பட்டியல்
அகீதா தஹாவிய்யா
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
அகீதா தஹாவிய்யா
ஆசிரியர்: இமாம் அபு ஜாஃபர் அத்-தஹாவி
தமிழில்:உமர் ஷரீஃப் இப்னு அப்துஸ்ஸலாம்
சுன்னா எனப்படும் நபிவழி மற்றும் நபித்தோழர்களைப் பின்பற்றுவோர் கடைப்பிடிக்கின்ற கொள்கையின் விளக்கம்தான் இந்நூல். இம்மார்க்கத்தின் சட்ட வல்லுநர்களான அபூஹனீஃபா, அபூயூசுஃப் மற்றும் முஹம்மது (ரஹ்மதுல்லலாஹி அலைஹிம்) அவர்களின் சட்ட ஆய்வுப்படி இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. மார்கத்தின் அடிப்படைகளில் அவர்கள் கொண்டிருந்த கொள்கைகளும், அகிலத்தின் இறைவனான அல்லாஹ்வை அவர்கள் ஏற்றுக்கொள்கின்ற வழிமுறையும் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.
அல்லாஹ்வுடைய அருளால் அல்லாஹ்வின் தவ்ஹீது குறித்து நாங்கள் சொல்கிறோம். நாங்கள் சொல்வதை கொள்கையாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.
-
إِنَّ اللَّهَ تَعالى وَاحِدٌ لا شَرِيكَ لَهُ،நிச்சயமாக அல்லாஹ் ஒருவன்; அவனுக்கு இணை அறவே இல்லை.
-
وَلا شَيْءَ مِثْلُهُ،அவனைப்போன்று எதுவும் இல்லை
-
وَلا شَيْءَ يُعْجِزُهُ،அவனை எதுவும் பலவீனப்படுத்த முடியாது.
-
وَلا إِلهَ غَيْرُهُ،அவனை அன்றி வணங்கத் தகுதியானவன் எவனும் இல்லை.
-
قَدِيْمٌ بـِلا ابْتِدَاءٍ، دَائِمٌ بـِلا انْتِهَاءٍ،அவன் என்றும் இருந்தவன்; அவனுக்குத் தொடக்கம் இல்லை. அவன் என்றும் இருப்பவன்; அவனுக்கு முடிவு இல்லை.(1)
-
لا يَفْنَى وَلا يَبـِيدُ،அவன் அழியமாட்டான்.
-
وَلا يَكُونُ إِلا مَا يُرِيدُ،அவன் நாடுவதைத் தவிர எதுவும் நடக்காது.
-
لا تَبْلُغُهُ الأَوْهامُ، وَلا تُدْرِكُهُ الأَفْهامُ،கற்பனைகள் அவனை அடையாது; அறிவுகளால் அவனை சூழ்ந்து அறிய முடியாது. (அவன் எப்படி இருப்பான் எனக்) கற்பனை செய்ய முடியாது. நமது அறிவால் அவனை முழுமையாக அறிந்துவிட முடியாது.
-
وَلا تُشْبـِهُهُ الأَنامُஅவன் மனிதர்களுக்கு ஒப்பாகாதவன்.
-
حَيٌّ لا يَمُوتُ، قَيُّومٌ لا يَنامُ،அவன் உயிருள்ளவன்; மரணமில்லாதவன்; பிறரின் உதவியின்றி என்றும் இருப்பவன்; நிலையானவன்; தூக்கமற்றவன்
-
خَالِقٌ بِلَا حَاجَةٍ رَازِقٌ بِلَا مُؤُونَةٍபடைப்பாளன்; படைப்பினங்களின் தேவையற்றவன்; உணவளிப்பவன். அவனுக்கு அதில் செலவு(ம் சிரமும்) ஏதும் இல்லை.
-
مُمِيتٌ بـِلا مَخَافَةٍ، بَاعِثٌ بـِلا مَشَقَّةٍ.மரணிக்கச் செய்பவன்; அதில் அவனுக்கு பயம் ஏதும் இல்லை. (படைப்புகளை) மீண்டும் எழுப்புபவன்; அதில் அவனுக்கு ஏதும் சிரமம் இல்லை.
-
مَازالَ بـِصِفَاتِهِ قَدِيماً قَبْلَ خَلْقِهِ. لَمْ يَزْدَدْ بـِكَوْنِهِمْ شَيْئاً لَمْ يَكُنْ قَبْلَهُمْ مِنْ صِفَاتِهِ، وَكَما كَانَ بـِصِفَاتِهِ أَزَلِيَّاً كَذلِكَ لا يَزَالُ عَلَيْهَا أَبَدِيَّاًபடைப்புகளைப் படைப்பதற்கு முன்பிருந்தே அவனுடைய தன்மைகளுடன் அவன் இருந்தான். படைப்புகளைப் படைத்ததால் அவனுடைய தன்மைகளில் எதுவும் கூடிவிடவில்லை. அவன் தன்மைகளுடன் எப்போதும் இருந்தான். அப்படியே எப்போதும் இருப்பான்.
-
لَيْسَ مُنْذُ خَلَقَ الخَلْقَ اسْتَفَادَ اسْمَ الخَالِقِ، وَلا بـِإِحْدَاثِهِ البَرِيَّةَ اسْتَفَادَ اسْمَ البارِيபடைப்புகளைப் படைத்ததால் அவனுக்கு (காலிக்) 'படைப்பாளன்' என்ற பெயர் வரவில்லை. இப்பிரபஞ்சத்தை உருவாக்கினான் என்பதால் (பாரீ) 'உருவாக்குபவன்' என்ற பெயர் அவனுக்கு வரவில்லை.
-
لَهُ مَعْنى الرُّبوبـِيَّةِ وَلا مَرْبوبٌ، وَمَعْنى الخَالِقِيَّةِ وَلا مَخْلوقٌ،பரிபாலிக்கப்படுகின்ற எதுவும் இல்லாமலும் அவனுக்குப் பரிபாலிக்கும் தன்மையான 'ரூபூபிய்யா' உண்டு. படைக்கப்பட்டவை ஏதும் இல்லாமலும் அவனுக்கு 'படைப்பாளன்' (காலிக்) என்ற தன்மை உண்டு.
-
وَكَمَا أَنَّهُ مُحْيِي الْمَوْتَى بَعْدَ مَا أَحْيَا اسْتَحَقَّ هَذَا الِاسْمَ قَبْلَ إِحْيَائِهِمْ كَذَلِكَ اسْتَحَقَّ اسْمَ الْخَالِقِ قَبْلَ إِنْشَائِهِمْஇறந்தவர்களை உயிர்ப்பித்த பிறகு அவனுக்கு 'முஹ்யுல் மவ்தா' (இறந்தவர்களை உயிர்ப்பிப்பவன்) என்று கூறப்படுவது போலவே படைப்புகளை உயிர்ப்பிப்பதற்கு முன்பும் அவன் இப்பெயருக்கு முழுத்தகுதி உடையவனே! அப்படியே அவன் படைப்பினங்களைப் படைப்பதற்கு முன்பும் படைப்பாளன் 'காலிக்' என்ற பெயருக்குத் தகுதியுடையவன் ஆவான்.
-
ذلِكَ بـِأَنَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ، وَكُلُّ شَيْءٍ إِلَيْهِ فَقِيرٌ، وَكُلُّ أَمْرٍ عَلَيْهِ يَسيرٌ، لا يَحْتَاجُ إِلَى شَيْءٍ لـــَيْسَ كَمِثـــْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيعُ البَصِيرُஏனெனில், அவன் அனைத்தின் மீதும் பேராற்றல் உடையவன். அனைத்தும் அவன்பால் தேவையுள்ளவை. அனைத்தும் அவனுக்கு இலகுவானவை. அவன் எதன்பாலும் தேவையுடையவன் இல்லை.
அல்லாஹ் கூறுகின்றான்:
அவனுக்கு ஒப்பானது ஒன்றுமில்லை. அவன் (அனைத்தையும்) செவியுறுபவனாகவும் உற்று நோக்குபவனாகவும் இருக்கின்றான். [42:11] -
خَلَقَ الخَلْقَ بـِعِلْمِهِ،படைப்புகளைத் தன் அறிவால் படைத்தான்.
-
وَقَدَّرَ لَهُمْ أَقْداراً،அவர்களுக்கு விதிகளை ஏற்படுத்தினான்.
-
وَضَرَبَ لَهُمْ آجالاً،அவர்களுக்குத் தவனைகளை நிர்ணயித்தான்.
-
لَمْ يَخْفَ عَلَيْهِ شَيْءٌ مِنْ أَفْعَالِهِمْ قَبْلَ أَنْ خَلَقَهُمْ، وَعَلِمَ مَا هُمْ عَامِلُونَ قَبْلَ أَنْ يَخْلُقَهُمْ،அவன் அவர்களை படைப்பதற்கு முன்பு அவனுக்கு ஏதும் மறைந்திருக்கவில்லை. அவர்கள் என்ன செய்வார்கள் என்று அவர்களைப் படைப்பதற்கு முன்பே அவன் அறிந்திருந்தான்.
-
وَأَمَرَهُمْ بـِطَاعَتِهِ وَنَهَاهُمْ عَنْ مَعْصِيَتِهِ،அவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று அவர்களுக்கு கட்டளையிட்டான். அவனுக்கு மாறு செய்வதிலிருந்து அவர்களைத் தடுத்தான்.
-
وَكُلُّ شَيْءٍ يَجْرِي بـِقُدْرَتِهِ وَمَشِيئَتِهِ. وَمَشِيئَتُهُ تَنْفُذُ، وَلا مَشِيئَةَ لِلْعِبَادِ إِلاَّ مَا شَاءَ لَهُمْ، فَمَا شَاءَ لَهُمْ كَانَ وَمَا لَمْ يَشَأْ لَمْ يَكُنْ.அவனுடைய ஏற்பாடு மற்றும் நாட்டத்திற்கு ஏற்பவே அனைத்தும் நடக்கின்றன. அவனது நாட்டம் தான் நிறைவேறும். அவன் அடியார்களுக்கு நாடியது தான் அவர்களுக்குக் கிடைக்கும். அதைத் தவிர அவர்களுக்கு வேறு நாட்டம் இல்லை. அவன் அவர்களுக்காக நாடியது (நடந்தது) நடக்கும். அவன் நாடாதது (நடக்கவில்லை) நடக்காது.
-
يَهْدِي مَنْ يَشَاءُ وَيَعْصِمُ وَيُعَافِي مَنْ يَشَاءُ فَضْلاً، وَيُضِلُّ مَنْ يَشَاءُ وَيَخْذُلُ وَيَبْتَلِي عَدْلاًஅவன் நாடியவருக்கு நேர்வழி காட்டுகிறான். அவரைப் பாதுகாக்கிறான். அவருக்கு சுகமளிக்கின்றான். இவை அவனுடைய கருணையே ஆகும். நாடியவரை வ்ழிகேட்டில் விட்டுவிடுகின்றான்; இவை அவனது நீதியே.
-
وَكُلُّهُمْ يَتَقَلَّبُونَ فِي مَشِيئَتِهِ بَيْنَ فَضْلِهِ وَعَدْلِهِஅனைவரும் அவனுடைய நாட்டத்தில் அவனுடைய கருணை மற்றும் நீதிக்கிடையே சுற்றி வருகின்றனர்.
-
وَهُوَ مُتَعَالٍ عَنِ الأَضْدَّاد وَالأَنْدَادஅவனுக்கு முரண்பட்டவை இல்லை, எதிரானவை இல்லை. அவனுக்குச் சமமானவர் இல்லை. இவையனைத்தையும் விட்டு அவன் மிக உயர்ந்தவன்.
-
لا رَادَّ لِقَضَائِهِ، وَلا مُعَقِّبَ لِحُكْمِهِ، وَلا غَالِبَ لأَمْرِهِ،அவனது தீர்ப்பைத் தடுப்பவர் (மற்றும் ரத்து செய்பவர்) இல்லை. அவனது சட்டத்தை மாற்றுபவர் இல்லை. அவனது கட்டளையை மிகைப்பவர் இல்லை.
