங்கள்) நேர்ச்சைகளையும் நிறைவேற்றுவார்கள். நீண்ட வேதனையுடைய (மறுமை) நாளை பயந்துகொள்வார்கள். [ 76 ஸூரத்துத் தஹ்ர்/அல்-இன்ஸான் (காலம்/மனிதன்) : 7]
இரண்டாவது அடிப்படை விடயம்.
இஸ்லாமிய மார்க்கத்தை ஆதாரங்கள் மூலம் அறிந்து கொள்வது.அதாவது ஏக தெய்வ கொள்கையை நம்பி அல்லாஹ்விற்கு சிரம் சாய்ப்பது, மேலும் அவன் கட்டளைகளுக்கு வழிப்பட்டு, இணைவைப்பையும் இணைவைப்பவர்களையும் விட்டு விலகிக் கொள்வது.
இவ்வாறு அறிவது மூன்று பிரிவுகளாகும்.
- இஸ்லாம்.
- ஈமான்.
- இஹ்ஸான். (கருணை)
முதல் பிரிவு (நிலை)....இஸ்லாம்.
இஸ்லாத்தின் தூண்கள், அடிப்படைக் கடமைகள் ஐந்து.- வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத்;தவிர வேறு யாருமில்லை .அவன் திருத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களாகும். என நம்பி சாட்சி சொல்வது (சான்று பகர்வது).
- தொழுகையை சரிவர நிலைநாட்டுவது.
- ஸகாத் கொடுப்பது.
- ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பது.
- கஃபதுல்லாவிற்கு சென்று ஹஜ் செய்வது.
திருக்கலிமாவை மொழிந்து நம்புவது இஸ்லாமிய கடமைகளில் ஒன்று என்பதற்கு ஆதாரம் கீழ் காணும் இறை வசனமாகும்.
شَهِدَ اللَّهُ أَنَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ وَالْمَلَائِكَةُ وَأُولُو الْعِلْمِ قَائِمًا بِالْقِسْطِ ۚ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْعَزِيزُ الْحَكِيمُ(நபியே! நீதவானாகிய) அல்லாஹ் சாட்சி கூறுகின்றான்: "நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் வேறு யாரும் (இல்லவே) இல்லை." அவ்வாறே மலக்குகளும் (வேதத்தை ஆராய்ந்த) கல்வியாளர்களும் சாட்சி கூறுகின்றனர்; (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடைய வனுமான அவனையன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. [ 3 ஸூரத்துல்ஆல இம்ரான் : 18]
இந்த திரு வசனத்தின் விளக்கம் என்னவெனில் உண்மையாக வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை என நம்பி அல்லாஹ்வைத்தவிர வணங்கப்படும் போலி தெய்வங்கள் அனைத்தும் வணக்கத்திற்கு தகுதியற்றவை அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்கு தகுதியானவன், அவனது வணக்கத்திலும் அவன் ஆட்சியிலும் அவனுக்கு இணை யாருமில்லை என்ற உறுதிப்பாட்டை எடுத்துக் கொள்வதாகும்.
இந்த வசனத்தை கீழ் காணும் வசனம் விளக்குகிறது.
وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ وَقَوْمِهِ إِنَّنِي بَرَاءٌ مِمَّا تَعْبُدُونَ :إِلَّا الَّذِي فَطَرَنِي فَإِنَّهُ سَيَهْدِينِ : وَجَعَلَهَا كَلِمَةً بَاقِيَةً فِي عَقِبِهِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ
இப்ராஹீம் தன்னுடைய தந்தையையும், மக்களையும் நோக்கிக் கூறியதை நினைத்துப் பாருங்கள். "நிச்சயமாக நான் நீங்கள் வணங்கும் தெய்வங்களை விட்டும் விலகிக்கொண்டேன்.எவன் என்னை படைத்தானோ (அவனையே நான் வணங்குவேன்.) நிச்சயமாக அவனே எனக்கு நேரான வழியை அறிவிப்பான்" (என்றும் கூறினார்).ஆகவே, (அவருடைய சந்ததிகளாகிய இந்த அரபிகளும் நம்மிடமே) வரும் பொருட்டு, அவர் தன்னுடைய சந்ததிகளில் இக் கொள்கையை நிலையான வாக்குறுதியாக அமைத்தார். [ 43 ஸூரத்துஜ் ஜுக்ருஃப் : 26-28]
மேலும் அல்லாஹ்வுடைய திருவசனமாவது...
قُلْ يَا أَهْلَ الْكِتَابِ تَعَالَوْا إِلَىٰ كَلِمَةٍ سَوَاءٍ بَيْنَنَا وَبَيْنَكُمْ أَلَّا نَعْبُدَ إِلَّا اللَّهَ وَلَا نُشْرِكَ بِهِ شَيْئًا وَلَا يَتَّخِذَ بَعْضُنَا بَعْضًا أَرْبَابًا مِنْ دُونِ اللَّهِ ۚ فَإِنْ تَوَلَّوْا فَقُولُوا اشْهَدُوا بِأَنَّا مُسْلِمُونَ
(நபியே! பின்னும் அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "வேதத்தை உடையவர்களே! நமக்கும் உங்களுக்கும் ஒரு சமத்துவமான விஷயத்தின் பக்கம் வருவீர்களாக! (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறொன்றையும் வணங்க மாட்டோம். நாம் அவனுக்கு யாதொன்றையும் இணையாக்க மாட்டோம். நம்மில் ஒருவரும் அல்லாஹ்வையன்றி எவரையும் இறைவனாக எடுத்துக் கொள்ள மாட்டோம்" (என்று கூறுங்கள். நம்பிக்கையாளர்களே! இதனையும்) அவர்கள் புறக்கணித்தால் (அவர்களை நோக்கி) "நிச்சயமாக நாங்கள் (அவன் ஒருவனுக்கே) வழிப்பட்டவர்கள் என்று நீங்கள் சாட்சி கூறுங்கள்!" என்று நீங்கள் கூறிவிடுங்கள். [ 3 ஸூரத்துல்ஆல இம்ரான் : 64]
முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் என்பதற்கு கீழ் காணும் இறை வசனம் ஆதாரமாகும்.
لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رَحِيمٌ(நம்பிக்கையாளர்களே! நம்முடைய) ஒரு தூதர் நிச்சயமாக உங்களிடம் வந்திருக்கின்றார்; அவர் உங்களிலுள்ளவர்தான். (உங்களுக்கு யாதொரு துன்பம் ஏற்பட்டு) நீங்கள் கஷ்டத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தமாகவே இருக்கும். (அவ்வளவு தூரம் உங்கள் மீது அன்புடையவர்.) அன்றி உங்களுடைய நன்மையையே பெரிதும் விரும்புகின்றவராகவும், நம்பிக்கையாளர்(களாகிய உங்)கள் மீது மிக்க கருணையும் அன்பும் உடையவராகவும் இருக்கின்றார். [ 9 ஸூரத்துத் தவ்பா : 128]
பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதராகும் என சாட்சி கூற வேண்டும் என்பதன் பொருள்,அவர்கள் ஏவிய கட்டளைகளுக்கு வழிப்பட்டு ,அவர்கள் அறிவித்தவைகளை மெய்ப்படுத்தி, அவர்கள் விலக்கி வெறுத்தவைகளை விட்டும் ஒதுங்கி, அவர்கள் காண்பித்துத் தந்தது போன்று அல்லாஹ்வை வணங்குவதாகும். (வணக்க வழிபாடுகளில் அவர்கள் காண்பித்துத்தந்த வழி முறைகளை விட்டு மனம் போன போக்கில் செயல் படுவது கூடாது).
தொழுகை, ஸகாத் இவைகளுக்கு ஆதாரமாகவும், ஏக தெய்வக்கொள்கையின் விளக்கமாகவும் கீழ் காணும் இறைவசனம் அமைந்துள்ளது.
وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ وَيُقِيمُوا الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ ۚ وَذَٰلِكَ دِينُ الْقَيِّمَةِஇறைவனுடைய கலப்பற்ற மார்க்கத்தையே பின்பற்றி, (மற்ற மார்க்கங்களைப்) புறக்கணித்து, அல்லாஹ் ஒருவனையே வணங்கி, தொழுகையையும் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருமாறே அன்றி, (வேறெதுவும் இத்தூதர் மூலம்) ஏவப்படவில்லை. (இது, அவர்களுடைய வேதத்திலும் ஏவப்பட்ட விஷயம்தான்.) இதுதான் நிலையான சட்டங்களுடைய மார்க்கம்.[ 98 ஸூரத்துல் பய்யினா : 5]
நோன்பு கடமை என்பதற்கு கீழ் காணும் இறை வசனம் ஆதாரமாகும்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَநம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. (அதனால்) நீங்கள் இறை அச்சமுடைய வர்களாக ஆகலாம். [ 2 ஸூரத்துல் பகரா : 183]
இரண்டாவது நிலை...ஈமான்.
ஈமான் எழுபது சொச்சம் பிரிவுகளாக பிரிகின்றது. அதில் உயர்ந்தது லாயிலா: இல்லல்லாஹ் என்ற திருக்கலிமாவாகும்.அதில் தாழ்ந்தது பாதையில் மனிதர்களுக்கு தொல்லை கொடுக்கும் பொருட்களை அப்புறப் படுத்துவதாகும்.மேலும் வெட்கம் என்பது ஈமானின் பிரிவுகளில் ஒன்றாகும்.
ஈமானின் கடமைகள் ஆறு...
- அல்லாஹ்வை நம்புவது.
- மலாயிக்காமார்களை நம்புவது.
- அல்லாஹ் இறக்கிய வேதங்களை நம்புவது.
- அல்லாஹ்வின் தூதர்களை நம்புவது.
- மறுமை நாளை நம்புவது.
- நன்மையும், தீமையும் கத்ர் என்னும் விதியை பொறுத்தேயாகும் என நம்புவது.
لَيْسَ الْبِرَّ أَنْ تُوَلُّوا وُجُوهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَلَٰكِنَّ الْبِرَّ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَالْمَلَائِكَةِ وَالْكِتَابِ وَالنَّبِيِّينَ وَآتَى الْمَالَ عَلَىٰ حُبِّهِ ذَوِي الْقُرْبَىٰ وَالْيَتَامَىٰ وَالْمَسَاكِينَ وَابْنَ السَّبِيلِ وَالسَّائِلِينَ وَفِي الرِّقَابِ وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ وَالْمُوفُونَ بِعَهْدِهِمْ إِذَا عَاهَدُوا ۖ وَالصَّابِرِينَ فِي الْبَأْسَاءِ وَالضَّرَّاءِ وَحِينَ الْبَأْسِ ۗ أُولَٰئِكَ الَّذِينَ صَدَقُوا ۖ وَأُولَٰئِكَ هُمُ الْمُتَّقُونَ
மேற்கிலோ கிழக்கிலோ உங்கள் முகங்களை நீங்கள் திருப்பி விடுவதனால் மட்டும் நன்மை செய்தவர்களாக ஆகிவிடமாட்டீர்கள். (உங்களில்) எவர் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் (மறுமை நாளையும்), மலக்குகளையும், வேதங்களையும், நபிமார்களையும், நிச்சயமாக நம்பிக்கை கொண்டு (தனக்கு விருப்பமுள்ள) பொருளை அல்லாஹ்வுக்காக உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசகர்களுக்கும், விடுதலையை விரும்பிய (அடிமைகள், கடன்காரர்கள் ஆகிய) வர்களுக்கும் கொடுத்து (உதவி செய்து,) தொழுகையையும் கடைப்பிடித்து தொழுது, ஜகாத்து (மார்க்க வரியு)ம் கொடுத்து வருகின்றாரோ அவரும்; வாக்குறுதி செய்த சமயத்தில் தங்களுடைய வாக்குறுதியை(ச் சரிவர) நிறைவேற்றுபவர்களும்; கடினமான வறுமையிலும், நோய் நொடிகளிலும், கடுமையான போர் நேரத்திலும் பொறுமையைக் கைக்கொண்டவர்களும் ஆகிய (இவர்கள்தாம் நல்லோர்கள்.) இவர்கள்தாம் (அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதில்) உண்மையானவர்கள். இவர்கள்தாம் இறை அச்சமுடையவர்கள்! [ 2 ஸூரத்துல் பகரா : 177]
விதியை நம்புவதற்கு ஆதாரம் கீழ் காணும் இறை வசனமாகும்
إِنَّا كُلَّ شَيْءٍ خَلَقْنَاهُ بِقَدَرٍ
நிச்சயமாக நாம் ஒவ்வொரு பொருளையும் குறிப்பான திட்டப்படியே படைத்திருக்கின்றோம். [ 54 ஸூரத்துல் கமர் : 49]
மூன்றாவது நிலை ...இஹ்ஸான் , நன்றியுடன் வணங்குதல்.