-
آمَنَّا بِذلِكَ كُلِّهِ، وَأَيْقَنَّا أَنَّ كُلاًّ مِنْ عِنْدِهِ.இவை அனைத்தையும் நாம் நம்பிக்கை கொள்கிறோம். அனைத்தும் அவனிடமிருந்தே நடக்கிறது என்று உறுதி கொள்கிறோம்.
-
وَإِنَّ مُحَمَّداً صلى الله عليه وسلم عَبْدُهُ المُصْطَفَى، وَنَبـِيُّهُ المُجْتَبَى، وَرَسُولُهُ المُرْتَضَى،நிச்சயமாக முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவனால் தேர்தெடுக்கப்பட்ட அடிமை ஆவார்கள். அவனால் ஒப்புகொள்ளப்பட்ட நபி(இறைச் செய்தி பெற்றவர்) ஆவார்கள். அவனால் திருப்தி கொள்ளப்பட்ட ரசூல் (இறைத்தூதர்) ஆவார்கள்.
-
خَاتِمُ الأَنْبـِيَاءِ وَإِمَامُ الأَتْقِياءِ، وَسَيِّدُ المُرْسَلِينَ، وَحَبـِيبُ رَبِّ العَالَمِينَ،நிச்சயமாக அவர்தாம் இறைத்தூதர்களின் முத்திரை(இறுதியானவர்); இறையச்சமுடையவர்களின் முன்னோடி; இறைத்தூதர்களின் தலைவர்; அகிலங்களின் இறைவனுடைய நேசர்.
-
وَكُلُّ دَعْوَةِ نُبُوَّةٍ بَعْدَ نُبُوَّتِهِ فَغَيٌّ وَهَوَى؛'அவருக்குப் பிறகு இறைச்செய்தியை நான் பெறுகிறேன்' என்று எவர் கூறினாலும் அவருடைய கூற்று வழிகேடு மற்றும் மனஇச்சையே.
-
وَهُوَ المَبْعُوثُ إِلى عَامَّةِ الجِنِّ وَكَافَّةِ الوَرَى، المَبْعُوثِ بـِالحَقِّ وَالهُدَىஅவர் அனைத்து ஜின்களுக்கும் எல்லா மனிதர்களுக்கும் சத்தியம், நேர்வழி, ஒளி மற்றும் பெரும் வெளிச்சத்தைக் கொண்டு அனுப்பப்பட்டவர் ஆவார்கள்.
-
وَإِنَّ القُرْآنَ كَلامُ اللَّهِ تَعَالى، بَدَأَ بـِلا كَيْفِيَّةٍ قَوْلاً، وَأَنْزَلَهُ عَلَى نَبـِيِّهِ وَحْياً، وَصَدَّقَهُ المُؤْمِنُونَ عَلَى ذلِكَ حَقَّــاً، وَأَيْقَنُوا أَنَّهُ كَلامُ اللَّهِ تَعَالَى بـِالحَقِيقَةِ. لَيْسَ بـِمَخْلُوقٍ كَكَلامِ البَرِيَّةِ، فَمَنْ سَمِعَهُ فَزَعَمَ أَنَّهُ كَلامُ البَشَرِ فَقَدْ كَفَرَ، وَقَدْ ذمَّهُ اللَّهُ تَعالَى وَعَابَهُ، وَأَوْعَدَهُ عَذابَهُ، حَيْثُ قَالَ:
سَأُصْلِيهِ سَقَرَ
فَلَمَّا أَوْعَدَ اللَّهُ سَقَرَ لِمَنْ قَالَ:
إِنْ هَذَا إِلَّا قَوْلُ الْبَشَرِ
عَلِمْنا أَنَّهُ قَوْلُ خَالِقِ البَشَرِ، وَلا يُشْبـِهُ قَوْلَ البَشَرِ،நிச்சயமாக குர்ஆன் அல்லாஹுவுடைய பேச்சு. அவனுடைய சொல்லாகவே அது வெளிப்பட்டது. இதை எப்படி என்று விவரிக்க முடியாது. அவன் அந்த குர்ஆனை தன் தூதருக்கு 'வஹ்யி' (இறை அறிவிப்பு) மூலம் இறக்கினான். இறைநம்பிக்கையாளர்கள் அவரை இவ்விசயத்தில் உண்மையாளர் என்று சத்தியமாக நம்பினர். உண்மையில் அது அல்லாஹ்வுடைய பேச்சு என்று உறுதி கொண்டனர். படைப்புகளின் பேச்சைப் போன்று அது புதிதாக படைக்கபட்டதில்லை. குர்ஆனை செவிமடுப்பவர் அதை மனிதனின் பேச்சு என்று எண்ணினால் அவர் திட்டமாக இறைவனை நிராகரித்து விட்டார். அல்லாஹ் அவரைப் பழிக்கின்றான்; இழிவுபடுத்துகின்றான். 'சகர்' என்ற நரகம் அவனுக்கு உண்டு என்று அவனை எச்சரிக்கின்றான்.
அல்லாஹ் கூறுகின்றான்:
அவனை நான் "ஸகர்” (என்னும்) நரகில் புகச் செய்வேன். [74:26]
"இது மனிதர்களுடைய சொல்லேயன்றி வேறில்லை" என்றும் கூறினான். [74:25]
இதன் மூலம் நிச்சயமாக குர் ஆன் மனிதர்களைப் படைத்த இறைவனின் பேச்சாகும்; மனிதர்களின் பேச்சுக்கு ஒப்பானதில்லை என்று உறுதியாக அறிந்து கொண்டோம். -
وَمَنْ وَصَفَ اللَّهَ تَعَالَى بـِمَعْنَىً مِنْ مَعَانِي البَشَرِ فَقَدْ كَفَرَ، فَمَنْ أَبْصَرَ هَذا اعْتَبَرَ، وَعَنْ مِثْلِ قَوْلِ الكُفَّارِ انْزَجَرَ،மனிதர்களின் தன்மைகளில் எந்த தன்மையின் மூலமாகவும் அல்லாஹ்வை யாராவது வர்ணித்தால் அவர் அவனை நிராகரித்துவிட்டார். இதை அறிந்து கொண்டவர் நல்ல பாடம் கற்றுக்கொண்டார். இறை நிராகரிப்பாளர்களின் கூற்றுக்கு ஒப்பானதிலிருந்து விலகிக் கொண்டார். அவன் தன்னுடைய தன்மைகளில் மனிதனைப் போன்று இல்லை என்றும் அறிந்து கொண்டார்.
-
وَالرُّؤْيَةُ حَقٌّ لأَهْلِ الجَنَّةِ بـِغَيْرِ إِحَاطَةٍ وَلا كَيْفِيَّةٍ، كَمَا نَطَقَ بـِهِ كِتَابُ رَبِّـنَا حَيْثُ قَالَ:
وُجُوهٌ يَوْمَئِذٍ نــَّاضِرَةٌ - إِلَى رَبـِّها نَاظِرَةٌ
وَتَفْسِيرُهُ عَلَى مَا أَرَادَهُ اللَّهُ تَعَالَى وَعَلِمَهُ، وَكُلُّ مَا جَاءَ فِي ذلِكَ مِنَ الحَدِيثِ الصَّحِيحِ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَعَنْ أَصْحَابـِهِ رِضْوانُ اللَّهِ عَلَيْهِمْ أَجْمَعِينَ فَهُوَ كَمَا قَالَ، وَمَعْنَاهُ وَتَفْسِيرُهُ عَلَى مَا أَرَادَ، لا نَدْخُلُ فِي ذلِكَ مُتَأَوِّلِينَ بـِآرائِنَا وَلا مُتَوَهِّمِينَ بـِأَهْوَائِنا، فَإِنَّهُ مَا سَلِمَ فِي دِينِهِ إِلاَّ مَنْ سَلَّمَ لِلَّهِ تَعَالى وَلِرَسُولِهِ صلى الله عليه وسلم ; وَرَدَّ عِلْمَ مَا اشْتَبَهَ عَلَيْهِ إِلَى عَالِمِهِ،சொர்க்கவாசிகளுக்கு இறைவனைப் பார்க்கும் அருளுண்டு. ஆனால் முழுமையாக இல்லை. எப்படி பார்ப்போம் என்று அத்தன்மையை விவரிக்கவும் முடியாது. நம் இறைவனின் 'புத்தகம்' இதை நமக்கு கூறுகிறது.
அந்நாளில் சில(ருடைய) முகங்கள் மிக்க மகிழ்ச்சியுடையவையாக இருக்கும்.(அவை) தங்கள் இறைவனை நோக்கியவண்ணமாக இருக்கும்.[75:22-23]
அல்லாஹ்வின் நாட்டம் மற்றும் அவனுடைய அறிவிற்கேற்ப சொர்க்கவாசிகள் அல்லாஹ்வைப் பார்ப்பார்கள்.
இது குறித்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியவற்றில் மாற்றுக் கருத்துகளைக் கூறமாட்டோம். நம் மனஇச்சைகளைக் கொண்டு அவற்றைக் கற்பனை செய்ய மாட்டோம்.
அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் முற்றிலும் கட்டுப்பட்டு, தனக்குப் புரியாததைப் புரிந்தவரிடம் விட்டுவிட்டவர்தாம் தம் மார்க்கத்தில் ஈடேற்றம் பெற முடியும். -
وَلا يَثْبُتُ قَدَمُ الإِسْلامِ إِلاَّ عَلَى ظَهْرِ التَّسْليمِ وَالاسْتِسْلامِ، فَمَنْ رَامَ عِلْمَ مَا حُظِرَ عَلَيْهِ، وَلَمْ يَقْنَعْ بـِالتَّسْليمِ فَهْمُهُ، حَجَبَهُ مَرَامُهُ عَنْ خَالِصِ التَّوْحيدِ، وَصَافِي المَعْرِفَةِ، وَصَحِيحِ الإِيمَانِ، فَيَتَذبْذبُ بَيْنَ الكُفْرِ وَالإِيْمَانِ، وَالتَّكْذِيبِ، وَالإِقْرَارِ وَالإِنْكَارِ، مُوَسْوَسَاً تَائِهَاً، زَائِغَاً شَاكَّــاً، لاَ مُؤْمِنَاً مُصَدِّقاً، وَلاَ جَاحِداً مُكَذِّباً.ஏற்றுக் கொள்ளுதல், ஒப்புக் கொள்ளுதல், பணிந்துவிடுதல் இவற்றின் மூலம்தான் இஸ்லாமை அடைய முடியும். எவற்றை அறிவது தடை செய்யப்பட்டதோ அதை அறிய முயற்சிப்பவரும், மார்க்கச் செய்திகளை அப்படியே ஏற்றுக்கொண்டு திருப்தி(யான விளக்கம்) அடையாதவரும், தூய்மையான ஏகத்துவத்தை சுத்தமான ஞானத்தை, சரியான இறைநம்பிக்கையைப் பெற முடியாது. இத்தகையவர் - இறைநிராகரிப்பு மற்றும் இறைநம்பிக்கை, மெய்ப்பித்தல் மற்றும் பொய்ப்பித்தல், ஏற்றுக் கொள்ளுதல் மற்றும் மறுத்தல் இவற்றிலேயே எப்போதும் உழன்று கொண்டு இருப்பார். சந்தேகம் கொண்டவராகவும் குழப்பம் நிறைந்தவராகவும் நிலை தடுமாறியவராகவும் சுற்றிக் கொண்டே இருப்பார். உண்மையென ஏற்றுக்கொண்ட இறைநம்பிக்கையாளராக இருக்கமாட்டார். பொய்ப்பிக்கும் மறுப்பாளராகவும் இருக்க மாட்டார். இரு நிலைகளுக்கிடையில் தத்தளித்து கொண்டே இருப்பார்.
-
وَلا يَصِحُّ الإِيمَانُ بـِالرُّؤْيَةِ لأَهْلِ دَارِ السَّلامِ لِمَنْ اعْتَبَرَهَا مِنْهُمْ بـِوَهْمٍ، أَوْ تَأَوَّلَهَا بـِفَهْمٍ، إِذا كَانَ تَأْوِيلُ الرُّؤْيَةِ وَتَأْوِيلُ كُلِّ مَعْنىً يُضَافُ إِلَى الرُّبُوبـِيَّةِ تَرْكَ التَأْويلِ وَلُزُومَ التَّسْلِيمِ، وَعَلَيْهِ دِينُ المُرْسَلينَ وَشَرَائِعُ النَّبـِيِّـينَ. وَمَنْ لَمْ يَتَوَقَّ النَّفْيَ وَالتَّشْبيهِ زَلَّ، وَلَمْ يُصِبِ التَّنْزِيهَ؛ فَإِنَّ رَبَّنا جَلَّ وَعَلا مَوْصُوفٌ بـِصِفَاتِ الوَحْدَانِيَّةِ، مَنْعُوتٌ بـِنُعُوتِ الفَرْدَانِيَّةِ، لَيْسَ بـِمَعْناهُ أَحَدٌ مِنَ البَرِيَّةِ،மறுமையில் சொர்க்கவாசிகள் அல்லாஹ்வைப் பார்ப்பார்கள் என்பதை எவர் சந்தேகம் கொள்கிறாரோ, அல்லது தம் விளக்கத்திற்கு ஏற்ப அதன் பொருளை மாற்றுகிறாரோ அவருடைய இறைநம்பிக்கை சீராகாது. 'அல்லாஹ்வைப் பார்த்தல்' என்பதன் கருத்தையோ இறைவனுடன் இணைக்கப்பட்ட வேறு சொற்களையோ அவற்றிற்கு மாறுபட்ட கருத்தை எவர் கூறினாலும் இதுதான் நிலைமை. (அவருடைய இறைநம்பிக்கை சீராகாது).
மாற்றுக் கருத்தை கூறுவதை விட்டுவிட வேண்டும். இறைவனின் கூற்றுக்கு முழுமையாக கட்டுப்பட வேண்டும். இதுதான் முஸ்லிம்களின் மார்க்கமாகும். யார் மார்க்கச் சான்றுகளை மறுப்பதையும், இறைவனின் தன்மைகளைப் படைப்பபினங்களுடன் ஒப்பிடுவதையும் தவிர்க்கவில்லையோ அவர் வழிதவறிவிட்டார்; இறைவனைத் தூய்மைப்படுத்தத் தவறிவிட்டார். கண்ணியமிக்க, மேன்மைமிக்க நம் இறைவனின் தன்மைகள் தன்னிகரற்றவை; ஒப்புமை அற்றவை; படைப்பினங்களில் எவரும் அவனது தன்மையை பெறவில்லை.அவன் தனது உள்ளமையிலும் பண்புகளிலும் ஒருவனாகவும் தனித்தவனாகவும் இருக்கின்றான். -
وَتَعَالَى عَنِ الْحُدُودِ وَالْغَايَاتِ وَالْأَرْكَانِ وَالْأَعْضَاءِ وَالْأَدَوَاتِ لَا تَحْوِيهِ الْجِهَاتُ السِّتُّ كَسَائِرِ الْمُبْتَدَعَاتِஎல்லைகள், முடிவுகள், தாங்குவதற்குத் தூண்கள், படைப்பினங்களுக்கு ஒப்பான உறுப்புகள், அவயங்கள், துணைச்சாதனங்கள் இவை அனைத்தையும் விட்டு அவன் மேலானவன். படைக்கப்பட்ட பொருட்களைப் போல ஆறு திசைகள் அவனைச் சூழ முடியாது. (இன்னும் இது போன்ற) புதுமைகள் ஏதும் அவனைத் தனது கட்டுக்குள் கொண்டுவர முடியாது.(2)
-
وَالْمِعْرَاجُ حَقٌّ وَقَدْ أُسْرِيَ بِالنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعُرِجَ بِشَخْصِهِ فِي الْيَقَظَةِ إِلَى السَّمَاءِ ثُمَّ إِلَى حَيْثُ شَاءَ اللَّهُ مِنَ الْعُلَا وَأَكْرَمَهُ اللَّهُ بِمَا شَاءَ وَأَوْحَى إِلَيْهِ مَا أَوْحَى مَا كَذَبَ الْفُؤَادُ مَا رَأَى فَصَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْآخِرَةِ وَالْأُولَىநபி(ஸல்), மிஃராஜ் எனும் ஆகாயப் பயணம் சென்றது உண்மை. நபியவர்களை இரவில்தான் அழைத்துச் செல்லப்பட்டது. அவர்களது உடலுடன் விழித்த நிலையில் வானத்திற்கு அவர்கள் ஏற்றப்பட்டார்கள். பிறகு, அங்கிருந்து உயரத்தில் அல்லாஹ் நாடிய அளவு வரை அழைத்துச் செல்லப்பட்டார்கள். அல்லாஹ் தான் நாடியதைக் கொண்டு அவர்களைக் கண்ணியப்படுத்தினான். அவன் அவர்களுக்குப் பல செய்திகளை 'வஹ்யி' மூலமறிவித்தான்.
அல்லாஹ் கூறுகிறான்: (நபியுடைய) உள்ளம், தான் கண்டதைப் பற்றிப் பொய் கூறவில்லை.[53:11]
இவ்வுலகத்திலும் மறுமையிலும் அல்லாஹ் தன் சிறப்பிற்குரிய அருளையும் வெற்றியையும் அவர்களுக்கு வழங்கட்டும். -
وَالْحَوْضُ الَّذِيْ أَكْرَمَهُ اللَّهُ تَعَالَى بـِهِ غِيَاثَاً لأُمَّتِهِ حَقٌّமறுமையில் நபியவர்களுக்கு அவர்களுடைய உம்மத்தை இரட்சிப்பதற்காக அல்லாஹ் வழங்கிய நீர் தடாகம் உண்மையே.
-
وَالشَّفَاعَةُ الَّتِي ادَّخَرَهَا اللَّهُ لَهُمْ كَمَا رُوِيَ فِيْ الأَخْبَارِமறுமையில் தம் உம்மத்திற்காக பரிந்துரை செய்யும் தகுதி நபியவர்களுக்கு உண்டு என்பது உண்மையே.
-
وَالْمِيْثَاقُ الَّذِيْ أَخَذهُ اللَّهُ تَعَالَى مِنْ آدَمَ عَلَيْهِ السَّلامُ وَذُرِّيَّتِهِ حَقٌّ.ஆதமிடமிருந்தும் அவருடைய சந்ததிகளிடமிருந்தும் அல்லாஹ் எடுத்த ஒப்பந்தம் உண்மையே.
-
وَقَدْ عَلِمَ اللَّهُ تَعَالَى فِيْمَا لَمْ يَزَلْ عَدَدَ مَنْ يَدْخُلِ الْجَنَّةَ، وَيَدْخُلِ النَّارَ جُمْلَةً وَاحِدَةً، لا يُزَادُ فِيْ ذلِكَ العَدَدِ وَلا يَنْقُصُ مِنْهُ؛சொர்க்கத்தில் நுழைபவர்களின் எண்ணிக்கை ஆகிய அனைத்தையும் அல்லாஹ் முன்கூட்டியே அறிந்திருக்கின்றான். அந்த எண்ணிக்கையில் கூடுதலும் இருக்காது; குறைவும் இருக்காது.
-
وَكَذَلِكَ أَفْعَالُهُمْ فِيمَا عَلِمَ مِنْهُمْ أَنْ يَفْعَلُوهُ وَكُلٌّ مُيَسَّرٌ لِمَا خُلِقَ لَهُ وَالْأَعْمَالُ بِالْخَوَاتِيمِ وَالسَّعِيدُ مَنْ سَعِدَ بِقَضَاءِ اللَّهِ وَالشَّقِيُّ مَنْ شَقِيَ بِقَضَاءِ اللَّهِஇவ்வாறே படைப்பினங்கள் எதைச் செய்வார்கள் என்பதையும் அவன் முன்கூட்டியே அறிந்திருக்கின்றான். ஒவ்வொரு படைப்பும், தான் படைக்கப்பட்ட நோக்கத்தை இலகுவாக அடைந்து கொள்கின்றன. முடிவுகளை வைத்தே செயல்கள் அங்கீகரிக்கப்படுகின்றன; அல்லது மறுக்கப்படுகின்றன. அல்லாஹ்வுடைய ஏற்பாட்டின்படியே ஒருவர் நல்லவராகிறார். அல்லாஹ்வுடைய ஏற்பாட்டின்படியே ஒருவர் தீயவராகிறார்.
-
وَأَصْلُ الْقَدَرِ سِرُّ اللَّهِ تَعَالَى فِي خَلْقِهِ لَمْ يَطَّلِعْ عَلَى ذَلِكَ مَلَكٌ مُقَرَّبٌ وَلَا نَبِيٌّ مُرْسَلٌ وَالتَّعَمُّقُ وَالنَّظَرُ فِي ذَلِكَ ذَرِيعَةُ الْخِذْلَانِ وَسُلَّمُ الْحِرْمَانِ وَدَرَجَةُ الطُّغْيَانِ فَالْحَذَرَ كُلَّ الْحَذَرِ مِنْ ذَلِكَ نَظَرًا وَفِكْرًا وَوَسْوَسَةً فَإِنَّ اللَّهَ تَعَالَى طَوَى عِلْمَ الْقَدَرِ عَنْ أَنَامِهِ وَنَهَاهُمْ عَنْ مَرَامِهِ كَمَا قَالَ تَعَالَى فِي كِتَابِهِ لَا يُسْأَلُ عَمَّا يَفْعَلُ وَهُمْ يُسْأَلُونَ فَمَنْ سَأَلَ لِمَ فَعَلَ ؟ فَقَدْ رَدَّ حُكْمَ الْكِتَابِ وَمَنْ رَدَّ حُكْمَ الْكِتَابِ كَانَ مِنَ الْكَافِرِينَவிதி, ஏற்பாடு, நிர்ணயம் இவற்றை அல்லாஹ் தன் படைப்பினங்களில் தன்னுடைய இரகசியமாகவே வைத்திருக்கிறான். இறைவனுக்கு நெருக்கமான வானவரோ, அவனால் அனுப்பப்பட்ட தூதரோ அதை அறிந்துகொள்ள முடியாது. அவ்விசயத்தில் சிந்திப்பதும், ஆழ்ந்து ஆராய்வதும் இழிவுக்கு வழிவகுக்கும்; இறையருளை இழக்கவைக்கும்; இறைச் சட்ட வரம்புகளை மீற வைக்கும். ஆகவே அதில் சிந்திப்பது, ஆராய்வது மற்றும் சந்தேகப்படுவதை விட்டு மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நிச்சயமாக அல்லாஹ் விதியை அறிந்து கொள்வதையும் அது குறித்த அறிவையும் தன் படைப்பினங்களை விட்டு மறைத்து விட்டான். அதன் கருத்துகளைப் பற்றிக் கேள்வி கேட்பதைவிட்டு அவர்களை தடுத்துவிட்டான்.