இஹ்ஸான் என்பது நீ அல்லாஹ்வைக் காண்கின்றாய் என நினைத்து அவனை வணங்குவது. அவ்வாறு நீ அவனைக்காண முடியாவிட்டாலும் அவன் உன்னைக்கண்டு கொண்டிருக்கிறான் என்பதை உள்ளத்தில் கொண்டு அவனை வணங்குவதாகும்.இஹ்ஸான் (என்பது ஒவ்வொருவர் மீதும்) கடமையாகும் என்பதற்கு ஆதாரம் கீழ் காணும் இறைவசனமாகும்.
إِنَّ اللَّهَ مَعَ الَّذِينَ اتَّقَوْا وَالَّذِينَ هُمْ مُحْسِنُونَ
நிச்சயமாக எவர்கள் மெய்யாகவே இறை அச்சமுடையவர்களாக இருக்கின்றார்களோ அவர்களுடனும், எவர்கள் நன்மை செய்கின்றார்களோ அவர்களுடனும் தான் அல்லாஹ் இருக்கின்றான். [ 16 ஸூரத்துந் நஹ்ல் : 128]
மேலும் அல்லாஹ்வுடைய வசனமாவது ...
وَتَوَكَّلْ عَلَى الْعَزِيزِ الرَّحِيمِ : الَّذِي يَرَاكَ حِينَ تَقُومُ : وَتَقَلُّبَكَ فِي السَّاجِدِينَ : إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ
நிகரற்ற அன்புடையவனான, அனைவரையும் மிகைத்தவன் மீது (உங்களுடைய காரியங்களை) பொறுப்பை ஒப்படைத்து விடுங்கள். நீங்கள் நின்று வணங்கும்போதும் அவன் உங்களை பார்க்கின்றான். சிரம் பணிந்து வணங்கக்கூடியவர்களுடன் சேர்ந்து நீங்கள் அசைவதையும் அவன் பார்க்கின்றான். நிச்சயமாக அவன் அனைத்தையும் செவியுறுபவனும் நன்கு அறிபவனாகவும் இருக்கிறான். [ 26 ஸூரத்துஷ் ஷுஃரா : 217-220]
وَمَا تَكُونُ فِي شَأْنٍ وَمَا تَتْلُو مِنْهُ مِنْ قُرْآنٍ وَلَا تَعْمَلُونَ مِنْ عَمَلٍ إِلَّا كُنَّا عَلَيْكُمْ شُهُودًا إِذْ تُفِيضُونَ فِيهِ ۚ
நீங்கள் என்ன நிலைமையில் இருந்தபோதிலும், குர்ஆனிலிருந்து நீங்கள் எ(ந்த வசனத்)தை ஓதியபோதிலும், (உங்களுடைய காரியங்களில்) நீங்கள் எதைச் செய்தபோதிலும், நீங்கள் அவற்றில் ஈடுபட்டிருக்கும்போதே உங்களை நாம் கவனிக்காமல் இருப்பதில்லை. [ 10 ஸூரத்து யூனுஸ் : 61]
ஹதீஸிலிருந்து ஆதாரம் கீழ் காணும் ஜிப்ரீல் (அலை) அவர்களுடைய பிரபல்யமான ஹதீஸாகும்
عَنْ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ أَيْضًا قَالَ: " بَيْنَمَا نَحْنُ جُلُوسٌ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه و سلم ذَاتَ يَوْمٍ، إذْ طَلَعَ عَلَيْنَا رَجُلٌ شَدِيدُ بَيَاضِ الثِّيَابِ، شَدِيدُ سَوَادِ الشَّعْرِ، لَا يُرَى عَلَيْهِ أَثَرُ السَّفَرِ، وَلَا يَعْرِفُهُ مِنَّا أَحَدٌ. حَتَّى جَلَسَ إلَى النَّبِيِّ صلى الله عليه و سلم . فَأَسْنَدَ رُكْبَتَيْهِ إلَى رُكْبَتَيْهِ، وَوَضَعَ كَفَّيْهِ عَلَى فَخِذَيْهِ،
وَقَالَ: يَا مُحَمَّدُ أَخْبِرْنِي عَنْ الْإِسْلَامِ.
فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه و سلم الْإِسْلَامُ أَنْ تَشْهَدَ أَنْ لَا إلَهَ إلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَتُقِيمَ الصَّلَاةَ، وَتُؤْتِيَ الزَّكَاةَ، وَتَصُومَ رَمَضَانَ، وَتَحُجَّ الْبَيْتَ إنْ اسْتَطَعْت إلَيْهِ سَبِيلًا.
قَالَ: صَدَقْت . فَعَجِبْنَا لَهُ يَسْأَلُهُ وَيُصَدِّقُهُ!
قَالَ: فَأَخْبِرْنِي عَنْ الْإِيمَانِ.
قَالَ: أَنْ تُؤْمِنَ بِاَللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِ، وَتُؤْمِنَ بِالْقَدَرِ خَيْرِهِ وَشَرِّهِ.
قَالَ: صَدَقْت. قَالَ: فَأَخْبِرْنِي عَنْ الْإِحْسَانِ.
قَالَ: أَنْ تَعْبُدَ اللَّهَ كَأَنَّك تَرَاهُ، فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَرَاك.
قَالَ: فَأَخْبِرْنِي عَنْ السَّاعَةِ. قَالَ: مَا الْمَسْئُولُ عَنْهَا بِأَعْلَمَ مِنْ السَّائِلِ.
قَالَ: فَأَخْبِرْنِي عَنْ أَمَارَاتِهَا؟ قَالَ: أَنْ تَلِدَ الْأَمَةُ رَبَّتَهَا، وَأَنْ تَرَى الْحُفَاةَ الْعُرَاةَ الْعَالَةَ رِعَاءَ الشَّاءِ يَتَطَاوَلُونَ فِي الْبُنْيَانِ. ثُمَّ انْطَلَقَ، فَلَبِثْتُ مَلِيًّا،
ثُمَّ قَالَ: يَا عُمَرُ أَتَدْرِي مَنْ السَّائِلُ؟.
قُلْتُ: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ.
قَالَ: فَإِنَّهُ جِبرِيلُ أَتَاكُمْ يُعَلِّمُكُمْ دِينَكُمْ ". [رَوَاهُ مُسْلِمٌ]
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: என் தந்தை உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்: நாங்கள் ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அருகில் இருந்தபோது தூய வெண்ணிற ஆடை அணிந்த, அடர் கறுப்பு நிறத்தில் தலைமுடி உடைய ஒரு மனிதர் வந்தார். பயணத்தில் வந்த எந்த அடையாளமும் அவரிடம் காணப்படவில்லை;எங்களில் எவருக்கும் அவரை (யார் என)த் தெரிய வில்லை. அவர் நபி (ஸல்) அவர்களின் அருகில் (சென்று), தம் முழங்கால்களை நபியவர்களின் முழங்கால்களோடு இணைத்துக்கொண்டு (நெருக்கமாக) அமர்ந்தார். அவர் தம் கைகளைத் தம் தொடைகள்மீது வைத்(து பவ்வியமாக அமர்ந்)தார். பிறகு முஹம்மதே! இஸ்லாம் (அடிபணிதல்) என்றால் என்னவென்று எனக்குத் தெரிவியுங்கள்" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இஸ்லாம் என்பது, அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் (ஆகிய நான்) அல்லாஹ்வின் தூதர் என்றும் நீங்கள் உறுதி கூறுவதாகும். மேலும்,தொழுகையைக் கடைப்பிடிப்பதும், ஸகாத்தை வழங்கிவருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும், சென்றுவர இயன்றால் இறையில்லம் கஅபாவில் ஹஜ்" செய்வதும் ஆகும்" என்று பதிலளித்தார்கள். அதற்கு அந்த மனிதர் உண்மைதான்" என்றார். அவர் இவ்வாறு கூறியதைக் கேட்டு, அவரே கேள்வியும் கேட்டுவிட்டு அவரே நபி (ஸல்) அவர்கள் அளித்த பதிலை உறுதிப்படுத்தவும் செய்கிறாரே என்று நாங்கள் வியப்படைந்தோம். அடுத்து அவர், ஈமான் (இறைநம்பிக்கை) பற்றி எனக்குத் தெரிவியுங்கள்" என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும் இறுதி நாளையும் நீங்கள் நம்புவதாகும்; நன்மை, தீமை அனைத்தும் விதியின்படியே நடக்கின்றன என்றும் நீங்கள் நம்புவதுமாகும்" என்று கூறினார்கள். அதற்கும் அம்மனிதர் உண்மைதான்" என்றார். அடுத்து அம்மனிதர்,இஹ்சான் (அழகிய முறையில் செயலாற்றல்) பற்றி எனக்குத் தெரிவியுங்கள்" என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,(இஹ்சான் என்பது,) அல்லாஹ்வை நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்ற உணர்வுடன் வழிபடுவதாகும். ஏனெனில், அவனை நீங்கள் பார்க்கவில்லை என்றாலும், அவன் உங்களைப் பார்க்கின்றான்" என்று பதிலளித்தார்கள். அம்மனிதர்,மறுமை (உலக அழிவு) நாளைப் பற்றி (அது எப்போது வரும் என) எனக்குத் தெரிவியுங்கள்" என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், கேள்வி கேட்கப்படுபவர் (அதாவது நான்), கேட்பவரைவிட (அதாவது உங்களைவிட) அதிகம் அறிந்தவர் அல்லர். (இது பற்றி எனக்கும் தெரியாது; உங்களுக்கும் தெரியாது.)" என்று கூறினார்கள். அம்மனிதர்,மறுமை நாளின் அடையாளங்களைப் பற்றி எனக்குத் தெரிவியுங்கள்!" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,ஓர் அடிமைப் பெண் தன் எசமானியைப் பெற்றெடுப்பதும், காலில் செருப்பில்லாத, அரைகுறை ஆடைகளை அணிந்துள்ள ஏழைகளான ஆட்டு இடையர்கள் போட்டி போட்டுக்கொண்டு உயரமான கட்டடங்கள் கட்டுவதை நீங்கள் காண்பதும் ஆகும்" என்று கூறினார்கள். பிறகு அம்மனிதர் சென்றுவிட்டார். நீண்ட நேரம் நான் (அங்கேயே) இருந்தேன். பின்னர் என்னிடம் நபி (ஸல்) அவர்கள்,உமரே! கேள்வி கேட்ட அந்த நபர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள். நான், அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்" என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், அவர்தாம் (வானவர்) ஜிப்ரீல். உங்களுக்கு உங்களது மார்க்கத்தைக் கற்றுத் தருவதற்காக உங்களிடம் அவர் வந்தார்" என்று சொன்னார்கள்.
மூன்றாவது அடிப்படை விடயம்.