அல்லாஹ் கூறுகிறான்:
அவன் செய்பவைகளைப் பற்றி (ஏன் செய்தாய், எதற்காகச் செய்தாய் என்று) எவருமே அவனைக் கேட்க முடியாது. (அவ்வளவு சர்வ சுதந்திரமும், வல்லமையும் உள்ளவன்.) எனினும், அவனோ அனைவரையும் (அவரவர்களுடைய செயலைப் பற்றிக்) கேட்கக் கூடியவன்.[21:23]
ஆகவே, இறைவன் ஏன் செய்தான் என்று ஒருவர் கேள்வி கேட்டால் அவர் இறை நூலின் சட்டத்தை ஏற்க மறுத்தவராவார். இறை நூலின் சட்டத்தை யார் மறுத்தாரோ அவர் இறைவனை நிராகரிப்பவர்களில் சேர்ந்துவிடுவார். -
فَهَذَا جُمْلَةُ مَا يَحْتَاجُ إِلَيْهِ مَنْ هُوَ مُنَوَّرٌ قَلْبُهُ مِنْ أَوْلِيَاءِ اللَّهِ تَعَالَى وَهِيَ دَرَجَةُ الرَّاسِخِينَ فِي الْعِلْمِ لِأَنَّ الْعِلْمَ عِلْمَانِ عِلْمٌ فِي الْخَلْقِ مَوْجُودٌ وَعِلْمٌ فِي الْخَلْقِ مَفْقُودٌ فَإِنْكَارُ الْعِلْمِ الْمَوْجُودِ كُفْرٌ وَادِّعَاءُ الْعِلْمِ الْمَفْقُودِ كُفْرٌ وَلَا يَثْبُتُ الْإِيمَانُ إِلَّا بِقَبُولِ الْعِلْمِ الْمَوْجُودِ وَتَرْكِ طَلَبِ الْعِلْمِ الْمَفْقُودِஉள்ளம் ஒளிபெற்ற இறைநேசர்கள் அறிந்துகொள்ள வேண்டிய மொத்த செய்திகளைத்தான் இதுவரை நாம் கூறினோம். கல்வியில் தேர்ச்சிப்பெற்ற உறுதிமிக்க சான்றோர்களின் வழி இதுவே. ஏனெனில் கல்வி இரண்டு வகை. ஒன்று, படைப்பினங்களில் இருக்கின்ற கல்வி. இரண்டாவது படைப்பினங்களில் இல்லாத கல்வி. இருக்கின்ற கல்வியை மறுப்பது இறை நிராகரிப்பை ஏற்படுத்தும். அவ்வாறே இல்லாத கல்வியை தேடுவதும் இறை நிராகரிப்பை ஏற்படுத்தும். இருக்கின்ற கல்வியை ஏற்றுக்கொள்வது மற்றும் இல்லாத கல்வியை தேடுவதை விட்டுவிடுவது இவற்றின் மூலமே இறை நம்பிக்கை உறுதிபெறும்.
-
وَنُؤْمِنُ بِاللَّوْحِ وَالْقَلَمِ وَبِجَمِيعِ مَا فِيهِ قَدْ رُقِمَ
فَلَوِ اجْتَمَعَ الْخَلْقُ كُلُّهُمْ عَلَى شَيْءٍ كَتَبَهُ اللَّهُ تَعَالَى فِيهِ أَنَّهُ كَائِنٌ لِيَجْعَلُوهُ غَيْرَ كَائِنٍ لَمْ يَقْدِرُوا عَلَيْهِ وَلَوِ اجْتَمَعُوا كُلُّهُمْ عَلَى شَيْءٍ لَمْ يَكْتُبْهُ اللَّهُ تَعَالَى فِيهِ لِيَجْعَلُوهُ كَائِنًا لَمْ يَقْدِرُوا عَلَيْهِ جَفَّ الْقَلَمُ بِمَا هُوَ كَائِنٌ إِلَى يَوْمِ الْقِيَامَةِ وَمَا أَخْطَأَ الْعَبْدَ لَمْ يَكُنْ لِيُصِيبَهُ وَمَا أَصَابَهُ لَمْ يَكُنْ لِيُخْطِئَهُபதிவேட்டையும், எழுதுகோலையும், விதியில் எழுதபட்ட அனைத்தையும் நாம் நம்பிக்கை கொண்டோம். நடக்க வேண்டுமென்று அல்லாஹ் எழுதிய ஒன்றை நடக்காமல் ஆக்குவதற்கு படைப்பினங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்தாலும் அவர்கள் அதற்கு ஆற்றல் பெறமாட்டார்கள்.
அல்லாஹ் முடிவு செய்யாததை நடக்க வைப்பதற்கு, படைப்பினங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தாலும் அதற்கு அவர்கள் ஆற்றல் பெற மாட்டார்கள். உலக முடிவு நாள்வரை நடக்கக்கூடிய அனைத்தையும் எழுதுகோல் எழுதி காய்ந்து விட்டது. அடியானுக்குத் தவறிய ஒன்றை அவன் பெற்றுக் கொண்டிருக்க முடியாது. அவனுக்கு கிடைத்ததை அவன் தவறவிட்டிருக்கவும் முடியாது. -
وَعَلَى الْعَبْدِ أَنْ يَعْلَمَ أَنَّ اللَّهَ قَدْ سَبَقَ عِلْمُهُ فِي كُلِّ كَائِنٍ مِنْ خَلْقِهِ فَقَدَّرَ ذَلِكَ تَقْدِيرًا مُحْكَمًا مُبْرَمًا لَيْسَ فِيهِ نَاقِضٌ وَلَا مُعَقِّبٌ وَلَا مُزِيلٌ وَلَا مُغَيِّرٌ وَلَا مُحَوِّلٌ وَلَا نَاقِصٌ وَلَا زَائِدٌ مِنْ خَلْقِهِ فِي سَمَاوَاتِهِ وَأَرْضِهِوَذَلِكَ مِنْ عَقْدِ الْإِيمَانِ وَأُصُولِ الْمَعْرِفَةِ وَالِاعْتِرَافِ بِتَوْحِيدِ اللَّهِ تَعَالَى وَرُبُوبِيَّتِهِ كَمَا قَالَ تَعَالَى فِي كِتَابِهِ
وَخَلَقَ كُلَّ شَيْءٍ فَقَدَّرَهُ تَقْدِيرًا
وَقَالَ تَعَالَى
وَكَانَ أَمْرُ اللَّهِ قَدَرًا مَقْدُورًا
فَوَيْلٌ لِمَنْ ضَاعَ لَهُ فِي الْقَدَرِ قَلْبًا سَقِيمًا وَفِي نُسْخَةٍ فَوَيْلٌ لِمَنْ صَارَ قَلْبُهُ فِي الْقَدَرِ قَلْبًا سَقِيمًا لَقَدِ الْتَمَسَ بِوَهْمِهِ فِي فَحْصِ الْغَيْبِ سِرًّا كَتِيمًا وَعَادَ بِمَا قَالَ فِيهِ أَفَّاكًا أَثِيمًاதனது படைப்பினங்களில் நடக்ககூடிய, நிகழக்கூடிய அனைத்தையும் அல்லாஹ் முன்கூட்டியே அறிந்து விட்டான். அல்லாஹ் அனைத்தையும் தெளிவாக, உறுதியாக, முடிவாக நிர்ணயித்து விட்டான். அவற்றை முறிப்பவர் எவரும் இல்லை; பிற்படுத்துபவர் எவரும் இல்லை; நீக்குபவர் எவருமில்லை; மாற்றுபவர் எவருமில்லை. வானங்களிலும், பூமியிலும் அவனுடைய படைப்பினங்களில் எதுவும் குறையவும் முடியாது; கூடவும் முடியாது என்று அடியான் உறுதியான நம்பிக்கையுடன் அறிந்து கொள்ள வேண்டும். இவையே இறைநம்பிக்கையின் கொள்கையாகும்; இறைஅறிவின் அடிப்படையாகும்; அல்லாஹ்வே வணங்கத் தகுதியானவன். அவனே படைத்து, வளர்த்துக் காப்பவன் என்பதை ஏற்றுக் கொள்வதின் உண்மை நிலையாகும்.
அல்லாஹ் தனது புத்தகத்தில் கூறுகின்றான்:
அவன் ஒவ்வொன்றையும் படைத்தான். அவற்றை முறையாக நிர்ணயம் செய்தான்.[25:2]
மேலும் அவன் கூறுகின்றான்:
அல்லாஹ்வின் கட்டளை தீர்மானிக்கப்பட்ட விதியாகும்.[33:38]
விதியில் அல்லாஹ்வுடன் தர்க்கிப்பவருக்கு நாசம் உண்டாகட்டும்! அதில் சிந்திப்பதற்கு தன் நோயுற்ற உள்ளத்தை ஈடுபடுத்தியவன் நாசமாகட்டும்! இத்தகையவன் மறைவை(கைபை)ப் புரிந்துகொள்வதில் தனது யூகத்தை பயன்படுத்தி மறைக்கப்பட்ட ஓர் இரகசியத்தை தேடிவிட்டான். அது பற்றி அவன் பேசிய காரணத்தால் பெரும் பொய்யனாகவும் பாவியாகவும் மாறிவிட்டான். -
وَالعَرْشُ وَالكُرْسِيُّ حَقٌّமேலும் அர்ஷ், குர்ஸி உண்மையே.
-
وَهُوَ مُسْتَغْنٍ عَنِ الْعَرْشِ وَمَا دُونَهُஅவன் "அர்ஷ்" மற்றும் அதற்குக் கீழுள்ள அனைத்தையும் விட்டு தேவையற்றவன்.
-
مُحِيطٌ بِكُلِّ شَيْءٍ وَفَوْقَهُ وَقَدْ أَعْجَزَ عَنِ الْإِحَاطَةِ خَلْقَهُஅவன் அனைத்தையும் சூழ்ந்திருக்கின்றான். அனைத்திற்கும் மேலாக இருக்கின்றான். தன்னை அறிவதை விட்டு படைப்பினங்களைப் பலவீனப்படுத்தி விட்டான்.
-
وَنَقُولُ إِنَّ اللَّهَ اتَّخَذَ إِبْرَاهِيمَ خَلِيلًا وَكَلَّمَ اللَّهُ مُوسَى تَكْلِيمًا إِيمَانًا وَتَصْدِيقًا وَتَسْلِيمًاநிச்சயமாக அல்லாஹ் இப்ராஹீமை(அலை) நண்பனாக எடுத்துக் கொண்டான். மூஸா(அலை) உடன் பேசினான் என்று நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம்; உண்மையென ஏற்றுக் கொள்கிறோம்; ஒப்புக்கொள்கிறோம்.
-
وَنُؤْمِنُ بِالْمَلَائِكَةِ وَالنَّبِيِّينَ وَالْكُتُبِ الْمُنَزَّلَةِ عَلَى الْمُرْسَلِينَ وَنَشْهَدُ أَنَّهُمْ كَانُوا عَلَى الْحَقِّ الْمُبِينِவானவர்கள், நபிகள் மற்றும் ரசூல்கள் மீது இறக்கப்பட்ட புத்தகங்களை நம்பிக்கை கொள்கிறோம். அவர்கள் அனைவரும் தெளிவான சத்தியத்தின் மீது இருந்தார்கள் என்று சாட்சி கூறுகின்றோம்.
-
وَنُسَمِّي أَهْلَ قِبْلَتِنَا مُسْلِمِينَ مُؤْمِنِينَ مَا دَامُوا بِمَا جَاءَ بِهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُعْتَرِفِينَ وَلَهُ بِكُلِّ مَا قَالَهُ وَأَخْبَرَ مُصَدِّقِينَநம்முடைய கிப்லாவை ஏற்றுக்கொண்டவர்களை முஸ்லிம், முஃமின் என்று கூறுகின்றோம். இறைத்தூதர் கொண்டுவந்த அனைத்தையும் ஏற்பவர்களாகவும்; கூறியவற்றை உண்மைபடுத்துபவர்களாகவும் இருக்கின்றவரை முஸ்லிம், முஃமின் என்ற பெயர் அவர்களுக்கு நீடிக்கும்.
-
وَلَا نَخُوضُ فِي اللَّهِ وَلَا نُمَارِي فِي دِينِ اللَّهِஅல்லாஹ்வின் உள்ளமையைப் பற்றி நாம் பேசமாட்டோம். அல்லாஹ்வின் மார்கத்தில் நாம் குதர்க்கம் செய்ய மாட்டோம்.
-
وَلَا نُجَادِلُ فِي الْقُرْآنِ وَنَشْهَدُ أَنَّهُ كَلَامُ رَبِّ الْعَالَمِينَ نَزَلَ بِهِ الرُّوحُ الْأَمِينُ فَعَلَّمَهُ سَيِّدَ الْمُرْسَلِينَ مُحَمَّدًا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ كَلَامُ اللَّهِ تَعَالَى لَا يُسَاوِيهِ شَيْءٌ مِنْ كَلَامِ الْمَخْلُوقِينَ وَلَا نَقُولُ بِخَلْقِهِ وَلَا نُخَالِفُ جَمَاعَةَ الْمُسْلِمِينَஅல்குர் ஆனில் தர்க்கிக்க மாட்டோம். அது அகிலங்களின் இறைவனுடைய பேச்சு என்று நாங்கள் சாட்சி கூறுகின்றோம். அதை நம்பிக்கைக்குரிய வானவர் கொண்டுவந்தார். அவர் தூதர்களின் தலைவரான முஹம்மத்(ஸல்)அவர்களுக்கு அதைக் கற்றுக் கொடுத்தார். அது அல்லாஹ்வின் பேச்சாகும். படைப்பினங்களின் பேச்சுகளில் எதுவும் அதற்கு சமமாகவோ நிகராகவோ ஈடாகவோ முடியாது. அது படைக்கப்பட்ட ஒன்று என்று நாம் கூற மாட்டோம். முஸ்லிம்களின் கூட்டத்திற்கு நாம் முரண்பட மாட்டோம்.
-
وَلَا نُكَفِّرُ أَحَدًا مِنْ أَهْلِ الْقِبْلَةِ بِذَنْبٍ مَا لَمْ يَسْتَحِلَّهُகிப்லாவை ஏற்றுக்கொண்ட எவரையும் அவரிடம் உள்ள பாவத்தின் காரணமாக அவர் அதை ஆகுமானது என்று கூறாதவரை அவரை காஃபிர் என்று கூற மாட்டோம்.
-
وَلَا نَقُولُ لَا يَضُرُّ مَعَ الْإِيمَانِ ذَنْبٌ لِمَنْ عَمِلَهُஇறைநம்பிக்கை கொண்டதற்குப் பிறகு ஒருவர் பாவம் செய்தால் அதனால் அவருக்கு எந்த தீங்கும் நிகழாது என்று நாம் கூறமாட்டோம்.
-
وَنَرْجُو لِلْمُحْسِنِينَ مِنَ الْمُؤْمِنِينَ أَنْ يَعْفُوَ عَنْهُمْ وَيُدْخِلَهُمُ الْجَنَّةَ بِرَحْمَتِهِ وَلَا نَأْمَنُ عَلَيْهِمْ وَلَا نَشْهَدُ لَهُمْ بِالْجَنَّةِ وَنَسْتَغْفِرُ لِمُسِيئِيهِمْ وَنَخَافُ عَلَيْهِمْ وَلَا نُقَنِّطُهُمْஇறைநம்பிக்கையாளர்களில் நன்மை செய்பவர்களை தனது கருணையால் அல்லாஹ் மன்னித்து சுவனத்தில் நுழைவிப்பான் என்று ஆதரவு வைக்கிறோம். மேலும் அவர்கள் மீது அச்சமற்று இருக்கமாட்டோம். அவர்களுக்கு நிச்சயம் சுவர்க்கம் உண்டு என்று நாம் சாட்சி கூற மாட்டோம். அவர்களில் குற்றம் இழைத்தவர்களுக்காக மன்னிப்பு கேட்போம். அவர்களின் மீது நாம் பயப்படுகிறோம். அல்லாஹ்வின் கருணையவிட்டு அவர்களை நாம் நிராசை அடைய செய்யமாட்டோம்.
-
وَالْأَمْنُ وَالْإِيَاسُ يَنْقُلَانِ عَنْ مِلَّةِ الْإِسْلَامِ وَسَبِيلُ الْحَقِّ بَيْنَهُمَا لِأَهْلِ الْقِبْلَةِஅச்சமற்று இருத்தல், நிராசை அடைதல் இவ்விரண்டும் இஸ்லாமிய மார்க்கத்தை விட்டு வெளியேற்றிவிடும். கிப்லாவை ஏற்றுக்கொள்பவர்கள் இவ்விரண்டிற்கும் இடையில் இருப்பார்கள். அது தான் சத்திய பாதையாகும்.
-
وَلَا يَخْرُجُ الْعَبْدُ مِنَ الْإِيمَانِ إِلَّا بِجُحُودِ مَا أَدْخَلَهُ فِيهِஒருவர் எதை ஏற்று இறைநம்பிக்கையாளர்களாக மாறினாரோ அதை மறுப்பதன் மூலமே இறைநம்பிக்கையிலிருந்து வெளியேறிவிடுவார்.(3)
-
وَالْإِيمَانُ هُوَ الْإِقْرَارُ بِاللِّسَانِ وَالتَّصْدِيقُ بِالْجَنَانِஈமான் (இறைநம்பிக்கை) என்பது நாவால் ஏற்றுக்கொள்ளுதல், உள்ளத்தால் உண்மை படுத்துதல் ஆகும்.(4)
-
وَجَمِيعُ مَا صَحَّ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الشَّرْعِ وَالْبَيَانِ كُلُّهُ حَقٌّஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் புறத்திலிருந்து சரியான ஆதாரத்துடன் நமக்கு கிடைத்த மார்க்கமும் அதன் அனைத்து விளக்கமும் உண்மையே.
-
وَالْإِيمَانُ وَاحِدٌ وَأَهْلُهُ فِي أَصْلِهِ سَوَاءٌ وَالتَّفَاضُلُ بَيْنَهُمْ بِالْخَشْيَةِ وَالتُّقَى وَمُخَالِفَةِ الْهَوَى وَمُلَازِمَةِ الْأَوْلَىஈமான் என்பது ஒன்றே. இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும் இறைநம்பிக்கையின் அடிப்படைகளில் சமம் ஆனவர்களே! அல்லாஹ்வை அஞ்சுதல், மார்க்கச் சட்டங்களைப் பேணுதல், மனஇச்சைக்கு மாறு செய்தல், நன்மைகளை அதிகமாகவும் தொடர்ந்தும் செய்தல். இவற்றின் மூலமாகவே அவர்களுக்கு மத்தியில் ஏற்றத் தாழ்வு ஏற்படுகின்றது.(5)
-
وَالْمُؤْمِنُونَ كُلُّهُمْ أَوْلِيَاءُ الرَّحْمَنِ وَأَكْرَمُهُمْ عِنْدَ اللَّهِ أَطْوَعُهُمْ وَأَتْبَعُهُمْ لِلْقُرْآنِஇறைநம்பிக்கையாளர்கள் அனைவரும் ரஹ்மானுடைய நேசகர்களே. அவர்களில் அல்லாஹ்விடம் அதிகம் கண்ணியத்திற்கு உரியவர், அவர்களில் அல்லாஹ்விற்கு அதிகம் பணிந்து நடப்பவரும், குர்ஆனை அதிகம் பின்பற்றுபவருமே ஆவார்.
-
وَالْإِيمَانُ هُوَ الْإِيمَانُ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِ وَالْقَدَرِ خَيْرِهِ وَشَرِّهِ وَحُلْوِهِ وَمُرِّهِ مِنَ اللَّهِ تَعَالَىஇறைநம்பிக்கை என்பது அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய புத்தகங்களையும், அவனுடைய தூதர்களையும், மறுமை நாளையும், விதியையும் நம்பிக்கை கொள்வதாகும். மேலும் அதிலிலுள்ள நன்மையும் தீமையும், இனிப்பும், கசப்பும், அல்லாஹ்வின் புறத்திலிருந்தே என்று நம்பிக்கை கொள்வதாகும்.
-
وَنَحْنُ مُؤْمِنُونَ بِذَلِكَ كُلِّهِ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِنْ رُسُلِهِ وَنُصَدِّقُهُمْ كُلَّهُمْ عَلَى مَا جَاءُوا بِهِநாம் இவை அனைத்தையும் நம்பிக்கை கொள்கிறோம். இறைவனுடைய தூதர்களில் எவரையும் பிரிக்க மாட்டோம். அவர்களுக்கு மத்தியில் பாகுபாடு காட்டமாட்டோம். ஒருவரை ஏற்று மற்றவரை மறுக்கமாட்டோம். அவர்கள் கொண்டுவந்த அனைத்தையும் ஏற்று அவர்களை உண்மைப் படுத்துவோம்.
-
وَأَهْلُ الْكَبَائِرِ مِنْ أُمَّةِ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي النَّارِ لَا يُخَلَّدُونَ إِذَا مَاتُوا وَهُمْ مُوَحِّدُونَ وَإِنْ لَمْ يَكُونُوا تَائِبِينَ بَعْدَ أَنْ لَقُوا اللَّهَ عَارِفِينَ وَهُمْ فِي مَشِيئَتِهِ وَحُكْمِهِ إِنْ شَاءَ غَفَرَ لَهُمْ وَعَفَا عَنْهُمْ بِفَضْلِهِ كَمَا ذَكَرَ عَزَّ وَجَلَّ فِي كِتَابِهِ
وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ
وَإِنْ شَاءَ عَذَّبَهُمْ فِي النَّارِ بِعَدْلِهِ ثُمَّ يُخْرِجُهُمْ مِنْهَا بِرَحْمَتِهِ وَشَفَاعَةِ الشَّافِعِينَ مِنْ أَهْلِ طَاعَتِهِ ثُمَّ يَبْعَثُهُمْ إِلَى جَنَّتِهِ وَذَلِكَ بِأَنَّ اللَّهَ تَعَالَى تَوَلَّى أَهْلَ مَعْرِفَتِهِ وَلَمْ يَجْعَلْهُمْ فِي الدَّارَيْنِ كَأَهْلِ نَكَرَتِهِ الَّذِينَ خَابُوا مِنْ هِدَايَتِهِ وَلَمْ يَنَالُوا مِنْ وِلَايَتِهِ اللَّهُمَّ يَا وَلِيَّ الْإِسْلَامِ وَأَهْلِهِ ثَبِّتْنَا عَلَى الْإِسْلَامِ حَتَّى نَلْقَاكَ بِهِமுஹம்மத்(ஸல்) அவர்களுடைய சமுதாயத்தில் பெரும்பாவம் செய்தவர்கள் அல்லாஹ்வை மட்டும் வணக்கத்திற்குரியவனாக ஏற்றுக் கொண்டு, இணைவைக்காமல் மரணித்தால் நரகத்தில் நிரந்தரமாக தங்கமாட்டார்கள். அவர்கள் மன்னிப்புத் தேடாமல் இருப்பினும் சரியே. அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களாகவும் அவனை அறிந்தவர்களாகவும் மரணித்திருக்க வேண்டும் என்பது நிபந்தனை. இத்தகையவர்களை அல்லாஹ் தன்னுடைய நாட்டத்திற்கும் ஞானத்திற்கும் ஏற்ப நடத்துவான். அவன் நாடினால் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கி பாவங்களை அகற்றிவிடுவான்.
அல்லாஹ் குறிப்பிடுகின்றான்:
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான். இதனை அல்லாத (குற்றத்)தை (அதுவும்) தான் விரும்பியவர்களுக்கே மன்னிப்பான். [4:116]
அவன் நாடினால் அவனுடைய நீதியின் அடிப்படையில் அவர்கள் நரகத்தில் வேதனை செய்வான். பிறகு தன்னுடைய கருணையாலும் தன் நேசகர்களின் பரிந்துரையாலும் அவர்களை அதிலிருந்து வெளியேற்றி, சுவர்க்கத்திற்கு அனுப்புவான். அல்லாஹ் தன்னுடைய ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு பொறுப்பேற்று இருக்கிறான்.
அல்லாஹ்வே! இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் பாதுகாவலனே! நாங்கள் உன்னை இஸ்லாமுடன் சந்திக்கும் வரை அதன் மீது எங்களை உறுதிப்படுத்துவாயாக! -
وَنَرَى الصَّلَاةَ خَلْفَ كُلِّ بَرٍّ وَفَاجِرٍ مِنْ أَهْلِ الْقِبْلَةِ وَعَلَى مَنْ مَاتَ مِنْهُمْகிப்லாவை ஏற்றுக் கொண்ட நல்லோர்-தீயோர் எவர் தொழுகை நடத்தினாலும் அவர்களுக்குப் பின் தொழ வேண்டும். அவர்களில் எவர் மரணித்துவிட்டாலும், அவருக்கு தொழுகை நடத்த வேண்டும் என்று நாம் கருதுகிறோம்.