அல்லாஹ்வின் நபி முஹம்மது (ஸல்) அவர்களைப் பற்றி தெரிந்து கொள்வதாகும்.
முஹம்மது (ஸல்) அவர்கள் தந்தை பெயர் அப்துல்லாஹ். இவர் தந்தை பெயர் அப்துல் முத்தலிப். இவர் தந்தை பெயர் ஹாஷிமாகும். ஹாஷிம் என்பவர் குறைஷி வம்சத்தைச் சார்ந்தவர். குறைஷிகள் அறபிகளாவர். அறபியர்கள், நபி இப்றாஹீம்(அலை) அவர்களின் மகனான, நபி இஸ்மாயீல் (அலை) அவர்களின் சந்ததிகளாவர்.
முஹம்மது (ஸல்) அவர்கள் 63 ஆண்டுகள் உலகத்தில் வாழ்ந்தார்கள். நாற்பது வருடங்கள் நபித்துவத்திற்கு முன்னும், நபியான பின் 23 வருடங்களும் வாழ்ந்தார்கள்.
ஹிறா குகையில் தன் நாற்பதாவது வயதில் (இக்ரஃ) என்ற அத்தியாயம் இறங்கிய போது (றசூலாக) தூதராக ஆனார்கள். அவர்கள் ஊர் மக்காவாகும்.
ஷிர்க்கைவிட்டும் மக்களை எச்சரித்து, ஏக தெய்வக் கொள்கையின் பால் அழைப்பதற்காக அல்லாஹ் அவர்களை நபியாகவும் றசூலாகவும் அனுப்பினான்
இதற்கு ஆதாரம் கீழ் காணும் இறை வசனமாகும்.
يَا أَيُّهَا الْمُدَّثِّرُ
:قُمْ فَأَنْذِرْ
:وَرَبَّكَ فَكَبِّرْ
:وَثِيَابَكَ فَطَهِّرْ
: وَالرُّجْزَ فَاهْجُرْ
: وَلَا تَمْنُنْ تَسْتَكْثِرُ
: وَلِرَبِّكَ فَاصْبِرْ
(வஹ்யின் அதிர்ச்சியால்) போர்வை போர்த்திக் கொண்டிருக்கும் (நபியே!) நீங்கள் எழுந்து நின்று (மனிதர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள்; உங்கள் இறைவனைப் பெருமைப்படுத்துங்கள்;
உங்களது ஆடையைப் பரிசுத்தமாக்கி வைத்துக் கொள்ளுங்கள். அசுத்தங்களை வெறுத்து விடுங்கள். (பிறருக்குக் கொடுப்பதையும் விட அவர்களிடமிருந்து) அதிகமாகப் பெறும் (நோக்கோடு) உபகாரம் செய்யாதீர். இன்னும், உம் இறைவனுக்காகப் பொறுமையுடன் இருப்பீராக. [ 74 ஸூரத்துல் முத்தஸ்ஸிர் : 1-7]
'எழுந்து எச்சரிக்கை செய்யும்' என்ற திரு வசனத்தின் கருத்து என்னவெனில் ஷிர்க்கை விட்டு மக்களை எச்சரித்து, வணக்கம் அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தம் என்ற ஏக தெய்வக்கொள்கையின் பால் மக்களை அழைப்பதாகும்.
'உமதிறைவனைப் பெருமைப்படுத்தும்' என்பதன் பொருள் ஓரிரைக் கொள்கையால் அவனை கண்ணியப்படுத்தும் என்பதாகும்.
'உமது ஆடைகளை தூய்மைப்படுத்தும்' என்பதன் பொருள் உமது அமல்களை ஷிர்க்கை விட்டும் தூய்மைப்படுத்தும் என்பதாகும்.
(ரிஜ்ஸ்) என்பதன் பொருள் சிலைகள், விக்கிரகங்கள் என்பதாகும். அதாவது சிலைகளையும், அதை வணங்குகின்றவர்களையும் விட்டு விலகிக் கொள்வதாகும்.
இவ்வாறு பத்து வருடங்கள் மக்களை தவ்ஹீதின்பால் அழைத்தார்கள்.
நபித்துவம் கிடைத்து பத்து வருடங்களுக்குப் பின் மிஃறாஜ் எனும் இறை தரிசிப்பிற்காக வானுலகம் சென்றார்கள். அங்கே ஐங்காலத் தொழுகை கடமையாக்கப்பட்டது,தொழுகைகடமையாக்கப்பட்ட
பின் மூன்றாண்டுகள் மக்காவில் தொழுதார்கள்.
நபித்துவம் கிடைத்துப் பதிமூன்று ஆண்டுகள் கழிந்த பின் மதீனாவிற்கு ஹிஜ்றத் செல்வதற்கு கட்டளையிடப் பட்டார்கள்.
ஹிஜ்றத் என்பது ஷிர்க் எனும் அல்லாஹ்விற்கு இணைவைப்பு நிலவி வரும் நாட்டை விட்டு இஸ்லாமிய நாட்டிற்கு மாறிச்செல்வதாகும்.
இவ்வாறு ஹிஜ்றத் செய்வது இந்த பெருமானார் (ஸல்) உம்மத்தார் மீது கடமையாகும். இது யுக முடிவு நாள்வரை நடந்து வர வேண்டிய ஒன்றாகும்.
ஹிஜ்றத் செய்வது கடமை என்பதற்கு ஆதாரம் கீழ் காணும் இறைவசனமாகும்.
إِنَّ الَّذِينَ تَوَفَّاهُمُ الْمَلَائِكَةُ ظَالِمِي أَنْفُسِهِمْ قَالُوا فِيمَ كُنْتُمْ ۖ قَالُوا كُنَّا مُسْتَضْعَفِينَ فِي الْأَرْضِ ۚ قَالُوا أَلَمْ تَكُنْ أَرْضُ اللَّهِ وَاسِعَةً فَتُهَاجِرُوا فِيهَا ۚ فَأُولَٰئِكَ مَأْوَاهُمْ جَهَنَّمُ ۖ وَسَاءَتْ مَصِيرًا
: إِلَّا الْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ لَا يَسْتَطِيعُونَ حِيلَةً وَلَا يَهْتَدُونَ سَبِيلًا
: فَأُولَٰئِكَ عَسَى اللَّهُ أَنْ يَعْفُوَ عَنْهُمْ ۚ وَكَانَ اللَّهُ عَفُوًّا غَفُورًا
எவர்கள் (தங்கள் மார்க்கக் கட்டளையை சரிவர நிறைவேற்ற முடியாமல் நிராகரிப்பவர்களின் நாட்டில் இருந்துகொண்டு) தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கின்றனரோ அவர்களின் உயிரை மலக்குகள் கைப்பற்றும் பொழுது (அவர்களை நோக்கி "மார்க்கக் கட்டளையை நிறைவேற்றாது) நீங்கள் எவ்வாறு இருந்தீர்கள்" என்று கேட்பார்கள். அ(தற்க)வர்கள் "அந்தப் பூமியில் நாங்கள் சிறுபான்மையினர்களாகவே இருந்தோம்" என்று (பதில்) கூறுவார்கள். (அதற்கு மலக்குகள்) அல்லாஹ்வுடைய பூமி விசால மானதல்லவா? நீங்கள் (இருந்த) அவ்விடத்தை விட்டு வெளியேறி இருக்கவேண்டாமா?" என்று கேட்பார்கள். இத்தகையவர்கள் ஒதுங்குமிடம் நரகம்தான். அது ஒதுங்கும் இடங்களில் மிகக் கெட்டது!
எனினும் ஆண், பெண், சிறியோர், பெரியோர் ஆகியோர்களில் (உண்மையில்) பலவீனமானவர்கள் யாதொரு பரிகாரமும் தேடிக்கொள்ள சக்தியற்று (அதைவிட்டு வெளியேற) வழி காணாதிருந்தால் அத்தகையவர்களை அல்லாஹ் மன்னித்து விடக்கூடும். ஏனென்றால், அல்லாஹ் மிக மன்னிப்பவனும், பிழை பொறுப்பவனாகவும் இருக்கின்றான். [ 4 ஸூரத்துன்னிஸாவு : 97-99 ]
மேலும் அல்லாஹ் கூறுவதாவது..
يَا عِبَادِيَ الَّذِينَ آمَنُوا إِنَّ أَرْضِي وَاسِعَةٌ فَإِيَّايَ فَاعْبُدُونِ
ஈமான் கொண்ட என் அடியார்களே! நிச்சயமாக என் பூமி விசாலமானது; ஆகையால் நீங்கள் என்னையே வணங்குங்கள். [ 29 ஸூரத்துல் அன்கபூத் : 56]
இமாம் பகஃவி (ரஹ்) கூறுகிறார்கள்..
மேற்கூறப்பட்ட இறைவசனம் இறங்குவதற்குக் காரணம் என்னவெனில், மக்காவிலுள்ள முஸ்லீம்கள் ஹிஜ்றா செய்யாமலிருந்தபோது அல்லாஹ் அவர்களை 'மூமீன்களே!' என ஈமான் என்ற பெயர் கூறி அழைத்து ஹிஜ்றத் செய்யுமாறு கட்டளையிட்டான்.
'ஹிஜ்றத்' செய்வது கடமையாகும் என்பதற்கு கீழ் காணும் பெருமானார் (ஸல்) அவர்களின் சொல்லும் ஆதாரமாகும்.
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى الرَّازِيُّ، أَخْبَرَنَا عِيسَى، عَنْ حَرِيزِ بْنِ عُثْمَانَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي عَوْفٍ، عَنْ أَبِي هِنْدٍ، عَنْ مُعَاوِيَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ
" لاَ تَنْقَطِعُ الْهِجْرَةُ حَتَّى تَنْقَطِعَ التَّوْبَةُ وَلاَ تَنْقَطِعُ التَّوْبَةُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا "
இறுதி நாளின் அடையாளமான மேற்குத்திசையிலருந்து சூரியன் உதயமாகும் நாள் வரும் வரை அல்லாஹ் தன் அடியார்களின் (தவ்பா ) வை ஏற்றுக் கொள்வான். (சூரியன் மேற்குத் திசையிலிருந்து உதயமாக ஆரம்பித்த பின் செய்யப்படும் தவ்பா அங்கீகரிக்கப் படுவதில்லை) இவ்வாறு தவ்பா எற்றுக்கொள்ளப்படாத நாள் வரும் வரை 'ஹிஜ்றத்' செய்வது நடைமுறையில் இருந்து வரும். [அபு தாவுத்: 2479]
பெருமானார் (ஸல்) அவர்கள் மதீனாவில் நிரந்தரமான (இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்திய ) போது இஸ்லாத்தின் ஏனைய கடமைகளான ஸகாத், நோன்பு, ஹஜ், பாங்கு, ஜிஹாத் எனும் அறப்போர், நல்லதை ஏவி தீயதை தடுத்தல் போன்ற ஏனைய சட்டங்களைச் செய்ய கட்டளையிடப் பட்டார்கள்.
இந்த சட்டங்களை நடத்திக் காண்பிக்க பத்து ஆண்டுகள் சென்றன. பெருமானார் (ஸல்) அவர்கள் உலகை பிரியும்போது அவர்கள் நிலை நாட்டிய மார்க்கம் (அப்படியே) முழுமையாக இருந்தது. எந்த ஒரு நன்மையான காரியத்தையும் தனது உம்மத்தினர்களுக்கு கூறாமல் செல்ல வில்லை. இவ்வாறே தீமையான எல்லா காரியங்களை விட்டும் உம்மத்தை எச்சரித்தே சென்றுள்ளார்கள். இதுவே அவர்கள் காட்டிய மார்க்கமாகும்.