-
وَلَا نُنْزِلُ أَحَدًا مِنْهُمْ جَنَّةً وَلَا نَارًاوَلَا نَشْهَدُ عَلَيْهِمْ بِكُفْرٍ وَلَا بِشِرْكٍ أَهْلُ الْقِبْلَةِ لَا يُكَفَّرُونَ وَلَا بِنِفَاقٍ مَا لَمْ يَظْهَرْ مِنْهُمْ شَيْءٌ مِنْ ذَلِكَ وَنَذَرُ سَرَائِرَهُمْ إِلَى اللَّهِ تَعَالَىஅவர்களில் எவரையும் சுவர்க்கத்திற்கு உரியவர் அல்லது நரகத்திற்கு உரியவர் என்று கூற மாட்டோம். அவர்களிடம் இறைநிராகரிப்பு, இணைவைத்தல், நயவஞ்சகம் போன்றவை வெளிப்படாமல் இருக்கும்போது அக்குற்றங்களை அவர்களின் மீது சுமத்தமாட்டோம். அவர்களின் இரகசியங்களை அல்லாஹ்விடமே ஒப்படைத்துவிடுவோம்.
-
وَلَا نَرَى السَّيْفَ عَلَى أَحَدٍ مِنْ أُمَّةِ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا مَنْ وَجَبَ عَلَيْهِ السَّيْفُமுஹம்மத்(ஸல்) அவர்களுடைய சமுதாயத்தில் யாருக்கும் எதிராக வாள் ஏந்துவது ஆகுமானது என நாங்கள் கருத மாட்டோம். ஆனால் மார்க்க முறைப்படி அது விதியாகிவிட்டவரைத் தவிர.
-
وَلَا نَرَى الْخُرُوجَ عَلَى أَئِمَّتِنَا وَوُلَاةِ أُمُورِنَا وَإِنْ جَارُوا وَلَا نَدْعُو عَلَيْهِمْ وَلَا نَنْزِعُ يَدًا مِنْ طَاعَتِهِمْ وَنَرَى طَاعَتَهُمْ مِنْ طَاعَةِ اللَّهِ عَزَّ وَجَلَّ فَرِيضَةً مَا لَمْ يَأْمُرُوا بِمَعْصِيَةٍ وَنَدْعُو لَهُمْ بِالصَّلَاحِ وَالْمُعَافَاةِநம்முடைய ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் அநீதி இழைத்தாலும் அவர்களுக்கு எதிராக புரட்சி செய்வது ஆகுமானது என நாம் கருத மாட்டோம்.அவர்களுக்கு எதிராக பிரார்த்திக்க மாட்டோம். அவர்களுக்கு கட்டுப்பட்டு நடப்பதைவிட்டு விலகமாட்டோம். அவர்கள் இறைவனுக்கு மாறு செய்யும்படி கட்டளை இடாதவரை அவர்களுக்கு கட்டுப்பட்டு நடப்பது அல்லாஹ்விற்கு கீழ் படிய வேண்டிய கடமையாக நாம் கருதுகிறோம். அவர்கள் சீர்திருந்தவும் குழப்பங்களை விட்டுப் பாதுகாப்புப் பெறவும் நாம் பிரார்த்திப்போம்.
-
وَنَتَّبِعُ السُّنَّةَ وَالْجَمَاعَةَ الِالْتِزَامُ بِالسُّنَّةِ وَالْجَمَاعَةِ وَنَجْتَنِبُ الشُّذُوذَ وَالْخِلَافَ وَالْفُرْقَةَசுன்னா என்னும் நபிவழியையும் அதைச் சார்ந்த கூட்டத்தினரையும் நாம் பின்பற்றுவோம். தனித்து செல்லுதல், முரண்படுதல், பிளவுபடுதல் ஆகியவற்றைவிட்டு விலகிக் கொள்வோம்.
-
وَنُحِبُّ أَهْلَ الْعَدْلِ وَالْأَمَانَةِ حُبُّ أَهْلِ الْعَدْلِ مِنْ كَمَالِ الْإِيمَانِ وَنُبْغِضُ أَهْلَ الْجَوْرِ وَالْخِيَانَةِநீதிமற்றும் நேர்மையுடையோரை நேசிப்போம். அநீதி மற்றும் மோசடி செய்வோரை வெறுப்போம்.
-
وَنَقُولُ اللَّهُ أَعْلَمُ فِيمَا اشْتَبَهَ عَلَيْنَا عِلْمُهُநம்முடைய அறிவால் புரிந்து கொள்ள முடியாத செய்திகள் குறித்து, "அல்லாஹ் மிக அறிந்தவன்" என்று கூறுவோம்.
-
وَنَرَى الْمَسْحَ عَلَى الْخُفَّيْنِ فِي السَّفَرِ وَالْحَضَرِ كَمَا جَاءَ فِي الْأَثَرِநபிமொழியில் வந்திருப்பது போன்று (ஒளு செய்பவர்) உள்ளூரிலும் வெளியூரிலும் காலுறைக்கு 'மஸ்ஹ்'-தண்ணீரால் தடவுவதை ஆகுமானதாக கருதுகிறோம்.
-
وَالْحَجُّ وَالْجِهَادُ مَاضِيَانِ مَعَ أُولِي الْأَمْرِ مِنَ الْمُسْلِمِينَ بَرِّهِمْ وَفَاجِرِهِمْ إِلَى قِيَامِ السَّاعَةِ لَا يُبْطِلُهُمَا شَيْءٌ وَلَا يَنْقُضُهُمَاமுஸ்லிம் தலைவர்கள் அவர்கள் நல்லோராக அல்லது தீயோராக இருப்பினும் சரியே. அவர்கள் தலைமையில் ஹஜ்ஜுக்குச் செல்வது மற்றும் ஜிஹாது செய்வது இறுதி நாள் வரை தொடர வேண்டும். அவ்விரண்டையும் எதுவும் அகற்றிவிட முடியாது; நீக்கிவிட முடியாது.
-
وَنُؤْمِنُ بِالْكِرَامِ الْكَاتِبِينَ فَإِنَّ اللَّهَ قَدْ جَعَلَهُمْ عَلَيْنَا حَافِظِينَசெயல்களைப் பதிவு செய்கின்ற கண்ணியத்திற்குரிய வானவர்களை நம்பிக்கை கொள்கிறோம். அல்லாஹ், நம்மைக் கண்காணிப்பவர்களாக அவர்களை ஆக்கியிருக்கின்றான்.
-
وَنُؤْمِنُ بِمَلَكِ الْمَوْتِ الْمُوَكَّلِ بِقَبْضِ أَرْوَاحِ الْعَالَمِينَஅகிலத்தாரின் உயிர்களைக் கைப்பற்றுவதற்குப் பொறுப்புக் கொடுக்கப்பட்ட 'மலக்குல் மவ்த்'தை நம்பிக்கை கொள்கிறோம்.
-
وَبِعَذَابِ الْقَبْرِ لِمَنْ كَانَ لَهُ أَهْلًا وَسُؤَالِ مُنْكَرٍ وَنَكِيرٍ فِي قَبْرِهِ عَنْ رَبِّهِ وَدِينِهِ وَنَبِيِّهِ عَلَى مَا جَاءَتْ بِهِ الْأَخْبَارُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَنِ الصَّحَابَةِ رِضْوَانُ اللَّهِ عَلَيْهِمْமண்ணறையில் வேதனைக்குரியவர்களுக்கு வேதனையுண்டு. முன்கர், நகீர் ஆகிய இருவர் மண்ணறையில் இறைவன், மார்க்கம் மற்றும் தூதர் குறித்து விசாரிப்பார் என்று நம்பிக்கை கொள்கிறோம். இது குறித்து நபிமொழிகளும் நபித்தோழர்களின் கூற்றுகளும் ஏராளம் வந்துள்ளன.
-
وَالْقَبْرُ رَوْضَةٌ مِنْ رِيَاضِ الْجَنَّةِ أَوْ حُفْرَةٌ مِنْ حُفَرِ النِّيرَانِமண்ணறை (கப்ரு) சொர்க்கப் பூங்காக்களில் ஒரு பூங்காவாக இருக்கும்; அல்லது நரக நெருப்புக் குழிகளில் ஒரு குழியாக இருக்கும்.
-
وَنُؤْمِنُ بِالْبَعْثِ وَجَزَاءِ الْأَعْمَالِ يَوْمَ الْقِيَامَةِ وَالْعَرْضِ وَالْحِسَابِ وَقِرَاءَةِ الْكِتَابِ وَالثَّوَابِ وَالْعِقَابِ وَالصِّرَاطِ وَالْمِيزَانِமறுமையில் எழுப்பப்படுதல், செயல்களுக்கு கூலி வழங்குதல், சமர்ப்பிக்கப்படுதல், விசாரிக்கப்படுதல், புத்தகத்தைப் படித்தல், கூலி வழங்குதல், தண்டனை வழங்குதல், தண்டனை வழங்குதல், பாலம், தராசு இவை அனைத்தையும் நம்பிக்கை கொண்டோம்.
-
وَالْجَنَّةُ وَالنَّارُ مَخْلُوقَتَانِ لَا تَفْنَيَانِ أَبَدًا وَلَا تَبِيدَانِ فَإِنَّ اللَّهَ تَعَالَى خَلَقَ الْجَنَّةَ وَالنَّارَ قَبْلَ الْخَلْقِ وَخَلَقَ لَهُمَا أَهْلًا فَمَنْ شَاءَ مِنْهُمْ إِلَى الْجَنَّةِ فَضْلًا مِنْهُ وَمَنْ شَاءَ مِنْهُمْ إِلَى النَّارِ عَدْلًا مِنْهُ وَكُلٌّ يَعْمَلُ لِمَا قَدْ فُرِغَ لَهُ وَصَائِرٌ إِلَى مَا خُلِقَ لَهُசொர்க்கம், நரகம் இரண்டும் படைக்கப்பட்டுள்ளன. இவை அழியாதவை படைப்பினங்களைப் படைப்பதற்கு முன்பாகவே அல்லாஹ் சொர்கத்தையும், நரகத்தையும் படைத்துவிட்டான். சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் உரியவர்களையும் அவன் படைத்திருக்கின்றான். தான் நாடியவர்களைத் தனது கருணையால் அவன் சொர்க்கத்திற்கு அனுப்புகின்றான். தான் நாடியவர்களை நீதியின் அடிப்படையில் நரகத்தில் நுழையச் செய்கிறான். ஒவ்வொருவரும் தமக்கு இறைவன் எழுதி முடித்ததை நோக்கியே செயல்படுகிறார்; தாம் படைக்கப்பட்ட இலக்கை நோக்கியே சென்று கொண்டிருக்கிறார்.
-
وَالْخَيْرُ وَالشَّرُّ مُقَدَّرَانِ عَلَى الْعِبَادِநன்மையையும் தீமையும் அடியார்கள் மீது விதிக்கப்பட்டு விட்டன.
-
وَالِاسْتِطَاعَةُ الَّتِي يَجِبُ بِهَا الْفِعْلُ مِنْ نَحْوِ التَّوْفِيقِ الَّذِي لَا يُوصَفُ الْمَخْلُوقُ بِهِ تَكُونُ مَعَ الْفِعْلِ وَأَمَّا الِاسْتِطَاعَةُ مِنْ جِهَةِ الصِّحَّةِ وَالْوُسْعِ وَالتَّمْكِينِ وَسَلَامَةِ الْآلَاتِ فَهِيَ قَبْلَ الْفِعْلِ وَبِهَا يَتَعَلَّقُ الْخِطَابُ وَهُوَ كَمَا قَالَ تَعَالَى
لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَاஒரு செயலைச் செய்வதற்குரிய ஆற்றல் அச்செயலுடன் இருக்கின்றது, நற்செயலைச் செய்வதற்கு இறைவன் வழங்குகின்ற நல்லருள் இவ்வகையைச் சேர்ந்ததே. உடல் சுகம், ஆற்றல், அச்செயலைச் செய்வதற்குரிய சக்தி, அதற்குரிய காரணங்கள் இலகுவாகுவது-இவை அனைத்தும் அச்செயலுக்கு முன்பாக இருக்கும். இவற்றை வைத்துத்தான் இறைவனின் கட்டளை ஒருவர் மீது கடமையாகிறது.