பெருமானார் (ஸல்) அவர்கள் கூறிச்சென்ற நல்ல காரியம் என்னவெனில், அல்லாஹ் ஒருவனுக்கே வழிப்பட வேன்டும் என்ற தவ்ஹீதும், அல்லாஹ் விரும்பி நேசிக்கின்ற காரியங்களுமேயாகும். அவர்கள் நம்மைத் தடுத்து எச்சரித்துச்;சென்ற காரியம் என்னவெனில் ஷிர்க் என்னும் இணைவைப்பும், அல்லாஹ் விரும்பாத வெறுக்கின்ற எல்லா விடயங்களுமேயாகும்.
முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ் உலக மக்கள் அனைவர்களுக்கும் றஸூலாக அனுப்பினான். ஜின், மனித வர்க்கம் அனைவர்கள் மீதும் அவர்களுக்கு வழிப்படுவதை கடமையாக்கினான்.
இதற்கு ஆதாரம் கீழ் காணும் இறை வசனமாகும்.
قُلْ يَا أَيُّهَا النَّاسُ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ جَمِيعًا
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "மனிதர்களே! (நீங்கள் எந்த நாட்டவர் ஆயினும் எவ்வகுப்பாராயினும்) நிச்சயமாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட ஒரு தூதர். [ 7 ஸூரத்துல் அஃராஃப் : 158]
பெருமானார்(ஸல்) அவர்களைக்கொண்டு அல்லாஹ் இஸ்லாமிய மார்க்கத்தை பூர்த்தியாக்கினான்.
இதற்கு ஆதாரம் கீழ் காணும் இறை வசனமாகும்
االْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا
இன்றைய தினம் நாம் உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி வைத்து என்னுடைய அருளையும் உங்கள் மீது முழுமையாக்கி வைத்து விட்டோம். [ 5 ஸூரத்துல் மாயிதா : 3]
முஹம்மது (ஸல்) அவர்கள் இவ்வுலகை விட்டு பிரிந்து விட்டார்கள் என்பதற்கு ஆதாரம் கீழ் காணும் இறை வசனமாகும்.
إِنَّكَ مَيِّتٌ وَإِنَّهُمْ مَيِّتُونَ
: ثُمَّ إِنَّكُمْ يَوْمَ الْقِيَامَةِ عِنْدَ رَبِّكُمْ تَخْتَصِمُونَ
(நபியே!) நிச்சயமாக நீங்களும் இறந்துவிடக்கூடியவரே. நிச்சயமாக அவர்களும் இறந்துவிடக் கூடியவர்கள்தாம். பின்னர், மறுமையில் நீங்கள் அனைவரும் உங்கள் இறைவனிடத்தில் நிச்சயமாக (கொண்டுவரப்பட்டு) நீங்கள் (நீதத்தைக் கோரி உங்களுக்குள்) தர்க்கித்துக் கொள்வீர்கள். [ 39 ஸூரத்துஜ்ஜுமர் : 30-31]
முஹம்மது (ஸல்) அவர்கள் இவ்வுலகை விட்டு பிரிந்து விட்டார்கள் என்பதற்கு ஆதாரம் கீழ் காணும் இறை வசனமாகும்.
مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ
இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம். [ 20 ஸூரத்து தாஹா : 55]
மேலும் அல்லாஹ் கூறுவதாவது..
وَاللَّهُ أَنْبَتَكُمْ مِنَ الْأَرْضِ نَبَاتًا
அல்லாஹ்வே உங்களை (ஒரு செடியைப் போல்) பூமியில் வளரச் செய்தான் (வெளிப்படுத்தினான்). [ 71 ஸூரத்து நூஹ் : 49]
மரணத்திற்குப்பிறகு எழுப்பப்பட்ட பின் உலகில் செய்த அமல்கள் பற்றி கேள்வி கணக்குக்கேட்கப்படுவார்கள். அவர்கள் அமலுக்;குத்குந்தவாறு கூலியும் கொடுக்கப் படுவார்கள்.
இதற்கு ஆதாரம் கீழ் காணும் இறை வசனமாகும்.
وَلِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ لِيَجْزِيَ الَّذِينَ أَسَاءُوا بِمَا عَمِلُوا وَيَجْزِيَ الَّذِينَ أَحْسَنُوا بِالْحُسْنَى
வானங்கள், பூமியிலுள்ளவைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே. ஆகவே, தீமை செய்தவர்களுக்கு அவர்களுடைய (தீய) செயலுக்குத் தக்கவாறு (தீமையைக்) கூலியாகக் கொடுக்கின்றான். நன்மை செய்தவர்களுக்கு நன்மையைக் கூலியாகக் கொடுக்கின்றான். [ 53 ஸூரத்துந் நஜ்ம் : 31]
மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதைப் பொய்ப்பிப்பவன் காபிராவான்.
இதற்கு ஆதாரம் கீழ் காணும் இறை வசனமாகும்.
زَعَمَ الَّذِينَ كَفَرُوا أَنْ لَنْ يُبْعَثُوا ۚ قُلْ بَلَىٰ وَرَبِّي لَتُبْعَثُنَّ ثُمَّ لَتُنَبَّؤُنَّ بِمَا عَمِلْتُمْ ۚ وَذَٰلِكَ عَلَى اللَّهِ يَسِيرٌ
(மரணித்த பின்னர் உயிர் கொடுத்து) எழுப்பப்பட மாட்டோம் என்று நிச்சயமாக நிராகரிப்பவர்கள் எண்ணிக்கொண்டு இருக்கின்றனர். (நபியே!) நீங்கள் கூறுங்கள்: "அவ்வாறன்று. என் இறைவன் மீது சத்தியமாக! மெய்யாகவே நீங்கள் எழுப்பப் படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருப்பவைகளைப் பற்றி பின்னர் நீங்கள் அறிவுறுத்தவும் படுவீர்கள். இவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு மிக்க எளிதானதே." [ 64 ஸூரத்துத் தஃகாபுன் : 7]
எல்லா றஸூல்மார்களையும் சுவர்க்கத்தைக் கொண்டு சுபசோபனம் கூறுபவர்களாகவும், நரகத்தைப்பற்றி எச்சரிக்கை செய்பவர்களாகவும் அல்லாஹ் அனுப்பினான்.