அல்லாஹ் கூறுகிறான்:
அல்லாஹ் யாதொரு ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேல் நிர்ப்பந்திப்பதில்லை.[2:286] -
وَأَفْعَالُ الْعِبَادِ خَلْقُ اللَّهِ وَكَسْبٌ مِنَ الْعِبَادِஅடியார்களின் செயல்கள் அல்லாஹ்வின் படைப்பாகவும் அடியார்களின் உழைப்பாகவும் இருக்கிறது.
-
وَلَمْ يُكَلِّفْهُمُ اللَّهُ تَعَالَى إِلَّا مَا يُطِيقُونَ وَلَا يُطِيقُونَ إِلَّا مَا كَلَّفَهُمْ وَهُوَ تَفْسِيرُ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ نَقُولُ لَا حِيلَةَ لِأَحَدٍ وَلَا تَحَوُّلَ لِأَحَدٍ وَلَا حَرَكَةَ لِأَحَدٍ عَنْ مَعْصِيَةِ اللَّهِ إِلَّا بِمَعُونَةِ اللَّهِ وَلَا قُوَّةَ لِأَحَدٍ عَلَى إِقَامَةِ طَاعَةِ اللَّهِ وَالثَّبَاتِ عَلَيْهَا إِلَّا بِتَوْفِيقِ اللَّهِஅடியார்களின் சக்திக்கு உட்பட்டவற்றைத்தான் அல்லாஹ் அவர்களுக்கு சட்டமாக்கியிருக்கிறான்.அல்லாஹ் அவர்களுக்குச் சட்டமாக்கியவற்றைத் தவிர வேறு எதனையும் செய்வதற்கு அடியார்கள் சக்தி பெறமாட்டார்கள். "லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்", "பாவத்திலிருந்து தப்பிக்க முடியாது; நன்மை செய்ய சக்தி பெற முடியாது, அல்லாஹ்வைக் கொண்டே தவிர". இதற்குரிய பொருள் அல்லாஹ்டைய உதவியின்றி அல்லாஹ்விற்கு மாறு செய்வதைவிட்டு எவரும் தப்பிக்க முடியாது. அல்லாஹ்வின் அருளின்றி எவராலும் நன்மை செய்யவோ அதில் நிலைத்திருக்கவோ முடியாது.(6)
-
وَكُلُّ شَيْءٍ يَجْرِي بِمَشِيئَةِ اللَّهِ تَعَالَى وَعِلْمِهِ وَقَضَائِهِ وَقَدَرِهِ غَلَبَتْ مَشِيئَتُهُ الْمَشِيئَاتِ كُلَّهَا وَغَلَبَ قَضَاؤُهُ الْحِيَلَ كُلَّهَا يَفْعَلُ مَا يَشَاءُ وَهُوَ غَيْرُ ظَالِمٍ أَبَدًا
لَا يُسْأَلُ عَمَّا يَفْعَلُ وَهُمْ يُسْأَلُونَஅனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படியும் அவனுடைய அறிவு, அவனுடைய ஏற்பாடு மற்றும் அவனுடைய விதிப்படியும்தான் நடக்கிறது. அவனுடைய நாட்டம், படைப்பினங்களின் நாட்டங்கள் அனைத்தையும் மிகைத்து இருக்கிறது. அவனுடைய தீர்ப்பு, அவர்களின் தந்திரங்கள் அனைத்தையும் மிகைத்துவிட்டது. அவன் நாடியதைச் செய்கிறான்; அவன் ஒருபோதும் அநியாயம் செய்பவன் அல்லன்; அவன் கேள்வி கேட்கப்படமாட்டான்; தீயவை மற்றும் அழிவை விட்டு அவன் தூய்மையானவன், அனைத்து அசுத்தங்களையும் குறைகளையும் விட்டு அவன் பரிசுத்தமானவன்.
அல்லாஹ் கூறுகின்றான்:
அவன் செய்பவை பற்றி எவரும் அவனைக் கேட்க முடியாது; ஆனால், அவர்கள் தாம் (அவர்கள் செய்யும் செயல்கள் பற்றி) கேட்கப்படுவார்கள். [21:23]
-
وَفِي دُعَاءِ الْأَحْيَاءِ وَصَدَقَاتِهِمْ مَنْفَعَةٌ لِلْأَمْوَاتِஉயிருள்ளவர்கள் கேட்கின்ற பிரார்த்தனைகளிலும், வழங்குகின்ற தர்மங்களிலும் இறந்தவர்களுக்குப் பலன் உண்டு.
-
وَاللَّهُ تَعَالَى يَسْتَجِيبُ الدَّعَوَاتِ وَيَقْضِي الْحَاجَاتِஅல்லாஹ் பிரார்த்தனைகளை அங்கீகரிக்கின்றான்; தேவைகளை நிறைவேற்றுகின்றான்.
-
وَيَمْلِكُ كُلَّ شَيْءٍ وَلَا يَمْلِكُهُ شَيْءٌ وَلَا غِنَى عَنِ اللَّهِ تَعَالَى طَرْفَةَ عَيْنٍ وَمَنِ اسْتَغْنَى عَنِ اللَّهِ طَرْفَةَ عَيْنٍ فَقَدْ كَفَرَ وَصَارَ مِنْ أَهْلِ الْحَيْنِஅனைத்துப் பொருளுக்கும் அவனே உரிமை கொண்டாடுகின்றான். அவனை எதுவும் உரிமை கொண்டாட முடியாது. (அவன் உரிமையாளன் - படைப்பினங்கள் அவனுடைய உரிமை). கண்சிமிட்டும் நேரம்கூட அல்லாஹு தஆலாவை விட்டு நாம் தேவையற்று இருக்க முடியாது. அவனைவிட்டு, கண்சிமிட்டும் நேரம்கூட எவன் தன்னைத் தேவையற்றவனாகக் கருதுகின்றானோ அவன் இறைவனை நிராகரித்துவிட்டான்; அழிந்து நாசமாகுவோரில் சேர்ந்துவிட்டான்.
-
وَلَا أَنَّهُ يَغْضَبُ وَيَرْضَى لَا كَأَحَدٍ مِنَ الْوَرَىஅல்லாஹ் கோபப்படுகின்றான்; மகிழ்ச்சியடைகிறான்; இத்தன்மைகளில் அவன் மனிதர்களில் எவனுக்கும் ஒப்பானவன் இல்லை.
-
وَنُحِبُّ أَصْحَابَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَا نُفَرِّطُ فِي حُبِّ أَحَدٍ مِنْهُمْ وَلَا نَتَبَرَّأُ مِنْ أَحَدٍ مِنْهُمْ وَنُبْغِضُ مَنْ يُبْغِضُهُمْ وَبِغَيْرِ الْخَيْرِ يَذْكُرُهُمْ وَلَا نَذْكُرُهُمْ إِلَّا بِخَيْرٍ وَحُبُّهُمْ دِينٌ وَإِيمَانٌ وَإِحْسَانٌ وَبُغْضُهُمْ كُفْرٌ وَنِفَاقٌ وَطُغْيَانٌஇறைத்தூதரின் தோழர்களை நாம் நேசிப்போம். அவர்களில் எவரை நேசிப்பதிலும் அளவு கடக்க மாட்டோம். அவர்களில் எவரை விட்டும் நீங்கிக் கொள்ளவும் மாட்டோம். அவர்களைக் கோபிப்பவரையும், வெறுப்பவரையும், நன்மையன்றி அவர்களைப் பற்றி பேசுவோரையும் நாமும் கோபிப்போம்; மேலும் வெறுப்போம். நபித்தோழர்களைப் பற்றி நன்மை மற்றும் உயர்வுகளுடனேயே தவிர நாம் பேச மாட்டோம். அவர்களை நேசிப்பது மார்க்கமாகும்; இறைநம்பிக்கையாகும்; மனத்தூய்மையும் ஒழுக்கமுமாகும். அவர்களை வெறுப்பது 'குஃப்ர்' (இறை நிராகரிப்பு), நிஃபாக் (நயவஞ்சகத்தனம்), 'துக்யான்' (எல்லை மீறுதல்) ஆகும்.
-
وَنُثْبِتُ الْخِلَافَةَ بَعْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوَّلًا لِأَبِي بَكْرٍ الصِّدِّيقِ رَضِيَ اللَّهُ عَنْهُ تَفْضِيلًا لَهُ وَتَقْدِيمًا عَلَى جَمِيعِ الْأُمَّةِ ثُمَّ لِعُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ ثُمَّ لِعُثْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ ثُمَّ لِعَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ وَهُمُ الْخُلَفَاءُ الرَّاشِدُونَ وَالْأَئِمَّةُ الْمَهْدِيُّونَஅல்லாஹ்வின் தூதருக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்புக்குத் தகுதியானவர் அபூபக்ர்-அஸ்ஸித்தீக்(ரழி) ஆவார். இவரைச் சமுதாய மக்கள் அனைவரையும் விட மேன்மைப்படுத்துகின்றோம். பிறகு ஆட்சிப் பொறுப்புக்குத் தகுதியானவர் உமர்(ரழி). பிறகு உஸ்மான்(ரழி). பிறகு அலீ(ரழி). இவர்கள் நேர்வழி பெற்ற ஆட்சியாளர்கள்; நேர்வழி பெற்ற முன்னோடிகள்.
-
وَأَنَّ الْعَشَرَةَ الَّذِينَ سَمَّاهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبَشَّرَهُمْ بِالْجَنَّةِ نَشْهَدُ لَهُمْ بِالْجَنَّةِ عَلَى مَا شَهِدَ لَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَوْلُهُ الْحَقُّ وَهُمْ أَبُو بَكْرٍ وَعُمَرُ وَعُثْمَانُ وَعَلِيٌّ وَطِلْحَةُ وَالزُّبَيْرُ وَسَعْدٌ وَسَعِيدٌ وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ وَأَبُو عُبَيْدَةَ بْنُ الْجَرَّاحِ وَهُوَ أَمِينُ هَذِهِ الْأُمَّةِ رَضِيَ اللَّهُ عَنْهُمْ أَجْمَعِينَஅல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், பெயரைக் குறிப்பிட்டு, 'சொர்க்கவாசிகள்' என்று நற்செய்தி கூறிய பத்துதோழர்களுக்கு சொர்க்கம் உண்டு என நாமும் சாட்சி கூறுகிறோம். அல்லாஹ்வுடைய தூதரின் கூற்று சத்தியமானதே! அவர்கள், அபூபக்ர், உமர், உஸ்மான், அலி, தல்ஹா, ஸுபைர், சஃது, சயீத், அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப், அபூ உபைதா( ரலியல்லாஹு அன்ஹும்) ஆவார்கள். அல்லாஹ் இவர்கள் அனைவரையும் பொருந்திக் கொள்வானாக! இந்த சமுதாயத்தின் 'அமீன்' நம்பிக்கைக்குரியவர் என அபூஉபைதா அழைக்கப்படுகிறார்.
-
وَمَنْ أَحْسَنَ الْقَوْلَ فِي أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَزْوَاجِهِ الطَّاهِرَاتِ مِنْ كُلِّ دَنَسٍ وَذُرِّيَّاتِهِ الْمُقَدَّسِينَ مِنْ كُلِّ رِجْسٍ فَقَدَ بَرِئَ مِنَ النِّفَاقِஅல்லாஹ்வின் தூதருடைய தோழர்கள் விஷயத்திலும், அழுக்குகளை விட்டுத் தூய்மையான அவர்களுடைய மனைவிமார்கள் விஷயத்திலும், அசுத்தங்களை விட்டுத் தூய்மையான அவர்களுடைய சந்ததிகள் விஷயத்திலும் யார் அழகிய பேச்சுகளைப் பேசுகிறாரோ அவர் நயவஞ்சகத்தனத்தைவிட்டு நீங்கிவிட்டார்.