இதற்கு ஆதாரம் கீழ் காணும் இறை வசனமாகும்.
رُسُلًا مُبَشِّرِينَ وَمُنْذِرِينَ لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ عَلَى اللَّهِ حُجَّةٌ بَعْدَ الرُّسُلِ ۚ وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا
அல்லாஹ்வின் மீது (குற்றம் கூற) மனிதர்களுக்கு யாதொரு வழியும் இல்லாதிருக்க இத்தூதர்களுக்குப் பின்னரும் (யஹ்யா போன்ற வேறு) பல தூதர்களை (சுவர்க்கத்தைக் கொண்டு) நற்செய்தி கூறுகின்றவர்களாகவும், (நரகத்தைக் கொண்டு) அச்சமூட்டி எச்சரிக்கின்றவர்களாகவும் (நாம் அனுப்பி வைத்தோம்.) அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். [ 4 ஸூரத்துன்னிஸா : 165]
ரஸூல்மார்களில் முதல்வர் நூஹ் (அலை) அவர்களாவார்கள், அவர்களில் கடைசியானவர் முஹம்மது (ஸல்) அவர்களாகும் இவர்களே இறுதி நபியுமாகும்.
நூஹ் (அலை) அவர்கள் முதல் ரஸூலாகும் என்பதற்கு ஆதாரம் கீழ் காணும் இறைவசனமாகும்.
رإِنَّا أَوْحَيْنَا إِلَيْكَ كَمَا أَوْحَيْنَا إِلَىٰ نُوحٍ وَالنَّبِيِّينَ مِنْ بَعْدِهِ
(நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின்னர் வந்த நபிமார்களுக்கும் நாம் வஹ்யி அறிவித்தவாறே உங்களுக்கும் நிச்சயமாக நாம் வஹ்யி அறிவித்தோம். [ 4 ஸூரத்துன்னிஸா : 163]
நபி நூஹ் (அலை) அவர்கள் முதல் பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்கள் வரையுள்ள ஒவ்வொரு சமுகத்திற்கும் ஒரு தூதரை (ரஸூலை) அல்லாஹ் அனுப்பி வைத்தான். இவர்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்கவேண்டுமென மக்களுக்கு போதித்தார்கள். 'தாகூத்'என்னும் சிலைகளையும், கொடுங்கோலர்களையும் வணங்கக்கூடாது எனத்தடுத்தார்கள்.
இதற்கு ஆதாரம் கீழ் காணும் இறைவசனமாகும்.
وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ ۖ
(பூமியின் பல பாகங்களிலும் வசித்திருந்த) ஒவ்வொரு வகுப்பினருக்கும் நிச்சயமாக நாம் தூதரை அனுப்பியிருக்கிறோம். (அத்தூதர்கள் அவர்களை நோக்கி) "அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். (வழி கெடுக்கும்) ஷைத்தான்களிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் என்(று கூறிச் சென்)றார்கள். [ 16 ஸூரத்துந் நஹ்ல் : 36]
அல்லாஹ் அல்லாமல் வணங்கப்படும் போலி தெய்வங்களை விட்டுவிட்டு அல்லாஹ்வை நம்பி விசுவாசிப்பதை அவனது அடியார்களான மனித இனம் முழுவதின் மீதும் கடமையாக்கினான்.
'அல்லாஹ் அல்லாமல் வணங்கப்படகின்ற ஏனைய படைப்பினங்கள், தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் 'தாகூத்| எனக் கூறப்படும்.' என்று இப்னுல் கையிம் (ரஹ்) கூறினார்கள்.
'தாகூத்' என்பவர்கள் அதிகமாக இருக்கின்றார்கள். இவர்களின் தலைவர்கள் ஐந்து பேர்...
- அல்லாஹ்வின் சாபத்திற்கு இரையான இப்லீஸ்.
- பிறர் தனக்கு வணக்கம் புரிவதை விரும்புபவன்.
- தன்னை வணங்குவதற்காக மக்களை அழைப்பவன்.
- 'கைப்' என்னும் மறைவான விடயங்களை தனக்கு தெரியும் என வாதாடுபவன்.
- பிரச்சனைகள் எழும்போது அல்லாஹ்வின். சட்டப்படி தீர்ப்பு வழங்காமல் வேறு சட்டப்படி தீர்ப்பு வழங்குபவன். (அதாவது மனிதன் இயற்றிய சட்டப்படி தீர்ப்பு வழங்கக்கூடியவன்)
لَا إِكْرَاهَ فِي الدِّينِ ۖ قَدْ تَبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَيِّ ۚ فَمَنْ يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِنْ بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَىٰ لَا انْفِصَامَ لَهَا ۗ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ
(இஸ்லாம்) மார்க்கத்தில் நிர்ப்பந்தமேயில்லை. ஏனென்றால் வழிகேட்டிலிருந்து (விலகி) நேர்வழி (அடைவது எவ்வாறென்று) தெளிவாகிவிட்டது. ஆகவே, எவர் ஷைத்தானை நிராகரித்துவிட்டு அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கின்றாரோ, அவர் நிச்சயமாக அறுபடாத பலமானதொரு கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ், (அனைத்தையும்) நன்கு செவியுறுபவனாகவும், மிக அறிந்தவனாகவும் இருக்கின்றான். [ 2 ஸூரத்துல் பகரா : 256]
இதுவே 'லாயிலாஹ இல்லல்லாஹூ' என்பதின் பொருளாகும்.
ஹதீஸில் வந்துள்ளது...
. قَالَ " رَأْسُ الأَمْرِ الإِسْلاَمُ وَعَمُودُهُ الصَّلاَةُ وَذِرْوَةُ سَنَامِهِ الْجِهَادُ "
இஸ்லாம் காரியங்களின் தலையாகும், தொழுகை அதன் தூணாகும், அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவது அதன் சிகரமாகும், என பெருமானார் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்.
அல்லாஹ் மிக அறிந்தவன்.