-
وَعُلَمَاءُ السَّلَفِ مِنَ السَّابِقِينَ وَمَنْ بَعْدَهُمْ مِنَ التَّابِعِينَ أَهْلِ الْخَيْرِ وَالْأَثَرِ وَأَهْلِ الْفِقْهِ وَالنَّظَرِ لَا يُذْكَرُونَ إِلَّا بِالْجَمِيلِ وَمَنْ ذَكَرَهُمْ بِسُوءٍ فَهُوَ عَلَى غَيْرِ السَّبِيلِமுன்னோர்களின் சிறப்பிற்குரிய அறிஞர்கள், அவர்களைப் பின்பற்றிய, அவர்களின் செய்திகளை அறிவிக்கின்ற சான்றோர்கள், மார்க்கச் சட்ட அறிஞர்கள், இவர்கள் அனைவரையும் அழகிய முறையில்தான் நினைவு கூரப்பட வேண்டும். அவர்களைத் தீய முறையில் யார் பேசுகிறாரோ அவர் வழி தவறியவர்.
-
وَلَا نُفَضِّلُ أَحَدًا مِنَ الْأَوْلِيَاءِ عَلَى أَحَدٍ مِنَ الْأَنْبِيَاءِ عَلَيْهِمُ السَّلَامُ وَنَقُولُ نَبِيٌّ وَاحِدٌ أَفْضَلُ مِنْ جَمِيعِ الْأَوْلِيَاءِஇறைத்தூதர்கள் எவரையும் விட இறை நேசர்களில் எவரையும் மேன்மைப்படுத்த மாட்டோம். மேலும், ஓர் இறைத்தூதர் எல்லா இறைநேசகர்களைவிடவும் மேன்மைமிக்கவர் என்று கூறுவோம். இறை நேசகர்களின் சிறப்புகள் பற்றி வந்த செய்திகளையும் அவர்களுடைய அறிவிப்புகளிலிருந்து நம்பத்தகுந்தவர்கள் அறிவித்த சரியான செய்திகளையும் நம்பிக்கைக் கொள்கிறோம்.
-
وَنُؤْمِنُ بِمَا جَاءَ مِنْ كَرَامَاتِهِمْ وَصَحَّ عَنِ الثِّقَاتِ مِنْ رِوَايَاتِهِمْஅவர்களின் கராமத்துகள் குறித்து நம்பத்தகுந்த அறிவிப்பாளர்கள் மூலம் கிடைத்திருக்கும் செய்திகளையும் நம்பிக்கைக் கொள்கிறோம்.
-
وَنُؤْمِنُ بِأَشْرَاطِ السَّاعَةِ مِنْ خُرُوجِ الدَّجَّالِ وَنُزُولِ عِيسَى ابْنِ مَرْيَمَ عَلَيْهِ السَّلَامُ مِنَ السَّمَاءِ وَنُؤْمِنُ بِطُلُوعِ الشَّمْسِ مِنْ مَغْرِبِهَا وَخُرُوجِ دَابَّةِ الْأَرْضِ مِنْ مَوْضِعِهَاமறுமையின் அடையாளங்கள்: தஜ்ஜாலின் வருகை, ஈஸா இப்னு மர்யம் வானத்திலிருந்து இறங்குதல், சூரியன் மேற்கிலிருந்து உதித்தல், பூமியின் மிருகம் அதனுடைய இடத்திலிருந்து வெளிப்படுதல் ஆகியவற்றை நம்பிக்கைக் கொள்கிறோம்.
-
وَلَا نُصَدِّقُ كَاهِنًا وَلَا عَرَّافًا وَلَا مَنْ يَدَّعِي شَيْئًا يُخَالِفُ الْكِتَابَ وَالسُّنَّةَ وَإِجْمَاعَ الْأُمَّةِசோதிடக்காரன், குறிபார்ப்பவன், மைப்போட்டுப் பார்ப்பவன் இன்னும் குர்ஆன் சுன்னா மற்றும் சமுதாயத்தின் ஒருமித்த முடிவுக்கு மாற்றமான கருத்தை வாதிடுபவன் இவர்களில் எவரையும் மெய்ப்பிக்க மாட்டோம்; இவர்களின் கூற்றுகளை நம்பமாட்டோம்.
-
وَنَرَى الْجَمَاعَةَ حَقًّا وَصَوَابًا وَالْفُرْقَةَ زَيْغًا وَعَذَابًا'ஜமாஆ'- சேர்ந்திருப்பதைச் சத்தியமானது, சரியானது எனவும் பிரிவதை வழிகேடாகவும், வேதனையாகவும் கருதுகிறோம்.
-
وَدِينُ اللَّهِ فِي الْأَرْضِ وَالسَّمَاءِ وَاحِدٌ وَهُوَ دِينُ الْإِسْلَامِ قَالَ اللَّهُ تَعَالَى
إِنَّ الدِّينَ عِنْدَ اللَّهِ الْإِسْلَامُ وَقَالَ تَعَالَى
وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًاஅல்லாஹ்வுடைய மார்க்கம் பூமியிலும், வானத்திலும் ஒன்றுதான். அதுதான் இஸ்லாமிய மார்க்கம்.
அல்லாஹ் கூறுகின்றான்:
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாம்தான். [3:19]
மேலும் கூறுகின்றான்:
உங்களுடைய இந்த இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றியும் திருப்தியடைந்தோம். (அங்கீகரித்துக் கொண்டோம்) [5:3]
-
وَهُوَ بَيْنَ الْغُلُوِّ وَ التَّقْصِيرِ وَبَيْنَ التَّشْبِيهِ وَالتَّعْطِيلِ وَبَيْنَ الْجَبْرِ وَالْقَدَرِ وَبَيْنَ الْأَمْنِ وَالْإِيَاسِமார்க்கத்தில் அளவு கடத்தல், அல்லது அளவை குறைத்தல், அல்லாஹ்வைப் படைப்பினங்களுடன் ஒப்பிடுதல் அல்லது அவனுடைய தன்மைகளை மறுத்தல், விதியின் கீழ் நம்மை முற்றிலும் நிர்ப்பந்திக்கப்பட்டவர்களாக நம்புதல், அல்லது விதியை மறுத்தல், அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து அச்சமற்று இருத்தல், அல்லது அல்லாஹ்வின் கருணையை விட்டு நிராசையடைதல்; இத்தகைய கொள்கைகளுக்கு இடையில் இஸ்லாம் நடுநிலை வகிக்கிறது.
-
فَهَذَا دِينُنَا وَاعْتِقَادُنَا ظَاهِرًا وَبَاطِنًا وَنَحْنُ بَرَاءٌ إِلَى اللَّهِ تَعَالَى مِنْ كُلِّ مَنْ خَالَفَ الَّذِي ذَكَرْنَاهُ وَبَيَّنَّاهُ وَنَسْأَلُ اللَّهَ تَعَالَى أَنْ يُثَبِّتَنَا عَلَى الْإِيمَانِ وَيَخْتِمَ لَنَا بِهِ وَيَعْصِمَنَا مِنَ الْأَهْوَاءِ الْمُخْتَلِفَةِ وَالْآرَاءِ الْمُتَفَرِّقَةِ وَالْمَذَاهِبِ الرَّدِيَّةِ مِثْلِ الْمُشَبِّهَةِ وَالْمُعْتَزِلَةِ وَالْجَهْمِيَّةِ وَالْجَبْرِيَّةِ وَالْقَدَرِيَّةِ وَغَيْرِهِمْ مِنَ الَّذِينَ خَالَفُوا الْجَمَاعَةَ وَحَالَفُوا الضَّلَالَةَ وَنَحْنُ مِنْهُمْ بَرَاءٌ وَهُمْ عِنْدَنَا ضُلَّالٌ وَأَرْدِيَاءُ وَبِاللَّهِ الْعِصْمَةُ وَالتَّوْفِيقُஇது நம்முடைய மார்க்கம். உள்ளும், புறமும் இதுவே நம்முடைய கொள்கை. நாம் கூறியதற்கும் விவரித்தற்கும் முரண்பட்ட அனைத்தையும் விட்டு அல்லாஹ்வின் பக்கம் செல்கின்றோம். நம்மை ஈமானின் மீது அல்லாஹ் உறுதிப்படுத்த வேண்டும். அதை கொண்டே நமக்கு முடிவை எழுத வேண்டும். மாறுபட்ட மன இச்சைகளைவிட்டும், பலதரப்பட்ட சிந்தனைகளை விட்டும் தீய வழிகளை விட்டும், உதாரணமாக முஷப்பிஹா, முஃதஸிலா, ஜஹ்மிய்யா, கதரிய்யா மேலும் சுன்னா மற்றும் ஜமா ஆவிற்கு முரண்பட்டு வழிகேட்டில் சென்றுவிட்ட ஏனைய பிரிவினர் இத்தகையோரை விட்டு அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும் என்று அல்லாஹ்விடம் நாம் பிரார்த்தனை செய்கிறோம். இத்தகையோரை விட்டு நாம் விலகியவர்கள். இவர்கள் நம் பார்வையில் வழிகெட்டவர்கள். தீயவர்கள் அல்லாஹ்வைக் கொண்டே பாதுகாப்பும் நல்லருளும் இருக்கின்றன.
அல்லாஹ்வை பற்றி
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பற்றி
குர்ஆன்
மிஃராஜ்
விதி, ஏற்பாடு
ஷைக் அப்துல் அஜீஸ் பின் அப்துல்லாஹ் பின் பாஸ்(ரஹி) அவர்களின் விளக்கவுரை
- 5. கதீம்: குர் ஆன் சுன்னாவில் வந்துள்ள ஆதாரப்பூர்வமான அல்லாஹ்வின் பெயர்களை பயண்படுத்த முடியும். தன்னுடய விருப்பம் போல் ஒருவர் அல்லாஹ்வின் பெயராக பயன்படுட்தலாகாது. இதை ஸலஃபு ஸாலிஹீன் நன்கு உணர்திருந்தனர்.
- 38. உள்ள ஊசலாட்டங்களை தவிற்பதற்கு இதற்கு மேலும் விளக்கங்கள் தேவை.
- 61. இத்தகைய குறுகிய விளக்கம் விமர்சனத்திற்கு உள்ளாகும். உதாரணமாக ஒரு இறைமறுப்பாளன், இரண்டு ஷஹாதாத்துகளை கூறி இஸ்லாத்திற்கு வரலாம். ஆனால், அவன் இஸ்லாத்தை விட்டு வெளியில் செல்லும் செயல் ஒண்றை செய்தால், அவன் பாவமண்ணிப்பு தேடினாலே போதுமானது.
- 62. இந்த வரையறைக்கு மேலும் விளக்கம் தேவை மற்றும் இது மறுக்க வேண்டியது.
- 64. "ஈமான் என்பது ஒன்றே. இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும் இறைநம்பிக்கையின் அடிப்படைகளில் சமம் ஆனவர்களே!". இந்த வரையறை தவறானது, மற்றும் உண்மையற்றது.
- 87. "அடியார்களின் சக்திக்கு உட்பட்டவற்றைத்தான் அல்லாஹ் அவர்களுக்கு சட்டமாக்கியிருக்கிறான்.அல்லாஹ் அவர்களுக்குச் சட்டமாக்கியவற்றைத் தவிர வேறு எதனையும் செய்வதற்கு அடியார்கள் சக்தி பெறமாட்டார்கள்." இந்த வரையறை உண்மையற்றது. ஏனென்றால் அல்லாஹ் கடமையாகியதை விட அதிகமாக செய்ய மக்கள் சக்தி பெற்றவர்கள். ஆனால் அல்லாஹ் தன் கருணையினால் மக்களுக்கு அவர்களின் மார்கத்தை எளிமையாக ஆக்கி வைத்துள்ளான்.